ஹாய்... மக்களே
இதோ வண்ணங்கள் 19.
அத்தியாயம்: 19
காலை கதிரவன் கீழ் வானில் இருந்து உதயமாகி கொண்டிருக்க, வருணிகாவின் வாழ்க்கையும் புதிதாய் உதயமானது. அன்றைய விடியல் அவள் பார்வையில் ஒளியை மட்டும் கொடுக்காமல், வாழ்க்கையிலும் ஒரு அர்த்தத்தைக் கொடுத்ததாய் உணர்ந்தாள் வருணிகா.
இதுவரை தனிமை, யார் இருக்கிறார்கள்? என்ற மனநிலை மாறி, இன்று தனக்கும் குடும்பம் இருக்கிறது என்ற மனநிலை, மனநிறைவைக் கொடுக்க, கார்த்திகேயனின் ஊடல் புன்னகையை தோற்றுவித்தது.
வசுந்தரா பற்றிய வருத்தம் மனதில் இருந்தாலும், கார்த்திகேயன் சொன்னது போல் அதையே நினைத்து, அதிலேயே உழலாமல் அதை ஒதுக்கி வைத்து விட்டு இன்றைய நாட்களில் கவனம் செலுத்த நினைத்தாள் வருணிகா.
மேளாலராய் பதவி உயர்வு வந்ததில் இருந்து லீவ் அதிகமாய் எடுத்து இருக்க, வருணிகாவிற்கே குற்ற உணர்வு இருந்தது. தன்னை நம்பி கொடுத்த பொறுப்பைத் தட்டி கழித்தது போல் உணர்ந்தாள். ஆனால் நாளை ஹரிணியின் நிச்சயதார்த்தம். அதற்கு லீவ் எடுக்காமல் முடியாது. முடிந்தால் இன்று ஒரு நாள் வேலைக்கு சென்று வரலாம்தான், ஆனால் அதைவிட முக்கியமாய் முதலில் சர்வாவை சென்று பார்க்க தோன்றியது.
உறவே வேண்டாம் என்று எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு இன்றுவரை அவர்கள் பற்றிய எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் இருந்தவளுக்கு, சர்வாவின் இத்தனை வருட தேடல் குற்ற உணர்ச்சியைக் கொடுத்தது. இனிமேலும் அவர்களைத் தள்ளி வைக்க தோன்றாமல், அவர்களை சென்று பார்க்க முடிவெடுத்தாள் வருணிகா.
இத்தனை வருடங்கள் சென்று அவர்களைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தது, சிறு தயக்கத்தைக் கொடுத்தாலும் புது சந்தோஷமும் பொங்க அவசரமாய் கிளம்பி, மனோஜை அழைத்து செல்ல வந்தாள் வருணிகா.
அவனுக்குத்தான் சர்வா இருப்பிடம் தெரியும் என்பதால், அவனையும் அழைத்து செல்ல முடிவுடுத்து வந்த வருணிகாவை
“வாழ்க்க நாடகமா
என் பொறப்பு பொய் கணக்கா
தினம் தோறும் வெறும் கனவா
என் விதிய எழுதையில
அந்த சாமியும் உறங்கியதே...”
என்று சோகப்பாட்டு பாடிய மனோஜின் குரலே வரவேற்றது.
அதில் சட்டென பொங்கிய சிரிப்புடன் அவன் என்ன செய்கிறான் என்று பார்த்த வருணிகாவிற்கு பெரிதாய் புன்னகை பொங்கியது, பரபரப்பாய் வீடு சுத்தம் செய்து கொண்டிருந்த மனோஜையும் ராஜலிங்கத்தையும் பார்த்து.
ராஜலிங்கம் ஜன்னல், செல்ஃப், சோஃபா என்று எல்லாவற்றையும் தூசி தட்டி துடைத்து கொடுக்க, மனோஜ் வீடு பெருக்கி துடைத்துக் கொண்டிருந்தான்.
சமையல் அறையில் இருந்து வந்த சத்தம் கார்த்திகேயன் அங்கிருப்பதை உணர்த்த, ஹரிணியைக் காணவில்லை.
வருணிகாவின் சிரிப்பு சத்தத்தில் திரும்பி அவளைப் பார்த்து முறைத்துவிட்டு, திரும்பிக் கொண்ட மனோஜ் மீண்டும் பாடியபடியே வீட்டை சுத்தம் செய்ய தொடங்கிவிட்டான்.
தலையில் முன்டாசுடன் கையில் மாப்பை வைத்துக் கொண்டு வேர்த்து வழிய, வேலை பார்த்துக் கொண்டிருந்த மனோஜை புன்னகை பொங்க பார்த்த வருணிகா, “பெர்ஃபெக்ட் வொர்க் மனோஜ், உங்களுக்கும் இந்த வேலைக்கும் பத்து பொருத்தமும் பக்காவா பொருந்துது.” என்று கூறி சிரித்தாள்.
“வாமா! வேலைக்கு கிளம்பிட்டியா? நானும் அப்படி தான்மா சொன்னேன், முறைக்குறான்.” என்றார் ராஜலிங்கம் சிரிப்புடன்.
“உண்மையை சொன்னா முறைக்க தான் செய்வாங்க மாமா. நீங்க கண்டுக்காதிங்க.” என்று வருணிகா சொல்ல,
“அப்பா சீக்கிரம் அந்த ஜன்னலை துடைங்கப்பா, லேட் ஆகுது.” என்று முறைப்புடன் ராஜலிங்கத்திடம் கூறிய மனோஜ்,
“ஆமா காலையிலேயே நீ எங்க கிளம்பிட்ட? அதுவும் எனக்கு ஹெல்ப் பண்ணாம. ஒரு வாலிப பையன் இப்படி இடுப்பு ஒடிய வீடு கழுவுறானே, அவனுக்கு உதவி பண்ணுவோமேனு ஒரு எண்ணம் இருக்கா உனக்கு? இந்த பொண்ணுங்களே இப்படித்தான்பா...” என்றான் சோகமாய் அலுத்துக் கொண்டு.
“உன் புலம்பல் இன்னும் முடியலையாடா? ஒழுங்கா வேலையை முடி.” என்று அதட்டியபடி, அறையில் இருந்து வந்த ஹரியும் வெளியே செல்ல கிளம்பி இருக்க,
“ஹேய் ஹரி! நீ எங்க கிளம்பிட்ட?” என்றான் மனோஜ் அதிர்வுடன். காலையில் இருந்து அவன் மாங்கு மாங்கென வேலை பார்த்துக் கொண்டிருக்க, பெண்கள் இருவரும் ஏதோ ஒன்றாக வெளியே செல்ல கிளம்பி நிற்பதைப் பார்த்து கடுப்புடன்.
“டேய் நான் பார்லர் போறேன்டா. நேற்றே சொன்னேன் தானே?” என்று ஹரிணி சொல்லவும், மனோஜ் பார்வை வருணிகாவிடம் திரும்ப,
“நான் சர்வா வீட்டுக்கு போறேன். உன்னையும் கூட்டிட்டு போகதான் வந்தேன். ஆனா நீங்க ரொம்ப பிஸி. இட்ஸ் ஓகே, நான் உங்க அண்ணாவை கூட்டிட்டு போறேன்.” என்றாள் வருணிகா.
அதற்கு அவளைப் பயங்கரமாய் முறைத்த மனோஜ், “இதை நேத்தே சொல்லி இருந்தா நானும் எஸ்கேப் ஆகி இருப்பேன் இல்ல!” என்று கேட்க,
“நானே காலையில்தான் முடிவு பண்ணேன் மனோஜ்.” என்ற வருணிகா, ஹரிணியிடம் திரும்பி, “என்னை கூப்பிட்டு இருக்கலாம் இல்ல அண்ணி? தனியா கிளம்பிட்டிங்க?” என்றாள் சற்றே ஆதங்கமாய்.
“நான் உன்னை கூப்பிட வந்தேன்டா. நீ கிளம்பிட்டு இருந்த, சரி வேலைக்கு போற போலன்னு நினைச்சிட்டு திரும்பி வந்துட்டேன்.” என்று ஹரிணி சொல்ல,
“ஆனாலும் நீங்க என்னை கூப்பிட்டு இருக்கணும். நீங்க என்னை யாரோவா நினைச்சிட்டிங்க... அதான் கூப்பிடாம திரும்பி வந்துட்டிங்க.” என்றாள் வருணிகா கோபம் போல்.
ஹரிணி பேசும் முன், “உனக்கும் அண்ணாக்கும் என்ன சண்டை?” என்று மனோஜ் இடையிட்டான், அதுவரை வருணிகா பேசியதை அவதானித்தபடி நின்றிருந்தவன் பாயிண்டை பிடித்து.
“சண்டை எல்லாம் இல்லை மனோஜ்.” என்று வருணிகா சொல்ல,
“நேற்று அண்ணாவும் வீட்டுக்கு வரும் போது கோபமாதான் வந்தான். நீங்க தானே வெளிய போய்ட்டு வந்தீங்க?” என்ற மனோஜ், வருணிகாவை குறுகுறுவென பார்த்தான்.
“உங்க அண்ணாக்கு என்ன கோபம்னு எனக்கு எப்படி மனோஜ் தெரியும்? ஏதும் வொர்க் டென்ஷனோ என்னவோ?” என்று வருணிகா சொல்ல,
அவர்கள் பேசியதை சமையலறையில் நின்று கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகேயன், “வருணா...” என்று சத்தமாய் அழைத்தான்.
“அண்ணி இருங்க, நானும் பார்லர் வரேன். நாம போய்ட்டு வந்த பிறகு நான் சர்வாவைப் பார்க்க போறேன்.” என்று ஹரிணியிடம் சொல்லிவிட்டு, சமையல் அறை வந்தவள், “என்ன பண்றிங்க?” என்றாள் கார்த்திகேயனிடம்.
“பார்த்தா தெரியலையா?” என்ற கார்த்திகேயன், வருணிகாவை முறைக்க,
“சர்வாவை பார்க்க போகணும்.” என்றாள் வருணிகா. அன் முறைப்பு எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல்.
“போலாம்... ஆனா இன்னைக்கு முடியாது. நீங்க இப்போ பார்லர் போக வேண்டாம். மனோஜ் வீடு க்ளீன் பண்ணி முடிச்சதும் ஷாப்பிங் போலாம். எல்லாருக்கும் ட்ரெஸ் எடுக்கணும், வந்ததும் நீங்க பார்லர் போங்க, நான் மண்டபத்துக்கு போய்ட்டு வரேன். இரண்டு நாள் லீவ் சொல்லிரு.” என்று கார்த்திகேயன் சொல்ல,
“ப்ளீஸ் கதிர், இன்னைக்கே போய் சர்வாவைப் பார்த்துட்டு வந்துடுவோம். ஒரு பத்து நிமிஷம் இருந்து பேசிட்டு கிளம்பிடலாம். நாளைக்கு அவங்க இங்க வந்த அப்புறம் பார்த்தா நல்லா இருக்காது.” என்றாள் வருணிகா கெஞ்சலுடன்.
“ஆமா... எப்போ இருந்து கார்த்திகேயன் கதிர் ஆனான்?” என்ற கார்த்திகேயன், வருணிகாவை கிண்டலாய் பார்க்க,
“நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லலை?” என்றாள் வருணிகா அவன் சொன்னதைக் கருத்தில் எடுக்காமல்.
“நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லும் போது, நானும் சொல்றேன்.” என்று கார்த்திகேயன் அழுத்தம் திருத்தமாய் கூற,
“கார்த்திகேயன் பெயர் பெருசா இருக்கவும், சுருக்கி கூப்பிட்டேன். இதுல என்ன இருக்கு?” என்ற வருணிகா முகம் திருப்பி கேட்க,
அவள் கன்னம் பற்றி கண்ணோடு கண் பார்த்தவன், “என்ன இல்லை? எல்லாம் இருக்கு. வருணாவோட காதல் கூட இருக்கு.” என்று மிக மென்மையாக கூறியவன், சுட்டு விரல் கொண்டு அவள் நெற்றி முடி ஒதுக்கிவிட்டவன், “யார் சொன்னா? மனோஜ்ஜா?” என்றான் மெல்லிய குரலில்.
கார்த்திகேயனை கதிர் என்று அழைப்பது ஜெயலெட்சுமி மட்டும். கார்த்திகேயன் என்பது அவன் பாட்டனார் பெயர். அதனாலேயே ஜெயலெட்சுமி அவனை பெயர் சொல்லி அழைக்க மாட்டார். அது கார்த்திகேயனுக்கு பிடித்தமான பெயர் என்பதோடு, அவன் அம்மாவுக்கும் அவனுக்குமான பாசப்பிணைப்பும் கூட. இப்போது சில காலங்களாய் அந்த அழைப்பையும் அவன் அன்னையையும் மிஸ் செய்தவனுக்கு, இன்று வருணிகாவின் அழைப்பு சாரல் மழையாய் மனதைக் குளிர்வித்தது.
கார்த்திகேயனின் கேள்விக்கு மறுப்பாய் தலை அசைத்த வருணிகா, “மாமா சொன்னாங்க.” என்றாள் அவன் அருகாமையில் தவித்தபடி. அதில் அவள் கன்னங்கள் செம்மையுறத் தொடங்கியது.
அதை மௌன புன்னகையுடன் ரசித்த கார்த்திகேயன், “கதிர்னு, மெல்ல மென்மையா கூப்பிடு.” என்று சொல்ல,
‘ஏன்?’ என்று பார்வையால் வினா எழுப்பி மனதில் சொல்லி பார்த்துக் கொண்ட வருணிகாவின் விழிகள் திகைப்பில் விரிந்தது.
அவள் பாவனையில் சற்றே பெரிதாய் புன்னகைத்த கார்த்திகேயன், இருவருக்கும் இடையே ஒரு இன்ச் இடைவெளி விட்டு நெருங்கி நின்றவன், “அவள் காதருகே குனிந்து நீ அப்படி கூப்பிடுறது தான் எனக்கு பிடிக்கும்.” என்று ரகசியமாய் மென்மையாய் சொன்னவன், தன் அன்பின் வெளிப்பாடாய் வருணிகா நெற்றியில் இதழ் பதிக்க,
“அ... அண்ணி தேடுவாங்க.” என்றாள் வருணிகா திக்கி திணறி.
“ஸ்...” என்று தன் விரல் கொண்டு அவள் இதழை மூடிய கார்த்திகேயன், “எனக்கு இப்போ வேற எண்ணம் இல்லை. இது என் மகிழ்ச்சியின் வெளிப்பாடு.” என்று கூறி, வருணிகாவை விட்டு தள்ளி நிற்க, அப்போதுதான் அவளுக்கு மூச்சே வந்தது போல் இருந்தது.
அதில் சட்டென பின்னால் திரும்பி, தண்ணீர் மேடையில் இருந்த குடத்தில் தண்ணீர் எடுத்து குடித்தவள் சற்றே இயல்புக்கு வர,
“நமக்கு கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டாங்க. தெரியும் தானே?” என்றான் கார்த்திகேயன்.
“ம் தெரியும். மாமாவோட நானும் போய் இருந்தேன். எங்கிட்ட கேட்டுதான் செஞ்சாங்க.” என்றாள் வருணிகா.
“ஹோ... அதான் பொறுப்பு ஏத்துக்கிட்டது, இந்த பெயர், நேற்று யோசிச்சி சொல்றேன்னு சொன்னது எல்லாம். அப்படித்தானே!” என்று கார்த்திகேயன் கேட்க,
அவன் கோபமாக கேட்கிறானோ என்று நினைத்து அவனை பார்த்த வருணிகா அப்படி இல்லை என்றதும், “நேத்து சும்மா உங்களை டீஸ் பண்ணதான் அப்படி சொன்னேன்.” என்றாள் சிறு புன்னகையுடன்.
“டீஸ் பண்ண! ம்... நான் டீஸ் பண்ணா நீ தாங்குவியா?” என்று கார்த்திகேயன் கோபம் போல் கேட்க,
“பண்ணிதான் பாருங்களேன்...” என்றாள் வருணிகா தைரியமாய்.
“பண்ண மாட்டேன்னு தைரியம்...” என்று கார்த்திகேயன் கிண்டலாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “இன்னும் என்ன பண்ற வரு? லேட் ஆகிட்டு, கிளம்பலாம் வா.” என்றபடி ஹரிணி வர,
“காலையில ஷாப்பிங் முடிச்சிட்டு வந்த அப்புறம் பார்லர் போங்க ஹரி, இப்போ வேண்டாம். பிரேக் ஃபாஸ்ட் ரெடி, நீங்க சாப்பிடுங்க நான் அப்பாக்கிட்டையும் மனோஜ்கிட்டையும் சொல்லி கிளம்ப சொல்றேன்.” என்றான் கார்த்திகேயன்.
அதன்படி எல்லாரும் கிளம்பி உடை எடுக்க சென்றனர். ஆண்கள் மூவரும் சென்று பத்து நிமிடத்தில் உடை எடுத்து வந்து விட, பெண்கள் இருவரும் ஒவ்வொரு உடையாக மேலே வைத்து பார்த்து தேர்வு செய்து கொண்டிருந்தனர். அதிலும் இதுவரை சேலையே எடுத்து பழகி இருக்காத வருணிகா, எதை எடுப்பது என்று திண்டாடி ஹரிணி தேர்வு செய்வதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வர முயல,
ஹரிணி இவளுக்கு மேல் குழப்பத்தில் உடம்பில் வைத்து பார்ப்பது நன்றாக இல்லை என்று ஓரமாக வைப்பதுமாக இருந்தாள். சற்று நேரம் பார்த்த வருணிகா இது சரியாக வராது என்று, “நான் சுடிதாரே எடுக்குறேன் அண்ணி.” என்றாள்.
“சேலை செலக்ட் பண்ண தெரியலைங்குறதை எவ்வளவு நாசுக்காக சொல்ற நீ?” என்ற மனோஜ் கிண்டலாய் கூறி சிரிக்க,
“ஆமா மனோஜ், எனக்கு தெரியலை. எல்லாமே அழகா தெரியுது. ஆனா வச்சு பார்த்தா டல்லா இருக்குற மாதிரியே ஃபீல் ஆகுது.” என்று வருணிகா சொல்ல,
“அண்ணாவை உதவிக்கு கூப்பிட்டுக்கோ வரு.” என்றான் மனோஜ்.
“எனக்கே எடுக்க தெரியலை, உங்க அண்ணாக்கு எப்படி தெரியும்?” என்ற வருணிகா, மனோஜை முறைக்க,
“அங்கதான் தப்பு பண்ற நீ. சேலை எடுக்க நூறு சேலை எடுத்து பழக்கம் இருக்கணும் என்று இல்லை. அழகான புடவை கட்டியிருக்குறவங்களை ரசிச்சாலே போதும். இல்லணா...?” என்ற மனோஜ், வருணிகாவிடம் தொடங்கி கார்த்திகேயனிடம் முடிக்க,
“போட்டு குடுக்க ட்ரை பண்ணது போதும், கொஞ்சம் சும்மா இரு.” என்று அவனை அடக்கிய கார்த்திகேயன், ஹரிணியும் வருணிகாவும் சேர்ந்து பார்த்துவிட்டு ஒதுக்கி வைத்திருந்த சேலையில் இரண்டை தேர்வு செய்தான்.
“ஹரி நீ இதை எடுத்துக்கோ.” என்று ஒரு பச்சையும் நீல வண்ணமும் கலந்த பட்டை அவளிடம் கொடுத்தவன், “வருணா இதை நீ எடுத்துக்கோ.” என்று ஃப்ரௌன் நிற சேலையை அவளிடம் கொடுத்தான்.
இது வருணிகா வைத்து பார்த்து டார்க் ஷேடாக இருக்கிறது என்று ஒதுக்கி வைத்த சேலை, எனவே வருணிகா அதை எடுக்க தயங்க,
அவள் தயக்கம் புரிந்தவன், “இதை இவங்களுக்கு கட்டி காட்டுங்க.” என்றான் கடை பணியாளரிடம்.
அவரும் கட்டி காட்ட இப்போது புடவை அவளுக்கு நன்றாக இருப்பதாகத் தோன்ற, வருணிகா அதையே தேர்வு செய்தாள்.
ஆனால் ஹரிணி, “அண்ணா இது லைட் கலரா இருக்கு. வேற பாருணா.” என்று சொல்ல,
“இது உனக்கு நல்லா இருக்கும் ஹரி. வேற சேலை வேணும்னா எடுத்துக்கோ. ஆனா இதையும் வச்சுக்கோ.” என்றவன் இன்னும் சில சேலையை தேர்வு செய்து கொடுத்தான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஹரிணிக்கு உடை எடுத்து விட்டு கடையில் இருந்து கார்த்திகேயன் குடும்பம் கிளம்பி இருந்தனர்.
வர வழியிலேயே வருணிகாவிற்கும் ஹரிணிக்கும் சேலையை தைக்க கொடுத்து விட்டு, அவர்களை பார்லரில் விட்டுவிட்டு ஆண்கள் மூவரும் மண்டபம் சென்றனர்.
மேடை அலங்கார வேலை எல்லாம் சரியாக நடக்கிறதா? சமையல் பொருட்கள் எல்லாம் வந்து விட்டதா? என்று சரி பார்த்து, சில மாற்றங்களை சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தனர்.
நெருங்கிய உறவினர்களுக்கு நேரில் சென்றும், மற்ற உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு போனில் அழைத்து சொல்லி இருந்தனர் மனோஜும் ராஜலிங்கமும் சேர்ந்து.
ராஜலிங்கத்தின் உடன் பிறந்தவர்கள் இன்று வருவதாய் இருக்க, எப்போது வருகிறார்கள்? கிளம்பி விட்டார்களா? என்று போனில் அழைத்து கேட்டு கொண்டிருந்தார் ராஜலிங்கம்.
மனோஜ், வருணிகாவையும் ஹரிணியையும் அழைத்து வர செல்ல, கார்த்திகேயன் சற்று நேரம் ஓய்வெடுக்க சென்றான்.
அவன் வேலை பளுவில் ஓய்வு எடுக்க நேரம் கிடைப்பதே அரிது என்பதால், இப்படி கிடைக்கும் நேரம் கொஞ்ச நேரம் என்றாலும் ஓய்வெடுப்பது அவன் பழக்கம். அதன்படி அவன் தூங்க சென்றான்.
நல்ல தூக்கத்தில் இருந்த கார்த்திகேயனை அவன் ஃபோன் அழைப்பு கலைக்க, எடுத்து பேசியவன் அழைப்பைத் துண்டித்து விட்டு எழுந்து முகம் கழுவிவிட்டு வெளியே வரவும், அமேசான் டெலிவரி பணியாளர் வந்து நின்றார்.
அன்று வருணிகா சொன்ன மல்லிகை செடி ஆர்டர் போட்டது வந்திருக்க, அதை வாங்கி கொண்டு அவள் வாங்கி வைத்திருந்த செடிகளுடன் அதையும் சேர்த்து வைத்தான்.
சில செடிகள் மட்டுமே நட்டு வைக்கபட்டிருக்க மற்ற செடி, மரங்கள் எல்லாம் சிலீக்கான் கவருடனே மொத்தமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் மருதாணி செடி, சங்குப்பூ, தூதுவளை செடிகளை எல்லாம் பார்த்த கார்த்திகேயனுக்கு வியப்பாய் இருந்தது.
வருணிகா ஒவ்வொன்றையும் முடிவு செய்து பார்த்து, தேர்வு செய்து வாங்கி இருப்பதை பார்த்தவனுக்கு மனதோரம் இதம் சேர்த்தது அந்த செடிகள்.
கார்த்திகேயன் செடிகளை பார்வையிட்டு கொண்டிருக்கும் போதே, பார்லர் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த வருணிகா, கார்த்திகேயன் செடிகள் அருகில் நிற்பதைப் பார்த்துவிட்டு அவனிடம் வந்தாள்.
“இங்க என்ன செய்றிங்க?” என்று வருணிகா கேட்க, நீ கேட்ட மல்லி செடி வந்துட்டு, அதான் இந்த செடியோட சேர்த்து வைக்க வந்தேன். அப்படியே இந்த செடிகளை எல்லாம் பார்த்துட்டு இருக்கேன் என்றான் கார்த்திகேயன்.
“மல்லி செடி வந்துட்டா? எங்க?” என்று கேட்டு செடியைத் தேடி எடுத்த வருணிகா, “ப்ளீஸ் கதிர், வீட்டுக்கு பின்னாடி பள்ளம் தோண்டி தாங்க, இப்போவே செடியை வச்சிடலாம்.” என்றாள் வருணிகா சந்தோஷ துள்ளலுடன்.
“ஏன் வீட்டுக்கு பின்னாடி வைக்கணும்? முன்னாடி வைக்க வேண்டியது தானே?” என்று கார்த்திகேயன் கேட்க,
“முன்னாடி எல்லாம் பழ மரங்கள் தான். அப்பறம் தென்னை, மல்லி பூவும் ஜாதி மல்லியும் பின்னாடிதான் வைக்குறதா பிளான்.” என்றாள் வருணிகா.
“ஏன் அப்படி?” என்று வருணிகாவைப் பார்த்த கார்த்திகேயன் அடுத்த நொடி இமைக்க மறந்தான், அவள் மூக்கில் புதிதாய் உறவாடிய பச்சை கல் மூக்குத்தியில். அதிலும் மூக்கு குத்தியதில் அவள் முகம் சிவந்து பிறந்த குழந்தையின் நிறத்தில் இருந்தது.
“மல்லி செடியை நிழல்ல வைக்க கூடாது. முன்னாடினா மரத்தோட நிழல் விழும்.” என்ற வருணிகா, “ப்ளீஸ் வாங்க கதிர், இப்போவே இந்த செடியை வச்சிடலாம்.” என்று கார்த்திகேயனை அழைக்க,
அதுவரை வைத்த கண் வாங்காமல் அவளையேப் பார்த்திருந்த கார்த்திகேயன், “இதென்ன புதுசா?” என்றான் அவள் மூக்குத்தியை சுட்டு விரல் கொண்டு சுட்டிக்காட்டி.
அவன் கை பட்டதில் லேசாய் வலி எடுக்க, “ஸ்ஆஆஆ...” என்று முகம் சுளித்த வருணிகா, “இது என்னோட ரொம்ப நாள் ஆசை. இன்னைக்கு அண்ணிட்ட சொல்லிட்டு இருந்தேன், அண்ணி உடனே கடைக்கு கூட்டிட்டு போய் வாங்கி குடுத்தாங்க.” என்றாள் வருணிகா.
“ஏன் இதெல்லாம் எங்கிட்ட சொல்ல தெரியாதா உனக்கு?” என்று கார்த்திகேயன் முறைப்புடன் கேட்க,
“உங்களுக்கு என்னை வெளிய கூட்டிட்டு போக எல்லாம் டைம் இருக்கா?” என்றாள் வருணிகா இடக்காக.
“ஏன் நான் அழைச்சிட்டு போனது இல்லையா?” என்று கார்த்திகேயன் கேட்க,
“நான் கேட்காம நீங்களா கூட்டிட்டு போனது இல்லை.” என்றாள் வருணிகா வீம்பாய். அதில் சத்தமில்லாமல் ஏதோ முணுமுணுத்த கார்த்திகேயன் அழுத்தமாய் தலை கோதிக் கொள்ள,
“என்ன?” என்றாள் வருணிகா முறைப்புடன். “ஒன்னும் இல்லை, வா... செடியை வச்சிட்டு சர்வாவை போய் பார்த்துட்டு வரலாம்.” என்ற கார்த்திகேயன் முன்னே செல்ல, சின்ன புன்னகையுடன் அவனை பின் தொடர்ந்தாள் வருணிகா.
சொல்லாமல் நூறு கதை சொல்லும் உறவு
சூடாக ஆனதடி காதல் இரவு
என்னோடு தான் நான் இல்லையே எல்லாமே நீ தானே
வண்ணங்கள் மலரட்டும்...