Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வண்ணம் தேட வாராயோ -அறிமுகம்

Advertisement

Ashu Senthil

Tamil Novel Writer
The Writers Crew
கருவில் அரும்பி
உருவம் தரித்து
பருவம் அடையும் முன்
பலப்பல பக்குவங்கள் ...
பதறாமல் பெறுபவள்...!
அரும்பும் மலராய்

அழகாய் மணம் வீசி
அன்பின் ஆழத்தை
அனைவரிடமும் காட்டி
வளம் வருகின்ற
வண்ணத்து தேர் ...!
எதையும் இயன்றவரை
எடுத்துச் செய்திடும்

உறுதியான உள்ளத்துடன்
உலகை வலம் வரும்
உன்னத படைப்பு ...!
அகத்தில் அன்புடனும்

புறத்தில் பண்புடனும்
பெண்மைக்கு உண்மையுடனும்
பிரமிக்கும் திறமையுடனும்
பிரகாசிக்கும் சுடர்....!
பொறுமைக்கு இலக்கணமாய்
புனிதத்திற்கு பொருத்தமாய்
அடக்கம் அறிந்தவளாய்

அகங்காரம் தொலைத்தவளாய்
அன்பிற்கு பணிபவள்...!

ஆயிரம் அலுவல் செய்தும்
அலுக்காத அன்னையுள்ளம் ...

அன்பாய் ஒரு வார்த்தைக்காய்
அடை காக்கும் பெண்ணுள்ளம் ...!!!


ஒர் புரியாத புதிர் எது என்று கேள்வி எழுப்பினால் ,, அதற்கு பதில் வாழ்க்கை என்பது மட்டுமே . வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்றே எவரும் அறியா.அது அறிந்தால் அவனை இறைவன் என்ற அடிப்படையில் போற்றுவர்.

நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள்.நாம் ஒரு செயலை இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்று எண்ணி தொடங்கின பின்பும்,, இறுதிவரை அதேபோல் செய்ய இயலாது.அதுவே வாழ்க்கையின் நிதர்சனம் ஆகும்.
எங்கோ ஒரு இடத்தில்,ஏதோ ஒரு பாதையில் ஆரம்பித்த வாழ்க்கை ,அதே வழியில் தான் இறுதிவரை வாழ்க்கை செல்லும் என்று எவராலும் கூற இயலாது.அவர்கள் செல்லும் பாதையில் ஏதோ ஒரு கட்டத்தில் பாதை மாறு பட தான் செய்யும். அதுபோல் தான் இக்கதையில் வரப் போகும் இரு பெண்ணிகளின் வாழ்க்கையும் மாறு பட போகுது.

அப்பெண்ணிகளின் வாழ்வு எவ்வாறு மாறுகிறது என்பது தான் இக்கதை.
இளம் வயதிலேயே பெற்றோரையும் அவர்களது அன்பையும் இழந்து ,,தன் இரு தங்கைக்காக மட்டுமே வாழ்ந்து வரும் அரிவையவள்.

பெற்றோரை இழந்து நிர்க்கதியாக நின்ற இவர்களை இவளது மாமாவின் வீடு தான் அடைக்கலம் கொடுத்தது.இவள் வயதிற்கும் ஏற்ற பக்குவத்தை கொண்டவள்.தன் குடும்ப நலனிற்காக வாழும் பெண் இவள் .

தனது கல்லூரி படிப்பை முடித்து ,, தன் குடும்ப பாரத்தை தானே சுமக்க வேண்டும் என்பதற்காக ஹாஸ்பிடலில் வேலைக்கு சேர்ந்தாள்.தன் தங்கைக்களான சுஜித்ரா மற்றும் கவிபாரதி, அவர்கள் இருவர் மட்டுமே அவளுக்கு உலகம்.இதை தவிர வேறு உலகம் இல்லை என்ன வாழும் பெண்.உலகை உலகை கண்டு நடுங்கும் பெண் அவளே நந்தினி...!!!

தன்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் உயிரை கூட கொடுக்க நினைக்கும் ஒருவன்.கோவம் வந்தால் தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாத அளவிற்கு கோப படுவான் .தான் செய்து கொடுத்த ஒரு சத்தியத்திற்காக ,,பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வரும் ஒரு இளைஞன். தொழில் என்று வந்தால் நேர்மை , கண்ணியம் மற்றும் உண்மை என்று இருந்து ,திறன் பட நிர்வாகத்தை நடத்தி வரும் 27 வயது உடைய இளைஞன் ,,பெயர் உதய்கிருஷ்னன் . அவன் பெயரில் இருக்கும் உதயம் அவன் வாழ்வில் இல்லை.....


சுமித்ரா....
வாழ்வின் துன்பத்தை ஒரே நேரத்தில் பார்த்து வாழ்வையே வெறுத்தவள் .தனக்கு நேர்ந்த கொடுமைக்கு தன்னை மட்டும் வருத்திக் கொள்ளாமல் அவளது குடும்பத்தாரையும் வருத்திக் கொண்டு இருக்கிறாள்..அவளது வாழ்வில் ஏற்பட்ட அந்த கசப்பான நிகழ்வை மறக்க நினைத்தும் மறக்க முடியாமல் தத்தளித்து வருகிறாள்...

சூர்யா...
அன்னையின் செல்ல பிள்ளை .தன் குடும்பத்தாரை கண பார்வையிலே அடக்கும் வல்லமை கொண்டவன். தன் அன்னையின் பாசத்தின் பொருட்டு அவனது காதலையும் மனதினுள்ளே புதைத்து வாழ்ந்து வருகிறான்...

வாழ்வை இணைக்க போவது ஒரு குழந்தை .அந்த குழந்தையின் பெயர் ஜான்வி.

இரு பெண்களின் வாழ்விலும் அவர்கள் துளைத்த வண்ணத்தை கொண்டு வர காத்திருக்கிறார்கள் நம் நாயகர்கள்..

இவர்கள் எப்படி ‌இணைகிறார்கள் என்று கதையினுள் சென்று தெரிந்து கொள்வோம்.......
 
Last edited:
உங்களுடைய "வண்ணம் தேட
வாராயோ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அஷு செந்தில் டியர்
 
Last edited:
சூப்பர்அறிமுகம், அஷு டியர்
நந்தினி உதய்கிருஷ்ணன் சுமித்ரா
சூர்யா குழந்தை ஜான்வி எல்லோரையும் சந்திக்க ஆவலாய் இருக்கு
சீக்கிரமா First அப்டேட் கொடுங்க,
.அஷு டியர்
 
Last edited:
Top