Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வதனியின் தேடியுனைச் சரணடைந்தேன் - 5

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
தேடியுனைச் சரணடைந்தேன் – 5

இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும்
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து இருந்து பறந்து தினம் மகிழ
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே
அணைக்கிறேன்..






எங்கிருகிறோம் என்று புரியாமல் தன் பலவீனமான பார்வையைச் சுழல விட்ட புகழ் தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து இமை சுருக்கினான்… கையில் ஏதோ பாசி மணியை வைத்து அதை உருட்டியபடியே வாயில் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான் ஒருவன்… அவன் உடலின் அசைவுகளை உணர்ந்து கண் திறந்த அந்த மனிதனின் முகம் முழுவதும் மயிர்கற்றைகள் ஆழ்ந்திருக்க, அவனது கண்கள் மட்டும் தீட்சன்யமாக படுத்திருந்தவனையே பார்த்திருந்தது…

அந்த மனிதனின் பார்வையில் புரியாமல் எழ முயன்றவனால் முடியவில்லை… புகழின் முயற்சிகள் புரிந்த அந்த மனிதன் ‘அம்மாயி’ என்றுக் குரல் கொடுத்துக் கொண்டே எழுந்து புகழிடம் வந்தான்…

‘ஒத்து தம்புடு ஒத்து’ என்ற படியே கைகளைப் பிடித்துக் கொண்டான்…
‘நான் எப்படி இங்கே வந்தேன்…’ எனக்கு என்ன ஆனது… இது எந்த இடம்? என்று யோசித்துக் கொண்டே, மீண்டும் கஷ்டப்பட்டு எழுந்து அமர நினைத்தவனுக்கு உடல் ஒத்துழைக்க மறுத்தது…

அந்த மனிதனின் உடலும், உருவமும் சடா முடியும் காட்டு வாசிகள் என்று நினைவுறுத்தியது… இந்தக் காட்டுவாசிகளில் இவன் ஒரு பெரும் புள்ளியாக இருக்க வேண்டும் என மறத்திருந்த மூளை மெல்ல நினைவூட்டியது…

“தம்புடு பயம் ஒத்து… நீங்க எந்த ஊர்ன்னு சொல்லுங்க, வீட்டுக்கு சொல்லுவோம்….” என உருவத்திற்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் மென்மையாகப் பேச, அப்போது கரகரவென்ற சத்ததோடு அந்தக் குடிலின் கதவு திறந்து ஒரு பெண் உள்ளே வந்தாள்… அமைதியான அந்தத் தோற்றமும், உடுத்தியிருந்த உடையும் அணிகலன்களும் மலை ஜாதிப் பெண் என்று கட்டியம் கூறியது…

அவளின் முதிர்ச்சிடையாத முகம் இளமாங்கனியை நினைவுப் படுத்தியது… பதட்டமும், பயமும், எதிர்பார்ப்புமாக தங்களை நெருங்கி வந்தவள், படுத்திருந்தவனை ஆராய்ச்சியாக மேலும் கீழும் பார்த்தாள்… பின், “தபேரா… இந்தத் துரை கண்ணு முழிச்சிட்டாரா, எதுவும் விசாரிச்சீங்களா…” என்றாள் மெல்லிய குரலில்…

“அம்மாயி நினைவு திரும்பியிருக்கு, பயப்பட ஒகுட்டியும் ரேது.. நீ தம்புடுக்கு நீராகரம் இய்யி கூட இரு, நான் மலைக்குப் போயிட்டு சிவனுக்கு அபிஷேகம் செய்துட்டு வரேன்… வேளா வேளைக்கு பச்சிலைச் சாறைக் கொடு…” என்றான் அந்த தபேரா…

இருவரின் பேச்சையும் குழப்பமாகப் பார்த்த புகழ் ஏதோ பேச வர, “தம்புடு நீங்க நேத்து எங்க மலைக்கு கீழே அடிப்பட்டு உணர்வு கூட இல்லாம இருந்தீங்க… ஆடு மேய்க்க வந்த இந்த அம்மாயி பார்த்து தான், எங்க மனுசங்களை வச்சு இங்கத் தூக்கிட்டு வந்தது… அடிக் கொஞ்சம் பலம் தான்… இரண்டு வாரத்துக்கு கால் ஊனக் கூடாது… பார்க்க பெரிய வீட்டுப் புள்ளை மாதிரி தெரியுறீங்க, உங்க காரு நீங்க உடுத்திருந்த துணி மணி எல்லாம் எங்க மனுசங்க பத்திரமா பார்த்துக்குவாங்க, குணமாகிப் போகும் போது எடுத்துக்கோங்க… என நீளமாகப் பேசிய படியே கொடுக்க வேண்டிய மருந்துகளை அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டு வெளியேறினார் தபேரா… அவர் கூறியதும் தான் புகழுக்கு நேற்று நடந்தது எல்லாம் மெல்ல மெல்ல நினைவுக்கு வந்தது…

திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஆச்சியிடம் பேசியவன் யாருக்கும் தெரியாமல் தன் காரை எடுத்துக் கொண்டுப் புறப்பட்டான்… முதலில் மும்பையில் இருக்கும் தன் நண்பனைக் காண போகலாம் என்று இருந்த முடிவை மாற்றி பெங்களூரில் இருக்கும் நண்பனிடம் போகலாம் என கிளம்பியிருந்தான்… தர்மபுரியில் இருந்து ஓசூர் செல்லும் வழியில் இரு இடத்தில் சாலை வேலை நடப்பதாக தடம் மாறி விட்டதும், தெரியாத வழியில் பாதுகாப்பாகதான் பயணம் செய்தான். அப்போது தான் வெற்றி போன் செய்திருந்தான். அவனிடமும், மங்கையிடமும் பேசிவிட்டு போனை வைத்தான். ஆனால் காட்டு விலங்குகள் பயணிக்கும் சாலையும் அது தான் எனத் தெரியாமல் போனது தான் அவனது துரதிருஷ்டம்…


அந்த சாலையில் ஒரு யானைக் கூட்டம் சற்று முன் தான் சென்றதாக கடந்து வந்த ஒரு லாரி டிரைவர் கூறியிருக்க வேறு வழியில்லாமல் அதே இடத்தில் ஓரமாக வண்டியை நிறுத்தியியிருந்தான்… இவன் வண்டியை பார்த்து இவனுக்கு பின்னே வந்த ஒரு சில வண்டிகளும் நிற்கத்தான் செய்தது…

லாரி போன்ற ஏதேனும் கனரக வாகனங்கள் வந்தால் அதன் பின்னேத் தொடரலாம் எனக் காத்திருந்தது, அப்படி மரக் கட்டைகளை சுமந்து வந்த இரண்டு லாரிகளின் பின்னே மற்ற வண்டிகளும் தொடர, புகழின் கார் மட்டும் கிளம்பாமல் மக்கர் செய்ய, இனி பயம் இல்லை என்று கூறி மற்றவர்களை அனுப்பி விட்டு, அவன் சரி செய்து கிளம்பும் நேரம், ஒற்றை யானை ஒன்று பிளிறிக் கொண்டே வர, கூட்டமாக இருக்கும் யானைகள் எந்தத் தொல்லையும் கொடுக்காது…

ஒற்றை யானைகள் கிடைத்த அனைத்தையும் துவம்சம் செய்யாமல் விடாது என்று படித்திருக்கிறான்… அதனால் ஓடியெல்லாம் இதனிடம் தப்ப முடியாது என்று உணர்ந்தவன் காரில் ஏறித் தன் சீட் பெல்டை மாட்டி அமர்ந்து விட்டான்… இன்றோடு தன் வாழ்க்கை முடியப் போகிறதோ என்று உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் லைட் என எதையும் போடாமல் அப்படியே தான் அமர்ந்திருந்தான்…

அருகில் வந்த யானையார் இரண்டு மூன்று முறை அவன் வண்டியையே சுற்றி சுற்றி வந்தது… தன் கண்களை சுருக்கி உள்ளே உற்றுப் பார்த்தது, பின் தன் தும்பிக்கையைக் கொண்டு காரின் மத்தியில் ஒரு தட்டுத் தட்டி காடே அதிரும் அளவிற்கு ஒரு பிளிறலையும் கொடுக்க, யானையாரின் செய்கையெல்லாம் உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த புகழிற்கு, சிறு குழந்தை ஒன்று சேட்டை செய்வதைப் போல் தான் தோன்றியது.



இருக்கும் நிலமை மறந்து சிரித்து விட்டான். ஆனால் அந்தச் சத்தம் யானையார்க்கு கேட்கவில்லை. சுற்றிப்பார்த்து விட்டு, போறபோக்கில் அந்த ஐ ட்வென்டியைத் தன் காலால் ஒரு உதை உதைத்துவிட்டுப் போக, தடுக்க எந்த மரங்களும் இல்லாமல் போக, உருண்டுக் கீழே அடர்ந்த மரங்கள் நீறைந்த ஒரு காட்டுப் பகுத்க்குள் விழுந்தது. சீட் ஃபெல்ட் போட்டிருந்ததால், ஏர்பலூன் வெடித்திருக்க தலையிலும், இதயத்திலும் பெரிதான அடிகள் எதுவும் இருக்கவில்லை.

இடது காலிலும், வலது கையிலுமே சற்றுப் பெரிய அடி, வலியில் அவன் உதவிக் கேட்டு, ஒரு கட்டத்தில் மயங்கும் வரை யாருமே வரவில்லை.

அதன் பிறகு என்ன நடந்தது என்றுத் தெரியவில்லை. முழுதாக ஒரு நாள் முடிந்திருக்கிறது. யோசனையில் இருந்தவனை “சார் உங்க வீட்டுக்கு சொல்லனும், ஆனா இங்க இருந்து எதுவும் செய்ய முடியாது. டவுனுக்குப் போவனும். எங்க மனுஷங்க அப்படி யாரும் போவ மாட்டாங்க. அதனால நீங்க சரியாகி அதுக்குப் பொறவு தான் கொடுக்க முடியும்.” என அந்தப் பெண் சொல்ல,

அவள் கூறுவதிலேயே வெளி உலகத் தொடர்வில் இல்லாத மலைக் கிராமம் என்று அவனுக்குப் புரிந்தது. படுத்த வாக்கிலேயே அவனுக்கு கொடுக்க வேண்டிய மருந்தைக் கொடுத்தாள்.. பிறகு மூலிகை எண்ணெயை எடுத்து கையிலும், காலிலும் போட்டிருந்தக் கட்டில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டாள். இப்போது வேறு பாட்டு. ஆனால் கண்ணும் கருத்தும் அவளின் வேலையில் மட்டுமே.

சற்று மாநிறமான பெண்தான். மழை வெயில், பனி என பாராது ஓய்வில்லாமல் வேலை செய்ததால் உண்டான நிறம் என்றுப் பார்க்கவேத் தெரிந்தது. முரட்டுதனமான ஆடையை சேலைபோல், ஆனால் சற்று வித்தியாசமாகக் கட்டியிருந்தாள். பலகலரில் கழுத்தில் பாசிமணிகள். முடியைத் தூக்கி, இடப்புறமாகக் கொண்டையிட்டு அதில் மஞ்சள் நிறத்தில் காட்டுப்பூ வகையில் ஒன்றை சொருகியிருந்தாள்.

கை முழுவதும் பலபல வண்ணங்களில் கண்ணாடி வளவிகள், சிறு மாசு மரு கூட இல்லாத பளிங்கு போன்ற முகத்தில் சிவப்பில் வட்டமாய் ஒரு பொட்டு என்று இருந்தவளைப் பார்த்துக் கொண்டே இருந்தவனின் பார்வையில் ஒரு தீட்சண்யம் கூடிக் கொண்டேப் போனது.

வேலையை முடித்தவள் அவனைப் பார்க்க, அவனின் பார்வையைக் கண்டு புரியாமல் நோக்கி, “சார் இப்ப நீங்க எதுவும் சாப்பிடக் கூடாது. இந்தப் பச்சிலை மருந்து எதையும் ஏத்துக்காது. நாளைக்கு காலையில் இருந்துச் சாப்பிட ஆரம்பிக்கலாம். வேற என்ன வேணும்னாலும் அம்மாயின்னு ஒரு சத்தம் கொடுங்க, நான் ஓடி வந்துடுறேன்..” என்றவளிடம்,

நன்றாக இருந்தக் கையால் ‘என்னால் பேச முடியவில்லை’ என்பது போல் சைகை செய்ய, அவனிடம் வந்தவள் தண்ணீர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வைத்தவள், ‘இப்போ பேசுங்க’ என அவளும் சைகையில் சொல்ல,

நாக்கு உலர்ந்திருந்ததால் தான் அவனால் பேச முடியாமல் போயிருக்கிறது என்றுப் புரிய, அதில் லேசாக அசடு வழிந்தது அவனுக்கு. அவளும் லேசாகச் சிரிக்க, சற்றே உதட்டை ஈரமாக்கியவன் “அம்மாயி” எனத் தினறலாகச் சொல்ல,

இப்போ பேச முடியுதா, பயந்துட்டீங்களா..” என்றவள் அங்கிருந்தச் சேர் போன்ற ஒரு மரத்தூணில் அமர்ந்து விட்டாள். தணியாக விட்வேண்டாம். பயந்தால் உடல்னிலை பின்னடைந்து விடும் என நினைத்ததால் தான் அவனுக்குத் துணையாக உட்கார்ந்திருந்தாள்.

“நீங்க நல்லானதும் உங்களைப் பத்தி சொல்லுங்க, இப்ப இங்க எங்களைப் பத்தி சொல்றேன். கொட்லாங்காடு இதுதான் எங்க கிராமம். எனக்கு அப்பா அம்மா கிடையாது. ஒரு தாத்தா மட்டும் தான். ஆடு மேய்க்குறது தான் எங்களோட தொழில். நான் பொறக்கவும் அம்மா செத்துடுச்சு. அப்பாவும், தாத்தாவும் தான் என்னை வளர்த்தாங்க, எனக்கு எட்டு வயசு இருக்கும் போது ஆடு மேய்க்கப் போன எங்கப்பாவை சிறுத்தை அடிச்சு, அதுவும் செத்துடுச்சு.”

அதுக்குப்பிறகு, எனக்கு எல்லாமே என் தாத்தா தான். அதுக்கு நான் தான் உலகமே.. தாத்தாவால இப்போ ஆடு மேய்க்கப் போக முடியல, வயசாயிடுச்சு இல்ல, அதனால ரெண்டு வருஷமா நான் தான் போறேன்.” என மூச்சு விடாமல் பேசியவளை, சுவாரஸ்யமாகப் பார்த்திருந்தான் புகழ்.

பிறகு “அந்தச் சடாமுனி யாரு, அவர் தெலுங்கு தமிழ்ன்னு கலந்து பேசுற மாதிரி இருக்கு,” என்றான், ஏதோ பேச வேண்டுமே என்று.

“அவுரா… தபேரா தெலுங்குதான் பேசிட்டு இருந்தார். ஆந்திராவாமே அந்தப்பக்கம் உள்ளவர் போல, இங்கே வந்து எங்ககூட சேர்ந்து கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுறாரு. எங்க கிராமத்துல வைத்தியம் பார்க்க முன்னாடி ஒரு பாட்டி இருந்துச்சு. அது செத்ததும் வேற யாரும் இல்ல, மூலிகைப் பறிக்க இந்தக் காட்டுக்க் வந்த அந்த தபேரா எங்கக் கஷ்டத்தைப் பார்த்து இங்கேயேத் தங்கிட்டாரு.” என்றார்.

“ம்ம்… இங்க இருந்து டவுனு தூரமா.. நீங்க போனது இல்லையா..?” என்றான்.

“தருமபுரின்னு சொல்லுவாங்கல்ல, அதுதான் டவுனு, பொம்பளைங்க வெளியே போரதுக்கு அனுமதி இல்ல, ஆனா ஆம்பளைங்க போலாம். அவுங்களும் பொழுது சாயுறதுக்குள்ள கிராமத்துக்கு வந்துடனும். இல்லைன்னா ஊரை விட்டுத் தள்ளி வச்சுடுவாங்க..” என்றாள் சோகமாய்.

“இப்படியெல்லாம் கட்டுப்பாடுகளை நான் சினிமாவுலதான் பார்த்திருக்கேன். நெஜமாவே இதெல்லாம் நடக்குதா என்ன..?” என்று ஆச்சரியப்பட்டவன், “ஆமா உன்னோட பேரு என்ன, அந்த சடாமுனி அம்மாயின்னுக் கூப்பிட்டார்” என்றான் தகவல்கள் சேகரிக்கும் பொருட்டு.


“பெத்தவுக வச்ச பேரு அரூபி. ஆனா யாரும் அப்படிக் கூப்பிட்டது இல்லை. யாரைப்பாரு அம்மாயி, அம்மாயினுட்டு, அரூபி எவ்வளவு அருமையான பேரு. தபேராக்கிட்ட கூட இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன். அரூபின்னா மாகாளியாம். அம்மனோட பேரு. நல்லாருக்குதானே. நீ வேணா அரூபின்னு கூப்பிடேன்.” என அவள் ஆர்வமாகப் பேச,

அவளின் ஆர்வமே அந்தப் பேர் அவளுக்கு எத்தனை பிடித்திருக்கிறது என அவனுக்குப் புரிகிறது. ஏதேனும் செய்யவேண்டும் என்று சாதாரணமாகத்தான் யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவளிடம் பேசப் பேச உள்ளுக்குள் ஏதோ உருகுவது போல், பனி சாரலில் நனைவது போல் இன்பமாக இருந்தது. புகழ் ஒன்றும் பெண்களைப் பார்த்து பழகியிராதவன் இல்லையே. அவனுக்கு யார் எப்படி பழகுகிறார்கள் என்று இனம்காணத் தெரியுமே.

அதில் அரூபி அவன் கண்களுக்கு வித்தியாசமாகத்தான் தெரிந்தாள். பார்க்கலாம் இரண்டு வாரங்கள் இருக்கிறதே, ஏற்கனவே ஒரு மாதத்திற்கு கம்பெனியில் இருக்க மாட்டேன் என்றும் தகவல் கொடுத்தாகிவிட்டது.

இப்போது திருமணம் வேண்டாம் என்று மற்றவர்கள் பார்வையில் ஓடி வந்தாகிவிட்டது. அதனால் இங்கேயே இருக்கலாம். இதுவும் ஒரு புது அனுபவம் தானே யோசித்தவன், அரூபி அவனையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிய,

“அரூபி அழகான பெயர், அரு, ரூபி, அபி இப்படி அழகா செல்லப் பெயர் வச்சுக் கூப்பிடலாம், உன்னை ரூபின்னு கூப்பிடறேன் சரியா” என்றதும்,

“ அதெல்லாம் வேண்டாம் சார். அரூபியே சின்ன பெயர்தானே, அதை ஏன் சுருக்கனும். நீ அரூபின்னேக் கூப்பிடு.” எனக் கராராகப் பேசினாள். அவன் செல்லப் பெயர் அது இதென்றதும் பயம் வந்துவிட்டது பெண்ணுக்கு. அதை அவனும் உணர்ந்திருக்க வேண்டும்.

உடனே “சரி விடு, உன்னைப் போய் நான் ஏன் செல்லமாகக் கூப்பிடனும், எல்லாரும் கூப்பிடுற மாதிரி அம்மாயினேக் காற்றுப்போன பலூனாய் மாறி விட்டது அவள் முகம். அதைப் பார்த்து சிரிப்பு வந்தாலும், காட்டிக் கொள்ளாமல் அமைதியாகி இருந்தான்.

சில நொடிகள் கடந்திருக்கும். கதவு திறக்கும் சத்தம் கேட்க, தபேரா கையில் சில செடிகளோடு உள்ளே வந்து கொண்டிருந்தார்.
“ஏம்டி அம்மாயி, நுவ்வு போகறேதா.. உம் தாத்தா தேடிட்டு இருந்ததா மூக்கன் சொல்றான். நுவ்வு செப்பிகிடி ராலேதா..” என்றதும்,

“இல்லய்யா நான் தான் நீங்க வர வரைக்கும் எனக்கு துணைக்கு இருக்கச் சொன்னேன். புது இடம் வேற, பதட்டமா இருந்தது.” என்றான் ஆளுக்கு முந்தி.

“சரி தம்புடு சரி, மீரு ஓய்வு எத்தேன்டி, நான் அம்மாயியை அவ தாத்தாக்கிட்ட விட்டுட்டு வரேன். ரேதன்ட பிட்டத்த கொட்டிவேத்துரு,” எனச் செடிகளை ஓரமாக வைத்துவிட்டு வெளியேற, அரூபியும் அவனை மேலிருந்து கீழாக மேலும் ஒருமுறைப் பார்த்துவிட்டு, “உடம்பை அசைக்கக்கூடாது சாரு, நான் விடியவும், உனக்கு தினையில கூழு ஆக்கி எடுத்துட்டு வாரேன். வெசனப்படாம தூங்கனும் சரியா.. “ என்றவள் அவன் கையைப்பிடித்து சொல்ல, “ம்ம்ம்..” என்றுத் தலையசைத்தவன், வேறெதுவும் பேசாமல், கடந்து செல்லும் அவனையேப் பார்த்திருந்தான்..



தொடரும்…….
 
Top