Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(03)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(03)


தன் முன் சிரித்த முகமாக நிற்கும் இரண்டாவது மகனின் கண்களில் கொஞ்சமும் சிரிப்பு இல்லை என்பதை அறிந்த திருவாசகம் கவலைகொண்டவராக,

“ மாறா மீட்டிங் போகலாம் அப்படியே packing section….” என திருவாசகம் கூறிக்கொண்டிருகையில்

“ packing section meeting
யையும் cancel பண்ணிடுன்னு சொல்லவரிங்களா??. ஆனா அந்த மீட்டிங்கை இன்னைக்கு மாலை 6 மணிக்கு மாத்திட்டேன். அதுக்கான தகவலையும் அங்க அனுப்பிட்டேன்”.

ஓ!! நான் கூட ராஜாவை.” என திருவாசகம் கூறிக்கொண்டிருகையில்

“ அங்க அனுப்பலாம்ன்னு நினைச்சீங்க
. ஆனா அண்ணன் அடுத்தவங்க வேலையை பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டு போயிருப்பாங்க அதானே ப்பா. எனக்கு அண்ணனைப்பத்தி தெரியும்.. அதான் மீட்டிங் நேரத்தை மாத்திட்டேன்” என சிறு கீற்றாய் புன்னகைத்தான்.

ஓ!!.. ரொம்ப சந்தோசம்ப்பா. சரி அந்த புது ப்ராஜெக்ட் பைல்…..” என மீண்டும் திருவாசகம் எதோ கூற வருகையில்

“ அந்த பைலை எப்போவோ மீட்டிங் ஹாலுக்கு கொண்டு
போயாச்சுப்பா.

அது எனக்கு தெரியும் மாறா. அந்த பைல்….” என திருவாசகம் மீண்டும் எதோ கூற வருகையில்

“ அதை நானே ஒருதடவை சரிபார்த்துட்டேன் ப்பா
. அதனால நீங்க டென்ஷன் ஆகாதீங்க. சரியா??”

“ ம்ப்ச் மாறா என்னைய முழுசா பேசவிடு
. அந்த பைலோட இந்த எஸ்டிமேஷன் காபியையும் வச்சுருன்னு சொல்ல வந்தேன்”

ஓ!!. சரிப்பா”

“ அப்புறம்….”

“ மீட்டிங் நேரமாச்சு அதானே ப்பா
. வாங்க போகலாம் என கூறி முன்னே மாறவர்மன் நடக்க

மீட்டிங்லையாவது பொறுமையா மற்றவர்கள் சொல்வதை கேட்பானா இல்லை வழக்கம் போல் இவன் யூகத்துக்கு பேசுவானோ தெரியலையே’ என்று மனதில் எண்ணிக்கொண்டு தான் சொல்லவருதை முழுதாக கேட்காமல் செல்லும் தன் இரண்டாவது மகனை நினைச்ச்சு எரிச்சலோடு பின் தொடர்ந்தார்.

மாறவர்மன் எப்பொழுதும் அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என முழுதாக கேட்கும் அளவிற்கு பொறுமையாக இருக்கமாட்டான். அதுதான் அவனின் பலவீனமே. அந்த குணம் சிலநேரம் நன்மையை குடுத்தாலும் பல நேரம் எரிச்சலைத்தான் குடுக்கும் பேசுபவர்களுக்கு. ஏனென்றால் என்ன சொல்ல வருகிறார்கள் என கேட்காமல் பாதியோடு அவனாகவே ஒரு முடிவு பண்ணி பேச ஆரம்பித்துவிடுவான்.

அதே நேரம் திருவாசகம் வீட்டில் மாடியில் தன் அறையில் மெத்தையில் அமர்ந்து நெகத்தை கடித்து கொண்டு ஏதோ தீவர யோசனையில் இருந்த தமயந்தியிடம்,

என்னடி எதோ சீக்கிரமா முக்கியமான விஷயம் பேசணும்ன்னு சொல்லி வர சொல்லிட்டு ஒன்னும் சொல்லாம நெகத்தை கடிச்சுக்கிட்டு இருக்க” என மாயாவதி கேட்க

“ அம்மா அது நான் மாறன் அத்தான் கிட்ட நீங்க சொன்ன மாதிரி பேசிட்டேன்
. ஆனா அவரு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாரு போல” என தமயந்தி கூற

“ என்னடி சொல்ற??”

ஆமா அம்மா இன்னொரு பொண்ணு வாழக்கையை அழிக்குறதான்னு ரொம்ப தத்துவமா பேசுறாரு”

“ அட இவனுக்கு கொழுப்பை பாறேன்க்கா
. இப்போ என்ன செய்றது??. நாம எப்படியோ ஒரு வழியா அழுது பேசி இந்த கல்யாணத்துக்கு அண்ணனை சம்மதிக்க வச்சா, இந்த மாறா கடைசில சொதப்பிடுவான் போல” என லீலாவதி புலம்ப

அம்மா மாமா ஒத்துக்கிட்டாரா??”

“ கிட்டத்தட்ட ஒத்துக்கிட்ட மாதிரித்தான்” என மாயாவதி கூற

அப்போ பொண்ணு பார்த்தச்சாம்மா??” என தமயந்தி கேட்க

“ ஆமா அக்கா நான் கூட கேட்கணும்ன்னு நினைச்சேன்
. அந்த தரகர் பரமசிவன்கிட்ட சொல்லி இருந்தியே, அவர்கூட எதோ நம்ம ஊரு பக்கத்தூருல ஒரு பொண்ணு இருக்கறதா சொன்னாரே என லீலாவதி கேட்க

“ ஹ்ம்ம் ஆமா லீலா பேயாடிக்கோட்டையில செல்லையனோட மகள் வழி பேத்தியாம்
. அந்த பொண்ணுக்கு அம்மா இல்ல அப்பா வேற கல்யாணம் பணிக்கிட்டாரு. அந்த பொண்ணை அவ அம்மாச்சி தான் வளர்க்குறாங்க. அவளோட தாய்மாமனும் அத்தையும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க போல” என மாயாவதி கூறி முடிக்க

நம்ம நிபந்தனைகள் எல்லாம் சொல்லிட்டிங்கதானேம்மா??” என தமயந்தி வினவ

“ ஹ்ம்ம் அவுங்க அத்தைகிட்ட சொல்லியாச்சாம்
. அந்த பொம்பளையும் ஒத்துக்கிச்சாம்” என மாயாவதி கூற

அப்போ இன்னைக்கு அண்ணன்கிட்ட பேசி மாறாவை ஒத்துக்க வைப்போம்” என லீலாவதி கூற மாற்ற இருவரும் சம்மதம் கூறினர்

பின் திருவாசகமும் மாறவர்மனும் புது ப்ராஜெக்ட் மீட்டிங் சென்று அதனை மதியம் மூணு மணிபோல் ஒரு வழியாக வெற்றிகரமாக முடித்தனர்.

மாறா மீட்டிங் நல்லபடியா முடிஞ்சுச்சுல இனிமேதான்….. என மீட்டிங் ஹாலைவிட்டு வெளியே வந்துகொண்டே திருவாசகம் மாறவர்மனிடம் கூற

ஆமா ப்பா இனிமேதான் அதிகமான வேலை இருக்கு”

ஹ்ம்ம் வேலை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீ என்ன முடிவு எடுத்திருக்க??”

எதைபத்திப்பா??” என திருவாசகத்தின் முகத்தை பார்க்காது எங்கோ வெறித்துக்கொண்டு மாறவர்மன் கேட்க

தெரியாதமாதிரி பேசாத மாறா. மருமகள் சொன்னதை பத்திதான்”

“ அப்பா எனக்கு நேரமாச்சு. நான் வரேன்” என முகம் இறுக கூறி தன்னுடைய section
அறைக்கு சென்றுவிட்டான்.

செல்லும் தன இரண்டாவது மகனை பார்த்த திருவாசகத்திற்கு மனதில் பாரம் ஏறியது.

பின் தன்னுடைய அறைக்கு சென்று மத்திய உணவை உண்டுவிட்டு மணியை பார்க்க மூன்றரை என்று காட்டியது. அதேநேரம் உடலும் சற்று ஓய்வு கேட்க வீட்டிற்கு செல்லலாம் என முடிவு எடுத்து கிளம்ப எத்தனிக்கையில் அவரை அறை கதவு தட்டப்பட்டது.

“ எஸ் கம் இன்” என திருவாசகம் கூற

சராசரி உயரத்தைவிட சற்றே கூடுதலான உயரமும் மாநிறமும் எப்பொழுது சிரிப்புக்கு பஞ்சமாக, அதே நேரம் ஒருவித இறுக்கத்துடணும் இருக்கும் முகமும், கூரிய கண்களும் அதுவும் கொஞ்ச நாளாக ஒருவிதமான சோகம் இழையோட வெறுமையை மட்டும் காட்ட இருபத்தி எட்டு தொடக்கத்தில் இருக்கும் திருவாசகத்தின் மூன்றாவது மகன் சிம்மவர்மன் கம்பீரமாக நின்றான்.

“ வாப்பா சிம்மா உட்காரு” என திருவாசம் கூற

ஹ்ம்ம்” என்ற தலை அசைப்புடன் சிம்மவர்மன் திருவாசகம் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

சிறுது நேரத்திற்கு பிறகும் சிம்மவர்மன் எதுவும் கூறாது அமைதியாக இருக்க திருவாசகமே பேச ஆரம்பித்தார்.

“. என்ன சிம்மா என்ன விஷயமா வந்துருக்க??. எதுவும் முக்கியமான விஷயமா??”

“ நீங்கதானே வரசொன்னிங்க” என எதிலும் ஒட்டாத குரலில் சிம்மவர்மன் பதில் கூற

நானா??. நான் எப்போ வர சொன்னே??”

ரெண்டு நாளைக்கு முன்னாடி சொன்னிங்க. இன்னைக்கு பார்க்க வர சொல்லி”

எதுக்கு??” என சத்தமாக வாய்விட்டே கூறி யோசித்த திருவாசகம் பின் நினைவு வந்தவராக

“ ஆமா சிம்மா sales department
பொறுப்பு உன்னோடதுதானே. அதான் போன மாசத்துக்கான கஸ்டமர் feedback பைலை இன்னும் எனக்கு அனுப்பல. அதான் கொண்டு வர சொன்னேன். நீ வரும் போது அதையும் கொண்டு வர சொன்னேனே. கொண்டு வரலையா??”

இதோ இங்க இருக்கு நீங்க கேட்ட பைல்” என கையில் இருந்த ஊதா நிற பைலை நீட்டினான் சிம்மவர்மன். அதனை கண்ட திருவாசகம்

நீ வந்தவுடனே இதை என்கிட்ட குடுத்திருக்கலாமே சிம்மா”

நீங்க கேட்டாதான் கையில குடுக்க முடியும்”

நான் கேட்காமாலையா இப்போ கொண்டு வந்த என கேட்கணும் போல் தான் இருந்தது’. ஆனால் கேட்கத்தான் முடியவில்லை திருவாசகத்தால். கேட்டாலும் ஒன்று பார்வையே பதிலாக வரும் இல்லை ஒற்றை வார்த்தை பதிலாக வரும் என பெருமூச்சை வெளியிட்டு

சிம்மா சாப்பிட்டியாப்பா??”

ஹ்ம்ம் என்ற தலை அசைப்பு மட்டுமே சிம்மவர்மனிடம் இருந்து.

“ ம்ப்ச் சிம்மா இப்படி இருக்காதடா. உன்னோட கவலை புரியுதுடா. சொல்லப்போனா உன்னையவிட எனக்கும் ஜானவிக்கும் தான் அதிகப்படியான சோகம். அதுவும் புத்திர சோகம். நாங்களே நம்பிக்கையோட மீண்டு வரல. நீயும் அந்த நம்பிக்கையோட இருடா. நிச்சயம் நல்லதே நடக்கும். நீ உனக்கான வாழ்க்கையை பாரு” என ஒரு தந்தையாக தன் மகனின் வாழ்க்கையை நினைத்து கவலைகொண்டு கூற

அதற்கும் சிம்மவர்மனிடம் இருந்து ஒற்றை தலை அசைப்பே பதிலாக கிடைத்தது
.

அதனைக் கண்டு ஒருத்தன் பெத்தவனை மத்தவன்னு சொல்லி கொல்றான். இன்னொருத்தன் பேசவிடாம கொல்றான். இவன் பேசாம கொல்றான். இன்னொருத்தன்…’ என தன் கடைசி மகனை நினைத்து கலங்கிய கண்களை தன் தோலில் இருந்த வெள்ளை துண்டால் துடைத்துக்கொண்டே

“ சரி சிம்மா நீ கிளம்பு” என கூற அதற்கும் ஒரு தலையசைப்புடன் கிளம்பினான்
.

அதன் பின் திருவாசகமும் மாலை 5 மணி போல கிளம்பி வீட்டிற்கு சென்றார். அங்கு தன் கடைசி மகனான ருத்ரவர்மனின் அறைக்கு செல்ல, அந்த அறையில் ஏற்கனவே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான் சிம்மவர்மன்.

அவனை கண்ட திருவாசகம், சிம்மா ருத்ராவை பார்க்க இன்னைக்கு டாக்டர் வந்துட்டாரா??” என வினவ

சிம்மவர்மன் வழமை போல இல்லை எனும் விதமாக மறுப்பாக தலை அசைத்தான்.

“ ம்ப்ச்….” என பெருமூச்சொன்றை வெளியிட்ட திருவாசகம் வேற எதுவும் பேசாது அங்கு இருந்த பெரிய கட்டிலில் கோமா நிலையில் படுத்திருந்த ருத்ரவர்மனின் அருகில் போய் நின்று கலங்கிய தன் விழிகளை துடைய்த்துக்கொண்டு சிறுது நேரம் அமைதியாக இருந்தார்.

அவரின் அமைதியை குலைக்கும் விதமாக மயவாதியும் லீலாவதியும் ருத்ரவர்மனின் அறைக்குள் நுழைந்தனர்.

அண்ணா நீங்க இங்கதான் இருக்கீங்களா??. இப்போதான் இவ்வளவு நேரமாச்சே அண்ணனை காணாமேன்னு ஆபீஸ்கு போன் பண்ணுனேன். நீங்க கிளம்பிட்டதா சொன்னாங்க. அப்போ இங்கதான் இருப்பீங்கன்னு வந்தோம். நீங்ககளும் இங்கதான் இருக்கீங்க” என மாயாவதி கூற

ஓ!!.” என கூறி ருத்ரவர்மனையே பார்த்துக்கொண்டிருந்தார் திருவாசகம்.

அப்பொழுது லீலாவதி “ அண்ணா உங்ககிட்ட நாங்க முக்கியமான விஷயம் பேசணும். அது…” என தன் பெருத்த குரலில் கத்த

அதனை கேட்டு எரிச்சலான சிம்மவர்மன் நீங்க உங்க பேச்சை எல்லாம் வெளில வச்சுக்கிறிங்களா. என் தம்பி இங்க இருக்கான்ல.அவனுக்கு தொந்தரவா இருக்காது” என கோவமாக கத்த

அதில் கோவமான சகோதிரிகள் இருவரும் சிம்மவர்மனை முறைத்துக்கொண்டு அண்ணன் தங்களுக்கு ஆதரவாக எதாவது சொல்வார் என எண்ணி திருவாசகத்தை காண, அவர் தன் மகன் சேர்ந்தாற்போல் நிறைய வார்த்தைகளை பேசியதை நினைத்து ஆச்சிரியமாக பார்த்துக்கொண்டிருந்தார். அதனை கண்டு கடுப்பான மாயாவதி,

“ சிம்மா இங்க என்ன உன் தம்பி தூங்கிட்டா இருக்கான்??. கோமாவிலதானே இருக்கான். எதோ நாங்க கத்தி எழுப்புறமாதிரி பேசுற” என கூற

அதில் கடுப்பான சிம்மவர்மன் “ நீங்க பேசுறதை எல்லாம் கேட்குறதுக்கு எனக்கு பொறுமை இல்ல. வெளிய போங்க” என கூறினான்.

அப்போதும் திருவாசகம் எதுவும் கூறாது இருப்பதை பார்த்து,

நாங்க வெளிய போய்ட்டா மட்டும் உன் தம்பிக்கு நினைவு வந்துருமா??. ஆறுமாசமா கோமாவில் தானே இருக்கான். அதுவும் வெளிநாட்டுக்கு படிக்க போனா அந்த வேலையை மட்டும் பார்த்துருக்கணும். கூட படிக்குற பொண்ணை காதலிச்சுட்டு, அந்த பொண்ணை ஆறு மாசத்துக்கு முன்னாடி இங்க கூட்டிவரேன்னு வரவழியில கார் ஆக்சிடெண்டல அந்த பொண்ணு இறந்து போச்சு. உன் தம்பி கோமாவில் படுத்துட்டான். அதற்கு நாங்க என்ன பண்ண முடியும்ன்னு இந்த கத்து கத்துற” பதிலுக்கு லீலாவதி பேச

அதில் கோவம் கொண்ட சிம்மவர்மன் ஏதோ கூறவருகையில் திருவாசகம் முந்திக்கொண்டு,

“ மாயா லீலா வாங்க வெளிய போய் பேசுவோம்” என கூறி தங்கைகள் இருவரையும் வெளியே அனுப்பி விட்டு,

“ சிம்மா டாக்டர் வந்தா மட்டும் சொல்லு” என கூறிவிட்டு அவரும் ருத்ரவர்மனின் அறையை விட்டு வெளியே வந்தார்.

பின் அங்கு ஹாலில் இருந்த சோபாவில் அயர்வாக அமர ஜானவி அவருக்கு குடிக்க காபி கொண்டுவந்து கொடுத்தார். அதனை எதுவும் கூறாது வாங்கி பருகி கொண்டே அங்கு தன் எதிரில் அமர்ந்திருந்த தன் சகோதிரிகளிடம்,

என்ன பேசணும்??. சொல்லுங்க” என திருவாசகம் கேட்க

எதை பத்தி அண்ணா நாங்க பேச போறோம். எல்லாம் என் பொண்ணு வாழ்கையை பத்திதான். நேத்து நான் சொன்னதை பத்தி நீங்க என்ன முடிவு எடுத்திருக்கிங்க அண்ணா” என மாயாவதி பேசிக்கொண்டிருக்கையில்

“ ஆரு
…..விட்டு….. பொண்ணை பத்தி ஆரு…. முடிவு சொல்லுறது. ஹ்ம்ம்…. என்……. பொண்ணுடா….. அப்பன் நான் இருக்கும்போதே….. அவ வாழ்க்கையை நாசம் பண்ண விட்டுடுவேனா…. ஹ்ம்ம்…. விடமாட்டேன் விடவேமாட்டேன்டா….” என போதையில் தள்ளாடியபடி கத்திகொண்டே வீட்டினுள் நுழைத்தார் மாயாவதி கணவரும் தமயந்தி தந்தையுமான குணசேகரன்.

குணசேகரன் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த ராஜவர்மன் தமயந்தி ஜானவி அப்பொழுதுதான் மாமன் வீட்டிற்கு வந்த விவேகன் நித்தியவதி மற்றும் வீடு வேலைக்காரர்கள் முதற்கொண்டு அனைவரும் ஹாலிற்கு வர,

அவர்களை பார்த்த குணசேகரன்,

இத்தினி பெரும் இந்துமா என் மவ வாழக்கையை கெடுக்க பாக்குறீங்க??” என தள்ளாடியயபடி பேசிய குணசேகரன் திருவாசகத்திற்கு முன் நின்று தன் முழுக்கை சட்டையின் கையை மடித்துவிட்டு கொண்டே

சொல்லு மச்சா சொல்லு என் மவ வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சொல்லு சொல்லுஉஉஉஉ….” என கத்த

அதில் கடுப்பான திருவாசகம் “ குணசேகரா!!!” என கோவமாக கத்த

போச்சு போச்சு மாமா பெரியப்பாவை நல்லா திட்டப்போறாரு அண்ணா” என நித்தியவாதி அருகில் இருந்த தன் பெரியம்மா மகன் விவேகனிடம் கூற

ஹ்ம்ம் பாரு நித்தி இன்னும் என்ன என்ன பண்ண போறாரோ???” என விவேகன் கூறிக்கொண்டிருக்கையில்

“ .ஹ்ம்ம் சேகரன்தான் நான் சேகரன்தான். உன் கூடவே சுத்துன நாய் சேகரன்தான். ஆனா என்ன செய்ய??. ரம்மியா இருந்த என் மக வாழ்க்கையை இன்னைக்கு டம்மியாக்க போறியே.

ஏம்மா தங்கச்சி நீ கூட ஒன்னும் சொல்லவே இல்லையேமா. இந்த அண்ணன் கேட்டப்ப எல்லாம் பிராந்தி துவையலா அரைச்சுகுடுத்தியே. அது சும்மாவா சொல்லுமா சொல்லு” என திருவாசகத்திடம் ஆரம்பித்து ஜானவியிடம் குணசேகரன் பேசுகையில்

அக்கா உன் வீட்டுகாரர பேசவிட்ட நம்ம திட்டத்தை எல்லாம் ஒன்னும் இல்லாம ஆக்கிடுவாரு பார்த்துக்கோ என லீலாவதி மாயாவதி காதில் கூற

இந்த மனுஷன் இப்படி தண்ணி போட்டு தண்ணி போட்டு உடம்பை கெடுத்துகிட்டு வேலைக்கு போகமுடியலைன்னு ராஜினாமா பண்ணிட்டு வர வர ரொம்ப அலம்பு பண்றாரு என மாயாவதி லீலாவிடம் கூறிக்கொண்டே ஜானவியிடம் பேசிக்கொண்டிருந்த குணசேகரை பார்த்து,

என்னங்க இங்க கொஞ்சம் வாங்களேன் என பல்லைக்கடித்து கொண்டு அழைக்க,

உடனே குணசேகரன் என்னையாவா??”

ஹ்ம்ம் வாங்க

இதோ வந்தேன் பெண்ணே” என தள்ளாடியபடி மாயாவதி அருகில் வந்தவர் திடீரென மாயாவதி முகத்தை உத்து பார்த்துவிட்டு,

நீ என் மாயாக்குட்டில. செல்லம் நீ இங்குனாதான் இருக்கியா??. உன்னைய முதல்ல பார்த்தேண்டா. அழகா இருக்கவும் யாரோன்னு நினைச்சுட்டு போய்ட்டேன். கிட்டக்க வந்தவுடன் தான் தெரியுது நீ என் கட்டிங் பொண்டாட்டின்னு என தள்ளாடியபடி கூற

“ என்னது??
என கோவமாக மாயாவதி கத்த

ச்சீ ச்சீ இல்ல நான் தாலி கட்டுன பொண்டாட்டிட்டின்னு சொல்லவந்தேன் என குணசேகரன் போதைலயும் சமாளிக்க

சரி சரி முதல்ல வீட்டுக்கு வாங்க அங்க போய் பேசிக்கலாம். டேய் விவேகா வந்து அப்பாவை கூட்டிட்டு போ வீட்டுக்கு என தன் மகனை அழைக்க

அவனோடு நித்தியவதி உடன் வந்தாள் தன் பெரிய அப்பாவை அழைத்து செல்ல.

என்ன மாயா வீட்டுக்கு போக சொல்லிட்ட. ஓ!! நீ நியாயத்தை கேட்க போறியா??. கேளு கேளு நல்லா கேளு. உன் அண்ணா பின்னாடி குவாட்டர் போட்ட பூனையாதானே சுத்துன. அப்போ நல்லா கேளு சரியாஎன பேசிக்கொண்டே தள்ளாடியபடி குணசேகரன் விவேகன் மற்றும் நித்யவதியுடன் செல்ல,

அப்பொழுது அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்நித்யவாதி விவேகனிடம் கேட்க

என்ன நித்தி??”

பெரியப்பா சொன்ன பிராந்தி துவையல்ன்னா என்ன??”

ஹா ஹா…. அது பிரண்டை துவையல் மா. அதைத்தான் அப்பா போதையில சொல்லிருக்காரு

நல்லா சொன்னாருப்போ என சிரித்துக்கொண்டே இருவரும் அவரை தாங்கி பிடித்தபடி சென்றனர்.




அடுத்த அத்தியாயத்தில் பாப்போம் friends


plz drop ur comments friends

 
ஐயோ ஐயோ இந்த திருவாசகம்
நாலு பசங்கள வச்சுகிட்டு
நாய் படாத பாடு படுவார் போல
பிராந்தி துவையல் ??
 
Top