Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(04)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(04)



குணசேகரன் சென்ற பின் சிறுது நேரம் அமைதியாக இருந்தது திருவாசகம் இல்லம்
. அப்பொழுது ருத்ரவர்மனை பரிசோதிக்க திருவாசகம் குடும்ப டாக்டர் விஜயன் வீட்டினுள் நுழைந்தார். அவரை பார்த்த ஜானவி,

அண்ணா வாங்க” என அழைக்க

“ ஹ்ம்ம் ஜானவிம்மா என்ன எல்லாரும் ரொம்ப அமைதியா இருக்கீங்க
. என்னடா திரு??” என விஜயன் கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைய

“ ஒண்ணுமில்லடா வழக்கம் போல குணா தண்ணிபோட்டு அலப்பறை பண்ணிட்டு போனான்
. சரி அதை விடு இப்போ ருத்ரனுக்கு எப்படி இருக்கு”

“ ஹ்ம்ம் பார்ப்போம்டா போனதடவையே கொஞ்சம் முன்னேற்றம் தெரிஞ்சுச்சு
. இப்போ எப்பிடி இருக்குன்னு நான் போய் பரிசோதித்துவிட்டு வரேன் சரியா. நீ இங்கயே இரு. எப்படியும் சிம்மா அங்க தான் இருப்பான்” என விஜயன் கூற

ஹ்ம்ம் ஆமா அவன் அங்கதான் இருக்கான்” என திருவாசகம் கூறினார்.

சரி நான் போய் பார்த்துட்டுவரேன் என ருத்ரனின் அறைக்கு சென்றார் விஜயன்.

விஜயன் சென்ற பின் அங்கிருந்தவர்களை பார்த்து,

எல்லாரும் அவுங்க அவுங்க வேலையை போய் பாருங்க என கூறிவிட்டு,

நீங்க சொல்லுங்க என்ன பேசணும் என் கிட்ட??” என தன் இரு சகோதிரிகைகளை பார்த்து திருவாசகம் வினவ

“ அண்ணா அது நம்ம ருத்ரனுக்கு பொண்ணு கிடைச்சுருச்சு நீங்க ஒரு வார்த்தை சொன்னா
நம்ம ஜோசியர் சொன்ன தேதிக்குள்ள சிம்மவாக்கும் நித்யவதிக்கும் ருத்ரனுக்கும் நாங்க பார்த்திருக்க பூந்தென்றல் செல்விக்கும் கல்யாணம் பண்ணிடலாம்” என மாயாவதி கூறிக்கொண்டிருக்கையில்

அங்கு வந்த மாறவர்மன் “
நீங்க இன்னும் இந்த பிரச்சனையை விடலையா. உங்களுக்கு அப்படி என்ன அத்தை ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்குறதுல சந்தோஷம் என கோவமாக கேட்க

ஏப்பா உன் தம்பிக்கு ஒரு பொண்ணை கட்டிவச்சா அந்த பொண்ணோட வாழ்க்கையை அழிக்குறதுக்கு சமமா??” என லீலாவதி நக்கலாக வினவ

“ ஓ
!!... அப்போ நீங்க உங்க பொண்ணு நித்தியவதியை கட்டி குடுக்க வேண்டியதுதானே ருத்ரனுக்கு. ஏற்கனவே அவனுக்குத்தான் நித்தியவதின்னு பேசி இருந்தது” என மாறவர்மனும் நக்கலாக பதில் குடுக்க

“ அது
…. அது…” என லீலாவதி திணறினார்.

அதனை கண்டு என்ன அத்தை பதில் சொல்ல முடியலையாக்கும். உங்க பொண்ணோட வாழ்க்கைக்காக அடுத்த பொண்ணோட வாழ்க்கையை அழிக்க பார்க்குறீங்க

மாறா நித்தியவதிக்கு சிம்மாவை கட்டிக்க தான் விருப்பம். அப்படி இருக்குறப்போ நாங்க என்ன செய்ய முடியும்??” என மயவாதியும் கோவமாக கூற

அப்போ சிம்மா நித்தி கல்யாணத்தை மட்டும் பண்ணுங்க ருத்ரனுக்கு எப்போ குணமாகுதோ அப்போ அவன் கல்யாணத்தை அவன் விருப்பப்படி பண்ணிக்கலாம் என மாறவர்மன் கூறிக்கொண்டிருக்கையில்

எப்போ மாறா ஐம்பது வயசுலையா??” என திருவாசகம் வினவ

அப்பா!!!.....” என கத்தினான்

அவன் சத்தத்தில் வெளியே வந்த ஜானவி தமயேந்தியும் அமைதியாக அங்கு நடப்பதை காண


ஏன் ப்பா அப்படி சொல்றிங்க. ருத்திரனுக்கு சீக்கிரம் குணமாகிடும் ப்பா என மாறவர்மன் கூற

இல்லையே மாறா ருத்திரனுக்கு இப்போ இருப்பத்தி ஆறு வயசு ஆகுது இப்போ கல்யாணம் பண்ணலைனா அடுத்து ஐம்பது வயசுலதான் கல்யாணம்ன்னு நம்ம குடும்ப ஜோசியர் சொல்லுறாரு. ஒருவேளை இப்போ கல்யாணம் பண்ணி வச்சா வரபோற பொண்ணோட ராசியால சீக்கிரம் குணமாகிடும்ன்னு சொல்லுறாரு. அதோட….” என திருவாசகம் கூறிக்கொண்டிருக்கையில்

அப்பா நீங்க நாயக் குழுமத்தோட ஓனர். நீங்க படிச்ச மனுஷன். அப்படி இருக்குறப்போ என்னப்பா ராசி ஜாதகம் அப்படி இப்படின்னு. சுயநினைவு இல்லாம எப்போ சுயநினைவு வரும்ன்னு தெரியாம இருக்குறவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு பிடிவாதமா இருக்கிறீங்க. இது கொஞ்சம் கூட நல்லா இல்லப்பா என மாறவர்மன் கூற

இதுக்கு மேல நான் எதுவும் பேச விரும்பல மாறா எனக்கு ராசி ஜாதகம் எல்லாத்துலயும் எப்பவும் முழு நம்பிக்கை அதுவும் தீவிரமான நம்பிக்கை இருக்கு. அதனால என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவன் குணமாகிடுவான்னா நான் கல்யாணம் பண்ணிவைக்க தான் போறேன்.

அப்புறம் அதே முகூர்த்தத்துல சிம்மாவுக்கும் நித்யவதிக்கும் கல்யாணம் பண்ணிவைக்க போறேன். நீ இதுல இனிமே தலையிட வேண்டாம் என கூறிக்கொண்டிருக்கையில்

நான் தலையிடலாம்லஎன கேட்டுக்கொண்டே வந்தான் சிம்மவர்மன். அவன் குரல் திசை கேட்டு அனைவரும் திரும்ப

சொல்லுங்க ப்பா நான் கல்யாணம் பண்ணனுமா இல்லையான்னு நான் முடிவு பண்ணலாம்ல என சிம்மவர்மன் கூற

ஓ தாராளாமா. அதேமாதிரி நானும் உங்க அம்மாவும் இந்த வீட்டுல இருக்கறதா இல்ல யாருமே வேணாம்ன்னு வெளிய போறதான்னு நாங்க முடிவுபண்ணலாம்ல சிம்மா” என திருவாசகமும் கேட்க

“ என்னப்பா இப்படி பண்ணுனா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவேன்னு எதிர்பார்க்குறீங்களா??”

இல்லப்பா ஒத்துக்கணும்ன்னு எதிர்பார்க்குறேன்” என திருவாசகம் தணிந்த குரலில் கூறி அயர்வாக அமர்ந்தார்.

அப்போது அங்கு வந்த விஜயன் “ டேய் திரு ஒரு நல்ல செய்திடா. ருத்ரனோட உடல்ல நல்ல முன்னேற்றம் சீக்கிரம் குணமாகிடுவான் என மகிழ்ச்சியுடன் கூற

“ ரொம்ப சந்தோசம்டா” என கூறிய திருவாசகம் பின் விஜயனை தனியாக அழைத்துக்கொண்டு பேச சென்றார்
.

பின் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க செல்ல சிம்மவர்மன் நித்தியவதியை பார்த்து பேசி இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்தும் எண்ணத்துடன் மாயாவதி இல்லத்தை நோக்கி சென்றான் எப்பிடியும் விவேகனும் நித்தியவதியும் குணசேகரனோடு போராடிக்கொண்டிருப்பர் என அறிந்து.

குணசேகரன் வீட்டில் குணசேகரனை கடினப்பட்டு தூங்கவைத்துவிட்டு விவேகனும் நித்யவதியும் பேசிக்கொண்டிருந்தனர்
.

ஏன் நித்தி அப்பாவுக்கு உன் மேல இம்ம்புட்டு பாசமா??”

“ சின்ன வயசுல இருந்து நான் எங்க
அப்பாவோட இருந்ததைவிட பெரிய அப்பாகிட்டதா அதிகம் இருந்திருக்கேன். அதனால் இன்னைக்கு எனக்காக மாமாவையே எதிர்த்து சண்டை போட்டுருக்காரு

ஹ்ம்ம் ஆமா நித்தி. அதோட எங்க உன்னைய ருத்ரனுக்கு கட்டிவச்சுடுவாங்களோன்னு அப்பா கோவமாகிட்டாருபோல”

ஹ்ம்ம் ஆமா அண்ணா. பாரு என் மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லாமா எங்க அப்பா எதோ மாமா சொன்னாங்கன்னு தொழில்றீதியா மும்பைக்கு போயிருக்காரு. எப்போ வருவாரோ தெரியல”

வந்தா மட்டும். மாமா எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம்தான் மச்சான்னு சொல்லி தலையை நல்லா ஆட்டுவாரு சித்தப்பா” என விவேகன் கூறிக்கொண்டிருகையில்

அங்கு வந்த சிம்மவர்மன்
,

நித்தி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என கூற திடீரென கேட்ட சிம்மவர்மன் குரலில் திரும்பிய நித்தியவதி

“ வா….
வாங்க அத்தான் என கூற

உன்கூட தனியா பேசணும் நான். விவேகா நீ கொஞ்சம் வெளியில இருக்கியா

சரி சிம்மா என கூறிவிட்டு விவேகன் அறையைவிட்டு வெளியேற

நித்தி உனக்கும் எனக்கும் கல்யாண ஏற்பாடு நடக்குதே உனக்கு தெரியும்தானே

தெரியும் அத்தான்

சரி அப்போ இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லு

ஆனா எனக்கு விருப்பம் தான் அத்தான்

எனக்கு இல்லையே

அப்போ அதை நீங்களே சொல்ல வேண்டியதுதானே

உன்கூட நான் வாக்குவாதம் பண்ண வரல. உனக்கு முதல்ல ருத்ரவர்மனைத்தானே பேசுனாங்க . அவனுக்கு இப்படி சுயநினைவு இல்லைன்னு உடனே என்னைய மாப்பிள்ளைன்னு சொல்லுறாங்க. நீயும் கல்யாணத்துக்கு ஒத்துக்குற

அப்பவும் சரி இப்பவும் சரி நான் பெரியவங்க சொல்லுறதைத்தான் கேட்குறேன். அதனால நீங்க எதை செய்றது இருந்தாலும் உங்க பக்கம் இருந்தே செய்ங்க

!!!.... இதுக்கு நீ கவலைப்பட போற என கூறிவிட்டு சிம்மவர்மன் அங்கிருந்து செல்ல

நித்தியவதியும் அறையை விட்டு வெளியேறினாள்
. அவளின் பின்னே வந்த விவேகனிடம்,

அண்ணா நான் எங்க வீட்டுக்கு போறேன் இப்போ எதுவும் கேட்காதீங்க என கூறிவிட்டு தன் வீட்டிற்கு செல்ல

அங்கு சின்னம்மா சாப்புடுறீங்களா என சமையல் வேலை பார்க்கும் அன்னம்மாள் கேட்க

இல்ல அன்னம் எனக்கு எதுவும் வேண்டாம் என கூறிவிட்டு தனது அறையில் படுக்கையில் உட்கார்ந்து அழுதாள். பின் கடந்த சில மாதங்களாக நடக்கும் பிரச்சனையை பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள்.

சிறு வயது முதல் பெரியவர்கள் எப்படி இருந்தாலும் சரி ருத்ரவர்மன், விவேகன், தமயந்தி, நித்தியவதி நால்வரும் நன்றாக பழகுவார்கள். ராஜா, மாறன் மற்றும் சிம்மன் எப்பொழுதும் இவர்களிடம் அதிகம் ஒட்டி பழக மாட்டார்கள்

ருத்ரவர்மனுக்கு எப்பொழுதும் தன்னுடன் நட்பு வைப்பவர்கள் அனைவரும் அவனின் தகுதியுடன் தான் இருக்க வேண்டும்
. இல்லையென்றால் அவர்களை ஒதுக்கிவிடுவான். அவனை விட திறமை தகுதி அதிகமாகவோ இல்லை குறைவாகவோ இருந்தால் அவர்களுடன் அதிகம் பழக மாட்டான் .அதனால் எப்பொழுதும் அவனின் நட்பு வட்டம் குறைவுதான்.

வீட்டில் ருத்ரவரனுக்கு நித்தியவதியை திருமணம் செய்துவைக்க பெரியவர்கள் பேசிக்கொள்ள. அதனால் நித்தியவதியை ருத்ரவர்மன் படித்த அதே சிவில் இன்ஜினியரிங் யையே படிக்க வைத்தார் லீலாவதி.

இதில் நித்யவதிக்கு உடன்பாடு இல்லையென்றாலும் லீலாவதிக்காக அந்த படிப்பையே படிக்க ருத்ரவர்மன் தன்னுடைய மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுவிட்டான் இந்நிலையில் சிம்மவர்மன் மேல காதல் வயப்பட்ட நித்யவதி தன் காதல் நிறைவேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் ருத்ரவர்மன் இந்தியா வந்த பின் உண்மையை சொல்லி உதவி கேட்க எண்ணினாள் ஏனெனில் நித்யவதியின் காதல் எதிரி அவளின் காதலன் சிம்மவர்மன் அல்லவா.

அதனால் ருத்ரவர்மன் மூலம் அணுக எண்ணினாள். ஆனால் அதற்குள் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்து வீட்டிற்கு வரும் வழியில் கார் ஆக்சிடென்ட் ஆனதில் சுயநினைவு இல்லாமல் படுக்கையாக இருக்கிறான்.

இந்நிலையில் ஜாதகம் ஜோசியத்தில் அதிக நம்பிக்கை கொண்ட திருவாசகம் தன்னுடைய குடும்ப ஜோசியர் ஈஸ்வர சாஸ்திரியிடம் கேட்க அவர் ருத்ரவர்மனுக்கு இன்னும் பதினைந்து நாட்களில் திருமணம் நடக்க வில்லையென்றால் அடுத்து ஐம்பது வயசில் தான் திருமண யோகம் வரும் என கூறி, அதோடு உடனடியாக திருமணம் நடந்தால் ருத்ரவர்மன் குணமாக வாய்ப்பு உள்ளது என கூறிவிட அன்று ஆரம்பித்தது பிரச்சனை.

திருவாசகம் ருத்ரவர்மனுக்கு நித்யவதியை பெண் கேட்க சுயநினைவு எப்பொழுது வரும் என அறியாது மகளின் வாழ்வை அழிக்க முடியாது என எண்ணி லீலாவதி மறுத்துவிட்டார். திருவாசகம் காரணம் கேட்க சிம்மவர்மனை மகள் விரும்புவதாக பொய் கூறுவதாக எண்ணி அவரே அறியாது மகளின் ஆசையை கூறிவிட திருவாசகமும் ருத்ரவர்மனுக்கு பெண் கிடைத்தவுடன் இரு கல்யாணத்தையும் சேர்த்து வைத்துவிடலாம் என கூறிவிட்டார் .

அன்றிலிருந்து ருத்ரவர்மனுக்கு பெண் பார்க்கும் படலம் ஆர்மபித்தது . இதில் மாயாவதி லீலாவதி போட்ட திட்டம் அருணாவை தேவை இல்லாமல் பேசி கோவப்படுத்தி வீட்டை விட்டு போகவைத்துவிட்டனர். அதற்கு ஜானவி திருவாசகித்திடம் பேசாது இருப்பது வசதியாக போய்விட்டது.

அடுத்து ருத்ரவர்மனுக்கு ஒரு ஏழை படிக்காத ஆதரவு இல்லாத பெண்ணை திருமணம் செய்துவைத்தால் ருத்ரவர்மனுக்கு நினைவு திரும்பிய பின் நிச்சயம் அவனின் குணத்திற்கு அந்த பெண்ணை ஏற்றுக்கொள்ளமாட்டான் இல்லை ஒருவேளை திருவாசகத்தின் வற்புறுத்தலால் மனைவியாக ஏற்றுக்கொண்டாலும் அவளை தங்களின் அடிமையாக வைத்துக்கொள்ளலாம் என எண்ணினர்.

அதற்கடுத்து இந்த வீட்டில் தாங்களும் தங்கள் மகள்களும் வைப்பதுதான் சட்டம் என திட்டம் போட்டனர் மாயாவதியும் லீலாவதியும். இதற்கு அனைத்து யோசனையும் கொடுப்பதும் தமயேந்திதான்.

அதன் படி சுயநினைவு இல்லாமல் இருக்கும் ஒருவனை திருமணம் செய்ய ஒருவரும் முன் வரவில்லை. மேலும் வேற எவரேனும் இவர்களின் குடும்பத்திற்காகவும் பணத்திற்காகவும் கல்யாணத்திற்கு சம்மதம் கூற எண்ணினால் மாயாவதியும் லீலாவதியும் பேசி பேசியே தடுத்துவிட்டனர். திருவாசகத்திற்கு இதில் மனது சோர்ந்துவிட.

மாயவதியும் லீலாவதியும் ஏற்கனவே இவர்கள் எதிர்பார்த்த ஆதரவும் படிப்பும் இல்லாத பூந்தென்றல் செல்வியை பற்றி திருவாசகித்திடம் கூற முதலில் திருவாசகம் மறுத்துவிட்டார் மகனின் குணம் அறிந்து. ஆனால் மாயாவதியும் லீலாவதியும் ருத்ரவர்மன் குணமாக வேண்டும் என கூறி கூறி ஒருவழியாக சம்மதம் வாங்க இவர்கள் எதிர்பார்க்காதவரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

அவர்தான் தமயந்தி கணவனும் திருவாசகம் இரண்டாவது மகன் மாறவர்மனிடம் இருந்து. ஆனால் அவனின் பேச்சையும் கவனத்தில் கொள்ளாது ஒருவழியாக திருவாசகம் இரு கல்யாணத்துக்கும் ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டார் அதன் விளைவு சிம்மவர்மனின் நித்தயவதியுடனான பேச்சு.

இதை அனைத்தையும் யோசித்த நித்யவதி
நிச்சசயம் சிம்மவர்மனுடனான தன் வாழ்க்கை பெரும் கவலைக்குறியதுதான். ஆனால் தன் காதல் நிறைவேறியதில் அவ்வளவு சந்தோசம் கொள்ள.

இந்த சிம்மனை காதல் பண்ணறேன்னு எனக்கே நம்ப முடியல பாவம் இதை நான் சொன்னா சிம்மன் மட்டும் நம்ப முடியுமா???. எப்படித்தான் இந்த சிடுமூஞ்சி சிம்மன பிடிச்சுச்சுன்னு தெரியல’ என மனதில் எண்ணிக்கொண்டு கண் அயர ஆரம்பித்தாள்.

அதே நேரம் பேயாடிக்கோட்டையில் தன் வீட்டில் தன் அருகில் படுத்திருந்த சின்னாத்தாவை பூந்தென்றல் செல்வி எழுப்பிக்கொண்டிருந்தாள்.

ஆத்தா…. ஆத்தா….” என மெதுவாக சின்னாத்தாவின் கையை தென்றல் சுரண்ட

“ ம்ப்ச்” என சின்னாத்தா திரும்பி படுக்க

“ ஆத்தா”
என சற்றே உரக்க அழைக்க அப்பொழுதும் அமைதியாக இருந்த சின்னாத்தாவை பார்த்து பல்லை கடித்துக்கொண்டு

“ சின்னாத்தா” என வழக்கம் போல அவரின் காதில் கத்த

ஹ்ம்ம் என்னங்க” என மெதுவாக சின்னாத்தா முனங்க

“ என்னது என்னங்கவா!!!” என முழித்துவிட்டு மறுபடியும் அவரின் காதில்
சின்னாத்தா என தென்றல் கத்த இம்முறை

என்னங்க சொல்லுங்க என சற்றே சிரிப்புடன் முனங்க

சின்னாத்தாவை வேகமாக உலுக்கினாள் தென்றல். அதில் தூக்கத்தில் இருந்து விழித்த சின்னாத்தா,

ஏண்டி நேரங்கெட்ட நேரத்துல என்னைய எழுப்புற. ரொம்ப வருஷம் கழிச்சு என் புருஷன் என் கனவுல வந்து சின்னாத்தா சின்னாத்தான்னு காதுல மெதுவா கூப்பிட்டாரு தெரியுமா. இப்படி அநியாயமா அவரு மூஞ்சிய கூட பார்க்கவிடாம என்னைய எழுப்பிட்ட போடி என குறைபட்டுக்கொள்ள

“ ஆத்தா நான்தா உன்னைய காதுல பேர் சொல்லி கூப்பிட்டேன்”

“ ஏன்டி சாப்பிட்டேனான்னு எப்போ கேட்குற
. நீதானே எனக்கு இட்லி வச்சு குடுத்த

ம்ப்ச் ஆத்தா…” என கத்த

உள் அறையிலிருந்து “ ராத்திரி நேரம் மனுஷ மக்களை தூங்கவிடாம அப்பிடி என்னத்த தான் பேசுவாங்களோ என சுந்தரி குரல் கேட்க

வேகமாக தலையணையில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள் தென்றல்.

இதுவரை சாதாரணமாக இருந்த தன் பேத்தியின் முகம் திடீரென வாட்டமானதை கண்டு உள்ளறையிலிருந்து சுந்தரி கூறியது என்னவென்று கேட்காவிடினும் எதோ பேத்தியின் மனது நோகும்படி கூறியதை உணர்ந்து கொண்ட சின்னாத்தா,

செல்வி வா வெளியில போய் கொஞ்ச நேரம் காத்தாட உட்காருவோம். எனக்கு தூக்கம் போயிடுச்சு என கூறி தென்றலை வாசலில் இருந்த வேப்ப மரத்தடிக்கு அழைத்து சென்று அங்கு இருந்த கல்லில் அமர்ந்த சின்னாத்தா

செல்வி என்னத்தா??. என்ன ஆச்சு??.”

ஆத்த எனக்கு பயமா இருக்கு என சற்றே உரக்க சின்னாத்தா கேட்கும் வண்ணம் தென்றல் கூற

பயமா எதுக்கு??”

என்னன்னு தெரியல கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னப்போ ஒன்னும் தோணல. ஆனா நீ இன்னைக்கு அந்த பெரிய குடும்பத்து சம்மந்தத்துக்கு சம்மதம் சொன்னவுடன் பயமா இருக்கு வாழ்க்கையை நினைச்சு என கலங்கிய குரலில் தென்றல் கூறினாள்.

ஆத்தா செல்வி நீ எதுக்கும் கவலைப்படாம தைரியமா இரு. இத்தனை வருஷம் பட்ட கஷ்டத்துக்கு நீ இனி சந்தோசமா இருப்ப. உன் தாத்தா இறந்தப்போ உன் அம்மாவையும் உன் மாமானையும் வளக்குறதுல என் காலம் போயிடுச்சு.அப்புறம் உன் அம்மா இறந்தவுடன் அவ போன கவலையைவிட உன் கவலைதான் அதிகம் இருந்துச்சு.

உன்னைய உன் அத்தை வேலைக்காரிமாதிரி நடத்துறப்போ சண்டைபோட்டு உன்னைய வீட்டைவிட்டு கூட்டிட்டு போய் தனியா வளர்க்கலாம்ன்னு மனசுல நினைச்சேன்
. ஆனா என் மனசு நினைக்குற அளவுக்கு என் உடம்பும் வயசும் ஒத்துழைக்கல.

இந்த வயசான காலத்துல காதும் கேட்காம எப்படி பொம்பளை பிள்ளையை இந்த பொல்லாத உலகத்துல பாதுகாக்குறதுன்னு பேசாம பல்லை கடுச்சுட்டு இருந்தே. ஆனா அதேமாதிரி உன் புகுந்த வீட்டுலயும் இருந்துடுவேனா. உனக்கு ஒரு பிரச்சனைனா இந்த ஆத்தாவை நினைச்சுக்கோ. வந்து சாமி ஆடிடமாட்டேன் என கூற

சிறு புன்னைகையுடன் பூந்தென்றல் கேட்டுக்கொண்டிருந்தாள்
.

ஆனா செல்வி வாழ்க்கையில எம்புட்டு பிரச்சனை வந்தாலும் அந்த கருப்பன் மேல பாரத்தைபோட்டு தைரியமா இருக்கனும் என பரிதவிப்புடன் சின்னாத்தா கூற

அவரின் அந்த பரிதவிப்பிற்கு காரணம் தன் அன்னையை போல தானும் தவறான முடிவை எடுக்கக்கூடாது என்ற கவலையே என புரிந்துகொண்ட தென்றல்
,

ஆத்தா வாழ்க்கையில எனக்கு பிடிக்காதவங்க மட்டும் இல்ல என் பிரச்சனைக்கிட்ட கூட என் ஆயுதமான அமைதியை எடுத்துக்குறேன். அதனால பயப்புடாத. ஆனாலும் உன்னைய நினைச்சும் எனக்கு கவலைதான்

ஏண்டி??”

இல்ல நான் கல்யாணம் பண்ணி போன பிறவு அத்தை உன்னைய ஏதாவது சொன்னா??”

சொன்னா என்னடி??. உனக்கு நல்லபடியா வாழ்க்கை அமைஞ்சப்புறம் பாரு சின்னாத்தா எப்பிடி மாமியாரா மாறப்போறேன்னு.”

ஒருவேளை சண்டைபோட்டுட்டா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ

ஏன் நானே சமைச்சு சாப்பிட்டுக்குறேன்

நீயா!!!”

ஏண்டி என் சமையலுக்கு என்ன குறைச்சல். என் புருஷன் சாகுறவரைக்கும் என் கையாலதான் சாப்புட்டாரு

ஹ்ம்ம் அதான் தாத்தா சீக்கிரம் போய்ட்டாரு என சிறுவயதில் இட்லி கேட்டதுக்கு மாவில் களி கிண்டிக்குடுத்த நினைவில் கூற அடி

“ அடி கழுதை பேசுற பேச்சை பாரு” என சின்னாத்தா எழப்பார்க்க சிரிப்புடன் தூங்க சென்றுவிட்டாள் பூந்தென்றல் செல்வி
.

கருப்பா என் பேத்தி வாழ்க்கையில இனி பிரச்சனையே குடுக்காதையா” என வேண்டிக்கொண்டு உறங்க சென்றார்



அடுத்த அத்தியாயத்தில் பாப்போம்.


plz drop ur comments friends
 
என்ன திருவாசகம் இப்படி
இருக்குறார்
படுக்கையில் இருப்பவனுக்கு
கல்யாணம்
அவன் முழிச்சு படிக்காத பிள்ளை
வேண்டாம்னு சொல்லிட்டா
அந்த பெண்ணோட கதி
 
Top