Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(06)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(06)



சுந்தரி பட்டு புடவை கட்டி தயாராகி அவளுக்கு குடுத்த அறையில் இருந்து வெளியே வரவும் பரமசிவம் சுந்தரியை தேடிக்கொண்டு வரவும் சரியாக இருந்தது. சுந்தரிக்கு பரமசிவம் சித்தப்பா முறை வேண்டும்.

“ என்ன சித்தப்பா இங்க இருக்கீங்க. நீங்க கோவில்ல இருப்பீங்கன்னு நினைச்சே. ஏன் ஒரு மாதிரி பதட்டமா இருக்கீங்க??” என சுந்தரி வினவ

“ சுந்தரி இந்த கல்யாணம் யார்கூட எந்த சூழ்நிலையில நடக்குதுன்னு உன் வீட்டுல எல்லாருக்கும் தெரியுமா??. முக்கியமா தென்றலுக்கு சின்னாத்தாவுக்கும் தெரியுமா??”

“ ஏன்??..... ஏன்??..... சித்தப்பா. திடீர்ன்னு இப்படி கேட்குறீங்க??.” என சுந்தரி திணற, அந்த திணறலே சுந்தரி எதோ செய்துள்ளாள் என பரமசிவம் புரிய போதுமானதா இருந்தது.

“ உண்மைய சொல்லு சுந்தரி ருத்ரவர்மனுக்கு சுயநினைவு இல்ல. அது வரும் வராமலும் போகலாம்ன்னு எல்லா உண்மையும் உன்கிட்ட சொல்லித்தானே தென்றலை பெண் குடுக்குறீங்களான்னு கேட்டேன். நீயும் சரின்னு சொன்ன.

பொண்ணுகிட்ட சொன்னியான்னு கேட்டதுக்கு சொல்லிட்டேன். அவளுக்கு பரிபூரண சம்மதம்ன்னு சொன்ன. அதை நம்பி நானும் கல்யாணம் வரை பேசி கொண்டுவந்துட்டேன். ஆனா இப்போ அந்த சின்னாத்தா மாறவர்மன்தான் மாப்பிள்ளைன்னு அவரை போய் பார்க்கப்போறாங்க.

இந்த கல்யாணத்துல மட்டும் எதாவது குளறுபடியோ இல்ல கல்யாணமே நின்னுச்சுனா அவ்வளவுதான் திருவாசகம் ஐயா நம்மள சும்மா விடமாட்டாரு. இப்போ என்ன செய்றது??. ஏன் நீ முன்னமே உண்மையை சொல்லல??”
என புலம்பிய படி கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்த பரமசிவத்திடம்

“ சித்தப்பா ஒரு நிமிஷம் இருங்க. ஏன் இப்படி விடாம புலம்பிரிங்க??. நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்காது. இந்த கல்யாணம் நல்ல படியா நடக்கும். ஒரு பிரச்சனையும் வராது.

மணமேடை வந்து கல்யாணம் நின்னுச்சுன்னா அடுத்து தென்றலுக்கு கல்யாணம் நடக்குறது கஷ்டம்ன்னு என் அத்தைக்கு நல்லா தெரியும். அதனால இந்த கல்யாணத்தை நிறுத்தமாட்டங்கா. ஆனா பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு அதை சமாளிச்சுக்கலாம். நீங்க முதல்ல பயப்புடாம இருங்க” என சுந்தரி தெளிவாக பேச

அதில் சற்று பதட்டம் குறைய “ ஆனா நீ ஏன் முன்னயே இன்னாருதான் மாப்பிள்ளைன்னு சொல்லல” என பரமசிவம் வினவ

“ அது….. அது… ஹான் எனக்கு நம்பிக்கை இருக்கு சித்தப்பா அந்த தம்பியை எப்படியும் திருவாசகம் ஐயா பணத்தை கொட்டி சரி ஆக்கிடுவாரு. அப்பிடி இருக்குறப்போ எங்க வீட்டு பொண்ணு இன்னைக்கு நிலைமையை நினைச்சு கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிட்டா நல்ல வாழ்க்கை போயிடும்ல அதான் எதுவும் சொல்லாம கல்யாணம் வரைக்கும் கொண்டுவந்துட்டேன்” என சுந்தரி கூற

“ எது எப்பிடியோமா இந்த கல்யாணம் நல்ல படியா முடியனும்”

“ அது எல்லாம் நல்ல படியா முடியும். நீங்க பயப்படாம போய் மத்த வேலையை பாருங்க சித்தப்பா” என கூறி பரமசிவத்தை சுந்தரி அனுப்பிவைத்துவிட்டு அப்பாடா என நிம்மதி பெருமூச்சைவிட்டுக்கொண்டே திரும்ப அங்கே அவளின் கணவன் கண்ணன் நின்றுகொண்டிருந்தான்.

கண்ணனை பார்த்து சற்றே அதிர்ந்த சுந்தரி பின் எதுவும் நடவாது போல,

“ என்னங்க நீங்க இங்க நிக்குறீங்க. கோவிலுக்கு போகல அங்க எதாவது பொண்ணுவீட்டு சார்பா வேலை இருக்கும்ல.”

“ ஒன்னும் இல்லை சுந்தரி. தென்றலை உனக்கு சின்னதுல இருந்து பிடிக்காது. ஆனா இன்னைக்கு அவளோட வாழ்க்கைக்காக எவ்வளவு யோசிக்கற” என கண்ணன் உணர்ச்சிவசமாக மடத்தனமாக பேச

“ ஹ்ம்ம் ஆமாங்க எனக்கு பிடிக்கலைன்னாலும் நம்ம வீட்டு பொண்ணுல அப்படியே விட்டுட முடியுமா. சரி சரி போய் வேற வேலை இருந்தா பாருங்க” என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சுந்தரி .

இங்கு திருவாசகத்தின் இல்லத்திலோ,

“ என்ன அண்ணா??. என்ன ஆச்சு??. இப்போ எதுக்கு நீங்க பதட்டமா இருக்கீங்க??” என மாயாவதி பதட்டமாக எதோ யோசனையில் இருந்த திருவாசகத்திடம் வினவ

“ ஒன்னும் இல்ல இன்னைக்கு கல்யாணத்துக்கு ருத்ரவர்மன் கட்டவேண்டிய தாலியை பூஜை பண்ணி கொண்டு வரதா சாஸ்திரி சொல்லிருந்தாருல”

“ ஆமா”

“ அவருக்கு நேத்து மயங்கி விழுந்துட்டதால ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கு போயிருக்காங்க. அங்க அவருக்கு mild attack காம்”

“ அச்சச்சோ!!!... அப்புறம்”

“ இப்போ நல்லா இருக்காராம். ஆனா அவரால பூஜை பண்ண முடியலையாம். அதான் ஒரே யோசனையா இருக்கு”

“ இதுல யோசிக்க என்ன இருக்கு அண்ணா. வேற ஒரு தாலியை வாங்கி நம்ம வீட்டுல சாமிய கும்பிட்டிட்டு வாங்க கோவிலுக்கு போகலாம். முஹுர்த்தத்துக்கு நேரமாச்சு”

“ ஹ்ம்ம்” என மீணடும் திருவாசகம் யோசனையில் இருக்க

“ என்ன அண்ணா??. நாம முன்னாடி பேசிக்கிட்ட மாதிரி தாலியை ருத்ரனோட கையில குடுத்து வாங்கி நான் மூணு முடிச்சையும் போடுறேன். அவனுக்கு குணமானவுடன் மறுபடியும் சாஸ்திரிகிட்ட சொல்லி வேற ஒரு தாலியை பூஜை பண்ண சொல்லி விமர்சையா கல்யாண ஏற்பாடு பண்ணி அந்த புது தாலியை அந்த பொண்ணோட கழுத்துல கட்ட சொல்லலாம். இப்போ வாங்க நேரமாச்சு” என கூறிக்கொண்டு மாயாவதி அரைமனத்துடன் இருந்த திருவாசகத்தை இழுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார்.

இவர்களின் சம்பாஷணையை திருவாசகத்திற்கு வழக்கம் போல காபி கொண்டுவந்த ஜானவி கேட்டுவிட மனதில் எதோ முடிவு எடுத்தவராக வேகமாக பூஜை அறைக்கு சென்றார். அங்கு தன் மாமியாரின் புகைப்படத்தில் தொங்கிக்கொண்டிருந்த பரம்பரை தாலி செயினை எடுத்துக்கொண்டு அவரும் கல்யாணம் நடக்கும் கோவிலுக்கு விரைந்து சென்றார்.

மாறவர்மனை தேடி கோவிலுக்கு சென்ற சின்னாத்தா அங்கு இருந்த கூட்டத்தை பார்த்து ‘ என்ன கல்யாணத்தை சாதாரணமா பன்றேன்னு கூட்டத்தை சேர்த்து வச்சுருக்காங்க’ என மனதில் எண்ணிக்கொண்டு யாரிடம் மாறவர்மனை கேட்பது என அங்கிருந்த ஒரு நாற்பத்தி ஐந்து வயது மதிப்புள்ள ஒருவரிடம் சென்ற

“ எப்பா இந்த மாறவர்மன் தம்பி எங்குன இருப்பாங்க???” என மரியாதை நிமித்தமாக மாறவர்மனோடு தம்பி என சேர்த்து வினவ

“ யாரு மாறவர்மன் தம்பியா??” என அந்த நபரும் கூட்டத்தில்

சற்றே உரக்க பேச

“ ஹ்ம்ம் அவருதான் இந்த கல்யாண மாப்பிள்ளை….”

‘ ஓ இந்தம்மா மாறவர்மன் தம்பி சிம்மவர்மனை கேட்குறாங்க போல அவரு இப்போ எங்க இருப்பாரு’ என எண்ணிக்கொண்டு சுற்றிலும் கண்களை சுழற்றி தேட,

அங்கு சன்னதியின் முன் காதில் ப்ளூ டூத் டிவைஸ் வைத்து பேசிக்கொண்டிருந்தான் சிம்மவர்மன். அவனை பார்த்த அந்த நபரும் சின்னாத்தாவிடம் கையை காட்டி அவருதான் மாறவர்மன் தம்பி என கூற சின்னாத்தா வேகமாக சிம்மவர்மனை நோக்கி நகர்ந்தார்.

சிம்மவர்மன் பேச்சுவாக்கில் சன்னத்தில் இருந்த விநாயகரை நோக்கி நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தான். அப்பொழுது சரியாக சின்னாத்தா சிம்மவர்மனின் அருகில் நெருங்க,

“ உங்கள நம்பி இதை செய்யலாம்ல விநாயக்” என சத்தமாக பேசிக்கொண்டிருந்ததை கேட்டு சிம்மவர்மனின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தார்.

“ ஹ்ம்ம்”

“ ………….”

“ சொல்லுங்க”

“ …………….”

“ சரி. அப்போ இந்த விஷயத்தைல உங்களை நம்பி இறங்கலாம்”

“ …….”

“ பின்னாடி எதுவும் பிரச்சனை வந்துறாதே”

என சிம்மவர்மன் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு சின்னாத்தா அதிர்ந்து நின்றார்.

‘ ஆத்தாடி ஆத்தா!!!..... இது என்ன கூத்தா இருக்கு. கல்யாண மாப்பிள்ளையே சாமிகிட்ட வந்து குறிகேட்டுகிட்டு இருக்கு. அதுவும் விநாயகரே இந்த கல்யாணத்துக்கு சம்மதம் குடுத்துட்டாரு போல. இதுக்கு மேல நான் என்னத்தை யோசிச்சு பயப்புடனும். முதல்ல இதை செல்வி பிள்ளைக்கிட்ட சொல்லணும்’ என வேகமாக தென்றலை காண சென்றார்.

இங்கு சிம்மவர்மன் தன்னனுடைய PA விடம் அலுவல் ரீதியாக பேசிவிட்டு ப்ளூ டிவைஸை ஆப் செய்யவும் சரியாக விவேகன் வந்து மணவறைக்கு அழைத்துச்சென்றான்.

மணவறையில் கடமையாக அமர்ந்த சிம்மவர்மன், அருகில் அழகு பதுமையாக அமர்ந்து ஆசையோடு ஏக்கத்தோடும் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த நித்யவதியை நோக்காது வேகமாக தாலியை கட்டிவிட்டு வேலை இருப்பதாக கூறி மற்ற சடங்குகளில் பங்கேற்காது வேகமாக அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டான்.

சிம்மவர்மனின் உதாசீனத்தை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தாலும் எதிகொள்ளும்போது மனதில் வலி ஏற்பட அமைதியாக ருத்ரவர்மனின் திருமணத்தை காண மணவறையில் இருந்து இறங்கி ஓரிடத்தில் அமர்ந்துகொண்டாள்.

மகளின் மன சுணக்கமும் கண்களில் தெரிந்த வலியையும் பொருட்படுத்தாது,

“ அக்கா நல்லபடியா நித்தி இந்த குடுமபத்துக்கு மருமகள் ஆகிட்டா. நம்ம பொண்ணுங்க ராஜ்ஜியம் தான் க்கா இனிமே. எப்படியும் அருணா வரபோறது இல்ல. அடுத்து இப்போ நடக்க போறதோ ஒரு பொம்மை கல்யாணம். அதனால இதப்பத்தி நாம கவலைப்பட வேண்டியதும் இல்ல” என லீலாவதி முகத்தில் சந்தோசத்துடன் மாயாவதியிடம் பேச

“ ஹ்ம்ம் ஆமா லீலா நாம ஆசைப்பட்ட மாதிரித்தான் எல்லாம் நடக்குது. சரி… சரி… நாம அப்புறம் பேசிக்கலாம் ருத்ரவர்மனோட கல்யாணத்துல முக்கிய பங்கே நான்தானே வா அந்த வேலையை பார்ப்போம்”

“ ஆமா க்கா நீதானே தாலியே கட்டப்போற. சரி வா போலாம்” என கூறி இருவரும் ருத்ரவர்மனை வீல் சேரில் அமரவைத்து அழைத்துக்கொண்டு வந்தனர்.

அதேநேரம் கல்யாணத்திற்கு தயாராகி நின்ற பூந்தென்றல் செல்வியிடம்,

“ செல்வி இனி உன்னைய பத்தி எனக்கு கவலையே இல்லாத்தா. ஆனா இனிமே நீ ரொம்ப சுத்தபத்தமா இருக்கனும் சரியா??”

“ ஏன் ஆத்தா???”

“ அடியே உன் புகுந்தவீட்டுல முக்கியமா மாப்பிளை கடவுள் பக்தர் போல. இன்னைக்கு கல்யாணத்த வச்சுக்கிட்டு பிள்ளையார் முன்னாடி அவரே குறிகேட்டு சம்மதம் வாங்குறாருடி”

“ உனக்கு எப்பிடி தெரியும் ஆத்தா??”

“ ஏண்டி என் காதால கேட்டேண்டி”

“ கிழிஞ்சுச்சு போ. நீ கேட்டதை நான் நம்பனும். அவரு பிள்ளையாரப்பான்னு சொல்லிருப்பாரு நீ யாரோட பிள்ளப்பான்னு கேட்டுருப்ப. போ ஆத்தா” என தென்றல் சலிக்க

“ அட நெஜமாலும் செல்வி அவரு சத்தமாத்தான் சாமிகிட்ட பேசுனாரு”

“ சரி என்ன பேசுனாரு??”

“ ஹ்ம்ம் உன்னைய நம்பிய இதுல இறங்கலாமா ஒரு பிரச்சனையும் வராதே அப்பிடின்னு சாமிய பார்த்து பேசிகிட்டு இருந்தாரு” என சிம்மவர்மன் ப்ளூ டூத் டிவைஸில் பேசியதை தவறாக புரிந்துகொண்ட சின்னாத்தா கூற

“ ஓ!!!....”

“ என்னடி ஓ ன்னு சொல்ற. சரி அதைவிடு எனக்கு இப்போதான் நிம்மதியா இருக்கு. உனக்கு இனிமே நல்லதுதான் நடக்கும் செல்வி” என தென்றலின் தலையை ஆதரவாக சின்னாத்தா தடவ

அப்பொழுது உள்ளே நுழைந்த சுந்தரி

“ அங்க மாப்பிளை வந்துட்டாராம். உன் மாமா போன் பண்ணுனாரு பொண்ணை அழைச்சுட்டு வர சொன்னாங்களாம் போலாமா” என பொதுவாக பேச

பாட்டியும் பேத்தியும் எதுவும் கூறாது சுந்தரியுடன் கோவிலுக்கு செல்ல மனதுக்கு எதோ சஞ்சலமாக பட்டது சின்னாத்தாவுக்கு.

அப்பொழுது கோவில் வாசலில் இருந்த மரத்தடியில் நவகிரகம் பட உடனடியாக தென்றலிடம்,

“ செல்வி இன்னையோட உனக்கு பிடிச்ச கிரகம் எல்லாம் ஒழியணும்ன்னு நவகிரகத்துக்கு விளக்கு போட்டு வந்துடுறேன். நீ உள்ள போய்கிட்டே இருத்தா” என வேகமாக கூறி தென்றலின் பதிலை எதிர்ப்பார்க்காது தன் வயதையும் பொருட்படுத்தாது கோவிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றார்.

தென்றலோ தன் பாட்டி செல்வதை பார்த்துக்கொண்டு ஒருவித பதட்டத்துடன் நிற்க

“ நீ வா நாம போலாம். மூகூர்த்தத்துக்கு நேரமாச்சு” என கூறி தென்றலின் கையை பிடித்து கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டே சென்றாள் சுந்தரி.

கோவிலில் நுழைந்தது முதல் மணவறை செல்லும் வரை அனைவரும் பூந்தென்றலை வினோதமாக நோக்க சிலர் நக்கலாக பார்த்தனர். மணவறையில் தென்றல் யாரையும் நிமிர்ந்து பாராது குனிந்தபடியே சுந்தரி அமரவைத்த இடத்தில் குனிந்தே அமர திருவாசகத்தின் குடுமபத்தினரும் அதிர்வாகவே நோக்கினர்.

மாயாவதி லீலாவதிகூட சற்றே சிறிது அதிர்ந்து பின் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர் ஜானவிதான் அதிகம் அதிர்ச்சியும் கவலையும் கொண்டது. அதற்கு காரணம் பூந்தென்றல் செல்வியின் தோற்றமே.

ஆரஞ்சு வண்ண பட்டு புடவையில் கிளிப்பச்சை வண்ண பார்டரும் புடவையில் ஆங்காகே தங்க சரிகை நூலால் பெரிய பூக்கள் நெய்யப்பட்டிருந்தது. அந்த புடவை பின் கொசுவம் வைத்து கணுக்காலுக்கு சற்று ஏற்றி நாட்டுப்புற கட்டு கட்டி தன் நீண்ட கூந்தலை அடிவரை பின்னி கீழே சிகப்பு குஞ்சம் வைத்து,

கனகாம்பரமும் மல்லிகையும் சேர்த்து பின் தலை மறைக்கும் அளவுக்கு வைத்து சின்னாத்தா குடுத்த அந்த வெள்ளைக்கல் பதித்த அட்டிகையும் பெரிய செயினும் காதில் சிறு கிளிக்கூண்டு தோடும்,

முகத்தில் மஞ்சள் பூசி ஐம்பது பைசா அளவில் அறக்கு பொட்டும் வைத்து இரு கைகள் நிறைய பச்சை வண்ண கண்ணாடி வளையல்கள் அணிந்து தலையை நிமிர்த்தாது குனிந்தே இருந்த தென்றலை கண்ட ஜானவி,

‘ என் மகன் குணமானவுடன் இந்த பொண்ணோட சேர்ந்து வாழ்வானா??’ என முதலில் எண்ணினார். மாயாவதியும் லீலாவதியும் படிக்காத கிராமத்து பெண் என்றே நினைத்தனர் ஆனால் நிச்சயம் இப்படி நாட்டுப்புற சேலையில் எதிர்பார்க்கவில்லை.

தன் அருகில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ருத்ரவர்மனை நோக்காது அமைதியாக குனிந்தே இருந்த தென்றலின் கழுத்தில் ருத்த்ரவர்மனின் கையில் குடுத்து வாங்கிய தாலியை மாயாவதி கட்டும் நேரம்,

சரியாக ஜானவி மாயாவதிக்கு முன் நின்று வேகமாக தன் கையில் இருந்த தெய்வானையின் தாலி செயினை ருத்ரவர்மனின் இருக்கைகளிலும் பிடிக்க வைத்து அந்த கைகளை தன் கைகள் கொண்டு இறுக்க பிடித்து தென்றலின் கழுத்தினில் போடவைத்தார்.

அதனை விவேகன் அழகாக தன் போனில் புகைப்படமாக்க மாயாவதி லீலாவதி நடத்த எண்ணிய பொம்மை கல்யாணத்தை ஜானவி உண்மையாக மாற்றி பூந்தென்றல் செல்வியை தன்னனுடைய மருமகளாக அங்கீகாரம் கொடுத்துவிட்டார்.

இதனை கண்டு மாயாவதியும் லீலாவதியும் அதிர திருவாசகம் சந்தோசமான நிறைவுடனும் வியப்புடனும் ஜானவியை நோக்கினார். அதே நேரம் தன் கழுத்தில் கனமான தாலி சங்கிலி விழுந்ததை வைத்து திருமணம் முடிந்துவிட்டதை தெரிந்துகொண்ட தென்றல் சின்னாத்தாவை காண சற்றே நிமிர்ந்து நோக்க தனக்கு எதிரே கலங்கிய விழிகளுடன் கோவமாக,

‘ அடப்பாவிங்களா அநியாயமா என் பேத்தி வாழ்க்கையை அழிச்சுட்டீங்களே’ என மனதில் கதறிக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்.

இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம் இந்த ருத்ர வர்மனிடம் வந்த தென்றல் வருடுமா??.......


thanks for supporting &
plz drop ur comments friends
 
Top