Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(09)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(09)



“ என்னங்கடா நடக்குது இங்க சினம் கொண்ட சிங்கம் சிங்கர் சிங்கமா மாறி இருக்கு” என வாய்விட்டே கூறிக்கொண்டு விழி விரித்து அதிர்ச்சியுடன் நித்தியவதி சிம்மவர்மனை பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தாள்.

நித்யவதியின் சத்தத்தில் திரும்பி பார்த்த சிம்மவர்மன் புருவ சுளிப்புடன் உணர்ச்சி துடைத்த முகத்துடன் நித்யவதியை நோக்கி தன் அழுத்தமான காலடிகளுடன் நெருங்கி வந்தான். திடீரென சிம்மவர்மன் தன்னை நோக்கி வரவும் மேலும் அதிர்ச்சியாகி பதட்டமானாள்.

‘ இறைவா என்ன இவரு இப்படி மூஞ்சிய வச்சுருக்காரு. இவரு பாடுன பாட்டுக்கும் இவருக்கும் சம்மந்தமே இல்லையே. ஹ்ம்ம்ம் இப்ப என்ன சொல்ல போறாரோ தெரியலையே’ என எண்ணிக்கொண்டு முகத்தில் தன் பதட்டத்தை மறைக்க முயன்றுகொண்டிருந்தாள்.

நித்யவதியின் மிக அருகில் வந்து நின்ற சிம்மவர்மன் எதுவும் கேட்காது அமைதியாக தன் கைகளை கட்டிக்கொண்டு கூர்மையாக நோக்க. அதில் மேலும் பதட்டமாகி

“ அத்….. அத்தான்….. அது…. அது….” என திணற

“ என்ன இங்க??” என்ற கேள்வி சிம்மவர்மனிடம் இருந்து வர

அதில் மேலும் பயந்து “ அது… அது… அத்தான் இனிமே நீங்க இங்கயே தங்கணும்ன்னு அத்தை சொன்னாங்க”

“ என்னது??”

“ இல்ல… இல்ல…. நான் இனிமேல் இங்க தங்கணும்ன்னு சொன்னாங்க”

“ ஓ!!!” என கூறிவிட்டு அமைதியாக கட்டிலில் தன் லாப்டாப்பை எடுத்துக்கொண்டு அமர

‘ என்ன இது இவரு ஒன்னும் சொல்லாம போய் வேலைய பார்குறாரு. இப்போ நாம என்ன செய்றது??. பேசாம படுத்துடுவோம். ஆனா எங்க தூங்குறது??. ஹ்ம்ம் இதை யோசிக்காம வந்துட்டோமே. இப்போ அதையும் கேட்டா பார்வைலையே மிரட்டுவாரு இந்த அத்தான்’ என மனதில் பெரிய போராட்டமே நடத்திக்கொண்டிருந்த நித்யவதியை பார்த்துக்கொண்டிருந்த சிம்மவர்மன்

“ க்கும்…” என செரும

“ அத்தான் உறுமுனிங்களே ச்சீ இருமினிங்களே தண்ணீ கொண்டுவரவா??” என தன் சிந்தனையில் இருந்து வெளிவந்து கேட்க

“ ஹும்ஹும்” என மறுப்பாக தலையசைத்து விட்டு கேள்வியாக புருவத்தை தூக்கி பார்த்தான் சிம்மவர்மன்.

‘ என்ன எதோ கேட்கறது போலவே இருக்கு. என்னது??’ என எண்ணி “ என்ன அத்தான் எதுவும் கேட்கணுமா??”

“ நீ நின்னுக்கிட்டேதான் தூங்குவியா??” என உணர்ச்சி துடைத்த குரலில் கேட்க

“ ஏன்…. ஏன்…. அத்தான் அப்படி கேட்குறீங்க???. ஓ!!... ரொம்ப நேரமா நிக்குறேன்னு கேட்குறீங்களா??. இல்ல எங்க தூங்குறதுன்னு….. இங்க கட்டில்லையே படுத்துக்கவா??” என அவளாகவே சிம்மவர்மன் பேசவிட்டதும் தன் கேள்வியை கேட்டு பதிலையும் கூறிக்கொண்டு கட்டிலில் சிம்மவர்மன் அமர்ந்த திசைக்கு மறுபக்கம் வந்து படுத்துகொண்டாள்.

அதனை கண்டு ஒரு தோள் குலுக்கலுடன் சிம்மவர்மன் தன் பணியை தொடர ‘ அப்பாடி ஒன்னும் சொல்லல’ என மனதில் எண்ணிக்கொண்டு புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.

அதில் கடுப்பான சிம்மவர்மன் “ உன் பிரச்சனைதான் என்ன??” என கடுமையாக கேட்க

திடீரென கேட்ட சிம்மவர்மனின் குரலில் அவசரமாக எழுந்து “ என்ன… என்ன… அத்தான் என்ன கேட்டிங்க???”

“ உன் பிரச்சனைதான் என்ன??”

“ ஏன் அத்தான்??”

“ ஹ்ம்ம் இல்ல இப்படி புரண்டு புரண்டு படுக்கிற”

“ இல்ல எனக்கு லைட் இருந்தா தூக்கம் வராது”

“ அதுக்காக ரூம்ல இருக்குற லைட் எல்லாம் கழட்ட முடியாது” சிம்மவர்மனின் பதிலை கேட்ட நித்யவதி அதுவரை இருந்த பதட்டம் போய் கோவம் கொண்டு “ ம்ப்ச் அத்தான் எனக்கு வெளிச்சம் இருந்தா தூக்கம் வராது அதனால லைட் ஆப் பண்ணுனாதான் தூக்கம் வரும்”

“ ஓ!!...”

‘ என்ன ஓ’ என பல்லைக்கடித்துக்கொண்டு

“ அத்தான் இந்த வேலை எப்ப முடியும்??”

“ இன்னும் பத்து நிமிசத்துல”

“ ஓ சரித்தான்” என்கூறி போர்வை மேலே போட்டுகொண்டு தன் மொபைலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தாள் அரைமணிநேரம் கடந்த நிலையில் சிம்மவர்மனை நித்யவதி நோக்க அங்கு ஒரு பைலை வைத்துக்கொண்டு எதோ எழுதிக்கொண்டிருந்தான்.

‘ என்ன இவரு பத்துநிமிசத்துல வேலை முடிஞ்சுடும்ன்னு சொன்னாரு இன்னும் முடிக்கலையா. இவரு எப்போ முடிச்சு எப்போ லைட்ட ஆப் பண்ணி நான் எப்போ தூங்க. இந்த கதையில வரமாதிரி இவரும் உள்ள எதாவது ஆபீஸ் ரூமாவது வச்சுருக்கலாம்’ என எண்ணிக்கொண்டு

“ அத்தான்…”

“ ஹ்ம்ம்..”

“ இன்னு எவ்வளவு நேரம் ஆகும் இந்த வேலை முடிய??”

“ ஒரு ஒருமணி நேரம் ஆகும்”

“ என்ன ஒரு மணி நேரமா!!!.... பத்து நிமிஷம்ன்னு சொன்னிங்க”

“ அது அந்த வேலை முடிய பத்து நிமிஷம்ன்னு சொன்னேன்”

“ அப்போ இது??”

“ இது வேற. நாளைக்கு மீட்டிங்கு”

அவனின் பதிலில் கோவம் அடைந்த நித்யவதி

“ அத்தான் அதை அப்போவே நீங்க ரெண்டு மணி நேரம் ஆகும்ன்னு சொல்லிருக்கலாம்ல”

“ நீ அந்த வேலை எப்போ முடியும்னு மட்டும்தான் கேட்ட” அவனின் பதிலில் முடிந்த மட்டும் அவனை முறைத்துவிட்டு போர்வையை போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள் நித்யவதி.

இரவு உணவை முடித்துவிட்டு ஜானவியுடன் சென்ற தென்றல்,

“ அம்மா இப்போ எங்க போறோம்???”

“ சும்மா மொட்டை மாடிக்கு போலாம்னு. ஏன் தென்றல் உனக்கு தூக்கம் வருதா??”

“ இல்லமா நீங்க இன்னும் சாப்புடல. அதோட நான் இருந்த அறை அதோ அங்குட்டு இருக்கு இப்போ வேற எங்கயோ போறமாதிரி இருக்கேன்னு கேட்டேன்”

“ எனக்கு பசிகல. அதான் கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடலாம்ன்னு. இப்போ மணி 9 தானே. ஒரு அரை மணி நேரம் கழிச்சு சாப்ட்டுக்குறேன். அதுவரைக்கு உன்கூட பேசிகிட்டு இருக்கலாம்ன்னுதான். ஒரு வேலை உனக்கு தூக்கம் வந்தா நீ போய் உன் அறைல தூங்கு. நாம நாளைக்கு கூட பேசிக்கலாம்”

“ அச்சச்சோ எனக்கு தூக்கம்லா வரலாமா. நான் இன்னைக்கு முழுசும் தூங்கிட்டுதானே இருந்தேன். நாம பேசலாம்” என முக மலர்ச்சியுடன் கூற

“ பார்
டா பேசலாம்ன்னு சொன்னவுடன் மூஞ்சில வெளிச்சம் பிரகாசமா இருக்கு. நீ ரொம்ப அமைதின்னு சொன்னாங்க. ஆனா பேசலாம்ன்னு சொன்னவுடன் ரொம்ப உற்சாகமாகிட்ட”

“ நான் அமைதி எல்லாம் இல்லமா. எனக்கு விவரம் தெரிஞ்சு சின்னதுல இருந்து யாரும் என்கிட்டே பேசமாட்டாங்க. அப்படியே பேசுனாலும் அம்மாவை பத்தி பேசி கஷ்டப்படுத்துவாங்க. அதனால நானும் பேச்சை குறைச்சுக்குவேன்.

அப்புறம் சுந்தரி அத்தை வந்தவுடன் எப்பவும் சண்டைதான் பிரச்சனைதான். அதுவும் என்னைய வச்சுதான் பிரச்சனையே ஆரம்பிக்கும். நான் அப்படி செஞ்சேன் இப்படி பேசுனேன்னு. அதனால வீட்டுல பேச்சை குறைச்சேன். அப்புறம் ஆத்தாவுக்கும் சத்தமா பேசுனாதான் கேட்கும் அதனால ரொம்பவும் பேச முடியாது.

நான் பேசி சிரிச்ச ஆளுனா அது எங்க பக்கத்து வீட்டுல இருந்த பொண்ணு ராணிதான். என்னையைவிட ஒரு அஞ்சு வருஷம் இளமை. என்கிட்டே நல்லா பேசுவா. ஆனா அவளும்….” என கூறிக்கொண்டே வந்த தென்றலின் கண் கலங்கிவிட

“ ஏன்மா?? ஏன் அழகுற??”

“ இல்ல ஒன்னும் இல்லம்மா”

“ ஏன் அந்த பொண்ணுகு எதுவும்……???”

“ ச்ச…. ச்ச…. அவ நல்லா இருக்காமா. நாலு வருஷத்துக்கு முன்னாடி குடும்பமா வேற ஊருக்கு போய்ட்டாங்க. அதனால நானும் பேச்சை குறைச்சுக்கிட்டு அமைதியாகிட்டேன். இப்போ நீங்க பேசலாம்ன்னு சொன்னிங்களா எனக்கு அவ்வளவு சந்தோசம். எனக்கு பேசுறதும் மத்தவங்க கலகலன்னு பேசுறதை கேட்குறதும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என புன்னகையுடன் தென்றல் கூற ஜானவி மனம் கனத்து போனது.

அதில் ஜானவி எதுவும் பேசாது அமைதியாக தென்றலை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு வர

“ என்னமா எதுவும் பேசமாட்டேங்குறீங்க??”

“ ஒன்னும் இல்ல தென்றல். என்ன பேசலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.”

“ ஓ!!...”

“ ஹ்ம்ம் பேசாம நான் நம்ம குடும்பத்தை பத்தி சொல்றேன் நீயும் தெரிஞ்சுக்கோ என்ன சரியா “

“ ஹ்ம்ம்” என தென்றல் உற்சாகமாக தலையை ஆட்ட

“ உங்க மாமனாரோட உடன் பிறப்பு ரெண்டு பேரு. இப்போ
சாப்புடுறப்போ உங்க மாமாவோட வலது கை பக்கமா உட்கார்ந்துருந்தால அவதான் மாயாவதி. மூத்த தங்கச்சி. இடது பக்கமா உட்கார்ந்துருந்தால அவதான் ரெண்டாவது தங்கச்சி லீலாவதி.

இவங்க ரெண்டு பேரும் என்ன சொன்னாலும் உன் மாமனார் நல்ல மண்டைய மண்டைய ஆட்டுவரு அம்முப்புட்டு பாசம் ஆனா தங்கச்சி ரெண்டு பேருக்கும் பாசத்தைவிட உரிமை வெறி அதிகம்”

“ எனக்கு புரியலம்மா”

“ ஹ்ம்ம் என்ன சொல்ல தென்றல். பொதுவா பொண்ணுங்க கல்யாணம் பண்ணுனாலும் அம்மாவீட்டுல சில உரிமைகளை விட்டுகுடுக்க மாட்டாங்க. அது எந்த மாதிரின்னா அம்மாவீட்டுல அவ இருந்த அறை அவளோட பொருட்கள் எல்லாமே.

ஆனா காலப்போக்கில குழந்தை குட்டின்னு ஆனவுடன் புகுந்தவீட்டுல ஒரு பிடித்தம் வந்தவுடன் அம்மாவீடு ஒரு சொந்தகாரவங்க வீடு மாதிரி ஆகிடும். அதனால ஆரம்பத்தில இருந்த அந்த உரிமையை அவங்களே விட்டுடுவாங்க.

ஆனா இங்க ஆரம்பத்தில நான் மருமகளா வந்தவுடன் அவுங்க உரிமை போனமாதிரி நினைச்சாங்க. அப்போதுல இருந்து எதாவது வீட்டுல குழப்பம் பண்ணிகிட்டே இருப்பாங்க. நானும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனவுடன் சரி ஆகிடும்ன்னு நினைச்சேன்.

ஆனா உன் மாமனாரும் என் மாமனாரும் சேர்ந்து பாச பயிரை வளர்க்குறேன்னு ரெண்டு பேரையும் கட்டிக்குடுத்தும் பக்கத்துலயே வச்சு இன்னைக்கு என் உயிரை வாங்க வச்சுட்டாங்க. என்ன புரியலையா??. ரெண்டு பேரும் பக்கத்துலயே இருக்குறதால அவுங்க குடும்பம் குழந்தை குட்டின்னு இல்லாம இன்னும் இத்தனை வயசுலையும் என்னைய போட்டியா நினைச்சுகிட்டு அவுங்க உரிமையை நிலை நாட்டுறேன்னு நிறைய தில்லாலங்கடி வேலையெல்ல்லாம் பார்த்துகிட்டு இருங்காங்க”

“ இதை நீங்க மாமாகிட்ட சொல்லலாம்லமா”

“ சொல்லலாம்தான். ஆனா நம்பணுமே. சரி அதைவிடு அவுங்களை பத்தி பேசுனா எனக்குதான் எரிச்சல் வரும்.”

“ ஹ்ம்ம்”

“ எனக்கு மொத்தம் நாலு பசங்கமா. மூத்தவன் ராஜவர்மன் ரெண்டாவது மாறவர்மன் மூணாவது சிம்மவர்மன் நாலாவது தான் உங்க ஆளு ருத்ரவர்மன். இந்த நாலு பேரும் நாலு விதம்தான்”

“ ஏன்மா??”

“ என்ன சொல்ல மூத்தவரான ராஜா சின்னதுல இருந்து மத்தவங்களோட எல்லாவேலையும் அவனே செய்வான். தம்பிகளோட வீட்டுப்பாடம் வரைக்கும். அதனால நானும் உன் மாமாவும் கண்டிச்சோம். அவுங்க அவுங்க வேலையை அவுங்கதான் பார்க்கணும்ன்னு சொல்லி சொல்லி வளர்த்தோம் இது தப்பாம்மா”

“ தப்பு இல்லையேம்மா”

“ ஹ்ம்ம் அவனும் நாங்க சொன்னமாதிரி தேவை இல்லாம அடுத்தவங்க விசயத்துல தலையிடமாட்டான் இதுவும் தப்பாம்மா”

“ தப்பு இல்லையேம்மா”

“ ஹ்ம்ம் இன்னைக்கு அவன் எப்பிடி வளர்ந்துருக்கான் தெரியுமா??. பெத்தவங்க கூடப்பிறந்தவங்க கட்டுனவ வரைக்கும் அடுத்தவங்கன்னு ஒரு எல்லை வச்சுருக்கான் அதனால இன்னைக்கு அவனோட குடும்பத்தையே விட்டு தனிச்சு இருக்கான்”

" ஏன்??"

“ என்னத்த சொல்ல. சரி வந்து ரொம்ப நேரம் ஆச்சு மணி என்ன??” என தன் மொபைலில் பார்த்த ஜானவி

“ மணி 9.45 ஆச்சு உங்க மாமாவுக்கு மாத்திரை குடுக்கணும் குடுத்துட்டு சாப்பிட போறேன். நீ போய் தூங்குறியா??”

“ இல்லமா தூக்கம் வரல”

“ சரி அப்போ உன்னைய ருத்ரனோட அறைக்கு கூட்டிட்டு போறேன். அங்க போய் இரு நான் வந்தப்புறம் பேசலாம்”

“ ஹ்ம்ம் சரிம்மா” என சாதாரணமாக கூறுவது போல கூறினாள் தென்றல். ஆனால் அவள் மனதில் ஏற்பட்ட ஒரு பரவசத்தையும் பரபரப்பையும் மறைக்க அரும்பாடுபட்டாள்.

பின் ஜானவி ருத்ரவர்மன் இருந்த அறைக்கு அழைத்து சென்று

“ இதோ இந்த அறை கதவு திறந்து தான் இருக்கு. நீ போய் உள்ள உட்கார்ந்து இரு நான் போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன். ஹான் கேட்க மறந்துட்டேன் காலையில மாதிரி மயங்கி விழுந்துடமாட்டில”

“ இல்ல… இல்லமா…” என தென்றல் வேகமாக தலை ஆட்ட

“ அதுசரி…” என கூறிவிட்டு அவர்களுடைய அறைக்கு சென்று கொண்டிருந்தார் அவர் மனம் முழுவதும்

‘ எப்படியாவது தென்றலோட மனதில ருத்ரவர்மனை பதிய வைக்கணும் அப்போதான் அவன் குணமானவுடன் அவனே பிரச்சனை பண்ணினாலும் அவளுக்கு அவளோட புருஷன்ற உரிமை உணர்வு வந்து அவனை சமாளிக்க முடியும் இல்லைனா ருத்ரன் போன்னு சொன்னவுடன் இவ பெட்டியை கட்டிருவா . அதனால இவளுக்கு முதல்ல ஒரு பிடிப்பு வரணும்’ எண்ணிக்கொண்டே சென்றார்.

இங்கு ருத்ரவர்மனின் கதவை திறந்து உள்ளே சென்ற தென்றல் அங்கு படுக்கையில் இருந்த தன்னவனின் நிலையை கண்டு கண்கள் கலங்கி ருத்ரனின் அருகில் நின்றாள்.

“ சார் உங்களுக்கு….. உங்களுக்கு…. இப்படி ஆகும்ன்னு நான் நினைக்கவே இல்லை. நீங்க ராசாமாதிரி எப்பிடி இருந்திங்க ஆண்டவன் ரொம்ப நல்லவுங்களைத்தான் சோதிப்பான் போல நிச்சயம் நீங்க நல்லா ஆகிடுவீங்க சார். எனக்கு நம்பிக்கை இருக்கு” என நம்பிக்கையுடன் கூறிக்கொண்டிருந்த தென்றல்

“ சார் அன்னைக்கு தெரியாம நான் உங்கள இடிச்சதுக்கே ‘ நீயெல்லாம் என் பக்கத்துல நிக்க கூட தகுதி இல்லை என் மேலயே இடிக்குறியான்னு திட்டுனீங்க’. ஆனா விதிய பாருங்க உங்களுக்கு எந்த விதத்திலும் தகுதி இல்லாத நான் உங்களுக்கு பொண்டாட்டி எனக்கே சிரிப்பு வருது சார்.

அப்புறம் ஏன் இங்க இருக்கேன்னு பார்க்குறீங்களா உங்களுக்கு குணமானவுடன் நிச்சயம் உங்களுக்கு அதிர்ச்சி தராம நான் இங்க இருந்து போயிடுவேன் அதுவரைக்கும் நீங்க அன்னைக்கு பண்ணுன உதவிக்கு நன்றி கடனா நான் நீங்க குணமாகுறவரைக்கும் ஒரு வேலைக்காரியா சேவை பண்ணிட்டு போயிடுறேன்” என தென்றல் அவள் மனதில் இருந்ததை பேசிக்கொண்டிருக்க

அவளின் கண்களில் இருந்து அவளவனிற்காக வந்த கண்ணீர் துளிகள் ருத்ரவர்மனின் கைகளில் பட அதில் சிறிது அசைவு தோன்றியதோ!!!.......



வெண்ணிலவே

உன்னைத் தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்…………
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்………..



அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் friends
thanks for supporting and plz drop ur comments friends
 
Top