Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(12)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(12)

தான் மட்டும் பேசிக்கொண்டிருக்க தென்றலிடம் இருந்து பதில் வராததால் திரும்பி தென்றலை நோக்கிய ஜானவி தென்றலின் கண்ணீரை கண்டு,

“ அச்சச்சோ!!... என்ன ஆச்சு தென்றல்??. ஏன் ஒரு மாதிரி இருக்க?. கண்ணுல தண்ணீ வேற”

“ அது…. அது… ஒன்னும் இல்லமா”

“ ம்ப்ச் தென்றல். நேத்து ராத்திரியும் ஒரு மாதிரி இருந்த இப்போவும் ஒரு மாதிரி இருக்க. சொல்லுமா எதுவும் பிரச்சனையா??. இங்க யாராவது உன்னைய எதாவது சொன்னாங்களா??.”

“ ஐயையோ!!.... அப்பிடி எல்லாம் இல்லம்மா”

“ அப்புறம் சொல்லு. இப்போ எதுக்கு அழகுற”

“ அது…. அது… உங்க கஷ்டத்தை கேட்டதும் எனக்கும்
அழுகை வந்துடுச்சும்மா” என தென்றல் கூற

அதனை நம்பாது நோக்கிய ஜானவியை கண்டு,

“ நிஜமாம்மா உங்க கிட்ட மூணுவருஷமா உங்க வீட்டுக்காறவங்களும் உங்க பையனும் பேசல. இதுல இன்னொரு பையன் நினைவு இல்லாம இருக்காக. இதுல உங்கள குறை சொல்லவே வீட்டுல ரெண்டு பேர். இதுக்கு இடையில நான் வேற உங்களுக்கு பாரமா. அதான்…..” என எதோ கூறிக்கொண்டிருந்த தென்றலை கூர்ந்து நோக்கிய ஜானவி

“ நீ எப்போதும் இங்க பாரம் கிடையாது தென்றல். நீ எங்க வாழக்கையில் குறுக்க வரல நாங்கதான் தேவை இல்லாம உன்னோட வாழ்க்கையில குறுக்க வந்துருக்கோம். அதுவும் அநியாயமா. அதனால தயவுசெய்து நீ எப்போது உன்னைய தாழ்த்தி பேசாத” என திடமான குரலில் கண்டிப்புடன் ஜானவி கூற, வேற எதுவும் கூற தோணாது நின்ற தென்றல்

“ நீங்க சொல்லுங்க ம்மா பேசிகிட்டு இருந்ததை பாதியோட நிறுத்திப்பிட்டேன்” என மெதுவான குரலில் தென்றல் கூறினாள் .

“ ஹ்ம்ம்…. என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன். ஹான் மாறாவுக்கு கல்யாணத்துக்கு மூணு வருசத்துக்கு முன்னாடி பொண்ணு தேடிகிட்டு இருந்தோம். எங்களுக்கு சொந்தத்துல எடுக்குறதுல விருப்பம் இல்ல.

எனக்கு ஜனார்த்தனன்ன்னு ஒரு அண்ணன் இருக்கான். அவன் உங்க மாமனாரோட நண்பன். அது மூலமாத்தான் எங்க முதல் சந்திப்பு. அப்புறம் நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்க பசங்க நாலு பேருக்குமே வெளில பொண்ணு எடுக்கணும்ன்னு முடிவு பண்ணுனோம்.

தமயந்தி, நித்யவதி அப்புறம் என் அண்ணன் பொண்ணுங்க ஜெயா, சரண்யா நாலு பேருல யாரையுமே இந்த வீடு மருமகளாக்க வேணாம்ன்னு உங்க மாமா முடிவு பண்ணிட்டாரு.
ஏன்னா தேவை இல்லமா தங்கச்சி குடும்பத்தோடையோ இல்ல எங்க அண்ணன் குடும்பத்தோடையே பிரச்சனை இல்லாம சுமுகமான உறவா போகணும்ன்னு முடிவு செஞ்சுதான் ஜெயாவை ராஜாவுக்கு எடுக்காம அருணாவை கல்யாணம் பண்ணிவைச்சோம்.

அதேமாதிரி ஜெயாவுக்கும் வேற இடத்துல சம்மந்தம் பண்ணி கல்யாணமும் நடந்துடுச்சு. அப்புறம் மாயாவதி தமயேந்திய மாறாவுக்கு கட்டிக்குடுக்கணும்ன்னு உங்க மாமாட்ட பிரச்சனை பண்ணவும். எப்போதும் தங்கச்சிங்க சொல்றதை முதல்ல செய்றவரு முடியாதுன்னு சொல்லிட்டாரு.

அதுல அவுங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் வருத்தம் ஆகிப்போச்சு. இந்த பிரச்சனைக்கு அப்புறம் தீவிரமா பொண்ணு தேடிகிட்டு இருந்தப்போதான். ஒருநாள் எங்க அண்ணன் ஜனார்த்தனன் நம்ம வீட்டுக்கு வந்தாரு ரொம்ப பதட்டத்தோட……..” என அன்றைய நாளை நினைவு கூற ஆரம்பித்தார் ஜானவி.

திரு திரு” என வேகமாக உரக்க அழைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்த ஜனார்த்தனனை கண்ட ஜானவி

“ அண்ணா வா. என்ன என்னைக்கும் இல்லாதா திருநாளா காலையில எட்டு மணிக்கு வந்துருக்க. சரி உட்காரு டீ கொண்டுவர சொல்றேன். பொன்னி…. பொன்னி…” என வேலைக்கார பெண்ணை அழைத்து டீ கொண்டு வர சொல்லிவிட்டு தன் அண்ணன் அமர்ந்த சோபாவிற்கு எதிர் இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்த ஜானவி

“ அண்ணா என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துருக்க எதுவும் முக்கியமான விஷயமா??” என கேட்டுக்கொண்டு தன் அண்ணனை நன்கு கவனித்த ஜானவிக்கு அப்பொழுதுதான் ஜனார்த்தனின் உடம்பில் சிறு நடுக்கமும் முகத்தில் பதட்டமும் கருத்து பத்திந்தது.

“ அண்ணே என்ன ஆச்சு??. ஏன் ஒரு மாதிரி இருக்க??. நான்வாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன். நீ ஒன்னும் சொல்லாம அமைதியா இருக்க. என்ன ஆச்சு சொல்லு??” என ஜானவி கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் கூறாது இருந்த ஜனார்த்தனனை கண்டு

“ அண்ணா உன்னையைத்தான் கேட்குறேன் என்ன ஆச்சு???”

“ அது ஒண்ணுமில்ல ஜானவி. திரு எங்க இருக்கான்??. நான் அவன்கிட்ட பேசணும். அவன் வீட்டுலதான் இருக்கான??” என ஜனார்த்தனன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே

“ நான் இங்க தான் இருக்கேன் மச்சான். ஏண்டா எதுவும் பிரச்சனையா உன் முகமே சரி இல்ல” என கேட்டுக்கொண்டு திருவாசகம் தனது அறையில் இருந்து வெளியே வந்து ஜனார்த்தனன் அருகில் அமர

“ உங்களுக்கு குடிக்க எதாவது கொண்டு வர சொல்லறேங்க” என ஜானவி கேட்டதற்கு

“ அது எல்லாம் வேணாம் ஜானு. முதல் உன் அண்ணன்கிட்ட என்ன பிரச்சனைன்னு கேட்போம். நீ இங்கயே உட்காரு சொல்லு மச்சான் என்ன பிரச்சனை”

“ அது திரு நான் உங்க ரெண்டு பேருகிட்டையும் உதவி கேட்டு வந்துருக்கேன்” என தயங்கியபடி ஜனார்த்தனன் கூற

“ உதவியா!!!... என்ன டா உதவின்னு சொல்லிக்கிட்டு என்ன வேணும்ன்னு சொல்லு உடனே செய்றேன்”

“ அது….. அது….. ஹ்ம்ம் நம்ப சரண்யாவுக்கு”

“ அண்ணா சரண்யாவுக்கு எதுவும் பிரச்சனையா??” என ஜானவியும் சற்றே பதட்டமாக கேட்க

“ ஹ்ம்ம்….” என தலையை மட்டும் ஆட்டிய ஜனார்த்தனை கண்டு

“ டேய்!!.... முதல்ல என்ன பிரச்சனைன்னு சொல்லுடா நீயும் டென்ஷன் ஆகி எங்களையும் டென்ஷன் ஆக்காத” என திருவாசகம் கடுப்புடன் வினவ

“ திரு சரண்யாவுக்கு இந்த வருஷத்தோட படிப்பு முடியுதுல. அதான் அவளுக்கும் கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணி நேரம் கூடி வந்துடுச்சான்னு பார்க்க ஜாதகத்தை பார்த்தேன். அதுல அவளுக்கு எதோ தோஷம் இருக்காம் இன்னும் பத்து நாளைக்குள்ள கல்யாணம் பண்ணலைன்னா அவளுக்கு நாப்பது வயசுக்கு மேலதான் கல்யாண யோகம் வருதுன்னு சொன்னாரு ஜோசியரு”

“ டேய்!!!!... நீ எல்லாம் இந்த ஜாதகம் ஜோசியம் எல்லாம் நம்பமாட்ட என்னைய கூட நக்கல் பண்ணுவியேடா” என திருவாசகம் பேசிக்கொண்டிருகையில் இடைபுகுந்த ஜானவி

“ ஆமா அண்ணே உனக்குத்தான் ஜாதகத்துல நம்பிக்கை இல்லையே அப்புறம் எதுக்கு இதை எல்லாம் போட்டு குழப்பிக்குற"

" இல்ல ஜானவி எனக்கு இதை எல்லாம் கேட்டதுல. இருந்து ஒரு மாதிரி பாரமா இருக்கு. எனக்கு நம்பிக்கை இல்லைன்றதுக்காக என் பொண்ணோட வாழ்க்கையில விளையாடுறதான்னு யோசிக்குறேன்"

" அப்போ இன்னும் ஒரு ரெண்டு பேருகிட்ட ஜாதகத்தை காட்டுவோம்” என ஜானவி கூற

“ அது எல்லாம் நாலு பேருகிட்ட காட்டி எல்லாரும் ஒண்ணுபோல ஒரே மாதிரித்தான் சொல்றாங்க ஜானவி”

“ ஓ!!.... இப்போ என்ன செய்றது??. என்னங்க என்ன ஒன்னும் சொல்லாம அமைதியா இருக்கீங்க” என ஜானவி திருவாசகத்தை கேட்க

“ என்ன சொல்ல ஜானு. எனக்கு எப்போதுமே ஜாதகம் மேல நம்பிக்கை அதிகம் நீங்களே என்னைய கிண்டல் பண்ணுவீங்க. இப்போ ஜனாவும் நம்புறான். அதனால இப்போ அடுத்து என்ன செய்றதுன்னு யோசிப்போம். ஜனா எதுவும் பரிகாரம்?......”

“ ஹான்…… அது எல்லாம் இல்ல திரு. பத்து நாளுல கல்யாணம் பண்ணுறதுதான் தீர்வு”

“ டேய் என்னடா பத்து நாளுன்னா அதுக்குள்ள எல்லா ஏற்பாடு பண்ணிட முடியுமா??”

“ ஏற்பாடு இருக்கட்டும் மாப்பிளை பார்க்க வேணாமா??. விசாரிக்க வேணாமா??. கல்யாணம்னா என்ன சும்மாவா எடுத்தோம் கவுத்தோம்ன்னு எல்லாம் பண்ண முடியாது ரெண்டு பேரும் என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க” என ஜானவி குரல் உயர்த்தி கண்டிப்புடன் பேச

அப்பொழுது எதோ பேச வந்த ஜனார்த்தனை கண்டு,

“ நீ சும்மா இரு ஜனா. நான் பேசிக்குறேன். அட என் அறிவுக்கொழுந்து பொண்டாடியே பத்து நாளுல கல்யாணத்துக்கு மாப்பிளை பார்த்து கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருந்தா இந்நேரம் உன் அண்ணன் கல்யாண பத்திரிகையோட வந்துருப்பான்.
இப்போ வெறுமனே வந்துருக்கத பார்த்தா தெரியல . அவன் மாப்பிளை கேட்டு வந்துருக்கான்”

“ மாப்பிள்ளையா!!!...” “ திரு!!...” என ஒரே நேரத்தில் தங்கையும் அண்ணனும் அதிர

“ என்ன அதிரிச்சி ஆகுறீங்க. நம்ம மாறாவுக்கு பொண்ணு தேடிகிட்டு இருக்கோம்ல. அதான் என்ன திரு நான் சொல்றது சரியா??. அப்புறம் சீக்கிரம் போய் கல்யாண வேலையை ஆரம்பி” என திருவாசகம் கூறிமுடிக்க

மற்ற இருவருக்கும் திருவாசகத்தின் பேச்சின் சாராம்சம் புரிபட சில மணித்துளிகள் தேவை பட்டது. புரிந்த பின் ஜனார்த்தனன்

“ திரு” என கலங்கிய விழிகளுடன் திருவாசகத்தின் கைகளை பிடித்துக்கொள்ள

“ டேய்!!... என்னடா. நீ எனக்கு மச்சான் ஆகுறதுக்கு முன்னாடி என் நண்பன்டா. உன்னோட எண்ணத்தை இந்த நண்பனால் புரிஞ்சுக்க முடியதா??. போ போய் கல்யாண வேலையை ஆரம்பி” என திருவாசகம் கூற வேகமாக அங்கிருந்து மகிழ்ச்சியுடன் யோசனையுடன் நின்ற ஜானவியை கூர்ந்து கவனிக்காது சொல்லிக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றார் ஜனார்த்தனன்.

“ என்ன ஜானுமா யோசிக்குற??”

“ இல்ல நீங்க இப்போ அண்ணன்கிட்ட பேசுனது மூலம் வீட்டுல பிரச்சனை வரப்போகுது”

“ பிரச்சனையா??”

“ ஹ்ம்ம் ஏற்கனவே தமயந்திய எடுக்கலைன்னு மாயா கோவமா இருக்கா . இதுல என் அண்ணன் பொண்ணுனா அதான்”

“ இங்க பாரு ஜானு. நான் சொந்தத்துல பொண்ணு எடுக்க வேண்டாம்ன்னு நினைச்சதுக்கு காரணம் ஒண்ணுக்குள்ள ஒன்னு சம்மந்தி ஆகுறப்போ தேவை இல்லமா மன சுணக்கம் வருமேன்னுதான். ஆனா இப்போ சரண்யாவோட வாழ்க்கைத்தான் முக்கியம். என் தங்கிச்சிகள்ட்ட நான் பேசிக்குறேன்” என கூறிவிட்டு திருவாசகமும் சென்றுவிட்டார்.

அதன் பின் இந்த விஷயம் அறிந்து மாயாவதி தாம் தூம் என குதிக்க பின் ஒருவழியாக திருவாசகமும் சமாதானம் செய்து நித்யவதியை ருத்ரவர்மனுக்கு கல்யாணம் செய்துதருவதாக வாக்கு குடுத்தபின்தான் தங்கைகள் ஓய்ந்தனர். ஆனா தமயந்தி மட்டும் கோவத்துடனும் அதே நேரம் இந்த கல்யாணம் நிற்க எதுவும் வாய்ப்பு அமையுமா என யோசனையுடனும் இருந்தாள்.

அதேநேரம் மாறவர்மனுக்கும் பெரிதாக கல்யாணத்தில் ஈடுபாடு இல்லாததாலும் சரண்யாவை மறுக்க காரணம் இல்லாததாலும் ஒத்துக்கொண்டான்.

மாறவர்மன் சரண்யாவுக்கு
திருமணம் நடைபெற இன்னும் மூணு நாட்கள் இருந்த நிலையில் ஜனார்த்தனன் இல்லத்தில்,

“ அப்பா” என தங்கையின் திருமணத்திற்கு தந்தையின் வீட்டிற்கு வந்த ஜெயா ஜனார்த்தனனை அழைக்க

“ என்ன ஜெயா??” என ஜனார்த்தனன் வினவ

“ அப்பா நம்ம சரண்யாவுக்கு பார்லர் போகணும்ப்பா. இன்னும் மூணு நாள் தான் இருக்கு”

“ ஏன் வீட்டுக்கே வர சொல்றேன். என்ன செய்யணுமோ பண்ணிக்கோங்க”

“ இல்லப்பா அப்படியே கல்யாணத்துக்கு கொஞ்சம் ஷாப்பிங் போகணும் நாங்க போயிட்டு சீக்கிரம் வந்துடுறோம்”

“ ம்ப்ச் நீ என்ன பேசிகிட்டு இருக்க ஜெயா. இன்னும் மூணு நாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு இப்போ எதுக்கு வெளிய. அது எல்லாம் வேணாம்”

“ அப்பா ப்ளீஸ் ப்பா என் கல்யாணத்துக்கு எல்லாம் முதல் நாளேகூட நான் பார்லர் போனே அப்போ எல்லாம் ஒன்னும் சொல்லல இப்போ என்னனா” என ஜெயா பேசிக்கொண்டிருக்கையில்

“ சரி சரி சீக்கிரம் போயிட்டு நேரத்தோட வாங்க. எப்போ எங்க இருக்கீங்கன்னு எனக்கு மெசேஜ் பண்ணுங்க. சரியா??”

“ ஹ்ம்ம் சரிப்பா” என கூறிவித்திட்டு சரண்யாவின் அறைக்கு சென்ற ஜெயா அங்கு எதோ சிந்தனையில் இருந்த சரண்யாவிடம்,

“ சரண் நீ சொன்னமாதிரி அப்பாட்ட பேசி ஒருவழியா வெளில போக உத்தரவு வாங்கியாச்சு. இப்போவது உண்மைய சொல்லு இப்போ எங்க போக போறோம்”

“ ஹ்ம்ம் மாறன் அத்தானை பார்க்க”

“ அடிப்பாவி உன்னோடவரை பார்க்க இவ்வளவு அவசரமா கொஞ்சம் பொறுமையா இருந்தா இன்னும் மூணு நாள்ல நீயே அவருக்கு சொந்தம் ஆக போற. அப்புறம் என்னடி”

“ ம்ப்ச் அது எல்லாம் அப்புறம் சொல்றே இப்போ போய் கிளம்ப தயாராகுறேன் நீயும் கிளம்புக்கா”

“ ஹ்ம்ம் சரி. என்னமோ செய்”
என ஜெயா கூறிவிட்டு கிளம்ப செல்ல வேகமாக ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு கிளம்பிய சரண்யா மாறவர்மனுக்கு போன் செய்தாள். அழைப்பின் அந்த பக்கம் எடுத்த மாறவர்மன்,

“ ஹலோ”

“ ஹலோ!!... அத்தான் நான் சரண்யா பேசுறேன்”

“ ஹேய் சரண் எப்படி இருக்க??. என்ன கால் பண்ணிருக்க???”

“ நான் நல்லா இருக்கேன் அத்தான். நான் உங்ககிட்ட ஒரு…..”

“ என்ன முக்கியமான விஷயம் பேசணுமா??”

“ ஹ்ம்ம்”

“ அது இப்பொவேவா இல்ல . வெளில சந்திக்கணுமா??”

“ வெளில அத்தான் ஒரு பத்துமணி போல. இங்க எங்க ஏரியால இருக்க ரெஸ்டாரெண்ட் வரிங்களா??”

“ பத்துமணிக்கா??”

“ ஹ்ம்ம்”

“ சரி சரண் வரேன். அப்புறம் தனியா வராத”

“ தனியா இல்ல நான் ஜெயா…..”

“ ஓ ஜெயகூடவா. ஓகே ஓகே பை” என அழைப்பை வைத்துவிட்டான் மாறவர்மன்.

‘ மத்தவங்க பேசுறதுக்கு முன்னாடி முந்திரிக்கொட்டை மாதிரி பேசுறதுல இந்த அத்தான் இன்னும் மாறவே இல்ல போல. ஹ்ம்ம் அவரு மாறுனா என்ன மாறாட்டி எனக்கு என்ன நமக்கு இன்னைக்கு காரியம் ஆனா சரிதான்’ என எண்ணிக்கொண்டு ஜெயாவுடன் ரெஸ்டாரெண்ட் சென்றாள் சரண்யா.

அங்கு ரெஸ்டாரன்ட் சென்ற சகோதரிகள் இருவரும் நால்வர் அமரக்கூடிய மேஜையில் அமர,

‘ இவ கல்யாணம் பண்ணிக்க போறவரை பார்க்க வந்துருக்கா. நாம நந்தி மாதிரி இங்க இருக்க கூடாது. என்ன செய்யலாம் ஹ்ம்ம்’ என மனதில் எண்ணியபடி இருந்த ஜெயாவை பார்த்து

“ என்ன க்கா எதோ யோசனையில் இருக்க??”

“ ஒன்னும் இல்ல சரண்”

“ சும்மா சொல்லுக்கா மாமா நியாபகமா??” என சரண்யா கிண்டலுடன் கேட்க சரண்யாவின் முகத்தை உத்து பார்த்த ஜெயா

‘ இந்த கல்யாணம் விஷயம் பேச ஆரம்பிச்சதுல இருந்து இவ இன்னைக்குத்தான் கொஞ்சம் தெளிச்சியா தெரியுறா. ஒருவேளை மாறனை சந்திக்கிற சந்தோஷமோ’ என மீண்டும் யோசனையில் இருந்த ஜெயாவின் தோலை உலுக்கி மற்றவர் கவனம் தங்கள் மீது பதியாதவாறு “ அக்கா” என சற்றே உரக்க சரண்யா அழைக்க

“ ஹான்…. என்ன சரண்??. என்ன சொன்ன??”

“ சரியா போச்சு. மாமா கூட டூயட்டா??”

“ ஹ்ம்ம் ஆமா”

“ என்னது!!!...”

“ அடச்சீ!!..."

" ஏன்கா மாமாகூட duet அவ்வளவு கேவலமாவா இருக்கு "

" அது இல்ல. ஹான். நான் உங்க மாமா பேச சொல்லி மெசேஜ் பண்ணி இருந்தாக. எதுவும் முக்கியமான்னு நான் போய் போன் பேசிட்டு வரேன்” என கூறி சரண்யாவின் பதிலை கேட்காமல் அங்கிருந்து நகர்ந்தாள் ஜெயா.

“ என்ன ஆச்சு இந்த அக்காவுக்கு இப்படி பதட்டமா ஓடுது” என சரண்யா முணுமுணுத்துக்கொண்டிருக்கையில்

“ ஹாய் சரண்” என கூறிக்கொண்டு சரண்யாவின் எதிர் இருக்கையில் அமர்ந்தான் மாறவர்மன்.

“ ஹாய் அத்தான்”

“ என்ன வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா”

“ இல்ல இப்போதா ”

“ ஆமா எங்க ஜெயா??. அவகூட வரேன்னு சொன்ன”

“ அவ போன் பே……”

“ ஓ சரி சரி. நீ சொல்லு என்ன பேசணும்ன்னு வர சொன்ன”

“ அது…. அது…. அத்தான்”

“ இங்க பாரு சரண் நான் மீட்டிங்கை ஒரு மணி நேரம் தள்ளி வச்சுட்டு வந்துருக்கேன் சீக்கிரம் சொல்லுமா”

“ அது எனக்கு இந்த கல்யாணத்துல……”

“ என்ன விருப்பம் இல்லையா??” என அலட்சியமாக மாறவர்மன் கேட்க

‘ எப்படி கண்டுகொண்டான்’ என அதிர்ந்து விழித்த சரண்யாவிடம்,

“ அப்போ அப்படித்தான் இல்லையா சரண்”

“ ஆமா அத்தான். ஆனா எனக்கு….”

“ தெரியும் இந்த ஜாதகத்துல உடனடியா கல்யாணம் பண்ணுறதுல உனக்கு விருப்பம் இருந்துருக்காது. பரவா இல்லை பெரியவங்களுக்காக நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அப்புறம் போக போக வாழ்க்கை பிடிச்சிடும்”

“ ஆனா அத்தான். அது நான் காதல்….”

“ காதல் அதுவும் வரும் சரண் முதல்ல நண்பர்களா பழகிட்டு அப்புறம் காதல் வந்தப்புறம் நம்ம வாழ்க்கையை ஆரம்பிச்சுக்கலாம் இப்போ கூட உன்னைய என்னோட மாமா பொண்ணுன்ற முறையில தான் கல்யாணம் பண்ணிக்கபோறேன். எனக்கும் உன் மேல காதல் எல்லாம் இல்ல”

“ ஆனா அத்தான் நான் சொல்ல வரது என்னனா…. என்னோட காலேஜ்……”

“ உன்னோட காலேஜ் பத்தி படிப்பை பத்தி கவலை படாம தாராளமா எவ்வளவு வேணும்னாலும் படி ஒன்னும் பிரச்சனை இல்ல சரிதானே இதுக்கா இவ்வளவு தயங்குன இதை நீ போனிலையே சொல்லிருக்கலாம் சரி எனக்கு நேரமாச்சி நான் கிளம்பறேன். ஜெயா கிட்டயும் சொல்லிட்டு கிளம்பவா இல்ல நீ சொல்லிக்கிறியா”

“ ஆனா அத்தான் நான் சொல்ல……”

“ ஓகே ஓகே நீயே சொல்லிறியா. பை” என கூறிவிட்டு மாறவர்மன் விடைபெற சரண்யா கையை தலையில் வைத்துவிட்டு சோகத்துடன் அமர்ந்திருக்க.

அப்போது அங்கு வந்த ஜெயா “ என்னடி ஏன் இப்படி இருக்க என்ன ஆச்சு??”

“ ஹ்ம்ம் நாசமா போச்சு” என கத்திவிட்டு வேகமாக சரண்யா ரெஸ்டாரெண்ட்டைவிட்டு வெளியேற,

' என்ன ஆச்சு இவளுக்கு' என வேகமாக ஜெயாவும் சரண்யாவை பின் தொடர்ந்தாள்.

வீட்டிற்கு வந்தும் சரண்யா எதோ ஒரு சிந்தனையிலும் கவலையிலும் இருக்க அதனை கண்டு கவலை கொண்ட ஜெயா அவள் அம்மா சாந்தியிடம் சென்று,

“ அம்மா” என அழைக்க

“ என்ன ஜெயா எதுவும் குடிக்க வேணுமா??”

“ ஆமா இங்க குடியே மூழ்கிரும் போல. நீ இங்க குடிக்க எதுவும் வேணுமான்னு கேளு” என ஜெயா கடுப்படிக்க

“ என்ன ஆச்சு??”

“ என்ன என்ன ஆச்சு??. உன்ன சின்ன மக கல்யாணம் பேசுனதுல இருந்து மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்கா. அப்போ என்னன்னு கேட்டேன் நீ திடீர்ன்னு கல்யாணம் ஏற்பாடு பண்ணுனதுல அப்படி இருக்கன்னு சொன்ன. சரின்னு விட்டுட்டேன் இன்னைக்கு மாறனை பார்க்க போனோம். அங்க ரெண்டு பேரும் என்ன பேசுனாங்கன்னு தெரியல முன்னைவிட இப்போ ரொம்ப சோர்ந்து போயிருக்கா என்னன்னு கொஞ்சமாவது கவனிச்சியா நீ”

“ அடியே மாப்பிள்ளையவா பார்க்க போனீங்க??”

“ ஏம்மா நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்னடான்னா……”

“ ஏண்டி சின்ன சிருசுக்குள்ள எதாவது சண்டையா இருக்கும்”

“ ம்மா வாயில நல்ல வந்துட போது பார்த்துக்கோ”

“ ஏண்டி??”

“ பின் என்ன அவுங்க ரெண்டு பேரும் இன்னைக்குத்தான் பேசிக்கவே செஞ்சாங்க அதுக்குள்ள சண்டையா”

“ இப்போ என்ன செய்யணும்ன்னு சொல்ற???” என சலிப்புடன் கேட்ட சாந்தியிடம்

“ அம்மா எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு?”

“ என்ன சந்தேகம்??”

“ இல்ல ஒரு வேலை சரண்யா யாரையாவது விரும்பி அது பிடிக்காம அப்பா கல்யாணம் ஏற்பாடு பண்ணுறாங்களோன்னு”

“ அடியே உங்க அப்பா உங்க அத்தையோட காதலை ஒத்துக்கிட்டு கல்யாணம் பண்ணிவைச்சாரு. ஏன் அவரே அந்த காலத்துல என்னைய காதலிச்சுதான் கட்டிக்கிட்டாரு அப்படிபட்டவரு காதலுக்கு எதிரியா போடி அங்குட்டு. எதையாவது கிறுக்குத்தனமான உளறாம” என கூறிவிட்டு சாந்தி சென்றுவிட

“ ஹம்ம்ஹும் நிச்சயம் இந்த கல்யாணத்துல ஒரு சம்பவம் இருக்கு ஆனா அது யாருக்குன்னு எனக்கு தெரியமாட்டேன்குது பாப்போம் இன்னும் மூணு நாலு இருக்குல்ல” என எண்ணிக்கொண்டு தனது அறைக்கு சென்றுவிட்டாள் ஜெயா.




thanks for the supporting friends
plz drop ur comments

(அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் friends.......) :) :) :) :)
 
சரண்யா ஓடிப் போய் விட்டாளா?
அவள் ஓடிப் போனதும் மாறனுக்கு தமயந்தியைக் கல்யாணம் செய்ததால் மானம் மரியாதையைக் காப்பாற்றினாள்ன்னு திரு அவளை கொண்டாடி தமயந்திக்கு மண்டைக்கனம் ஏறி விட்டது போலவே
இரண்டு தொங்கச்சிகளும் ஜானவியை நல்லா போட்டுக் கொடுத்து அண்ணனை கவுத்துட்டாளுங்களா?
மகளின் காதல் தெரிந்துதான் ஜனார்த்தனன் கல்யாணத்தை சீக்கிரம் முடிக்க அவசரப்படுத்தினானோ?
இவன் செய்த வேலைக்கு திருவாசகம் ஏன் ஜானவியுடன் பேசாமலிருக்கணும்?
என்ன காரணம்?
இல்லை இன்னும் வேறு ஏதாவது வெடிகுண்டு இருக்கா?
 

Advertisement

Top