Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(17)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(17)

தென்றல் அறையை விட்டு சென்றவுடன் பழைய நினைவுகளுடன் உழன்று கொண்டிருந்த ருத்ரவர்மன் தீடீரென எதோ யோசித்தவனாக ‘ நாம ஏன் கருணாகரன் மாமாகிட்ட உதவி கேட்க கூடாது’ என எண்ணிக்கொண்டே தனது போனில் இருந்து கருணாகரனிற்கு அழைத்தான்.

முதல் அழைப்பிலையே அலைபேசியை எடுத்த கருணாகரன் “ ஹலோ” என கூற

“ மாமா நான் ருத்ரன் பேசுறேன். நீங்க எப்பிடி இருக்கீங்க??”

“ ருத்…. ருத்ரா திரு மகன் ருத்ரனா!!!...” என
பரபரப்புடனும் சந்தோஷத்துடனும்
கருணாகரன் கேட்க

“ ஹ்ம்ம் ஆமா மாமா
நானேதான்”

“ டேய் ருத்ரா உனக்கு உடம்பு சரி ஆகிடுச்சா?. நினைவு திரும்பிடுச்சா!!... எப்போடா??... இரு நான் இப்போவே கிளம்பிவரேன்” என கருணாகரன் வேகமாக படபடப்புடன் பேச

“ மாமா நான் இப்போ
நல்லா இருக்கேன் நினைவு திரும்பி ரெண்டு மாசம் ஆச்சு நீங்க நிதானமா இருங்க. இப்போ கிளம்பி வர வேணாம். நானே உங்கள பார்க்க வரத்தான் போன் பண்ணுனேன்”

“ என்னது!!!.... ருத்ரா இப்போதான் உனக்கு உடம்பு சரி ஆகிட்டு வருது நீவாட்டு கிளம்பி வராதா. நான் வரேன்”

“ ஐயோ மாமா நான்
முக்கியமான விஷயம் பேசணும் உங்க உதவி வேணும் அதான் நான் உங்களை தனியா சந்திக்க வரேன்னு சொன்னேன். அதோட காருல தான் வரேன் நீங்க பதறாம எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க”

“ வேற எங்க இருக்க போறேன் வீட்டுலதான். அப்பிடி என்ன முக்கியமான விஷயம் நேருல பார்த்து பேசுறதுக்கு இப்போவே போன்ல சொல்லேன்”

“ இல்ல மாமா நான் நேருல பேசிக்குறேன். அப்புறம் நான் பார்க்க வரத உங்க நண்பர்க்கிட்ட அதான் என் அப்பாட்ட சொல்லிடாதீங்க”

“ அவனை பத்தி பேசாத ருத்ரா” என திடீரென கோவமாக கருணாகரன் கூற

“ ஏன் மாமா நண்பர்களுக்கு இடையில சண்டையா??” என சிறு கிண்டலுடன் ருத்ரவர்மன் கேட்க

“ ம்ப்ச் நீ வேற ருத்ரா அருணாவுக்கும் உன் அண்ணனுக்கும் பிரச்சனையில….”

“ என்ன அண்ணாவுக்கும் அண்ணிக்கும் பிரச்சனையா!!!....”

“ ஹ்ம்ம் ஆமா அதுல இவ இங்க வீட்டுக்கு வந்துட்டா உன் அண்ணனும் கூட்டிட்டு போகல. உன் அப்பாவும் வந்து என்னன்னு பேசி பிரச்சனையை தீர்த்து வைக்கல நீயே சொல்லு நல்லா வாழணும்ன்னுதானே என் ஒரே மகளை உன் அண்ணனுக்கு கட்டி வச்சேன். அதுவும் திரு என்னோட கல்லூரி காலத்துல இருந்து நண்பன் அந்த நட்பு தொடரணும்ன்னு நானும் சந்தோசமா என் மகளை கட்டிவச்சேன்.

அவனை நம்புனே. ஆனா இப்போ என் மக வாழ்க்கைதான் கஷ்டத்துல இருக்குது” என விரக்தியான குரலில் கருணாகரன் கூற

“ அப்பா ஒன்னும் செய்யலையா???....”

“ ஆமா ருத்ரா என் மகளுக்காக நான் கோயம்புதூரில இருந்து இங்க சென்னைல வந்து இருக்குறேன். ஆனா உன் அப்பா உன் அண்ணனுக்காகவும் அவன் பேரனுக்காகவும் ஒரு பத்து நிமிஷம் என்கிட்டே பேச
மாட்டேன்றான். ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி உங்க கம்பனிக்கு வர சொல்லிருந்தான்.

நானும் போய் காத்திருந்து கடைசில வரவே இல்ல அதோட அவனும் பேச முயற்ச்சி பண்ணுனான். நான் தான் பேச வர சொல்லிட்டு அசிங்கபடித்திட்டானேன்னு திரும்ப முயலல” என கூறிமுடித்த கருணாகரனிடம்

“ மாமா நான் அங்க வரேன் மீதத்தை நேருல பேசலாம்”

“ சரிப்பா பார்த்து வா” என கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க ருத்ரவர்மன்
யோசனையில் ஆழ்ந்தான்.

‘ அருணா அண்ணி ஊருக்கு போயிருக்கறதா சொன்னாங்க அம்மா. ஓ!!... கோவமா போயிருக்காங்கன்னு சொன்னா நான் வருத்தப்படுவேன்னு சொல்லலையோ. ம்ப்ச் என்ன பிரச்சனையோ நானும் என் பிரச்சனையில வீட்டுல நடக்கறதை கவனிக்கவே இல்ல. ஹ்ம்ம் சரி இப்போ போய் மாமாவை பார்த்துட்டு இவுங்க பிரச்சனை என்னன்னு பார்ப்போம்’ என எண்ணி கிளம்பினான் ருத்ரவர்மன்.


காரில் செல்லும்போது முழுக்க முழுக்க அருணா ராஜவர்மனை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தான் ருத்ரவர்மன். ராஜவர்மனுக்கு திருமணம் செய்துவைத்தால் அவன் குணம் மாறலாம் என எண்ணிய திருவாசகமும் ஜானவியும் அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர் அப்பொழுது தொழில் விஷயமாக கோயம்புத்தூர் சென்ற திருவாசகம் அங்கு அவருடைய நண்பர் பிரபல வழக்கறிஞர் கருணாகரனை சந்தித்தார்.

கருணாகரனும் திருவாசகமும் வேற படிப்பும் வேற கல்லூரிலையும் படித்தாலும் வெளியில் தனியார் விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்தனர். அபொழுது ஆரம்பித்த அவர்களின் நட்பு காலப்போக்கில் அவர்களின் வாழ்க்கை ஓட்டத்தில் மறைய இன்றைய சூழலில் நட்பை மறுபடியும் மலர செய்ய சம்மந்தம் செய்ய முடிவு செய்தனர் நண்பர்கள் இருவரும்.

கருணாகரன் கௌரி தம்பதியின் ஒரே செல்ல மகள் அருணாவை மிக விமர்சையாக ராஜவர்மனுக்கு திருமணமான செய்தனர். திருமணத்திற்கு முன்பே அருணா குடும்பத்திடமும் அருணாவிடமும் ராஜவர்மனின் எண்ணப்போக்கையும் குணத்தையும் மேலோட்டமாக சொல்லிருந்தனர்.

திருமணம் ஆன புதிதில் அருணா ராஜவர்மனின் குணத்தால் தடுமாற அப்பொழுது முழுக்க முழுக்க மருமகளை தாங்கியது ஜானவிதான். ஒரு முறை ஜானவி ராஜவர்மனையும் அருணாவையும் படத்திற்கு போக சொல்லி நச்சரிக்க அதில் கடுப்பான ராஜவர்மன் அருணாவை அழைத்து கொண்டு படத்திற்கு சென்றான். திரும்பி வரும்பொழுது ஜானவி உணவு மேஜையில் ருத்ரனுக்கு பரிமாறிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது முதலில் வீட்டிற்குள் நுழைந்த ராஜவர்மனிடம்

“ ராஜா படம் நல்லா இருந்துச்சா??? அருணா எங்க???” என ஜானவி வினவ

“ அவ பின்னாடி வறா. ஹ்ம்ம் படம் நல்லா இருந்துச்சு. அருணால்ட் நல்லா சூப்பரா நடிச்சுருந்தாரு ம்மா” என புன்னைகை முகத்துடன் கூறிவிட்டு தனது அறைக்கு ராஜவர்மன் சென்றுவிட

“ என்னம்மா அண்ணாவும் அண்ணியும் படத்துக்கு போயிருக்காங்க போல……..” என ருத்ரவர்மன் கூற

“ டேய் சாப்பிடுற வேலைய பாருடா” என ஜானவி சந்தோசமாக கண்டிக்க

அப்பொழுது மிகவும் களைப்புடன் வீட்டினுள் நுழைந்த அருணாவை கண்ட ஜானவி,

“ என்ன அருணா ஏன் ஒரு மாதிரி இருக்க???. என்னமா உடம்புக்கு முடியலையா??” என ஜானவி கரிசனத்துடன் கேட்க

“ இல்லத்தை ஒரு மாதிரி சோர்வா இருக்கு நான் போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தா சரி ஆகிடுவேன்” என அருணா கூறிக்கொண்டிருக்கையில்

“ என்ன அண்ணி படம் மொக்கையா??” என ருத்ரவர்மன் கேட்க

“ இல்ல ருத்ரா நல்ல காமெடியா இருந்துச்சு வடிவேலு நல்லா நடிச்சுருந்தாரு” என அருணா கூற

“ என்னது அருணால்ட் படத்துல வடிவேலா!!!... நீங்க என்ன படத்துக்கு போனீங்க” என அதிர்ந்து ருத்ரவர்மன் வினவ

“ ஹ்ம்ம் தெனாலிராமன்”

“ அட ராமா!!....” என ஜானவி தலையில் கையை வைக்க

“ அப்போ அண்ணி நீங்க ஒரு படம் அண்ணன் ஒரு படத்துக்கா போனீங்க???...”

“ ஹ்ம்ம் அதை ஏன் கேட்குற அத்தை சொன்னாங்கன்னு நானும் உன் அண்ணனும் கிளம்பி போனா போகயிலையே எந்த படத்துக்கு போலாம்ன்னு கேட்டாரு. நானும் ரொம்ப ஆர்வமா தெனாலிராமன் படம் புதுசா வந்துருக்குல அதுக்கு போலாம்ன்னு சொல்லிட்டு அவரு மூஞ்சவே ஈ ன்னு இளிச்சுகிட்டு பார்குரே உன் அண்ணன் எனக்கு அருணால்ட் படம் பார்க்கணும் உன்னைய நீ சொன்ன படத்துக்கு இறக்கிட்டு நான் படம் பார்த்துட்டு உன்னைய வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு.

நான் உடனே இல்லங்க நீங்க பார்க்குற படத்துக்கே போலாம்ன்னு சொன்னேன்னா…….” என அருணா கூறிக்கொண்டிருக்கையில் இடைமறித்த ருத்ரவர்மன்

“ இப்போ நான் சொல்றேன் அண்ணி. படம் பார்க்குறது அவுங்க அவுங்க விருப்பத்தை பொறுத்தது. யாரும் யாரு விஷயத்துலையும் விருப்பதுலையும் தலையிட கூடாது. அதனால நீ சொன்ன படத்துக்கே உன்னைய இறக்கிவிடுறேன்னு சொல்லி நீங்க தனியா அண்ணன் தனியா போனீங்க சரியா??” என கேட்க

“ ஹ்ம்ம்…..” என அருணா தலையை ஆட்ட,

ஜானவிக்கு அருணாவை பார்க்கும்போது பாவமாகவும் ராஜவர்மனை நினைத்து கடுப்பும் வந்தது.

அதற்கடுத்து அவர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் செல்ல காருண்யன் பிறந்தபிறகு ராஜவர்மன் மாறி இருப்பான் என எண்ணி இருக்க இன்று அருணா வீட்டை விட்டு சென்று இருக்கார் எனில் இத்தனை நாள் பொறுமையாக இருந்துள்ளார் ராஜவர்மனநின் மாற்றத்திற்காக.

ஆனால் அந்த பொறுமை போகும் அளவிற்கு எதோ நடந்துள்ளது என முடிவு செய்தான் ருத்ரவர்மன். ருத்ரவர்மனின் சிந்தனையை கலைக்கும் விதமாக,

“ சார் நீங்க சொன்ன இடத்துக்கு வந்தாச்சு” என டிரைவர் கூற அதில் சிந்தனை கலைந்த ருத்ரவர்மன் “ ஓ…..” என கூறிவிட்டு கருணாகரன் வீட்டிற்குள் நுழையும் வேளையில் வாசலுக்கே வந்துவிட்டார் கருணாகரன்.

“ வா!!... வா!!.. ருத்ரா” என அவனின் கையை பிடித்துக்கொண்ட கருணாகரன் எதுவும் பேசாது அங்கிருந்த சோபாவில் அமர சொல்லிவிட்டு குடிக்க காபி கொண்டுவர
சொன்னார் வேலை ஆளை.

இந்த நல உபசரிப்புகளுக்கு பின்,

“ என்ன முக்கியமான விஷயம் ருத்ரா??. இப்படி உடம்பு முடியாததோட என்னைய பார்க்க வர அளவுக்கு”

“ அது அப்புறம் சொல்லுறேன் மாமா. அண்ணி அத்தை எங்க காணோம்”

“ அவுங்க ரெண்டு பேரும் கோயம்புத்தூர் போயிருக்காங்க சொந்தத்துல ஒரு கல்யாணம்”

“ ஓ!!... சரி மாமா”

“ சரி நீ சொல்லு என்ன பிரச்சனை??”

“ மாமா அது….” தயங்கி தயங்கி தான் வந்ததர்க்கான காரணத்தை ருத்ரவர்மன் கூற

“ நீ என்ன சொல்ற ருத்ரா!!....” என கருணாகரன் அதிர்ந்து எழுந்துவிட்டார்.

“ ஆமா மாமா..”

“ அப்போ உடனே இதை போலீஸ் கிட்ட…..”

“ இல்ல… இல்ல… மாமா மறுபடியும் கேஸ் மீடியான்னு அலைய விரும்பல. நான் என்ன சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க அதோட இதை இப்படியே விட முடியாது. அதான் உங்ககிட்ட எதாவது யோசனை கேட்கலாம்ன்னு வந்தேன்” என சோர்வுடன் கூறியவனை கண்ட கருணாகரனுக்கு பாவமாக இருந்தது.

மூன்று வருடங்களுக்கு முன் இவன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை நினைத்தவர் எதோ ஒன்றை யோசித்தவராக,

“ ருத்ரா பேசாம இதை டிடெக்ட்டிவுகிட்ட குடுக்கலாம். அவுங்க கண்டுபிடிக்கட்டும்”

“ ஆனா மாமா எந்த ஆதாரமும் இல்லாம எப்பிடி??.... யாருகிட்ட??.... அதுவும் நம்பிக்கையானவங்களா இருக்கனும்….”

“ இருக்காங்க ருத்ரா. எனக்கு தெரிஞ்ச பையன்தான் கோயம்புத்தூர்ல தனியா டிடெக்ட்டிவ் வச்சுருக்கான். அதோட ரொம்ப திறமையானவன்.”

“ ஆனாலும் மாமா ஆதாரம் எதுவும் இல்லாம…..”

“ ம்ப்ச் ருத்ரா என்னோட ஜூனியர் கிஷோரும் அவனும் சேர்ந்து ஒற்றைக்கால் மண்டபம்ன்ற ஊருல நடந்த ஒரு கொலையை எல்லாரும் தற்கொலைன்னு நினைக்க ஆதாரமே இல்லைனாலும் எப்பிடியோ தடயத்தை கண்டுபிடிச்சு ஒருவழியா கொலையாளியையும் போலீகிட்ட பிடிச்சுக் குடுத்துருக்காங்க. ரொம்ப பரபரப்பா பேச பட்ட விஷயம் அங்க. சரிவிடு என்கிட்ட சொல்லிட்டல நான் பார்த்துக்கறேன் சரியா”
என கருணாகரன் உறுதியாக கூற ஆமோதிப்பாக தலை அசைத்தான் ருத்ரவர்மன்.

பின் சிறுது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து செல்ல எழும்போது எதோ நினைவு வந்தவனாக,

“ மாமா அண்ணி……” என இழுக்க

“ இங்க பாரு ருத்ரா உனக்கு ஏற்கனவே நிறைய பிரச்சனை இதுல உடம்பு வேற இன்னும் முழுசா குணமாகல. அதனால முதல்ல அதை பாரு. இது புருஷன் பொண்டாட்டி பிரச்சனை அதனால இதை அவுங்க பார்த்துக்குவாங்க. அதான் நானே கொஞ்சம் இதுல ஒதுங்கி இருக்கேன். இல்ல என்னோட வாத திறமையை இதுல காட்டி புகுந்து விளையாட்டிருக்க மாட்டேன்” என சிரிப்புடன் கருணாகரன் கூற ருத்ரவர்மனும் சிறு சிரிப்புடன் வீட்டிற்கு செல்ல காரில் ஏறினான்.

வீட்டிற்கு செல்லும் வழி எல்லாம் ருத்ரனுக்கு சிந்தனையே சிறு வயது முதலே தகுதி தரம் என பாகுபாடு பார்த்து பழகும் இவனுக்கு ஏனோ வீட்டில் வேலை இல்லாமல் அப்பாவிற்கு கீழ் வேலை செய்யும் இரு மாமன்கள் மேலும் மதிப்போ மரியாதையோ கிடையாது.

அதே மாதிரி எப்போதாவது வீட்டிற்கு வரும் ஜானவியின் அண்ணனின் மீதும் அவ்வளவு பற்றுதல் இல்லை. ஆனால் ராஜவர்மனுக்கு திருமணம் ஆனா புதிதில் கருணாகரன் பேச்சில் கவரப்பட்டு அவரிடம் நெருக்கம் காட்ட பின் அவன் வாழ்வில் ஏற்பட்ட சிக்கலான நிறத்தில் உறுதுணையாக இருந்து அவனை பிரச்சனையிலிருந்து வெளிகொண்டு வந்ததும் கருணாகரன்தான். அதனால் ருத்ரனுக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதலில் தோன்றுவது கருணாகரனையே.

வீட்டிற்குள் கார் நுழையும்போது தோட்டத்தில் சிம்மவர்மனும் நித்யவதியும் எதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதுபோல தெரிய காரில் இருந்து இறங்கி என்னவென்று விசாரிக்க அவர்களை நெருங்கிய ருத்ரவர்மனை கண்டு நித்யவதி முறைத்துவிட்டு சிம்மவர்மனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

அதனை கண்டு

” என்ன சிம்மா எதுக்கு நித்தி என்னைய முறைச்சுட்டு போறா??” என கேட்க

‘ ஹ்ம்ம் நீ உன் பொண்டாட்டியை வேலைக்காரின்னு சொல்லி காலையில பண்ணுன கூத்த அம்மணி வேலையில இருந்து வந்தவுடன் எந்த கிறுக்கோ பத்தவச்சுருக்கு. அதுல உன் மேல கோவமா இருக்கான்னு நான் சொல்லவா முடியும்” என மனதில் எண்ணிக்கொண்டு அமைதியா “ ஒண்ணுமில்லை” என கூற

“ என்ன ஒன்னும் இல்ல ரெண்டு பேரும் எதோ கோவமா பேசிக்கிட்டிங்க. இப்போ என்ன ஒன்னும் இல்லைன்னு சொல்ற. அதோட என்னைய எதுக்கு முறைக்குறா” என ருத்ரவர்மன் கேட்டுக்கொண்டிருக்கையில்

“ மாமா அக்கா காபி கேட்டாங்க அதுக்குள்ள வீட்டுக்குள்ள போய்ட்டாங்களா” என தன் போக்கில் ருத்ரவர்மனை கவனியாது சிம்மவர்மனிடம் கேட்டுக்கொண்டிருந்த தென்றலை கண்ட ருத்ரவர்மன்

“ என்ன???... மாமா!!... அக்காவா!!.... ஏய்!!. நீ என்ன வேலைக்காரியா இல்ல சொந்தக்காரியா??” என கண்கள் சிவக்க கேட்ட ருத்ரவர்மனை அப்பொழுதுதான் கண்ட தென்றல் விழிவிரித்து அதிர்ந்தாள். பின்

“ சா…. சார்….”

“ என்ன என்ன சார்??. இப்போ என்ன சொல்லிக்கிட்டு இருந்த…” என மீண்டும் கத்த
அப்பொழுது அங்கு வந்த ஜானவி,

“ டேய் சிம்மா”

“ அம்மா”

“ இங்க என்ன சும்மா நிக்குற போ உள்ள வேலை இருந்தா பாரு” என சிம்மவர்மனை கண்களிலையே அங்கிருந்து போகுமாறு சைகை காட்ட அதை புரிந்துகொண்ட அவனும் வீட்டினுள் சென்றுவிட தென்றலின் புறம் திரும்பிய ஜானவி

“ இங்க என்ன பண்ற??.... நித்தி எப்போ கேட்ட காபி போ போய் சீக்கிரம் கொடு” என தென்றலையும் அங்கிருந்து அனுப்பிய ஜானவி .

“ ருத்ரா என்னப்பா வெளில போயிட்டு வந்தியா??. ஏன் உடம்பு சரி இல்லாம இருக்குற இந்த நேரத்துல வெளில அலையுற பாரு முகமே சோர்ந்து போயிடுச்சு. போ போய் ரெஸ்ட் எடுப்பா” என வேகமாக கூறிவிட்டு அங்கிருந்து நழுவ பார்த்த ஜானவியை கண்டு

“ அம்மா முதல்ல நில்லுங்க நான் கேட்குறதுக்கு பதில் சொல்லுங்க” என ருத்ரவர்மன் ஜானவியை நிறுத்த

உடனே ‘ ஐயோ!! இவன் விடமாட்டான் போலவே இவன் தென்றலை கேள்வி
கேட்குறானேன்னு வந்து ஆட்டய கலைச்சா இவன் என்கிட்டவே ஆரம்பிக்குறான்’ என மனதில் புலம்பிக்கொண்டு

“ என்ன ருத்ரா??. என்ன கேட்கணும் அம்மாகிட்ட???. முதல்ல வா வந்து உட்காரு. எவ்வளவு நேரம் நிப்ப” என கேட்டுக்கொண்டு அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தனர்.

“ ஆமா அவ வேலைக்காரிதானே”

“ யாரு ருத்ரா” என ஒன்னும் அறியாத பாவனையில் கேட்ட ஜான்வியிடம்

“ அதான் இப்போ காபி கொண்டுவந்தாளே நித்திக்கு. காலையில வீட்டைவிட்டு போக சொன்னேனே”

“ ஓ!!.. தென்றலா?”

“ ஹ்ம்ம் அவ எதுக்கு அக்கா மாமான்னு நித்தியையும் சிம்மாவையும் சொல்றா. வேலைகாரவங்களுக்கு ஒரு எல்லை இருக்கனும்”

“ இல்லப்பா அது… அது…. ஹான் அவ நமக்கு தூரத்து சொந்தம் ஒருவகையில் உனக்கு அத்தை பொண்ணு வேணும்”

“ என்ன??”

“ ஆமா ருத்ரா அவ நம்மூரு பக்கம் தான். அவ புருசனுக்கு உடம்பு சரி இல்ல அதான் கொஞ்ச நாள் இங்க தங்கிருக்கா” என ஜானவி தன் போல் கூறிக்கொண்டிருக்கையில்

“ அம்மா நிறுத்துங்க நமக்கு சொந்தக்காரவங்க ஏன் தெரிஞ்சவங்கன்னு சொல்றதுக்கே ஒரு தகுதி வேணும் இனிமே இந்த மாமா அக்கான்னு உறவு கொண்டாடுற வேலை எல்லாம் வேணாம்ன்னு சொல்லிருங்க. இல்ல நான் சொல்லட்டா”

“ இல்ல இல்ல நானே சொல்றே ருத்ரா”

“ ஹ்ம்ம்” என கூறிவிட்டு அங்கிருந்து ருத்ரவர்மன் சென்ற பின்

“ இவன் சொல்ற தகுதில தார ஊத்தி தேக்க….. அநியாயம் பண்ணுறானே. சொந்தம்ன்னு சொன்னதுக்கே இப்படி பேசுறான். அவ உனக்கு மட்டும்தான் சொந்தம்ன்னு சொன்னா??.

ஐயையோ!!... இதுல நாளன்னைக்கு வரலட்சுமி நோண்புக்கு தென்றலோட பாட்டி சின்னாத்தா வேற வரேன்னு சொல்லிருக்காங்க. எதுவும் பிரச்சனை ஆகுமான்னுவேற தெரியலையே” என புலம்பிக்கொண்டிருந்தார்.

அதே நேரம் கருணாகரன் தன் அலைபேசியில் இருந்து டிடெக்ட்டிவ்க்கு அழைத்தார்.

“ ஹலோ…”

“ ஹலோ நான் வக்கீல் கருணாகரன் பேசுறேன் ஹர்ஷா இருக்கானா”

“ அங்கிள் நான் ஹர்ஷா தான் பேசுறேன்” என சந்தோசமாக பேச ஆர்மபித்தான் டிடெக்ட்டிவ்ஹர்ஷவர்த்தனன்.

ஹர்ஷவர்த்தனின் வருகை ருத்ரவர்மனின் பிரச்சனைதீர்வாகுமா???.


சின்னாத்தாவின் வருகை எத்தகைய மாற்றத்தை கொண்டுவரும் தென்றலின் வாழ்வில்???.

இனி அடுத்த அடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம் friends.
Sorry for the delay update friends.


உடல்நிலை கோளாறு காலநிலை கோளாறு சூழ்நிலை கோளாறுன்னு பல பிரச்சனைக்கு இடையில பூங்காற்று வருட வருவதற்குள்ள ரெண்டு புயலே வந்துடுச்சு இனிமே update வேகமா கொடுக்குறேன் ( யாரு??... நீ??.. இத நாங்க நம்பனுமாக்கு …….unga mindvoice கேட்குது இருந்தாலும் சீக்கிரம் போட முயற்சி பண்றேன்)

Thanks for the supporting friends

Plz drop ur commen
ts
 
ஒருவழியா மழைக்கு இடையே பூங்காற்று வருட வந்து விட்டது. அடுத்தடுத்து பூங்காற்று வீசட்டும். ஆவலுடன்ன்ன்ன்ன்.....????
 
ஒருவழியா மழைக்கு இடையே பூங்காற்று வருட வந்து விட்டது. அடுத்தடுத்து பூங்காற்று வீசட்டும். ஆவலுடன்ன்ன்ன்ன்.....????
Thanks sis ??
 
Top