Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(18)

Advertisement

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(18)

“ என்ன அங்கிள் எதுவும் முக்கியமான விஷயமா ரொம்ப நாளைக்கு அப்புறம் போன் பண்ணிருக்கீங்க”

“ ஹ்ம்ம் ஆமா ஹர்ஷா. நீ இப்போ வேலையா இருக்கியா??” நான் இப்போ உன்கிட்ட பேசலாமா??”

“ என்ன அங்கிள் நீங்க…. பேசுங்க. என்ன விஷயம்??”

“ அது ஒன்னும் இல்ல ஹர்ஷா என்னோட மாப்பிள்ளையோட தம்பி பேரு ருத்ரவர்மன். அவன் வெளிநாட்டுக்கு மூணு வருசத்துக்கு முன்னாடி படிக்க போனான்.

திரும்ப இப்போ எட்டு மாசத்துக்கு முன்னாடி அவனோட கூட படிச்ச பொண்ணோட திடீர்ன்னு இந்தியாவுக்கு கிளம்பி வந்துட்டான். ஏர்போர்ட்ல இருந்து வீட்டுக்கு வர வழியில விபத்து ஆகிடுச்சு……” என கருணாகரன் கூறிக்கொண்டிருக்கையில்

“ அங்கிள்….” என இடைமறித்தான் ஹர்ஷவர்தனன்.

“ என்ன ஹர்ஷா??”

“ அங்கிள் விபத்துனா……. எப்படி???. புரியல”

“ அது இவுங்க வந்த காரும் ஒரு லாரியும் நேருக்கு நேரா மோதிடுச்சு”

“ ஓ!!... அப்போ யாருக்கும் எதுவும்…..”

“ ஹ்ம்ம் ருத்ரனோட வந்த அந்த பொண்ணு இறந்துடுச்சு. பேருகூட சிந்தியா”

“ அப்போ ருத்ரனுக்கு…..”

“ அவன் இந்த ஆறுமாசமா கோமாவுல இருந்துட்டு இப்போ ஒரு ரெண்டு மாசமாதான்
சரி ஆகிட்டு வரான்”

“ சரி அங்கிள் இதுல என்னோட தேவை என்ன??”

“ அது ருத்ரன் இது விபத்து இல்ல கொலை முயற்சின்னு சொல்லுறான்”

“ கொலை முயற்சியா???. ஆனா எதை வச்சு சொல்றாங்க ஆதாரம் இருக்கா??”

“ ஆதாரம் எதுவும் இல்ல ஹர்ஷா. கடைசியா ருத்ரன் விபத்துல மயங்குறதுக்கு
முன்னாடி யாரோ ஒருத்தன் வந்து இவன் கன்னத்தை தட்டி பார்த்துட்டு யாருக்கோ போன் பண்ணி சார் அந்த பொண்ணு போச்சு. கூட ஒரு பையன் இருக்கான் அவனும் போயிருவான் போல அப்படின்னு பேசிகிட்டு இருந்துருக்கான். அதை கேட்டுகிட்டே மயங்கிட்டான்”

“ ஓ!!... ஆனா அங்கிள் இதை போலீஸ் விசாரிச்சுருப்பாங்களே”

“ ஹ்ம்ம் ஆமா ஹர்ஷா ருத்ரனோட அப்பா பணம் செல்வாக்குன்னு வச்சு நல்ல விசாரிச்சான் .நானும் கூடத்தான் இருந்தே. இத விபத்துன்னு சொல்லித்தான் கேசை முடிச்சாங்க. அதோட கொலைமுயற்சிக்கான ஆதாரம்ன்னு எதுவும் இல்ல”

“ சரி அப்போ இப்போ போலிஸ்க்கிட்ட மறுபடியும் கேஸை விசாரிக்க சொல்ல வேண்டியதுதானே அங்கிள்”

“ இல்லப்பா அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு”

“ என்ன அது??.....”

“ ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி கொஞ்சம் பிரச்சனை” என ருதரவர்மனின் கடந்தகாலத்தை சுருக்கமாக சொன்னார் கருணாகரன்.

“ ஓ சரி அங்கிள் அப்படின்னா ருத்ரன் சொல்லுறதை வச்சு இது கொலை முயற்சின்னா ஒன்னு சிந்தியாவுக்கோ இல்ல ருத்ரனுக்கோ தனிப்பட்ட முறையிலையோ இல்ல பொதுவான ஒரு எதிரி செஞ்சுருக்கலாம் நீங்க சொல்லுறதை வச்சு ஏன் நாலு வருசத்துக்கு முன்னாடி நடந்த விசயத்துல பாதிக்க பட்டவன் இப்படி பண்ணிருக்க கூடாது”

“ இருக்கலாம் ஹர்ஷா அதான் உனக்கு போன் பண்ணுனே எனக்காக இத கேஸை எடுத்து கொஞ்ச விசாரிக்கிறியா??”

“ ஹ்ம்ம் ஓகே அங்கிள். இங்க கொஞ்ச வேலை இருக்கு முடிச்சுட்டு நாளான்னைக்கு சென்னைக்கு வரேன். அதுக்குள்ள கேஸ் டீடெயில்ஸ் கொஞ்சம் வாங்கி வஞ்சுடுறிங்களா”

“ சரி ஹர்ஷா நான் எல்லாம் தயாரா வச்சிருக்கேன் உனக்கு ருத்ரனோட போன் நம்பரையும் அனுப்புறேன்.”

“ ஓகே அங்கிள். நான் பேசிக்குறேன் இப்போ வைக்கவா”

“ ஓகே ஹர்ஷா. பை”

“ பை அங்கிள்” என கூறிவிட்டு ஹர்ஷா போனை வைத்தவுடன் கருணாகரன் ருத்ரவர்மனிற்கு அழைத்து ஹர்ஷாவுடனான உரையாடலையும் அவன் சென்னை வருவதை பற்றியும் கூறினார்.

ருத்ரனின் வீட்டில் கருணாகரனுடன் போனில் பேசிவிட்டு அறையிலிருந்து ஹாலிற்கு வந்த ருத்ரன் சோபாவில் எதோ சிந்தனையில் இருந்த சிம்மவர்மனை கண்டு,

“ என்ன சிம்மா ஒரே யோசனையா இருக்க??”

“ ம்ப்ச் ஒண்ணுமில்லை” என சலிப்புடன் கூறிய சிம்மவர்மனை கண்டு

“ சிம்மா உன்கிட்ட நிறைய மாற்றம் தெரியுது”

“ என்னது??”

“ என்னடா முன்ன எல்லாம் நீ நாலுவார்த்தை சேர்ந்தாப்புல பேசுறதே என்கிட்டதான். ஆனா இப்போ என்கிட்டையும் அளந்துதா பேசுற. பத்தாததுக்கு மூஞ்சிய பார்த்து பேச மாட்டேங்குற. ஏன் என்மேல எதுவும் கோவமா??” என கேட்ட ருத்ரவர்மனை கண்டு

பெருமூச்சினை விட்டு கண்களை மூடித்திறந்த சிம்மவர்மன்

“ ருத்ரா நான் உன்கிட்ட கொஞ்ச தனியா பேசணும்”

“ ஹ்ம்ம் பேசலாம் சிம்மா”

“ இங்க வேணாம் பின்னாடி இருக்குற நீச்சல் குளத்துக்கிட்ட போலாம் வா” என
சிம்மவர்மன் அழைக்க இருவரும் அங்கு சென்றனர்.

சிம்மவர்மனும் ருத்ரவர்மனும் அண்ணன் தம்பி உறவு முறையை தாண்டி ஒரு நண்பர்களாகத்தான் வளர்ந்தனர் சிம்மவர்மன் அதிகம் மனம் விட்டு பேசுவது ருத்ரவர்மனிடம்தான்.

அதே நேரம் ருத்ரனுக்கு அடுத்து அதிகம் பேசுவது நித்யவதியிடம் தான். அதனால் நித்யவதியிடம் அதிகம் உரிமை உணர்வு உண்டு. அந்த உணர்வே காலப்போக்கில் காதலாக மாற. எதிர்பாராமல் வீட்டில் பெரியவர்கள் ருத்ரனுக்கும் நித்யவதிக்கும் திருமண பேச்சை எடுக்க அதுக்கு இளையவர்கள் சம்மதம் தெரிவித்தது என எல்லாம் சிம்மவர்மனுக்கு ஒரு இறுக்கத்தை குடுத்தது. இன்னும் ஒடுங்க வைத்தது.

அதே நேரம் ருத்ரனின் விபத்து நித்யவதியின் திருமணம் என மீண்டும் குழப்பத்தில் தள்ளியது சிம்மவர்மனை. நித்யவதியை மணந்து காதலில் ஜெயித்தாலும் அதில் மனம் திருப்தி அடையாமல் தம்பியின் வாழ்வை தட்டி பறித்தது போல குற்ற உணர்வும் உடனடியாக மனதை மாற்றி தன்னை மணந்துகொண்ட நித்யவதியின் குணத்தால் எரிச்சலும் காதல் மனைவியை நெருங்க முடியாமல் ஒருவித அழுத்தமும் சேர்ந்து இன்னும் சிம்மவர்மனை சோர்வடைய செய்தது.
இதை எப்படி ருத்ரவர்மனிடம் சொல்வது என்று தயங்கிய சிம்மவர்மனை கண்டு,

“ சிம்மா நீ எதோ சொல்ல தயங்குற. அது என்னனு சொல்லு என்கிட்ட. என்ன தயக்கம்??” என ருத்ரன் கூற

“ அது…. அது… ருத்ரா உனக்கும் நித்திக்கு கல்யாணம் பேசுனாங்க வீட்டுல”

“ ஆமா பேசுனாங்க”

“ ஆனா இப்போ எனக்கும் நித்திக்கு கல்யாணம் ஆகிடுச்சு.”

“ ஆமா ஆகிடுச்சு”

“ அதான்………”

“ என்ன அதான்???”

“ ஒ… ஒரு… குற்றஉணர்ச்சியா…..” என சிம்மவர்மன் கூறிக்கொண்டிருக்கையில்
சத்தமாக சிரிக்க ஆரம்பிச்சான் ருத்ரவர்மன் அதனை கண்டு கடுப்பான சிம்மவர்மன்,

“ ஏன்டா சிரிக்குற??”

“ பின்ன என்னடா கல்யாணம் பண்ணும்ப்போது தெரியாதா நான் குணமாவேன்னு. அப்போ இல்லாதது இப்போ என்ன புதுசா குற்றஉணர்ச்சி நான் குணமானவுடன் வருது” என கிண்டலாக வினவிய ருத்ரவர்மனை கண்டு

“ ம்ப்ச்” என சலித்து முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்தான் சிம்மவர்மன்.
அதனை கண்டு,

“ சிம்மா சிம்மா” என அவனை நெருங்கி

“ நீ என்னைய பாரு முதல்ல” என சிம்மவர்மனின் முகத்தை கைகளால் திருப்பி

“ இங்க பாரு சிம்மா நீ இப்போ பேசுனதவச்சு பார்குறப்போ நீயும் நித்தியும் மனசுவிட்டு பேசிக்கிட்ட மாதிரி தெரியல. அதோட உனக்கு இந்த குற்றவுணர்ச்சி தேவை இல்லாதது. ஏன்னா இந்த விபத்து நடக்கலைனாலும் நிச்சயம் எனக்கும் நித்திக்கும் கல்யாணம் நடந்துருக்காது” என கூற அதிர்ந்த சிம்மவர்மன்

“ ஏன்டா!!!.....”

“ ஏன்னா அன்னைக்கு வீட்டுல எல்லாரும் சின்னத்தானை கட்டிக்கிறியான்னு கேட்டதும் இவளும் சரின்னு சொல்லிட்டு மறுநாள் வந்து நான் வேற ஒருத்தரை விரும்புறேன்னு சொல்லி இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லி கத்திட்டு போய்ட்டா. அதோடா எனக்கும் இதுல விருப்பம் இல்ல. எனக்கு அவ நல்ல தோழி அவ்வளவுதான் .

அதான் கல்யாணம் பண்ண இன்னும் வருஷம் இருக்குல்ல அதுவரைக்கும் எங்களுக்கு விருப்பம் இல்லைன்றதை சொல்லவேண்டாம்ன்னு நான் முடிவு பண்ணிருந்தேன். உனக்குத்தான் அத்தைகளை பத்தி தெரியுமே நாங்க விருப்பம் இல்லைன்னு சொல்லிருந்தா தினமும் எதாவது நாடகம் போட்டுக்கிட்டு நிம்மதிய கெடுப்பாங்கன்னு. அதான் அப்போ சொல்லல. அதனால நீ குற்றவுணர்ச்சில தவிக்கவேண்டாம் என் அண்ணனே” என சிறு சிரிப்புடன் கூறிய ருத்ரவர்மனை கண்டு சிரித்த சிம்மவர்மன் மீண்டும் யோசனைக்குள்ளாக .

“ மறுபடியும் என்னடா உன் பிரச்சனை??.....” என சலிப்புடன் ருத்ரவர்மன் வினவினான்

“ இல்ல நித்தி யாரை விரும்பிருப்பான்னு சந்தேகம்……”

“ அது இப்போ தேவை இல்லாதது சிம்மா. இப்போ அவ உன் மனைவி அவ மனசுல இடம் பிடிச்சு ஒழுங்கா வாழ்க்கையை வாழற வழியப்பரு” என கூற சரி என தலை ஆட்டிவிட்டு அங்கிருந்து சென்ற சிம்மவர்மன்.

“ என்ன இவன் இப்படி சொல்றான். அன்றைக்கு ரொம்ப சந்தோசமாதான் சின்ன அத்தானை நான் கட்டிக்குறேன்னு சொன்னா. இவன் விருப்பம் இல்லைன்னு சொல்றான் ரெண்டுபேருக்கும்.

அப்போ ருத்ரன்கிட்ட சொன்னவ ஏன் என்கிட்ட எதுவும் சொல்லாம என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டா??. ஐயோ!!!.... இப்போ ரொம்ப குழப்பமா இருக்கே” என புலம்பலுடன் அன்றைய அலுவலை பார்க்க சென்றான்

அதே நேரம் ஹர்ஷா ருத்ரனுக்கு போன் செய்து சிறுது நேரம் பேசிவிட்டு நாளை மறுநாள் வருவதாக கூறிவிட்டு போனை வைத்தான். ஏனோ ஹர்ஷாவிடம் பேசிய பின்னர் ருத்ரனுக்கு சிறிது மனசு லேசானது போல இருந்தது. .இரவு உணவு உண்ண அனைவரும் உணவு மேஜைக்கு வந்தனர்.

ருத்ரனும் இன்று அனைவருடனும் சேர்ந்து உண்ண உணவு மேஜையில் ராஜவர்மனுக்கு எதிரில் அமர்ந்தான். அப்போது ஜானகி தென்றல் இருவரும்
அனைவருக்கும் பரிமாற ருத்ரன் ராஜவர்மன் அருணா பத்தி சிந்தனையில் இருந்தான்.
அவனின் சிந்தனையை கண்டு,

“ என்ன ருத்ரா எதோ யோசனையில் இருக்க??” என ஜானவி வினவ

“ ஏன் அண்ணி இப்போதான் அடிபட்டு படுக்கையில இருந்து எழுந்திருக்கான். இத்தனை நாளு என்ன நடந்துச்சு ஏது நடந்துருக்கும்ன்னு யோசனைவரும்ல” என மாயாவதி இடைக்காக பதில் கூற .

அதனை கேட்காதது போலவும் மயவாதி அங்கு இல்லாதது போலவும்,

“ என்னம்மா கேட்டிங்க??.... யோசனையா”

“ ஹ்ம்ம்”

“ அது நாளன்னைக்கு என் நண்பர் ஒருத்தர் வராரு. அதான் எங்க தங்க வைக்கலாம்ன்னு யோசிக்குறேன்”

“ ஏண்டா இங்க நம்ம வீட்டுல இல்லாத இடமா. மாடிலதான் அத்தனை அறை இருக்குல்ல” என ஜானவி கூறிக்கொண்டிருக்கையில்

“ அப்போ அன்னைக்கு வரலெட்சுமி பூஜைக்கு வரவங்கள எங்க தங்க வைப்பிங்க??” என லீலாவதி கேட்க

“ எப்போ மா அது??...” என ருத்ரவர்மனின் கேள்வியில்

“ ஹ்ம்ம் ஆமா ருத்ரா நாளன்னைக்குதான் விசேஷம்”

“ ஓ!!!...”

“ நீ ஒன்னும் யோசிக்காத அது எல்லாம் இடம் பத்தும். நான் பார்த்துகிறேன். நீ சாப்புடு முதல்ல” என ஜானவி கூறி தட்டில் உணவை வைக்க திடீரென யோசனை வந்தவனாக ராஜவர்மனை பார்த்துக்கொண்டே,

“ அம்மா இந்த பூஜைக்கு அண்ணி வரங்களா??” என ருத்ரவர்மன் வினவ

“ ஏன் ருத்ரா தமயந்தி இல்லாமலா பூஜை நடக்கும். என்ன தமயந்தி” என அங்கு உணவை உண்டு கொண்டிருந்த தமயேந்திதியை பார்த்து லீலாவதி கேட்க

“ அதானே நான் கண்டிப்பா இருப்பேன் ருத்ரா" என தமயந்தி ருத்திரனிடம் கூற

“ நான் உங்களைத்தான்ம்மா கேட்டேன். அண்ணி அதாவது அருணா அண்ணி வரங்களான்னு” என ருத்ரன் நிதானமாக கேட்க

“ அவ எங்க இங்க வர போறா…..” என மீண்டும் லீலாவதி பேச

“ ஹ்ம்ப்ச் அம்மா இந்த பல்லிகளை அங்குட்டு துரத்துங்க சும்மா சும்மா சத்தம் போட்டுக்கிட்டு” என சற்றே முணுமுணுப்பாக கூறிவிட்டு “ அம்மா” என சற்றே சத்தமாக அழைத்தான்.

அதனை கண்டு “ இல்லப்பா நான் இன்னும் சொல்லல இனி… இனிமே சொல்லணும்” என ராஜவர்மனை பார்த்துக்கொண்டு கூறிய ஜானவியை கண்டு

“ ம்மா இத்தனை நாளு கோச்சுக்கிட்டு இருந்தவங்க இந்த பூஜைக்கு மட்டும் வந்துருவாங்களா ஹ்ம்ம்….????”

“ ருத்ரா உனக்கு தொரியுமா???”

“ அண்ணி சும்மா போல அண்ணனோட மன வருத்தத்துல போயிருக்காங்க இல்லமா” என கேட்க யாரும் எதுவும் பேசாமல் இருந்தனர்.

அதனை கண்டு ராஜவர்மன் பல்லை கடித்தான். ருத்ரவர்மன் அருணாவை பற்றி பேசும்போதே இத்தனை பேரின் முன் தன்னுடைய பிரச்சனையை பேசுவதை விரும்பவில்லை.

ஆனாலும் அம்மாவும் பையனும் பேசிக்கொண்டிருக்கையில் தலையிடக்கூடாது என்று அமைதியாக இருந்தான். ருத்ரன் பேச பேச கோவமதிகரித்துக்கொண்டே இருந்தது. அதனை கண்டும் காணாமலும் ருத்ரவர்மன் ஒரு முடிவுடன் பேச ஆர்மபித்தான்.

“ அம்மா இத்தனை வருஷம் இருந்துட்டு திடீர்ன்னு எதுக்கு அண்ணி கோச்சுக்கிட்டு போகணும். அப்படி என்ன அண்ணனுக்கும் அண்ணிக்கும் இடையில பிரச்சனை???. இல்ல வேற யாராவது எதுவும் சொல்லி அண்ணி கோச்சுக்கிட்டு போய்ட்டாங்களா??. ஏன்னா அண்ணன்கூட பிரச்சனை அவர்கூட ஒத்துவரலைன்னு போகணும்ன்னா கல்யாணம் ஆன மறுநாளே போயிருக்கனும்” என நக்கலுடன் கூறினான் .

ஆனால் இதில் ராஜவர்மனுக்கு கோவம் வரவில்லை யோசனைதான் வந்தது.

‘ ருத்ரன் சொல்றமாதிரி எங்களுக்கு இடையில எதுவும் சண்டை இல்லையே. ஏதோ சொல்லவந்தா நான் எபோதும் போல பேசிட்டு போய்ட்டேன். அப்புறம் கொஞ்ச நேரத்துல அம்மா வீட்டுக்கு போய்ட்டா. எதுக்கு போயிருப்பா??. இத்தனை நாளு நமக்கு இது தோணலையே’ என சிந்தித்து கொண்டிருந்தவனை ருத்ரனின் குரல் தடை செய்ய அவனை கவனிக்க ஆர்மபித்தான் ராஜவர்மன்.

“ அம்மா ஒரு பெண் கல்யாணம் பண்ணி முழுக்க முழுக்க கணவனை நம்பித்தான் வரா. ஆனா அந்த மனைவியை அடுத்தவங்கன்னு சொல்லிட்டு பிள்ளையை மட்டும் பெத்துக்கலாமா??” என ருத்ரவர்மன் கூற

“ ருத்ரா!!!....” என ஜானவி உரக்க அழைத்தார்.

“ அம்மா என்னைய பேசவிடுங்க. இப்படி யாரும் பேசாமாதான் இன்னைக்கு ஒரு குடும்பம் பிரிஞ்சு கிடக்கு” என ராஜவர்மனை பார்த்து கூறிய ருத்ரவர்மன் மீண்டு ஜானவியை பார்த்து

“ அம்மா ஒரு பொண்ணு அவுங்க அம்மா வீட்டுக்கு ஆசையா போலாம் ஆனா நிம்மதிக்காவும் ஆதரவுக்காகவும் போனா அங்க கணவன் ஆம்பளைன்னு சொல்லிக்குறதுல அர்த்தமில்லை” என கூறிவிட்டு ராஜவர்மனை நோக்கி

“ அண்ணா எனக்கு ஒரு கேள்விக்கு பதில் சொல்லு இத்தனை நாளு அவுங்க அவுங்க பிரச்சனையை அவுங்கதான் சரி பண்ணனும்ன்னு சொன்னியே. ஒரு வேளை உன் மனைவியோட மானத்துக்கு பங்கம்ன்னா யாரோன்னு சொல்லி கண்டுக்க மாட்டியா” என கேட்க ராஜவர்மன் வெட்கி தலை குனிந்து உணவை உண்ணாது பாதியோடு எழுந்து செல்ல அதனை கண்டு,

“ என்ன ருத்ரா நீ இப்படி பேசிட்ட….” என ஜானவி ஆதங்க பட

“ நீங்க பேசிருந்தா நான் ஏன்ம்மா பேச போறேன். அப்புறம் நீங்க அண்ணியை பூஜைக்கு கூப்பிட வேணாம்”

“ ஏண்டா??”

“ ஏன்ம்மா நீங்க கூப்பிட்டவுடன் வருவார்களா??”

“ அப்புறம் என்னடா செய்றது”

“ ஹ்ம்ம் கூப்பிட வேண்டியவங்க கூப்பிட்டா வருவாங்க அண்ணி கண்டிப்பா வருவாங்க பூஜைக்கு” என் சிறு புன்னகையுடன் கூறிவிட்டு தனது அறைக்கு சென்றான் ருத்ரவர்மன்.

அடுத்தடுத்து அனைவரும் எழ மாயாவதியும் லீலாவதியும் அருணா வந்துவிடுவாளோ பொருமலுடன் பெருமாளுடன் எழுந்து சென்றனர்.

அதே நேரம் அறைக்கு சென்ற ராஜவர்மன் தன்னுடைய அறையில் இருந்த கண்ணாடியின் முன் நின்றுகொண்டு,

“ தப்பு பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன் ருத்ரன் சொல்றது சரிதானே. அவளுக்கு எல்லாமுமா இருப்பேன்ன்னு சொல்லி கல்யாணம் பண்ணிட்டு அவளுக்கு நான் எதுவுமாமே இல்லையே. இதுல அன்றைக்கு எதோ சொன்னாளே நான் அவுங்க அவுங்க பார்த்துக்கணும்ன்னு எப்போதும் போல சொல்லிட்டு எதோ அவசரம்ன்னு ஆபீஸ்க்கு போய்ட்டேன் அப்புறம் தான் போனா. என்ன சொன்னா அன்றைக்கு” என யோசித்து பார்த்தும் ஒன்றும் நினைவு வராததால் நாளை அருணாவை சந்திக்கும் முடிவுடன் படுக்க சென்றுவிட்டான்.

அருணா போனதிலிருந்து வெளியே எந்த உணர்வையும் ராஜவர்மன் காட்டிக்கொண்டதில்லை என்றாலும் அவனுடைய உள் மனதின் தேடல் அவன் மட்டுமே அறிந்தது. ஆனால் அவனின் மனதின் தேடலை அவனின் கொள்கை மறைத்துவிட இன்று கொண்டவளிடம் கொள்கை தேவை இல்லை என புரிந்து தன்னவளை தேடி செல்ல முடிவெடுத்துள்ளான்.

அதே நேரம் கல்யாணத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அருணாவிற்கு ராஜவர்மனின் நினைவுதான். சொந்தத்தில் அனைவரும் ‘ உன் கணவர் எங்கே??. ஏன் வரவில்லை??..’ என்று கேள்வி எழுப்ப; மேலும் அங்கு பெரும்பாலும் ஜோடியாகவே வந்திருந்தனர்.

அதனை பார்க்க பார்க்க ராஜவர்மனின் நினைவும் ஏக்கமும் அதிகரிக்க உடனடியாக சென்னை திரும்பிவிட்டனர். மடியில் காருண்யன் தலை சாய்த்து படுத்திருக்க தன் வாழ்க்கை பற்றி எண்ணிக்கொண்டிருந்தாள்.

திருமணத்திற்கு முன்பே ராஜவர்மனின் குணமறிந்து விரும்பியே மணந்தாள். அதனால் திருமணத்திற்கு பின் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சிறு சிறு சண்டை ஏக்கம் ஏமாற்றம் அனைத்தையும் காதல் கொண்டு மறந்து ராஜவர்மனின் குணத்திற்கு ஏற்றாற்போல வாழ பழகிக்கொண்டாள்.

ஆனால் வீட்டைவிட்டு கிளம்பிய அன்று காலையில் அவளுக்கும் ராஜவர்மனிற்குமான வாக்குவாதம் அதனால் ஏற்பட்ட கோவத்தால் அப்பா வீட்டிற்கு வந்துவிட்டாலும் இந்த 5 மாசமாக ராஜவர்மன் அருணாவை நேரில் சந்திக்கவே இல்லை அவனின் வருகை அவர்களின் மகனிற்காக மட்டும் என்பதால். ஏனோ அவனை அவளும் நேரில் சந்திக்க விரும்பவில்லை.

காலை கதிரவன் உதிக்க ஏழுமணிக்கே மனைவியை காண ராஜவர்மன் கருணாகரன் வீட்டிற்கு வந்துவிட்டான். அவனை பார்த்தவுடன் அருணாவின் தாயார் வரவேற்று ஹாலில் அமரவைத்து காபி போட சென்றார் பின் எழுந்துவந்த கருணாகரனும் ராஜவர்மனை கண்டு சற்றே அதிர்ந்து பின் தன் புருவத்தை சுருக்கி கொண்டு ராஜவர்மனை பார்த்துக்கொண்டே “ வாங்க” என கூறிவிட்டு. ராஜவர்மனின் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு,

“ நேத்துதுதான் வந்தாங்க ஊருல இருந்து. அதான் இன்னும் காருண்யன் எழல. நான் எழுப்ப சொல்றேன்” என கூறிக்கொண்டிருக்கையில்

“ இல்..ல இல்ல…. மாமா அவன் தூங்கட்டும். நா….ன் நான்… அருணாவைதான் பார்க்க வந்தேன்” என ராஜவர்மன் கூறிக்கொண்டிருக்கையில்

“ என்ன!!!...” என அந்த மனிதர் அதிர்ந்து எழுந்தேவிட்டார். பின்ன இருக்காதா இந்த ஐந்து மாதத்தில் மனைவியை காணாததும், அவளை பற்றி ஒரு வார்த்தை தன் மகனிடம் கூட கேட்காதவர் சற்றே வெட்கத்துடன் இன்று மனைவியை காண வந்திருக்கிறேன் என்றால்,

அதே நேரம், “ அம்மா எனக்கு பால்….” என கேட்டுக்கொண்டு தனது அறையில் இருந்து வந்த அருணா தன் கணவனை கண்டு விழிவிரித்து அதிர்ந்து நிற்க;

அருணாவின் குரல் வந்த திசையில் திரும்பிய ராஜவர்மன் கொண்டையுடன் பச்சை வண்ண நைட்டியுடன் முகம் கழுவியதால் சற்றே முகத்தில் நீர் திவலைகள் இருக்க நெற்றில் சிறு போட்டு மட்டும் வைத்து திருமணத்தில் இருந்ததைவிட இன்னும் இன்னும் அழகுடன் இருக்கும் மனைவியை பருகும் விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தவனின் விழியில் சற்றே மேடிட்டு இருந்த வயிறு தெரிய அதிர்ந்து அருணாவின் கண்களை சந்திக்க அருணாவும் கலங்கிய விழிகளுடன் ஆம் என தலையை அசைத்தாள்.

என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே
கண்ணு உறங்கும் பொழுதும்
உன் எண்ணம் உறக்கவில்லையே
என் " ராஜாதி ராஜனிருந்தா"........
நான் வேறேதும் கேக்கவில்லையே
என் மாமா என் பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவையில்லையே…………

plz drop ur comments and thanks for supporting friends....... :love: :love: :love:
Nice ep
 
Nice
 
Top