Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(22)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(22)

திருவிழாவிற்கு வந்து சாமி தரிசனம் முடித்துவிட்டு பன்னிரண்டு மணியளவில் கடையில் வளையல் பாசி என தென்றலும் ராணியும் வாங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மணிவாசன் ராணியிடம்,

“ ராணி சாமி கும்புட்டாச்சா??” என கேட்க

“ ஹ்ம்ம் சாமி எல்லாம் பார்த்தச்சு எனக்கும் செல்வி அக்காவுக்கும் வளையல் வாங்கிகிட்டு இருக்கோம்” என ராணி கூற

“ ஓ!!... அப்போ கிளம்ப நேரமாகுமா??” என மணிவாசனின் கேள்விக்கு

“ ஏன் அண்ணே?? என்ன ஆச்சு??” என தென்றல் இடைபுகுந்து வினவ

“ இல்லமா நான் நம்ம ஊருக்கு கிளம்புறேன். என் வேலை எல்லாம் முடிஞ்சுடுச்சு அதான் ஒரு வேளை நீங்க வந்தா நான் கூட்டிட்டு போறேன்” என மணிவாசன் கேட்க

“ ராணியோ இல்ல இல்ல நாங்க நடந்தே வந்துடுறோம் மாமா நீங்க முன்னாடி போங்க” என ராணி கடைகளை பார்த்துக்கொண்டே கூற

“ ராணி நாம நடந்து போறதுக்குள்ள உங்க அப்பா அம்மா வந்துட்டா அதான் எல்லா கடையும் பார்த்தாச்சு சாமியும் கும்புட்டாச்சுல வா நம்ம மணிவாசன் அண்ணே வண்டியிலையே போலாம்” என ராணியை செல்வி அழைக்க

“ இல்லக்கா இன்னும் கொஞ்சம் நேரம் மட்டும் நீ வீட்டுக்கு போய்ட்டா உங்க அத்தை எப்போ இந்த மாதிரி அனுப்புவாங்க சொல்லு” என ராணி கூறிக்கொண்டிருக்க

“ அதுக்கு நாம இங்கையே இருக்க முடியுமா பேசாம வா தனியா போறதுக்கு தெரிஞ்சவுங்க கூட போலாம்” என ஒருவாரு பேசி பேசியே ராணியை சம்மதிக்க வைத்து இருவரும் மணிவாசனின் வண்டியில் ஏறி சென்றனர்.

அதே நேரம் ருத்ரனிற்கு அண்ணாமலையிடமிருந்து போன் வர அதனை எடுத்து பேச ஆரம்பித்தான்

“ சொல்லுங்க அண்ணாமலை சார். எங்க இருக்கிங்க??. நான் உங்க ஊரு திருவிழால தான் இருக்கேன்”

“ தம்பி அது வந்து…….” என அண்ணாமலை வார்த்தைகளை மென்று முழுங்க

“ என்ன சார்?? சொல்லுங்க”

“ இல்ல நானும் திருவிழாக்குதான் கிளம்புனே. அதுக்குள்ள பக்கத்துல ஒரு கேதம் அதுக்கு வர வேண்டியதா போச்சு” என அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கையில்

“ சார் என்ன விளையாடுறிங்களா??. சென்னைல இருந்து நான் வந்துட்டேன்.
ஆனா
நீங்க இதோ இங்க வா அங்க வான்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க. எதுவும் ஏமாத்த பார்க்குறீங்களா சொல்லிடுங்க சார் நான் அதை வேற மாதிரி டீல் பண்ணிக்குறேன்”
என ருத்ரன் கோவமாக கத்த

“ தம்பி…. தம்பி… கோவப்படாதிங்கப்பா. இந்த கேதம் நீங்க நிலம் வாங்க போற பேயாடிக்கோட்டையில தான். அதனால நீங்களும் அந்த ஊருக்கு வந்துடுங்க. நானும் இடத்தை காட்டிடுறேன். இந்த கேதம் ரொம்ப முக்கியம் தம்பி. ஊரு பெரிய தலைகட்டு அதான் தவிர்க்க முடியாம போச்சு” என மெதுவாக கேட்க பல்லைக்கடித்து கொண்டு முகவரியை வாங்கிக்கொண்டு வேகமாக பேயாடிக்கோட்டைக்கு சென்றான்.

மதியம் ஒரு ஒன்றை மணி அளவில் முதலில் ராணியை அவளின் வீட்டில் இறக்கி விட்டு அடுத்ததாக தென்றலையும் அவளின் வீட்டில் இறக்கிவிட்டு சென்றார் மணிவாசன்.

தென்றல் வீட்டிற்கு சென்றபோது அனைவரும் மதிய உணவை முடித்துவிட்டு உறங்கிக்கொண்டிருக்க வேகமாக மதிய உணவை அவளும் முடித்துவிட்டு உடையை மாற்றிவிட்டு ஒரு பாவாடையும் மேலே கண்ணனின் பெரிய சட்டையையும் போட்டுகொண்டு ஒரு கொண்டையுடன் சாப்பிட்ட பாத்திரங்களை விளக்கி போட்டுவிட்டு ஒரு இரண்டேகால் மணிபோல சின்னாத்தாவை எழுப்ப வந்த தென்றல் தீடிரென, “ அச்சச்சோ” என கூறிக்கொண்டு வேகமாக ஒரு கையில் ராணியின் வளையல் பாசியை எடுத்துக்கொண்டு அவளுக்கு குடுக்க செல்ல எண்ணுகையில் விழித்த சின்னாத்தா,

“ ஏய்!! செல்வி பிள்ளை நீ எப்பத்தா வந்த இப்போ எங்க கிளம்பிட்ட??” என கேட்ட சின்னாத்தாவிடம்

“ ராணியை பார்த்துட்டு வந்துடுறேன் ஆத்தா” என வேகமாக ஓடினாள்.

“ இவ ஒருத்தி கேட்குறேனே பதில் சொல்லுறாளா பாரு” என தன்போக்கில் புலம்பிக்கொண்டு அவரின் வேலையை பார்க்க சென்றார்.


ராணியின் வீட்டிற்கு சென்ற தென்றல் ராணியின் வீடு பூட்டி இருந்ததை பார்த்து ‘ என்ன வீடு பூட்டி இருக்கு. இப்போதான் வந்தா அதுகுள்ள எங்க போய்ட்டா??. ஒரு வேளை அவுங்க அப்பா அம்மா வந்துட்டாங்களோ. அதனால வெளிய எல்லாரும் போயிருப்பாங்களோ. அச்சச்சோ இப்போ எப்படி அவளோட பொருளை எல்லாம் கொடுக்குறது. அத்தை வேற இனிமே வெளிய எப்போ விடுவாங்க??.

இன்னைக்கு கோவிலுக்கு போனதுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு கம்மாய்க்கு குளிக்க கூட அனுப்புவாங்களோ என்னமோ’ என மனதில் புலம்பிக்கொண்டு தென்றல் வீடு திரும்ப ஒரு பத்து அடி எடுத்துவைத்துருக்கும் போது பேச்சு குரல் கேட்க திரும்பி பார்த்தாள்.

அங்கு தூரத்தில் ராணியின் வீட்டை நோக்கி ராணியின் அம்மா குமுதாவும் அப்பா
பழனியும் வேளை களைப்பு இருந்தாலும் ஏதோ சந்தோசமாக பேசி சிரித்தபடி வந்தனர்.

அவர்களை பார்த்த தென்றல் ‘ என்ன இவுங்க மட்டும் வராங்க அப்போ ராணி எங்க போயிருப்பா ஒரு வேளை விளையாட போயிட்டாளா??’ என எண்ணிக்கொண்டிருந்தாள் அதே நேரம் மனதில் சிறு பயமும் வந்தது.

தூரத்தில் தென்றலை பார்த்த குமுதா,

“ செல்வி இங்க வா. ஏன் அங்க நிக்குற??” என கூறிக்கொண்டு வீட்டை நெருங்க
அதே நேரம் அவர்களின் அருகில் தென்றல் வந்திருந்தாள் வீடு பூட்டி இருந்ததை பார்த்து,

“ என்ன வீடு பூட்டி இருக்கு ராணி எங்க தென்றல்??. அங்க உங்க வீட்டுல இருக்காளா??. அப்புறம் கோவில் போயிட்டு எப்போ வந்திங்க??” என கேட்டுக்கொண்டு திண்ணையில் குமுதா அமர பழனி மண்வெட்டி கூடை அனைத்தையும் திண்ணையில் வைத்துக்கொண்டிருக்க தென்றலோ

“ அது… அது… ராணிம்மா நாங்க ஒன்றை மணி போல மணிவாசன் அண்ணே வண்டியில வந்தோம். ராணியை முதல்ல இங்க விட்டுட்டு என்னைய எங்க வீட்டுல விட்டுட்டாங்க இப்போதான் ராணி வாங்குன வளையல் பாசி எல்லாம் எங்கிட்ட இருந்தது நியாபகம் வந்தது. அதான் எடுத்துட்டு வந்தே வீடு பூட்டிருக்கு” என தென்றல் என சற்றே பயத்துடன் கூறிய தென்றலை கண்டு

“ அதுக்கு ஏத்தா பயப்புடுற. அந்த கழுதை எங்கையாவது விளையாட போயிருக்கு. வரட்டும் அப்போ இருக்கு அவளுக்கு” என புன்னைகையுடன் கூறிய குமுதாவிடம் ராணியின் பொருட்களை குடுத்துவிட்டு வீட்டை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பிக்கும் போது தூரத்தில் யாருடனோ சுந்தரி பேசிக்கொண்டிருப்பதை பார்த்து,

“ ஆத்தி!!... அத்தை எப்போ எழுந்தாங்கன்னு தெரியலையே இப்போ போன இங்கையே நம்மள கடிச்சு கொதறிடுவாங்க என்ன செய்றது பேசாம வேற பாதையில சுத்தி வீட்டுக்கு போயிடலாம் வீட்டுல கூட ரெண்டு அடி சேர்த்து வாங்கிடலாம்” என எண்ணிக்கொண்டு சுத்து பாதையில் வீட்டை நோக்கி வேக எட்டுக்களுடன் நடக்க ஆரம்பித்தாள்.

தென்றல் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்த பாதை முழுக்க முழுக்க ஒத்தை அடி பாதை. முழுவது கருவ மரங்கள் சூழ்ந்து பழைய இடிந்த மண் வீடுகள் அங்கங்கே கரையான் புத்துகள் என நடக்க சற்றே சிரமமான பாதை. சிறியவர்கள் யாரும் இந்த பாதையில் அதிகம் வருவதில்லை. பெரியவர்களே காலை கடனுக்கு சற்றே மறைவான இடம் என காலையில் வருவதோடு சரி.

அந்த பாதையில் சற்றே பயத்துடன் நடந்துகொண்டிருந்த தென்றலுக்கு எதோ முனங்கல் சத்தம் கேட்க பயத்துடன் வேகமாக கிட்டத்தட்ட ஓட ஆரம்பித்தாள்.

அப்பொழுது முனங்கல் சத்தம் அழுகையையாக மாற தொடர்ந்து ஒரு முரட்டு குரல் மெதுவாக மிரட்ட ஆரம்பித்தது. ஆனால் அந்த அமைதியான இடத்தில் தென்றலுக்கு குரல் நன்றாக கேட்க அதுவும் பரிச்சயமான குரலாக இருக்கவும் அடுத்து என்ன செய்வது என்று ஒரு நிமிடம் தயங்கி நின்றாள்.

அதே நேரம் அந்த அழுகைக்கு சொந்தமான குரலும் எதோ கூற அந்த குரலும் பரிச்சயமான குரலாக இருக்க வேகமாக சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடினாள் தென்றல்.

அங்கு ஒரு முரட்டு உருவம் பின்புறம் தெரிய யார் மீதோ உட்கார்ந்துப்பது போல தெரிய இன்னும் நெருங்கினாள்.பின்னிருந்து நன்றாக பார்க்க ராணியின் மேல் சட்டை கிழித்து முகத்தில் அங்கங்கே ரத்த காயங்களுடன் தலை மூடி அனைத்து குதறியது போலவும் எதோ அழுதுகொண்டிருந்தாள்.

அதனை கண்டு பதினைந்து வயது நிரம்பி இதுவரை வீட்டு கிளியாக எந்த ஒரு விவரமும் அறியாத தென்றலுக்கு அங்கு நடப்பது புரியவில்லை என்றாலும் அது ராணிக்கு ஆபத்து மட்டும் புரிய வேகமாக சென்று ராணியின் கையை பிடித்து இழுத்தாள் தென்றல்.

அதனை கண்ட அந்த மனித மிருகம் “ ஏய்!!... நீ இங்க என்ன பண்ணுற முதல்ல இங்க இருந்து போ இல்ல உனக்கும் இந்த நிலைமைதான்” என மிரட்ட அதில் சற்றே மிரண்ட தென்றல் ராணியை காண ராணியோ,

“ அக்கா அக்கா என்னைய கூட்டிட்டு போக்கா என்னமோ செய்றான் இந்த ஆளு ரொம்ப வலிக்குது அடிக்க வேற செய்றான் என்னைய எங்க அப்பா அம்மாட்ட கூட்டிட்டு போக்கா” என அழுக அதனை கண்டு கண்ணீருடன் தென்றல்

“ நீ விடு அவளை” என பலம்கொண்டு அந்த மிருகத்தை தள்ள அவனோ ஒரே தள்ளில் தென்றலை கீழே தள்ளிவிட்டான்.

உடனே ராணி எழ பார்க்க அவளின் முடியை பிடித்தவன் தென்றலை நோக்கி,

“ நீ இங்க இருந்து போல உன்னைய கொன்னு போலிபோட்டுடுவேன்” என மிரட்டிக்கொண்டிருக்கும் போது

வேகமாக ஒரு பெரிய கருவ செடியை முள்ளுடன் பிடுங்கி அந்த மிருகத்தை நோக்கி ஒரு அடி வைக்க அது சரியாக அவனின் முகத்தில் பட்டு முள் அவனின் கண்ணிலிருந்து தாடைவரை கிழித்தது.

அதில் கோவம் கொண்ட அவன் தென்றலின் முடியை பிடித்து இழுத்து சென்று இடிந்த மணல் வீட்டின் சுவற்றில் மூணுதடவை வெறிகொண்டவனாக மோத அதில் ரத்த காயத்துடன் அங்கு மயக்கம் அடைந்தாள்.

அதோடு அந்த மிருகமும் ராணியை இழுத்துக்கொண்டு வேறு இடம் நோக்கி செல்ல ராணியின் கதறல் தென்றலுக்கு கேட்டாலும் அவளால் எழமுடியாமல் கிடக்க கண்ணில் இருந்து கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது.

“ கருப்பா எதாவது செய் ராணியை காப்பாத்த வா கருப்பா” என அரை மயக்க நிலையிலும் கடவுளை துணைக்கு அழைக்க அதே நேரம் காரின் ஹாரன் சத்தம் கேட்க உதவி கிடைக்கும் நம்பிக்கையில் மிகவும் சிரமபட்டு எழுந்து சத்தம் வந்த திசைக்கு சென்றாள்.

ருத்ரன் அண்ணாமலையை பேயாடிக்கோட்டையில் சந்தித்துவிட்டு இடத்தையும் பார்த்துவிட்டான். மறுநாள் திருவாசகத்தை வரும்படியும் நாளையே ரெஜிஸ்டெரஷன் வைத்துக்கொள்ளலாம் என எல்லாம் முடித்துவிட்டு செங்கானத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது ஆட்டுக்குட்டிகள் வரிசையாக வழியை மறிச்சு செல்ல அதில் கட்டுப்படைந்தவன் காரின் வேகத்தை குறைத்து சத்தமாக ஹாரனை அடித்தான்.

ஹாரனின் சத்தத்தில் மெயின் ரோட்டிற்கு வர அங்கு நின்ற காரை நோக்கி கிட்ட தட்ட முடிந்தளவு ஓடி காரின் முன் மோதி நின்றாள் தென்றல். ஏற்கனவே கடுப்பில் இருந்த ருத்ரவரன்

“ hey useless ஓடுற காருல விழுந்தா எதாவது பிரயோஜனம் இருக்கும். நிக்குற காருல வந்து விழுற” என கத்திக்கொண்டு கீழே இறங்கிய ருத்ரன் தென்றலை கண்டு

“ ஏய்!!... நீயா??” என கூறிவிட்டு அவளின் தலையில் ரத்தத்தை பார்த்துவிட்டு

“ என்ன தலையில ரத்தம் ஆஸ்பத்திரி போகாம இங்க எதுக்கு பேய் மாதிரி நிக்குற??” என ருத்ரன் எகுற

அதை எல்லாம் கண்டுகொள்ளாது அவனின் காலை பிடித்துக்கொண்டு,
“ சார்… சார்…. என் ராணியை காப்பாத்துங்க சார். அந்த… அந்த… மிருகம் அவளை எதோ செய்ய போறான் போல. வாங்க சார் வாங்க சார்” என கூறி எழுந்து மறுபடியும் கையை பிடித்து கொண்டு கிட்டத்தட்ட தென்றல் இழுக்க

“ ஏய்!!... நிறுத்து. என்ன?? என்ன சொல்லுற??” என ருத்ரன் புரியாது வினவ

“ சார் வாங்க வாங்க சார்” கெஞ்சல் மட்டுமே இருந்தது தென்றலிடம்.


ஏனோ ருத்ரனிற்கு மறுக்க தோணாது தென்றலை பின்தொடர்ந்து செல்ல ஏற்கனவே ராணியை இழுத்து சென்ற திசையை அரை மயக்க நிலையில் பார்த்த தென்றல் முயன்று நியாபகம் கொண்டுவந்து ராணியை நோக்கி ருத்ரனுடன் சென்றாள்.

ராணியின் சத்தம் கேட்க ருத்ரனும் வேகமாக சத்தம் வந்த திசையை நோக்கி செல்ல அங்கு ராணியின் குரல் வலையை பிடித்து நெருக்கி கொண்டிருந்தான் அந்த மிருகம்.
ஒரு பண்ணீரெண்டு வயது குழந்தையை பலாத்காரம் செய்ய நினைத்தை கண்டுகொண்ட ருத்ரன் ருத்ரமூர்த்தியாக மாறி வேகமாக அந்த மிருகத்தை நோக்கி உதைக்க அவன் சுருண்டுவிழுந்தான். இன்னும் கோவம் அடங்காத ருத்ரன் அவனின் குரல் வளையில் ஷூ காலால் மிதிக்க,

அதே நேரம் ராணிக்கு உடல் தூக்கி தூக்கி போட மூச்சு விட சிரம பட்ட ராணியை வேகமாக தூக்கிக்கொண்டு அந்த மிருகத்தை ஓங்கி ஒரு மிதி மித்தித்துவிட்டு தென்றலையும் ஒரு கையால் இழுத்துக்கொண்டு காரில் ஏறி பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தான்.

அப்பொழுது ருத்ரனால் மிதி வாங்கிய ஊரின் பெரிய மனிதன் மணிவாசன் அவனின் தப்பு தெரிவதற்குள் ருத்ரனை பற்றி அறியாது ருத்ரன் ராணியை பலாத்காரம் செய்ய நினைத்ததாவும் தடுக்க போன தன்னை அடித்ததாவும் ஊருக்குள் சென்று சொல்லிவிட,

மணிவாசனின் வார்த்தைகளை நம்பி ஆஸ்பத்திரியில் ராணி சேர்க்கப்பட்டதை அறிந்து ஊர் மக்கள் முற்றுகை இட்டனர் ருத்ரனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்.

அதே நேரம் அவ்வூரில் இருந்த அண்ணாமலை மூலம் சென்னையில் இருந்த திருவாசகத்திற்கு தெரிந்து அவரும் மாயாவதி லீலாவதி மூவரும் பேயாடிக்கொட்டை நோக்கி கிளம்பினர்.

ஜானவி அருணாவிற்கு பிரசவ வலி வர வேண்டிய நாள் என்பதால் அவர் மருத்துவமனையில் அருணாவுடன் தங்கிக்கொள்ள அவருக்கு விஷயம் தெரியப்படுத்தவில்லை. திருவாசகம் மூலம் விஷயம் அறிந்த அருணாவின் அப்பா வக்கீல் கருணாகரனும் கிளம்பி வந்துக்கொண்டிருந்தார் பேயாடிக்கோட்டைக்கு.

மருத்துவமனையில் போலீஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டு முறையாக ராணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. தென்றலுக்கு தலையில் காயத்துக்கு மருந்து வைத்தனர். பின் அவள் அங்கிருந்த ஒரு மூலையில் முட்டியில் முகத்தை வைத்துக்கொண்டு எங்கோ வெறித்துகொண்டு அமர்ந்திருந்தாள்.

ருத்ரனிற்கு நன்றி சொல்லக்கூட தோணாது அமர்ந்திருக்க ருத்ரன் ராணி நல்லபடியாக பிழைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவ்வப்போது தென்றலை தன் பார்வை வட்டத்தில் வைத்துக்கொண்டு ஒரு சேரில் அமர்ந்திருந்த்தான்.

போலீஸாரும் ஊர் மக்களின் கோரிகைக்காக முதலில் ருத்ரனை அரெஸ்ட் செய்ய மருத்தவமனைக்குள் நுழைந்தனர்.

ராணி கண் விழிக்க இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் ஆகும் என்ற நிலையில் ராணியாலும் மணிவாசனை பற்றி அறியாத ருத்ரனாலும் உண்மையை அனைவருக்கும் தெளிவு படுத்துவது சிரமம். போலீஸாரால் ருத்ரன் சிறையில் அடைக்கப்பட்டால் அவனின் வெளிநாட்டு படிப்பு கனவாகிவிடும் இல்லை தாமதமாகிவிடும். இந்நிலையில் தென்றல் உண்மையை கூற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ருத்ரனின் நிலை அடுத்த அத்தியாத்தில் பார்ப்போம்

இதுவும் சின்ன epi தான் friends. அது பெரிசா அடிச்சா time gap விழுந்துடும் போல (நானே கதையை மறந்துடுவேன் ) அதான் type பண்ணவரைக்கும் போஸ்ட் பண்ணிட்டேன் அடுத்த epiல flashback முடிஞ்சுடும்

thanks for supporting friends

&
plz share ur comments
 
மிகவும் அருமையான பதிவு,
நிரஞ்சனா சுப்பிரமணி டியர்

அடப்பாவி மணிவாசன்
இவனே கூட்டிட்டு வந்துட்டு இவனே அந்த சின்னப் பிள்ளையை நாசம் பண்ணப் பார்த்திருக்கிறானே
இதில் ருத்ரவர்மனை வேற குற்றவாளின்னு மாத்தி சொல்லுறான்
அப்பா திருவாசகம் வர்றது சரி
இந்த இரண்டு விதி மூதேவிங்களுக்கும் இங்கே என்ன வேலை?
என்னத்தைக் கிழிக்கப் போறாளுங்கன்னு சொத்தை அத்தைகள் வர்றாளுங்க?
தென்றல் உண்மையை சொல்ல மாட்டாளா?
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
நிரஞ்சனா சுப்பிரமணி டியர்

அடப்பாவி மணிவாசன்
இவனே கூட்டிட்டு வந்துட்டு இவனே அந்த சின்னப் பிள்ளையை நாசம் பண்ணப் பார்த்திருக்கிறானே
இதில் ருத்ரவர்மனை வேற குற்றவாளின்னு மாத்தி சொல்லுறான்
அப்பா திருவாசகம் வர்றது சரி
இந்த இரண்டு விதி மூதேவிங்களுக்கும் இங்கே என்ன வேலை?
என்னத்தைக் கிழிக்கப் போறாளுங்கன்னு சொத்தை அத்தைகள் வர்றாளுங்க?
தென்றல் உண்மையை சொல்ல மாட்டாளா?
Thanks sis(solra nilamaila irukalannu theriyala solla vituvangalannu theriyala sonna yeththukuvangalannu theriyala muthalla solla ninaikuralannu theriyalaiye sis??)
 
Top