Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(26)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(26)



“ ஆத்தா நான் சொல்றத கேளு வேணாம்” என கத்தி கொண்டே வந்த தென்றலை கண்டுகொள்ளாது ருத்ரனின் அறைக்குள் நுழைந்தார் சின்னாத்தாள். அங்கு கட்டிலில் படுத்திருந்தவனை கண்டவர்

“ ஏல பேராண்டி!!...” என சத்தமாக அழைக்க அதில் திடுக்கிட்டு அமர்ந்த ருத்ரன் சின்னாத்தாவை கண்டவன்

‘ அடிப்பாவி நிஜமாலுமே முத்தம் கொடுத்ததை சொல்லி இந்த பாட்டியை கூட்டிட்டு வந்துட்டாளா. சரி அவ சொன்னாலும் இந்த பாட்டிக்கு எங்க போச்சு புத்தி’ என எண்ணிக்கொண்டு கடுப்படைந்த ருத்ரன்

சின்னாத்தாவின் காது பிரச்சனை வீட்டில் உள்ளவர்களால் தெரிந்ததால்,

“ என்ன பாட்டி??” என சற்றே சத்தமாக கேட்டான்.

“ என்ன?? என்ன பாட்டி???. எய்ய சாமி நீ நல்லா மெத்த படிப்பு படிச்சுருக்க அதுவும் வெளி ஊருக்கு எல்லாம் போய் படிச்சுட்டு…..”

“ பாட்டி அது வெளி ஊரு இல்ல வெளி நாடு” என பல்லை கடித்துக்கொண்டு ருத்ரன் கூற

“ ஹான் அதான் பார்த்தியா அம்புட்டு தொலைவுல போய் படிச்சு நீ இப்படி என் பேத்திகிட்ட நடந்துக்கலாமா??” என தன்மையாக சற்றே கொஞ்சல் குரலில் கேட்ட சின்னாத்தாவை கண்டு

‘ ஆத்தா அங்க அம்புட்டு கோவமா வர மாதிரி வந்துட்டு இங்க இவரை கொஞ்சிகிட்டு இருக்க’ என மனதில் எண்ணிக்கொண்டு சின்னாத்தாவை முறைத்ததுக்கொண்டிருந்தாள் தென்றல்.

அதனை கண்டுகொள்ளாது மீண்டும் சின்னாத்தா ருத்ரனிடம்,

“ சொல்லுயா என்ன இருந்தாலும் நீ நடந்துக்கிட்டது தப்புயா” என சின்னாத்தா கூற

‘ ஒரு முத்தம் குடுத்தது தப்பா அப்போ அந்த காலத்துல எப்படி முத்தமே குடுக்கமாட்டாங்களா……’ என மனதில் எண்ணிக்கொண்டு

“ பாட்டி நான் என் பொண்டாட்டிகிட்ட இப்படி நடந்துக்காம???..... சரி அப்போ உங்க வீட்டுக்காரு எல்லாம் இப்படி பண்ணலையா??” என கடுப்புடன் கேட்ட ருத்ரனிடம்

“ இது நல்ல கதையா இருக்கேன் என்ற வீட்டுக்காரு என்னைய செல்லமாக கூட இப்படி செஞ்சது இல்ல தெரியுமா”

‘ எது!!!... அப்புறம் எப்படி பிள்ளைகுட்டி எல்லாம்’ என ருத்ரன் மனதில் எண்ணிக்கொண்டு முழிக்க

அதனை கண்ட தென்றலுக்கு ‘ ஐயோ இவரு முத்தத்தை பத்தி பேசுறாரு ஆத்தா என்னைய அடிச்சுட்டதா இவருக்கு பாடம் எடுக்குது’ என சிரிப்பு வர நமட்டு சிரிப்புடன் கீழே குனிந்துகொண்டாள் அதனை கண்ட ருத்ரனோ

“ நான் என் பொண்டாட்டிகிட்ட எப்படி வேணாம் நடந்துக்குவே நீங்க இடையில வராதீங்க பாட்டி” என கடுப்புடன் சொன்ன ருத்ரனை கண்டு

“ அதுசரி அந்த காலத்துல நீங்க நடந்துகிட்ட மாதிரி நடந்துக்கிட்டா அவனை கோழை மாதிரி பொட்டப்பிள்ளட்ட வீரத்தை காட்டுறான்னு சொல்லுவாங்க. இந்த காலத்துல இப்படி நடந்துக்குறதைத்தான் ஆம்பளைன்னு நினைக்குறிங்க. என்னத்த சொல்ல பொண்ணை கட்டிக்குடுத்துட்டு நாங்க கவலைலையே இருக்கவேண்டியதுதான்” என ருத்ரன் முத்தம் கொடுத்ததை அடித்ததாக எண்ணிக்கொண்டு புலம்பலுடன் சின்னாத்தா அவ்விடத்தைவிட்டு நகர அதில் கடுப்படைந்த ருத்ரன் தென்றலை நோக்கி,

“ இப்போ சந்தோஷமாடி???... நிம்மதியா??.. அப்படி என்ன செஞ்சுட்டேன்னு நீ இந்த கிழவிட்டு ஒப்பாரிவைச்ச அதுவும் விவஸ்தையே இல்லாம என்கிட்டே சண்டைக்கு வருது. கட்டுன பொண்டாட்டிக்கு முத்தம் குடுத்தது ஒரு தப்பா??” என கடுமையாக கேட்ட ருத்ரனை கண்டு பாவமாக முழித்த தென்றல் அமைதியாக இருக்க

“ ஏன்டி ஒன்னு சொல்ல மாட்டேங்குற. சும்மா நேரத்துல உன் வாய்தான் வங்காளவிரிகுடா வரைக்கும் போகுமே இப்போ என்ன பிறவி ஊமை மாதிரி கம்முன்னு இருக்க. சொல்லுடி நான் உனக்கு முத்தம் குடுத்தது தப்பா??....” என மீண்டும் தென்றலை நெருங்கி நின்று கேட்ட ருத்ரனின் விழிவீச்சிலும் அவனின் அருகாமையில் எதோ ஒரு உணர்வு தோன்ற இனம்புரிய ஒரு பரிதவிப்புடன் அமைதியாக நிற்க

“ சொல்லுடி தப்பா……..” என கேட்ட ருத்ரனிடம் அவளின் அனுமதி இல்லாமலையே இல்லை என தலை ஆடியது.

அதனை கண்டு தனக்குள் ஏற்பட்ட சிரிப்பை இதழ்களை கொண்டு மறைத்து இன்னும் தென்றலை நெருங்கி அவளிடம் குனிந்து காதில்,

“ அப்போ மொத்தமும் பண்ணுன தப்பா பொண்டாட்டி…….” என கிசுகிசுப்பாக கேட்ட ருத்ரனை கண்டு அதிர்ந்த தென்றல் அவனின் கண்களில் கண்ட சிரிப்பை கண்டு வேகமாக அவனை தள்ளிவிட்டு அறையைவிட்டு ஓடினாள்.


அதனை கண்டு விரிந்த சிரிப்புடன் ருத்ரன் குளியல் அறைக்குள் நுழைந்தான். அதேநேரம் அறையைவிட்டு வெளியே வந்த தென்றல்

“ என்ன இவரு சும்மா முத்தம் மொத்தம்ன்னு ஏதேதோ பேசுறாரு விவஸ்தையே இல்ல இவருக்கு….” என வாய் திட்டிக்கொண்டிருந்தாலும் மனமோ ருத்ரனையும் அவனின் பேச்சையும் ரசிக்க ஆர்ம்பித்திருந்தது. அதற்கு சாட்சியாக தென்றலின் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.

தென்றலின் முக சிவப்பையும் ருத்ரனின் சிரிப்பு சத்தத்தையும் கண்டு கீழே ஹாலில் அமர்ந்திருந்த மாயாவதி கடுப்படைந்தாள். அவளின் முக கடுப்பை கண்ட லீலாவதி,

“ என்னக்கா ஏன் ஒரு மாதிரி கோவமா இருக்க??....” என கேட்க

“ எல்லாமிந்த ருத்ரனாலதான்….”

“ என்னாச்சுக்கா??...”

“ என்ன என்னஆச்சு??... நீ என்ன லூசாபோய்ட்டியா??... நம்ம திட்டம் எதுவுமே நடக்கல இதுல நாம்ம முன்னாடியே சிரிக்குறது என்ன ஓடுறது என்ன……..” என கடுப்புடன் பேசிய மாயாவதியை கண்டு

“ அக்கா நாம முடிஞ்சளவு பண்ணுனோம். ஆனா ஒன்னும் நடக்கல இந்த ருத்ரன் திடீர்ன்னு பொண்டாட்டி பின்னாடி போவான்னு நாம கனவுல கூட நினைக்கல. என்ன செய்ய அவன் டேஸ்ட் அவ்வளவுதான் விடுக்கா” என லீலாவதி கூற

“ அப்போ அவ்வளவுதான் இனிமே நாம இங்க அடங்கி இருக்கனும்ன்னு சொல்றியா” என கோபத்துடன் கேட்ட மாயாவதியிடம்

“ இப்போவும் நமக்கு நல்லதுதான்…..”

“ என்ன சொல்லு???....”

“ அருணா திரும்பி வந்தாலும் நாம திரும்பி பேசி பேசி துரத்திடலாம். அதேமாதிரி ஜானவியும் அண்ணனும் பேச வாய்ப்பு இல்ல. இதுல இந்த ருத்ரன் பொண்டாட்டியும் ஒரு பட்டிக்காடு. அதையும் நமக்கு அடிமை ஆக்கிடலாம். இப்போ நம்ம பொண்ணுங்க தமையேந்தியும் நித்யவதியும் தான் இங்க இனிமே ராணி அதனால நீ போட்டு மனசை குழப்பிக்காத அக்கா” என லீலாவதி கூறிவிட்டு எழுந்து சென்றுவிட

மாயாவதி மட்டும் முழுக்க முழுக்க மனதில் வன்மத்துடன் அமர்ந்திருந்தாள்.

‘ அது எப்படி நான் இந்த ருத்ரனை நிம்மதியா விடுவேன். சின்னவயசுல இருந்து அப்பா அண்ணா எல்லாரும் என்னைய கேட்டுதான் எதுவும் செய்வாங்க. ஆனா இந்த ஜானவி வந்தப்புறம் எல்லா மாறிடுச்சு . என்னோட முக்கியத்துவம் குறைஞ்சுடுச்சு. இங்க பத்தாததுக்கு இந்த ருத்ரன் என்னைய கால் காசுக்கு கூட மதிக்க மாட்டான்.

அதுல அன்னைக்கு நான் இவன் அந்த தப்பை பண்ணிருப்பான்னு சொன்னதுக்கு அப்படியே அண்ணா என்னைய என்ன திட்டுச்சு. விட்டா அடிச்சுருக்கும் அப்போ ருத்ரன் என்னைய பார்த்து அப்படியே நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சான் அப்படியே எனக்கு அவனை அங்கையே கழுத்தை பிடிக்கனும்போல வெறி. அந்த வெறிதான் அவன் வாழ்க்கைல விளையாட தூண்டுச்சு. ஆனா நான் அவன்கிட்ட தோத்துப்போறதா இல்ல.

அப்படி நடக்க விட மாட்டேன் இன்னைக்கு என்ன பண்றேன்னு பாருங்க” என மனதில் நினைத்துக்கொண்டு ஆத்திரமாக ஒரு சதி திட்டம் போட்டார்.

காலை உணவுக்கு குடும்பத்தினர் அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜானவி அனைவர்க்கும் உணவு பரிமாற ஆரம்பிக்கையில் வேகமாக தனது அறையில் இருந்து வந்தாள் தென்றல்.

அதனை கண்டு, “ தென்றல் மெதுவா வா. ஒன்னும் தாமதமாகல சரியா??” என ஜானவி தென்றலை பார்த்து கூற

“ சரிம்மா”

“ சரி எங்க உங்க ஆத்தா??...”

“ அவுங்க மேலுக்கு சுகமில்லைன்னு சாப்பாடு வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. மதியம் சாப்டுக்குறாங்களாம்” என தென்றல் கூற

திருவாசகம், “ அப்போ உங்க அத்தை மாமா எங்கமா??” என பரிவுடன் கேட்க

இத்தனை நாளில் இரண்டு மூன்று முறை பேசிய திருவாசகம் தீடீரென கேட்ட கேள்வியில் பதட்டத்துடன் ‘ ஐயோ இவரு என்னமோ கேட்டாரு நாம சரியா கவனிக்கலையே’ என முழிக்க ஆரம்பித்தாள்.

அதனை கண்ட ஜானவி, “ உங்க அத்தை மாமா இன்னேரத்துக்கு அதிகாலையிலே ஏறுன பஸ்க்கு ஊருக்கு போயிருப்பாங்க. என்ன தென்றல்??” என கணவனின் கேள்விக்கு மறைமுகமாக ஜானவி கூறிவிட்டு தென்றலிடம்

“ ருத்ரன் பக்கத்துல உட்காரு தென்றல் நான் இன்னைக்கு பரிமாறுறேன்” என கூறி ருத்ரனின் அருகில் இருந்த நாற்காலியில் அமர சொல்ல

“ இல்லம்மா நான் எப்பவும் போல உங்களுக்கு உதவிட்டு சாப்ட்டுக்குறேன்” என மறுக்க ஆரம்பித்தாள் தென்றல். அதனை கண்டு ஜானவி மறுத்து எதோ கூற வருகையில் இடைபுகுந்த லீலாவதி,

“ ஏன் அண்ணி அவதான் பரிமாறுறன்னு சொல்லறால்ல பண்ணட்டும் விடுங்க. இத்தனை நாள் வேலைக்காரியா இருந்துட்டு தீடீர்ன்னு உரிமைக்காரின்னா அவளுக்கும் மாற கொஞ்சம் காலம் ஆகும்ல” என குத்தலாக கூற

அதனை கண்ட ருத்ரன்,

“ அப்போ நீங்க என்ன சொல்லவரிங்க??.... இத்தனை வருசமா எங்க அம்மா தான் இங்க பரிமாறுறாங்க. அப்போ அவுங்க இங்க வேலைக்காரியா??” என முறைப்புடன் கேட்க

திருவாசகமும் லீலாவதியிடம்,

“ லீலா பேசாம சாப்புடு. ஆனா மறக்காம நியாபகம் வச்சுக்கோ அந்த பொண்ணு இந்த வீட்டு சின்ன மருமகள் அதுக்குண்டான மரியாதையை எல்லாரும் கண்டிப்பா குடுத்தே ஆகணும். இத்தனைக்கும் நாம தேர்ந்தெடுத்த பொண்ணு அது மனசு குறைபாடுற மாதிரி யாரும் நடக்க கூடாது” என கூறிக்கொண்டிருக்கையில்

“ அப்போ அவள் மட்டும் நம்ம கஷ்டப்படுற மாதிரி நடக்கலாமா??” என மாயாவதி இடைபுகுந்து கேட்க

“ என்ன சொல்ற??” என திருவாசகம் கேட்க

முதல் நாள் இரவு சின்னாத்தா தென்றல் ருத்ரனின் கடந்தகாலத்தை கூறிக்கொண்டிருக்கும்போது அவ்வழியே வந்த மாயாவதியும் அவர்கள் பேசியது முழுவதையும் கேட்டுவிட அதைவைத்து இன்றைய பிரச்சனையை ஆரம்பித்திருந்தார்.

“ சொல்லு மாயா என்ன கஷ்டப்படுத்துச்சு அந்த பொண்ணு??” என திருவாசகம் கேட்க.

“ என்ன கஷ்டமா எல்லா கஷ்டமும் இவளாலதான் ருத்ரன் மூணு வருசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணுக்கு உதவி செஞ்சான்ல, அதோட அந்த பொண்ணுகூட சாட்சி சொல்ல வரலைல. அது வேற யாரும் இல்ல இந்த தென்றல் தான்” என மாயாவதி கூறிமுடிக்க இந்த விஷயம் தெரியாதவர்கள் சற்றே அதிர்ச்சியுடன் தென்றலை நோக்கினர்.

தென்றலோ குற்ற உணர்வுடன் தலையை குனிந்து கலங்கிய விழிகளை சிமிட்டிகொண்டிருந்தாள். அப்பொழுது வேகமாக எழுந்த ருத்ரன் “ தென்றல்” என உரக்க அழைக்க.

அந்த சத்தத்தில் நிமிர்ந்த தென்றலை நோக்கி,

“ நம்ம ரூம்ல என் செல் இருக்கு எடுத்துட்டு வா” என கடினத்தன்மையுடன் கூற

தென்றலும் வேகமாக அவர்கள் அறைக்கு ஓடினாள். தென்றல் சென்றவுடன் “ ஹ்ம்ம் இப்போ சொல்லுங்க ஆமா தென்றலுக்கு உதவுனது நான்தான். அதோட அவள் அன்னைக்கு சாட்சி சொல்லாததுக்கு காரணமும் தெரியும் அவள் பெயர் இதுல வரக்கூடாதுன்னு நான் பண்ணுன வேலையும் இங்க இருக்குறவங்களுக்கும் தெரியும். இப்போ உங்க நோக்கம் என்ன தென்றலை அசிங்க படுத்தணுமா??.......

அவளை பத்தி பேச இங்க யாருக்கும் உரிமை இல்ல என் பிரச்சனை என் பொண்டாட்டி எல்லாம் நான் பார்த்துக்குறேன் இதுல உங்க அறிவுரை எல்லாம் தேவை இல்ல கொஞ்சம் ஒதுங்கியே இருங்க இல்ல…..” என கடுமையாக ருத்ரன் கூறிமுடிக்க

“ என்ன தேவை இல்லையா??.... நான் ஒதுங்கி இருக்கணுமா???.... இது என் அண்ணன் குடும்பம் நான் பொண்ண குடுத்துருக்கேன் என் மாப்பிள்ளைவீடு.
அதுவும் நான் ரொம்ப இக்கட்டான சூழ்நிலைல என் பொண்ணை குடுத்து என் அண்ணன் வீடு மரியாதையை காப்பாத்திருக்கேன்.

எனக்கு எல்லா உரிமையும் இருக்கு இங்க. இதோ இங்க இருக்காளே உங்க மூத்த மருமக அவ புருசனோட கோச்சுக்கிட்டு அவ அம்மா வீட்டுக்கு போனா. இன்னொருத்தி பட்டிக்காட்டு பட்டிக்காட்டு நன்றிகெட்ட ஜென்மம். இதோ இந்த நித்தி முதல்ல ருத்ரனை கட்டிக்க சம்மதம்ம்ன்னு சொன்னா அப்புறம் அவனுக்கு முடியலைன்னு சிம்மனை கட்டிக்கிட்டா.

ஆனா என் பொண்ணு நான் சொன்ன வார்த்தைக்கு மரியாதையை குடுத்து பிடிக்குதோ இல்லையோ இந்த வீட்டு மருமகளாகிட்டா” என மாயாவதி கோவத்தில் வார்த்தைகளை விட

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர் ஆனால் யாரும் நல்ல மனநிலையில் இல்ல என்பதை அனைவரின் முகமும் காட்டியது.

லீலாவதிக்கு தன் அக்கா சொன்ன தன் மகள் நித்யவதி மீதான குற்றச்சாட்டை ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அனைத்தையும் தாங்கள் செய்து விட்டு இப்பொழுது பழியை தன் மகள் ஏற்பதை நினைத்து வருந்தினார். அந்த கோவம் மாயாவதி மீது திரும்பியது. அப்பொழுது ஏதோ ஒன்றை பேச முற்பட்ட லீலாவதியை கண்ட ருத்ரன்

“ சரி அப்போ எல்லாத்தையும் இன்னைக்கு பேசி முடிச்சுடலாம். உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கு. இங்க அப்படி எவ்வ்வ்வ்வளவு நல்லது பண்ணிருக்கீங்க இந்த குடும்பத்துக்குன்னு எல்லாத்தையும் பேசி தீர்த்துக்கலாம்” என கூறி சாப்பிடாமல் ருத்ரன் எழ

“ ருத்ரா முதல்ல சாப்புடு. மீதத்தை அப்புறம் பேசிக்கலாம்” என ஜானவி ருத்ரனை தடுக்க

“ இல்லமா இப்போ பசிக்கல நான் ஹால்ல இருக்கேன் எல்லாரும் சாப்பிட்டவுடன் பேசிட்டு சாப்ட்டுக்குறேன்” என ருத்ரன் கூறிவிட்டு ஹாலிற்கு செல்ல அவனை தொடர்ந்து யாரும் சாப்ப்பிடும் மனநிலை இல்லாததால் மாயாவதி தமயந்தியை தவிர அனைவரும் ஹாலிற்கு சென்றனர்.

மாயாவதி தமயந்தியை கண்டு “ தமு நீ நல்லா சாப்பிடு வயித்தில பிள்ளை இருக்குல்ல சாப்பிட்டு வா நான் அங்க எல்லாரையும் ஒரு வழி ஆக்கி வைக்குறேன்” என மாயாவதி கூறிவிட்டு ஹாலிற்கு சென்றார்.
 
அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க பொதுவாக எழுந்த ருத்ரன்,

“ முதல்ல ஒன்னு சொல்லிகிறேன். இங்க யாரும் யாருடைய தனிப்பட்ட விஷயத்தையும் பேச வேணடாம். அதாவது பொண்டாட்டி படிக்காதது பொண்டாட்டி கோச்சுக்கிட்டு அம்மா வீட்க்கு போறது கல்யாணத்துக்கு முன்னாடி வேற மாப்பிள்ளை பார்க்குறது இது எல்லாம் அவுங்க புருஷன் பொண்டாட்டி பேசிக்குக்குவாங்க அதுல யாரும் தலையிட வேண்டிய அவசிய இல்ல அது பெத்தவங்களா இருந்தாலும் சரி. அப்புறம் மாறா அண்ணா….” என அவன் அமர்ந்திருந்த சோபாவை நோக்கி திரும்பிய ருத்ரன் “ அம்மா……..” என எதோ கூற முற்படுகையில்

“ நில்லு நீ என்ன கேட்க போறன்னு தெரியும் அம்மாகிட்ட ஏன் இத்தனை நாலு பேசல. இன்னுமா அம்மா மேல கோவமா இருக்கன்னுதானே. ஆனா….” என மாறவர்மன் வழக்கம் போல அவனே முடிவு செய்து பேச ஆரம்பிக்க கடுப்படைந்த ருத்ரனோ

“ டேய்!!.... முந்திரிக்கொட்டை…. அவசரக்குடுக்க!!..” என கத்த அதில் மாறவர்மன் அதிர்ந்து தன் தம்பியை கண்டான். மாறவர்மனின் கண்களில் ‘ நீயா??!!.... நீயா!!!...??... என்னைய இப்படி பேசுனது’ என்ற கேள்வி இருக்க அதனை மற்ற இரு சகோதரர்களும் கண்டாலும் எதுவும் கேளாது அமைதியாக ருத்ரனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

ஜானவி மட்டும் “ ருத்ரா…” என சத்தமாக அழைக்க

“ அம்மா நீங்க கொஞ்சம் சும்மா இருங்க. இவனுக்கு….. இன்னைக்கு ஒரு வழி பண்ணுறேன்” என மாறவர்மனை பார்த்துக்கொண்டே கூற அதில் மாயாவதி கடுப்படைந்து

“ ருத்ரா நீ என் மருமகனை பத்தி ஒன்னும் சொல்ல வேணாம். அது என்ன கொஞ்சம் கூட அண்ணன்னு மரியாதை இல்லாம பேசுறது” என எகிற

“ நீங்க நல்லா பார்த்துக்கோங்க அவன் அண்ணனையே மதிக்கமாட்டேன்குறான். அப்புறம் அத்தைன்னு மட்டுமா பார்க்க போறான். பேசாம உட்கார்ந்து என்ன சொல்றான்னு கவனிங்க. எங்க அப்பாவே கம்முன்னு இருக்காங்க. உங்களுக்கு என்ன??” என சிம்மவர்மன் தீடிரென கடுபடிக்க

அதில் அதிர்ந்து மாயாவதி முணுமுணுப்புடன் அமைதியானார். இருந்தாலும் இவன் என்ன இன்னைக்கு இம்புட்டு பேசுறான் என எண்ணினார். அவர் எங்கே அறிவார் நித்யவதியை பேசியதற்கு சிம்மவர்மன் அவர்மீது செம கோவத்தில் இருப்பதை.

“ என்ன ருத்ரா??” என பாவமாக கேட்ட மாறவர்மனிடம்

“ என்ன என்ன ருத்ரா??. நான் என்ன சொல்லவந்தேன் என்ன கேட்கவந்தேன்னு ஒண்ணுமே தெரிஞ்சுக்காம நீயா கேள்வி கேட்டு நீயா பதில் சொல்லுற. நீ என்ன முற்றும் தெரிந்த ஞானியா??... நீயா கேள்வி கேட்டு நீயா பேசணும்ன்னா போய் செவுத்துக்கிட்ட பேசு.

செவுருதான் எதுவும் பேசாது நீயா எதாவது கற்பனை பண்ணி பேசிக்கலாம்” என ருத்ரன் திட்ட

“ ஏண்டா??” என மாறவர்மன் சற்றே கோவம் கலந்து கேட்க

“ ஏன் சாருக்கு கோவம் வேற வருதோ??. என்ன சொல்லவராங்கன்னு கேட்க பொறுமை இல்லாம நீவாட்டுக்கு முடிவு பண்ணி பேசிட்டே போவ. கொஞ்சமாது உனக்கு மூளை இருக்கா மூளை கெட்டவனே” என ருத்ரன் மீண்டும் திட்ட இடைபுகுந்த மாறவர்மனோ,

“ டேய்!!.. ருத்ரா நீ இன்னும் கேவலமா அசிங்க அசிங்கமா கூட திட்டிக்கோ. தயவு செய்து எதுக்கு திட்டுறன்னு சொல்லிட்டு திட்டுடா மனசு கேட்க மாட்டேங்குது” என மாறவர்மன் பாவமாக கெஞ்ச

“ ஏண்டா அதான் உனக்கு எட்டறிவு ஒம்பதறிவு எல்லாம் இருக்கே அப்புறம் என்ன அத்தவச்சு யோசி” என ருத்ரன் மீண்டும் கோவமாக கூற மாறவர்மன் பாவமாக நின்றுகொண்டிருந்தான்.

அதனை கண்டு மேலும் கோவமான ருத்ரன்,

“ உன்னோட இந்த அவசரபுத்தி குணத்தாலதான் இன்னைக்கு அம்மாவுக்கு இந்த நிலைமை” என மாறவர்மன் கல்யாணத்தில் நடந்த குளறுபடிகளை ருத்ரன் கூறிமுடிக்க அங்கு அனைவரும் அதிர்ந்து ஜானவியை பார்த்தனர்.

மாறவர்மனோ, ‘ அப்போ அன்னைக்கு அவ என்னைய பார்க்க வந்தது அவ காதல் விஷயத்தை சொல்லவா நான்தான் வழக்கம் போல பேசவிடாம பண்ணி சொதப்பிட்டேன்’ என மாறவர்மன் எண்ணிக்கொண்டிருக்கயில் தொடர்ந்த ருத்ரன்

“ அதோட அம்மா ஏன் அன்னைகு கல்யாணம் பண்ணிவச்சாங்க??.. அதுவும் சொந்தபையன் கலயாணம்ன்னுகூட பார்க்காம அதானே உங்க எல்லார் மனசுலையும் இருக்குற கேள்வி.

நல்லா கேட்டுக்கோங்க பொண்ணு காதல் விஷயத்தை நம்மகிட்ட மறைச்சு மாமா அவரு பொண்ணை கட்டி வைக்க பார்த்தாருன்னா நிச்சயம் பொண்ணு அன்னைக்கு ஓடிருந்தாலும் கவுரம் மானம்ன்னு யோசிச்சு சபையிலே பொண்ணு காதல் விசயத்தி சொல்லிருக்க மாட்டாரு.

அப்போ மத்தவங்க பார்வைக்கு மாறவர்மன்கிட்ட எதோ பிரச்சனை அதான் சொந்த மாமா பொண்ணே கல்யாணம் வேணாம்ன்னு ஓடிருச்சுன்னு பேசி நம்ம பையனை அசிங்க படுத்துவங்களேன்னும்;

ஒரு நல்லா காதல் ஜெயிக்கணும்ன்னுதான் அம்மா அந்த கல்யாணத்தை பண்ணி வச்சாங்க. உங்க யாருக்கு அம்மாகிட்ட என்ன நடந்துச்சு கேட்க நேரமும் இல்ல, மனசும் இல்ல. உங்க சூழ்நிலையை பயன்படுத்தி அவுங்க மகளையும் கல்யாணம் பண்ணிவச்சுட்டு பெரிய தியாகம் பண்ணுன மாதிரி பேசிகிட்டு இருக்காங்க.

நீங்க எல்லாரும் பார்த்திக்கிட்டு இருக்கிங்க. எனக்கு ஒரு விஷயம் புரியல மாறா அண்ணா இவ்வளவு பண்ணுன அம்மா உனக்கு ஒரு நல்லா வழி யோசிச்சுருக்க மாட்டாங்களா??.... அதுவும் உனக்கு என்ன குறை அவசரமா கிடைச்ச பொண்ணு போதும்ன்னு திருமணம் முடிக்க.

கடைசியா ஒன்னு எனக்காவது சுயநினைவு இல்லாதப்பதான் கல்யாணம் நடந்துச்சு. ஆனா உனக்கு சுய அறிவு இல்லாம கல்யாணம் நடந்துருக்கு. என்னத்த சொல்ல இனிமேயாவது யாரோ பெரிய தியாகம் பண்ணுனமாதிரி பேசுனா பொறுத்துட்டு போகாதா.

என்ன உன்னோட சூழ்நிலையை பயன்படுத்திருக்காங்களே தவிர்த்து யாரும் தியாகம் பண்ணல” என மாறவர்மனிடம் கூறிவிட்டு திருவாசகத்தையும் ஒரு பார்வை பாத்துட்டு தனது அறைக்கு சென்றுவிட்டான் ருத்ரன்.

அனைவரும் அவ்விடத்தைவிட்டு நகர மாயாவதி எதுவும் செய்ய முடியாத நிலையில் வெளியே சென்றுவிட. மாறவர்மன் ஜானவியை நெருங்கி மண்டியிட்டு ஜனாவின் இடையை கட்டிக்கொண்டு,

“ அம்மா என்னைய மன்னுச்சுருங்கமா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்கள இத்தனை நாள் ரொம்ப படுத்திட்டேன்ல. சாரி ம்மா,…… சாரி ம்மா….” என கண்ணீருடன் கூறிக்கொண்டிருந்த மாறவர்மனை ஜானவியும் கண்ணீருடன் அனைத்து ஆறுதல் கூறி சமாதானம் செய்து ஒருவழியாக அனுப்பி வைத்தபின்,

கண்ணீரை துடைத்துக்கொண்டு திரும்பிய ஜானவி அங்கு அதிர்ந்த தோற்றத்துடன் கலங்கிய விழிகளுடன் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த திருவாசகத்தை கண்டு ஜானவி முறைத்துவிட்டு அங்கிருந்து நகர பார்க்க,

“ ஜா…. ஜானு…” என மெலிதாக ஒலித்த திருவாசகத்தின் குரலில் அங்கேயே நின்று திரும்பி பார்த்த ஜானவியை நெருங்கிய திருவாசகம்,

“ ஜானும் என….எனக்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்குற தகுதிகூட இல்ல” என திருவாசகம் பேசிக்கொண்டிருக்கையில்

“ ஆமா உங்களுக்கு மன்னிப்பு கேட்குற தகுதிகூட இல்லைன்னு தெரியும். எப்போ என்னைய நம்பாம இத்தனை நாள் பேசாம இருந்திங்களோ அப்படியே இருங்க நம்மக்குள்ள ஒண்ணுமே இல்ல” என ஜானவி கோவமாக கூறிவிட்டு நகர

“ அச்சச்சோ இவ என்ன இவ்வளவு கோவமா இருக்கா போற போக்க பாத்தா பிள்ளைகள் எல்லாம் குடும்பமாகி இந்த வயசான காலத்துல இவ என்னைய டிவேர்ஸ் பண்ணிடுவா போலையே. இல்ல இல்ல திரு எப்படியாவது ஜானவியை சமாதானம் பண்ணியே ஆகணும். அடியே ஜானு குட்டி இனிமே பாரு இந்த திருவோட காதல் திருவிளையாடலை” என எண்ணிக்கொண்டு அவரது அலுவலை கவனிக்க சென்றார்.

அதே நேரம் ருத்ரன் தனது அறையில் கட்டிலில் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த தென்றலின் அருகில் அமர அதில் திடுக்கிட்டு நகர பார்த்த தென்றலின் கையை பிடித்து தனது அருகில் அமர் வைத்த ருத்ரன்,

“ எதுக்கு இப்படி பயப்புடற என் பொண்டாட்டி பக்கத்துல என்னைய தவிர யாரு இப்படி உட்காரமுடியும். சரி என்ன அப்படி யோசிச்சுகிட்டு இருந்த தென்றல்”

“ இல்ல நீங்க போன் எடுத்துட்டு வர சொன்னிங்க”

“ ஆமா”

“ ஆனா போன் இங்க எங்கையும் இல்ல”

“ எப்பிடி இருக்கும் அதான் என்கிட்டே இருக்கே” என் ருத்ரன் சாதாரணமாக கூற

“ அப்போ பொய் சொன்னிங்களா வச்சுகிட்டே என்னைய தேடவிட்டுருக்கீங்க” என சற்றே கோவமாக கேட்ட தென்றலிடம்

“ ஆமா நீ கொஞ்ச நேரம் ரூம்ல இருன்னு சொன்னா கேட்பியா அதான் வேலை குடுத்து அனுப்புனே. சரி சரி எனக்கு பாலும் பழமும் எடுத்துட்டுவா காலைல சாப்பிடாதது பசிக்குது” என கூற தென்றலும் சரி என்ற தலை அசைப்புடன் நகர பார்க்க

“ ஏய் நில்லு நீயும் சாப்டலைல உனக்கு ஏதாவது எடுத்துட்டுவா” என ருத்ரன் கூற

“ எனக்கு ஒன்னும் வேணாம் இப்போ பசிக்கல” என தென்றல் கூற

“ இப்படி சாப்பிடாம பட்னி இருந்தா எப்படி இந்த ருத்ரவர்மன் வாரிசுகளை சுமப்பாய் தெம்புவேணாம். அதனால போய் ரெண்டு பேருக்கு சாப்பாடு எடுத்துடுவா” என ருத்ரன் கூற

ருத்ரனின் வாரிசு என்ற சொல் தென்றலை நாணமடைய செய்ய அதனால் வந்த முக சிவப்பை மறைக்க முயன்றவாறே “ இல்ல எனக்கு பசிக்கல எனக்கு வேணாம்” என தென்றல் கூற

“ நீ உனக்கு எடுத்துட்டு வரலைன்னா எனக்கு எடுத்துட்டு வரதை நானே ஊட்டிவிடுவேன். அதுதான் உன் ஆசைன்னா மாமனும் ரெடியா இருக்கேன் செல்லக்குட்டி” என கூற அங்கிருந்து ஓடினாள் தென்றல்




mistakes iruntha sollunga friends change pannituren


thanks for the supporting :love: :love: friends
 
Last edited:
Top