Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(27) prefinal part 2

Advertisement

niranjana subramani

Well-known member
Member
PART 02

வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். தனது அறையில் பழையதை நினைத்துக்கொண்டிருந்த மாறவர்மனின் தோளை தொட்ட தமயந்தி,

“ என்ன அத்தான் என்ன ஒரு மாதிரி இருக்கீங்க??...” என மாயாவதி மூலம் அனைத்தையும் தெரிந்துகொண்டே ஒன்னும் தெரியாததை போல கேட்டாள்.

அதற்கு ஒரு பதிலையும் கூறாது அமைதியாக மாறவர்மன் அறையின் ஓரத்தில் இருந்த பால்கனியில் நின்றுகொண்டு வான்வெளியை வெறித்துக்கொண்டிருதான். அதனை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்தாள் தமயந்தி.

திருமணம் முடிந்த இத்தனை நாட்களில் ஒரு நாளும் மாறவர்மன் அவளை உதாசீனப்படுத்தியதோ இல்லை கோவமாக ஒரு வார்த்தையோ ஏன் ஒரு பார்வை கூட பார்த்தது கிடையாது.

ஏன்னெனில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருவருக்கும் இடையே வருவது போல் இருந்தாலோ இல்லை காரியம் எதுவும் ஆக வேண்டும் எனில் இவள் எதோ மாறவர்மனுக்கு தக்க சமயத்தில் உதவி திருமணம் செய்து அவனின் மரியாதையை காப்பாற்றியதாக சொல்லிகாட்டிக்கொண்டே இருப்பாள்.

அதனால் அவனும் சில நேரங்களில் குற்றஉணர்வாகவும் நன்றி உணர்ச்சியுடனும் சரி சரி என விட்டுகுடுத்துவிடுவான் ஆனால் இன்று அவ்வாறு பேசமுடியாது என்பதை மாயாவதி இன்று ருத்ரன் பேசியதை கூறியது மூலம் உணர்ந்துகொண்டாள்.

அடுத்து எவ்வாறு மாறவர்மனை தனக்கு தலை ஆட்டவைப்பது என தீவிர சிந்தனையுடன் மீண்டும் மாறவர்மனை நெருங்கினாள்.

“ அத்தான் உங்களைத்தான் என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்??” என மெதுவாக கேட்க

“ ஹ்ம்ம் ஒன்னும் இல்ல தமு இன்னைக்கு நம்ம கல்யாணத்தப்போ நடந்த விஷயங்களை ருத்ரன் சொன்னான். என்னால நான் பண்ணுன தப்பை ஜீரணுச்சுக்கவே முடியலை . தேவை இல்லாம அம்மா மேல கோவப்பட்டு இத்தனை நாள் அவுங்க கஷ்டப்படுத்திருக்கேன். அதான் ஒரு மாதிரி குற்றஉணர்வா இருக்கு”

“ ஓ!!....
அப்போ நம்ம கல்யாணமும் உங்களுக்கு குற்ற உணர்வை குடுக்குதா அத்தான்” என அவன் மனதில் இருப்பதை அறிய தமயந்தி அவளறியாமல் வினவ

அதில் அதிர்ந்த மாறவர்மன் தமயந்தியை நெருங்கி,

“ ஏய்!!... ச்சீ!... லூசு என்ன பேசுற எனக்கு அம்மாவை கோச்சுக்கிட்ட குற்ற உணர்வுதான் தவிர நீ என் வாழ்க்கையில வந்தது இல்ல தமுமா. நீ எதுக்காக என் வாழ்க்கைக்குள்ள வந்தியோ ஆனா உன்னோட இருக்குற என்னோட வாழ்க்கைல ரொம்ப சந்தோசமா இருக்கேன். இப்போ குட்டி வேற வரப்போகுது நீ எதையும் போட்டு யோசிக்காத.

உனக்கு தெரியுமா நீ என்கிட்டே ஏதாவது காரியம் சாதிக்கணும்ன்னா நம்ம கல்யாணத்தை சொல்லிக்கிட்டு உன் வாழ்க்கையை எனக்காக பணயம் வச்சதா அடிக்கடி சொல்லிக்காட்டுவ. அப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.

இருந்தாலும் அதனை கடந்து வர பழகிட்டேன். ஏன்னா உன்னைய மாதிரி தேவதை என் வாழ்க்கைல வரணும்ன்னுதான் நான் நிறைய கஷ்டபட்டுட்டேன்னு நினைச்சுக்குவேன். என்ன பேசாம உன்னைய நான் காதலிச்சே கல்யாணம் பண்ணிருக்கலாம். இப்போ இவ்வளவு கஷ்டம் வந்துருக்காது” என தமயந்தியின் நெற்றியை முட்டிகூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான் மாறவர்மன்.

ஆனால் தமயந்தி ஒரு வித குற்ற உணர்வில் தத்தளித்தாள் தமயேந்தியை பொறுத்தவரை இந்த திருமணம் ஒரு வித ஒப்பந்தம் தான். ஏன்னெனில் அன்று மாறவர்மன் திருமணம் நின்ற போது மாயாவதி ‘ மாறவர்மனை திருமணம் செய்தால் இந்த வீட்டின் அத்தனை அதிகாரமும் உனக்குத்தான்’ என கூறி சம்மதிக்க வைத்தார்.

அதனால் ஒரு வித கர்வத்தோடுதான் மருமகளானால் இந்த வீட்டிற்கு. அவளை பொறுத்தவரை தானே இந்த ஒட்டுமொத்த சொத்துக்களுக்கும் அதிகாரம் படைத்தவள் அதற்கு பதில் இந்த திருமணம் என்று மனதில் உருபோட்டுக்கொண்டுதான் மணமேடை ஏறினாள். அதற்கு பிறகும் பேசி பேசியே மாறவர்மனை குற்றஉணர்விலும் நன்றியுணர்விலும் வைத்திருந்தாள். அப்படித்தான் இதோ சென்ற நிமிடம் வரை நினைத்துக்கொண்டிருந்தாள்.

ஆனால் இல்லை இல்லை நான் இதுவரை அமைதியாக சென்றது காரணம் உன் மீது கொண்ட அன்பு பாசம் காதல் என்று கூறிவிட்டு சென்ற மாறவர்மன் மீது முதல் முறையாக காதல் துளிர்த்தது.
அந்த காதலுக்கு மனம் அடிமைகயாக ஆசை விளைந்தது.

காரில் தென்றலின் கையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த ருத்ரனிடம்,

“ மாமா இப்போ வீட்டுக்கு போறோமா??”

“ இல்ல தென்றல் முக்கியமானவங்க அதுவும் உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்கல பார்க்க போறோம்”

“ அது யாரு மாமா சென்னைல எனக்கு வேண்டப்பட்டவங்க??” என யோசனையுடன் கேட்ட தென்றலிடம்

“ ஹ்ம்ம் பார்க்க தானே போற” என கூறி ஒரு பூங்காவிற்குள் சென்றனர். அங்கு நின்றுகொண்டிருந்த ராணியை கண்டதும் வேகமாக ஓடி சென்று தென்றல் அணைத்துக்கொண்டாள் கலங்கிய விழிகளுடன்.

பின் இருவரும் நலவிசாரிப்புகள் முடிய அருகில் நின்றுகொண்டிருந்த மருதை கண்டும் தனது சந்தோசத்தை முகத்தினில் காட்டினாள். ராணியின் பிரச்சனை முடிந்தவுடன் ராணியின் குடும்பத்தை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டான் ருத்ரன்.

ராணியின் பெற்றோர்களுக்கு சென்னையில் இவர்களின் factory இல் வேலை போட்டுக்கொடுத்து ராணியின் படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டான். முதலில் நல்ல மனநல மருத்துவரிடம் மருத்துவம் பார்த்து அந்த நிகழ்வில் இருந்து வெளிவந்து இன்று நன்றாக படித்து B.sc political science முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறாள்.

அதே போல் மருதுவும் ருத்ரனின் உதவியுடன் BL second year படித்துக்கொண்டிருக்கிறான் என்ற தகவலை அறிந்து தென்றல் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். பின் சிறுது நேரம் பேசிவிட்டு ஒரு நாள் வீட்டிற்கு வருமாறும் தானும் அவர்களின் வீட்டிற்கு வருவதாகவும் கூறிவிட்டு ருத்ரனும் தென்றலும் தங்கள் வீட்டிற்கு கிளம்பினர்.

“ ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா. அதுவும் ராணி படிச்சு முடிச்சு பெரிய போலீஸ் ஆகணும்ன்னு சொன்னாள்ல அது அவ்வளவு சந்தோசமா இருக்கு.
வாழ்க்கைல அவளுக்குன்னு ஒரு இலட்சியத்தை வச்சுக்கிட்டு அதை நோக்கி பயணிக்குறது கூட ஒரு வித சந்தோசம் இல்ல மாமா”

“ ஹ்ம்ம் அது என்னவோ உண்மைதான். ஏன் தென்றல் நீ வேணும்ன்னா படிக்குறியா. உனக்கு நான் உதவுறேன்”

“ ஆத்தி அதெல்லாம் வேணாம் இப்போ எதுக்கு என்னைய கோர்த்து விடுறிங்க”

“ ஏண்டி படிக்க சொல்றது ஒரு குற்றமா??”

“ ஹ்ம்ம் என்னைய பொறுத்தவரைக்கும் அது மிக பெரிய தவறு”

“ அது சரி அப்போ இந்த மக்கு பொண்டாட்டி இப்போதான் சொல்லுச்சு வாழ்க்கைல நமக்குன்னு ஒரு லட்சியம் இருந்தா நல்ல இருக்கும்ன்னு. அப்போ உனக்கு லட்சியம் வேணாமா??”

“ எனக்கு இல்லைன்னு யாரு சொன்னா மாமா??”

“ அப்போ என் செல்ல பொண்டாட்டியோட லட்சியம் என்னவோ??....” என ருத்ரன் நக்கலாக கேட்க

“ ஹ்ம்ம் என் மாமனை காதலிச்சு பிள்ளைகுட்டி பெத்து எங்க வம்சத்தை பெருசாக்க வேணாமா” என தென்றல் சிறு சிரிப்புடனும் வெட்கத்துடனும் கூற

“ வாறே வா. காலைல காதலை சொன்னதுக்கு இப்போவே குழந்தை குட்டின்னு என் செல்லக்குட்டி ரொம்ப வேகமாக இருக்கே. ஆனா படிக்க சொன்னதுக்கு இப்படி பயந்து நீ என்னைய கவுக்க பார்த்த பார்த்தியா நீ அங்க இருக்க” என மீண்டும் நக்களுடன் கூறிய ருத்ரனை கண்டு

“ ஹம்ம்ஹும்…..” என தலையை திருப்பி கொண்டாள் தென்றல்.

ருத்ரனிடம் எப்படி இவ்வளவு வேகமாக நெருங்கினோம் என்று தென்றலுக்கு அவளை நினைத்தே ஆச்சரியம் இருந்தாலும் இந்த மாற்றம் கூட பிடித்திருந்தது. பின் பேச்சுகளுடனே வீட்டிற்குள் நுழைந்தனர்.

அந்நேரம் வீடு உறுப்பினர்கள் அனைவரும் ஹாலில் குழுமி இருந்தனர். அவர்களை பார்த்துக்கொண்டு ருத்ரன் நுழைய அவனை தொடர்ந்து தென்றலும் நுழைந்தாள். அப்பொழுது திருவாசகம்,

“ ருத்ரா இப்போ எதுக்கு எல்லாரையும் இங்க இருக்க சொன்னே. எதோ முக்கியமான விசயம்ன்னு சொன்ன” என கேட்டுக்கொண்டிருக்கையில் நடந்துகொண்டிருந்த ருத்ரன் சோபாவில் இடித்துவிட்டு “ ஆஆஆ…..” என்ற அலறலுடன் இடித்த சோபவிலையே அமர தென்றல் வேகமாக ருத்ரனின் கால்களை பிடித்து அடி பட்ட இடத்தை ஆராய அனைவரும் ருத்ரனின் முகத்தில் இருந்த வலியை கண்டு வருந்தினர்.

திருவாசகம் வேகமாக டாக்டர் விஜயனை அழைக்க அவரும் அரைமணி நேரத்தில் வந்தார்.

“ என்ன ருத்ரா இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிட்டு வர அதுக்குள்ள வெளியில சுத்தணுமா” என கடிந்துக்கொண்டு காலுக்கு மருத்துவம் பார்த்துவிட்டு சிறுது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

“ என்ன எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்திருக்கிங்க” என கேட்ட விஜயனிடம்

“ தெரியல ருத்ரன் தான் எல்லாரையும் வர சொன்னான். எதோ முக்கியமான விஷயம் பேசணும்ன்னு. சரி வந்தா அதுக்குள்ள இவன் வரும்போதே இடிச்சுக்கிட்டு எங்க எல்லாரையும் பயமுறுத்திட்டான்” என திருவாசகம் கூற

“ ஓ!!... அப்போ சரி குடும்ப ஆள்களா இருக்கீங்க எதாவது குடும்ப விஷயம் பேசுவீங்க அப்போ நான் கிளம்புறேன்” என கூறி டாக்டர் விஜயன் கிளம்ப எண்ணுகையில்

“ அச்சச்சோ அங்கிள் நீங்க உட்காருங்க முதல்ல நீங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரித்தான் நீங்க ஏன் இப்படி பேசுறீங்க” என கூறி ருத்ரன் விஜயனை அமர சொல்ல அந்த நேரம் ஹர்ஷவர்த்தனன் வீட்டிற்குள் நுழைந்தான்.

அவனை அனைவரும் யாரென நோக்க ருத்ரன் வேகமாக எழுந்து ஹர்ஷாவை வரவேற்றுவிட்டு அவனை அறிமுக படுத்தினான்.

“ இவர் பேர் ஹர்ஷவர்தனன் எனக்கு நடந்த விபத்தை பத்தி விசாரிக்குற private detective”
என ஹர்ஷாவை ருத்ரன் அறிமுக படுத்த

“ என்ன private detective??... எதுக்குடா??....” என மாறவர்மன் கேட்க அனைவரும் அதே கேள்வியுடன் ருத்ரனை நோக்கினர்.

“ எனக்கு நடந்த கொலை முயற்சியை யார் பண்ணுணதுன்னு கண்டு பிடிக்க”
என ருத்ரன் கூறி முடிக்க

“ என்ன கொலை முயற்சியா என்னடா சொல்ற அது விபத்துன்னுதானே போலீஸ் சொன்னாங்க. ஆனா உன்னைய யாரு எதுக்குடா கொல்ல பார்க்கணும்” என திருவாசகம் கேட்க

“ அதுக்கு எல்லாத்துக்கும் நான் பதில் சொல்றேன் சார்” என கூறி ஹர்ஷா ருத்ரனை காண ருத்ரனும் தலையை அசைத்து அவன் தென்றலின் அருகில் அமர்ந்துகொண்டான். ஹர்ஷா அனைவரையும் பார்த்துக்கொண்டு பொதுவாக பேச ஆரம்பித்தான்.

“ சார் விபத்து நடந்த அன்னைக்கு ருத்ரனோட கூட இருந்த பொண்ணு சிந்தியா இறந்தபுரம் ருத்ரன் மயக்கம் அடையறதுக்கு முன்னாடி ருத்ரனோட காரை இடிச்சவன் யாருக்கோ போன் பண்ணி அந்த பொண்ணு இறந்துட்டதாகவும் பையன் ஊயிரோட இருப்பதாகவும் தகவல் சொல்லிருக்கான். அதனால் இது கொலை முயற்சியா இருக்கலாம்ன்னு சொல்லி கருணாகரன் அங்கிள் மூலமா ருத்ரன் என்கிட்டே உதவி கேட்டாரு” என ஹர்ஷா கூற

“ ஆனா போலீஸ் விசாரைணைல இது விபத்துன்னும் வேற ஆதாரமும் கிடைக்கலன்னு சொன்னாங்களே” என சிம்மவர்மன் கூற

“ ஹ்ம்ம் ஆமா சிம்மா சார் நானும் அப்படித்தான் நினைச்சேன். அதனால அந்த லாரி driver விசாரிக்க போனோம். அப்போ சில விசயங்கள் தெரிய ஆரம்பிச்சுச்சு. ருத்ரனோட காரை இடிச்ச வண்டி டிரைவர் ராஜேஷ்.

அவனை பத்தி விசாரிச்சதுல சில விஷயங்கள் தெரிய ஆரம்பிச்சது. ருத்ரன் விபத்து நடந்த ஒரு மாசத்துல ராஜேஷ் மனைவிக்கு இதயகோளாறுக்காக அறுவை சிகிச்சை நடந்துருக்கு. அதுவும் ஒரு ரூபா காசு இல்லாம இலவசமா” என ஹர்ஷா சொல்லி முடிக்க

“ இதுல என்ன சார் இருக்கு??” என ராஜவர்மன் கேட்க

“ இருக்கு சார் இருக்கு. இங்க தான் எல்லாம் இருக்கு. அந்த அறுவை சிகிச்சை எந்த ஹாஸ்பிடல்ல யாரு செஞ்சா தெரியுமா” என கேட்க அனைவரும் அமைதியா இருக்க

“ இதோ இங்க இருக்காரே டாக்டர் விஜயன் இவரோட ஹோச்பிடல்ல இவரே நேரடியா பண்ணிருக்காரு” என ஹர்ஷா கூறிமுடிக்க அனைவரும் விஜயனை கேள்வியுடன் நோக்கினர்.

அனால் விஜயன் சற்றே பதட்டத்துடன் “ அது…. அது… நான் நிறையா பேருக்கு இந்த மாதிரி இலவசமா அறுவை சிகிச்சை பண்ணிருக்கேன்” என கூற

“ ஹ்ம்ம் ஆமா சார் இலவசமா பண்ணிருக்கீங்க ஆனா எல்லாரும் உங்க சொந்தக்காரவங்க. அதே மாதிரி இந்த ராஜேஷ் எப்படி உங்களுக்கு சொந்தம்ன்னு விசாரிச்சேன் அப்போதான் தெரிஞ்சுச்சு. உங்க கார் டிரைவர் மணியோட பெரியப்பா பையன் இந்த ராஜேஷ். அதனால உங்க driver மணியை பிடிச்சு விசாரிச்சேன் எல்லா விஷயமும் தெரிஞ்சுகிட்டேன்” என ஹர்ஷா கூறிமுடிக்க விஜயன் அங்கிருந்து கிளம்ப பார்த்தார்.


thanks for the supporting friends .....

next final episode friends.....
 
Top