Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வானம்பாடி-20

Kala Sathishkumar

Well-known member
Member
பேச்சியம்மா க்கு நம்ம சிவப்பி தான் சரி சோடி.. தங்கம் கல்யாணத்துல தாத்தா அப்பத்தா போட்டோ தான highlight... முத்தம்மா பாட்டிகிட்ட சிக்குனா தாத்தாவை போராடி மீட்ட எங்க வீராங்கனை பேச்சிம்மா 😂😂😂😂😂...
செல்லமுத்துக்கு துரை மேல காதல் இருந்துச்சா.. அப்போ இந்த கொடிவேந்தன், சந்தானம், கபிலன் தனம் எல்லாம் சேர்ந்து செல்லமுத்து சாவுக்கு காரணமா... செல்லமுத்துக்கு என்னவோ பெரிய கொடும நடந்துயிருக்கு. இது தெரிஞ்ச மீனா, செல்வமணி, செல்லம்மா எல்லாம் தாங்குவாங்களா...
ஆத்தா சீலைக்காரி கருப்புசாமி இந்த குடும்பத்தை இந்த சிக்கலுல இருந்து சீக்கிரம் வெளிய கொண்டு வாங்க...
தங்கம் தேவி யாருனு கண்டுபிடிச்சுட்டான் போல...
துரைக்கு வேற அண்ணனா கொலை பண்ண சொன்னது கூட பிறந்த தங்கச்சினு தெரிஞ்சு போச்சு...
பாண்டி குடும்பம், செல்லமுத்து குடும்பம், துரை குடும்பம் எல்லாத்துக்கும் நடுவுல எவனோ போகுந்து இருப்பான் போல...
பல நாள் திருடன் ஒரு நாள் சிக்காமலா போவான்...
சிக்குனாவன் செல்வத்துகிட்டயும், ரெங்கதுரைகிட்டயும் மாட்டி சின்னப்பினம் ஆக போறான்...
எப்பா தினேஷ் எப்போ தான் உன் கல்யாணம்...
 
Last edited:

Novelreader

Well-known member
Member
பேச்சியம்மா சூப்பரா வீட்லயே
live-ஆ சீரியல் காட்டுறாங்களே.

மீனா - பூங்குயில் ஒரு அழகான அன்பின் வெளிப்பாடு. அந்த விதத்தில் மீனா பெற்றோர்களை இழந்தாலும் அதற்கிணையான பாசத்தோடு வளர்க்கும் உறவைப்பெற்ற அதிர்ஷ்டசாலி.

மிகுந்த காதலோடு அன்பிற்கு ஆட்பட்டு "மனைவிக்கு நான் அடிமை" என்ற பட்டத்தை பெருமையோடு சுமக்கும் செல்வமணி வாழ்க! அவரின் தொண்டர்க்கூட்டம் வளர்க!

தனம் - கேரக்டரோட dimension மாறுதே. I couldn't guess so far. ஒரு ஆச்சரியமான திருப்பம்.

ஜெகன் - சாந்தம்மா, அவங்க வீட்டு பெரியவங்க எல்லோரும் super.
Especially சாந்தம்மா என் பொண்ணு என்னோடே இருந்துட்டு போகட்டும் என்று சொல்லறப்ப எனக்கு அந்த கேரக்டர் - ஐ அவ்வளவு பிடிச்சுது.

தம்பி DP! நீ அம்மா - அப்பா பேச்சை தட்டாத நல்ல புள்ளையாவே இருப்பா. சன்னுக்கு ஒரு காலம் வராமயா போகும்.

தங்கம் நிர்மலாவை identify பண்ணிட்டாரே. இப்ப DP- சன்னு கல்யாண பேச்சில் என்ன திருப்பம் வரும்? Curiosity ஏறுது.

இன்னிக்கி எனக்கு பிடித்த ultimate scene ரங்கதுரை - செல்லமுத்து romance தான். ரங்கதுரை அவசரத்தில் ஆத்திரப்பட்டு அவகாசத்தில் அழுது கொண்டிருக்கும் மனுஷன்.

கபிலனோ - ரங்கதுரையோ இல்லை வேற யாரோ? யார் மீனவோட அப்பாவாக இருந்தாலும் கொஞ்சம் அவங்களோட ஜாடையும் மீனாகிட்ட இருக்கும் தானே. நாங்க கண்டுபிடிக்க கூடாதுன்னே நீங்க அதைப்பத்தி சொல்ல மாட்றீங்க.
 
Top