Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ 5

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
சுமதியும் , ரவியும் வீட்டைப் பூட்டி விட்டுக் காருக்கு அருகில் சென்றனர்.
அப்போது ரவியின் அலைபேசி நீண்டதாய் ஒலி எழுப்பியது. மறு முனையில் வெண்ணிலாவின் தந்தை சபாபதி தான் அழைத்து இருந்தார்.
" தம்பி, வெண்ணிலா இன்னும் வீட்டுக்கு வரலை. எப்பவும் நாலரை மணிக்கெல்லாம் கரெக்டா வீட்டிற்கு வந்துடுவா. ஆனா இன்னிக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை, இன்னும் அவளைக் காணோம். ஹாஸ்பிட்டலுக்கு போன் பண்ணிக் கேட்டப்ப, அவங்க டியூட்டி முடிஞ்சவுடனேயே அவ கிளம்பிட்டான்னு சொல்லிட்டாங்க. நான் அவளோட ஃபிரெண்டுங்க வீட்டுக்கு எல்லாம் போன் பண்ணி விசாரிச்சுட்டு இருக்கேன். யாரும் எந்த விதமான சரியான தகவலையும் குடுக்க மாட்டேங்கிறாங்க. இன்னும் ஒரு மணி நேரம், வெயிட் பண்ணிப் பார்த்துட்டு, நான் போலீஸ் ஸ்டேஷன் போய் ஒரு புகார் கொடுத்துட்டு வரப் போறேன். நீங்க இன்னிக்குப் பொண்ணு பார்க்க வர்றதாச் சொன்னீங்க இல்லையா? ,அதான் இந்த விஷயத்தை உங்களுக்குத் தெரியப் படுத்தறதுக்காக போன் பண்ணினேன் " என்று சொன்னார்.
அவர் தனது, மொத்த மனத் தவிப்பையும் தனது குரலுக்குள், சேர்த்துப் பேசியதாக உணர்ந்தான் ரவி.
அத்துடன் அவன் மனத்திலும் பிரளயம் கிளம்பி விட்டிருந்தது. " என்ன சார் சொல்றீங்க? அவ இன்னுமா வீட்டுக்கு வரலை. சார், நான் இன்னிக்கு
ரோகிணி ஹாஸ்பிட்டல்லயே அவளைப் பார்த்துட்டேன். அதோட நான் தான், போரூர் பஸ் ஸ்டாண்டில் அவளை டிராப் பண்ணினேன். நான் அவளை இறக்கி விடும் போது மணி நாலு தானே ஆகியிருந்தது. எப்படி பார்த்தாலும், அஞ்சு மணிக்கெல்லாம் அவ வீட்டுக்கு வந்துருக்கணுமே " என்று கேட்ட அவனது குரலில், அவனது மொத்த மன உணர்வுகளும், கழுவித் துடைக்கப் பட்டிருந்தன.
அவனது ஆழ் மனம் , மீண்டும் தனது செவ்வாய் தோஷத்தின் மீது தான் பழி சுமத்தியது.
' ம், போச்சா இதுவும் அவ்வளவு தானா? முடிஞ்சு போச்சா? ' என்று தனக்குள் அழுது கொண்டவன்,
' ச்சே, நட்ட நடு ரோட்டில ஒரு வயசுப் பொண்ணு காணாமப் போயிருக்கா. அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை. இந்த வெட்கங் கெட்ட மனசு, இப்படி, கண்டதையும் நெனச்சுப் புலம்பிட்டு
இருக்குதே ' என்று தன்னையே சாடிக் கொண்டான். பின் அவன் தனது அன்னையிடம் திரும்பி, " அம்மா, நீ உள்ளே போம்மா. நான் போய் வெண்ணிலா அப்பாவை நேரிலேயே பார்த்துட்டு வந்துடறேன் " என்று மிகவும் சோர்வுற்ற குரலில் சொன்னான்.
" இல்லை தம்பி. நானும் உன் கூட வர்றேன். வா, அவங்க வீட்டுக்குப் போய், என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்கிட்டு வரலாம். அவங்களுக்கும் நாம ஒரு பலம் கொடுத்த மாதிரி இருக்கும் " என்றாள் சுமதி.
ஒரு கணம், மௌனமாக யோசித்த ரவி, " ம்ம் , சரிம்மா. இந்த வீட்டுக்குள்ள தனியா உக்காந்து நீயும் தான் என்ன பண்ணப் போறே? அவங்க அம்மாவைப் பார்த்து ஆறுதலா நாலு வார்த்தை பேசின மாதிரியும் இருக்கும் " என்றான் ரவி.
சுமதி பின் சீட்டில் அமர்ந்து கொள்ள ரவி வண்டியைக் கிளப்பினான்.
என்ன தான் ரவி தான் இயல்புக்கு வந்து விட்டதாகக் காட்டிக் கொண்டாலும், தன்னிடம் எதையும் பேசிடாமல், காரை இயக்கிக் கொண்டு வந்த அவனைக் கண்டு சுமதியின் மனம் மிகவும் கனத்துப் போனது.
காலையில் வெண்ணிலாவின் புகைப்படத்தைக் கண்ட மாத்திரத்தில், அவனது முகம் பூரித்து மலர்ந்து விரிந்து விட்டதைக் கண்டு அவளது மனம் பெரிதாகத் திருப்தி அடைந்து விட்டிருந்தது.
ஆனால், இப்போது யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இப்படி ஒரு திடீர் குழப்பம்! ஒரு
பெண், கடத்தப்படுவது என்றால் அது சாதாரண விஷயமா என்ன? நெனச்சாலே மனசுக்குள்ளே பகீர்ங்குதே. வெண்ணிலா அம்மாவோட நிலைமை
எப்படி இருக்கும்? என்று தனக்குள் எண்ணிக் கொண்டவள், தனது மகனின் இதயத்திற்குள் நுழைந்து விட்ட அந்த முகம் அறியாத பெண்ணிற்காகப் பிரார்த்திக்க ஆரம்பித்தது.

வெண்ணிலா, தான் அடைத்து வைக்கப்பட்டு இருந்த, அறையின் கதவை வெறித்தபடியே படுத்துக் கொண்டிருந்தாள்.
அவளது கண்களில் கண்ணீரும் வற்றிப்போய் கன்னங்களில் காய்ந்த உப்பாக, ஓவியம், வரைந்து விட்டிருந்தது.
' கடவுளே, யார் என்னை கடத்தினா? நான் யார் வம்புக்கும் போறது இல்லையே .. ஒரு வேளை மாத்தி கடத்திட்டாங்களோ.. !!? .நான் யாருக்கு என்ன கெடுதல் செஞ்சேன். ஐயோ ரவி, எனக்கு என்ன நடந்துச்சுன்னு உனக்குத் தெரியுமா? இல்லை நீ என்னைப் பத்தி ஏதாவது தப்பா நெனச்சுட்டு இருக்கியா? நான் ஒரு பாவமும் அறியாதவ, கடவுளே யாராவது என்னை காப்பாற்ற வாங்க...எனக்கு ஏன் இப்படி நடக்கணும் ' என்று தனக்குள் கதறிக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.
அப்போது வெளியில் இருந்து யாரோ, அறைக் கதவின், தாழைத் திருகித் திறக்கும் ஒலி கேட்டது
வெண்ணிலாவின் மனம் பரபரத்தது. கதவைத் திறந்த வெளி நபர் உள்ளே வரும் தருவாயில், நாம இங்கே இருந்து ஓடிப் போயிட்டா என்ன?.என்று எண்ணியவள், தான் படுக்க வைக்கப் பட்டிருந்த கட்டிலை விட்டுக் கீழே இறங்கிட முயற்சி செய்தாள்.
ஆனால், அவளது கால்கள் கட்டிலோடு இணைத்துக் கட்டப் பட்டிருப்பதை அவள் அப்போது அறியவில்லை.
மிகவும் சிரமத்துடன் முதுகை நிமிர்த்திய அவள், கால்களை கட்டிலில் இருந்து, எடுத்துக் கொள்ள முயன்ற போது தடுமாறிக் கீழே விழுந்து விட்டாள்.
" ஐயோ, அம்மா " என்று அலறிக் கொண்டே, எழ முயற்சித்த அவளை ஒரு கரம் எழுப்பித் தூக்கியது.
வெண்ணிலா தன்னையே அருவறுத்துக் கொண்டாள். " ஏய், என்னை விடு, நானே எழுந்துக்குவேன் . என் மேல கை வக்காதே " என்று அந்த யாருமற்ற தனிமையிலும், எதிராளியுடன் போராடத் தயாரானது அவளது பெண்மை.
பெண்மை, என்ற வார்த்தைக்கே அகராதியில், போராளி என்று தான் பெயரோ?
பிறப்பிலிருந்து, இறப்பு வரை, ஒவ்வொரு பெண்ணும் எத்தனை விதமான போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது? அது , ஏழை வீட்டு வேலைக்காரப் பெண்ணாக இருந்தாலும் சரி!
கோடீசுவரனுக்குப் பிறந்த ஒற்றைப் பெண்ணாக இருந்தாலும் சரி !
மிகுந்த சிரமத்துடன் எழுந்து கொண்ட அவளைப் பார்த்து அந்த முகமூடி அணிந்த உருவம் தனது கைகளைத் தட்டியது.
" வெல்கம் மை கேர்ள்! உனக்காகத் தான் இந்த அரண்மனை இத்தனை நாளாகக் காத்துக்கிட்டு இருக்கு " என்று சொல்லி விட்டு, அந்த அறையின் விளக்குகளை ஒளிரச் செய்தது அந்த ஆறடி உயர ஆண் உருவம்.
" ஏய், யாருடா நீ?. என்னை எதுக்காக இப்படி கடத்திக் கூட்டிட்டு வந்து அடைச்சுப் போட்டு வச்சுருக்கே . டேய், இங்க பாரு, நான் ரொம்ப நல்ல பொண்ணுடா. இன்னிக்கு என்னைப் பொண்ணு பார்க்கறதுக்காக மாப்பிள்ளை வீட்டில இருந்து வர்றாங்க தெரியுமா? அவங்க முன்னாடி என்னை நிறுத்தலைன்னா எங்க அம்மா, அப்பாவோட நிலைமை என்ன? அவங்களுக்கு இதனால எவ்வளவு அவமானம் ? டேய், உனக்குக் கடத்திட்டுப் போறதுக்கு, வேற எந்தப் பொண்ணுமே கிடைக்கலியா இந்த ஊரில . என்னை விட்டுடு நான் போயிடறேன் உன்னையும் நான் காட்டிக் கொடுத்துட மாட்டேன். அப்படி உனக்குப் பயமா இருந்தா, என் கண்ணைக் கட்டிக் கூட்டிட்டுப் போ, போரூரில இறக்கி விட்டுடு " என்று தன் போக்கில் அரற்றிக் கொண்டிருந்த அவளைக் கண்டு சிரித்தான் அவன்.
" கூல் பேபி! இந்தா ரூமில பாத்ரூம் இருக்கு, இதுல டவல் அப்புறம் சுடி, சாரி எல்லா டிரஸ்ஸும் இருக்குது , போய் ஃபிரெஷ் ஆயிட்டு வா .நீ வந்தவுடனே இந்த பஸ்ஸரை அழுத்தினேன்னனா உனக்குத் தேவையான சாப்பாடும் உன்னைத் தேடி வந்துடும். ஆனா வெளியே போறேன், கல்யாணம் பண்ணிக்கிறேன்னு மட்டும் என் கிட்ட இனிமே கேட்காதே ! அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வந்துடும் " என்று சொல்லி விட்டு அவளுக்கு அருகில் ஒரு பையை வைத்து விட்டு வெளியேறி விட்டான் அவன்.
வெளியில் இருந்து அவன் மீண்டும் தாழைத் திருகிப் பூட்டும் ஒலி கேட்டது.
வெண்ணிலா மீண்டும் பெருங் குரலெடுத்து அழத் தொடங்கினாள் . " ஐயோ, நில்லுடா? ஏன் என்னை கடத்தின அதையாவது சொல்லிட்டு போடா ... ஆணடவா இந்த வீட்ல நடக்கிற அநியாயத்தில இருந்து என்னைக் காப்பாத்தறதுக்கு யாருமே இங்கே இல்லையா ?.யாருமே இல்லையா " என்று கதறிக் கொண்டே மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்.


ரவிச்சந்திரன் வெண்ணிலாவின் வீட்டிற்குச் சென்ற போது, அந்த வீடே, முழுவதும் இருள் கவிந்து விட்டிருந்தது.
வாசலில் அமர்ந்து கொண்டிருந்த மேனகாவின் முகம், அழுதழுது பெரிதாக வீங்கிப் போய் விட்டிருந்தது.
தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற காரைக் கண்டதும் , ஹாலில் அமர்ந்து கொண்டிருந்த
மிருதுளா வாசலுக்கு விரைந்தாள்.
காரில் இருந்து இறங்கிய ரவியை அவளது மனம் அடையாளம் கண்டு கொண்டது. " அம்மா, இங்க பாரு, அக்காவைப் பார்க்க..." என்று தொடங்கிய அவளை ரவி இடைமறித்தான்.
மேனகாவிற்கு வணக்கம் தெரிவித்துக் கொண்ட அவன் ," அம்மா வாங்க உள்ளார போய்ப் பேசுவோம் " என்று சொல்லவும், மிருதுளா தனது தாயை எழுப்பி நடக்கச் செய்தாள்.
உள்ளே வந்ததும் இருவருக்குமான, குளிர்ந்த நீரை மொண்டு வந்தாள் மிருதுளா.
" அம்மா, பார்த்தீங்களா இந்த அநியாயத்தை!
என் பொண்ணு, பத்தரை மாத்துத் தங்கம். தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு தான் இருப்பா எப்பவுமே. அவளைப் போய் எநதப் படுபாவி இப்படி கடத்திட்டுப் போனானோ? பாவி , பாவி " என்று சுமதியின், கரங்களைப் பற்றிக் கொண்டு அழத் தொடங்கினாள் மேனகா.
ரவிச்சந்திரன், மிருதுளாவிடம் நீரை வாங்கிப் பருகியபடியே அவளிடம் ," உங்க அப்பா எங்கே போயிருக்காரு? " என்று கேட்டான்
" அப்பா , அக்காவோட ஃபிரெண்டுங்க வீட்டுக்கு எல்லாம் போய் விசாரிச்சுட்டு வர்றேன்னுட்டு கிளம்பிப் போயிருக்காரு மாமா. போய்ட்டு வந்தவுடனே, போலீஸ் ஸ்டேஷன் போய் கம்பிளைன்ட் பண்ணனும்னு சொன்னாரு " என்று பதில் அளித்தாள் மிருதுளா.
அப்போது, தனது முகத்தைத் துடைப்பதற்காகக் கைக்குட்டையை எடுத்திடவென ரவி தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டபோது அவனது கைகளுக்குள் மீண்டும் அந்த எட்டு மடிப்புக் காகிதம் அகப்பட்டது.
' இதுல என்ன தான் எழுதி இருக்குன்னு தெரியலியே. ஒரு வேளை, வெண்ணிலா காணாமப் போனதைப் பத்தி, எதுனா கிளூ இதுல கிடைக்குதான்னு பார்ப்போம் ' என்று தனக்குள் எண்ணிக் கொண்டவன், அதனை விரித்து வாசிக்கத் தொடங்கினான்.
அதில் எழுதப் பட்டிருந்த செய்தியைப் படித்ததும், அவனது கண்கள் கோபத்தில் சிவந்தன. தாடைகள் இறுக சட்டென எழுந்தவனை அனைவரும் கேள்வியாக பார்த்தனர்.. எல்லோரையும் பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல்.. " அம்மா நாம போலீஸ்க்கு போறது தான் நல்லது .. " என்றவனை சற்று குழப்பமாக பார்த்தவர் " தம்பி அந்த காகிதம் என்னப்பா , படித்ததும் முகம் மாறுச்சு , வெண்ணிலா சம்பந்தப்பட்ட ஏதாவது தடயமா?
அவரை பார்த்தவன் " அம்மா எனக்கு தெரியல , நிலா சம்பந்தப்பட்ட விஷயமானு ஆனா இதை கொடுத்தது நிலா தோழி பிரீத்தி.. "
"ஓ , ஆனா என்ன எழுதி இருக்கா ? "
"அம்மா அது ஆஸ்பத்திரில நடக்கிற ஒரு அநியாயம் பத்தி இருக்கு , ஆனா நிலாக்கு விஷயம் தெரியும் முன்னே கடத்த பட்டுட்டா அதான் இந்த விஷயத்துக்கும் நிலா கடத்தலுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமா என தெரியல!!" என யோசனையுடன் சொன்னவனை பார்த்த சுமதி " தம்பி இது பொம்பளபுள்ள சமாச்சாரம் , நம்ம போலீஸ்க்கே போய்டலாம்" என்றவரை ஆமோதிப்பாக பார்த்தவன் , மற்ற அனைவரின் முகங்களையும் ஆராய்ந்தான். அதில் தெரிந்த சம்மதத்தில் கடிதத்தை பத்திரப்படுத்தியவன்
' யூ, நாஸ்டி ஃபெல்லோ! ஹாஸ்பிட்டல்ன்ற பெயரில நீ இப்படி ஒரு கேடு கெட்ட பிசினஸ் பண்ணிட்டு இருக்கியா. இப்ப முதல்ல, இந்த லெட்டரோட தான் நாம போவீஸ் ஸ்டேஷன் போகணும். அந்த டாக்டர் ஷீபாவை எப்படியாவது கைது பண்ண வச்சு , அறியாமைல இவகிட்ட மாட்டுகிற பல இளம் பெண்களை காப்பாற்றனும் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், தான் அமர்ந்து கொண்டிருந்த நாற்காலியை விட்டு எழுந்து கொண்டான். மனம் மட்டும் தனக்குள் அழுதது..
" நிலா .. நீ எங்கமா இருக்க? "
( வரும்)






.
.
 
ஒரு வழியா லெட்டர் பாத்தாசு இவன் என்ன நிலா கிக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்ததா சொல்லுறான்
 
Top