Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ 7

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 7


'கஞ்சனூர்" அழகிய, பசுமை தோய்ந்த சோலைகள் அடங்கிய ஊர் கிராமமும் இல்லாத, நகரத்தின் நாகரிகமும் அப்போது தான்' நான் உள்ளே வரலாமா?' என்று எட்டிப் பார்த்திடத் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு சிற்றூர்.

அங்கு தான் வாசு என்கிற வாசுதேவ்வும், நிலாக் குட்டி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்த வெண்ணிலாவும் பிறந்து வளர்ந்தார்கள்.
பனி, விலகிடாத இளங் காலைப் பொழுதினிலே , தொடங்கி விடும் அவர்களது ஆட்டமும், ஓட்டமும் இரவு ஊர் .மொத்தமும் துயில் போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் வரையில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
வாசுவின் தங்கை, ரம்யாவும் இவர்களுடன் இணைந்து கொள்ளுவாள்.
ஆனால், சபாபதியின் வேலை மாற்றம் காரணமாக, இரண்டு குடும்பங்களும் பிரிய நேர்ந்து விட்டிருந்தன.
சதா, சர்வ காலமும் ரம்யாவைத் தூக்கிச் சுமப்பது தான், நிலாவின் வேலை. அதுவும் , வாசு ஒரு பக்கமும், நிலா ஒரு பக்கமுமாக, அவளது கை கால்களைத் இணைத்துத் தூக்கிக் கொண்டு, ஒரு ஊஞ்சலைப் போல, ரம்யாவை இடையில் வைத்துத் தாலாட்டியவாறே, எல்லா இடங்களுக்கும் சென்று வந்திடுவார்கள்.
அது, தான் சிறு வயதில் நிலாவுக்குப் பிடித்தமான விளையாட்டு.

ஆனால் அவர்கள் விளையாட்டில் மிருதுவுக்கு இடம் கிடையாது என்று மறுத்து விடுவார்கள்.

மிருதுளா சிறு வயதில் இருந்தே அப்பா செல்லம் தான் ! தான் உண்டு, தன் வேலை உண்டு என்று தான், எப்போதுமே அவளது நாட்களும் கழிந்திடும்.

வாசு ,நிலாவுக்கு இரண்டு வயது மூத்தவன். ரம்யா , நிலாவிற்கு, ஒரு வருடம் இளையவள்.

தன் முன், முகக் கவசத்தை நீக்கி விட்டு நின்று கொண்டிருந்த உருவம், பார்த்து பழகியதாக தெரிய சற்றே யோசனையாய் அவனைப் பார்க்க அவன் அவளை பார்த்து கண்ணை சிமிட்டி " ஓய் மூன் , என்ன .. "

அவனின் குரலில் அவன் தன் சிறு வயது தோழன் வாசுதேவ் என்பதைத் தெரிந்து கொண்ட , நிலா , " ஏய் தேவ் " என ஆர்பரிப்பாக அழைத்தவள்

பின் சற்றே சந்தேகமான குரலில் " வாசு, வாசு தானே நீ,
நீங்க ? நீங்க போய் என்னை எதுக்காக இப்படி கடத்தி வச்சிருக்கீங்க ? முதல்ல என்னை எப்படி தெரியும்? நான் இங்கே இருக்கிறது, ரோகிணி ஹாஸ்பிட்டல்ல வேலை பார்க்கிறது இது எல்லாம் உங்களுக்குத் தெரியுமா? எப்படி? எப்படி? " என்று மூச்சு விடாமல் கேள்விகளை அடுக்கினாள் வெண்ணிலா.

" ம்ம், சொல்றேன், சொல்றேன். ஆனா அதுக்கு முன்னாடி, நீ போய் ஃபிரெஷ் அப் ஆயிட்டு வா " என்று சொன்னான் வாசு.

அவனது குரலில், முற்றிலுமாக உணர்ச்சி துடைக்கப் பட்டு விட்டிருந்தது. முகத்தின் பளபளப்பு மாறி, கருமை படர்ந்து விட்டிருந்தது...

யாரேனும், திடீர் விருந்தினர்கள் அவனைச் சந்திக்க நேர்ந்தால், ' இதென்ன, எதுக்காக இவ்வளவு கோபம் ' என்று எண்ணிக் கொண்டே , அவ்விடத்தை விட்டு அகண்று விடக் கூடும். அந்த அளவிற்கு அவனது முகம் கொடூரமானதாக இருந்தது .

கால் கட்டுகள், அவிழ்க்கப் பட்டிருந்ததால், ஏதோ ஒரு சொல்லொண்ணாத உணர்வு, உள்ளிருந்து உந்தித் தள்ளிட, வாசு கட்டிலில் வைத்திருந்த புடவை அடங்கிய பையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் சென்றாள் வெண்ணிலா.


அவசர கதியில், அங்கே ஒரு காக்காய், குளியலை முடித்துக் கொண்டு வந்த வெண்ணிலாவிற்குத் தன்னைக் கடத்தியவன், தனது சிறு வயது நண்பன் வாசு தான் என்பதை அறிந்ததும் பெருத்த நிம்மதி ஏற்பட்டது.

' ம், இவன் தான் என்னைக் கடத்தினானா, குளிச்சுட்டு வெளியே போனதும், இவன் கைல, கால்ல விழுந்தாவது வீட்டுக்குப் போயிட வேண்டியது தான். ஆனா, ரம்யா எங்கே? இவனோட மனைவி எங்கே? அந்தக் குட்டி பாப்பா கூட வந்தது, வாசுவோட அம்மாவாகத் தான் இருக்கணும். முடிஞ்சா அவங்களைத் திரும்பவும், ஒரு தடவை பார்த்துட்டு, ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போகணும் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.


குளியலை முடித்து விட்டு, அன்றலர்ந்த ரோஜாவைப் போல, தான் கொடுத்திருந்த, நீல வண்ணப் புடவையுடன் வெளியே வந்த, நிலாவைப் பார்த்து வாசு பிரமித்துப் போனான்.


' இந்த, தூய்மையான அழகுக்கு முன்னாடி தான்டி நான், தோத்துப் போயிட்டேன். அதுவும், என்னோட பதினைஞ்சு வயசிலேயே. உனக்குத் தான் அது புரியாமப் போயிடுச்சு . எத்தனை, வருஷங்களா நான், உன்னை நேருக்கு நேராகச் சந்திக்கறதுக்காகக் காத்துக்கிட்டு இருந்தேன் தெரியுமா??? பன்னென்டு வருஷ இடைவெளிக்குப் பிறகும் உன்னைப் பார்த்த, ஒரே நிமிஷத்தில, என்னால, உன்னைத் தெரிஞ்சுக்க முடிஞ்சுது.

ஆனா, நீ? உனக்கு என்னைத் தெரியலியேன்னு நெனச்சு, நெனச்சு நான், தினந் தினம் செத்துச் செத்துப் பிழைச்சுட்டு இருக்கேன்டி.

நீ எனக்குத் தான் சொந்தம், எனக்கே எனக்கு மட்டும் தான், நீ சொந்தமானவள் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் வாசு.

வாசு, வெண்ணிலாவை நெருங்கி, தான் அவிழ்த்து விட்டிருந்த கயிற்றினை எடுத்து, அவளை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து அதனோடு பிணைத்துக் கட்டிப் போடத் தொடங்கினான்.

இதனைச் சற்றும் எதிர்பாராத வெண்ணிலா, " வாசு, எதுக்காகத் திரும்பவும் என்னை இப்படி கட்டிப் போடறே .இதை நான் உன் கிட்ட எதிர்பார்க்கலைடா. சாரி, ஏதோ பழைய ஞாபகத்தில உன்னைப் பார்த்து டான்னு பேசிட்டேன். உனக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை கூட இருக்குது போலத் தெரியுது. உன் மனைவி எங்கே இருக்காங்க ? வாசு வேண்டாம் வாசு என்னை விட்டுடு. எங்க வீட்டில என்னைத் தேடுவாங்க வாசு. அதோட, நான் முன்னாடியே சொன்ன மாதிரி இன்னிக்கு, என்னைப் பொண்ணு பார்க்கறதுக்காக, மாப்பிள்ளை வீட்டில இருந்து வர்றாங்க. பிளீஸ் வாசு. என்னை விட்டுடு " என்று மீண்டும் அவனிடம் கெஞ்சத் தொடங்கினாள்.

" ஓ, பொண்ணு பார்க்க வர்றாங்களா? உன்னைப் பார்க்கறதுக்காக, மாப்பிள்ளை உங்க வீட்டுக்கு வந்திருக்கும் போது தான் நீ இன்னொருத்தன் கூட, காரில போவியோ? " என்று ஏளனக் குரலில் கேட்டான் வாசு .

அவனது குரலில், தனக்கு மட்டுமே சொந்தமான, ஒரு உயிரைக் கண்டித்துப் பேசிடும் தொனி , தென்பட்டது.

அவன் சொன்னதைக் கேட்டதும், வெண்ணிலாவுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. " ஆமாம்டா, நான் அப்படித் தான்.
இப்ப, அதுக்காகத் தான், என்னை நீ கடத்திக் கொண்டு வந்து வச்சிருக்கியா?.
உன் கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கவேயில்லைடா. ஏன்டா, உன் புத்தி இப்படி வேலை செய்யுது ? என்னை விடப் போறியா இல்லையா? " என்று அதீத கோபம் மிகுந்த குரலில், கூறினாள்.


" ம்ஹீம், இது சரிப்பட்டு வராது. நீ இப்படியே கத்திக்கிட்டே இரு. நான் கிளம்பறேன் " என்று சொல்லி விட்டு, வழக்கம் போல அறைக் கதவைச் சாத்தி விட்டு, சென்று விட்டான்.

வெளியே, அவன் கதவைத் தாழிடும் ஓசை, வெண்ணிலாவின், செவிகளில் நாராசமாக ஒலித்தது..அதற்கு மேல், கத்தவும், அழவும் கூடத் திடம் அற்றவளாகிப் போனாள், வெண்ணிலா.

காலையில், இருந்து தன் வாழ்வில் நடந்த , ஒன்றுக்கு ஒன்று முரணான சம்பவங்களை நினைவு கூர்ந்து பார்த்த போது, அவளுக்குத் தன் கண்ணுக்குத் தெரியாமல் எதிர் நின்றபடி தன்னை ஆட்டிப் படைத்திடும் விதியின் முன்னால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆற்றாமையுடன் கூடிய அழுகை, வெடித்துக் கிளம்பியது.
நாற்காலியில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தாள் வெண்ணிலா.

அவளின்,(மன) காயத்திற்குக் காலம் மருந்தாகுமா?


************

வெண்ணிலாவின் வீட்டில், சபாபதியுடன், மேனகாவையும் அமர வைத்து, அவர்களை ஆறுதல் படுத்தி ,ஒரு வாறு, இரவு உணவுக்கான தோசையைப் பரிமாறி விட்டுத், தானும் உண்ட பின்பு தான் ஓய்ந்து அமர்ந்தாள் சுமதி.


மிருதுளா அவளுக்கு உதவியாக இருந்தாள். ரவிச்சந்திரன், காணாமல் போன வெண்ணிலாவைப் பற்றிப் புகார் அளித்திட காவல் நிலையத்தை அடைந்த போது, அங்கே, அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.

அங்கே, சப் இன்ஸ்பெக்டராக வீற்றிருந்தது அவனது, நண்பன் தீபக்!


தீபக்கை அவ்விடத்தில் கண்ட ரவிச்சந்திரனுக்குச் சில கணங்கள் காணாமல் போய் விட்டிருந்த அவனது உயிரே, மீண்டு வந்ததைப் போன்ற உணர்வு எழுந்தது.

தீபக்கும், அவனைக் கண்டதும் புருவங்களை உயர்த்தித் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.
"
ஹாய் ரவி, எப்படி இருக்கே? அம்மா எப்படி இருக்காங்க ? அப்புறம் என்ன திடீர்னு இந்தப் பக்கமா காத்து வீசுது " என்று கேட்டான்.

" வந்து தீபக், ஒரு கம்பிளைண்ட் பண்றதுக்காக வந்தேன். அது, ..அது வந்து அவங்க நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு. ரெண்டு பேருக்கும், பரஸ்பரம் பிடிச்சுப் போச்சு. ஆனா, திடீர்னு இப்ப அந்தப் பொண்ணு காணாமப் போயிட்டா. ..." என்று தான், வெண்ணிலாவை ரோகிணி மருத்துவமனையில் சந்தித்தது முதல், அப்போது வரைக்குமான நிகழ்வுகளை, ஓன்று விடாமல், தீபக்கிடம் சொல்லத் தொடங்கினான்.

" நான், அங்கே டாக்டருக்காகக் காத்துட்டு இருக்கும் போது, ஒரு பொண்ணு என் கிட்ட வந்து, இதோ இந்த லெட்டரை என் கிட்ட குடுத்துட்டுப் போனாங்க. இதுல, ஒரு விஷயம் என்னன்னா, இந்த லெட்டரை வெண்ணிலா கிட்ட தான் கொடுக்கச் சொல்லிட்டுப் போனாங்க. அதுக்கப்புறம் தான், நான் வெண்ணிலா கிட்ட பேசினேன்.பேச்சு சுவாரசியத்தில, இந்த லெட்டரை அவ கிட்ட கொடுக்க மறந்து போயிட்டேன். நானும் அதைப் படிக்கலை. ஆனா, ஓரு வேளை இந்த லெட்டர் என் கைக்கு வந்து சேர்ந்த மறு நிமிஷமே, இதை நான் ஓரு உரிமையுள்ள ஆண் மகனா படிச்சுப் பார்த்து இருந்தேன்னா, இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்காதோ என்னவோ " என்று புலம்பினான் ரவி.

" டேய், டேய் புலம்பாதேடா . இப்படி புலம்பறதுனால ஏதாவது நல்லது நடக்கப் போகுதா என்ன , அப்படி இந்த லெட்டர்ல என்னடா இருக்குது " என்று சொன்ன தீபக், அக்கடிதத்தை வாசிக்கத் தொடங்கினான்.

கடிதத்தை முழுவதும் படித்து முடிக்கும் முன்னரே, அவனுக்குக் கோபம் தலைக்கேறியது.

கண்கள், செம்பிழம்பாகச் சிவந்து போய் விட்டிருந்தன. " ராஸ்கல்ஸ், எது, எதில தான், குறுக்குப் புத்தியைக் காமிக்கறதுங்கிற விவஸ்தையே இல்லாமப் போயிடுச்சு . விருப்பமில்லாத கன்னிப் பெண்களை இப்படி, அநியாயமா கொடுமைப்படுத்தி அவங்களைத் தாயாக்கி ..ம்ப்ச், சில பேரு, பிள்ளை நான் நெனச்ச மாதிரி பொறக்கலை, கொன்னு போட்டுடுன்னு கூடச் சொல்றாங்களாம்டா இப்ப. இதுக்கு டாக்டருங்களும் உடந்தையா இருக்காங்க பார்த்தியா? " என்று சாடினான் தீபக்.
" தீபக், அப்படின்னா வெண்ணிலாவுக்கும் இப்படி ஒரு பிரச்சனை தான், வந்திருக்குமோ? நெனச்சாலே மனசெல்லாம், நடுங்குதுடா. ரொம்ப பயமா இருக்குடா " என்றவாறே தீபக்கின் கைகளில் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டு அழத் தொடங்கினான் ரவி.
.. ( வரும்)






 
அது எப்படி வாசு வை அடையாளம் தெரியும் போது வாசு அம்மாவை அடையாளம் தெரியாம போச்சு.. மிருதுளா விட நிலா தான் அப்பா செல்லம்னு முதல் எபியில் இருக்கு இங்க மிருதுளா தான் அப்பா செல்லம்னு இருக்கு.. வாசு oneside யா லவ் பண்ணிட்டு இருகாணா அது நிலா கிட்ட சொல்லாமல் ஏன் இப்படி செய்யணும்
 
ஒன் சைடு லவ் க்காக கடத்திட்டானா... காதல கூட சொல்லாம ஏன் கடத்தினான்.. ரம்யா எங்க.. அந்த பாப்பா ரம்யா குழந்தையா...
 
Top