Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ 8

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 8



அவனின் அழுகையில் பதறிய தீபக் " டேய், டேய் ரவி அழாதேடா. கண்டுபிடிச்சுடலாம். அவங்களுக்கு எந்த விதமான சேதமும் இல்லாம சீக்கிரமே மீட்டு எடுத்துடலாம்டா. இந்த லெட்டர் என் கிட்டயே இருக்கட்டும். நான் உடனே ரோகிணி ஹாஸ்பிட்டல் போறேன் . இந்த லெட்டரை எழுதி உன் கிட்ட கொடுத்த பொண்ணைப் பத்தி, விசாரிக்கிறேன். அதான் இந்த குழந்தை உற்பத்தி பண்ற ஹாஸ்பிட்டல்ஸ் எல்லாம், நடு ராத்திரி வரைக்கும் திறந்து தானே இருக்குது . நீ வருத்தப்படாதே உங்க அம்மாவைக் கூட்டிட்டு, வீட்டுக்குப் போ " என்று சொன்னான் தீபக்.

அழுது கொண்டிருந்த ரவி, " ச்சே பார்த்தியா, சில நேரங்கள்ல அதீதமான பாசம் கூட நம்மளை, எதுவும் செய்ய விடாத கோழையா மாத்திடுது " என்று சொன்னான்.

" ம்ம், சில பேரைக் கோழையா மாத்திடுது. ஆனா ஒரு சிலரை அந்த அன்பையே, ஒரு பிரதான ஆயுதமா எடுத்துக்கிட்டுப் போராடவும் வைக்குது " என்று சொன்ன தீபக், " இப்ப நாம போராடத் தான் தயாராகிக்கணும். ஓ.கேவா ரவி " என்று முடித்தான்.

ரவி அவன் சொன்னதற்கு ஆமோதிப்பாய்த் தலையசைத்தான்.

" சரிடா தீபக். நீ இப்ப ஹாஸ்பிட்டல் போய்ட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சு சொல்லு. அம்மா, எனக்காக வெண்ணிலா வீட்டில வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.
அதனால நான் கிளம்பறேன் " என்று சொல்லி விட்டுக் காவல் நிலையத்தில் இருந்து கிளம்பிச் சென்றான் ரவி.
**************************************
மதிய நேர ஓய்விற்குப் பின்னர் மருத்துவமனைக்கு வந்த, மருத்துவர் ஷீபா அது வரையில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த தனது அலைபேசியைக் கையில் எடுத்து அதனை ஆன் செய்த போது, அதில் அந்தத் தொகுதி எம்.எல். ஏ
மகன் முத்துக்குமரனின் எண்கள் தான் தொடர்ச்சியாகக் காணப்பட்டன.

' ச்சு, இவன் வேறே. இப்படி நிலைமை புரியாம போனை அடிச்சுக்கிட்டே இருக்கான் . நாம எடுத்துட்டு இருக்கிற பிராஜெக்ட் என்ன சாதாரண விஷயமா? பிரீத்தாவுக்குக் கர்ப்பம் தங்கலை. அதனால, அடுத்ததா வெண்ணிலாவுக்குக் கவுன்சிலிங் கொடுத்து எப்படியாவது சரிக்கட்டிடலாம்னு பார்த்தா , இவ நம்ம கிட்ட முகம் கொடுத்து கூடப் பேச மாட்டேங்கிறாளே ' என்று தனக்குள் புலம்பிக் கொண்டாள் ஷீபா.

அதற்குள், நர்ஸ் பிருந்தா அவளது அறைக் கதவைத் தட்டினாள். " எஸ், கம் இன் " என்று அவளை அழைத்த ஷீபா , பிருந்தா அறைக்குள் நுழைந்ததுமே, "

"இன்னிக்கு, ஈவினிங் ஸ்கேன் பேஷன்ட்ஸை எல்லாம், உள்ளே அனுப்பி விடுங்க...அப்புறம் ஆன்டிநேடல் ( கருவில் இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணித்திடும், ஸ்கேனிங் முறை)
பார்க்க வர்றவங்க எல்லாரையும் லேட்டா தானே வரச் சொல்லி இருக்கீங்க. அவங்க டைமிங், ஏழு மணிக்கு அப்புறம் தான் " என்று சொல்லி விட்டு, அவள் கைகளில் வைத்து இருந்த, ஸ்கேன் ரிப்போர்ட் கார்டுகளைச் சரி பார்த்து விட்டு, கையொப்பம் இட்டுக் கொடுத்தாள் மருத்துவர் ஷீபா.

பிருந்தா அந்த இடத்தை விட்டு அகன்று சென்றதும், தனது அலைபேசியில் இருந்து, முத்துக்குமரனின் எண்களைத் தட்டினாள் ஷீபா.

மறு முனை உயிர் பெற்றதும் " வணக்கம் , சார் சொல்லுங்க. துரதிர்ஷ்டவசமாக, இப்ப ஒரு ஐவிஎப் ஃபெய்லியர் ஆய்டுச்சு. அதனால என்ன? அடுத்த மாசமே, ஏன் இந்த மாசமே கூட, ஒரு பொண்ணை வச்சி , ஐ.வி.எப் பண்ணிடலாம் . அதுக்காகத் தான், நான் இப்ப முயற்சி பண்ணிட்டு இருக்கேன். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சார். " என்று சொன்னாள்.

" ம்ம், டாக்டர் நாங்க ரொம்பவே, எதிர்பார்த்தோம். அதான், கொஞ்சம் வருத்தமாகிடுச்சு. சரிங்க டாக்டர், நான் உங்களைத் தான் நம்பிக்கிட்டு இருக்கேன். அடுத்த, முறை எப்படியும் சக்ஸஸ் பண்ணிடுவீங்க தானே. நான், இப்பவே அட்வான்ஸ் தொகையை உங்க அக்கவுண்ட்டுக்கு அனுப்பி வச்சிடறேன் " என்று சொன்னான், முத்துக்குமரன்.

" ம் , ஓ.கே சார். அப்புறம் பேஷன்ட்ஸ் வர்ற டைம் ஆகிடுச்சு..நான் வைக்கிறேன் " என்று சொல்லி விட்டுத் தனது அலைபேசியைக் கிடத்தினாள் ஷீபா.

***************************************
நாற்காலியோடு பிணைத்துக் கட்டப்பட்டிருந்த வெண்ணிலா, அப்படியே அழுதபடியே, சாய்ந்த வண்ணம் தூங்கிப் போனாள்.

திடீரென்று, யாரோ தன்னைத் தொடுவது போன்ற உணர்வு எழுந்ததும், அவளுக்கு விழிப்புத் தட்டியது.அது, ஒரு இதமான மென் விரல்களின் ஸ்பரிசம் . அதனை உணர்ந்து கொண்ட, வெண்ணிலா, அந்தக் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

" பாட்டி, இவங்க இப்படி உக்கார்ந்துக்கிட்டே தூங்குறாங்க பாருங்க. நான், எழுப்பட்டுமா ? நம்ம சப்பாத்தி கொண்டு வந்துருக்கோம்ல. அதைச் சாப்பிடச் சொல்லுவோமா ? " என்று அந்த மழலைக் குரல், கேட்டது.
வெண்ணிலா கண் விழித்துக் கொண்டாள்.

கண் விழித்ததும், அவளுக்கு எதிரில் நின்று கொண்டிருந்த அந்த முதிய
பெண்மணியின் கைகளைப் பிடித்துக் கொண்டு " அம்மா, நீங்க வாசுவோட அம்மா தானே. என்னை ஞாபகம் இருக்காம்மா, உங்களுக்கு. நான் தான் வெண்ணிலா. நிலாம்மா, என்னைப் போய் இப்படி கடத்திக் கொண்டு வந்து அடைச்சு வச்சுருக்கான்மா. நான் என்ன பாவம் பண்ணினேன். என்னை எதுக்காக இப்படி கடத்தணும். அம்மா, இந்தக் கட்டை மட்டும் அவுத்து விட்டுடுங்கமா, நான் இங்கே இருந்து போயிடறேன " என்று சொல்லிக் கதறி அழத் தொடங்கினாள்.

அதற்குள் அவளை நெருங்கி நின்று கொண்டிருந்த, அந்தச் சிறு பெண், " அத்தை , அழாதே அத்தை. இந்த சப்பாத்தியைச் சாப்பிடு. அதுக்கப்புறமா, நானே வாசு கிட்ட சொல்லி, உன்னை விடச் சொல்றேன் " என்று பெரிய மனிதத் தோரணையுடன், வெண்ணிலாவைப் பார்த்துச் சொன்னாள்.

வெண்ணிலாவிற்கு, அப்போது நிஜமாகவே பசிக்க ஆரம்பித்து விட்டிருந்தது. அழுதழுது அவளுக்கு மயக்கமே வரும் போலத் தெரிந்தது.

செய்வதறியாமல் கண்ணீர் மல்க, அந்தக் குழந்தையின் கைகளில் இருந்த தட்டினை வாங்கிக் கொண்டு, அதில் இருந்த சப்பாத்தியை, மெதுவாக உண்ணத் தொடங்கினாள்.

அவர்கள் கொண்டு வந்திருந்த உணவில், எப்படியோ, ஒரு பாதியைத் தனது வயிற்றுக்குள் தள்ளிய அவள், அதன் பின், தட்டினை, அந்த முதிய பெண்மணியிடம் கொடுத்து விட்டாள்.


அவளுக்கு, ஒரு கணம், தன்னைப் போலத் தான் வாசு இவர்கள் இருவரையும் கூட, மிரட்டிப் பணிய வைத்து இருப்பானோ என்ற சந்தேகம் எழுந்தது.

சாப்பிட்டு முடித்ததும், அவளுக்கு ஏனோ மனத்திலும், உடலிலும் புதிதான ஒரு தெம்பு பிறந்து விட்டிருந்தது.அவளது மனமானது வெவ்வேறு கோணங்களில், தப்பிச் செல்லும் யுக்திகளை ஆராய்ந்து கொண்டு இருந்தது.அவள் மெதுவாகப் பேசத் தொடங்கினாள்.

" அம்மா, இது வாசுவோட குழந்தை தானே ? அப்படின்னா, வாசுவோட மனைவி எங்கே இருக்காங்க? " என்று கேட்டாள்.

அதனைக் கேட்டதும், அந்த மூத்தவளின் முகம் சட்டென மிகுந்த வாட்டமுற்றது.
அவள் மறுப்பாகத் தலை அசைத்தாள்.

அவள் ஏதோ பேச வாயெடுப்பதற்குள், வாசலில், அவன் குரல் கேட்டது.
" அம்மா, சாப்பாடு கொடுத்தாச்சு இல்லை. போ வெளியே. இனிமே நான் பார்த்துக்கறேன் " என்று மிரட்டும் தொனியில் ஏவிட, அந்தப் பெண்மணி மறு கணமே சிறுமியை அழைத்துக் கொண்டு, அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

மீண்டும் அறைக்குள் நுழைந்த வாசு, வெண்ணிலாவை நெருங்கி வந்து, " ம், நைட் டிபன் முடிஞ்சது இல்லை, அப்படியே படுத்துத் தூங்கு. இனிமே உன் வாழ்க்கை என் கூடத் தான். அதுக்காக
நான், உன்னை இப்படி கட்டிப் போட்டே, வச்சிருக்க மாட்டேன். இந்த சிறை வாழ்க்கை எல்லாம் நீயும் என்னை மனசார ஏத்துக்கற வரைக்கும் தான்.
அதுக்கப்புறம் , எப்பவுமே நீ சுதந்திரப் பறவை தான் " என்று சொன்னான்.

அதனைக் கேட்ட வெண்ணிலாவிற்குக் கடுமையான கோபம் வந்தது. " வாசு, இப்படி ஒருத்தரை அடைச்சிப் போட்டு, அவங்க காதலை ஒரு நாளும் நீ வாங்க முடியாது .நான் வேற ஒருத்தரை விரும்பறேன் , நேத்து வரைக்கும் இல்லை. இன்னிக்குத் தான்...
, நானும், இப்படி இன்னொரு ஜீவனை நெனச்சி, உருகுவேன்னு எனக்கே இன்னிக்குத் தான் தெரிஞ்சது. அது வேற யாரும் இல்லை. எனக்காக வீட்டில பேசி வச்சிருக்கற மாப்பிள்ளை தான் அவரு. பிளீஸ்பா, இன்னொரு, வாழ்க்கைக்குள்ள அடி எடுத்து வக்கப் போற நான் எதுக்கு உனக்கு ? வேண்டாம். உனக்கே, உனக்குன்னு, ஓரு அழகான வாழ்க்கை இருக்கும் டா ,என்னை விட்டுடு. நீ இப்படியே என்னை அடைச்சிப் போட்டு வச்சிருந்தாலும் கூட, என் உடம்பு மட்டும் தான் இங்கே இருக்கும். என் மனசு உன் கிட்ட லயிக்காது. இதை நான் உனக்கு சொல்லத் தேவையில்லைன்னு நெனக்கிறேன் " என்று ஒரே மூச்சில், அவனிடம் பேசி முடித்தாள்.

வாசு அவளை ஒரு கணம் யோசனையுடன் பார்த்தான். பின், " நான் காத்துக்கிட்டு இருப்பேன் . உன் மனசு, என் கிட்ட முழுமையான ஈடுபாட்டோட வந்து சேர்ற வரைக்கும், நான் காத்துக்கிட்டு இருப்பேன். உனக்காக, உனக்காக மட்டும் தான், இந்த உயிர் காத்துக்கிட்டு இருக்கும் " என்றான் வாசு.

வெண்ணிலாவுக்கு கோபம் தான் வந்தது. " டேய், என்னடா, நீ ? கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையையும் பெத்து வச்சிக்கிட்டு, ஒரு மனுஷன் பேசற பேச்சா இது. என்னோட மொபைல், எங்கே ? முதல்ல அதை என் கிட்ட கொடு .உன்னை இப்படியே விட்டா, நீ சரிப்பட்டு வர மாட்டே. என் போன் எங்கே, அதைக் கொடு. பிளீஸ் கொடுத்துடு. இங்கே பாரு மணியாகிட்டே போகுது. என்னை விட்டுடு. எங்க வீட்டில என்னைத் தேடுவாங்கடா. ரம்யாவை நெனச்சுப் பாரு, உன் குட்டிப் பொண்ணை நெனச்சுப் பாரு. உன் குடும்பத்துக்குள்ளேயே இத்தனை பெண்கள் உன் பாதுகாப்பை நம்பி இருக்கும் போது நீ எதுக்காக இப்படி என் வாழ்க்கையில விளையாடணும்னு ஆசைப் படறே. ..." அவள் முடிப்பதற்குள்,

நெருங்கி வந்த வாசு, " போதும் இப்ப நீயா நிறுத்தப் போறியா? இல்ல நான் நிறுத்தட்டுமா " என்று கேட்டபடி, அவளை நெருங்கி வந்து, அடுத்த வார்த்தையை, அவளது இதழ்கள் வெளியிடுவதற்கு முன், அதனைத் தனது இதழ்களுக்குள் சிறைப் படுத்தினான்.
*************************************
ரோகிணி மருத்துவமனையை நெருங்கிய தீபக் , அப்போது, சாதாரண உடுப்பில் தான் இருந்தான். அவனுக்கு, ஏனோ தனது காக்கிச் சட்டை, இந்தத் தேடல் முயற்சிக்கு ஒத்துழைப்பு தராது என்று மனத்தில் பட்டது.

மருத்துவமனைக்குள், புகுந்த அவன் ரிசப்ஷனை நெருங்கி, " மேம், இங்கே பிரீத்தான்னு ஒரு நர்ஸ் வேலை பார்க்கறாங்க இல்லையா? அவங்களை நான் கொஞ்சம் பார்க்கணும் " என்று சொன்னான்.

" சார், நீங்க யாரு? பிரீத்தா சிஸ்டர் இனிமே அடுத்த மாசம் தான் டியூட்டிக்கு வருவாங்க. அவங்க லீவு " என்று சொன்னாள் அந்தப் பெண் .

" ம், சரிங்க மேடம். எனக்கு அவங்க அட்ரஸ் வேணும். கொஞ்சம் தர்றீங்களா? " என்று கேட்டான் தீபக்

. " சார், நீங்க யார்னே தெரியலை. உங்களை நம்பி எப்படி, நான் ஒரு பொண்ணோட அட்ரஸைத் தர முடியும் " என்று மீண்டும் அவள் கேட்கவும்,
தனது சட்டைப் பையில் இருந்த, அவனது அடையாள அட்டையை, அவளிடம் நீட்டினான் தீபக்.

அதைப் பார்த்த நர்ஸ் , " சார் நான் எங்க மேலதிகாரி சொன்னா தான் அட்ரஸ் சொல்ல முடியும், முதல் மாடில தான் அவங்க அறை அவங்கள பாருங்க "

" ஓ.கே நன்றி " என்றவன் , மாடிக்கு விரைந்தான்.


( வரும்)



 
Top