Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
மக்களே ❤

முதல் அத்தியாயம் கொடுத்து விட்டேன்.. படித்து விட்டு தங்கள் மேலான கருத்தை பகிர்ந்து கொள்ளவும் ☺☺




அத்தியாயம் 1



' மல்லிகை பூத்தது, மல்லிகை பூத்தது, வாசமுள்ள , மல்லிகை வந்தது, எங்க வீட்டுத் தோட்டத்தில " என்று உரத்த குரலில் பாடியவாறே தோட்டத்தில், அன்று தான் பூத்திருந்த குண்டு மல்லிகைப் பூவைப் பறித்துக் கொண்டு, தனது தங்கையை நோக்கி ஓடோடி வந்தாள் வெண்ணிலா.
" ஏய் அக்கா, மல்லிப்பூ பூத்திருச்சாடி. இங்கே தாடி, நான் கிளோஸப்ல பார்க்கணும் " என்று ஆவலுடன் கேட்டாள், அவளது தங்கை, மிருதுளா.
" அதெல்லாம் கிடையாது, நம்ப வீட்டில முதன் முதலா பூத்திருக்கு, அதனால் இதை சாமிக்குத் தான் வைப்பேன். நீ தான், இன்னும் குளிக்கவே இல்லே. உன் கிட்ட எல்லாம் குடுக்க முடியாது " என்று சொல்லி விட்டு, பூஜையறைக்குள் நுழைந்து, அங்கே நடுநாயகமாக வீற்றிருந்த பிள்ளையாருக்குச் சூட்டி விட்டாள் வெண்ணிலா.
மிருதுளா, " ம்ம், என் கிட்டே குடுக்க மாட்டேன்னு , சொல்லிட்டே இல்லை, இந்தப் பூ இல்லாட்டி என்ன, நாளைக்கு நான் அரும்பா இருக்கும் போதே, அடுத்த பூவைப் பறிச்சுட்டு வந்துடறேன் " என்று சொல்லி விட்டு, வெண்ணிலாவைப் பார்த்து முறைத்தாள்.
இருவருக்குமான தோசைகளை வார்த்துத் தட்டில் போட்டபடி வந்த அவர்களது தாய் மேனகா, " ஏய் மிருது இந்தாடி, இதைப் பிடி, நேரம் ஆகுதே, இங்கே ஒருத்தி சமையலகட்டிலேயே கிடந்து அல்லாடறேனே, ஒருத்தியாச்சும் வந்து, கொஞ்சம் கூடமாட, வேலை செய்யறீங்களாடி? காலங்கார்த்தால எழுந்திருச்சதும், பூவுக்கும், பொட்டுக்கும் அடிச்சுக்கிறாளுங்க. இந்தா, இதைக் கொண்டு போய் டைனிங் டேபிள்ல வச்சிட்டு, கிச்சன்ல இருந்து சட்னியைக் கிண்ணத்துல ஊத்தி எடுத்துட்டு வா. உங்கப்பாவும் இப்பக் குளிச்சுட்டு வந்துடுவாரு " என்றாள்.
அவள் சொன்ன சில நிமிடங்களிலேயே, அவளது கணவர் சபாபதி, உணவு மேஜைக்கு வந்து விட, மகள்கள் இருவரும் அவருடன் இணைந்து கொண்டனர்.
வெண்ணிலா, பி.எஸ்.சி நர்சிங் முடித்து விட்டு ஒரு தனியார் மருத்துவமனையில், நர்சாகப் பணி புரிந்து வருகிறாள்.
மிருதுளா இப்போது தான், கல்லூரியில் இளங்கலை, தமிழ் இலக்கியப் பாடம் கற்று வருகிறாள்.
இன்னும் அவள் இளங்கலை முடித்து வர ஓராண்டு காலம் கல்லூரி செல்ல வேண்டும்.
படிப்பு, அழகு அடுத்தவரிடம் பழகிடும் நேர்த்தி, என்று அனைத்திலுமே, மூத்தவள் தான் முண்ணனியில் இருந்திடுவாள். மிருதுளா கொஞ்சம் சுமார் தான். அதனால், சபாபதியின் செல்லப் பெண் என்றால் அது மூத்தவள் வெண்ணிலா தான்.
சில நேரங்களில், அதை வெளிப்படையாகவேத் தனது வார்த்தைகளிலும் காட்டி விடுவார்.
அந்நேரத்தில் மிருதுளாவின், முகம் மிகவும் வாட்டமுற்றுப் போய் விடும். அந்த நேரத்தில், தாய் மேனகா தான், அவளுக்காகப் பரிந்து கொண்டு வருவாள்.
ஆனால் , வெண்ணிலாவின் கவனம் முழுக்கப் புத்தகத்திலேயே ஆழ்ந்து கிடக்க, மிருதுளா எப்போதும், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் மூலமாகவே, வாழ்க்கை பாடத்தினைக் கற்றுக் கொள்ளுவாள்.
சுருங்கச் சொன்னால், மிருதுளா ஒரு இலக்கியம் படித்த எதார்த்தவாதி. ஆனால், வெண்ணிலாவோ, பணிக்குச் செல்லும் கற்பனாவாதி!
தந்தையும் , மக்களுமாகச் சாப்பிட்டு முடித்ததும், மேனகாவும் , உணவருந்திட உணவு மேஜையில் அமர்ந்து கொண்டாள்.
சாப்பிட்டு முடித்ததும் வெண்ணிலா மருத்துவமனைக்குக் கிளம்பிச் சென்று விட, மிருதுளா வழக்கம் போல, அம்மாவுக்குத் தோசை வார்த்துக் கொடுத்து விட்டு, சபாபதிக்கும் உணவுக்குப் பின்னான, காபியை எடுத்துக் கொண்டு வந்தாள்.
" ம், மேனகா, நம்ப வெண்ணிலா ஜாதகத்துக்குப் பொருத்தமாக இருந்தது இல்லை, ஒரு மெடிக்கல் ரெப் பையனோட ஜாதகம், அவங்க வீட்டில இருந்து இன்னிக்கு வெண்ணிலாவைப் பொண்ணு பார்க்க வர்றாங்களாம். சாயந்திரம் ஆறு மணிக்கு வரச் சொல்லிடவா? " என்று கேட்டார் சபாபதி.
" மெடிக்கல் ரெப்பா? உங்க பொண்ணுக்கு இது சரியா வருமா? நல்ல இடம் தானா? விசாரிச்சுட்டீங்களா? " என்று மேனகா கேட்டாள்.
" அதெல்லாம் விசாரிச்சுட்டேன்மா. நல்ல பையனாத் தான் தெரியுது. என்ன பண்ற சொல்றே, இவளோட செவ்வாய் தோஷத்துக்குப் பொருத்தமாவும் நாம பார்க்க வேண்டியது இருக்கு இல்லியா? " என்று சொன்னார் சபாபதி.
"ம், சரிங்க. நான் அவளை ரெடியா இருக்க சொல்றேன். மிருதுளா, நீ என்ன பண்ணிட்டு இருக்கே. வா கிளம்பு. உனக்குக் காலேஜ் போறதுக்கு லேட்டாயிடப் போகுது. அங்கே எல்லாம் அப்படியே கிடக்கட்டும். அம்மா, சாப்பிட்டுட்டு வந்து பார்த்துக்கறேன் " என்று சமையலறை நோக்கிக் குரல் கொடுத்தாள் மேனகா.
" இதோ வந்துட்டேன்மா. உனக்குத் தான் கால் முட்டி வலிக்குதுன்னு சொல்றியே. அதான் இப்ப சாப்பிட்ட பாத்திரம் வரைக்கும், கழுவிட்டு இருந்தேன் " என்று பொறுப்பான குரலில் பேசிய தன் மகளைக் கண்டு, மேனகா பெரு மகிழ்ச்சி அடைந்தாள்.
அடுத்த பத்து நிமிடங்களில், தந்தை சபாபதியுடன் , மிருதுளாவும் கல்லூரிக்குக் கிளம்பிச் சென்று விட்டாள்.
சபாபதி, ஒரு வங்கியில் கணக்கராகப் பணி புரிந்து வருகிறார். தானுண்டு தன் வேலையுண்டு என்று தான், இது நாள் வரையிலும் தனது காலத்தை
ஓட்டி வருகிறார்.
அவரது, அன்பில் ஒரு பெரிதளவிலான கடமை உணர்வு மட்டுமே வெளிப்படையாகத் தெரிந்திடும்.
அதனால் சில சமயங்களில் மேனகாவிற்கே தனது வாழ்வின் மீது சலிப்பு வந்து விடும்.
' புடவை வேணுமா?. இந்தா பணம். போய் உனக்குப் பிடிச்சதை வாங்கிக்க. சினிமாவுக்குப் போகணுமா, ஞாயிற்றுக் கிழமை, பிள்ளைங்களைக் கூட்டிட்டு மேட்னி ஷோ போயிட்டு வந்துடு ' என்று தான் அவரது உரையாடல்கள் இருந்திடும்.
ஆனால், மேகனகாவிற்கு ஒரு புறம் தன் மீது உள்ள நம்பிக்கையினால் தான், சபாபதி தனக்கு இத்தனை சுதந்திரம் கொடுத்து உலவச் செய்கிறார் என்று தோன்றினாலும், மறு புறம் கணவன் மனைவி ஜோடியாக, பார்க், சினிமா என்று ஊர் சுற்றுவதையும்; பைக்கில் அமர்ந்து கொண்டு, கணவனின் மார்பில் கைகளால் அணைத்தவாறே, வளைய வந்திடும் பெண்களையும் கண்டால் சற்றுப் பொறாமையாகவே இருந்திடும்.
' ஆமாம் சம்பந்தம் பண்ணப் போறோம். இத்தனை வருஷத்துக்கப்புறமும் நம்ம புத்தி இப்படி
தான் யோசிக்குது பாரு ' என்று தன்னையே மனத்திற்குள் குட்டிக் கொண்டாள்.
பின், அவளுக்கு நண்பகல் வேலைகள் துணி, துவைக்க; பாத்திரம் தேய்க்க என்று நேரம் சரியாக இருந்தது.
பிற்பகலில் சிறிது நேரம், தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து கொள்வாள், அது தொல்லைக் காட்சியாக மாறும் வரை. பின் சற்று நேரம் தூங்கி ஓய்வெடுப்பாள்.
இன்று போல, வெண்ணிலா காலை ஒன்பது மணி டியூட்டிக்குக் கிளம்பிச் சென்றாள் என்றால், மூன்றரை மணிக்கெல்லாம் அவளது டியூட்டி முடிந்து விடும்.
எப்படியும் , மாலை நான்கரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடுவாள். அது போலத் தான் அன்றும் வந்திடுவாள் என்று எதிர்பார்த்தபடி, முகப்பறையில் இருந்த டிவி முன்பு அமர்ந்து கொண்டிருந்தாள் ஆனால், மணி ஐந்தரை ஆகி விட்டிருந்தது, ஆனால் வெண்ணிலா இன்னமும் வந்திருக்கவில்லை.
?????????????????????


வழக்கம் போல், காலையில், எந்த, ; எந்த வார்டில் டியூட்டி போட்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட வெண்ணிலா, லிப்ட்டில் ஏறி இரண்டாம் தளத்தை நோக்கிப் பயணப்பட்டாள்.
அது, குழந்தைப் பேறில்லாத தம்பதிகளுக்கு சிகிச்சை அளிக்கும், நகரின் பிரசித்தி பெற்ற, ரோகினி மருத்துவமனை.
இரண்டாம் தளத்தில், சோதனைக் குழாய் குழந்தை முறையில், பிள்ளை பெற்றுக் கொள்ள வருபவர்களுக்கான, கரு முட்டை சேகரித்திடும், பணி நடைபெறும் ஆய்வுக் கூடம் உள்ளது.
அங்கு தான், இன்று வெண்ணிலாவுக்கு பணி அமர்த்தப்பட்டு இருந்தது.
டாக்டர், ஷீபா அவள் தான், கரு முட்டை சேகரித்திடும், மருத்துவர்.
எப்போதும், அவளிடத்தில் ஒரு கம்பீரமான தோறறம் இருந்திடும். அதனைக் கண்டு வெண்ணிலாவுக்கே மிகுந்த பிரமிப்பு எழுந்திடும். " ஒன்னு டாக்டரா ஆகி இருந்திருக்கணும். இல்லை இப்படி நர்சிங் படிக்காமலாவது இருந்திருக்கணும். ச்சே என்ன பொழப்பு இது, எப்படி இருந்தாலும் நம்ம ஒரு டாக்டருக்கு எடுபிடி தானே ' என்று தான் அவளுக்குள் எண்ணம் எழுந்திடும்.
அவள் சென்று, அன்று கரு முட்டை சேகரிப்பதற்காக வந்திருந்த பெண்களிடம் சில விவரங்களைக் கேட்டறிந்து கொண்டு, அதனை அவர்களுக்கான பிரத்யேக ஃபைல்களில் குறித்து வைத்தாள்.
பின், சிகிச்சைக்குத் தேவையான, ஆய்வக உபகரணங்களையும் சீராக்கி வைத்தாள். அவள் தனது வேலையை முடிப்பதற்கும், மருத்துவர் ஷீபா அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது.
கிட்டத்தட்ட, இரண்டு மணி நேரங்கள் ஆனது. அங்கிருந்த நான்கு பெண்களிடமும் , இருந்து கரு முட்டைகளைப் பிரித்துச் சேகரித்து வைத்திட
அதனை, எடுத்துக் கொண்டு, சென்ற அவள் மருத்துவமனைக்கான பிரத்தியேக, பயாலஜிக்கல் ரெப்ரிஜிரேட்டரில் வைத்தாள்.
அவளுக்கு, இந்த செயற்கை முறை சிகிச்சைக்காக வரும் தம்பதிகளைக் கண்டால், மிகவும் வேதனையாக இருந்திடும்.
வலி ஒரு புறம், சிகிச்சைக்கு ஆகிடும் செலவு ஒரு புறம், என்று இரு பக்க இடி தாங்கிகள் அவர்கள் என்று தான் அவள் நினைத்துக் கொள்வாள்.
இன்னும், அவளுக்கு இதில் சில பெண்கள் தங்களது கருப்பையை, வாடகைக்குக் கொடுத்து பணம் சம்பாதிக்க வருகிறார்கள், என்பது பற்றித் தெரிந்த போது, மனத்தில் ஏதோ சொல்லத் தெரியாத, நெருடல் ஏற்பட்டு விடும்.
ஒரு வழியாகத் தனது வேலையை முடித்து விட்டு, தான் கையோடு கொண்டு வந்திருந்த சாப்பாட்டு டப்பாவை எடுத்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள் .அப்போது அவளது அலைபேசி ஒலித்தது.
மருத்துவமனை ரிசப்ஷனில் இருந்து தான்அழைப்பு வந்திருந்தது.
" மேம், சொல்லுங்க மேம். ஆங் முடிஞ்சுது மேம். இதோ உடனே வர்றேன் மேம். ம், ஓ.கே மேம். " என்று சொல்லி விட்டுத் தனது அலைபேசியைக் கிடத்தினாள் வெண்ணிலா.
?????????????????????
ரவிச்சந்திரன் எப்போதும் போல, காலை தினமணியில் தனது முகத்தைக் கவிழ்த்துக் கொண்டிருந்தான்.
நாளிதழை மறைத்தபடி, ஒரு கரம் அவனிடம் ஒரு பெண்ணின் புகைப்படத்தை நீட்டியது.
" ம்மா, என்ன இது. எதுக்கு இந்த போட்டோவை இப்படி நீட்டிட்டு இருக்கே? நான் தான் சொல்விட்டேன் இல்லை. உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா பார்த்து முடிச்சுருங்க " என்று சொன்னான்.
அதற்காக, அவன் தாய் சொல்லைத் தட்டாத, தனயன் என்று எண்ணி விட வேண்டாம் மக்களே!
ரவிச்சந்திரனுக்கு, இப்போது பெண் பார்ப்பது, திருமணப் பேச்சு வார்த்தைகள் என்றாலே ஒரு விதமான அதீத, வெறுப்பு ஏற்பட்டு விட்டிருந்தது.
ஏனென்றால், கடுமையான செவ்வாய் தோஷம், அவனை விடாது துரத்தித் துரத்தி அடித்துக் கொண்டு இருந்தது . ஜாதகப் பொருத்தம், பெண் பார்க்கும் படலம் என்று எல்லாம் திருப்திகரமாக இருந்து, இவனும் கல்யாண கனவுகளில், மூழ்கி விட நினைத்திருப்பான். அப்போது திடீரென்று ஒரு போன் வரும், இல்லை தரகர் வருவார்; பெண் வீட்டினர் திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டனர் என்று சொல்லிக் கொண்டு.
" இந்த போட்டோல இருக்கற பொண்ணைத் தான், நாம இன்னிக்கு சாயங்காலம் பார்க்கப் போறோம். அதான் உன் கிட்ட காட்ட வந்தேன் " என்று சொன்னாள் அவனது தாய் சுமதி.
" ம்ப்ச், இப்பப் பார்த்து என்ன ஆகப் போகுது.
எல்லாம் முடிவாகட்டும். அப்புறமா பார்த்துக்கறேன் " என்று அலட்சியமாக சொல்லி விட்டு எழுந்து கொண்டான் ரவிச்சந்திரன்.
குளியலறைக்குச் சென்று தனது காலை கடன்களை முடித்து விட்டு வந்தவன், அன்றைய தினம் சந்திக்க வேண்டிய, மருத்துவர்களைப் பற்றித் தான் குறித்து வைத்துக் கொண்டிருந்த நாளேட்டினை எடுத்து , அதில் தனது பார்வையைச் செலுத்தினான்.
' ரோகினி ஃபெர்டிலிடி கிளினிக் ' மருத்துவர் ஷீபா, அதன் பின்' அட்சயா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் ' .
" ம், ஓ.கே " என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், திரும்பிய போது அவனது பார்வையில் ,' என்னையும் கொஞ்சம் பார்த்துடேன் ' என்றபடி காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது, ஒரு புகைப்படம்.
ஒரு கணம் , நின்று அந்தப் புகைப்படத்தைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டவன், அதில் தனது பார்வையைச் செலுத்திய போது, அந்த புன்னகை விழிகள் அவனிடம் ஏதோ பேசின.
அந்த நீண்ட விழிகளுக்குள் சிக்கிக் கொண்ட அவனது பார்வை ,தன்னை மீட்டெடுத்துக் கொள்ள முடியாமல், தத்தளித்தது.
' ஓ, இவ்வளவு அழகானவளா நீ. வர்றேன், வர்றேன் கண்டிப்பா வர்றேன் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவாறே , சாப்பாட்டு மேஜைக்கு சென்றான் ரவி.
" அம்மா, டிபன் ரெடியா? சீக்கிரம் எடுத்துட்டு வா. லேட்டாகுது பாரு " என்று உரத்த குரலில் , அம்மாவை அழைத்திட அவளோ " இதோ வர்றேன்டா . இல்லை நீ இங்கே வந்து ஸ்டூலைப் போட்டு உக்காந்துக்கோயேன். என்னால அங்கேயும் இங்கேயும் நடக்க முடியலைடா " என்று சொன்னாள்.
உடனே, " இதோ நான் அங்கேயே வர்றேன் மா " என்று சொல்லி விட்டு சமையலறைக்குச் சென்று அங்கிருந்த ஸ்டூலைப் போட்டுக் கொண்டு, அம்மா நீட்டிய தட்டினைக் கைகளில் வாங்கிக் கொண்டு அமர்ந்து சாப்பிடத் தொடங்கினான்.
" அம்மா அப்புறம், சாயங்காலம் எத்தனை மணிக்கு நாம அங்கே பொண்ணு பார்க்கப் போகணும் " என்று கேட்டான்.
சுமதி அவன் பக்கமாகத் திரும்பி, " ஏதேது, நான் சொன்னப்ப அந்த பந்தா காட்டினே? இப்ப என்ன வந்துச்சி திடீர்னு. ஏன் நான் கொடுத்த பொண்ணோட போட்டாவைப் பார்த்துட்டியா?." என்று சிறிதான கிண்டல் தொனியில் கேட்டாள்.
" ச்சேச்சே, அதெல்லாம் இல்லையே
நீ ரொம்ப பாவம்மா. எத்தனை நாளைக்குத் தான் இப்படி கால் வலியோட கஷ்டப்படுவா. அதனால நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, உனக்கு உதவியாக இருக்குமேன்னு பார்த்தேன் " என்று சொன்னான் ரவிச்சந்திரன்.

( வரும்)
 
Last edited:
Top