Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெட்கத்திமிரில் வீழ்ந்தேனே -37

TNWContestWriter073

Well-known member
Member
விக்ரம் போட்ட திட்டத்தின் விளைவு அன்று மாலையே துர்காவை பொண்ணு கேட்டு வந்தனர் வினோத்தின் குடும்பத்தினர்.

அன்று மாலை தான் பூபதியின் தொழில் ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்தாகியிருக்க, இப்போது கடன் வாங்கிய தொகைகள் வேறு கழுத்தை நெறிக்க தொடங்கின...,

ஒப்பந்தங்களுக்காக வாங்கிய பொருட்களின் விலைகளே கோடியை தாண்டியது, அதை இப்போது திருப்பி கொடுத்தால் பாதி விலைக்கு தான் எடுத்துக் கொள்வார்கள் என்ற நிலையில், அதையும் யோசிக்காமல் செய்துவிட்டார் பூபதி,

விக்ரமிடம் வாங்கிய கடனுக்காக அந்த வீட்டை அடமானம் வைத்திருந்தார் இப்போது அதையும் விற்க முடியாத நிலையில் இருக்க, அவர் தொழில் ஒப்பந்தங்களை எப்படி திரும்ப வாங்க வைத்தானோ அதேபோல் கடன் கொடுத்தவர்களையும், பூபதி பணம் கொடுக்க வேண்டியவர்களையும்,பணம் கேக்க சொல்லி விக்ரம் நெருக்கினான்.... அவர்களும் விக்ரமிற்காக பூபதியிடம் கேட்டனர்,

ஊட்டில் இருந்த எஸ்டேட்டை உடனே விற்க வேண்டிய நிர்பந்தத்தில் தரகரிடம் சொல்லியவர் தலை வெடித்துவிடும் போல் வலியில் பூபதி இருக்க, அந்த சமயம் தான் வினோத்தின் குடும்பம் துர்காவை பெண் கேட்டு வந்தனர்.

பூபதி இருக்கும் நிலையில துர்காவின் கல்யாணத்திற்காக எதையும் செய்யும் நிலையில் இல்லை என்பதை தெளிவாக மாப்பிளை வீட்டில் சொல்லிவிட... இப்போது அதற்கும் சிவகாமி குதிக்க ஆரம்பித்தார்.

"அதுக்குனு பொன்னு வெக்கற எடத்துல பூவக் கூட வெக்க மாட்டிங்களோ, 100 பவுன் போட வேண்டா அதுல பாதி 50 பவுனுக்கு கூட வக்கில்லாத வூட்டுலையா பொண்ணு கட்டோனும் உங்களுக்குன்னு ஒரு மருவாதி வேணும்னா 50 பவுன் போடுக" என்று சிவகாமி ஆர்ப்பாரித்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயம் விக்ரம் புயலாக உள்ளே நுழைந்தவன், தான் கொடுத்த இரண்டு கோடியை திருப்பி தருமாறு கேட்டு சண்டையிட்டான்.

"உன்ற தொழிலெல்லா முடங்கி போச்சின்னு கேள்விப்பட்டே...நெசமா?"

"செஞ்சதே நீதானடா" என்று பூபதி உள்ளுக்குள் குமறியவர்.. "கொஞ்சம் அப்படி தானுங்க மாப்பிள இன்னும் முழுசா முடியலைங்க திரும்ப வந்துடுவேன்" என்றார் உறுதியாக.

"அப்புடி திரும்ப வர வுட்டுருவேனா?" என்று நினைத்தவன் "என்ற ரூவாவ எப்ப தர? " என்றான் ஆசால்ட்டாக.

"என்ன மாப்பிள வேத்து ஆளுங்க தான் ரூவா கேட்டு வெசனப்படுத்துறாங்கனா? நீங்களும் இப்புடி கேட்டா நா எங்குட்டு போவே..." என்றார் பூபதி.

"ஹாஹாஹா.." என்று சத்தமாக சிரித்த விக்ரம் அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்தவன், "சொந்தமெல்லாம் இப்போதான் உன்ற கண்ணுக்கு தெரியுதோ..? பெத்தப் புள்ளையே அந்த பாடுபடுத்துனீங்களே அப்போ தெரியல, இதுல நீயெல்லா சொந்ததப் பத்தி பேசற...ம்ம் சரி போகட்டும் இந்த காலத்துல தான் எந்த நாய் எப்புடி கொரைக்குதுன்னு சொல்ல முடியாதுல.. " என்று பூபதியை போற போக்கில் நாய் என்று சொன்னான்.

அது பொண்ணு பார்க்க வந்த வினோத்தின் குடும்பத்திற்கு அப்பட்டமாக தெரிய.. அவர்கள் பூபதியை கேவலமாக பார்த்தனர்.

பூபதிக்கு அவமானமாக இருக்க... தலைக்குனிந்து நின்றார்.

"பேச வேண்டிய எடத்துல பேசாம இருந்ததுக்கும் வூட்டுல ஒரு ஜீவன் வெசனப்பட்டத கண்டு காணாம போனதுக்கே உன்றைய இந்த நெலமைக்கு கொண்டு வந்துட்டேன், இன்னும் அவளுக்கு வெசனத்த கொடுத்தவீங்க எந்த நெலமைக்கு போவாங்கன்னு நெனச்சிப் பாத்துக்கோங்க" என்று எழுந்து தொடையை தட்டியவன், நீ வாங்குன ரூவாவ கொடுக்கற மாதிரி ஒன்னும் தெரியல, அதனால இந்த வூட்ட நா என்ற பேருக்கு நாளைக்கி ரிஜிஸ்டர் பண்ண போறேன், நா ரிஜிஸ்டர் மறு நெமிஷம் வூட்ட காலி பண்ணிப்புடோனும், விடியகாத்தால வந்து பாப்பேன் ஒரு ஈ காக்கா கூட இங்கன இருக்கக் கூடாது. மீறி இருந்தா கழுத்தப்புடிச்சி வெளிய தள்ளி கதவ தொறப்போட வேண்டியிருக்கும்".என்று கம்பீரமாக சொல்லியவன் திரும்பி அங்கு நின்ற சுலோச்சனாவை பார்த்து.. "உங்கள தெருவுல பிச்ச எடுக்க வூடாம மாட்டேன்" என்று ஆங்காரமாக சொல்லிவிட்டு ஒற்றை விரல் நீட்டி நாக்கை மடித்து அனைவரையும் நோக்கி எச்சிரிக்கை செய்துவிட்டு பார்த்தியுடன் வெளியே சென்று விட்டான்.

விக்ரம் வெளியே சென்றதும் பூபதி வினோத்தின் குடும்பத்தைப் பார்க்க..

"என்ற பைய விரும்பிட்டானேங்கற ஒரேக் காரணத்துக்காக தான் பொண்ணு கேட்டு வந்தோம், இப்போவும் சொல்லுதேன், எங்களுக்கு பொண்ணப் புடிச்சிருக்கு அதனால நாளைக்கு காலையில் முக்குல இருக்க அம்மன் கோவில கண்ணாலத்த வெச்சிக்கிடலாம், அதுக்கு பொறவு இத சாக்கா வெச்சிக்கிட்டு நீங்க யாரும் அங்க வரப்போவ இருக்கக் கூடாது" என்று ராமமூர்த்தி உறுதியாக சொல்லியவர் துர்காவை சம்மந்தம் பேசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

பார்த்திக்கு ஒன்றும் புரியவில்லை விக்ரம் இந்த அளவிற்கு இறங்கி அடிக்கிற அளவிற்கு என்ன செய்தார்கள் என்று குழப்பமாக இருக்க அதை அவனிடமே கேட்டுவிட்டான்.

விக்ரமும் மறைக்காமல் இரவு நடந்ததை சொல்லிவிட்டான்

"வெட்டிக் கூறுப் போடாம என்றா பேசிட்டு இருக்கற...? இவங்கள நடுத்தெருவுல நிறுத்தக் கூடாது சோத்துக்கே வழியில்லாமல் தங்க எடமில்லாம திரியோனும், மனுசங்களா இதுங்க ச்சை ஆகாதவீங்க கூட இந்த அளவுக்கு ஓசிக்க மாட்டாங்க" என்று கோவப்பட

"அத தான் செஞ்சிட்டு இருக்கேன், அது அந்த தமிழ என்ன பாடுபடுத்தறேன்னு மட்டும் பாரு" என்றவாறு காரில் ஏற பார்த்தி ஏறியதும் கிளம்பி விட்டான்.

ஓரளவிற்கு செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் முடித்தவன் இப்போது நிம்மதியாக வீட்டிற்கு சென்றான்.

காலையில் போல் வேண்டா அழுதுக் கொண்டிருக்காமல், மனதை மாற்ற ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்று தேடியவளுக்கு விக்ரமின் அலமாரியில் டைரிதான் இருக்க...அதை எடுத்து படித்துக்கொண்டிருந்தாள்.

எதிர்பாரா நேரத்தில் கிடைத்த உறவு நீ

என் துன்பங்களை பகிர்ந்து கொள்ள வரும் ஒரு உறவு நீ

எந்த உறவுக்காகவும் இந்த உறவை நான் இழக்க விரும்பவில்லை

கடைசி வரையும் இருப்போம் இந்த ஒரு உறவுக்காக எனக்காக நீயும் உனக்காக நானும்

என்றிருந்தது.

அடுத்தப் பக்கம் தேதி போட்டு எழுதியிருக்க அந்த தேதி வேண்டாவை காலையில் மருத்துவமனையில் பார்க்க சென்று வந்த பின்பு எழுதியது.

வார்த்தையில் சொல்லி புரிய வைக்க முடியாத என் அன்பை
வம்பிழுத்து புரிய வைக்க முயற்சிக்கிறேன்

உன் மீதான அளவிலா காதலை அடாவடியாக சொல்லிட ஆசை

என்றிருக்க வேண்டாவிற்கு இருந்த மனம் பாரம் எல்லாம் நீங்கி மன்னவனின் நினைவு வந்து ஆட்கொண்டு விட்டது.

கையில் பேனாவை எடுத்தவள்...விக்ரம் அவளை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறான் என முதல் நாளில் பார்த்ததில் இருந்து எழுத தொடங்கினாள்.

கொஞ்சம் முரடன் அவன்
கொஞ்சும் கவிதை அவன்
என் பெண்மையை ரசிக்க வந்த ரசிகன் அவன்
காதல் அரசன் அவன்
எனக்காய் உதிர்த்த உதிரம் அவன்
என்னையே உலகமாய் ஏற்றான் அவன் என்று இன்னும் விக்ரமை பற்றி அவள் மனதில் தோன்றிய வார்த்தைகளுக்கு வரிவடிவம் கொடுத்துக்கொண்டிருக்க விக்ரமின் கார் உள்ளே வரும் சத்தம் கேட்டது.

டைரியை மூடி வைத்துவிட்டு கீழிறங்கி சென்றாள்.

இவ்வளவு நேரம் இருந்த மனப்பாரம் குறைந்ததால் சட்டென்று செய்யும் உணவாக அரிசி பருப்பு சாதத்தை செய்ய சமையலறைக்குள் செல்ல...பூனைப் போல் அவள் பின்னால் வந்து நின்ற விக்ரம் காற்றுப் புக வழியில்லாத அளவிற்கு பின்னால் இருந்து இறுக்கி அணைத்தான்.

"என்னுங்க......." என்று வேண்டா சிணுங்கினாலும் அவன் அணைப்பிற்கு ஒத்துழைத்தாள்.

"ஏனுங்க...." என்று விக்ரமும் கிண்டலாக ராகம் இழுக்க

"சோறு ஆக்க வேண்டாங்களா?"

"எம்பட வைத்து பசிய வுட வேற அசுர பசி தாங்க இருக்கு தீக்க ஏதாவது தீணி வேணுமுங்க, என்று அவள் உதட்டை இரு விரல்களால் பிடித்து இழுக்க..

வேண்டா கூச்சத்தில் நெளிந்தாள். அதை ரசித்துக் கொண்டே

" ஏற்கனவே விக்ரம் அடவாடி தான் பன்றான், ரொமான்ஸ் அம்புட்டா வரலன்னு பாக்கறவீங்க பேசிக்கிறாங்க இன்னுமும் நா ரொமான்ஸ் பண்ணலன்னா படிக்கிறவிங்களுக்கு என்ன மதிப்பு சொல்லுங்க" என்று வேண்டாவின் கழுத்தில் மூக்கால் உரசி இடப் பக்க காது மடலை பற்கள் கொண்டு கடிக்க

"ம்ம்" என்ற மெல்லிய முனுங்களுடன் வேண்டா நெளிந்தாள் அவள் முகம் செந்தூரமாக மாறி இருந்தது.

"இங்க பாருங்க அம்மிணி"

வேண்டா தலையை திருப்பி இட வலமாக பார்த்துவிட்டு "எங்கிங்க பாக்கறது...?" என்றாள் அந்த கேள்வியில் வேண்டாவின் கண்கள் சிரிப்பில் மலர்ந்து விரிந்திருந்தது.

"இந்த கிண்டல் தானே... வேண்டாங்கறது.."

"நீங்க தானே பாக்க சொன்னிங்க?"

"ஓ இதுதான் கோயம்பத்தூர் குசும்புங்கறதா... இதெல்லா 90 லையே பேஃன் பண்ண பழைய காமெடிடி" என்றான் நக்கலாக.

"நீங்க பேசறத மட்டும் இப்போ ட்ரெண்டுலயா வெச்சிருக்காக" என்று விக்ரமிற்கு போட்டியாய் பேச தொடங்கிவிட்டாள் வேண்டா..

" வாயாடாம... சீக்கிரம் சோத்த ஆக்குடி... எமக்கு எப்ப ரூமுக்கு போவோம்ன்னு இருக்கு.."

"வெரசா செய்ய தான் அரிசி பருப்ப போட்டுருக்கேன்னுங்க.."

"பார்டா அம்மிணி என்ற வுட பாஸ்டா இருக்கா.." என்று வேண்டாவின் பின் முதுகில் வடிந்த வியர்வையை உதடுகள் கொண்டு துடைத்தான்

"இப்புடி பண்ணிட்டு இருந்திங்கன்னா எப்புடி சோத்த ஆக்கறது.." தள்ளிப் போங்க.. என்று விக்ரமை தள்ளிவிட...

வேண்டாவின் முந்தானையை பிடித்து இழுத்து ஒரு சுற்று சுற்றி அவளின் இடுப்பை பிடித்து தூக்கி அடுப்பு மேடையின் மீது அமர்த்தியவன்.. "நீ இரு நா செய்யறே.." என்றான்.

"உங்களுக்கு சமைக்க தெரியுமா?"

"ஏ இம்புட்டு நல்லா வக்கி புள்ளையும் புண்ணாக்கையுமா தின்னே சோத்த தானடி தின்னே.."

"அது சரி நா கூட ராதா அக்கா சமைச்சி கொடுப்பாங்கனு நெனச்சிட்டேன்.."

"நா வெளியே போற அன்னிக்கு சமைக்க வருவாங்க.. நா வூட்டுல இருக்க நேரம் அவங்கள வெளி வேலய பாத்துக்க சொல்லிப்புட்டு எமக்கு என்ன வேணுமோ அத நா செஞ்சிகிடுவேன்" என்று குக்கருக்கு வெயிட்டை போட்டவன்.

"உமக்கு ஏதாவது செஞ்சி தரட்டும்மா கேளு மாமா நல்லா செய்வேன்" என்றான்.

"வேண்டா சாமி பொறவு பாத்ரூமுக்கும் பெட்ரூமுக்கும் நடையா நடக்க முடியாது". என்று வாய் பொத்தி சிரிக்க..

வேண்டாவின் சிரிப்பில் மயங்கியவன், என்னமோ தெரியலடி நா கோவமா இருக்கும் போது உன்ற சிரிப்பும் உன்ற கண்ணு கெஞ்சுமே இதுவும் பாத்தா போதும் அம்புட்டு கோவமும் இருக்கற எடம் தெரியாம ஓடி ஒளிஞ்சிக்குது, அப்புடி என்னடி சிரிப்புல மருந்து வெச்சிருக்க..?" என்றவன் வெங்காயத்தை உரித்தான்.

அதுதான் செஞ்சிபுட்டோமே இன்னும் எதுக்கு வெங்காயோ, என்று பேச்சை மாற்றினாள் அவனின் கேள்விக்கு பதில் சொல்ல வெட்கமாக இருந்தது

"ஆம்லேட் போட..."

"நீக சாப்புடுறிங்களா...?"

"இல்ல உமக்கு"

"எமக்கா..?"

"ஏ வேணாமா?"

"வேணுமே அப்போ ரெண்டு முட்டையா போடுங்க... ஆமெலேட் ரொம்ப ஸ்டாராங்கா இருக்கோனும்." என்று இதழ் பிரித்து சிரிக்க..

"எல்லா என்ற நேரோடி..." என்றவன் அவள் கேட்டது போலவே போட்டு வேண்டாவின் கையில் கொடுத்தான்.

அதை ஆசையாக சாப்பிட்டவள் ருசியில் தன்னை மறந்து போனாள்.

"எப்புடிடி இருக்கு?"

"ம்ம் செமையா டேஸ்டா இருக்குங்க மெளகு தூளு தான் கொஞ்ச தூக்கலா இருக்கு.."

'பொறவு நீ தான் காலையில இருந்து அழுதுட்டே இருந்தில"

"அதுக்கு"

"தொண்ட தண்ணி வத்திப் போய் கொரலு கரகரன்னு ஆகிடுச்சு அதுக்காக தான் தூக்கலா போட்டேன்.. நசநசன்னு கேள்வி கேக்காம தின்னுடி.."

"நீங்களும் ஒரு வாய் தின்னுப் பாருங்க" என்று அவனுக்கு ஊட்ட மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்டான்.

அதன்பின் இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அறைக்குப் போக... கீழே இருந்து வேண்டாவை கையில் ஏந்திக் கொண்டான் விக்ரம்.

"என்னுங்க பொசுக்குன்னு பொசுக்குன்னு தூக்கிகிடுறீங்க, வுடுங்க" என்று வேண்டா நெளிந்தாலும் விக்ரம் அவளை இறக்கி விடவும் இல்லை, பேசவுமில்ல.

கையில் மிதக்கும் கனவா நீ...
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்திக் கொண்டு..
இந்திர லோகம் போய் விடவா...
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
சந்திர தரையில் பாயிடவா

பாடிக்கொண்டே மொட்டை மாடிக்கு தூக்கிச் சென்று விட்டான்.

"இங்க எதுக்குங்க கூட்டியாந்திங்க..?"ரூமுக்கு போகலையா?"

"சும்மா இந்த நிலா அழகா? என்ற பொண்டாட்டி அழகான்னு? பாக்க தான்.. உன்ற பக்கத்துல நெலா கொஞ்ச சுமாரா தான் தெரியுது" என்று அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

"சும்மா சொல்லோணும்னு சொல்லக்கூடாதுங்க.. நெலா எம்புட்டு அழகு"

"நெசமா தாண்டி... அதுக்கிட்ட கூட கலங்கம் இருக்கும்,என்ற பொண்டாட்டி மனசு கரந்த பால் மாதிரியாக்கோ..." என்றவன் கன்னம் தாண்டி காது மூக்கு நெற்றி என்று முத்ததால் வலம் வந்தவன்..

"நெம்ப நாளா ஆசடி உன்றக் கூட இப்புடி ஆச ஆசையா பேசி உன்ற முகம் முழுக்க முத்தம் கொடுக்கோனும்னு.." என்று இதழை கவ்விக் கொண்டான்.
ஒரு வாரத்திற்கு பின் கிடைக்கும் முத்தத்தை அழுத்தி ஆழமாக கொடுக்க.. வேண்டா அதில் கிறங்கி போய்விட்டாள்..

அவளது கை தானாக விக்ரமின் தலை முடிக்குள் நுழைந்துக் கொண்டது.

வேண்டாவின் இசைவில் விக்ரமிற்குள் புதுவித பூகம்பம் எழ... அன்று ஏனோ தானோ என்று நடந்த நிகழ்வில் ஒன்ற முடியாமல் தவித்தவன் இன்று ஒவ்வொரு அணுவையும் ரசித்து அனுபவிக்க தொடங்கிவிட்டான்.

இதழ் பதித்துக் கொண்டே கைக் கொண்டு வேண்டாவின் உடலில் ஊர்வலம் நடத்தினான்.

அவன் கை அவளது இடையில் வந்து அழுத்தமாக பதிய, வேண்டா வேற உலகத்திற்குள் சென்றுக் கொண்டிருந்தாள்.

தரையையே மஞ்சமாக்கி வேண்டாவை படுக்க வைத்தவன் அவளின் மீது படர்ந்தான்.

விக்ரமின் வரைமுறையற்ற பேச்சில் வேண்டாவின் உடல் அதிர அவனை தலைநிமிர்ந்து பார்க்கவே கூசிப் போனாள். அவள் காதில் தன் தேவையை சொல்லி ஆசையும் ஏக்கமும் கலந்த பார்வைப் பார்க்க..வெட்கம் உடலை கூறுப் போட்டாலும் விக்ரமின் தேவையை தயங்கி தயங்கி நிறைவேற்றினாள்.

இருவருக்குமே உணர்வு குவியல் கட்டவிழ்த்து சிதற... அந்த நிலவும் கூட இவர்களின் கூடலைக் கண்டு வெட்கத்தில் மேகக்கூட்டங்களுக்கு இடையே சென்று மறைந்துக் கொண்டது.

வேண்டாவிற்கு இந்த நேரம் அவள் உயிர் போனால் கூட சந்தோசமாக விக்ரம் மடியில் தலை சாய்த்தவாறு இறக்க தயாராக இருந்தாள்.

அதை விக்ரமிடமும் சொல்ல..

"கூறு கெட்டவளே இப்போதான் வாழ்வே ஆரம்பிச்சிருக்கோ அதுக்குள்ளார பேசுற பேச்சப்பாரு" . என்று விக்ரம் அதட்டி வேண்டாவை இழுத்து அவன் மார்போடு அணைத்துக் கொள்ள..

வேண்டாவும் விக்ரம் மார்பு முடியை தான் விரலில் சுற்றி விளையாட தொடங்கிவிட்டாள்.

வீட்டிற்கு வெளியே விக்ரம் கையில் மற்றவர்கள் விளையாட்டு பொம்மையாக மாறி போவார்கள் என்றால் வீட்டின் உள்ளே வேண்டாவின் கையில் தன்னை பொம்மையாக கொடுத்து நின்றான் அந்த அசுர காதலன்.

இரவு முழுவதும் இருவரும் கூடுவதும்,மனம் விட்டு பேசுவதுமாக சற்று நேரம் கூட கண் அயரவில்லை.மனதில் இருப்பதை அனைத்தையும் விடிய விடிய பேசி ஓய்ந்தார்கள்...அவர்களுக்கு இடையே அழகான தாம்பத்திய வாழ்க்கை தொடங்கி இருவரையும் வழிநடத்தியது.
 








Advertisement

Advertisement

Top