Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)- 11

Advertisement

praveenraj

Well-known member
Member

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)

மெல்பேர்ன் விமான நிலையத்திலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மெல்டன் என்னும் இடத்தில் தான் அகல்யா வசித்துவருகிறாள். நவிரன் தங்குவதற்கென்று பார்க்கப்பட்டிருந்த பிஜி ஃபூட்ஸ்க்ரே(footscray) என்னும் இடத்தில் இருந்தது. மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் தான் அவன் பிஜி இருந்தது. அங்கு செல்வதற்கென்று டிராம், ட்ரெயின், பேருந்து, டேக்சி முதலிய பல வசதிகள் இருந்தும் அவனுக்கென்று ஒரு சைக்கிள் வாங்கிக்கொள்ள அவன் முடிவெடுத்திருந்தான். நம் நாட்டைப் போல் அல்லாமல் அங்கே சைக்கிள் செல்வதற்கென்று ப்ரத்தியேக பாதை இருந்தது. இங்கு வந்து இறங்கியதுமே அந்த சைக்கிள் பாதை தான் அவன் கண்களைக் கவர்ந்தது.

"அப்பறோம் எப்படி நவி நீ காலேஜுக்கு வரப் போற?" என்ற அகல்யாவின் கேள்விக்கு அவன் சொன்ன பதில் ஆச்சர்யம் கொடுத்தது.

"ரியல்லி இம்ப்ரெஸ்ஸட் நவி. நம்ம ஊர்ல எல்லாம் பக்கத்துத் தெருவுக்குப் போகணும்னாலும் கூட எல்லாம் பைக்கை தான் எடுக்கறாங்க. சைக்கிள் ஓட்டுறதெல்லாம் இன்னைக்கு ஒரு ப்ரஸ்டீஜ் இஸ்ஸு ஆகிடுச்சு. ஏற்கனவே ஆள் பாக்க நல்லா ஃபிட்டா சூர்யா மாதிரி தான் இருக்க. நீ வேணுனா பாரு உன் சார்முக்கு இந்த ஊர் பொண்ணுங்க எல்லாம் உன்ன சுத்தி வட்டமடிக்கப்போறாங்க. கொஞ்சம் இங்க இருக்குற பசங்களுக்கும் கருணை காட்டுனா நல்லா இருக்கும்" என்று அவனை வழக்கம் போல் வாரினாள் அகல்யா.

"பார்த்தியா ரிதம் படத்துல வர நண்டு கதை மாதிரி ஒரு தமிழச்சியே ஒரு தமிழனை கவுக்குற இல்ல?" என்று நவி அவளை வம்பிழுத்தான்.
அதன் பின் அவர்கள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட அங்கிருந்த வீடுகளை எல்லாம் ரசித்தவாறு இறங்கியவனுக்கு முன் நின்றவரைக் கண்டதும் அவர் தான் அகல்யாவின் தந்தையாக இருக்க வேண்டும் என்று அவன் யோசிப்பதற்குள்,

"நவி, மீட் மிஸ்டர் பார்த்திபன். இங்க இருக்கும் ஒரு பிரபலமான சாஃப்ட்வேர் கம்பெனில எச்.ஆர் டிபார்மென்ட்ல ஒர்க் பண்ணுறார்..." என்று அறிமுகப்படுத்த,

"அப்போ இந்தியா இன்னும் வல்லரசு ஆகாம இருப்பதற்கு உங்க அப்பாவும் ஒரு வகையில காரணம்னு சொல்லுற?" என்று விளையாட்டாகக் கேட்டவன் தான் ஏதோ உளறிவிட்ட ஞாபகத்தில் திருதிருவென விழித்து,

"அங்கிள், சாரி நான் ஏதும் தப்பா மீன் பண்ணுல. ஐ அம் ஜஸ்ட் கிட்டிங்..." என்று நவி சொல்லியும் அவன் தன்னுடைய ரியாக்சனை மாற்றாமல் இருக்க நவி இன்றிரவு முழுவதும் இந்த மெல்போர்ன் நகரை ராப்பிச்சைக்காரன் போல் வலம் வரும் ஒரு காட்சி அவன் கண்ணில் தோன்றி மறைந்தது.

நவிரனின் முகத்தைக் கண்டவள் பொறுக்கமாட்டாமல் சிரித்துவிட அவளுடன் சேர்ந்து பார்த்திபனும் சிரித்தார்.

"என்ன நவி ராத்திரி முழுக்க இந்த மெல்போர்ன் நகரை பிச்சைக்காரன் போல சுத்துறதா நெனச்சிப் பார்த்தியா?" என்று கேட்ட அகல்யா அதே காட்சியை அவளும் எண்ணிப் பார்த்து வெடித்துச் சிரித்தாள்.

"ஏ அகி, தம்பி ரொம்ப பயந்துட்டார். உள்ள கூட்டிட்டு வா" என்று அவர் உள்ளே சென்றுவிட,

"என்ன நவி பயந்துட்டியா? என் கூட அரை மணிநேரம் ட்ராவல் பண்ணியும் கூட என் கேரக்டரை நீ இன்னும் புரிஞ்சிக்கல? நான் ஒரு ஜாலி டேக் இட் ஈஸி கேர்ள். உனக்குப் புரியுற மாதிரி சொல்லனும்னா" என்று அவள் யோசிக்கும் முன்னே,

"சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா மாதிரி. என்ன சரியா?" என்று சிரித்தவனின் வலது கையில் ஓங்கிக் குத்தியவள் அதன் திண்மையைக் கண்டு,

"என்ன ஆர்ம்ஸ்ட்ராங்கா நீ? வா போலாம்" என்று அழைத்துச் சென்றாள்.

"என்னுடைய இந்த ஜெனியிலா கேரக்டெர் எங்க இருந்து வந்ததுனு நெனைக்குற? எல்லாப் புகழும் பார்த்திபனுக்கே" என்று தன் தந்தையையும் சேர்த்து வாரினாள் அகல்யா.

உள்ளே சென்றவனை அவள் அன்னை சுபாஷினி வரவேற்க பின்பு அவர்களுடன் மீண்டும் தன்னைப் பற்றிய வீகத்தைத்(அதாங்க பூர்வீகம்) தெரிவித்தான்.

"ஓ அந்த பவித்ரா குமாரசாமி உங்க அம்மாவா?" என்று சுபாஷினி கேட்டதும்,

"ஆண்ட்டி எங்க அம்மா புக்ஸ் எல்லாம் படிச்சிருக்கீங்களா?" என்று கேட்டதும் சாப்பிட்டுக் கொண்டிருந்த அகல்யாவுக்குப் புரை ஏறிவிட்டது.
அதைக் கண்டு சுபாஷினி முறைக்க,

"எங்க அம்மாவைப் பார்த்தா புக்ஸ் படிக்குற மாதிரியா தெரியுது? ஆம் படிப்பாங்க எப்போ தெரியுமா? ஒருவேளை நைட் படுத்ததும் தூக்கம் வரலைனா ஒரு புக்கை எடுத்து ரெண்டு வரி படிச்சாலே அவங்களுக்குத் தூக்கம் வந்திடும்" என்று சிரித்தவளை அவள் அன்னை முறைத்தார்.

"அப்பறோம் எப்படி எங்க அம்மாவைத் தெரிஞ்சி வெச்சிருக்கீங்க?"

"அதுவா இவளோட க்ளோஸ் ஃப்ரண்ட் ஒருத்தி இருக்கா. அவளுக்கு தமிழ் மொழி மேல அவ்வளவு பிரியம். நிறைய புக்ஸ் எல்லாம் தேடித்தேடி படிப்பா. என் தங்கச்சிகிட்ட இருந்து புக்ஸ் எல்லாம் கேட்டுப் படிப்பா. என் தங்கை உன் அம்மாவோட ஃபேன். இது உண்மை தான் ப்பா" என்று அவர் முடிக்க நவிக்குத் தன் அன்னையை நினைக்கையில் ஒரு கர்வமும் பெருமையும் வந்து போனது.

அதும் கண்டம் விட்டு கண்டம் தாவி தமிழ் மீது கொண்டுள்ள பற்றில் தலைமுறைகளைக் கடந்தும் (பெரும்பாலும் அவன் அன்னை எழுதும் கதை எல்லாம் குடும்பம் சார்ந்தவையே. அது அவர்கள் தலைமுறைக்குப் பிடிக்கும். இந்தத் தலைமுறைக்கும் அது பிடிக்கிறதா என்பதில் அவனுக்கு ஐயம் இருந்தது என்னவோ உண்மை) வாசிக்கும் அந்தப் பெண்ணை நினைக்கையில் அவனையும் அறியாமல் ஒரு பிரமிப்பு உண்டானது.

"ஹூய், என்ன சப்பாத்தி வாயிலேயே வெக்க முடியலையா? என்னை ஜெனிலியானு கிண்டல் பண்ண இல்ல? எப்படி என் பனிஷ்மென்ட்?" என்று அகல்யா கேட்டதில் சிரித்தவன்,

"ஆண்ட்டி, உங்களைவிட அகல்யா நல்லாவே சமைப்பாளாம். ஆனா நீங்க தான் அவளுக்கு சமைக்க வாய்ப்பே தரதில்லையாமே?" என்றதும்,

"தயவு செஞ்சு அந்தப் பாவத்தை மட்டும் பண்ணிடாதப்பா" என்று பார்த்திபன் கொடுத்த ரியாக்சனில் மீண்டும் எல்லோரும் சிரித்து ஒரு வழியாக உண்டு முடித்தனர்.

எல்லோரும் ஹாலில் அமர்ந்து கதை பேச நவி அந்தக் கேள்வியைக் கேட்டான்.

"ஏன் அங்கிள் நீங்க இந்தியாவை மிஸ் பண்ணலயா?"

"அப்படினு யாருப்பா சொன்னது? நீ ஒருத்தன் வந்ததையே நான் மொத்த தமிழ்நாடே வந்ததா நினைக்குறேன். என் ரிட்டையர்மெண்ட் பிளான் எல்லாம் தமிழ்நாட்டுல தான். அதும் நான் பிறந்து வளர்த்த திருச்சி தான் என் செகண்ட் இன்னிங்ஸ கழிக்க விரும்புறேன்...' என்று சொன்னதும் அதே கேள்வியை அகல்யாவிடம் கேட்டான் நவி.

"இங்க இருக்குற பசங்க எல்லாம் ப்ராய்லர் மாதிரி. பார்க்க வெள்ளையா இருந்தாலும் அவ்வளவு சைட் அடிக்க தான் லாயக்கி. நமக்கு எப்பயுமே நாட்டுக்கோழி தான்" என்று கண்ணடித்தாள் அகல்யா.

"அடிப்பாவி பசங்களைப் பார்த்தா உனக்கு கோழி மாதிரி தெரியுதா?"

"அப்போ நீங்க சொல்றது மட்டும் சரியா?" என்றவளைக் கண்டு வியந்தவன்,

"என்ன அங்கிள் இந்தப் போடு போடுறா?"

"அது சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். சரிப்பா பேசிட்டு இருந்ததுல மணி போனதே தெரியல. அகி இவரை நம்ம கெஸ்ட் ரூமுக்கு கூட்டிட்டுப் போ. காலையில பார்ப்போம் நவிரன். குட் நைட்" என்று அவர் சென்றுவிட,
நவிக்கு அவன் தங்கும் அறையைக் காட்டியவள்,"ட்ரஸ் எதாவது வேணுமா சேஞ் பண்ணிக்க?"

"ஷார்ட்ஸ் ஏதாவது இருக்கா?"

"அதை விட ஒரு சூப்பர் ஐட்டம் இருக்கு"

"என்னது?"

"பொம்மிஸ் நைட்டீஸ். என்னை நான் ஒரு பெண்ணா உணர்ரதே இதுல தான்" என்று சொன்னதும்,

"அடிங்கு, உன்னை என்ன பண்ணுறேன் பாரு" என்று துரத்தினான் நவி.
பிறகு தன் தந்தையின் வேஷ்டி ஒன்றைக் கொடுத்தவள்,"இன்னைக்கு காலையில எழுந்ததுல இருந்தே நான் ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ணேன். நம்ம லைஃப்ல ஒரு முக்கியமான நபரை நாம இன்னைக்கு மீட் பண்ணுவோம்னு என் இன்டியூசன் சொல்லிட்டே இருந்தது. ஆனா நைட் ஒன்பது ஆகியும் யாரையுமே நான் மீட் பண்ணலன்னு நெனச்சிட்டு இருக்கும் போது தான் ஆடு மாதிரி நீ என்கிட்ட சிக்குன. பட் இட் இஸ் நைஸ் டு ஹேவ் மெட் யூ(உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி). அது போக நாம ஒரே கேம்பஸ்ல வேற படிக்கப்போறோம். குட் நைட்" என்று செல்லவிருந்தவளின் கரத்தைப் பற்றிக்கொண்டான் நவிரன்.

"என்ன?"

"ஒருவேளை இன்னைக்கு மட்டும் நான் உன்னைச் சந்திக்காம போயிருந்தா நீ சொன்ன மாதிரி நான் ரோடு ரோடா அலைஞ்சிட்டு இருக்கனும். உன் இடத்துல நான் இருந்திருந்தா கூட இப்படி யாரு என்னனு தெரியாம வீடு வரை கூட்டிட்டு வந்திருப்பேனானு தெரியில அகி. இந்த ஆஸ்திரேலியால எனக்குக் கிடைச்ச முதல் ஃப்ரண்டு நீ தான். நம்ம வாழ்க்கையில நமக்கு முதல்ல அமையுறதே பெஸ்டா கிடைக்குறதெல்லாம் தொடுவானம் போன்றது. கரெக்ட்டா அந்த மேஜிக் பாயிண்டை கண்டுபிடிக்கவே முடியாட்டியும் அது எப்பயுமே எல்லோருக்குமே ஒரு ஆச்சர்யம் கொடுக்கும். அது சரி ஆண்ட்டி யாரோ ஒரு பொண்ணைப் பத்தி சொன்னாங்களே அது யாரு?"

"அதானே பார்த்தேன். அந்தப் பொண்ணைப் பத்தின டீடெய்ல்ஸ் வேணும்னு தான் தொடுவானம் கீழ்வானம் தூவானம்னு கதை விட்டயா? ஃபிராட் பையா" என்று அவள் அவனை கிண்டல் செய்தாள்.

"நம்ம ஃப்ரண்ட்ஷிப்பை உணர்த்த எவ்வளவு கஷ்டப்பட்டு உவமையெல்லாம் பிடிச்சேன். நீ என்னடானா பொசுக்குனு கிண்டல் பண்ற"

"சரி அதை விடு. உனக்கெதுக்கு அந்தப் பொண்ண பத்தித் தெரியணும்?"

"இதென்ன கேள்வி? கண்டம் விட்டு கண்டம் வந்து தமிழ் மொழியைக் காப்பாற்றும் அந்தப் பொண்ண பார்க்கணும்னு ஒரு கியூரியாசிட்டி. அது போக அந்தப் பொண்ணு என் அம்மாவோட தீவிர ரசிகை வேறயாம். அதான் சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னு..." என்று நவி இழுத்தான்.

"தெரியறதென்ன உனக்கு அவளை இண்ட்ரோவே கொடுக்குறேன். ஆனா அதுக்கு நீ காலேஜ் தொறக்கும் வரை வெய்ட் பண்ணனும் ராசா"

"சரி அந்தப் பொண்ணு பேராச்சும் சொல்லிட்டுப் போ அகி"

"எதுக்கு நைட்டெல்லாம் முழிச்சிருந்து எப்.பில அவளைத் தேடவா? சஸ்பென்ஸோடவே தூங்கு. குட் நைட்"

"ஏ ஏ எனக்கு சஸ்பென்ஸ் தாங்காது. மண்டை வெடிச்சிடும் டி"

"வெடிச்சா காலையில நான் அதை ஒட்ட வெச்சிடுறேன். பை..." என்று அகல்யா சென்றுவிட நவிரனுக்கு ஏற்பட்ட முதல் மைக்ரேனுக்கு காரணமானாள் ஐவி சுதர்சன்.

காதலால் நிறைப்பாள்...
 
பொம்மிஸ் நைட்டீஸ். என்னை நான் ஒரு பெண்ணா உணர்ரதே இதுல தான்" என்று சொன்னதும்,
????????????
நம்ம வாழ்க்கையில நமக்கு முதல்ல அமையுறதே பெஸ்டா கிடைக்குறதெல்லாம் தொடுவானம் போன்றது. கரெக்ட்டா அந்த மேஜிக் பாயிண்டை கண்டுபிடிக்கவே முடியாட்டியும் அது எப்பயுமே எல்லோருக்குமே ஒரு
?????????
"இதென்ன கேள்வி? கண்டம் விட்டு கண்டம் வந்து தமிழ் மொழியைக் காப்பாற்றும் அந்தப் பொண்ண பார்க்கணும்னு ஒரு கியூரியாசிட்டி. அது போக அந்தப் பொண்ணு என் அம்மாவோட தீவிர ரசிகை
அஞ்சுவோ ??
"வெடிச்சா காலையில நான் அதை ஒட்ட வெச்சிடுறேன். பை..." என்று அகல்யா சென்றுவிட நவிரனுக்கு ஏற்பட்ட முதல் மைக்ரேனுக்கு
?? ஏன் எதற்கு, மஞ்சள் மாலை தக்காமோ எவ்வளவு சஸ்பென்ஸ் praveen?? Ivy யாரு ????
அஞ்சு, அகல், ஐவி யாரு காதலால் நிறைத்தார்கள்.

இப்படியே ponga, எல்லாமே கணேக்ட் ஆகுது ???
 
????????????

?????????

அஞ்சுவோ ??

?? ஏன் எதற்கு, மஞ்சள் மாலை தக்காமோ எவ்வளவு சஸ்பென்ஸ் praveen?? Ivy யாரு ????
அஞ்சு, அகல், ஐவி யாரு காதலால் நிறைத்தார்கள்.

இப்படியே ponga, எல்லாமே கணேக்ட் ஆகுது ???
??? அது ஐவி. எல்லாமே அடுத்ததடுத்த எபிஸோட்ஸ் ல தெரியும்? அதுல மூணு பேரும் காதலால் நிறைந்தவர்கள் தான். இருந்தும் அஞ்சு தான் ஹீரோயின். நன்றி. and thanks for your constant support pavithra???
 
Top