Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)- 14

Advertisement

praveenraj

Well-known member
Member

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)

மாத்திரையின் வீரியமோ இல்லை நாட்பட்ட தூங்கமின்மையோ இல்லை அடுத்துக் கிளம்ப போகும் பூதத்தைச் சமாளிக்க தேவைப்படும் பொறுமையோ எதுவென்று தெரியாத ஒன்று நவிரனை அடித்துப் போட்டது போலொரு நிலையில் உறங்க வைக்க அவனைத் தேடி மெர்ஸியே அவன் அறைக்குள் வந்துவிட்டார். 'சிஸ்டர் இன் லா' என்பதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக அவளொரு மூத்த சகோதரி போலவே அவனிடம் பழகுவாள். இவனும் ஒரு ப்ரதர் இன் லாவாகவே அவளை நடத்துவான்.

"நவி, நவி" என்று இருமுறை அழைத்தவள் ஒற்றைத் தலைவலியில் இருக்கும் போது பாதி தூக்கத்தில் எழுப்பினால் அது இன்னும் மோசமாகும் என்று அறிந்தவர் (எனக்குத் தெரிஞ்சு மைக்ரைன் போல வேற எந்த ஒரு வியாதியும் கிடையாது. உங்களை உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாவும் அதிகம் பாதிக்கும். அனுபவம் பேசுகிறது?) அவனை எழுப்பிவிட மெர்ஸியைத் தவிர்த்து வேறு யார் இருந்திருந்தாலும் அவன் நடவடிக்கையே வேறு ஆகியிருக்கும்.

"என்னை ஏன் எழுப்பனிங்க?" என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவரைப் பார்க்க,

"நீ காலையில இருந்து சாப்பிடல. இப்போ மணி நாலாகப் போகுது. நேத்து நைட்டும் சாப்பிட்டயோ இல்லையோ?" என்று கேட்டதும் அவர்மீது எரிந்து விழுந்ததை எண்ணி வருந்தியவன்,

"நான் குளிச்சிட்டு வரேன் அண்ணி. எனக்கு காஃபி மட்டும் நல்லா ஸ்ட்ராங்கா சூடா வேணும்..." என்று அவன் குளிக்க சென்றுவிட பவித்ராவும் காஃபி கேட்கும் போது இதைத் தானே உரைப்பார் என்று அவரையும் அறியாமல் தாயையும் மகனையும் ஒப்பிட்டுப் பார்த்தது அவர் மனம்.

அந்த அறையில் இருந்த நவிரன் அஞ்சனா திருமண படத்தைக் கண்டவர் இருவருக்குள்ளும் அப்படி என்ன சண்டை வந்திருக்கும் என்று எண்ணிக்கை இல்லா முறையாக யோசித்தார்.

தயாராகி கீழே வந்தவன் பவியின் அறையைத் திறந்து அவரைப் பார்த்து உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று எப்போதும் போல் தனக்குளேயே விவாதம் நடத்தியவன் உள்ளே செல்ல அடிவைக்கையில்,

"காஃபி ரெடி" என்றவரின் குரலில் அவரை நோக்கிச் சென்றான்.

"என்ன ஆச்சாம் அண்ணி?" என்று அவன் கேட்கும் போதே அவன் குரல் உள்ளே சென்றிருந்தது.

"நவி, நான் உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணி இந்த பதினோரு வருஷத்துல உன்கிட்ட நான் எதையுமே கேட்டதில்லை. நான் கேக்காமலே என் ஆசையெல்லாம் நீ நிறைவேத்தியிருக்க. உன்னை நான் முதன்முதலா டியூசன்ல தான் பார்த்தேன். அப்போ உனக்கு பதினாலு வயசு. நீ என்னை நம்புறயோ இல்லையோ. நந்துவும் நிலனும் எனக்கு எப்படியோ அப்படித்தான் நீயும். உன் ஒருத்தனுடைய பிடிவாதம் ஒருத்தரை பெட்ல படுக்க வெச்சிருக்கு இன்னொருத்தரை வேற ஊர்ல தனியா இருக்க வெச்சிருக்கு. பாஸ்ட் இஸ் பாஸ்ட். அதுக்காக நிறைய ரிஃரெட் பண்ணியாச்சு. பழசை மறந்திடுன்னு சொல்ல முடியாது. அது கஷ்டம். அட்லீஸ்ட் புதுசை ஏத்துக்கோ. குறைஞ்சது அது உனக்கு பழசை ஞாபகப்படுத்தாமலாவது இருக்கும். மூணு வருஷம் எங்க மேரேஜை இதே அத்தை ஏத்துக்கல... ஆனா அதுக்கு அப்புறோம் இவங்க என்னை எப்படிப் பார்த்துக்கிட்டாங்க தெரியுமா? இப்போ நான் பழசை நினைச்சு ஃபீல் பண்ணுறதுல எந்த யூசும் இல்ல. அண்ட் அத்தை உங்களை இங்க கூப்பிட முடிவெடுத்து எங்க கிட்டச் சொல்லும் போது தான் அந்த போன்..." என்று மெர்ஸி தொடங்கும் முன்னே,

"நான் ஏற்கனவே ரொம்ப வீக்கா இருக்கேன். என்னை மேற்கொண்டு இரிடேட் பண்ணாதீங்க ப்ளீஸ்..."

"நவி, எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணுவியா?"

"என்னனு சொல்லுங்க. அப்பறோம் பண்ணலாமா வேண்டாமான்னு சொல்றேன்" என்று நவி சொன்னதும் மெர்ஸியின் முகம் சற்று வாடிப் போனது.

"தசரதன்ல இருந்து பிரம்மா வரை பல பேர் என்ன ஏதுன்னு விசாரிக்காம வாக்கு கொடுத்து அவங்க அவஸ்தப்பட்ட கதையெல்லாம் உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறன். சோ என்னனு சொல்லுங்க..." என்று விளையாட்டாகச் சொன்னாலும் இதன் பின் ஏதோ சீரியசான விஷயம் ஒளிந்திருக்கிறது என்று நவிரனும் புரிந்துகொண்டான். இந்த நான்கைந்து ஆண்டுகளில் நவிரன் எப்போதாவது இப்படி மனம் விட்டுப் பேசும் வெகு சிலரில் மெர்சியும் ஒருவர்.

"உனக்கும் அஞ்சனாவுக்கும் இடையில என்ன பிரச்சனைன்னு நான் தெரிஞ்சிக்க விரும்பல. அது உங்க பெர்சனல். ஆனா எதுனாலும் நீங்க ரெண்டு பேரும் கலந்துப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. அதை விட்டுட்டு இப்படி ஆளுக்கொரு பக்கமா இருக்குறது சரியில்லை. 'சவால்'ங்கற வார்த்தைக்குள்ளையே தான் 'வாசல்'ங்கற வார்த்தையும் ஒளிஞ்சிருக்கு. நாம அந்த எழுத்துக்களை எப்படிக் கோர்க்குறோங்கறதுல தான் நம்ம எதிர்காலம் இருக்கு. நான் இப்படிக் கேக்குறதுல நிச்சயம் சுயநலம் ஒளிஞ்சிருக்கு. இப்போல்லாம் நலன் எப்போப்பாரு ஒரு வித பதட்டத்துலயே தான் இருக்கார். முன்னாடியெல்லாம் வீட்டுக்கு வந்தா பசங்ககூட விளையாடி சிரிச்சு கதை பேசி தான் தூங்கவே போவார். நலனுனு இல்லை. மாமா மட்டும் நிம்மதியா இருக்கார்னு நினைக்கறியா? இப்போ அத்தைக்கு உடம்பு சரியில்லாம போனதுல நத்துவும் ஒரு மாதிரி இருக்கா. அவ இன்னும் உன்கூட சிரிச்சு விளையாடி ரீல்ஸ் போட்ட குழந்தை இல்ல. அவளைச் சுத்தி நடக்குற எல்லாத்தையும் அப்செர்வ் செய்ய ஆரமிச்சுட்டா. பெரியவங்க நாம எப்படி இருக்கோமோ குழந்தைகளும் அப்படித்தானே இருப்பாங்க? நவி நீ உன்னைப் பத்தி மட்டுமே தான் நெனைக்குற. ஆனா எனக்குத் தெரிஞ்ச நவி இப்படி இருந்ததில்லை. அவனுக்கு அவன் ஃபேமிலி தான் எல்லாமே. அவங்க சந்தோஷத்துக்காக அவன் என்ன வேணுனாலும் செய்வான். கடைசியா ஒன்னு சொல்றேன் நவி, நம்ம வாழ்க்கை புத்தகத்தை எழுத நமக்கு பேனா தான் கொடுக்கப்படுது. சில சமயம் நம்ம அறியாமையில் இல்ல கவனக்குறைவில் தவறான வார்த்தைகளையோ வாக்கியங்களையோ எழுதிடுறோம். அது மேல ஒரு கோடு போட்டு அடுத்த வரியில எழுத ஆரமிச்சிடனும். அதை விட்டுட்டு அதை ஓவர் ரைட் பண்ணி மாத்த நெனச்சா புக் ரொம்ப அசிங்கமாகிடும். சில சமயம் அந்தப் பக்கம் கிழியக்கூட செய்யலாம். ஒரே இடத்துல ஒரே வார்த்தையில ஒரே வாக்கியத்துல தேங்கி நிக்குறதைக் காட்டிலும் இன்னொரு புது பக்கத்துல இன்னொரு புது அத்தியாயம் எழுதலாம். ஐவியோட சேப்டர் முடிஞ்சது. அதை நெனச்சு அஞ்சனாவோட சேப்டரையும் முடிச்சிடாத. ஏன்னா அதுல வெறும் அஞ்சனாவோட சேப்டர் மட்டுமில்ல. நவிரனோட சேப்டரும் இருக்கு. அந்த அத்தியாயத்துல வர நலன், மெர்சி, நத்து, நிலன், குமாரசாமி அண்ட் பவித்ரா ஆகியோரோட சேப்டரும் அதுல தான் அடங்கியிருக்கு. இதையெல்லாம் மனசுல வெச்சு கவனமா எழுது. சொல்ல மறந்துட்டேன் சச்சினோட சேப்டரும் அதுல தான் இருக்கு. யோசிச்சு முடிவெடு..." என்று மெர்சி நகர்ந்துவிட்டார்.

சச்சின் என்ற பெயரைக் கேட்டதும் அவனிடம் பேசி பல நாட்கள் ஆகிறது என்று உணர்ந்தவன் அவனை அழைத்தான்.

"சொல்லுங்க மாமா. உங்களுக்கு ஆயுசு நூறு. இப்போ தான் உங்களைப் பத்தி நெனச்சேன். அதுக்குள்ள நீங்களே கூப்பிட்டீங்க"

"நூறெல்லாம் வேண்டாம் டா. சென்சுரி எல்லாம் கிரிக்கெட்டுக்கு வேணுனா செட் ஆகும். லைஃபுக்கு கூடவே கூடாது"

"அப்பறோம் அத்தை பெரிய மாமா அக்கா எல்லாம் எப்படி இருக்காங்க? குட்டிஸ் ரெண்டு பேரும் என்ன பண்ணுறாங்க? இந்தியாவை ரொம்ப மிஸ் பண்ணுறேன் மாமா... அதும் நம்ம வீட்டை ரொம்ப" என்று அவன் சொன்ன தொனியில் சிறுவயது நவிரனை ஒருகணம் அவன் உணர்ந்தான்.

"ஹே க்ளாஸ் இல்லையா?"

"இன்னைக்கு ஹாஃப்ப டே மாமா..." என்றவன் மௌனமாக,

"என்னாச்சு டா?"

"அக்கா கூப்பிடறாங்க" என்றதும் அவனையும் அறியாமல்,

"அட்டென்ட் பண்ணு. அண்ட் நான் இருக்கேனு காட்டிக்காத"

"நீங்க லவ் பண்ணுறதுக்கு ஒரு சின்ன பையனை வெச்சு கலாச்சிட்டு இருக்கீங்க இல்ல?"

"ஆமா இவரு அப்படியே பச்ச பிள்ளை பாரு. அப்பறோம் அந்த மெலின்டா பத்தி உன் அக்காகிட்டச் சொல்லிடுவேன் பார்த்துக்கோ"

"மாம்ஸ் மாம்ஸ், இதெல்லாம் நமக்குள்ள இருக்கட்டும் மாம்ஸ்" என்று அவன் சொல்லி அஞ்சனாவின் அழைப்பை ஏற்றான்.

"என்ன இவ்வளவு நேரம் போன் பிசியா காட்டுச்சு? என்ன நடக்குது?" என்று சற்று அதிகார தொனியில் அவள் குரல் ஒலித்தது.

"ஒன்னுமில்லைக்கா. ஃப்ரண்ட் ஒருத்தர் ஒருத்தன் கூப்பிட்டார் கூப்பிட்டான்" என்று அவன் வாய் குழறியதிலே அஞ்சனா அந்த ஃப்ரண்ட் யாரென்று கண்டுகொண்டாள்.

"அடிக்கடி பேசுறானோ சாரி பேசுறாரோ?" என்று அஞ்சனாவும் வேண்டுமென்றே அவனை வம்பிழுத்தாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த நவிரனுக்கு கொஞ்சம் கோவமும் வர தான் செய்தது.

"யாருக்கா?"

"உன் ஃப்ரண்டு" என்றவளுக்கு பதில் பேசாமல் இருந்தான் சச்சின்.

"சரி செமஸ்டர் வரப்போகுதுல்ல? ஒழுங்கா படி. லீவுக்கு இந்தியா வர தானே?"

"கண்டிப்பா க்கா. உன் மேரேஜ் முடிஞ்ச கையோடு என்னை ஃபாரினுக்கு பேக் பண்ணிட்டீங்க... அதும் மெர்சி அக்கா சமையல் என்னை வாவான்னு கூப்பிட்டே இருக்கு"

"உங்க அக்காவே ஒரு செஃப் தான்டா. அவங்களை விடவா மெர்சி அண்ணி நல்லாச் சமைக்குறாங்க?" என்று அவனையும் அறியாமல் நவிரன் பேசிவிட,

"மாமா இப்படிச் சொதப்பிட்டியே மாமா..." என்று சச்சின் அடிக்குரலில் பேச,

"இது தான் உன் ஃப்ரண்டா டா?"

"அக்கா அது..."

"சச்சின், நீ மியூட்ல போட்டுட்டு உன் வேலையைப் பாரு. ஒட்டுக்கேட்டேனு வெச்சிக்கோ ஜெர்மனிக்கு வந்து அடிப்பேன்" என்று நவிரன் சொன்னதில் சற்று பயந்த சச்சின் தன்னை மியூட்டில் போட்டுவிட்டு தன் வேலையில் மூழ்கினான்.

தற்போது இருவரும் மௌனம் காக்க,

"எப்படி இருக்க அஞ்சனா?" என்று நவிரன் கேட்டதும் அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவித்தாள்.

"லைன்ல தான் இருக்கியா?" என்று மீண்டும் இவன் கேட்க அவளோ ஒரு 'ஹ்ம்ம்' சொன்னாள்.

"இங்க இருந்து போனவ குறைஞ்சது எங்க போனேனேனு ஒரு மெசேஜாச்சும் போட்டிருக்கலாம்"

"அவ்வளவு அக்கறை இருக்குற ஆள் எனக்கே ஒரு போன் பண்ணிக் கேட்டிருக்கலாம்... சரி இதென்ன விரும்பி நடந்த கல்யாணமா?" என்றவளுக்கு சில வினாடிகள் கழித்து தான் சச்சினின் நினைவு வர,

"உங்க போன்ல இருந்து கூப்பிடறதுனா கூப்பிடுங்க. இப்படி இருந்தா என்னால எதுவும் பேச முடியாது" என்றாள்.

"ஜஸ்ட் டெக்ஸ்ட் மீ யுவர் அட்ரஸ். ஐ வான்னா மீட் யூ"

அப்போ இன்று வரை தான் எங்கு தங்கியிருக்கிறோம் என்று அவனுக்குத் தெரியாதா என்ற எதார்த்தம் அவளைச் சுட அதே ஒரு வித விரக்தி நிலையில் அவளைத் தள்ள அழைப்பைத் துண்டித்தாள்.

மீண்டும் சச்சினுக்கு அழைத்த நவி,

"டேய் ஒட்டுக் கேட்டயா?"

"புருஷன் பொண்டாட்டி பிரச்சனையைக் கேக்குமளவுக்கு நான் இடியட் இல்ல மாம்ஸ்... என்ன ரெண்டு பேருக்குள்ளயும் ஊடலா? காக்கை விடு தூது மாதிரி இதென்ன சச்சின் விடு தூதா?"

"சரி, நல்லாப் படி. எதுனாலும் என்னைக் கேளு. உன் அக்கா ஒரு பிஸி வுமன். அவளை டிஸ்டர்ப் செய்யாத..."

"ஓ! பொண்டாட்டி மேல அவ்வளவு அக்கறையோ? சரி மாம்ஸ் எப்போ எனக்கு மாம்ஸ் போஸ்ட கொடுக்க போறீங்க? ஐ அம் வெயிட்டிங்"

"ஓ அப்படியா? உன் செமஸ்டர் ரிசல்ட் எப்போ வருது? நானும் வெயிட்டிங்"

"யோ போயா" என்று அவன் அழைப்பைத் துண்டித்தான்.

இதுவரை புன்னகை படர்ந்த அவன் முகம் இப்போது குற்றயுணர்ச்சியைப் பிரதிபலித்தது.
பிடிக்காத திருமணம் தான். சில மாதங்கள் அவனுடன் ஒரு ரூம் மேட் அளவுடனே தங்கியும் இருந்தாள். திடீரென்று ஒருநாள் அவனை விட்டு விலகிச் சென்றுவிட்டாள். அவளிடம் காரணம் கேட்கும் நிலையில் அவனும் இல்லாததால் அவளை அப்படியே விட்டுவிட்டான். இது தங்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சனை என்று மட்டுமே இதுநாள் வரை எண்ணியிருந்தவனுக்கு இன்று தான் இதன் வீரியமே புரிந்தது. அடுத்து என்ன செய்யவேண்டும் என்று கூடத் தெரியாமல் தவிக்கிறான்.

கைபேசி எண் கூடச் சொல்லாமலே
கை வீசிச் சென்றாளே நில்லாமலே...

யார் மீது காதல் எப்போது பூக்கும்
யார் சொல்லக்கூடும் சொல்லாமல் தாக்கும்
என் ஜாதகம் காதல் யோகம்

எனக்கென நீதான் எழுதிடும் கடிதம்
படிக்கிறேன் அன்பே உன் ஃபேஸ் புக்கில் தான்
அடிக்கடி நான் தான் நிலைதடுமாறி
விழுகிறேன் கண்ணே
உன் கிரேஸ் லுக்கில் தான் (வாலிப கவிஞர் வாலி)


காதலால் நிறைப்பாள்...
 
Nice epi
மெர்சியின் வார்த்தைகள் அருமை வாழ்வியலின் அடிப்படை யை அழகாக சொல்லி இருக்கீங்க
 
இப்போ கொஞ்சூண்டு புரியுது ??

புக், பேப்பர், பேனா இதெல்லாம் வச்சு அருமையான வசனம்.... எழுத்தாளர்ங்கறத நிரூபிச்சுட்டீங்க ????????
 
இப்போ கொஞ்சூண்டு புரியுது ??

புக், பேப்பர், பேனா இதெல்லாம் வச்சு அருமையான வசனம்.... எழுத்தாளர்ங்கறத நிரூபிச்சுட்டீங்க ????????
Yes yes ????

@praveenraj atlast present தானே இது??

Non linear ல நிறைய timeframe என்பதால் கொஞ்சம் புரிய கஷ்டம். இப்ப அடிக்கடி epi வராதால் we can grasp. குட்டி பய நவி வளர்ந்துட்டான் ???..

சீக்கிரம் நவி and அஞ்சுவ ஜாலியா பார்க்க வெயிட்டிங் ?
 
Nice epi
மெர்சியின் வார்த்தைகள் அருமை வாழ்வியலின் அடிப்படை யை அழகாக சொல்லி இருக்கீங்க
thank you so much sis??
 
இப்போ கொஞ்சூண்டு புரியுது ??

புக், பேப்பர், பேனா இதெல்லாம் வச்சு அருமையான வசனம்.... எழுத்தாளர்ங்கறத நிரூபிச்சுட்டீங்க ????????
சீக்கிரம் எல்லாமே புரியும்? ஹா ஹா அதெல்லாம் நிரூபிக்க நிறைய எழுதணும். still thank you??
 
Yes yes ????

@praveenraj atlast present தானே இது??

Non linear ல நிறைய timeframe என்பதால் கொஞ்சம் புரிய கஷ்டம். இப்ப அடிக்கடி epi வராதால் we can grasp. குட்டி பய நவி வளர்ந்துட்டான் ???..

சீக்கிரம் நவி and அஞ்சுவ ஜாலியா பார்க்க வெயிட்டிங் ?
நன்றி? அதே அதே நிஜம் தான். present only. இந்தக் கதையைச் சீக்கிரம் முடிச்சிடுறேன். actually ஒரு good news. at last it happened. அதை சீக்கிரம் ரிவீல் செய்யுறேன். உங்களுக்குப் புரிஞ்சாலும் சஸ்பென்ஸ் maintain செய்யுங்க. நானே சொல்லிடுறேன். until then epi வரது கொஞ்சம் doubt. ???
 
Top