Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்) -7

Advertisement

praveenraj

Well-known member
Member

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)

தாயும் மகனும் நீண்ட நேரம் தனியாகப் பேசிக்கொண்டிருப்பதை நலன் மெர்சியுடன் சேர்ந்து குமாரசாமியும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார். முன்பு சொன்னதைப்போல என்ன தான் நலனையும் மெர்ஸியையும் இந்த வீட்டிற்குள் அழைத்து வர முடிந்த குமாரசாமியால் அவர்களை பவியின் உள்ளத்தில் இடம்பெற செய்ய முடியாமல் போனது. நற்றிணைக்கு ஒரு வயது நெருங்கிய சமயத்தில் தங்கள் வீட்டிற்கு அருகிலிருக்கும் பூங்காவில் பவிக்கு முதன்முதலில் நற்றிணையை அறிமுகப்படுத்தினான் நவிரன்.

தினமும் மாலையில் அந்தப் பூங்காவில் நடைபயில்வது பவியின் வழக்கம். அப்போது தான் ஒரு நாள் எதிர்பாராதது போல் தன் மெர்ஸியின் தோழி மூலம் பவி நற்றிணையைப் பார்த்தார். பவியுடன் இருந்த நவிரனைக் கண்டதும் துள்ளிக்குதித்து அவனிடம் தாவிய போது கூட இது தன் பேத்தியாக இருக்கும் என்ற எண்ணம் அவருக்கு எழவில்லை. ஆனால் நவிரனும் குமாரசாமியும் நலனுடன் பேச்சு வார்த்தையில் இருக்கிறார்கள் என்று முன்னமே அறிந்துகொண்டார் பவித்ரா. அவனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்ன போது அவரையும் அறியாது நந்தினியின் ஞாபகம் வந்து அக்குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் நலனுக்குப் பார்த்திருந்த பெண் வீட்டாரிடமிருந்து அன்று தான் பட்ட அவமானமும் அசிங்கமும் அவரைத் தடுத்துவிட்டது. அப்படி இருக்க இந்தக் குழந்தை நவிரனின் ஃப்ரண்ட்ஸ் யாருடைய வீட்டுக் குழந்தையாக இருக்கும் என்று எண்ணியவர் அவமானத்தை மறக்கவும் நலனை மன்னிக்கவும் முடியாமல் தத்தளித்தார்.

பிறந்ததில் இருந்தே நவிரனுடன் நன்கு பழகிய காரணத்தால் நற்றிணை அவனுடன் நன்கு ஒட்டிக்கொண்டாள். மாலை இருட்டத்தொடங்கிவிட அப்போது தான் நற்றிணையை வைத்திருந்த பெண்மணி பற்றிய யோசனை வந்து அவரைத் தேடினார் பவி. அப்படி யாரையும் அங்கு காணாததால்,

"டேய், எங்க இந்தக் குழந்தையோட அம்மாவைக் காணோம்? டைம் ஆச்சு பாரு" என்று சொல்ல இவனும் தான் தீட்டிய திட்டப்படி,

"என்னம்மா சொல்ற? பாப்பாவை நீ வெச்சிரு. நான் அவங்க எங்கன்னு பார்க்கறேன்" என்று சென்றவன் தான். முதலில் தயக்கத்துடன் தான் நற்றிணையை வாங்கினார் பவி. ஆனால் அவளோ அவருடைய பொட்டு மூக்குத்தி கம்மல் என்று ஒவ்வொன்றாய்த் தொட அவரும் அவளுடன் ஒன்றி விட்டாள்.

சிறிது நேரம் கழித்து ஒய்யாரமாகவே வந்தவன்,"ம்மா அவங்களை காணோம். பாப்பாவை நம்ம கூடவே கூட்டிட்டுப் போயிடலாம்" என்று சொன்னதும் அதிர்ந்தவர்,

"என்ன டா பேசுற நீ? அதெப்படி குழந்தையை விட்டுட்டுப் போவாங்க? இந்த ஞாபகம் கூட இருக்காதா இவளோட அப்பா அம்மாக்கு" என்று பவி ஆவேசமாகப் பேச,

"அவங்க மறந்தா என்ன? அதான் பாட்டி நீ பத்திரமா பார்த்துக்கற இல்ல? நியாயப்படி அது தானே அவ வீடு" என்று அலட்டிக்கொள்ளாமல் அவன் சொல்லவும் பவித்ராவுக்கு எல்லாம் புரிந்தது.

(முன்பொரு அத்தியாயத்தில் சொன்னது போல் நவிரனுக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும். அவர்கள் வீட்டருகில் தொடங்கி அந்தத்தெரு முழுவதும் இருக்கும் வாண்டுகள் எல்லோரும் அவன் செல்லம். அடிக்கடி ஏதேனும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வருவான். அதனாலே நவிரனின் இந்தச் செயலில் பவிக்கு எந்தச் சந்தேகமும் எழாமல் போனது)

இப்போது மீண்டும் நற்றிணையை ஒரு கணம் உற்றுப் பார்த்தார் பவித்ரா. நலனின் ஜாடை ஆங்காங்கே தெரிந்தாலும் அவள் மெர்சியை போல் தான் இருந்தாள். அவரையும் அறியாமல் நற்றிணைக்கு முத்தம் வைத்தவர் அவளை இன்னும் தன் கைகளுக்குள் இறுக்கிக்கொண்டார். இப்போது அந்தப் பூங்கா கிட்டத்தட்ட வெறிசோடி போக தன் அலைபேசியில் நலனையும் மெர்ஸியையும் அங்கே அழைத்தான் நவிரன்.

அவர்களுடன் குமாரசாமியும் அங்கே பிரவேசிக்க,

"பாப்பாவை நம்ம கூடவே வீட்டுக்குக் கூட்டிட்டுப் போலாம்னா அண்ணனும் அண்ணியும் நம்ம வீட்டுக்கு வரதுல உனக்கெந்த ஆட்சேபனையும் இல்லைனு அர்த்தம். இல்லாட்டி பாப்பாவை இங்கேயே விட்டுட்டு நாம மூணு பேர் மட்டும் கிளம்பலாம். எதுனாலும் முடிவு உன்னது தான் ம்மா" என்றவன் தன் தந்தை அருகில் சென்று நின்றுகொண்டான்.
சிறிது நேரம் அங்கேயே இருந்த பவி பிறகு நற்றிணையைத் தன்னுடனே எடுத்துச் செல்ல அதன் பின் ஒரு ஆறு மாதங்கள் அவர்களின் உறவில் மாற்றமேதும் இன்றியே கடந்தது.

நற்றிணையுடன் கொஞ்சுவது விளையாடுவது என்று இருந்த பவித்ரா நலன் மற்றும் மெர்ஸியுடன் பேசிக்கொள்ளா விட்டாலும் முன்பிருந்த கோவம் துளியும் அவரிடம் இல்லை. இந்தச் சமயத்தில் தான் நவிரனுக்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் பிரபலமான மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் இயங்கும் மெல்போர்ன் பிசினெஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ அட்மிஷன் கிடைத்திருந்தது.

அங்கு செல்வதற்குள் எப்படியேனும் அண்ணன் அண்ணியுடன் அன்னையைப் பேச வைத்திட நினைத்தவன் தன்னுடைய முயற்சியில் வெற்றியும் பெற்றான். விசா கிடைத்துவிட அவன் மட்டும் ஆஸ்திரேலியா செல்ல நினைக்கையில் தன் 'கைப்பிள்ளை'யான நவியை மட்டும் அங்கு அனுப்ப மனமின்றி அவனுடன் இவர்கள் எல்லோரும் சென்று அவனுக்கு வேண்டியதை ஏற்படுத்திக்கொடுத்து திரும்புவதென்று பவித்ரா முடிவெடுக்க நவியின் எதிர்ப்பையும் மீறி அந்தத் தீர்மானம் இனிதே நிறைவேற்றப்பட்டது.

"ம்மா உனக்கு ஆஸ்திரேலியாவைச் சுத்திப் பார்க்கணும்னா என் செம் முடியும் போது சொல்றேன் அப்போ எல்லோரும் வாங்க. அதை விட்டுட்டு இப்படி என்னை டிராப் பண்ண வராதீங்க. ஏதோ கே.ஜி பையனை ஸ்கூல்ல விடப் போற மாதிரியே ஒரு ஃபீலிங்கு..." என்று வடிவேலுவில் தொடக்கி விஜயகாந்த் வரை அனைத்து மாடுலேஷனிலும் சொல்லிப் பார்த்துவிட்டான் நவிரன்.

இது போதாதென்று குமாரசாமி தன்னுடைய கிளைன்ட் மூலம் நவி தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் அவராகவே பார்த்தும் விட்டார். நவி பிறந்ததில் இருந்தே ஒரு கம்போர்ட் ஜோனிலே வளர்த்தப்பட்டவன். சிறுவயதில் தனக்குக் கிடைக்கும் சலுகைகளை சந்தோசமாக அனுபவித்தவன் வளர வளர அதையொரு சுமையாகவே உணர்ந்தான். புதியதை முயற்சி செய்வதில் அலாதி நாட்டம் கொண்டவன் நவி. கொஞ்சம் அட்வென்சர் விளையாட்டுகள் மீதும் ஆர்வமுள்ளவன். இங்கு இருந்தால் அதெல்லாம் சாத்தியமே இல்லை என்று தான் வெளிநாட்டுக்குச் சென்று படிக்க எண்ணினான்.

ஆஸ்திரேலியாவுக்குச் சென்று இறங்கியவர்களை வரவேற்று அவர்களுக்கு அறை ஏற்பாடு செய்து இதை ஒரு வெகேஷன் போலவே மாற்றிவிட்டார் குமாரசாமியின் நண்பரான விக்டர். மறுநாள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அட்மிசன் ஃபார்மாலிட்டீஸ் அனைத்தையும் முடித்து அன்று மாலை ஊர்ச் சுற்றியவர்கள் இரவுணவுக்கு ஒரு பிரபல ரெஸ்டாரெண்ட் சென்றனர். ஆஸ்திரேலியாவில் இயங்கும் இந்தியன் ரெஸ்டாரெண்ட். அங்கே ஒரு வட்ட மேஜையில் இவர்கள் அமர்ந்து சாப்பிடுவதை அங்கிருந்த இதர வாடிக்கையாளர்களும் பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். ஏனெனில் அங்கிருந்த பெரும்பாலானோர் ஜோடிகளாகவே வந்திருக்க சில கல்லூரி மாணவர்களும் இருந்தனர்.

நவிரனுக்கு கல்லூரி திறக்க நான்கு நாட்கள் இருக்க அதற்குள் இவர்களை இங்கிருந்து பேக் செய்துவிட எண்ணினான் அவன். அவனுக்கு உதவிக்கரம் நீட்டவே ஊரிலிருந்து அலுவகம் நிமித்தமாக நலனுக்கு அழைப்புகள் வந்துகொண்டிருக்க அவனுடைய பிஜி சென்று அதையும் சரிபார்த்துவிட்டு தான் அவர்கள் இந்தியா திரும்பினார்கள். ஆஸ்திரேலிய நேரப்படி இரவு அவர்களை ஃபிளைட் ஏற்றிவிட்டவன் ஏர் போர்டிலிருந்து வெளியேறும் போது அவன் பிஜியின் சாவியைத் தேட அது இல்லாமல் போகவும் தான் எங்கேயோ தொலைத்துவிட்டதையே உணர்ந்தான். அவனுக்குப் பார்த்த பிஜியின் அறைத்தோழனான முகுந்த் அன்றிரவு தான் வெளியே செல்லப்போவதாக உரைத்தது வேறு நினைவுக்கு வந்தது. சரி விக்டரை அழைத்து உதவி கேட்கலாம் என்று அவன் அலைபேசியை எடுக்க அதுவோ சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. உபயம் - காலையிலிருந்து நற்றிணை அதில் தான் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

செல் போனும் இல்லாமல் வீட்டுச் சாவியும் இல்லாமல் இரவு ஒன்பது மணிக்கு மெல்போர்ன் விமான நிலையத்துடன் ஒரு டேட்டிங். இந்த நேரத்தில் சம்மந்தமே இல்லாமல் கௌதம் மேனனை வசைபாடினான் அவன். பின்னே கிட்டாரோடு அமெரிக்கா சென்று மேக்னாவுக்கு சர்ப்ரைஸ் செய்த சூர்யாவுக்கு இப்படியேதும் ட்விஸ்ட் நடக்கவில்லையே? இவன் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்ட சில செக்கூரிட்டிஸ் இவனிடம் விசாரிக்க தன்னுடைய பாஸ்போர்ட் விசா ஆகியவற்றைக் காட்டி விட்டால் போதும் என்று வெளியே வந்தான்.

இவ்வளவு ரணகளத்திலும் அவன் பிஜி அட்ரஸ் அவனிடம் இருப்பது தான் ஒரே ஆறுதல். கேப் தேடியவன் இரண்டு மூன்று நபர்களைக் கேட்டும் யாரும் வர விருப்பமில்லை என்று தெரிவித்துவிட சத்திய சோதனை மொமெண்ட்டை உணர்ந்தவன் தூரத்தில் தெரிந்த கேப் நோக்கி ஓட அவன் நெருங்கும் முன்னே அதிலொரு பெண் ஏறிக்கொண்டாள். இப்போது அதன் ட்ரைவர் அவளிடம் கேட்குமாறு சொல்ல அவளோ இவன் கேட்கும் முன்னே,

"நீங்க எங்க போகணும்?" என்று செந்தமிழில் சாரி கொடுந்தமிழில் கேட்டாள். (கொடுந்தமிழ் என்றால் வழக்குச் சொல் என்று அர்த்தம். கொடுமை + தமிழ் என்று யாரும் பிரித்துவிடாதீர்கள்?)

ஆயிரம் ஆங்கிலப் புலமை இருந்தாலும் வெளியூரில் தமிழ் ஒலித்தால் அதொரு தேவகானம் தானே?

அதுவரை இருந்த கவலை எல்லாம் ஓய்ந்து மிகவும் ஆசுவாசம் கொண்டவன்,

"தெய்வங்க நீங்க. தெய்வம். ஆஸ்திரேலியாவுக்கு படிக்க வந்தேன். அப்பா அம்மாவை அனுப்பிட்டு ரூம் போலாம்னா பிஜி சாவி இல்லை. என் போனும் சுவிட்ச் ஆப். நாட்பட்ட தாகத்தில் இருந்தவனுக்கு முன் வைக்கப்பட்ட அமிர்த கோப்பைங்க நீங்க..." என்று அவனையும் அறியாமல் அவனொரு எழுத்தாளரின் மகன் என்பதை நிரூபித்தான்.

"ஏ சூப்பரா இருந்தது ப்பா உங்க கவிதை..." என்று சொன்னவள் அவனையும் அவளுடன் ஏற்றிக்கொண்டாள்.

"நவிரன் ஃபரம் திருவண்ணாமலை..." என்று இவன் கைநீட்ட,

"அகல்யா ஃபரம் திருச்சி"

அதன் பின் அடுத்த பத்து நிமிடங்களில் இருவரும் தங்களைப் பற்றி அனைத்தும் பரிமாறிக்கொண்டனர். அகல்யாவின் பெற்றோர்கள் அவள் பதினொன்றாவது பயிலும் போதே பணி நிமித்தமாய் ஆஸ்திரேலியா வந்துவிட்டார்கள். இவளோ ஸ்கூலிங் இந்தியாவில் முடித்து கல்லூரிக்கு இங்கே வந்துவிட்டாள். அதே மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கிரேட்டிவ் ஆர்ட்ஸ் அண்ட் ம்யூசிக் தெரபி கோர்ஸ் படிக்கப் போகிறாள். (creative arts and music therapy- இசை நாடகம் நடனம் மூலம் அடுத்தவர் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்துவது. மருத்துவமனை பள்ளிக்கூடங்கள் முதலியவற்றில் பணியும் கிடைக்குமாம்? இந்தியாவில் என்று இன்ஜினீரிங்கை தடை செய்யுறாங்களோ அன்னைக்கு தான் இந்தியா வல்லரசு ஆகும்?)

அதற்குள் நவியின் அலைபேசியை காரில் சார்ஜ் போடப்பட்டு அவன் நண்பனான முகுந்தை அழைத்தான். தான் வர காலை ஆகிவிடும் என்பதால் இன்றிரவு மட்டும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுமாறு அவன் சொல்லிவிட மீண்டும் நவி கலவரமடைந்தான்.

"இவ்வளவு தானே மேட்டர்? இந்தியனா போயிட்ட. அதும் நம்ம தமிழ்நாட்டுக்காரன். உனக்கு இப்போ கூட நான் ஹெல்ப் பண்ணாட்டி எப்படி?" என்றவள் யோசிக்க,

"ஏன் யோசிக்குற?"

"நான் தங்கியிருக்கறதோ ஒரு கேர்ள்ஸ் பிஜி. அதுக்குள்ள உன்னை எந்த வேஷத்துல கூட்டிட்டுப் போலாம்னு யோசிக்கிறேன்" என்றவள் மெல்ல உதடு விரிக்க,

"எது கேர்ள்ஸ் பிஜில நானா?"

"பயப்படாத மாறுவேஷத்துல தான் கூட்டிட்டுப் போகப்போறேன். ஆமா உன் சைஸ் என்ன?"

"எதுக்கு?" என்று அவன் அதிர,

"டாப்ஸ் எடுக்க வேண்டாமா?" என்று அவள் சொன்னதும் ஒருகணம் அதை நினைத்துப் பார்த்தவன் தன்னைத் தானே சகித்துக்கொள்ள முடியாமல் அதிர அதுவரை அடக்கிய சிரிப்பை மொத்தமாக உதிர்த்தாள் அகல்யா.

"உங்க ஷர்ட் பேண்ட் நாங்க போடுறோமில்ல? வை காண்ட் யூ?" என்றவள் அவன் முகபாவனையைக் கண்டவள்,

"சில். என் பேரெண்ட்ஸ் இங்க தானே இருக்காங்கனு சொன்னேன்? அதுக்குள்ள மறந்துட்டியா?" என்று சொன்னதும் தான் நவிக்கு உயிரே திரும்பியது.

அதன்பின் தன் தந்தையிடம் பேசியவள் நவிரனை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். எதிர்பார்க்காத நேரத்தில் சந்திக்கும் நபர்கள் தான் நம் வாழ்க்கையின் மீது எவ்வளவு எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார்கள்? வாழ்க்கை நிஜத்திலும் ஒரு விந்தை தான் போலும்.

காதலால் நிறைப்பாள்...

நீங்க எங்க போகணும்?" என்று செந்தமிழில் சாரி கொடுந்தமிழில் கேட்டாள். (கொடுந்தமிழ் என்றால் வழக்குச் சொல் என்று அர்த்தம். கொடுமை + தமிழ் என்று யாரும் பிரித்துவிடாதீர்கள்?)
நல்ல வேளை சொனீங்க ????.
இந்தியாவில் என்று இன்ஜினீரிங்கை தடை செய்யுறாங்களோ அன்னைக்கு தான் இந்தியா வல்லரசு ஆகும்?)
??????? could get you!

எதிர்பார்க்காத நேரத்தில் சந்திக்கும் நபர்கள் தான் நம் வாழ்க்கையின் மீது எவ்வளவு எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார்கள்? வாழ்க்கை நிஜத்திலும் ஒரு விந்தை தான் போலும்.
இன்னிக்கி last lines தான் highlight ?????

அப்டியே இதே வேகத்துல வாங்க praveen ???.

அகல்யா அஞ்சனா ??????? அ அ ணு ஒரு அப்பா(ப)வி புள்ளை யை கஷ்டப்படுத்துறீங்க ??

ஆவலுடன்.

?????
 
N

Nirmala vandhachu ???
 
Top