Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்) -8

Advertisement

praveenraj

Well-known member
Member

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)

இந்திராவின் 'நிலா காய்கிறது' பாடல் தங்கள் பி.ஜியில் ஒலிபரப்பாக பழைய நினைவுகளுக்குச் சென்றவள் அங்கிருக்க பிடிக்காமல் அவள் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள் அஞ்சனா. காலம் தான் எவ்வளவு வேகமாகப் பயணிக்கிறது. இந்த இரண்டரை வருடங்களாக அவளும் எத்தனை முகமூடியைத் தான் அணிந்துகொள்வாள்? வேலையில் கடுமையான உயர் அதிகாரி இந்த பிஜியில் சகஜமான அறைத்தோழி வாரயிறுதி நாட்களில் பொறுப்பான முதலாளி தனதறைக்குள் வாழ்க்கை தனக்களித்ததை எல்லாம் எண்ணி அழும் சிறு குழந்தை! வெளியே இருந்து பார்க்கும் யாவருக்கும் அவளின் சுறுசுறுப்பு புத்திக்கூர்மை ஆளுமை ஆகியவற்றில் ஆச்சர்யமும் பொறாமையும் தான் தோன்றும். ஆனால் அவள் உள்ளுக்குள் நடத்தும் மனப்போரை யாரேனும் காண நேர்ந்தால் நிச்சயம் அவளுக்காக கழிவிரக்கமே கொள்வர். அவளிடமிருந்து அனைத்தையும் இந்த வாழ்க்கை பறித்துக்கொண்டாலும் அவளது மனோதைரியம் மட்டும் தங்கம் விலை போல் உயர்ந்துகொண்டே தான் இருக்கிறது. அதற்கு வீழ்ச்சி என்றொன்று இல்லை. சிறு வயதிலே நன்கு உரம்போட்ட விதை போல் அவள் மனதில் அவ்வளவு பாசிட்டிவிட்டியை விதைத்து விட்டது அவள் குடும்பம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்னும் வாசகத்திற்கு எடுத்துக்காட்டானது அவள் குடும்பம்.

மணி ஒன்பது ஆனதும் தினமும் தவறாமல் வரும் அந்த அழைப்பு இன்றும் வந்தது. அதைப் பார்த்தவளுக்கு மனதில் ஒரு வித கலவையான உணர்வே மேலோங்க வழக்கத்திற்கு மாறாக அதை ஏற்றாள்.

எப்படியும் ஏற்கப்படாது என்று எண்ணியவனுக்கு அது ஆச்சர்யம் தர,

"அஞ்சனா... தேங்க்ஸ் அஞ்சனா. இவ்வளவு நாள் தவறாம நான் அழைச்சதுக்கு இன்னைக்கு ஒரு முன்னேற்றம் கிடைச்சிருக்கு. நான் உன்கிட்டப் பேச நிறைய இருக்கு. இந்த ஒன்றரை வருஷம் உனக்கு மட்டுமில்ல எனக்கும் ஒரு வனவாசம் தான். என் அம்மகாக நான் உன்கிட்ட மன்னிப்பு கேக்குறேன். அஞ்சனா? அஞ்சு. நான் மட்டும் தான் பேசிட்டு இருக்கேன். நீ இன்னும் லைன்ல தான் இருக்கியா?" என்றவன் அதை தன் அலைபேசியின் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டவன்,

"அஞ்சனா?" என்று அழைத்ததும்,

"கவி. ப்ளீஸ் கவி என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. இந்த அழைப்பை நான் எடுத்ததே நமக்குள்ள இனி எதுவுமில்லைனு சொல்ல தானே ஒழிய நீங்க கற்பனை பண்ணுற மாதிரி எதுவும் இல்ல. ஐ ஹேவ் மூவ்ட் ஆன். இப்போ இல்ல. ரொம்ப நாளைக்கு முன்னவே..." என்று முடிக்கும் முன்னே,

"அஞ்சு, ஆனா இது நடக்கணும்னு ஆண்ட்டியும் அங்கிளும் எவ்வளவு ஆசைப்பட்டாங்க..." என்று முடிக்கும் முன்னே,

"எல்லோரும் என்ன வேணுனாலும் ஆசை படலாம். அது அவங்க தனிப்பட்ட விருப்பம். ஆனா நம்முடைய எத்தனை ஆசை நிறைவேறுங்கறதுல தான் நிதர்சனம் ஒளிஞ்சிருக்கு. நாம ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சிடறதும் இல்ல. அப்படி அது கிடைச்சாலும் நாம அதுக்கு ஆசைப்படும் போது இருந்த மனநிலையில் தான் இப்போவும் இருக்கணும்னு அவசியமுமில்லை. பத்து வயசுல நான் ஆசைப்பட்ட ஒரு பொம்மையை இப்போ என்கையில நீங்க கொடுத்தா நான் சந்தோசப்படுவேன்னு நினைக்கறீங்களா? எனக்காகக் காத்திருக்காம உங்க வீட்ல சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணி வாழ்க்கையில செட்டில் ஆகப் பாருங்க. நான் மனசு மாறுவேன்னு காத்திருந்திங்கனா ஐ அம் சாரி அது இப்போதைக்கு இல்ல எப்போவும் நடக்காது. அண்ட் இதுவே நம்மளோட கடைசி உரையாடலா இருக்கணும்னு ஆசைப்படுறேன்..." என்றவள் அவனது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தாள்.

இப்போது தன் கையிலிருந்த அந்த மோதிரத்தைப் பார்த்தவள் இனியும் அதைத் தான் அணிவது நியாயமில்லை என்று உணர்ந்து அதைக் கழட்டினாள்.

அங்கே அஞ்சனா பேசியதை எல்லாம் கேட்ட கவியரசன் தன்னையும் அறியாமல் ஆத்திரத்தில் கத்தினான். அதொரு விரக்தி நிலையின் வெளிப்பாடு. அவன் என்ன செய்வான்? அன்றே அவளைத் திருமணம் செய்து கையோடு அமெரிக்கா அழைத்து வந்திருந்தால் இன்று இந்த ஏமாற்றத்திற்கெல்லாம் வழியில்லாமல் போயிருக்கும் என்று எல்லோருக்கும் எப்போதும் ஏற்படும் காலம் கடந்த ஞானம் இப்போது அவன் சிந்தையில் உதிர்த்தது.

எவ்வளவு நேரமென்று தெரியாதவன் அப்படியே அமர்ந்திருக்க திடீரென்று அவனுக்கு அந்த யோசனை வந்தது. இப்போது ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் வேலை போய்க்கொண்டிருப்பதால் இது முடிந்ததும் முதல் வேலையாக இந்தியா சென்று அவளை எப்படியேனும் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

தன்னை அவள் ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும் நிராகரிக்காமல் இருக்கவே அதிக சாத்திய கூறுகள் இருப்பதாக கவியரசன் நினைத்தான்.
இதுவரை அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த அந்த ஸ்பெஷல் மொமென்ட்ஸ் எல்லாம் அவன் கண் முன்னே வந்து சென்றது. அதும் அவளை முதன் முதலில் பெண் பார்க்க சென்றதை இப்போது நினைக்கையில் முதன்முதலில் அவனுக்கு அரும்பிய மீசையை வருடிக்கொடுத்த அந்தக் கணத்தின் சிலிர்ப்பே அவனை ஆட்கொண்டது.

தங்கள் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஒருவருடைய இல்லத் திருமணத்திற்காக கவியின் குடும்பம் முழுவதும் கோவைக்குச் சென்றிருந்தது. அவனும் அன்று சென்றிருக்க வேண்டியவன் தான். ஏதோ ஒரு அவசர வேலையின் பொருட்டு தன் குடும்பத்தை மட்டும் அனுப்பிவைத்தான். திருமணத்திற்குச் சென்றவர்கள் தாம்பூலப்பையை வாங்கி வருவார்கள் என்று காத்திருந்தவனுக்கு தாம்பூலம் மாற்றிக் கொள்வதைப் பற்றிய முடிவோடு வருவார்கள் என்று அவன் மட்டும் கனவா கண்டான்? (தாம்பூலப்பைக்காக காத்திருந்தவன் என்று சொன்னதால் கவியை யாரும் ஓசி சாத்துகுடிக்கு அலையும் அல்பமாக எண்ணி விடாதீர்கள். அதொரு ரைமிங்காகா சொன்னேன்?. கவி என்னை மாதிரியே ஒரு ஜென்டில் மேன்?)

திருமணத்தைப் பற்றிப் பேச்செடுத்து தாங்கள் கொடுத்த வாக்கைப் பற்றி அவன் வீட்டினர் அவனிடம் சொல்லவும் எல்லோரையும் போல,"யாரைக் கேட்டு இந்த மேரேஜுக்கு ஓகே சொன்னிங்க? நான் இப்போ மேரேஜ் பண்ணுற ஐடியாவுலயே இல்ல..." என்று சலங்கை கட்டாமலே ஒரு கச்சேரியை ஆடி முடித்தான்.

(இருபத்தி ஐந்து வயதைக் கடந்த எந்த ஒரு ஆண்மகனும் வீட்டில் திருமணப் பேச்சை எடுக்கையில் உதிர்க்கும் வார்த்தைகள் இவை. இதற்காக எல்லாம் அவனுக்கு திருமண ஆசை இல்லை என்று யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். நம் வீட்டிற்கு வரும் விருந்தாளியிடம் என்ன சாப்பிடுறீர்கள் என்று கேட்கும் போதும் எதும் வேண்டாம் என்று சொல்பவர்கள் எப்படி நாம் கொடுக்கும் காஃபி ஸ்நேஸ்க்கை ஒரு அமுக்கு அமுக்குகிறார்களோ அப்படித்தான் இந்த மறுப்பும்.இன்னைக்கு அமாவாசைங்கறதால தான் இவன் இப்படியெல்லாம் குறுக்க குறுக்க கமெண்ட் பண்ணுறான்னு யாரும் நினைக்க வேணாம் இன்னைக்கு அமாவாசை இல்லாட்டியும் இதைத்தான் நான் எழுதியிருப்பேன்?)

பிறகு அஞ்சனாவின் புகைப்படத்தைக் காட்டியதும் ஏனோ அதுவரை இருந்த ஆவேசம் எல்லாம் வெய்யோனைக் கண்ட பனித்துளியாய்க் கரைந்து போனது. முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே என்ற தாமரையின் வரிகளுக்கு நியாயம் சேர்க்கும் விதமாய் தான் அஞ்சனா காட்சியளிப்பாள்.

இப்படிப்பட்டவளையா வேண்டாம் என்று சண்டையிட்டோம் என்று இருக்கின்ற கட்சியிலே இருக்கின்ற மேடையிலே இங்கிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவும் தைரியம் கொண்ட வண்டுமுருகனைப் போல் கவியின் மனதும் அஞ்சனாவின் வசம் நொடியில் கட்சி தாவியது. சிறிதுநேரம் அங்கேயே இருந்தவன் கீழே என்ன முடிவெடுத்திருப்பார்கள் என்று அறிந்துகொள்ள விரும்புபவனாக மாடியிலிருந்து கீழே இறங்கினான்.

இவன் பேசிச் சென்றதில் உண்மையிலே வருத்தமாக இருந்த இவன் குடும்பத்தினர் இவன் வருவதைக் கண்டு அமைதியாக இதே நிலையை அடுத்த இரண்டு நாட்களுக்குத் தள்ளிப்போட முரளிதரனுக்கு என்ன பதில் சொல்வதென்று இவன் வீட்டில் உள்ளவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அவன் எதிர்பார்த்ததைப்போல் அன்று அவன் தந்தை இதைப் பற்றியே மீண்டும் பேச்செடுக்க போன முறை போல் சொதப்பாமல் தான் யோசிச்சு வைத்ததை அப்படியே மொழிந்தான்.

"வெறும் போட்டோ காட்டினா என்ன முடிவு சொல்றது. அந்தப் பொண்ணைப் பத்தி எதும் தெரியவேண்டாமா?" என்று இவன் கேட்ட அர்த்தத்தைப் புரியாமல் இவன் தந்தையோ அவளைப் பற்றியும் அவள் குடும்பம் பற்றியும் எல்லாம் சொன்னார்.

"எதுனாலும் ஒரு முறை நேர்ல பார்த்துப் பேசுனா தான் எதையும் சொல்ல முடியும்" என்று மறைமுகமாகவே இவன் விருப்பத்தைச் சொல்லிவிட அதைப் புரிந்துகொண்ட பெரியவர்களும் இருவருக்குமான முதல் சந்திப்பை அஞ்சனாவின் வீட்டருகில் இருக்கும் முருகர் கோவிலில் 'பெண் பார்க்கும் வைபவம்' மூலம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

ஆழ்ந்த நித்திரையிலிருந்த அஞ்சனாவிற்கு ஏதேதோ சொப்பனங்கள் எழ அதில் உறக்கம் களைந்து எழுந்தாள். அவள் மனம் ஒருநிலையில் இல்லாமல் போக உடனே குளித்து தயாரானவள் அவள் அறையில் இருக்கும் இறைவனுக்கு முன்பு சம்மணமிட்டு அமர்ந்தவள் நீண்ட நாட்கள் கழித்து தன் வாய்திறந்து பாடினாள்.

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைத்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக...

என்று முடிக்கும் முன்னே அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

இவளின் குரல் கேட்டு பக்கத்துக்கு அறையிலிருந்த கார்த்தி மற்றும் ஜெசி ஆகியோர் இவள் அறையினைத் தட்டிக்கொண்டே இருந்தனர். கண்களைத் துடைத்தவள் எதுவும் நடவாதது போல் கதவைத் திறந்தாள்.

"என்னாச்சு அஞ்சு? ஏன் இவ்வளவு காலையில பாடிட்டு இருக்க?" என்று சீரியசாக கேட்ட கார்த்திக்கு,

"வாய்ஸ் அவ்வளவு கேவலமாவா இருக்கு?" என்று புன்னகைத்தவளை முறைத்தவர்கள்,

"ஆர் யூ ஓகே பேபி?" என்று கேட்ட கார்த்தி அவளையே ஒருகணம் உற்றுப் பார்க்க சமாளிக்க முடியாமல் அவளை அணைத்துக்கொண்டாள் அஞ்சனா. ஜெஸ்ஸியை அங்கிருந்து அனுப்பிய கார்த்தி அஞ்சுவுடன் ஒரே அறையில் தங்கிக்கொண்டாள்.

ஏனோ நேற்று மாலை தீப்தியிடம் பேசியதில் இருந்தே அஞ்சனாவிற்கு அவள் குடும்பத்தின் மீதான எண்ணம் மேலோங்கி இருந்தது. அத்துடன் கவியின் அழைப்பும் இணைந்துகொள்ள ஏனோ பல மாதங்களாக அவள் காத்துவந்த அந்த சமநிலையானது இன்று சற்று ஆட்டம் கண்டுவிட்டது.
இந்த பிஜிக்கு வந்த இரண்டு வருடங்களில் அவளைப் பற்றி ஒரே ஒருமுறை மட்டுமே கார்த்திகா மற்றும் ஜெஸ்ஸிக்கு பகிர்ந்துள்ளாள். அவர்களுக்கும் கூட இவளைப் பற்றி முழுவதும் தெரியாது. கவியைப் பற்றி யாரிடமும் இவள் தெரிவித்ததில்லை. ஆனால் இவ்வளவு நடந்தும் எப்போதும் பாஸிட்டிவாகவே தன்னைக் காட்டிக்கொள்பவளின் இன்றைய அழுகை கார்த்திக்கு அதிர்ச்சியுடன் கூடிய பயத்தைத் தந்ததென்றால் அது மிகையில்லை.

காதலால் நிறைப்பாள்...




 
எல்லோரும் என்ன வேணுனாலும் ஆசை படலாம். அது அவங்க தனிப்பட்ட விருப்பம். ஆனா நம்முடைய எத்தனை ஆசை நிறைவேறுங்கறதுல தான் நிதர்சனம் ஒளிஞ்சிருக்கு. நாம ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சிடறதும் இல்ல. அப்படி அது கிடைச்சாலும் நாம அதுக்கு ஆசைப்படும் போது இருந்த மனநிலையில் தான் இப்போவும் இருக்கணும்னு அவசியமுமில்லை
????? correct!!

Oh anju ku break up ????? nalladhu kavi, navi route clear??
 
ஆமா அந்த இரண்டாவது கமெண்ட் மறைமுகமா உங்க வீட்டுக்கு சொல்ற மாதிரி இருந்ததே... பேசாம இந்த கதைய உங்க வீட்ல உள்ளவங்கள படிக்க சொல்லிருங்க உங்க ரூட் கிளியர் ???
 
ஆமா அந்த இரண்டாவது கமெண்ட் மறைமுகமா உங்க வீட்டுக்கு சொல்ற மாதிரி இருந்ததே... பேசாம இந்த கதைய உங்க வீட்ல உள்ளவங்கள படிக்க சொல்லிருங்க உங்க ரூட் கிளியர் ???
எங்க வீட்ல கடந்த ரெண்டு வருஷமாவே இதே பேச்சு தான். நான் தான் பெரிய நோ சொல்லிட்டு இருக்கேன். உண்மையான நோ. நோ வேலை நோ மேரேஜ்.???
 
எங்க வீட்ல கடந்த ரெண்டு வருஷமாவே இதே பேச்சு தான். நான் தான் பெரிய நோ சொல்லிட்டு இருக்கேன். உண்மையான நோ. நோ வேலை நோ மேரேஜ்.???
சீக்ரம் ரெண்டும் எஸ் ஆகி எங்களுக்கு ட்ரீட் கொடுங்க ?
 
எங்க வீட்ல கடந்த ரெண்டு வருஷமாவே இதே பேச்சு தான். நான் தான் பெரிய நோ சொல்லிட்டு இருக்கேன். உண்மையான நோ. நோ வேலை நோ மேரேஜ்.???
விரைவில் ரெண்டு நோ வும் எஸ் ஆகட்டும் ??
 
Top