Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்) -9

Advertisement

praveenraj

Well-known member
Member

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)

சிறிது நேரம் அவரையும் அறியாது பதற்றம் கொண்ட பவித்ரா குழந்தைகளை ரசித்துக்கொண்டிருக்கும் நவிரனைக் கண்டதும் தான் சமநிலைக்கு வந்தார். மகனைப் பற்றிய கவலை இனி இல்லை என்று வெளியிலிருந்து அவர் அந்தக் கதவை இழுக்க அதே சமயம் உள்ளிருந்து அதைத் திறந்த அஞ்சனா கணப்பொழுதில் நிகழ்ந்த அந்த திடீர் உந்துதலில் அவள் கையிலிருந்த ஐஸ் க்ரீமை எதிரில் நின்ற பவித்ராவின் சேலையில் கொட்டிவிட்டாள். அதோடு நிலைதடுமாறி கீழே விழப் போனவள் ஒரு பேலன்ஸுக்காக அவர் மீதே விழுந்தும் விட்டாள். அங்கே குழந்தைகள் மீது கவனமாக இருந்தவன் பவி மற்றும் அஞ்சு ஆகியோரின் அலறலில் திரும்பி நொடியில் சுதாரித்து பவியை நெருங்கி தாங்குவதற்குள் அவர் மீதிருந்த அஞ்சனா பவியுடன் சேர்ந்து நவியின் மீது விழுந்துவிட அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது.

பிறகு அங்கிருந்தவர்கள் உதவியுடன் அஞ்சனா மற்றும் பவித்ரா ஆகியோர் எழுந்து அமர நவி பேலன்ஸுக்காக அவன் இடக்கையை ஊன்றிவிட முன்பு அடிப்பட்ட அதே இடத்தில் மேலும் அடிபட்டதால் வலியில் துடித்தான்.

"நவி, கண்ணா என்னாச்சுப்பா?" என்று பவித்ரா அலறவும் தான் அங்கிருந்தவர்களின் பேச்சின் ஊடே இவர்கள் தாய் மகன் என்றே அஞ்சனாவிற்குப் புரிந்தது. தன்னால் தானே இத்தனை விபரீதங்களும் என்று அறிந்து குற்றயுணர்ச்சியில் கையைப் பிசைந்தவாறு அவள் நிற்க அவளுக்கு அருகில் வந்து நின்றார் அமர்நாத், மணமகளின் தந்தை.

கூட்டத்திலிருந்த ஒரு டாக்டர் நவிரனுக்கு முதலுதவி கொடுத்து பயப்படுமளவிற்கு ஒன்றுமில்லை என்றும் எதிர்பார்க்காமல் ஏற்பட்ட நிகழ்வால் சதை பிடித்துக்கொண்டது என்று தெரிவித்தும் நவிரனின் வலி வெளிப்படுத்தும் முகத்தைப் பார்க்க சகிக்காமல் குமாரசாமியை ஹாஸ்பிடலுக்கு வண்டி எடுக்குமாறு சொன்னார்.

"அஞ்சுமா, நீ ஒன்னும் கவலைப்படாத. நீ பொண்ணு ரூமுக்கு போ நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லியும் கேட்காமல் பவித்ராவை நோக்கி நகர்ந்தாள்.

அதற்குள் அங்கு திரண்ட கூட்டம் நகரத்தொடங்கியது.

"மேடம், ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. நான்..." என்றவள் பவித்ரா பார்த்த அந்தப் பார்வையில் அமைதியானாள். பொது இடத்தில் எதுவும் பேசிவிடக் கூடாதென்று அவர் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார். அது போக தானொரு ஊரறிந்த எழுத்தாளர் என்பதும் அவரைப் பேசவிடாமல் தடுத்தது.

இப்போது மணமகனின் தந்தை அங்கே வந்து அவர்களை விசாரிக்க ஏனோ அமர்நாத்தின் முகம் கவலை கொண்டது. இதுவரை உறவினர்களாக மட்டும் இருந்த குமாரசாமியும் மணமகனின் தந்தையும் இப்போது தான் ஒரு ஷோ ரூம் டீலர்ஷிப் மூலம் தொழில்முறை நண்பர்களாக அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இது சம்மந்தமாக அனைத்துப் பேச்சுவார்தைகளையும் நவியுடன் தானே நடத்திக்கொண்டிருக்கிறார். அவரவர்களுக்கு அவரவர் கவலை!

"சரி சௌந்தர்ராஜ், நாங்க இப்போ கிளம்புறோம். நீங்க மேரேஜ் வேலையைப் பாருங்க..." என்று இரத்தின சுருக்கமாக உரைத்த குமாரசாமி பவி மற்றும் நவியுடன் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்துவிட்டனர். குமாரசாமி டிரைவிங் செய்வார் என்றாலும் நலனின் கண்டிப்பான அறிவுதலால் அவர் டிரைவிங் செய்தே நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டது. அங்கிருந்து நலனை அழைத்து ட்ரைவரை வரச்சொல்ல நவிரனுக்கு முன்பைக் காட்டிலும் இப்போது பரவாயில்லை என்றாலும் அவனுக்கு நேர்ந்த அந்நிகழ்வு அவனை வண்டி எடுக்கவிடமால் தடுத்தது.

இவர்களைப் பின்தொடர்ந்து வந்த அஞ்சனா இதையெல்லாம் கேட்டு அவர்களுக்கு உதவ எண்ணி அவர்கள் முன் நின்றாள். அவளைக் கண்டதும் பவி தன் அதிருப்தியை முகபாவங்களில் காட்டிவிட,

"உங்களுக்கு இப்போ என்னைப் பார்க்கவே பிடிக்கலைங்கறது எனக்கும் புரியுது. இருந்தும் இதுக்கெல்லாம் நான் தான் காரணம். அண்ட் நான் ட்ரைவ் பண்ணுவேன். உங்களுக்கு ஓகேனா நானே ஹாஸ்பிடல் வரை உங்க கூட வரேன். என் மேல இருக்குற கோவத்துல உங்க பையனைத் தண்டிக்க வேண்டாம். அவர் ரொம்ப பெயின்ஃபுல்லா ஃபீல் பண்றார்னு நான் நினைக்கிறன்" என்று சொல்லும் போதே நவி வலியில் முகம் சுளித்தான். பிறகு அவளே அந்த வண்டியைச் செலுத்த ஒரு பிரபல மருத்துவமனையின் முன்பு அந்த வாகனம் நின்றது.

வரவிருப்பமில்லை என்றவனை வலுக்கட்டாயமாக அழைத்து வந்ததால் இது ஏற்பட்டு விட்டதோ என்று நினைக்கையில் பவித்ராவுக்கு கண்கள் கலங்கிவிட்டது. உள்ளே அவனைப் பரிசோதித்துவிட்டு வெளியேறிய மருத்துவர் முன்பு அவனுக்கு ஆப்ரேசன் செய்யப்பட்ட முதுகெலும்பு பகுதியில் அடிபட்டு இருப்பதால் நாளை அவனுக்கு ஒரு ஸ்கேன் செய்த பிறகு தான் டிஸ்சார்ஜ் செய்யமுடியும் என்று தெரிவித்து விட அதற்குள் அவர்கள் ஷோ ரூமில் இருந்து மேனேஜர்கள் அங்கு வந்துவிட்டனர். விஷயமறிந்த நலன் மெர்சியை விட்டு வரமுடியாத காரணத்தால் குமாரசாமியை அழைத்து,

"ப்பா, நீங்க அம்மாவைக் கூட்டிட்டு நம்ம மேகலா சித்தி வீட்டுக்குப் போங்க. விக்ரமை(அவர்கள் ஷோ ரூமின் மேனேஜர்) நைட் ஹாஸ்பிடல்ல தங்க சொல்லிட்டேன். அம்மா மாட்டேன்னு தான் சொல்லுவாங்க. ஆனா அவங்களைக் கூட்டிட்டுப் போக வேண்டியது உங்க பொறுப்பு பாத்துக்கோங்க. இந்த நேரத்துல மெர்சியை என்னால கூட்டிட்டும் வர முடியாது இங்கேயே விட்டுட்டும் வர முடியாது" என்று சொல்ல,

"நீ வர வேண்டாம். அம்மாவை விட்டுட்டு நானே வரேன்"

"நான் டாக்டர் கிட்டப் பேசிட்டேன். ஒன்னும் பிரச்சனை இல்லைனு சொல்லிட்டார். எதுக்கும் நம்ம சேடிஸ்பிகேஷனுக்கு தான் ரெண்டு நாள் இருக்க சொன்னார். நீங்க அங்க இருந்தா தூங்க மாட்டீங்க. மேனேஜர் அங்க தான் இருப்பார். வேணுனா என் ஃப்ரண்ட் யோகேஷை கூட வரச் சொல்லுறேன். அண்ட் அந்தப் பொண்ணு இன்னும் அங்க தான் இருக்கா?" என்றதும் தான் அஞ்சனாவின் ஞாபகமே அவருக்கு வந்தது. நேரம் இரவு பத்தை நெருங்கியிருந்தது.

"இந்த அவசரத்துல இதை நான் மறந்துட்டேன். இங்க தான் இருக்கு. இப்படியெல்லாம் நடக்கும்னு அந்தப் பொண்ணுக்கு மட்டும் தெரியுமா என்ன? ரொம்ப பயந்திடுச்சு. உங்க அம்மா வேற அவளை முறைச்சிட்ட இருந்தா. நானே அந்தப் பொண்ணையும் டிராப் பண்ணிட்டு மேகலா வீட்டுக்குப் போயிடுறோம். ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ வரவேண்டாம்" என்றவர் பவியிடம் பேச அவரோ ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.

கடந்த முறை நவிரனை மருத்துவமனையில் சேர்ந்திருந்த சூழல் அனிச்சையாக அவர் மனதில் வந்து போனது. அந்த மூன்று கொடூரமான நாட்கள் போல் பவித்ரா தன் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை. அதன் பின் என்னென்னவோ நிகழ்ந்து விட்டது. ம்மா, மி, மம்மி, பவி, பாகு, ஏ ரைட்டரே என்று தன்னையே சுற்றிவந்த நவிரன் இந்த இரண்டாண்டுகளில் ஒருமுறை கூட அவரை அழைக்கவேயில்லை.

பழைய நினைவுகளில் இருந்த பவித்ராவை ஒருவாறு சமாளித்து அங்கிருந்து கிளப்புவதற்குள் குமாரசாமிக்கு போதும் போதும் என்றாகி விட்டது. பிறகு அங்கிருந்த மேனேஜர்களிடம் சொல்லிவிட்டு அஞ்சனாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

ட்ரைவர் வந்து விட்டதால் பின்னிருக்கையில் பவித்ராவுடன் அமர்ந்துவந்த அஞ்சனா மெதுவாக அவர் கரத்தைப் பிடித்து அதில் சிறு அழுத்தத்தைக் கொடுத்தாள். அதில் அவள் புறம் திரும்பியவருக்கு,

"சாரி மேடம். என் ஃபிரெண்டோட பொண்ணுகிட்ட இருந்து ஐஸ் க்ரீமை பிடுங்கி சும்மா விளையாட்டுக் காட்ட தான் நான் ஓடிவந்தேன். ஓடிவந்த வேகத்துல நான் தள்ளவும் அதே வேகத்துல நீங்க இழுக்கவும் தான்..." என்றவள் மேற்கொண்டு அதைச் சொல்லாமல் நிறுத்தினாள்.

"என்னோட சின்ன செயலோட விலை உங்க கண்ணீர்னு எனக்குத் தெரியில மேடம். இதுக்கு வெறும் மன்னிப்புங்கற வார்த்தை போதாது. அவருக்கு ஏற்கனவே அடிபட்ட இடத்துல மறுபடியும் அடிபட்டு இருக்குனு டாக்டர் சொன்னதும் அப்போ நான் உணர்ந்த தவிப்பை வெளிய சொல்ல முடியாது. என்னைத் திட்டியாவது உங்க கோவத்தை வெளிகாட்டிடுங்க ப்ளீஸ்..." என்று அஞ்சனா சொன்னதும் பவித்ராவுக்கு இன்னொருவரின் ஞாபகம் வந்து மறைந்தது.

"இட் வாஸ் ஏன் ஆக்சிடென்ட். உன் மேல எனக்கெந்த கோவமும் இல்ல. உன் வீடு எங்க இருக்கு?" என்றவருக்கு,

"தேங்க்ஸ் மேடம். ரொம்ப தேங்க்ஸ். நான் அண்ணாநகர்ல ஒரு பிஜில தான் தங்கியிருக்கேன்"

"ஸ்டுடென்ட்டா? என்ன படிக்குற?"

"ஹோட்டல் **** செஃபா இருக்கேன்" என்னும் வேளையில் அவள் இறங்கும் இடம் வந்துவிட அவளை இறக்கிவிட்டு பவித்ராவும் குமாரசாமியும் தங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றனர். இப்போது தான் பவித்ராவின் மூளையில் அந்த சந்தேகமே உண்டானது. அஞ்சனாவை தான் இதற்கு முன் எங்கேயோ பார்த்ததைப்போல் ஒரு பிரக்ஞை உண்டாக அது எங்கே என்று புரியாமல் யோசித்தார். சில நேரம் நம் தொண்டைக் குழி வரை வந்து நின்று வெளிவராத வார்த்தை பெயரைப் போல் தான் அஞ்சனாவைப் பற்றிய நினைவுகளும் தேங்கி நின்றது.

"அம்மா, இன்னைக்கு நானொரு பெரிய தப்பு பண்ணிட்டேன். ஒருத்தரோட கண்ணீருக்கு நான் காரணமாயிட்டேன். ஆனா அவங்களோட இருந்த அந்த நிமிடங்கள் எனக்கு என்னவோ சொல்ல முயற்சி செய்யுறது போல இருந்தது. ஆனா அது என்னனு தான் எனக்கு விளங்கவே இல்லை. ஹாஸ்பிடல்ல இருக்கறவருக்கு ஏதும் ஆகாமல் நாளைக்கே வீடு திரும்பிடனும். அந்த அம்மாவோட கண்ணுல ஒரு வித பரிதவிப்பை நான் இன்னைக்குப் பார்த்தேன். அது நாளைக்குள்ள சரிஆகிடனும். என்னால இன்னைக்கு அமர்நாத் அங்கிளுக்கு வேற தேவையில்லாத தர்மசங்கடம் உண்டாகிடுச்சு. நீங்களும் அப்பாவும் இப்போ என் கூட இல்லைனாலும் என்னைச் சுற்றி இப்படி நிறைய நல்ல மனிதர்களை விட்டுட்டுப் போயிருக்கிங்க. அந்த அம்மா கூட நான் கார்ல இருந்து இறங்கும் போது என் தலையைத் தடவி பத்திரமா போய்ட்டு வானு தான் அனுப்பி வெச்சாங்க..."

என்று அவளறையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்க அப்போது அவள் அறைக்கதவை பலமாகத் தட்டினாள் கார்த்தி. உடனே தன் டைரியை ஒளித்து வைத்தவள் கதவைத் திறக்க,

"என்ன ஆச்சு அஞ்சு? நாளைக்கு காலையில தான் வருவேன்னு சொல்லிட்டுப் போன? ஆர் யூ ஆல்ரைட்?"

நடந்ததை கார்த்தியிடம் சொல்லலாம் என்று நினைத்தவள் பிறகு வேண்டாமென எண்ணி வேறு கதை சொல்லி அவளை அனுப்பி வைத்தாள்.
வந்தவளுக்குத் தான் ஏனோ உறக்கம் வர மறுத்தது. புரண்டு புரண்டு படுத்தவள் ஒரு கட்டத்தில் தன் அலமாரியிலிருந்து அவளுடைய பழைய டைரி ஒன்றை எடுத்துப் புரட்டினாள்.

"அம்மா, நீ ஏன் அடிக்கடி டைரி எழுதுறேன்னு இப்போ தான் எனக்குப் புரியுது. என்னதான் மணிக்கணக்கா வீடியோ கால் பேசுனா கூட நீயும் நானும் எட்டாயிரத்தி சொச்சம் கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கோமாம். இதோ இப்போ தான் கூகுளாண்டவர் சொன்னாரு. நீ என்னை எப்போ பாரு வேலை வாங்கிட்டே இருக்கும் போதெல்லாம் இரு இரு நான் கூடவே இருக்கறதுனால தானே வேலை சொல்லிட்டே இருக்க. பாரு கூடிய சீக்கிரம் நான் உன்னை விட்டு தூரமாப் போய் ஜாலியா இருக்கபோறேன்னு சொல்லுவேன் தானே? அப்போல்லாம் நீ என்னை முறைச்சிட்டே பார்க்கத்தானே போறேன்னு சொல்லுவ. நான் கூட இருபத்தி ஓரம் நூற்றாண்டுல இன்டர்நெட் வீடியோ கால் அது இதுனு இருக்குங்கற தைரியத்துல ஊரைவிட்டு லண்டன் வந்துட்டேன் தான். இங்க எல்லாமே இருக்கு தான். அது போக எனக்குப் பிடிச்ச படிப்பைத் தேடி நானா தான் இங்க வந்தேன். அப்படியிருந்தும் ஈவினிங் காலேஜ் முடிச்சிட்டு பி.ஜிக்கு வந்தா மறுநாள் காலை வரை ஒரு தனிமை இருக்குது பாரு, அப்பா என்னால அதை உனக்கு வார்த்தையில சொல்லவே முடியாதுமா. அங்க இருந்தா ஜாலியா நீ பாக்குற சீரியலை கிண்டல் பண்ணிட்டு சச்சு கிட்ட ஏதாவது வம்பு செஞ்சு லல்லியை கொஞ்சம் வெறுப்பேத்தி மித்து யுவாவை கலாச்சி சாயுங்காலம் வீட்டுக்கு வரும் அப்பாவை சோஃபாவுல வம்படியா உட்கார வெச்சு அவர் மடியில தலைவெச்சு அன்னைக்கு நாள்ல நடந்ததை எல்லாம் சுவாரசியமா சொல்லி ஃபேமிலியா அந்த பெரிய டைனிங் டேபிள்ல உட்கார்ந்து பொறுமையா ஆற அமர சாப்பிட்டு அப்படியே நம்ம கார்டென்ல ஒரு வாக் போயிட்டு வந்து படுத்தா அப்பப்பா அது தானோ சொர்க்கம்! இங்க நான் மட்டும் தனியா சாப்பிடணும். அதும் நானே சமைக்கனும்! இதுல கூட ரெண்டு அடிமைங்க வேற? எனக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் சாப்பாட்டு ராமிகள். இருந்தும் நீ அடிக்கடி சொல்லுவயில்ல? இந்த உலகத்துல நமக்கே நமக்கானதுனா அது நம்மோட கற்பனைகளும் பொக்கிஷ நினைவுகளும் மட்டும் தான்னு. அதுல கற்பனைகள் கூட மாயையானது. கற்பனைகள் மேஜிக் பபுள்ஸ் போல. பார்க்க கவர்ச்சியா இருக்கும். ஆனா அதைத் தொட்டாலே மொத்தமும் மறைஞ்சிடும். நினைவுகள் கொஞ்சம் விசித்திரமானது. வித்தியாசனமானதும் கூட. இதோ லண்டன்ல ஏதோ ஒரு தெருல இருக்கும் ஏதோ ஒரு பில்டிங்கோட எட்டாவது மாடியில எட்நூத்தி ரெண்டாவது ரூம்ல இருக்குற நான் என்னோட இந்த பத்தொன்பது வருட வாழ்க்கையை நினைச்சுப் பார்க்கும் போது எனக்குள்ளயும் ஒரு மான்டேஜ் ஃபீலிங். ஆம் முக்கியமான ஒரு விஷயத்தை நான் சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு என் கூடப் படிக்குற ஹாரி எனக்கு ப்ரப்போஸ் பண்ணானே... மீதியை நாளைக்கு கண்டினு பண்ணுறேன். வயிறு குவா குவா என்கிறது. இப்போ சமைக்க ஆரமிச்சா தான் ஒருமணிநேரத்துல சாப்பிட முடியும். டாட்டா. பை...

நெஞ்சார்ந்த நேசத்துடன்,
அஞ்சனா முரளிதரன்.
30-11-2013"

காதலால் நிறைப்பாள்...

இந்தக் கதை புரியவில்லையா இல்லை பிடிக்கவில்லையா? போன ரெண்டு எபிசோடுக்கு வழக்கமா வரும் லைக்ஸ் கூட வரலையே. கதை கோர்வையாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருவது படிக்கும் உங்களுக்கு சிரமமாக இருக்கும் என்று எனக்கும் புரியுது. ஆனாலும் குறைந்தபட்ச நபர்களைக் கூட இது கவரவில்லையே என்று நினைக்கையில் ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியாவா இருக்கு??
 
நான் நாலு நாள் பிரேக் ல வரதுக்குள்ள ரெண்டு epi போடீங்களே praveen, எங்க request ஐ நிறைவேற்றயதற்கு நன்றி ?

This epi connects to a previous scene. Idhu தான் present ஆஹ். இல்லையோ நலனின் nilan இருக்கறது. ரைட்டர் மயங்கின scene தான் present ரைட்டா?? ?

நிறைய ட்விஸ்ட் இருக்கும் போல, என்னதான் செஞ்சாங்க பையனுக்கு பேசமா போற அளவு??? ??? அப்படி பாசமா காட்டிட்டு இப்படி பண்ற நீங்க ஒரு sadist writer என்றே தோன்றுகிறது ??? ???..

அடுத்த epi யம் சீக்கிரம் தர கேட்டுக்கொள்ள படுகிறது.
பீலிங்ஸ் ஆஃ nation லாம் வேண்டாம். இப்போ ஓரளவு புரியுது. அப்படியே வேகமா போயிட்டா we ll get understanding. ???? keep writing. Cheerss✌✌✌

Last எபில aftermath ஆஃ ஆமாவாசை பார்த்தேன் ?????????

Last, மாமியார் கதாசிரியர், மருமக டைரி ??? நல்லா goals ??????
 
after long time இந்த வாரம் முழுக்க நான் எபி கொடுத்துட்டே இருக்கேன். alternate days 'மழை' போயிட்டு இருக்கு ப்ரதிலிபில.

ஆம் நிலன் இருப்பது தான் ப்ரெசென்ட். நெஸ்ட் எபி present. அப்படியா? இல்லை அவங்க sadist எல்லாம் இல்ல?

அங்க 'மழை' கதைக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்குது. அப்படியே இங்க vkn வந்தா ரெஸ்பான்ஸ் இல்லையா அதான் ஒரு பீலிங்? sure thanks?

நான் தான் disclaimer போட்டேனே. அமாவாசை இல்லாட்டியும் அப்படிதான் எழுதி இருப்பேன்??

ஆமா ஆமா அடுத்த எபில மாமியார் மருமகள் இருவரும் மாமியார் மருமகளாவே வருங்க? நன்றி??
 
Pavi, Enna than celebratiya irunthalum, ammannu kattraga. Naviranodan kobam ennannu sollirungalen.
என்னதான் பவித்ராங்கறவங்க செலிபிரிட்டியா இருந்தாலும் அந்த பவி வேற இந்த பவி வேற??
 
ம்ம்ம்... குட் பாய்... இப்படியே வேக வேகமா எப்பி குடுத்தீங்கன்னா சூப்பரா இருக்கும் ???
 
எல்லாம் மேல இருக்கறவன் கையில இருக்கு. இருந்தும் முயற்சிக்கிறேன் நெக்ஸ்ட் எபி புதன் கிழமை??
 
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)

சிறிது நேரம் அவரையும் அறியாது பதற்றம் கொண்ட பவித்ரா குழந்தைகளை ரசித்துக்கொண்டிருக்கும் நவிரனைக் கண்டதும் தான் சமநிலைக்கு வந்தார். மகனைப் பற்றிய கவலை இனி இல்லை என்று வெளியிலிருந்து அவர் அந்தக் கதவை இழுக்க அதே சமயம் உள்ளிருந்து அதைத் திறந்த அஞ்சனா கணப்பொழுதில் நிகழ்ந்த அந்த திடீர் உந்துதலில் அவள் கையிலிருந்த ஐஸ் க்ரீமை எதிரில் நின்ற பவித்ராவின் சேலையில் கொட்டிவிட்டாள். அதோடு நிலைதடுமாறி கீழே விழப் போனவள் ஒரு பேலன்ஸுக்காக அவர் மீதே விழுந்தும் விட்டாள். அங்கே குழந்தைகள் மீது கவனமாக இருந்தவன் பவி மற்றும் அஞ்சு ஆகியோரின் அலறலில் திரும்பி நொடியில் சுதாரித்து பவியை நெருங்கி தாங்குவதற்குள் அவர் மீதிருந்த அஞ்சனா பவியுடன் சேர்ந்து நவியின் மீது விழுந்துவிட அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது.

பிறகு அங்கிருந்தவர்கள் உதவியுடன் அஞ்சனா மற்றும் பவித்ரா ஆகியோர் எழுந்து அமர நவி பேலன்ஸுக்காக அவன் இடக்கையை ஊன்றிவிட முன்பு அடிப்பட்ட அதே இடத்தில் மேலும் அடிபட்டதால் வலியில் துடித்தான்.

"நவி, கண்ணா என்னாச்சுப்பா?" என்று பவித்ரா அலறவும் தான் அங்கிருந்தவர்களின் பேச்சின் ஊடே இவர்கள் தாய் மகன் என்றே அஞ்சனாவிற்குப் புரிந்தது. தன்னால் தானே இத்தனை விபரீதங்களும் என்று அறிந்து குற்றயுணர்ச்சியில் கையைப் பிசைந்தவாறு அவள் நிற்க அவளுக்கு அருகில் வந்து நின்றார் அமர்நாத், மணமகளின் தந்தை.

கூட்டத்திலிருந்த ஒரு டாக்டர் நவிரனுக்கு முதலுதவி கொடுத்து பயப்படுமளவிற்கு ஒன்றுமில்லை என்றும் எதிர்பார்க்காமல் ஏற்பட்ட நிகழ்வால் சதை பிடித்துக்கொண்டது என்று தெரிவித்தும் நவிரனின் வலி வெளிப்படுத்தும் முகத்தைப் பார்க்க சகிக்காமல் குமாரசாமியை ஹாஸ்பிடலுக்கு வண்டி எடுக்குமாறு சொன்னார்.

"அஞ்சுமா, நீ ஒன்னும் கவலைப்படாத. நீ பொண்ணு ரூமுக்கு போ நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லியும் கேட்காமல் பவித்ராவை நோக்கி நகர்ந்தாள்.

அதற்குள் அங்கு திரண்ட கூட்டம் நகரத்தொடங்கியது.

"மேடம், ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. நான்..." என்றவள் பவித்ரா பார்த்த அந்தப் பார்வையில் அமைதியானாள். பொது இடத்தில் எதுவும் பேசிவிடக் கூடாதென்று அவர் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார். அது போக தானொரு ஊரறிந்த எழுத்தாளர் என்பதும் அவரைப் பேசவிடாமல் தடுத்தது.

இப்போது மணமகனின் தந்தை அங்கே வந்து அவர்களை விசாரிக்க ஏனோ அமர்நாத்தின் முகம் கவலை கொண்டது. இதுவரை உறவினர்களாக மட்டும் இருந்த குமாரசாமியும் மணமகனின் தந்தையும் இப்போது தான் ஒரு ஷோ ரூம் டீலர்ஷிப் மூலம் தொழில்முறை நண்பர்களாக அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இது சம்மந்தமாக அனைத்துப் பேச்சுவார்தைகளையும் நவியுடன் தானே நடத்திக்கொண்டிருக்கிறார். அவரவர்களுக்கு அவரவர் கவலை!

"சரி சௌந்தர்ராஜ், நாங்க இப்போ கிளம்புறோம். நீங்க மேரேஜ் வேலையைப் பாருங்க..." என்று இரத்தின சுருக்கமாக உரைத்த குமாரசாமி பவி மற்றும் நவியுடன் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்துவிட்டனர். குமாரசாமி டிரைவிங் செய்வார் என்றாலும் நலனின் கண்டிப்பான அறிவுதலால் அவர் டிரைவிங் செய்தே நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டது. அங்கிருந்து நலனை அழைத்து ட்ரைவரை வரச்சொல்ல நவிரனுக்கு முன்பைக் காட்டிலும் இப்போது பரவாயில்லை என்றாலும் அவனுக்கு நேர்ந்த அந்நிகழ்வு அவனை வண்டி எடுக்கவிடமால் தடுத்தது.

இவர்களைப் பின்தொடர்ந்து வந்த அஞ்சனா இதையெல்லாம் கேட்டு அவர்களுக்கு உதவ எண்ணி அவர்கள் முன் நின்றாள். அவளைக் கண்டதும் பவி தன் அதிருப்தியை முகபாவங்களில் காட்டிவிட,

"உங்களுக்கு இப்போ என்னைப் பார்க்கவே பிடிக்கலைங்கறது எனக்கும் புரியுது. இருந்தும் இதுக்கெல்லாம் நான் தான் காரணம். அண்ட் நான் ட்ரைவ் பண்ணுவேன். உங்களுக்கு ஓகேனா நானே ஹாஸ்பிடல் வரை உங்க கூட வரேன். என் மேல இருக்குற கோவத்துல உங்க பையனைத் தண்டிக்க வேண்டாம். அவர் ரொம்ப பெயின்ஃபுல்லா ஃபீல் பண்றார்னு நான் நினைக்கிறன்" என்று சொல்லும் போதே நவி வலியில் முகம் சுளித்தான். பிறகு அவளே அந்த வண்டியைச் செலுத்த ஒரு பிரபல மருத்துவமனையின் முன்பு அந்த வாகனம் நின்றது.

வரவிருப்பமில்லை என்றவனை வலுக்கட்டாயமாக அழைத்து வந்ததால் இது ஏற்பட்டு விட்டதோ என்று நினைக்கையில் பவித்ராவுக்கு கண்கள் கலங்கிவிட்டது. உள்ளே அவனைப் பரிசோதித்துவிட்டு வெளியேறிய மருத்துவர் முன்பு அவனுக்கு ஆப்ரேசன் செய்யப்பட்ட முதுகெலும்பு பகுதியில் அடிபட்டு இருப்பதால் நாளை அவனுக்கு ஒரு ஸ்கேன் செய்த பிறகு தான் டிஸ்சார்ஜ் செய்யமுடியும் என்று தெரிவித்து விட அதற்குள் அவர்கள் ஷோ ரூமில் இருந்து மேனேஜர்கள் அங்கு வந்துவிட்டனர். விஷயமறிந்த நலன் மெர்சியை விட்டு வரமுடியாத காரணத்தால் குமாரசாமியை அழைத்து,

"ப்பா, நீங்க அம்மாவைக் கூட்டிட்டு நம்ம மேகலா சித்தி வீட்டுக்குப் போங்க. விக்ரமை(அவர்கள் ஷோ ரூமின் மேனேஜர்) நைட் ஹாஸ்பிடல்ல தங்க சொல்லிட்டேன். அம்மா மாட்டேன்னு தான் சொல்லுவாங்க. ஆனா அவங்களைக் கூட்டிட்டுப் போக வேண்டியது உங்க பொறுப்பு பாத்துக்கோங்க. இந்த நேரத்துல மெர்சியை என்னால கூட்டிட்டும் வர முடியாது இங்கேயே விட்டுட்டும் வர முடியாது" என்று சொல்ல,

"நீ வர வேண்டாம். அம்மாவை விட்டுட்டு நானே வரேன்"

"நான் டாக்டர் கிட்டப் பேசிட்டேன். ஒன்னும் பிரச்சனை இல்லைனு சொல்லிட்டார். எதுக்கும் நம்ம சேடிஸ்பிகேஷனுக்கு தான் ரெண்டு நாள் இருக்க சொன்னார். நீங்க அங்க இருந்தா தூங்க மாட்டீங்க. மேனேஜர் அங்க தான் இருப்பார். வேணுனா என் ஃப்ரண்ட் யோகேஷை கூட வரச் சொல்லுறேன். அண்ட் அந்தப் பொண்ணு இன்னும் அங்க தான் இருக்கா?" என்றதும் தான் அஞ்சனாவின் ஞாபகமே அவருக்கு வந்தது. நேரம் இரவு பத்தை நெருங்கியிருந்தது.

"இந்த அவசரத்துல இதை நான் மறந்துட்டேன். இங்க தான் இருக்கு. இப்படியெல்லாம் நடக்கும்னு அந்தப் பொண்ணுக்கு மட்டும் தெரியுமா என்ன? ரொம்ப பயந்திடுச்சு. உங்க அம்மா வேற அவளை முறைச்சிட்ட இருந்தா. நானே அந்தப் பொண்ணையும் டிராப் பண்ணிட்டு மேகலா வீட்டுக்குப் போயிடுறோம். ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ வரவேண்டாம்" என்றவர் பவியிடம் பேச அவரோ ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.

கடந்த முறை நவிரனை மருத்துவமனையில் சேர்ந்திருந்த சூழல் அனிச்சையாக அவர் மனதில் வந்து போனது. அந்த மூன்று கொடூரமான நாட்கள் போல் பவித்ரா தன் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை. அதன் பின் என்னென்னவோ நிகழ்ந்து விட்டது. ம்மா, மி, மம்மி, பவி, பாகு, ஏ ரைட்டரே என்று தன்னையே சுற்றிவந்த நவிரன் இந்த இரண்டாண்டுகளில் ஒருமுறை கூட அவரை அழைக்கவேயில்லை.

பழைய நினைவுகளில் இருந்த பவித்ராவை ஒருவாறு சமாளித்து அங்கிருந்து கிளப்புவதற்குள் குமாரசாமிக்கு போதும் போதும் என்றாகி விட்டது. பிறகு அங்கிருந்த மேனேஜர்களிடம் சொல்லிவிட்டு அஞ்சனாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

ட்ரைவர் வந்து விட்டதால் பின்னிருக்கையில் பவித்ராவுடன் அமர்ந்துவந்த அஞ்சனா மெதுவாக அவர் கரத்தைப் பிடித்து அதில் சிறு அழுத்தத்தைக் கொடுத்தாள். அதில் அவள் புறம் திரும்பியவருக்கு,

"சாரி மேடம். என் ஃபிரெண்டோட பொண்ணுகிட்ட இருந்து ஐஸ் க்ரீமை பிடுங்கி சும்மா விளையாட்டுக் காட்ட தான் நான் ஓடிவந்தேன். ஓடிவந்த வேகத்துல நான் தள்ளவும் அதே வேகத்துல நீங்க இழுக்கவும் தான்..." என்றவள் மேற்கொண்டு அதைச் சொல்லாமல் நிறுத்தினாள்.

"என்னோட சின்ன செயலோட விலை உங்க கண்ணீர்னு எனக்குத் தெரியில மேடம். இதுக்கு வெறும் மன்னிப்புங்கற வார்த்தை போதாது. அவருக்கு ஏற்கனவே அடிபட்ட இடத்துல மறுபடியும் அடிபட்டு இருக்குனு டாக்டர் சொன்னதும் அப்போ நான் உணர்ந்த தவிப்பை வெளிய சொல்ல முடியாது. என்னைத் திட்டியாவது உங்க கோவத்தை வெளிகாட்டிடுங்க ப்ளீஸ்..." என்று அஞ்சனா சொன்னதும் பவித்ராவுக்கு இன்னொருவரின் ஞாபகம் வந்து மறைந்தது.

"இட் வாஸ் ஏன் ஆக்சிடென்ட். உன் மேல எனக்கெந்த கோவமும் இல்ல. உன் வீடு எங்க இருக்கு?" என்றவருக்கு,

"தேங்க்ஸ் மேடம். ரொம்ப தேங்க்ஸ். நான் அண்ணாநகர்ல ஒரு பிஜில தான் தங்கியிருக்கேன்"

"ஸ்டுடென்ட்டா? என்ன படிக்குற?"

"ஹோட்டல் **** செஃபா இருக்கேன்" என்னும் வேளையில் அவள் இறங்கும் இடம் வந்துவிட அவளை இறக்கிவிட்டு பவித்ராவும் குமாரசாமியும் தங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றனர். இப்போது தான் பவித்ராவின் மூளையில் அந்த சந்தேகமே உண்டானது. அஞ்சனாவை தான் இதற்கு முன் எங்கேயோ பார்த்ததைப்போல் ஒரு பிரக்ஞை உண்டாக அது எங்கே என்று புரியாமல் யோசித்தார். சில நேரம் நம் தொண்டைக் குழி வரை வந்து நின்று வெளிவராத வார்த்தை பெயரைப் போல் தான் அஞ்சனாவைப் பற்றிய நினைவுகளும் தேங்கி நின்றது.

"அம்மா, இன்னைக்கு நானொரு பெரிய தப்பு பண்ணிட்டேன். ஒருத்தரோட கண்ணீருக்கு நான் காரணமாயிட்டேன். ஆனா அவங்களோட இருந்த அந்த நிமிடங்கள் எனக்கு என்னவோ சொல்ல முயற்சி செய்யுறது போல இருந்தது. ஆனா அது என்னனு தான் எனக்கு விளங்கவே இல்லை. ஹாஸ்பிடல்ல இருக்கறவருக்கு ஏதும் ஆகாமல் நாளைக்கே வீடு திரும்பிடனும். அந்த அம்மாவோட கண்ணுல ஒரு வித பரிதவிப்பை நான் இன்னைக்குப் பார்த்தேன். அது நாளைக்குள்ள சரிஆகிடனும். என்னால இன்னைக்கு அமர்நாத் அங்கிளுக்கு வேற தேவையில்லாத தர்மசங்கடம் உண்டாகிடுச்சு. நீங்களும் அப்பாவும் இப்போ என் கூட இல்லைனாலும் என்னைச் சுற்றி இப்படி நிறைய நல்ல மனிதர்களை விட்டுட்டுப் போயிருக்கிங்க. அந்த அம்மா கூட நான் கார்ல இருந்து இறங்கும் போது என் தலையைத் தடவி பத்திரமா போய்ட்டு வானு தான் அனுப்பி வெச்சாங்க..."

என்று அவளறையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்க அப்போது அவள் அறைக்கதவை பலமாகத் தட்டினாள் கார்த்தி. உடனே தன் டைரியை ஒளித்து வைத்தவள் கதவைத் திறக்க,

"என்ன ஆச்சு அஞ்சு? நாளைக்கு காலையில தான் வருவேன்னு சொல்லிட்டுப் போன? ஆர் யூ ஆல்ரைட்?"

நடந்ததை கார்த்தியிடம் சொல்லலாம் என்று நினைத்தவள் பிறகு வேண்டாமென எண்ணி வேறு கதை சொல்லி அவளை அனுப்பி வைத்தாள்.
வந்தவளுக்குத் தான் ஏனோ உறக்கம் வர மறுத்தது. புரண்டு புரண்டு படுத்தவள் ஒரு கட்டத்தில் தன் அலமாரியிலிருந்து அவளுடைய பழைய டைரி ஒன்றை எடுத்துப் புரட்டினாள்.

"அம்மா, நீ ஏன் அடிக்கடி டைரி எழுதுறேன்னு இப்போ தான் எனக்குப் புரியுது. என்னதான் மணிக்கணக்கா வீடியோ கால் பேசுனா கூட நீயும் நானும் எட்டாயிரத்தி சொச்சம் கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கோமாம். இதோ இப்போ தான் கூகுளாண்டவர் சொன்னாரு. நீ என்னை எப்போ பாரு வேலை வாங்கிட்டே இருக்கும் போதெல்லாம் இரு இரு நான் கூடவே இருக்கறதுனால தானே வேலை சொல்லிட்டே இருக்க. பாரு கூடிய சீக்கிரம் நான் உன்னை விட்டு தூரமாப் போய் ஜாலியா இருக்கபோறேன்னு சொல்லுவேன் தானே? அப்போல்லாம் நீ என்னை முறைச்சிட்டே பார்க்கத்தானே போறேன்னு சொல்லுவ. நான் கூட இருபத்தி ஓரம் நூற்றாண்டுல இன்டர்நெட் வீடியோ கால் அது இதுனு இருக்குங்கற தைரியத்துல ஊரைவிட்டு லண்டன் வந்துட்டேன் தான். இங்க எல்லாமே இருக்கு தான். அது போக எனக்குப் பிடிச்ச படிப்பைத் தேடி நானா தான் இங்க வந்தேன். அப்படியிருந்தும் ஈவினிங் காலேஜ் முடிச்சிட்டு பி.ஜிக்கு வந்தா மறுநாள் காலை வரை ஒரு தனிமை இருக்குது பாரு, அப்பா என்னால அதை உனக்கு வார்த்தையில சொல்லவே முடியாதுமா. அங்க இருந்தா ஜாலியா நீ பாக்குற சீரியலை கிண்டல் பண்ணிட்டு சச்சு கிட்ட ஏதாவது வம்பு செஞ்சு லல்லியை கொஞ்சம் வெறுப்பேத்தி மித்து யுவாவை கலாச்சி சாயுங்காலம் வீட்டுக்கு வரும் அப்பாவை சோஃபாவுல வம்படியா உட்கார வெச்சு அவர் மடியில தலைவெச்சு அன்னைக்கு நாள்ல நடந்ததை எல்லாம் சுவாரசியமா சொல்லி ஃபேமிலியா அந்த பெரிய டைனிங் டேபிள்ல உட்கார்ந்து பொறுமையா ஆற அமர சாப்பிட்டு அப்படியே நம்ம கார்டென்ல ஒரு வாக் போயிட்டு வந்து படுத்தா அப்பப்பா அது தானோ சொர்க்கம்! இங்க நான் மட்டும் தனியா சாப்பிடணும். அதும் நானே சமைக்கனும்! இதுல கூட ரெண்டு அடிமைங்க வேற? எனக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் சாப்பாட்டு ராமிகள். இருந்தும் நீ அடிக்கடி சொல்லுவயில்ல? இந்த உலகத்துல நமக்கே நமக்கானதுனா அது நம்மோட கற்பனைகளும் பொக்கிஷ நினைவுகளும் மட்டும் தான்னு. அதுல கற்பனைகள் கூட மாயையானது. கற்பனைகள் மேஜிக் பபுள்ஸ் போல. பார்க்க கவர்ச்சியா இருக்கும். ஆனா அதைத் தொட்டாலே மொத்தமும் மறைஞ்சிடும். நினைவுகள் கொஞ்சம் விசித்திரமானது. வித்தியாசனமானதும் கூட. இதோ லண்டன்ல ஏதோ ஒரு தெருல இருக்கும் ஏதோ ஒரு பில்டிங்கோட எட்டாவது மாடியில எட்நூத்தி ரெண்டாவது ரூம்ல இருக்குற நான் என்னோட இந்த பத்தொன்பது வருட வாழ்க்கையை நினைச்சுப் பார்க்கும் போது எனக்குள்ளயும் ஒரு மான்டேஜ் ஃபீலிங். ஆம் முக்கியமான ஒரு விஷயத்தை நான் சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு என் கூடப் படிக்குற ஹாரி எனக்கு ப்ரப்போஸ் பண்ணானே... மீதியை நாளைக்கு கண்டினு பண்ணுறேன். வயிறு குவா குவா என்கிறது. இப்போ சமைக்க ஆரமிச்சா தான் ஒருமணிநேரத்துல சாப்பிட முடியும். டாட்டா. பை...

நெஞ்சார்ந்த நேசத்துடன்,
அஞ்சனா முரளிதரன்.
30-11-2013"

காதலால் நிறைப்பாள்...

இந்தக் கதை புரியவில்லையா இல்லை பிடிக்கவில்லையா? போன ரெண்டு எபிசோடுக்கு வழக்கமா வரும் லைக்ஸ் கூட வரலையே. கதை கோர்வையாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருவது படிக்கும் உங்களுக்கு சிரமமாக இருக்கும் என்று எனக்கும் புரியுது. ஆனாலும் குறைந்தபட்ச நபர்களைக் கூட இது கவரவில்லையே என்று நினைக்கையில் ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியாவா இருக்கு??
Nirmala vandhachu ???
 
Top