Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெள்ளக்கார வேலாயி 1

Advertisement

Jeyalakshmimohan

Member
Member
எங்கு பார்த்தாலும் பசுமை... சூரியன் வெயில் தணிந்து மாலை
நேர தென்றல் இதமாக வீசியது; பறவைகள் எல்லாம் இரை தேடிவிட்டு கூட்டம்
கூட்டமாக தனது கூட்டிற்கு திரும்ப வானில் பறந்தபடி இருந்தன; அந்த
பறவைகள் போலவே சென்னையில் இருந்த திவ்யாவும் தனது வீட்டிற்கு வந்தாள்.
வயக்காட்டில் தண்ணீர் கட்டிக்கொண்டிருந்த திவ்யாவின் தந்தை நீண்ட நாள் கழித்து
மகளை பார்த்த மகிழ்ச்சியில் அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு "திவ்யா குட்டி...
வந்துட்டியா.... " என ஆசையாக சொல்லிக்கொண்டே வந்தார்.
"அப்பா எப்படி இருக்கீங்க...? இனி கவலைப்படாதீங்க லாக்டௌன் போட்டுட்டாங்க எப்படியும் ஆபீஸ் ஓபன் பண்ண ரெண்டு மாசமாவது ஆகும் அது வரை உங்க கூட தான் இருப்பேன்" என்றாள்.
"பிள்ளைக்கு முகமே வாடி போச்சு பாரு... மதியம் சாப்பிட்டியா இல்லையா திவ்யா? ராதா..... ராதா.... எங்க போன இவ உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்லலாம்னு பார்த்தா ஆள காணோம் பாரேன்" என புலம்பினார் திவ்யா அப்பா. .
பெருமாளுக்கு திவ்யா என்றால் உசுரு அப்படியே உருகுவாரு; ஒரே பிள்ளை இல்ல அவருக்கு பாசம் அதிகம்; மகளை விட்டா யாரும் இல்ல பெருமாளுக்கு ; திவ்யாவுக்கும் அப்பா தான் எல்லாமே அம்மா உடம்பு முடியாம திவ்யா ஸ்கூல் படிக்கும்போதே இறந்துட்டாங்க
பெருமாளுக்கு உதவியா ராதா என்கிற வேலைக்கார பொண்ணுதான் கூட இருக்கா.
"ஐயா... ஐயா... கூப்பிட்டீங்களா?" என ராதா கேட்டாள் அவளுக்கும் கிட்டத்தட்ட
திவ்யா வயசு தான் பெருசா படிக்கவில்லை என்றாலும் வீட்டு வேலை வயல் வேலை எல்லாம் நல்லா செய்வா
"எங்க போன இவ்வளவு நேரம்?"

"ஐயா சர்க்கரை தீர்ந்து போச்சு கடைக்கு போயிட்டு வந்தேன். ஐ!! அம்மா எப்ப வந்தீங்க நல்லா இருக்கீங்களா காலேஜ் எல்லாம் முடிஞ்சிடுச்சா?" என ராதா கேட்டாள்.
திவ்யா ராதாவின் காதை திருவடியே சொன்னாள் "எத்தனை தடவை சொல்லுறது அம்மான்னு கூப்பிடாதே.... எனக்கும் உன் வயசுதான் திவ்யானு கூப்பிடு அப்புறம் நான் காலேஜ் முடித்து வேலைக்கு போக ஆரம்பித்து ஆறு மாசம் ஆகுது".
" சரி இருங்க திவ்யா அம்மா நான் சூடா காபி போட்டு கொண்டு வரேன்" என்று கிளம்பினாள் ராதா.
" அப்பா நானும் உங்க கூட கொஞ்ச நாளைக்கு விவசாயம் செய்யலாம்னு இருக்கேன் மெதுவாக இழுத்த படி சொன்னாள்".
"திவ்யா எதுக்குமா இப்படி வெயில்ல வயக்காட்டுல வேலை பாக்குறதுகா நான் உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன்" என்று ஆதங்கப்பட்டார் பெருமாள்.
"ஆபீஸ் மறுபடியும் ஸ்டார்ட் ஆகுற வரைக்கும் தாம்பா ப்ளீஸ் பா...." என்றாள் திவ்யா.
சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு இப்போது சென்னையில் ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறாள் மாதம் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்குகிறாள் திவ்யா.
"அது குட்டிமா உனக்கு வீட்டு வேலை கூட செஞ்சு பழக்கம் இல்ல; எதுக்கு உனக்கு கஷ்டம் " என வருந்தினார் பெருமாள்.
"என்னால முடியும்பா நான் கொஞ்ச நாளைக்காவது உங்களுக்கு உதவியா இருக்கேன்" என்றாள்.
சரி என அரைகுறையாக தலையசைத்தார்
திடீரென கட்டுக்கடங்காத காலைஎட்டி பாய்ந்து கொண்டு திவ்யா முன் ஓடிவந்தது ஐயோ! ஐயோ...!! அப்பா மாடு என கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள் திவ்யா கண்ணை திறந்து பார்த்தால் காலைக்கு முன் அதன் கயிரை இழுத்தபடி கதிர் மீசையை முறுக்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்தான் .'
காளையை பார்த்து கொண்டு வரதில்லையா' என பெருமாள் கேட்டார் .
'சரி விடுங்கப்பா...' என பெருமூச்சு விட்டாள்.
"திவ்யா தெரியாம காளையை விட்டுட்டேனு நினைச்சியா... இல்ல நீ பயப்படணும்னு தான் விட்டேன்" என திவ்யா காதோரம் வந்து கிசுகிசுத்தான் கதிர்.
"என்ன... வேணும்னு விட்டாயா! இந்த காள மாடு மாதிரியே நீயும் திமிருபுடிச்சவன் தான் போல" என சண்டை பிடிக்க ஆரம்பித்தாள் திவ்யா.
"என்ன பாப்பா பயந்திட்டியா உங்க மாடுதான் பாக்கதான் பயங்கரமாயிருக்கும் ஆனால் அது சாது தான் முட்டாது" என சிரித்தான்.
"கதிர் சின்ன பிள்ளைல எப்படி சண்டை போட்டிங்கலோ இப்பவும் அப்படியே சண்டை போட்டுட்டு இருக்கீங்க விளையாட்டு பிள்ளை போங்க" என சொல்லிவிட்டு தன் வேலையை பார்க்க போய் விட்டார் பெருமாள் .
பெருமாளின் தங்கச்சி பையன் கதிர் ; படித்தாலும் விவசாயம்தான் தனது மூச்சு என இருப்பவன் நீண்ட வருடமாகவே தங்கச்சி வீட்டுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது சிறிது காலமாக தான் பேசி சமாதானம் ஆனார்கள்.
"திவ்யாமா கதிர் அண்ணாவை முன்னாடியே தெரியுமா?" என காபியை நீட்டிய படியே கேட்டாள் ராதா
"ஆமா சார் இந்த ஊரு நாட்டாமை பெருசா தெரிஞ்சுக்கிறதுக்கு" என முகத்தை சுளித்தாள் திவ்யா
"அதை என்கிட்ட கேளு ராதா நான் சொல்லுறேன் பேஸ்புக்கில் அறிமுகமாகி நிறைய பேர் தோழர்கள் ஆகி பார்த்திருப்ப ஏன் லவ்வரா கூட இருக்காங்க ஆனா ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமான எதிரியை கேள்விப்பட்டு இருக்கியா மேடம் நம்ம வேண்டப்பட்ட விரோதி தான்" என சொல்லி சிரித்தான் கதிர்.
கேட்கவே சுவாரசியமா இருக்கு மேல சொல்லுங்க என்றாள் ராதா
திவ்யா இருவரையும் பார்த்து முறைத்தாள்
"திவ்யா மேடம் ஃபேஸ்புக்ல விட நேரில் பார்க்க கொஞ்சம் அழகா தான் இருக்கீங்க" என கிண்டல் அடித்தான்
"நீ கூட நேரில் பார்க்க ரொம்ப திமிரு புடிச்சவன் மாதிரிதான் இருக்க போடா" என்றாள் திவ்யா
"நீங்க இங்க இருக்கீங்க திவ்யா அம்மா சென்னையில அப்புறம் எப்படி பேசாமல் பழகாமல் எதிரியா நீங்க முட்டிக்கிட்டு இருக்கீங்க" என குழம்பினாள் ராதா
போக போக தெரியும் பாரு என சொல்லி சிரித்தான் கதிர்.
வருவாள் வேலாயி
 
Top