Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❣️உயிரோடு கலந்தவள்❣️ அத்தியாயம் 03

Advertisement

ரிஷி

Member
Member
இரவு 10 மணியாகியும் வீட்டுக்கு வந்து சேராத தன் தங்கை கயல்விழியை எதிர்பார்த்து காத்திருந்தாள் அஷ்வி.....

கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு சலிப்பு தட்டவும் சோபாவில் அமர்ந்து டீவியை ஆன் செய்ய அதில் பரபரப்பாக இன்று நடந்த கொலை பற்றி ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்ததை கண்டவள் அதிர்ந்து போனாள்.

" நேத்து ஒரு கொல... அதுக்குள்ள இன்னொரு கொலையா? யாருமே இதை தட்டிக் கேட்கவே மாட்டாங்களா? என தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்க

" ஏன்... நீ போய் தட்டிக் கேட்க வேண்டியதுதானே"அதற்கு பதில் அளித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள் கயல்விழி. டிவியை ஆஃப் பண்ணிவிட்டு அவளைப் பார்த்து முறைத்தவள்

"ஆமா எங்கடி ஓன் அருமை அண்ணன்... என் ஆசை தங்கச்சிய நான்தான் பிக்கப் பண்ணிட்டு வருவேன்னு வந்தானே?"

"உனக்கு பொறாமைன்னு ஒத்துக்கோ.. அதோட மிஸ் அஷ்வா.....அவர் உங்களுக்கும் சேர்த்து தான் அண்ணங்குறத மறந்துராதீங்க"எனவும்

"அப்படி சொல்லுடா என் செல்லாகுட்டி.."
என்றுவிட்டு எதிர் சோபாவில் வந்து அமர்ந்தான் அஜய்.

" நீ என்கூட பேசாத "

"ஹே மிஸ் அஷ்வா.... என் அண்ணன் என் கிட்ட தான் பேசினாரு.... உங்க கிட்ட இல்ல.. சோ நீங்க கொஞ்சம் அடக்கி வாசிச்சிங்கன்னா எங்களுக்கு உதவியா இருக்கும்"

என கயல் சொல்லவும் அவள் மீது தன் கையிலிருந்த குஷனை தூக்கி எறிந்து விட்டு கோபமாக தன் அறைக்கு சென்று கதவை படார் என அடைத்தாள்.
அவளின் சிறுபிள்ளை தனத்தை நினைத்து சிரித்த அஜய்

" பாவம்டி அவ ரொம்ப நொந்து இருப்பா நீ போயி அவ கூட இரு"

" என்னதான் இருந்தாலும் என்ன விட அவளைத்தான் உனக்கு புடிக்கும் இல்லண்ணா"

" அப்படி இல்லமா கயல்" என அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு தன் அறைக்கு சென்றவனுக்கே தெரியும் அது அவளுக்கான சமாதான வார்த்தை மட்டும்தான் என்பது.

காலை......

"அண்ணி... எனக்கு டிபன் வேணாம் அண்ணி நான் வெளியே போய் எடுத்துக்கிறேன்."

என்ற அஷ்வினி அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.இன்று அந்த முதல் நாள் நடந்த கொலை சம்பந்தமாக யாரோ வந்து புகார் கொடுத்ததற்கிணங்க அந்த கேஸ் இன்று கோர்ட்டுக்கு வருகிறது. அதை டீல் பன்னிய ஆளுக்கு ஏதோ அவசர வேலை வந்துவிட அந்த கேஸை இவளுக்கு கொடுத்து விட்டார்கள்.

வெற்றிவேல் யுனிவர்சிட்டி......

"ஏய் இங்க வா.....இங்க வா..." எனும் குரல் தன்னை நோக்கித்தான் பேசப்படுகிறது என அறிந்த கயல்விழிக்கு மனதில் திக்கென்றது.

இன்று தான் காலேஜுக்கு முதல்நாள்... இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான் வந்திருந்தாள் எனினும் நேரடியாக எதிர்கொள்ளும் போது மனம் அதிர்வதை அவளால் நிறுத்த முடியவில்லை........... என்ன செய்வதென தெரியாமல் மெதுவாக நடந்து வர அவர்களில் ஒருவன்

" கால் சுளுக்குகிச்சோ " என கேட்கவும் மற்ற அனைவரும் சிரிக்க அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.அவள் அஷ்வினியை போலல்லாது பயந்த சுபாவமுடையவள். அவர்கள் முன் வந்து நிற்க

" உன் பெயர் என்ன"

"க...க..கயல்... கயல்விழி"

" புதுசா"

"ஆமாண்ணா"

"என்னா....து அண்ணாவா"

"சீச்சீ.....அழகான பொண்ணுங்க அப்படி கூப்பிட கூடாது" என்ற அவனைப் பார்த்த அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

"முள்ளம் பன்டிக்கு பேன்ட் சட்ட போட்ட மாதிரி இருந்துட்டு பேச்ச பாரு" என நினைத்தவளுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் போக சிரிக்கவும்... அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

" என்னடி சிரிக்கிற போ... போய்..அதோ வரானே..அவனுக்கு லவ்வ சொல்லு போ...."

என தூரத்தில் வந்து கொண்டிருந்த ஒருவனை கைகாட்ட தனக்கு வந்த சோதனையில் பலனாக கண்களில் கண்ணீரணை கோர்க்க அதை கண்டும் காணாதவன் போல ஒரு ரோஜாவை எடுத்து அவள் கையில் கொடுத்து

" போ...." என கத்த அவளும் பயந்து பயந்து கொஞ்ச தூரம் சென்றவள் அவன் முகத்துக்கு நேரே சென்றதும் இன்னும் அழத் துவங்கி விட்டாள். தன் முன் அழுது கொண்டு திடீரென ஒரு பொண்ணு வந்து நிற்கவும் அவனும் உள்ளுக்குள் சற்று பயந்துதான் போனான். மறுபடி அவள் தன் முன் ரோஜாவை நீட்டி

"ஐ... ல...ல...லவ்.... யூ" என அழுது கொண்டே சொல்லவும் அவளுடைய அப்பாவித்தனத்தை நினைத்து பக்கென சிரித்து விட அவள் உட்பட அவளை அனுப்பிய அனைவரும் அதிர்ந்து விட்டனர். அவள் அவனை புரியாது பார்க்க அவர்கள் தான் உட்கார்ந்திருந்த கட்டிலிருந்தே இறங்கி விட்டனர்.


அவன் செய்கையில் அவர்கள் அதிர்ந்து நிற்க இவளோ அவனை புரியாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் அதிர்ந்ததன் காரணம் அவர்களுக்கு அவனைப் பற்றி தெரியும்.... அவனுக்கு லவ் என்றாலே அலர்ஜி.....பேசுகிறேன் பேர்வழி என்று காதில் ரத்தம் வர வைத்து விடுவான்.

எத்தனையோ பெண்களை உதரித்தள்ளியும்...... எத்தனையோ பெண்களுக்கு இந்த வார்த்தைக்காக அறைந்துமுள்ளவன் இவள் சொன்னதும் அவளுக்கு அறைவான் என்று பார்த்தால்... அவன் பக்கென சிரித்து விட்டான்.
அவளுடைய கையில் இருந்த பூவை வாங்கியவன்

"ஓன் பேரென்ன...?"

"க...க...கயல்விழி"

"சரி...சரி... பயப்படாத.... நான் உன்ன ஒண்ணும் பண்ண மாட்டேன்"

"இ..இ...இல்ல...அது.... வந்து..."

"ஹே..... ரிலாக்ஸ் கயல்....அவங்க ஒன்ன ரேகிங் பண்ணத நான் பார்த்தேன். உன்னை நான் தப்பா எடுத்துக்கல நீ போ"

என்றதுதான் தாமதம் ஒரே ஓட்டமாக தன் வகுப்புக்கு ஓடிவிட்டாள். அவளை விட்டுவிட்டு அவர்களிடம் வந்தவன் ரோஜாவை கொடுத்தவனுக்கு ஒரு அறை விட்டுவிட்டு அவனுடைய சட்டை காலரை பிடித்து

" மறுபடி.... மறுபடி.... செஞ்சுகிட்டு இருக்க எல்லா புதுசா வேற பொண்ணுங்க கிட்டயும் உன் பொறுக்கித்தனத்தை காட்டினால்.... அப்புறம் என் மறு முகத்தைப் பாப்ப....." என ருத்ரமூர்த்தியாய் எச்சரித்துவிட்டு அவன் நகரவும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.. அதே நேரம் அவள் மீது வெறித்தனமான கோபம் மனதில் கனன்று கொண்டிருந்தது.


***

தான் எவ்வளவு வாதாடியும் அந்த கேஸ் தோல்வியில் முடிந்து அவர் தற்கொலை தான் பண்ணிக் கொண்டார் என தீர்ப்பு வழங்கப்பட்டதில் நொந்து போய் வெளியே வந்தாள் லாயர் அஷ்வினி....

தன்னுடைய மன ஆறுதலுக்காக அருகிலிருந்த காபி ஷாப்பில் நுழைந்து ஓரத்தில் இருந்த தனி டேபிளில் போய் அமர்ந்தாள்.

எவ்வளவு வாதாடியும் அந்த மனிதரின் கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியாத தன் கையாலாகாத தனத்தை நினைத்து உட்கார்ந்து இருக்க தன்னுடைய கண்ணுக்கு ஒரு இன்ச் இடைவெளி விட்டு க்ராஸ் ஆக போன கத்தி அவளுக்கு சைடில் இருந்த போர்டில் குத்தி நிற்க நெஞ்சு வேகமாக துடிக்க கதிரையை தள்ளி விட்டு எழுந்தவள் அவளுக்குப் பின்னால் அப்பொழுதுதான் கைகழுவி விட்டு திரும்பிய தேவமாறுதனை பயத்தில் இருக்க கட்டியணைக்க அவள் திடீரணைப்பில் அவன் அதிர்ந்தது நிற்க அதற்குள் வந்திருந்த ரவுடிகள் அவனை நெருங்கி வந்து

"டேய்......மரியாதையா அவள விட்டுடு..."
என்றவாறே அவளை வெட்ட கையை ஓங்க தடுத்தவன்

"யார்ரா....நீங்க...?"

"முதல்ல நீ யாருன்னு சொல்லு.... இவ்வளவு துடிக்கிற... நீ என்ன அவ புருஷனா?" என நக்கலாக கேட்டு விட்டு சிரிக்க அவனோ கோபத்தில் வார்த்தையை விட்டான்.

"ஆமாண்ணா... என்னடா பண்ணுவீங்க.."

"இங்க பார்ரா.... புருஷன் ஆனா அவ கழுத்துல தாலி இல்ல...."
என சொல்லி மறுபடி சிரிக்க அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள் என்றால் அவன் தன் வார்த்தையை நினைத்து தன் மீதே கோபம் கொண்டான். அதிர்ச்சியிலிருந்து நீங்க அவள் என்ன நினைத்தாளோ தன் பேகை எடுத்து தோழிக்காக வாங்கி வைத்திருந்த தாலியை எடுத்து அவனிடம் நீட்டி

"நீங்கதானே பையில் வை...... பிறகு கட்டி விட்றேன்னு சொன்னீங்க... வீட்ல கட்டினால் என்ன? இப்போ கட்டினால் என்ன? ரெண்டும் ஒன்னுதான் கட்டுங்க"
என அவனிடம் கண்களை இறைஞ்சுதலாக காட்டி கேட்க அவனோ அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டான்.

"கட்டுங்க..." என சற்று உரக்க கத்த அவன் என்ன நினைத்தானோ இவர்கள் போனவுடன் கழட்டி விடுவாள் என நினைத்தவன் அவள் கொடுத்து தாலியை அவளுடைய கழுத்தில் கட்டினான்.

முதல் நடத்தி முடித்து வெற்றி அடைந்த கெஸின் எதிர்பக்க தோல்வியுற்றவரின் அடியாட்கள் தான் அவர்கள்.......

அவர்களுடைய அண்ணனை அவள் ஜெயிலுக்கு அனுப்பி வைத்த கோபம் அவர்களுக்கு அவள் மீது.....
அதனால்தான் அவளை கொல்ல வந்திருக்கிறார்கள்.
என்பவை யாவற்றையும் அறிந்து கொண்ட தேவமாறுதன் அவர்களை போட்டு புரட்டி எடுக்கத் தொடங்கினான்.

தன் மீது கையோங்கியதற்காக கோபம் கொண்டவன் அவர்களை அடிக்க அவளோ தனக்காகத்தான் அடிக்கிறான் என நினைத்துக்கொண்டு அவனை கண்களால் ரசிக்க தொடங்கினாள்...

ஜிம் செய்து முறுக்கேறி இருக்கும் கட்டமைப்பான உடல்வாகு; அடுத்தவர்களை பார்த்தவுடன் எடை போட்டு விடும் கூறிய விழிகள்; கவர்ந்திழுத்து மறுபடி பார்க்கத்தூண்டும் வசீகர முகம் நேர்த்தியாக ஷேவ் செய்து பாக்ஸ் கட் வைத்திருந்தான்.

அவன் தனக்கு தாலி கட்டிய எண்ணமே இல்லாமல் ஏதோ தன்னை காப்பாற்றி விட்டான் என நினைத்துக்கொண்டு பார்த்திருந்தவள் அவன் அடித்து முடித்து விட்டு செல்லவும் தான் தன்னுணர்வு பெற்றவள் ஓடிச்சென்று அவனை மறைப்பது போன்று கைகளை நீட்டி நிற்க.... அவன் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் நகர போனான்.

அவனைப் பொறுத்தவரையில் அது ஜஸ்ட்..ஏதோ அவள் கட்டிவிட சொன்னதற்காக கட்டினானே தவிர வேறு ஒன்றுமே தோன்றவில்லை...ஆனால் அவளுக்கு..... தமிழ்ப் பாரம்பரியத்தில் ஊறிப்போய் இருந்த குடும்பத்தில் வளர்ந்ததாலோ என்னவோ அதனை அவளுக்கு கலற்ற தோன்றவில்லை.......
கல்யாணம் எப்படி நடந்திருந்தாலும் தாலி கட்டியவனையே கொண்டவனாக கொள்ளும் பாரம்பரியம் அவளது...
நகரப்போனவனை தடுத்து

"ஏய்.....ஹலோ மிஸ்டர்....என்ன நீங்க பாட்டுக்கு தாலி கட்டிட்டு பேசாமல் போறீங்க?" என்றவளை முறைத்தவன்

" நான் கட்டிவிடல........? நீயாத்தான் கட்டிவிட சொன்ன..... நீ அந்த ரவுடி கிட்ட இருந்து தப்பிக்க தாலியை கட்டி விட சொன்ன... நானும் கட்டினேன் அவ்வளவு தான்.... அதோட முடிஞ்சிது..உனக்காக நான் சண்ட போட்டேன்னு நெணச்சிகாத..... என்ன அடிக்க வந்ததால நான் அடிச்சேன்.தட்ஸ் ஆல்"

என அவளை முறைத்துவிட்டு வெளியேற அதிர்ந்து நின்று விட்டாள். அவன் சொல்வதும் உண்மைதான்...

அவன்மீது பழி போட முடியாது தான் என்றாலும்.. கழுத்தில் ஏறிய பின் தெரியாவிட்டாலும் பிடிக்காவிட்டாலும் தாலி தாலி தானே..... அதற்கு உரிய மதிப்பை அது எப்போதுமே இழந்து விடுவதில்லையே.......

தன் மீது தான் முழுத்தவறு எனும் போது கெஞ்சுவதை தவிற வேறு வழியில்லை அவளுக்கு....

வெளியேற நிணைத்து கதவை திறக்கப்போனவனின் கையை பிடிக்க...தான் இவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் மறுபடி தன்னை தொந்தரவு செய்பவள் மீது கோபம் தலைக்கேற பின்னால் திரும்பி விட்டான் ஒரு அறை..

அவன் அறைந்த அறையில் அந்த காபி ஷாப்பில் உள்ள அனைவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க அவளுக்குத்தான் அவமானத்தில் கண்கள் கலங்கிவிட்டது.

வழமையாக இப்படி அழுபவளில்லை அவள்.... தன் தைரியத்தில் இருந்த நம்பிக்கையால் தான் சட்டமே படித்தாள்.....ஆனால் இன்று தனக்கு என்னதான் நேர்ந்து விட்டது என நினைத்தவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு

"நீங்க யாருன்னு எனக்கு தெரியாது தான்...... பட் கழுத்துல தாலி ஏறினதுக்கப்பறம்....... தெரிந்தோ தெரியாமலோ நீங்க ஏன் புருஷன்..."

"புருஷன்" என்ற வார்த்தையின் அழுத்தத்தை கூட்டி சொல்லவும் அவனுக்கு ஏகத்துக்கும் எகிறியது.
அவள் கூறிய வார்த்தையில் அவளை முறைக்க அவளோ அவனை கண்டுகொள்ளாமல் மறுபடி

"அண்ட்.....இன்னொரு விஷயம் மிஸ்டர்... நான் ஒரு லாயர் .... உங்க மேல கேஸ் போட்டா வெளி உலகத்தயே பாக்கவிடாம ஜெயில்ல போட்டுருவாங்க..."

என்று திமிராகப் பேசவும் அவனுடைய கோபம் எல்லை கடக்க அவளுடைய தாடையை இருக்க பற்றவும் மக்கள் அனைவரும் அங்கு கூடவும் நேரம் சரியாக இருக்க அவன் அவசரமாக கையை விட்டுவிட்டான்.வந்த கூட்டத்தில் ஒருத்தர்

" யேப்பா... அவ ஓன் பொண்டாட்டிங்குற உரிமைல தானே வந்து கையைப் பிடிக்கிறா....நீ என்னடான்னா எல்லோருக்கும் முன்னாடி இப்படி அறைறியே..."

"அதானே... எவ்வளவு கோபம் இருந்தாலும் அவளுக்கு கையோங்கி இருக்க கூடாது.."

"சார்.... மீடியாக்கு கொண்டு போன என்ன நடக்கும் தெரியுமா?"

என்று ஆளுக்காள் அவனைக் கேள்வி கேட்க அவனோ அவளைக் கொலை வெறியுடன் முறைத்தான்......
அவளோ கைகளைக் கட்டிக்கொண்டு தலை சாய்த்து அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். பல்லைக் கடித்தவாறு அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்து

" இப்ப என்னதான் பண்ணனும்" என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்...... அவனைப் பார்த்து சிரித்தவள்

" என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க..."

"வாட்.....லூசா நீ நான் எப்பிடி உன்ன கூட்டிட்டு போறது?"

"நா ஒன்னும் லூசில்லங்க.... மிச்சம் கஷ்டப்படத் தேவையில்ல......நீங்க எப்படி வீட்டுக்கு போவீங்களோ அப்பிடியே என்னையும் கூட கூட்டிட்டு போயிருங்க"

"என்ன மரகழண்டு போச்சா ஒனக்கு.. உன் அப்பா அம்மாக்கு யாரு பதில் சொல்றது.....நான் கல்யாணமே இல்லன்னு சொல்றேன் நீ என்னடான்னா உங்க கூட கூட்டிட்டு போங்க கூட்டிட்டு போங்கன்னு உலறிகிட்டு இருக்க... "

என அவன் அவள்பெற்றோரை பற்றி சொன்னதும் தான் தன் வீட்டு நினைவே வந்தது அவளுக்கு.... இப்பொழுது என்ன செய்வது எனப் புரியாமல் விழித்தவள் திடீரென பிரகாசமாகி

"நீங்க இப்போ என்கூட என் வீட்டுக்கு வாங்க நடந்த எல்லாத்தையும் சொல்றேன்.....அதுக்கப்பறம் நா உங்க கூட வந்துட்றேன்" என்றவள் "எப்புடி..." என தன் இரு புருவங்களையும் உயர்த்த.... "இவ என்ன லூசா..." என நினைத்தவன்

"தோ பார்.... இப்போ நடந்தது ஜஸ்ட் அன் ஆக்சிடென்டே தவிர..... நீ எனக்கு பெண்டாட்டியும் இல்ல.... நான் ஒனக்கு புருஷனும் இல்ல........ மொத்தத்துல இது கல்யாணமே இல்ல..."

என்றவன் அவள் எதிர்பார்க்கா நேரத்தில் அவளுடைய தாலியில் கை வைக்கக் போக அதில் சட்டென தன்னை சுதாரித்து அவனே எதிர் பார்க்கா வண்ணம் அவனுடைய கன்னத்தில் பளாரென்று விட்டாள்.

"மிஸ்டர்.....,நீங்க யாரா வேணா இருங்க.....பட் நீங்க தான் என் புருஷன்.... உங்களுக்கு ஒரு தடவை சொன்னேன்... மறுபடி மறுபடி என்ன சொல்ல வைக்காதீங்க... கல்யாணம்குகிறது வாழ்க்கைல ஒரு தடவை தான் வரணும்னு நினைக்கிறவ நான்... தெரிந்தோ தெரியாமலோ அது நடந்துரிச்சு........ கல்யாணம் உங்களுக்கு வேணா ஜஸ்ட் அன் ஆக்ஸிடன்ட்டா இருக்கலாம்...பட் அது எனக்கு அப்பிடியில்ல.... என் தாலி ல கை வெக்க நெனகிறவன் எவனாயிருந்தாலும் அவனுக்கு நான் அப்புறம் மனுஷியாகவே இருக்க மாட்டேன்
நீங்க எங்கவேணா போங்க.... ஆனா என் அம்மா அப்பாவோட பேமிஷனோட நான் உங்கள தேடி வருவேன்...."

என அழுத்தமாகக் கூறியவள் அவனை முறைத்து விட்டு சென்று விட்டாள்.

....................................................................................

தன் டேபிளில் இருந்த பொருட்களை வெறி பிடித்த வேங்கை போல உடைத்து விட்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்
"ரிஷிகுமார் தேவமாறுதன்"


‼️ஆட்டம் ஆரம்பம்.........‼️

தொடரும்.........

05-03-2021.
 
ஆத்தி....அப்ப புருஷனை பொண்டாட்டியே கூண்டுல நிறுத்துவாளா....
ஹாஹா.... இருக்கலாம்.... இல்லாமலும் இருக்கலாம் ?
 
Top