Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

?15?

Advertisement

Rudhra Vikram

Member
Member
அடுத்த நாள் விடிவதற்காய் காத்திருந்தவள் மேரி எனில், ஏன் இந்நாள் விடிந்ததோ என புலம்பியபடி அவசர, அவசரமாக எழுந்து மேரிக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேற நினைத்தாள் ஏஞ்சல்.

ஆனால், துரதிஷ்டவசமாக மேரி அவளைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருக்கும் உண்மையை மறந்து விட்டாள். கதவை உட்புறம் தாளிடப்பட்டு இருந்தது.

" Argh.... இந்த மேரியை என்ன தான் பண்றது... "

தொப்பென கீழே அமர்ந்து சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு பூட்டை பார்த்தபடியே இருந்தாள்.

" ஏஞ்சல்... நடு வீட்ல ஏன் இப்படி உட்கார்ந்திருக்க... "

ஜோசஃபின் குரல் என்பது நன்றாகவே தெரிந்தது. இருந்தும் என்ன நடந்து விட போகிறது... எப்படியும் ஜான்சன் வந்தால் பெரிய பூகம்பமே வெடிக்கும்... அதில் ஐயமில்லை...

" ஆங்... இப்பவாச்சு நடு வீடு... இன்னும் கொஞ்ச நேரத்துல நடு தெரு தான்... " சலிப்புடன் கூறி விட்டு எழுந்த ஏஞ்சலுக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது.

" மாம்ஸ்... மாம்ஸ்... எனக்கு ஒரு ஹெல்ப் பண்றிங்களா... "

" நீ கேட்கிற ஹெல்ப பொருத்து... "

" ஈஈஈஈ... உங்கள் உயிருக்கு நான் உத்திரவாதம்... வாங்க வாங்க... " என கையோடு இழுத்துச் சென்றாள் ஏஞ்சல்...

" ஐயோ... ம்மா... ஏய் முதுகுகெழும்ப உடைச்சிறாத டி பிசாசு... " அவள் காம்பௌன்டின் மேல் ஏறுவதற்கு ஜோசஃப் ஊறுகாயாக்க, அவனோ வலியில் கத்துவது போல் பாவனை செய்து கொண்டிருந்தான்.

" என்ன வொர்க் அவுட் பண்றியோ... இவ்ளோ வீக்கா இருந்துட்டு எதுக்கு வெட்டி பந்தா... அதுக்கு பேசாம போய்.... " என ஏஞ்சல் இழுக்க...

" ஏய்... நான் உன் மாமன்.. அந்த மரியாதை தரலேனாலும் பரவாயில்லை... I don't want Johnson to end up hurting you... "

" உங்களுக்கு இங்கிலீஸ் கூட பேச தெரியுமா மாம்ஸ்... " சந்தேகமாகவே
வினவிய ஏஞ்சலை அப்படியே தள்ளி விட்டு மண்டையை உடைத்தால் என்ன என்றிருந்தது.

" ஏஞ்சல் விளையாடாத.. "

" அட சரியான லூசு மாமாவா இருக்கியே... இப்டி காம்பௌன்ட் மேல உட்கார்ந்துக்கிட்டு விளையாட நான் என்ன பைத்தியமா... " என கூறிக் இங்கும் அங்கும் அசைந்தபடியே கொண்டிருக்கும் போதே பின்னால் சாய்ந்தாள்.

" ஏய்... ஏய்... விழ போற அய்யோ... " என ஜோசஃப் கண்ணை மூடிக் கொண்டான்...

" அம்மாஆஆ... " என்ற அலறலுடன் தரையை எதிர்ப் பார்த்து காத்திருந்தவள் இரு கரங்களில் கிடந்தாள்.

" நல்ல வேளை கீழ விழல... " என நிம்மதியடைந்த மறுகணம் தான் ஒரு ஆணின் ஸ்பரிசத்தில் இருப்பதை லேசாக உணர முடிந்தது.

மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஏஞ்சல். அவன் முகத்தை கறுப்பு நிற கைக்குட்டையால் கட்டியிருந்தான். ஏஞ்சலுக்கு ஏதோ ஒரு திருடனைப் பகலில் கண்டது போல தோன்ற அவனிடம் இருந்து விலகி சுவரில் இடித்து நின்றாள்.

" ஆர் யு ஓகே...? " எங்கோ பரிட்சையமான குரல் போல் இருந்தது அவளுக்கு.

" ம்ம்... "

வித்தார்த் ஒரு கணம் அவளை ஏந்தி நின்றதை எண்ணிப் பார்த்து அவளை நேருக்கு நேராக காண தடுமாறினாலும் பின்னால் இருந்த ஸ்கூபி இரண்டு முறை குரைக்க, நினைவிலிருந்து மீண்டு நடையைக் கட்டினான்.

" யார் பெத்த பிள்ளையோ... ஆனா நம்ம வெயிட்க்கு அங்கிருந்து தொப்புனு விழுந்தத எப்டி பேலன்ஸ் பண்ணி நின்னானே தெரியலையே... " என எண்ணிய படி திரும்ப அங்கே ரோஷினி நின்று அவளைப் பார்த்து சிரித்தபடியே வந்தாள்.

" ஹாய்... ஏஞ்சல்..."

" அ.. ஹாய்... ஏதோ நக்கலா சிரிக்கிற மாதிரியே இருக்கே... இப்ப நடந்தத பார்த்தேனு மட்டும் சொல்லாத
ப்ளீஸ்... " ஏஞ்சலின் முகம் போன போக்கில் சிரிப்பு வர அதற்கு மத்தியில் கூறினாள்.

" Actually... நான் அதை மட்டும் தான் பார்த்தேன்... பரவாயில்லை... வித்தார்த் முன்னைக்கு கொஞ்சம் டெவலெப் ஆகி இருக்கான்... " என்றதும்

" என்னஅஅஅஅ...??? அ... அது வி... வித்தார்தா... " என்று அவனைக் காட்டிக் கூறினாள் ஏஞ்சல்.

" இதுக்கே ஷாக் ஆகுறாளே... " என நினைத்தபடி அவளிடம் 'ஆம்' என தலையாட்டி விட்டு சென்றாள் ரோஷினி.

" ஏஞ்சல்... இன்னைக்கு உனக்கு நேரமே சரியில்லையே... அவன் உன்னை பத்தி என்ன நினைச்சிருப்பான்... உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா... அதானே அது இருந்தா கைய கால வச்சிக்கிட்டு சிவனேனு இருந்திருக்கனும்....
ஓ மை காட்.... " அவள் புலம்புவதை ஒரு முறை திரும்பிப் பார்த்து சிரித்தபடியே தன் கைக்குட்டையைக் கழற்றி விட்டு அவனும் அவன் தங்கையும் வழக்கமாக செல்லும் பார்க்கிற்குள் நுழைந்தான், வித்தார்த்.

ஜோசஃப் காம்பௌன்ட் மீது ஏறி நின்றபடி,
" அடியேய்... உனக்காக நான் குரங்கு வித்தைலாம்
பண்ணா... இங்க அடி படாம ஜாலியா நிக்கிறியா நீ.. " என்றவனை முறைத்தபடி அருகே வந்த ஏஞ்சல்.

" நான் எவ்ளோ ஜாலியா இருக்கேன்னு தெரிஞ்சிக்கனும் அவ்ளோ தானே... " என அவன் காலைப் பிடித்து ஆட்ட பலத்த சத்தத்துடன் தொப்பென விழுந்தான் ஜோசஃப்.

" அம்மா.. அப்பா... ஆஆ... "
அவனின் கதறலில் சற்று கலவரமடைந்த ஏஞ்சல்,

" ஒரு வேளை பலமா அடி பட்ருக்குமோ... ம்ச்... பரவாயில்லை... நமக்கு ஒன்னும் ஆகலயே... அப்பறம் என்ன... " என்று நடக்கத் துவங்கினாள்.

****

" ராம் அங்கிள்... இது ரொம்ப முக்கியமான மேட்டர்... இந்த மொபைல்ல இருக்க எவிடென்சே போதும் அந்த தக்ஷனோட ஆட்டத்தை ஒழிக்க, இதை எப்படியாவது நியூஸ் சேனல்ல போய் சேர்த்திருங்க... நான் அந்த சேனல் எம். டி கிட்ட பேசிட்டேன்... அவர் மூலமா
மீடியா சப்போர்ட் கிடைச்சிரும்... அது போதும்... இங்க இருக்கவங்களுக்கு அவன் மேல இருக்க பயத்தை மாற்ற..." என்றபடி அந்த மொபைலை அவரிடம் ஒப்படைத்தான் வித்தார்த்.

இதில் தான் பலியாகப் போவதை அறியாத ரோஷினி, பார்க்கில் துள்ளித் திரிந்த குழந்தைகளில் ஒருவளாக மாறி, விளையாட்டில் மூழ்கினாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு, ராம் குமாரின் இல்லத்திற்கு ரோஷினியை அனுப்பி வைத்து விட்டு அந்த பார்க்கில் இருந்த கல் மேசையில் சாய்ந்தான் வித்தார்த்.

" இன்னைக்கு வீட்டு பக்கம் போகவே கூடாது. ஆனா பசிக்கிதே.... "

வயிற்றை தடவிக் கொடுத்து சமாதானம் செய்தவளின் கண்களில் திடீரென அந்த ஐஸ்கிரீம் பார்லர் தென்பட்டது.

அங்கு சென்று ஆசை தீர சாப்பிடத் துவங்கினாள் ஏஞ்சல்.

இங்கு ஸ்குபியுடன் பார்க்கிலிருந்து வெளியே வந்த வித்தார்தின் கண்களில் எதேச்சையாக பட்டாள் ஏஞ்சல்.

அவள் சாப்பிடுவதைப் பார்த்து சிரித்த வித்தார்த் அப்போதே முறைப்பது போல பாவனை செய்த ஸ்கூபியைப் பார்த்தான்.

" ஹிஹி... ஸ்கூபி... நீ நினைக்கிற மாதிரிலாம் இல்ல... நல்ல doggyல நோ.... அப்படி
பார்க்காத... "

அது ஏளனமாக சிரிப்பது போல இருந்தது.
***

" அம்மா... மேரி... கொஞ்சம் பார்த்து ஊசிய குத்த கூடாதா... "

" ஹாஹா... இதோட ஸ்கூபி உன்னை எத்தனை தடவை கடிச்சு வச்சிதோ என்னாலையே கணக்கு போட முடியல... ஆமா என் வீடு எப்டி உனக்கு தெரியும்... "

" ஹாஹா... அப்டியே விசாரிச்சு வந்தது தான் மேரி... "

" வா டா என் அருமை தம்பி... " வித்தார்த்தின் தோளில் கை போட்டபடியே சிறிது நேரம் பேசினான்
ஜோசஃப்.

" இந்த ஸ்கூபி தொல்லை இருக்கே... இன்னும் எத்தனை தடவை வந்து ஊசி போடனும் மேரி... "

பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் வித்தார்த்.

" ஹாஹா... நானே கால் பண்றேன்... அப்ப வந்தா போதும்... "

மேரியும் வித்தார்த்தும் கிட்டத்தட்ட நண்பர்கள் போல. அதுவும் ஸ்கூபியின் குறும்புத்தனத்தால் தான் நிகழ்ந்தது.

பலமுறை கடி வாங்கி, நூற்றுக்கணக்கில் ஊசி குத்து வாங்கினால் எப்படி மறக்கும்? வித்தார்த் ஸ்கூபியையே முறைத்துக்
கொண்டிருந்தான்.

" அடேய்... அது உன்ன என்ன பண்ணுச்சு... அதை முறைக்கிற... "

" எது... ஸ்கூபி என்ன பண்ணுச்சா... ஏன் அதுக்கு தெரியாதா என்ன பண்ணுச்சுனு... "

ஸ்கூபியைக் கடிந்துக் கொண்டான் அவன். பின் இருவரிடமும் கூறிக் கொண்டு வெளியே சென்று விட, சரியாக அவன் சென்ற பிறகு வீட்டினுள் நுழைந்தாள் ஏஞ்சல்.

" எங்க அவர் போய்ட்டாரா... " ரகசியமாக ஜோசஃபிடம் வினவினாள் ஏஞ்சல்.

" லூசு... லூசு... எதுக்கு வந்த... இப்ப நீ மாட்ட போற..."

ஜோசஃப் அவள் தலையிலேயே கொட்ட, எதுவும் புரியாது விழித்தாள் ஏஞ்சல்.

" வா மா ஏஞ்சல்... " ஜான்சனின் குரல் உள்ளிருந்த அறையில் இருந்து ஒலிக்க, ஏஞ்சலுக்கு ஒரு நொடி இதயம் துடிப்பதை நிறுத்திக் கொண்டது போல இருந்தது.
 
Top