Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

?17?

Advertisement

Rudhra Vikram

Member
Member
" ரூபி... ரூபி கண்ணா... "

வீடு முழுக்க அலசி ஆராய
ரூபி இருப்பதற்கான அடையாளமே அங்கு இல்லை.

" ரூபி..... " கதறி அழுதபடி சுவரில் சாய்ந்தார் ராம்குமார். அப்போது அவரின் அலைபேசி அலறியது.

மனத்தின் சோர்வு உடலையும் சோர்வாக்க, ஆமைப் போல மெதுவாக எடுத்து அந்த அழைப்பை ஏற்றார்.

" என்ன ராம்குமார் நீ... இப்படியா ஒருத்தன கண்மூடித்தமா நம்புவ... பாரு... இப்ப கஷ்டப்பட்டுறது என்னவோ நீ தவமிருந்து பெத்த புள்ள தான்... "
என்றதும் ஈரக்குலை நடுங்கியது.

" எ... என்.... பொ... பொண்ணு.. ரூ.. ரூபி..."

" அட ஆமா. அந்த ரூபி தான்..."

" என் உயிர கூட எடுத்துக்கங்க... ஆனா அவ வேணாம்... பால் முகம் மாறாத பிள்ளை அவ... வேணாம்... அவள விட்ருங்க... " தன்மானத்தை விடுத்து கெஞ்சினார் அவர்.

" எனக்கு அந்த வித்தார்த் தான் வேணும்... அவன மட்டும் அனுப்பி வை... "
கூறிவிட்டு அழைப்பு துண்டிக்கப்பட, கதி கலங்கி போனார் ராம்.
***

" ஸ்கூபி... அந்த புகைப்படத்தைப் பார்த்தா என்ன தோணுது... "

ஒரு பெரிய வெள்ளைத் தாளில் கருப்பு புள்ளி வரையப்பட்டு நடு ஹாலில் தொங்கிக் கொண்டிருந்த புகைப்படத்தைக் காட்டி ஸ்கூபியிடம் பேசிக் கொண்டிருந்தான் அவன்.

" ஒரு கருப்பு புள்ளி அதுல என்ன இருக்குனு தானே நினைக்கிற... ஹம்... என் தாத்தா ஒரு இந்திய ராணுவ அதிகாரி. அப்பா, அம்மா இரண்டு பேரும் ஆக்சிடன்ல.... ஹூம்... இல்லாம போய்டாங்க.... எனக்கும் ரோஷினிக்கும் சின்ன வயசு தான். தாத்தா கூட தான் வளர்ந்தோம். அவர்கிட்ட இருந்தது தான் இது.

அந்த பிளாக் டாட் அத வரைஞ்ச ஆர்டிஸ்ட், என் தாத்தாவ தான் குறிக்கிது. இந்த white background அவர சுத்தி இருக்குற problems.
என் தாத்தா சொன்னாரு. அந்த ப்ளாக் டாட் ஒரு soldier, அதாவது என் தாத்தா தானாம். யுத்த கலத்துல அவர சுத்தி இருக்க விசயங்க பார்க்கும் போது தான் ஒன்ன கவனிச்சாரு.

இரண்டாம் உலகப் போர்ல கலந்துகிட்டாரு. போர்னால இரண்டு பக்கமுமே சேதம் ஆகும். ஜெயிச்சாலும் சரி. தோற்றாலும் சரி.

அவர் தனிமைய தேடி போக நினைச்சாரு. அதை தான் எங்களுக்கும் கற்பிச்சாரு. அவர மாதிரியே இப்ப நானும் எல்லாத்துல இருந்தும் விலகி போக நினைச்சேன் ஸ்கூபி.

ஆனா, இப்டி தனந்தனியா நிக்கிறது என்னவோ மாதிரி இருக்கு. பிரச்சனைல இருந்து விலகி போறதுக்கு பதிலா அதை முடிக்கனும்னு தோணுது... ஆனா எது சரினு என்னால ஒரு முடிவு
தீர்க்கமா எடுக்க முடியல.

இன்னைக்கு திரும்பிப் பார்த்தா ஏஞ்சல், ரோஷினி, நீ எல்லாரும் இருக்கிங்க...

உங்கள கூட வச்சிகிட்டு, நான் இப்ப செய்யுறது கூட சரியானு தெரியல ஸ்கூபி... என் ஒரு தப்பு உங்கள எல்லாம் பாதிச்சா என்னால தாங்க முடியாது ஸ்கூபி..."

அதற்கு என்ன புரிந்து விட போகிறது. ஏனோ அவனின் மன நிலை வேறுபட்டிருக்கிறது என்பதை அதனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவனின் மடியில் படுத்துக் கொண்டது.

இவன் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரோஷினி மெதுவாக அவன் அருகில் வந்தாள்.

" அண்ணா... "

அவளின் மென்மையான குரல் செவியைத் தீண்ட, கண்களை அவள் புறம் சுழல விட்டான்.

" எனக்கு பக்குவம் இருக்கா என்னனு தெரியாது. ஆனா நான் சொல்லிட்றேன். பிரச்சினைல இருந்து விலகி போகனும்னு நினைச்சா அது முடிஞ்சிறாது டா... எனக்காகத் தானே அந்த தக்ஷன எதிர்த்த, எனக்கு காயம்னதும் அவன் பக்கமே போக மாட்டேன்னு வந்துட்ட....

ஆனா அது அதோட முடிஞ்சிருமா சொல்லு.
இப்ப கூட உன் பேர ரிவீல் பண்ணாம...

ஏஞ்சல ஏமாத்துறேன்னு உன்ன நீயே ஏமாத்திக்கிற... இதை விட
ராம்குமார் அங்கிள வச்சி அந்த சேனல் எம். டிகிட்ட வேலைய முடிக்க நினைச்ச..."

" உனக்கு எப்படி தெரியும்" என்பதைப் போல அவன் ஏறிட, அவளோ பொறுமையுடன் கூறத் துவங்கினாள்.

" உன் தங்கச்சி டா நானு. நீ என்ன செய்ற, எங்க போற,
எல்லாம் எனக்குத் தெரியும். ஆனா ஒன்னு மட்டும் உண்மை... "

இடையே பேச்சை நிறுத்த, என்னவென அவளைப் பார்த்தான்.

" நீ ஒரு செல்ஃபிஷ் டா... அஃப் கோர்ஸ்... உனக்கு பிரச்சனை வர கூடாது, உன் தங்கச்சிக்கு எதுவும் ஆக கூடாது, இது தான் உன் எண்ணம்னா உனக்கு தங்கச்சியா இருக்க எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல... "

'என்னால பிரச்சனை வர கூடாதுனு நினைச்சேனே ஒழிய இப்டி நான் யோசிக்கல....' என நினைத்துக் கொண்டவன், வலியுடன் அவள் கூறுவதன் உண்மையை உணரத் துவங்கினான்.

தான் எத்தனை பெரிய சுயநலவாதி. ராம்குமாரிடம் அத்தனையையும் ஒப்படைத்து விட்டால் பிரச்சனை முடிந்து விடுமா என்ன? யோசித்தான்.

" இந்த மாதிரி எத்தனை நாளைக்கு மறைமுகமாவே வாழ போற? ஷாலினி, நான், அடுத்து கடைசியா தேவி இன்னும் எத்தனை எத்தனை பேர். இதுல அவன் அரசியலுக்கு வந்தா இன்னும் என்ன என்னலாம் நடக்குமோ? தப்பு பண்றவன் இருந்தா என்ன? செத்தா என்ன? அவன கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனா கூட
அது தப்பில்லை.

இன்னும் எத்தனை பேர் அவனோட அந்த டிரக்குக்கு அடிமையாகி சாக போறாங்க, அவங்க பொண்டாட்டி புள்ளைங்கள நடுத் தெருவுல நிறுத்த போறாங்க. அதை தடுக்க முடியும்ன்ற பட்சத்தில ஏன் நாம பயந்து சாகனும்.

நான் தான் உன் பயம்னா அப்டி இருக்க எனக்கு பிடிக்கல டா...உன் தங்கச்சி உன் பலமா இருக்க தான் ஆசைபட்றேன்... பலகீனமா இல்ல..."

வயது குறைவு தான் என்றாலும் அவளது அத்தனை வார்த்தையிலும் ஆழ்கடல் அளவு உண்மை இருப்பது புரிந்தது.

" என்ன மன்னிச்சிரு டா... இத்தனை நாளா நான் சுயநலவாதியா இருத்துட்டேன். என்னையும் என் தங்கச்சிய பத்தி தான் யோசிச்சேனே தவிர, உண்மைய புரிஞ்சிக்கல. கார்த்தி எனக்கு எவ்வளவோ எடுத்து சொல்ல முயற்சி செஞ்சும் நான் புரிஞ்சிக்காம போய்டேன்.... சாரி டா
மா... "

அவளைக் கட்டி அணைத்து தன் வருத்தத்தைத் தெரிவிக்க, ராம்குமாரிடம் இருந்து அழைப்பு வந்தது.

" ஹலோ! சொல்லுங்க அங்கிள்... என்னாச்சு? "

" த.. தம்பி... நம்ம ரூபி... ரூபிய... " என அவர் கூற முடியாமல் தடுமாற,

" ரூபிய.... ரூபிக்கு என்னாச்சு? "

" அவளை கடத்திட்டாங்க பா... உங்க மேல எனக்கு நம்பிக்கை இருந்தது தம்பி. ஆனா அந்த சேனல் எம்.டி மேல லேசா சந்தேகம் இருந்ததால அவன்கிட்ட கொடுக்க வேண்டிய எவிடென்ஸ வச்சி நீங்க ரெடி பண்ணி தந்த ரீப்போர்ட்அ மட்டும் பத்திரமா எடுத்து வச்சிருந்தேன். அது தெரிஞ்சு, என் பொண்ண கடத்திட்டாங்க தம்பி... "

பயமும் கலக்கமும் ஒரு சேர அவரைத் தாக்க, விட்டால் மயங்கி விடுவேன் என்றிருந்தவர் கூறி முடிக்க,

" நான் இதோ வரேன்... அந்த ரிப்போர்ட்அ எடுத்து வைங்க... " என அவரச அவசரமாக கூறிவிட்டு ரோஷினியைப் பார்த்தான்.

" ரோஷினி... நான் இப்ப தர்ர ரிப்போர்ட் ஃபைல நம்ம வீட்டுக்கு பின்னாடி சின்னதா ஒரு குழி தோண்டிப் புதைச்சிரு... இப்போதைக்கு அது வெளிய இருக்குறது சேஃப் இல்ல... இன்னைக்கு என் உயிரே போனாலும் பரவாயில்ல...ரூபிய காப்பாத்தியே ஆகனும்..." என அவன் செல்ல, விரைவாக அவனுடன் செயல்பட்டாள் ரோஷினி.

ராம்குமாரின் இல்லத்திற்கு இருவரும் வந்து சேர, அவருக்கு ஆறுதல் கூறினான் வித்தார்த்.

" நான் இருக்கேன் அங்கிள்... அவனுங்க நம்ம ரூபி மேலையே கை வச்சிட்டானுங்க... "

இப்போது அவனால் கோபத்தைக் கட்டுப்பாடுத்திக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை.

" சின்ன குழந்தைனு கூட பார்க்காமல் அந்த பிஞ்சு குழந்தையைக் கடத்தி வைச்சிகிட்டு... அவனுங்க அவளை என்ன பண்ணிபாங்களோ... ச்சே... வாய் விட்டு அவளால அழ கூட முடியாதே..." ரூபியின் நிலை தான் எண்ணி உருவான கவலை கொஞ்சம் கொஞ்சமாக கோபமெனும் உரு எடுக்க,

"அவள் என் பொறுப்பு... " என அழுத்தம் திருத்தமாக கூறியவனின் இரு விழிகளும் இரத்த சிவப்பை ஏற்றி இருந்தன.
(அழைப்பாயா ?6?ல் கடைசி பத்தியில், வித்தார்த்தின் கண்கள் சிவந்ததாகக் குறிப்பட்டப் பட்டிருந்த காட்சி.)

அந்த ரிப்போர்ட்டைப் புதைத்து விட்டு அறையினுள் நுழைந்த ரோஷினி, சிலையென ஸ்தம்பித்து நின்றாள்.

நான்கைந்து தடித்த மனிதர்கள் அவளுக்காகக் காத்திருக்க, ரோஷினி கண்களில் மிரட்சியோடு அவர்களைப் பார்த்தாள்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எதையும் செய்யும் முன்னரே அவளை குண்டுகட்டாக தூக்கி வந்தனர் அந்த தடித்த மனிதர்கள்.

ஸ்கூபி மின்னல் வேகத்தில் வந்து அவர்களில் ஒருவனது காலைப் பதம் பார்க்க, அவனோ வலியில் அலறி அதை தன் காலால் உதைத்து வீசினான்.

சுவரில் இடித்து விழுந்த ஸ்கூபி, நொண்டியபடி மீண்டும் அவர்களைக் கடிக்க வர, இன்னொருவன் குறுக்கே வந்து அதை மீண்டும் உதைக்க, இந்த முறை சுவரில் நன்றாக இடித்துக் கொண்டது ஸ்கூபி.

கடிவாங்கியவன் ஜீப்பில் ஏறி, அவளை அடக்க முயல, ரோஷினி திமிறினாள். அவள் கன்னத்திலேயே அறைந்து அமைதிப்படுத்தினான் அவன்.

அந்த ஜீப் நேராக தக்ஷனின் இல்லத்தில் நுழைய, மெது மெதுவாக நடக்க முடியாமல் நடந்து பின் தொடர்ந்தது ஸ்கூபி.

தன்னால் இயன்ற வரை வாசலில் இருந்த அத்தனை பேரையும் அடித்து கை, கால்களை உடைத்து வித்தார்த் முன்னேறிக் கொண்டிருந்தான்.

அவர்களுக்கு நடுநாயகமாக அமர்ந்திருந்த தக்ஷன் புகை பிடித்தபடி அனைத்தையும் வேடிக்கை பார்க்க, ஒரு புதை குழியில் நெருப்பு ஜூவாலை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

உள்ளிருந்து ஒருவன் ரூபியைத் துணியால் சுற்றி ஒற்றைக் கையால் தூக்கி வந்து, அந்த நெருப்பின் முன் நின்றான்.

அதில் இதயம் உறைந்து நிலை தடுமாறிய வித்தார்திற்கு மேலும் அதிர்ச்சியாக தக்ஷன் அருகில் மண்டியிட்டு அமர்த்தப்பட்டாள் ரோஷினி.

" நீ எதிர்த்து நிக்கிறது தப்பில்லை.... ஆனா யார எதிர்த்து நிக்க கூடாதோ அவனை எதிர்த்து நின்னுட்ட. அது தான் தப்பு.... " என்றபடி தன் புகையிலையை ரோஷினியின் கழுத்தில் வைத்து தேய்த்தான் அந்த மனித உருவில் இருந்த மிருகம், தக்ஷன்.
 
Top