Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

?18?

Advertisement

Rudhra Vikram

Member
Member
" நீ எதிர்த்து நிக்கிறது தப்பில்லை.... ஆனா யார எதிர்த்து நிக்க கூடாதோ அவனை எதிர்த்து நின்னுட்ட. அது தான் தப்பு.... " என்றபடி தன் புகையிலையை ரோஷினியின் கழுத்தில் வைத்து தேய்த்தான் அந்த மனித உருவில் இருந்த மிருகம், தக்ஷன்.

" டேய்... என் தங்கச்சிய ஒன்னும் செய்யாத... " என அவன் ஆத்திரத்தில் கத்தியபடியே ஓட, எங்கிருந்தோ வந்த மது போத்தல் அவனது தலையைப் பதம் பார்த்தது. அதில் நிலை தடுமாறினாலும் மேலும் முன்னேறினான் வித்தார்த்.

அடுத்து அவனது வலது கால், இடது கை என போத்தல்கள் பட்டு பட்டு தெறிக்க, அந்த கண்ணாடித் துகள்கள் அவனின் நாடி நரம்புகளை ஒரு கை பார்த்து விடுவது என கங்கணம் கட்டியது போல் மெல்ல மரண வலியைக் காண்பிக்க துவங்கின.

ஒரு கட்டத்தில் கண்ணில் திரையிட்டது போல இருளடையத் துவங்கிய சமயம் ரோஷினியின் அலறல் ஒலி கேட்டது.

" அண்ணா..... "

அவளது அந்த அழைப்பு அவனைக் கலங்க வைத்தது. வித்தார்தின் வலி உறைந்த பார்வை அவளைத் தீண்டியது.

புகையிலை கொடுத்த வலி ஒரு புறமிருக்க, மெதுவாக நகர்ந்து வந்த ஸ்கூபியை தூரத்தில் ஒரு புதருக்குள் கண்டாள் ரோஷினி. ரூபியை எப்படியேனும் காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளுள் இருந்தது. தன்னை விட பலம் வாய்ந்தவன் அந்த அடியாள் எனினும் லாவகமாக ரூபியை அவனிடமிருந்து பறித்து, புதர்களில் ஊடுருவி ஓடினாள் ரோஷினி. அவளைப் பிடிக்க இரண்டு மூன்று பேரும் ஓட, ரூபியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்விடத்தில் வேறு யாரும் இருப்பதற்கான அடையாளமும் இல்லை.

ரூபியைத் தேடச் சென்றவனைத் தடுத்தான் தக்ஷன்.

" டேய்... நமக்கு வேண்டியது இந்த பய தான்... அந்த பிள்ளை போய்ட்டு போகுது... வாய் பேசாத பிள்ள ஒன்னு, இன்னொனு பொம்பள பிள்ள... அதுங்க என்னத்த பண்ணிட போகுது... நமக்கு பிரச்சினை இல்ல... " என்றதும் பின்னால் ஒருவன் நடந்து வந்ததைப் பார்த்தான்.

ரோஷினியின் கூந்தலைப் பற்றி கொத்தாக தூக்கிக் கொண்டு ஒருவன் வர, வலியில் ஒலித்த அவளது அலறல், வித்தார்தின் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்ப, தனது வலியைப் பொருட்படுத்தாது தலையில் வழிந்த இரத்தத்துடன் கர்ஜனையாய் கூறினான்.

" என்னை என்ன வேணா செஞ்சுகோங்க... என்...என்... தங்கச்சிய... " கூறி முடிக்கும் முன்னே அவனது வயிற்றை மது போத்தலின் துகள்கள் அடங்கிய துணி மூட்டையால் அடித்தான் ஒருவன்.

கண்கள் சுழல, மண்டியிட்டு அமர்த்தப் பட்டான் அவன். இருவர் மாறி மாறி அவனைத் தாக்க, வித்தார்தின் விழிகள் ரோஷினியை நோக்கியே இருந்தன. தன்னால் அவளுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என ஓயாது முளை உரைத்துக் கொண்டே இருந்தது.

ஆனால், நடந்தது வேறு.

என்ன நடக்கிறது என எண்ணும் முன், வித்தார்த்தின் உடலில் அந்த ட்ரக்கை இறக்கி இருந்தனர் அந்த முரடன்கள். கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழக்க துவங்கிய வித்தார்த்திற்கு மங்கலாக தெரிந்தாள் ரோஷினி.

" டேய்... எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல... என் அண்ணன விடுங்க டா... அவனை விடுங்க... " தனது வலியைப் பொருட்படுத்தாது வித்தார்த்தை எண்ணி கண்ணீர் வடித்தாள் ரோஷினி.

" இதோ பார்ரா... பாசமலர் பார்ட் 2வ... இதை இன்னும் எமோசனல் ஆக்கலாமா? இந்த பொண்ணு வேற ரொம்ப துள்ளுறா.. பொண்ணுனா அடக்க ஒடுக்கமா இருக்க வேண்டாமா? நானே விட்டாலும் நீ அடம்பிடிக்கிறியே... என்ன பண்ணலாம்? " என்றபடி எழுந்த தக்ஷன் அவளை நோக்கி நடக்கத் துவங்கினார்.

சொல்லிக் கொண்டே, பிடியிலிருந்து அவளை உருவி, அந்த தீக்குழியின் முன் நிறுத்தினான் தக்ஷன்.

யாருக்கும் பாரம் இல்லாமல் ஒரு பூ உதிர்வதைப் போல அந்த குழிக்குள் விழுந்தாள் ரோஷினி.

" ஐ லவ் யூ டா
அண்ணா... " கண்ணீருடன் உதிர்ந்த அவளது கடைசி சொற்களில் வாழ்வின் ஒட்டு மொத்த ரணத்தையும் சுமந்தவனாய், ஒரு நொடி மௌனமான மரணம் நிகழ்ந்தது போல உணர்ந்தான் வித்தார்த்.

சுடுதண்ணீரின் சூட்டைக் கூட தாங்காதவள், தீயில் எரிந்து சாம்பலாவதைக் கண்கள் உள்வாங்க மறுத்தது.

அவனது கண்கள் அழவில்லை, இருதயம் அழுதது. மூளை நம்பக் கூறியதை மனம் நம்ப மறுத்தது.

அவனால் அழ கூட முடியவில்லை. அதற்கான அவகாசத்தையும் கொடுக்காது உயிருடன் அவனை புதைக்கக் கூறினான் அந்த தக்ஷன்.

தனது வாழ்வின் கடைசி நிமிடத்தில் வாழ்க்கை படமே காட்சியாக ஓட, தான் வாழ்ந்து பிரயோஜனம் இல்லாமல் சாக வேண்டுமா என்ற எண்ணம் தோன்ற மரணத்தை பார்த்து அஞ்சினான் அவன். ரோஷினி விரும்பியதும் அதுவே...

இல்லை... அதை நிறைவேற்றிய பிறகே என் உயிரும் பிரியும் என கடவுளை வேண்டிக் கொண்டான் வித்தார்த்.

தனது வயிற்றைக் கிழித்து பதிந்திருந்த மது போத்தலின் கண்ணாடித் துண்டு ஒன்றை உருவ, இரத்தம் வழிந்து ஓடியதைச் சற்றும் பொருட்படுத்தவில்லை அவன்.

ட்ரக் தனது வேலையைக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து அவனை மயக்கத்தின் பிடிக்குள் இழுக்க, ஒரு கத்தியை அவனது தாடையில் பொருத்தினான் தக்ஷன்.

" உன்ன இப்டி கொல்லனும்னு எனக்கும் ஆசை இல்ல தான்... ஆனா என்ன பண்றது? இந்த சின்ன வயசுல ஏன்டா இந்த பொழப்பு உனக்கு... என்னையும் வாழ விடாம, நீயும் நிம்மதியா வாழாம... இப்ப பாரு... உன்ன கொன்னுட்டேன்ற குற்ற உணர்ச்சியிலேயே நான் சாக போறேன்... " என கரடி சிரிப்புச் சிரித்தான் தக்ஷன்.

அவனை நோக்கி ஏளனமாக சிரித்த வித்தார்த்தை புருவ முடிச்சுடன் பார்த்த தக்ஷன்," என்னடா? மரண பயத்துல மூளை குழம்பிருச்சா...?"

அவன் கேட்டு முடிக்கும் முன்பாக தனது முழு பலத்தையும் ஒரு சேர உள்ளங்கையில் நிறுத்தி தக்ஷனின் கழுத்தில் அந்த கண்ணாடித் துண்டைச் சொருகினான் வித்தார்த்.

தக்ஷனின் அடியாட்கள் பயந்து தான் போயினர்.
இருந்தும் என்ன ஆகி விடப் போகிறது? இத்தனையையும் மீறி வித்தார்த் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்க, அவனது ஜென்ம லட்சியமாக மாறிப் போன தக்ஷனின் உயிரும் காற்றோடு கலந்தது.

வாயைப் பிளந்தபடி கண்கள் இரண்டும் வானத்தை வெறிக்க, கீழே விழுந்தான் தக்ஷன். அவனருகிலேயே மயங்கி சரிந்தான் வித்தார்த்.

இருவரையும் இந்நிலையில் பார்த்தவர்கள் என்ன செய்வதென்றுத் தெரியாமல் இருவரையும் அவ்விடத்திலேயே புதைக்க, இன்னும் பெரிதாக ஒன்று இருப்பதை அறிந்த நிலவு மேகங்களுக்கு இடையில் மறைந்து கொண்டது.

???

" ரோஷினி ரூபிய ஸ்கூபிக்கூட கட்டி விட்டு அவள காப்பாத்த வைச்சா... கடைசில அவளே உயிர விடுவான்னு தெரியாம....
ஆசிரமத்துல இருக்க வாய் பேச முடியாத சின்ன பொண்ணு தான் என் பொண்ணு ரூபி... அவளுக்கு ஒரு நல்ல அப்பாவா நான் இல்ல... அதுக்கு தண்டனை நான் அவளைப் பிரிஞ்சு இருக்கிறது தான்... வித்தார்த் தம்பி எவ்வளவோ செஞ்சிருச்சு... ஆனா... ஆனா... இப்ப உயிரோட இல்ல ஏஞ்சல் மா... இதெல்லாத்தையும் கண்ணால பார்த்தப்பறமும் உயிரோடயே நான் நரகத்துல வாழ்ந்துட்டு இருக்கேன் மா... முடிஞ்சா என்ன மன்னிச்சிரு மா.... "

மார்பின் குறுக்கே கட்டியிருந்த கைகள் நழுவி, நிற்கக் கூடத் திராணி இல்லாமல் சரிந்து விழுந்தாள் ஏஞ்சல்.

" ஒரே ஒரு தடவை வித்தார்த் உயிரோட இருக்கான்னு மட்டும் சொல்லுங்க அங்கிள்... செத்திருவேன் போல இருக்கு... " சக்தி மற்றும் ஒலித்த அவளது குரலில் இப்போது அப்பட்டமான வலி தெரிந்தது.

அவரும் எவ்வாறு கூறுவார், மறுக்க முடியாத உண்மை அல்லவா... அவன் இப்போது உயிரோடு இல்லை. உயிரோடு புதைக்கப்பட்டவனின் உயிரை பூமித் தாயே எடுத்துக் கொண்டாள்.

இவை அனைத்தும் உணர்ந்தும் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சி ஸ்கூபியினுள். ரூபியை ராம்குமாரிடம் ருபியைப் பத்திரமாக சேர்த்து விட்ட ஸ்கூபி, தனது நடையில் வேகத்தைக் கூட்டி வித்தார்த் இருந்த இடத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது.

அவனைப் புதைத்த இடத்தில் படுத்து ஒரு துளிக் கண்ணீரைக் கொட்ட, மண்ணுக்குள் இருந்த வித்தார்த்தின் விழியோரம் வழிந்த கடைசி கண்ணீர் துளி அவனது உயிர் பிரிந்ததை உணர்த்தியது.

மூன்று மாதங்களாக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்த ஸ்கூபி, அவ்வபோது கிடைத்த உணவைக் கூட உண்ண மறுத்து உடல் மெலிந்திருந்தது. அதன் நிலை மோசமாவதைத் தாங்கிக் கொள்ள முடியாத ராம்குமார் தான், அடிக்கடி அதற்கு உணவு வழங்கி வந்தார்.

அன்று ஸ்கூபியைக் காப்பாற்றிய நினைவு ஏஞ்சலின் மூளையில் நிழலாடியது. வித்தார்த்தைப் போலவே அதனது வயிற்றில் இறங்கிய மது குப்பியின் துண்டுகள் அவளது லாக்ரிமால் சுரப்பிகளில் இருந்து (lacrimal glands) கண்ணீரை உருவாக்க, அதனை கன்னத்தோடு துடைத்தொடுத்தவள் தீர்மானமாக எழுந்து நின்றாள்.

' நான் இப்பவே சித்துவ... இல்ல... என் வி... வித்.... வித்தார்த்த பார்க்கனும்... ' என்றவள் விழிகள் ஸ்கூபியைத் தீண்டின.
 
Top