Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

??உனக்காக வாழ நினைக்கிறேன்??, அத்தியாயம் 5

Advertisement

Priyamudan Vijay

Member
Member
5

ப்ரீத்தி தன் அறையில் உறங்கிக்கொண்டிருக்க, அவளின் அருகில் அமர்ந்த அர்ஜூன், மெதுவாக தன் மகளின் தலையை தடவிக்கொண்டிருந்தான்.. அப்போது ஷண்மதி தன்னை அழைக்கும் குரல் கேட்டு அவளைப் பார்க்காமல் எழுந்தான்.
“அர்ஜூன்...உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று ஷண்மதி கூறவும்..
“சொல்லுங்க ஷண்மதி.”
“நானும், பிரபா சார்-ம் பேசுனத நீங்க கேட்டுடீங்க-னு தெரியும் அர்ஜூன். அத கேட்டுடு ஏன் நீங்க கண்கலங்கியபடி இங்க வந்தீங்க? என்னய உங்களுக்கு பிடிக்கலையா அர்ஜூன்?.” என்று ஷண்மதி தீர்கமான குரலில் கேட்டாள். அதற்கு அர்ஜூன்,

“ஐயோ.. அப்படிலாம் இல்ல ஷண்மதி..” என்று அவன் ஷண்மதியின் முகம் பார்பதை தவிர்த்து பேசிக்கொண்டிருந்தான்.
“அப்போ பிடிச்சிருக்கா?” என்றபடி அவன் முகத்தைப் பார்த்து கேட்க.. அவன் பதிலேதும் கூறாமல் அமைதியாக நிற்கவும், மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டாள் ஷண்மதி. அதற்கு அர்ஜூன்,
“என்னைய திருமணம் செஞ்சா, உன் வாழ்க்கைத் தான் பாழாப் போகும் ஷண்மதி...” என்று கூறிவிட்டு, அவ்விடத்தை விட்டு நகர்ந்த அர்ஜூனை தடுத்து நிறுத்தியது ஷண்மதியின் குரல்.
“அதான் ஏன்-னு கேட்குறேன். பிரபா சார்-ம் நீங்க அதுக்கு தான் என்னைய விட்டு ஒதுங்கிப் போறீங்க-னு சொன்னார். ஏன் நீங்க அப்படி நினைக்கிறீங்க-னு சொல்லுங்க அர்ஜூன். சொல்லுங்க. உங்க கடந்த கால் வாழ்க்கை இருண்டு போனது-னு பிரபா சார் சொன்னார். அப்படி இருக்கும் போது, உங்க இருண்ட வாழ்க்கை-ல ஒரு வெளிச்சமா நான் வரணும்-னு நினைக்கிறேன். உங்க வாழ்க்கைக்கு ஒளியா நான் வரலாமா அர்ஜூன்?”

“ஷண்மதி...உனக்கு புரியாது. நீ என்னைய திருமணம் செஞ்சுகிட்டா, நீ தான் கஷ்ட்டப்படுவ.”
“அதான் ஏன்-னு கேட்குறேன், ஏன் நீங்க அப்படி நினைக்கிறீங்க? ஏன்? ஏன்? ஏன்?” என்று அவள் மறுபடி மறுபடி கேட்க, பொறூமை இழந்த அர்ஜூன்,
“ஏன்-னா, நான் கொலைக்காரன்.. கொலைப்பண்ணிட்டேன்.. அதுவும் என் சொந்த மனைவியவே கொலைப்பண்ணிட்டேன். இது போலிஸூக்குத் தெரியாது. இன்னும் தேடிட்டு இருக்காங்க. இப்ப நிற்குறியே? இந்த வீடு... இது என்னுடைய வீடு. இது எனக்கு, பிரபாவுக்கு தவிற வேற யாருக்குமே தெரியாது. சொந்த வேட்டுக்கே விருந்தாளி மாதிரி வந்து தங்கிருக்கேன். ஏன் தெரியுமா? போலிஸ் கிட்ட மாடிக்க கூடாது-னு. போதுமா? இப்போ சொல்லு. என்னைய விரும்புறியா? இந்த கொலைக்காரன விரும்புறியா? நான் கொலைக்காரன்-னு தெரிஞ்சதும் உன் காதல் பறந்து போயிருக்குமே!! தெரியும்.. இந்நேரம் உனக்கு என்மேல இருந்த காதல் போயிருக்கும். ஆனா, இப்போ சொல்லுறேன். எனக்கு உன்னைய பிடிச்சிருக்கு. உன்னைய கல்யாணம் பண்ண ஆசைப்படுறேன். ஆனா, நாளைக்கு நான் செஞ்ச கொலை, போலிஸூக்கு தெரிஞ்சு என்னைய புடிச்சுட்டு போயிட்டா, உன் வாழ்க்கை பாழா போயிடும். என் காதல் என்னோட போகட்டும். நீ நல்லா இருக்கணும்-னு நினைக்கிறேன். என்னைய கல்யாணம் பண்ணி நீ கஷ்ட்டப்படுறதுக்கு தனியா வாழ்ந்துடலாம். போ..” என்று கூறிவிட்டு திரும்பியவனிடம் ஷண்மதி,

“நீங்க கொலை பண்ணிருக்க மாட்டீங்க-னு என் மனசுக்கு தோணுது அர்ஜூன். ஒருவேளை அப்படியே நீங்க கொலையே பண்ணிருந்தாலும், என் மனசுல இருக்குற உங்களுக்கான காதல் என்னைக்கும் போகாது.” என்று கூறிவிட்டு ஷண்மதி அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
மறுநாள் காலை மீண்டும் ஷண்மதி, பிரபாகரனிடம்,
“பிரபா சார்... ஷர்மிளா அக்கா-க்கு என்ன தான் ஆச்சு? அவங்க எப்படி இறந்தாங்க?”, என்று கேட்கவும் அக்கேள்வியயைத் தவிர்க்க எண்ணிய பிரபாகரன்,
“ அங்.. அது.. அத நீங்க அர்ஜூன் கிட்டையே கேட்கலாமே!” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர முயற்சிக்க..
“அர்ஜூன் தான் கொலை செஞ்சதா அவரே நேத்து சொன்னார். எனக்கு அன்னைக்கு என்ன நடந்துச்சு-னு தெரிஞ்சே ஆகணும்.” என்று ஷண்மதி கேட்கவும், அர்ஜூனின் ஆரம்ப கால வாழ்க்கையிலிருந்து ஷர்மிளா இறப்பு வரைக்கும் நடந்தவைகள் அனைத்தும் கூற ஆரம்பித்தான் பிரபாகரன்.
??????​
 
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியமுடன் விஜய் தம்பி

ஷர்மிளா என்ன தப்பு செஞ்சாள்?
எதுக்கு அவளை அர்ஜுன் கொலை செஞ்சான்?
 
Last edited:
Top