Thank you very much dearVery nice, beautiful & colourful review dear
Thank you very much dearVery nice, beautiful & colourful review dear
வணக்கம் நர்மதா சகி,View attachment 10437
கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதைக்களம் மிகவும் அழகாக மனதை வருடி சென்றது .
ஹேரி ரிச்சர்ட்:
அறிவும், அழகும் விவேகமும் துடிப்பும் நிறைந்த ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தன்..
கணினி துறையில் இளவயதில் இவனது அபார வளர்ச்சி வியப்பாக இருந்தது.
தாய் தந்தையர் பிரிந்து அவர்களுக்கென தனித்தனியான வாழ்க்கையை அமைத்து கொண்டபின் இவனது மனம் தனிமையில் சிறுவயதில் சோர்ந்து போன தருணங்கள் கவலை அளித்தது.
என்ன தான் தன் நாட்டின் கலாசாரத்தில் வாழ்ந்தாலும் தனக்கான தான் விரும்பிய உண்மையான அன்பும், உயிர்ப்பும் நிறைந்த உறவை மட்டுமே சேர வேண்டும் என்று கண்ணியமாக வாழ்ந்த இவன் இயல்பு அழகு.
மதுமிதா:
அழகும், அறிவும், குறும்புத்தனமும், பிறருக்கு உதவும் நல்ல குணமும் கொண்ட தேவதை இவள்..
ஒரே செல்ல மகளான இவள் தந்தையிடம் காட்டும் பேரன்பும், அன்னையிடம் ஏட்டிக்கு போட்டியாக சேட்டை செய்தாலும் அவரது சொல்லுக்கும் செயலுக்கும் கட்டுப்பட்டு செயல்படும் இவளது குணமும் பேரழகு.
தன்னை சுற்றியுள்ள நட்புக்களை தன்னுடைய கலகலப்பான பேச்சினாலும், நடத்தையினாலும் பலமான நட்பு பாலத்தை அன்பு பாலமாய் மாற்றி அமைத்து அவர்களை தன் உறவாக கள்ளம் இல்லாத உண்மையான அன்பினால் ஒன்றிணைந்து மகிழும் இவளது தூய மனமும் அழகு.
ஹேரி மது
காதல் மிக அழகான உணர்வு தனக்கான இணையை கண்டபின் அவர்கள் மீது உண்டாகும் உயிருடன் உருக செய்யும் உணர்வும் காதலில் மட்டுமே சாத்தியமானவை. அப்படிப்பட்ட காதல் மதம், இனம், மொழி, தேசம் கடந்து தனது உண்மையான அன்புடன் கூடிய இதய காதலை இவர்கள் பரிமாறிக் கொண்டது பேரழகு.
ஹேரி:மதுமிதாவின் மீதான ஹேரியின் காதல் பிரம்மிப்பை ஏற்படுத்தியது.
மதுமிதாவின் ஒவ்வொரு செயலிலும் அவளது மனம் அறிந்து அவளுக்காக எதையும் செய்யும் பேரன்பும், அவள் காதலை மட்டுமே யாசித்து அவள் மனதில் தனக்கான காதல் விதையை விதைத்து அழகாக மலரவும் செய்து அவளது கரம் சேர தன் ஒட்டு மொத்த சாம்ராஜ்யத்தையும் தன்னையும் சேர்த்து அவளது தந்தையிடம் கொடுத்து நின்ற செயல்கள் எல்லாம் மனதை நெகிழ்ச்சியாக்கியது.
மது ஹேரியின் மீதான மதுமிதாவின் காதலும் அழகே. தன் மனம் கவர்ந்தவனை தன் அன்பு உறவான தாய் தந்தையரின் சம்மதத்தோடும், தன் உயிர் உறவு நட்புக்களின் ஆசியோடும் மிகவும் மனநிறைவோடு தன்னவனின் கரம் சேர்ந்து அழகான தென்றலாய் வசந்தத்தை மட்டுமே பொழியும் இவளது காதல் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
இவர்களின் மிக அழகான காதல் கடலில் பிறந்த அழகிய முத்தாகிய இனியாளுடன் என்றும் இதே அன்புடன் தலைசிறந்த காதலுடன் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்.
ஞான சரஸ்வதி: தன்னுடைய பேத்தியின் வாழ்விற்காக தன்னுடைய மகனுக்கு தெளிவான விளக்கம் கொடுத்து நல்வழி காட்டிய இவரது பாங்கு மனம் நிறைந்தது
செல்லதுரை -மீனாட்சி:
அன்பு தம்பதியரான இவர்கள் தன் மகளுக்கு அனைத்து சுதந்திரத்தையும் அன்பையும் பொழிந்து வளர்த்ததோடு அவளுக்கு மேன்மையை கற்றுக்கொடுத்து அனைவரும் போற்றும் நிலையில் மகளை வளர்த்த பெருமைக்குரியவர்கள். மகளது வாழ்க்கை மீதான இவர்களது பயம் அனைத்து பெற்றவர்களுக்கும் இருக்கும் தார்மீக எண்ணமே.. ஆனால் மகளது தேர்வும், ஹேரியின் மீதான நல்லெண்ணமும் புரிந்துணர்வும் என அனைத்தும் இவர்களது நிலையில் இருந்து இறங்கி மகளது வசந்தமான வாழ்விற்கு வண்ணப் பூக்களை கொண்டு ஆசீர்வதித்து மனதை நெகிழ்ச்சியாக்கினர்.
சத்யன் :சத்தியனின் அண்ணன் பாசமும், ஹேரியின் காதலுக்கு உதவிய செயலும், நகைசுவையான இவனது பேச்சும் செயலும் படிக்கும் போது புன்னகையுடனே வைத்திருந்தது.
பார்த்திபன்: இவனைப் போன்ற உன்னத உறவுகள் மதுமிதாவிற்கு வரம், தன் தாயின் தோழியின் மகளான மதுமிதாவை உடன் பிறந்த தங்கையாக பாவித்து அவளது அனைத்து நலன்களிலும் முன்னின்று தனது எதிர்ப்பையும், பக்க பலத்தையும் கொடுத்து மனதில் உயர்ந்து விட்டான்...
ஜான் -ஹேரியுடன் அனைத்து துறைகளிலும் பக்கபலமாக உண்மையான நட்புடன் செயல்பட்ட விதமும், நண்பனின் காதலுக்கும் உறுதுணையாக நின்று மனதை கவர்ந்தான்.
ஜனனி -சந்தோஷ்
ஊர்வசி -பிரசாத்
சத்யன் - பூங்குழலி.
@indrajai2024 கதைக்களம் மிகவும் அழகாக அழுத்தம் இல்லாமல் ரசிக்கவும், சிரிக்கவும், நெகிழவும் வைத்தது. போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகி.
thank u so much mahil sisYou have said it all beautifully and illustrated well, Nammu chellam, Congratulations, Indrajai ma and best wishes in the competition.
உங்களுக்கு விமர்சனம் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி சகி .வணக்கம் நர்மதா சகி,
முதலில் எனது கதைக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி விமர்சனம் எழுதியதற்கு எனது நன்றிகளும், அன்புகளும்........
வண்ணமயமான உங்கள் விமர்சனமும், மனதை வருடி சென்ற பாடல் வரிகளும் அருமை.
உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாவலில் நான் விளக்கி சொல்லாத உறவுகளை, உங்கள் ஒரு பக்க விமர்சனத்தில் விளக்கி சொல்லியிருக்கிறீர்கள்.
உங்கள் பார்வையிலிருந்து எனது கதை, எனக்கே புதிதாக தெரிகிறது.
முதல் கதை எழுதியவளான எனக்கு ஆரம்பம் முதல் நீங்கள் எல்லோரும் அளித்த விமர்சனங்கள் மிகுந்த பக்க பலமாக இருந்தது
இப்பொழுதும் நீங்கள் அளித்திருக்கும் இந்த விரிவான விமர்சனம் மனதிற்கு மிகுந்த நெகிழ்ச்சியை தருகிறது.
இன்னும் சொல்ல போனால் நீங்கள் உங்கள் விமர்சனங்களின் வாயிலாக என்னை ஒரு எழுத்தாளராக அங்கீகரித்திருக்கிறீர்கள். அதுவே எனக்கு ஒரு நிறைவை தருகிறது.
மிக்க நன்றி தோழி.
அன்புடன் இந்திரா
மிக்க மகிழ்ச்சி தோழி. உங்கள் பணி தொடரட்டும்உங்களுக்கு விமர்சனம் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி சகி .
என்னுடைய விமர்சனத்தில் அனைத்து கதை மாந்தர்கள் பற்றியும் குறிப்பிட்டு எழுதுவது என்னுடைய வழக்கம்,அப்படி எழுதும் பொழுது நான் படித்த கதை மாந்தர்களைப் பற்றிய புரிந்துணர்வை குறிப்பிட்டு எழுதுவேன் சகி..
இது உங்களுடைய முதல் கதை என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள், உங்களது தெளிவான மொழி நடையில் கதை மாந்தர்களின் உணர்வுகளையும் அழகாக எழுத்தில் வடித்துள்ளீர்கள் இது மிகவும் அற்புதம். போட்டியில் வெற்றி பெற மீண்டும் வாழ்த்துகிறேன்.
Thank you so much daMachi vera level review da song cover pic sema
Thank you very much daடேய் நம்மூதங்கம் அருமையான விமர்சனம் .
சாங் செமையான மேட்சிங்..
கலர்கலராக கண்ணைப் பறிச்சிடுச்சு.
நானு இன்னும் ஸ்டோரி வாசிக்கலை. இனி மேட்டு தான் வாசிக்க போறேன்.
வேற வேற லெவல் விமர்சனம்