Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

1) கல்யாண அகதிகள்

Aarudhra jeevitha

New member
Member
அனுமித்ரா..

2227

தனது வாழ்வின் புதிய அர்த்தத்தை காண மறுநாள் மும்பைக்கு செல்ல
இரவில் தூக்கம் வராமல் துடிதுடித்துக் கொண்டிருக்கும் 21 வயது மங்கை...

அவளுக்கு உறக்கமே வரவில்லை
கல்லூரி முடித்த உடன் நல்ல பத்திரிகை நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை எப்படியௌ..
வேலை கிடைத்துவிட்டது 6 மாத பயிற்சிக்கு பிறகு மும்பையில் வேளை போடப்பட்டு உள்ளது ....

அங்கே ஒரு அப்பார்ட்மெண்ட் ஒதுக்கப்பட்டிருக்கிறது ஆனால் மும்பையில் ஒரு நபர் வசிக்கும் அபார்ட்மென்ட் கிடைப்பது சிரமம் அதனால் ஏற்கனவே நான்கு பெண்கள் வசிக்கும் வீட்டிற்கு தான் அவளையும் போட்டு விடுகிறார்கள் அவர்களும் மற்ற துறை சார்ந்த பெண்மணிகள்....

அவர்கள் யார் எப்படிப்பட்டவர்கள் என்று அவளுக்கு ஒன்றும் தெரியாது ஆனால் அந்த வீட்டில் இவளும் ஒரு நபராக சேரப்போகிறாள் அவர்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்வது போல இவளும் வாழவேண்டும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தானே பெண்களின் வாழ்க்கை நகர்கிறது..‌

இவள் நடுத்தர குடும்பத்து வர்க்கத்தை சேர்ந்த பெண்ணாவாள்...

முதலில் இப்பணி வேண்டாம் என்றுதான் அனைவரும் சொன்னார்கள் இருந்தாலும் அனுவின் தன்னம்பிக்கையால் அனைவரும் ஒத்துக் கொள்ள செய்தது...

இவளுக்கு பிறகு ஒரு தங்கையும் இருக்கிறாள் ஒரு தம்பியும் இருக்கிறான் இருவரையும் படிப்பதற்கு இவள்தான் உதவ வேண்டும் அதனால் மனதை கல்லாக்கிக் கொண்டு பெற்றோர்கள் தன் மூத்த மகளை மும்பைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.....

எப்படியும் முயற்சி செய்து உறங்கிவிட்டாள்....

காலை நான்கு மணி அளவில் அலாரம் அடிக்க அவளது தம்பி தங்கை இருவரும் அக்கா அலாரம் அடிச்சிருச்சு ட்ரெயின் 8 மணி டிரெயின் 8 மணி டிரெயின் என்று கத்த ஆரம்பிக்க ....

அவளும் அடித்து பிடித்துக்கொண்டு குளித்து முடித்து அம்மா செய்து வைத்த அனைத்து உணவுகளையும் மூட்டை கட்டிக்கொண்டு அது ஒரு பையை மாட்டிக் கொண்டாள்...

அப்போது அவளின் தந்தை நீ பத்திரிகை ஆபிசில் வேலை செய்யப் போறியா இல்ல சாப்பாடு கடை வைக்கப் போறியா எதுக்குடி இவ்ளோ....

அப்பா ரெண்டு நாள் ஆகும் பா மும்பை போறதுக்கு பசித்தா நான் என்ன பண்ணுவேன் வெளி சாப்பாடு சாப்பிட்டால் வயிறு கெட்டுப் போயிடும் இல்லையா...

சரி சரி ரொம்ப நடிக்காத வா நாம கிளம்பலாம் என்று அனைவரும்
ரயில் நிலையத்திற்கு வந்தனர்

அவள் ரயில் வருவதற்கு அரை மணி நேரம் இருக்க அதற்குள் அம்மா ஒருபுறம் அறிவுரைகள்

தங்கை ஒருபுறம் தனக்கு பிடித்த அவை அனைத்தும் ஆடர் செய்து வைத்தாள் தம்பி எனக்கு எதுவும் வேண்டாம் மாதம் மாதம் எனக்கு பாக்கெட் மணி அனுப்பி வைத்தால் போதும் என்று அவன் ஒரு பக்கம் கட்டளை என்று அவளுக்கு லிஸ்ட் பெருகிக் கொண்டே சென்றது.....

இறுதியாக தன் தந்தையிடம் வந்து அப்பா உங்களுக்கு என்ன வேணும் எனக்கு எதுவுமே சொல்லல நீங்க உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க நான் வாங்கிட்டு வரேன் மேலும் எனக்கு அட்வைஸ் பண்ணுங்க பா என்று செல்லமாக கேட்க....

நீ என் பொண்ணு தப்பு பண்ண மாட்டேன் நீ போற ஊருல 50% நல்லா இருக்கும் 50% ரொம்ப மோசமா இருக்கும் பார்த்து இருந்துக்கோ அவ்வளவுதான்....

என்னப்பா மோசமான ஊருனு தெரிஞ்சும் ஏன் அனுப்புறீங்க என்ன பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா என்று பாவமாக கேட்க...

அதான் நான் சொன்ன இல்ல நீ என்னோட பொண்ணு நம்ம தான் முக்கியமே தவிர நம்ம இருக்குமிடம் பிரச்சனையே இல்ல நம்ம ஒழுங்கா இருந்தா

சுத்தி இருக்கிறது நல்லா தெரியும் நாம ஒழுங்கா இல்லன்னா சுத்தி இருப்பவர்களும் தப்பா தான் தெரிவார்கள்
சரியா ...

அங்க உன்ன மாதிரி எத்தனையோ பொண்ணுங்க சொந்த வீட்டை விட்டு சொந்த ஊரை விட்டுப் உழைக்கிறாங்க

சில பொண்ணுங்க எப்படியோ போயிடறாங்க

சில பொண்ணுங்களுக்கு வேற வழி இல்ல தப்பான முறையில் சம்பாதிக்கிறாங்க

அதுதான் மும்பை மும்பை பற்றி சொல்ல நான் ஒரு நாள் முழுக்க சொல்லலாம் எனக்கு இப்ப நேரமில்ல நீ அந்த ஊருக்கு போ உனக்கு புரியும் அந்த ஊரைப்பற்றி....

அப்பா நீங்க பயப்படாதீங்க நான் ஒரு பத்திரிக்கை ஆபீஸில் வேலை செய்ற பொண்ணு அந்த ஊரைப் பத்தி முக்கியமா அங்கு வேலை செய்த ஒவ்வொரு பெண்களைப் பற்றி கண்டிப்பாக ஒரு ஆர்டிகல் செய்யப் போறேன் அதையெல்லாம் நியூஸ் சேனலில் போடப் போறாங்க பெரிய எழுத்தாளரா வரப் போறேன் பாருங்க என்று அனுமித்திரா தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள்...

நீ என்னோட செல்லம் பாத்து பத்திரமா இரு சில விஷ ஜந்துக்கள் நம்மளைக் எதிர்க்குறதுக்கு ரெடியா இருக்கும் ஆனா நீதான் அதுல இருந்து தப்பிக்கனும் நீ எப்படி ஸ்கூல் காலேஜ் எல்லாம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சாதித்து வந்த அதே மாதிரி உன் வேலை விஷயத்திலும் நீ சரியா இருக்கணும் புரிஞ்சுதா ....

என்று அவள் தலை முடியை கோதிவிட தேங்க்யூ பா என்று அவரை செல்லமாக அணைத்துக் கொண்டாள்...

அப்பொழுது பயணிகள் கவனத்திற்கு மும்பை செல்ல போகும் ரயில் இன்னும் சற்று நேரத்தில் வரவிருக்கிறது என்ற தகவல் வந்தவுடன்

தனக்கு தேவையான அனைத்து பொருட்களும் சரி பார்த்துக் கொண்டால் மீண்டும் அப்பொழுது அவள் தம்பி தாயே நீ சாப்பிடுற பொருள் நீ எடுத்துப் போக வேண்டிய பொருட்கள் எல்லாம் பத்திரமாக தான் இருக்கு உன் ஒருத்திக்கு நாலு பெட் வச்சு ஒரு ரூம்

உன்னை விட உன் பாத்திரங்கள் தான் நிறைய இருக்கு என்று சிரித்துவிட

வாயை மூடு டா என் பொண்ணு என்ன விட்டு ரெண்டு வருஷம் இருக்க போறானு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீ வேற என்று அனுவின் தாயார் கண்ணீருடன் அனுவை
பத்திரமா இரு பாப்பா என்று சொல்ல...

சரி மை டியர் மம்மி என்று தன் தாயின் கண்ணத்தில் முத்தமிட்டு தன் தங்கை அணைத்துக்கொண்டு இந்த வருஷம் டென்த் பத்திரமா இரு நல்லா படி என்று சொல்ல அவள் தம்பியிடம் எட்டாங்கிளாஸ் ஒழுங்கா பாஸ் பண்ணுடா தம்பி என்று சிரித்துக்கொண்டே படியேறி இறுதியாக அவர்களைப் பார்த்து கண்ணீருடன் கையசைத்து சென்றாள் ரயிலும் மெதுவாக நகர்ந்து சென்றது....

அவளின் பெற்றோர்கள் தம்பி தங்கையும் நம்ம ஆளு கெட்டிக்காரி வேணா பாருங்க ரெண்டு வருஷத்துல மும்பை ஏமாத்த போறா என்று பெருமையாக பேசிக் கொண்டே வீட்டிற்கு சென்றனர்.....

அனு தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள் தன் தந்தை அவளுக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த ஒரு அரை நான்கு நபர்கள் தங்க வேண்டிய அறை ஆனால் அவள் ஒருத்திக்கு அவள் தந்தை ஏற்பாடு செய்துவிட்டார் ஏசி கோச் வேறு குளுகுளூ என்று அழகாக அமர்ந்து கொண்டு தன் செல்போனை எடுத்து படம் பார்த்துக் கொண்டே புறப்பட்டால் மும்பைக்கு....

அப்போது அவளின் தோழி சுவாதி போன் செய்ய என்னடி கிளம்பிட்டியா என்று கேட்க அரை மணி நேரம் ஆகுது டிரெயின் கிளம்பி இன்னும் ரெண்டு நாள் இருக்கு எப்படி ஆச்சு சீக்கிரமா போய் இன்னும் மும்பைக்கு போனோம் என்னோட ஆசையே ஷாருக்கான் சல்மான்கான் எல்லாரையும் பேட்டி எடுப்பது தான்...

அடிப்பாவி நீ பத்திரிக்கை உலகத்தில் நல்ல எழுத்தாளராக உங்க அம்மா அப்பா சொன்னா நீ பேட்டி எடுக்க போயிட்டு இருக்க...

அந்த ஆசை எனக்கு இல்லாம இல்லை இருந்தாலும் இந்த மாதிரி சினிமாக்காரர்களை பார்க்க முடியாம இருக்க முடியுமா நீயே சொல்லு...

எப்படியோ பத்திரமா போயிட்டு வா உனக்கு ஒன்னு தெரியுமா எனக்கு ஆறு மாசம் கழிச்சி கல்யாணம் ஆகும் போது நானும் ஆறு மாசத்துல மும்பைக்கு வந்துரப்போற ஏன்னா அவரு மும்பையில் தான் வேலை பார்க்கிறார் என்று வெட்கத்துடன் அவள் தோழி சுவாதி சொல்ல...

அடிப்பாவி கேடி என்கிட்ட சொல்லவே இல்ல சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு மும்பைக்கு வந்து மீட் பண்ணலாம் என்று அனு பேசி முடித்து போனை அணைத்து விட்டாள்...

சிறிது நேரம் கழித்து பசி எடுக்க தன் தாயார் சமைத்து வைத்து விட்டு பிரியாணி சிக்கன் ஃப்ரை ஒரு கட்டு கட்டினாள்....

உணவு முடித்தவுடன் அவளுக்கு கண் அசர நன்றாக உறங்கி விட்டால் நன்கு உறங்கிவிட நேரம் சென்றதே தெரியவில்லை கண்விழித்து திடீரென்று பார்க்க மணி இரவு பத்து மணியைக் காட்டியது அட கடவுளே இவ்வளவு நேரம் தூங்கிட்டோமா இப்ப மறுபடியும் தூங்க ட்ரை பண்ணா சுத்தமா வராது நல்லவேளை மொபைல் சார்ஜர் போட்டு இருந்தோம் என்று தன் லேப்-டாப்பில் மொபைலை காணக் செய்து ஒரு திரைப்படத்தைப் பார்த்து இருந்தாள்...

அந்தத் திரைப்படம் பழைய திரைப்படம் இயக்குனர் பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான கல்யாண அகதிகள் பேரை வித்தியாசமாக இருக்கிறது இதுவரை திரைப்படத்தை தான் பார்த்ததில்லை என்பதற்காக ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டுமென்று இத்திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் படம் பார்க்க பார்க்க அவளுக்கு மனதில் ஏதோ வருடியது பெண்கள் இவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் அந்த காலத்தில் இயக்குனர்கள் பெண்களின் நிலையை கூறினாலும் இக்காலம் வரை பெண்களுக்கு ஒரு நல்ல வழி கிடைக்கவில்லை ஏனென்றால் நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்கிறோமோ அவ்வளவு தான் என்று தன் மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாமல் மீண்டும் தூங்க முயற்சிக்க முடியவில்லை மணி இரண்டை காட்டியது நள்ளிரவில் தூக்கம் வரவில்லை சரி கால் நடையாக நடக்கலாம் என்று தன் அறையை விட்டு வெளியே சற்று மெதுவாக நடந்து கொண்டே இருந்தாள்....

அப்போது அங்கிருக்கும் மக்களை பார்த்தால் அழகாக குழந்தைகளை வைத்துக் கொண்டிருந்த தம்பதிகள் ஏதோ கதை பேசிக் கொண்டிருக்கின்றனர்

ஒருபுறம் புதுமண தம்பதிகள் என் வருங்கால வாழ்விற்காக புறப்பட தயாராக இருக்கின்றனர்

அங்கு சில இளைஞர்கள் கையில் பையுடன் ஏதோ வேலையில் ஓய்வு கிடைத்து விடுமுறைக்கு ஊருக்கு செல்கின்றனர் இவ்வாறு மக்களை பார்ப்பதற்கு ஒரு மனம் மகிழ்ச்சியாக இருந்தது....

நம் மகிழ்ச்சிக்கு நாம் தான் காரணம் தூக்கத்திற்கு நாம் தான் காரணம் என்று மனதில் ஒரு சிறந்த கோட்டை கட்டிக் கொண்டால் நாம் சந்தோஷமாக இருந்தால் பார்ப்பதும் சந்தோஷமாக இருக்கும்...

இதுவே நாம் தூக்கமாக இருந்தால் பார்ப்பதும் துக்கமாக இருக்கும் தன் தந்தையார் கூற்றுப்படி அனைத்தும் நம் கையில் தான் இருக்கின்றது என்று தெளிவு பெற்றாள்....

எப்படியோ அரை நாள் கழிந்து விட்டது இன்னும் ஒன்றரை நாள் எப்படி கழிய போகிறதோ அப்போதுதான் மும்பை சேர போகிறோமோ என்று தலைவலி என இருந்தாள் அனு மித்ரா...

எப்படியோ முயற்சி செய்து மீண்டும் தூக்கத்தை வர வைத்து கொண்டால் நன்றாக உறங்கினாள் அவளுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை நன்றாக உறங்கி விட்டு காலையில் எழுந்து பார்க்க மணி மதியம் 12 மணி என்று காட்டியது

சரியா போச்சு நாம் மும்பைக்கு போறதுக்குள்ள நல்லா தூங்கி தூங்கி கும்பகர்ணன் மாறப் போகிறேன் என்று மனதில் சிரித்துக் கொண்டே போனை எடுக்க அவளின் தாய் தந்தை இருவரும் 50 முறை கால் செய்து இருந்தனர்

ஐயோ அம்மா அப்பா போன் பண்ணி இருக்காங்க நம்ம எடுக்கவே இல்லையே என்று அவர்களுக்கு போன் செய்து தன் நிலைமை எடுத்துக் கூறினார் பார்த்து பாப்பா மும்பைக்கு போறதுக்குள்ள ட்ரெயின்ல தூங்கி சமாதி ஆகி விடாதா என்று தந்தையார் சொல்ல....

அட போங்கப்பா ரொம்ப தூக்கம் வருது.....

சரி நாளைக்கு மார்னிங் மும்பைக்கு போன உடனே அப்பாக்கு கால் பண்ணு சரியா என்று அவள் தந்தையார் சொல்ல சரி பா என்று சொல்ல பாப்பா உனக்காக நான் சிப்ஸ் பாக்கெட்ட வைத்து இருக்கேன் நீ சாப்டியா என்று அவள் தாயார் சொல்ல

நான் நல்லா சாப்பிட்டேன் மா எனக்கு பசிக்குது உங்க ஞாபகம் தான் வருது என்று பாவமாக சொல்ல

குழந்தைக்கு சாப்பாடு போட்டு சாப்பாடு போட்டு அவளை தீனி பண்டாரம் மாத்தி வச்சிருக்க என்று அவளின் தம்பி கிண்டல் செய்ய

டேய் ஒழுங்கா படிக்கிற வேலையை பாருடா என்று அங்கிருந்து கேட்டாள்.....

நான் நல்லா தான் படிச்சுக்கிட்டு இருக்கேன் நீ தான் மும்பை போறதுக்குள்ள எரும மாடு மாதிரி ஆகக்கூடாது என்று கிண்டல் செய்தான்...

சிறுது நேரம் இவ்வாறு குடும்பத்து உறுப்பினர்களும் நன்றாக பேசி முடித்து விட்டு அங்கே ஒரு நிலையம் வர அங்கே உணவை வாங்கிக் கொண்டு உணவை உண்ண ஆரம்பித்தாள் வெளியே கிடக்கும் உணவு உண்ணும் போது தான் தெரிந்தது வீட்டு உணவின் மகிமை...

நன்றாக சமைக்கும் அம்மாவின் சமையலை நாம் ஆயிரம் குத்தம் சொல்லுவோம் ஒரு நாள் அம்மா இல்லாமல் வெளியில் வாங்கி உண்டால் அப்போது தெரியும் அம்மாவின் நிலைமை என்ன என்று...

இப்படியே தூங்கிக்கொண்டு திரைப்படம் பார்த்துக்கொண்டு உணவை உண்டு கொண்டே இரண்டு நாட்கள் நன்றாக கரைந்ததும் மறுநாள் ஆறு மணி அளவில் ரயில் மும்பை நிலையத்தை அடைய போகிறது இரவு 8 மணி அளவில் அனு மித்ரா தூங்காமல் எப்படியாவது காலையில் முழித்து சென்றுவிடவேண்டும் என்று தயாராக இருந்தாள் இருந்தாலும் தன்னை மீறிய தூக்கம் எப்படி அலாரம் வைத்ததால் காலை 5 மணி அளவில் முழித்துவிட்டாள்...

(என்னடா ட்ரெயின் பயணத்தில் ஒன்னு சுவாரஸ்யமா நடக்கலனு
பார்க்கிறீர்களா இவளோட வாழ்க்கை பயணம் அதிர்ச்சிகரமாக போக போது இந்த ட்ரெயின் பயணம் ரெண்டு நாள்தான்)

ஆறு மணி அளவில் மும்பை ரயில் நிலையத்தை வந்தடைய துணிமணிகளுடன் வெளியில் வந்து நின்றாள்

அப்பொழுது தன் தந்தைக்கு போன் செய்து தான் மும்பைக்கு வந்த இந்த செய்தியை சொல்ல

அவரும் தாயாரும் பத்திரமாக சென்று பத்திரமாக இரு

உன் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பாயாக என்றுஅவளது தந்தையார் அறிவுரைகள் வழங்க...

அவளும் சரி என்று தலையாட்டிவிட்டு ஒரு டாக்ஸி பிடித்து தனக்கு ஒதுக்கப்பட்ட அப்பார்ட்மென்ட் சென்றாள்...

அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கு சென்ற நொடியிலிருந்து அவள் வாழ்வு தலை கீழாக மாறப்போகிறது....

தொடரும்...
(அவளுக்கு எந்த ஒரு ஆபத்தும் வரப்போவதில்லை வாழ்வில் மேலும் தெளிவு பெற போகிறாள் இப்படியும் வாழ்க்கை இருக்கிறது என்று வாழ்வின் உண்மையான மகத்துவத்தை அறிய போகிறாள்)
 
Top