Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

1....பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா....

Advertisement

Gayathri vinothkumar

New member
Member
அனைவருக்கும் வணக்கம் நட்பூக்களே....
நான் இந்த தளத்திற்கு புதிய எழுத்தாளர் தான்...
புதிதாக ஒரு கூட்டுக்குடும்பத்து பின்னனியில் கிரமத்து வாசம் வீசும் நகைச்சுவை காதல் ஏமாற்றம் இணக்கம் என்று எல்லாம் கலந்த ஒரு இரசனைக்குரிய கமர்ஷியல் கதைக்களமாக எழுத வேண்டும் என்ற ஆசையில் இதோ... வெற்றிகரமாக முதல் அத்யாயத்தின் வழியே கதை மாந்தர்களை அறிமுகம் செய்து வைக்கிறேன்.....

தொடர்ந்து அனைத்து அத்யாயங்களையும் படித்து நிறைகுறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்... தொடர்ந்து உங்கள் ஆதரவு வேண்டும் என்ற அன்பான கோரிக்கையோடு நான் த. காயத்ரி வினோத் குமார்....
_____________________________________________

1....பேசும் கண்ணுக்கு
என்னைப் புரியாதா....
சூரியன் சோம்பலாகத் தன் கண்ணைக் கசக்கும் முன்பே... இங்கே மணப்பாறை பாலக்குறிச்சியில் உள்ள பெரிய வீட்டில் கோலாகலமாக விருந்தும் விருந்தினரும் தடபுடலாக திரண்டு தயாராகிக் கொண்டு இருந்தனர்.....

பழனி ஆண்டவர் ஸ்டோர்ஸ் பழனி ஆண்டவர் பாத்திரக்கடை பழனி ஆண்டவர் உரக்கடை... பழனி ஆண்டவர் ஹோல் சேல் மளிகை வியாபாரம் பழனி ஆண்டவர் டீ தூள் ஏற்றுமதி இப்படி பழனி ஆண்டவர் பெயரில் பிரசித்தி பெற்ற குடும்பம் அது....

அதன் ஆணி வேர் (ஆதிநாராயணன் __ அஞ்சுகம். )....

ஆதி நாராயணன் அந்த வீட்டின் மூத்தவர்... இத்தனை ஆண்டுகள் ஆகியும் அந்த கூட்டுக் குடும்பம் உடையாமல் கட்டிக் காப்பதில் பெரும் பங்கு வகிப்பவர்... இவருடைய மனையாட்டி... அஞ்சுகம்... அந்த வீட்டு மருமகள்களின் சிம்ம சொப்பனம்...கண்டிப்பும் கலகலப்பும் குசும்பும் நிறைந்த பாலைக்குறிச்சியின் வயதான விக்கிப்பீடியா....

காதில் பெரிய வைரக்கம்மல் மின்ன கழுத்தில் வைர அட்டிகை வைர வளையலோடு தான் வளையவருவார்....

பேரன்களுக்கு மட்டும் எப்போதும் பாசமான கிழவி தான்.... இந்த அஞ்சுகம் பாட்டி...

ஆதிநாராயணன் ஊரில் பெரிய தலை... விவசாயத்தையே நம்பி வளரந்த மூத்த குடி...

ஆனால் பிள்ளைகளுக்கு விவசாயத்தோடு சொந்த வியாபரங்கள் அமைத்துக் கோடுத்து குடும்ப பெயரை நிலைநாட்டி வைத்தார்..

மகன்களோ அவருடைய பிள்ளைகளை ஒரு படி மேலே சென்று விருப்பப்படி பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து கிராமத்தை கடந்து நகரங்கள் வரை செயல்பட அனுமதித்தனர்...

ஆதிநாராயணன் அஞ்சுகத்திற்கு நான்கு ஆண் ஒரு பெண் என மொத்தத்தில் ஐந்து பிள்ளைச் செல்வங்கள்....

மூத்தவர்( கிருஷ்ன மூர்த்தி__ சகுந்தலா)

அவர்களுக்கு ஒரு பெண் சுகண்யா ஒரு பையன் சுகுமாரன்...
சுகன்யாவிற்கு திருமணம் முடிந்து இரண்டு பேரன்களை பார்த்துவிட்டனர்... அடுத்து மகன் சுகுமாரன் இரண்டு வருடம் கத்தாருக்கு சென்று வந்த கையோடு இப்போது பெண் பார்த்து நிச்சயம் முடிந்து விட்டது விரைவில் கல்யாணம்... பிறகு இங்கேயே ஏதாவது பிஸ்னஸ் தொடங்கி செட்டில் ஆகும் படி வீட்டின் உத்தரவு....

இரண்டாவது (ஜெயராமன் __ இராஜலகாஷ்மி)

அவர்களுக்கு சூர்யா , பிரியா என இரண்டு பெண்களும் விஜய் என்று ஒரு பையனும்...
சூர்யா பி.இ முடித்து தூரத்து சொந்தமான ஒரு அத்தை உறவில் திருமணம் முடிந்து ஒரே பெண் குழந்தை உள்ளது... பிரியா அடுத்த ஆண்டு கல்லூரியில் அடியெடுத்து வைக்கப் போகிறாள்... அவளுக்கும் அத்தை மகன் இளங்கோவிற்கும் தான் திருமணம் என்று இன்று நேற்று அல்ல பிறந்த போதே முடிவாகிவிட்டு...
முடிவு செய்தவர் ஆதநாராயணன்...
விஜய்
பள்ளிப் படிப்பைத் தாண்டவில்லை.... இன்னும்...

மூன்றாமவர்( தேவிகா __ ராமநாதன்)

அவர்களுக்கு
(வந்தியத்தேவன் மற்றும் இளங்கோவேல். என்று இரு மகன்கள்.. சிவகாமி சுந்தரி )என்று ஒரு பெண்.
தேவ் என்கிற வந்தியத்தேவன் எம். டெக் முடித்துவிட்டுச் சென்னையில் தங்கி வேலை பார்க்கிறான்.... யாழ் மொழிக்கும் இவனுக்கும் தான் திருமணம் என்பது தாத்தாவின் உத்தரவு....
இளங்கோ பி.இ முதலாம் ஆண்டு...
சிவகாமி அதிகம் படிப்பு மண்டையில் ஏறாததால் இராமநாதனின் அக்காள் மகன் குமரேசனுக்கு பதினெட்டு வயதிலேயே திருமணம் முடிந்து இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளது... ஹரி மற்றும் பரணி... என்று...
இப்போது குடும்பத்தில் எல்லோரும் படித்து பட்டம் பெற்றதோடு அவரவர் கல்யாணப் பத்தகரிக்கையில் பளிச்சென்று பெயர் பக்கத்தில் பட்டத்தை போட்டுக் கொள்வதைப் பார்த்த சிவகாமிக்கு இப்போது படிப்பின் மீது எழுந்த ஆர்வகோளாறு காரணமாக அழகப்பா திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ தமிழ் படித்துக்க முயற்சிக்கும் குடும்பத் தலைவி...

நான்காமவர் (இராதாகிருஷ்ணன் _ வளர்பிறை) அவர்களுக்கு
(யாழ் மொழி ஒரு பெண் கௌதம் மற்றும் கார்திக் என இரண்டு ஆண்கள்
யாழ்மொழி பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து பட்டப் படிப்பும் பட்டையப் படிப்பும் ஒருங்கே முடிக்கும் திட்டத்தோடு திருச்சியில் ஒரு பெரிய தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆசிரியைப் பயிற்சியோடு பி.ஏ கணிதமும் இணைந்து கற்கும் மாணவி... எப்படியோ தேர்வு எழுதி அரசாங்கப் பணி வாங்கிட வேண்டும் என்ற உறுதியோடு களத்தில் இறங்கிவிட்டவள்...
கௌதம் பதினொன்றாம் வகுப்பும் கார்த்திக் எட்டாம் வகுப்பும் படிக்கும் மூன்று செல்வங்கள்...
யாழ்மொழிக்கும் தேவ் இற்கும் தான் திருமணம் என்பதும் ஆதிநாராயணன் அஞ்சுகத்தின் கணக்கு ...

ஐந்தாவது (ஜெகன்நாதன் _ ஆனந்த ஜோதி) இவர்களுக்கு ஆனந் மற்றும் அரவிந் என இரட்டை ஆண்கள்...
இருவரும் ஐந்தாம் வகுப்பே படிக்கும் சிறுவர்கள்...

இது போக குடும்பத்தில் பெண் கொடுத்தவர் பெண் எடுத்தவர் அங்காளி பங்காளி இன்னும் மாமன் மச்சான் மைத்துனர் சகளைகள் என்று சொந்தங்கள் மட்டுமே ஒரு ஊரளவு உண்டு....

இத்தனை பேரும் இப்போது கூடி வந்து விருந்து உபச்சாரத்தோடு வழியனுப்பப் போவது நம்முடைய தேவ்.... அதாங்க வந்தியத் தேவனைத் தான் ...

பெயரைப் பார்த்ததும் உங்களுக்கு புரிந்திருக்கும் தேவிகாவின் கணவர் இராமநாதன் அந்தகால தமிழ் ஆசிரியர்... புதினங்களின் பிரியர்... அதனால் தன் பிள்ளைகள் மூவருக்கும் ஜோதிட எழுத்துபடி அமைந்த முத்தான இலக்கிய கதாநாயக நாயகியரின் பெயரைத் தேர்ந்தெடுத்து நாமகரணம் செய்துவிட்டார் ..

பள்ளிக்கூடத்தில் தெரியாத வித்யாசம் தேவிற்கு வளர வளர பள்ளி தாண்டி கல்லூரி செல்கையில் நன்றாகவேப் புரிந்தது... அதனால் வீட்டில் அனைவரின் எதிர்ப்பையும் மீறி பெயரை மாற்ற நினைத்தவனால் முழுதாக மாற்றிட முடியவில்லை...

அதனால் வந்தியத் தேவன் சுருங்கி தேவ் என்று மட்டும் மாற்றம் ஆனது.... கூடுமானவரை வீட்டில் எல்லோரையும் இதற்கு சம்மதிக்க வைப்பதற்குள் அவனுக்கு நாக்கு தள்ளி தலையால் தண்ணீர் குடித்த கதை அவனுக்குத் தானேத் தெரியும்....

அடுத்து இந்த விருந்து உபச்சாரங்களுக்கு

காரணம்
இதோ...

நம்முடைய கதாநாயகன் தேவ் ஒருவாரம் தன் ப்ராஜ்க்ட் டெமோ அப்ரூவலுக்காக அமெரிக்கா செல்லப் போகிறான்....

ஒரே ஒரு வாரத்திற்கா இந்த அளப்பரை என்று கேட்கலாம்....

விவசாயத்தையும்... வியாபாரத்தையும் மட்டுமே நம்பி வாழ்ந்த இரண்டு தலைமுறைகளைக் கடந்து படித்து பட்டம் வாங்கி சென்னையில் ஒரு பெரிய எம்.என்.சியில் வேலை கிடைத்து அதை தன் திறமையால் இத்தனை காலம் தக்க வைத்து சாதாரண டெஸ்டரில் இருந்து புரோகிராம் டெவலப்பர் ஆக வளர்ந்து இன்று அமெரிக்கா வரை தன் வீட்டு அடுத்த தலைமுறை செல்லப் போவது அந்த வீட்டு மூத்த தலைமுறையினருக்கு திருவிழாக் கொண்டாட்டம் தானே........

தேவ்... பல நவீன கனவுகளை கட்டமைத்து அதில் வாழ்வாதாரத்தை தேடும் துடிப்பான இளைஞன்...

சராசரிக்கும் கூடுதலான உயரம் கண்களில் வேலையின் கம்பீரம்... குடும்பத்தின் மீதான பாசம் .... எப்போம் சந்தோஷத்தை சேர்த்து வைத்து சிரிக்கும் முகம்....

கலையான கிராமம் பாதி நகரம் பாதி சேர்த்து செய்த கலவையான கட்டழகன்...

கலகலப்பான ரகம்... கோவம் மட்டும் அவனுக்கே உரித்தானது போல சட்டென முகந்திருப்புவான் ....

தவறு செய்தாலோ இறங்கி வந்து மன்னிப்பு கேட்பவனுக்கு தவறு நேர்ந்துவிட்டால் மட்டும் முதலில் கை தான் பேசும்...

அவனுடைய ப்ராஜெக்ட் மட்டும் அங்கே ஏற்றுக்கொள்ள பட்டுவிட்டால்....

ஒரு ஆண்டு அங்கே தங்கி பணி செய்ய முடியும்... அது அவன் பணியிடத்தில் அவனுக்கு கூடுதல் பெயரையும் புகழயும் தருவதோடு...அவன் கனவுகளில் முன்னேற்றம் ... வீட்டிலும் அலுவலகத்திலும் அவன் பெயர் கொடிகட்டி பறக்கத் துவங்கிவிடும்...

இந்த கிரமத்தை விட்டு படிப்பையும் வேலையையும் காரணம் காட்டி வெளியே சென்றவனுக்கு இந்த வட்டத்தையும் தகர்த்துவிட்டு அயல்நாடு செல்லத் தான் ஆசை...அங்கேயே தங்க கிடைத்த சிறிய வாய்ப்பை அங்கேயே வாழவும் குடியுரிமை பெற்று பலப்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என்ற பேராசை....

ஆனால் வீட்டில் உண்மையை சொல்லி சம்மதம் வாங்கவே முடியாது... சாதாரண பெயரையே மாற்றவே முடியாது கூடாது என்ற வீட்டில் தன் ஆசைகளைக் கூறி கிடைத்த வாய்ப்பை கைவிட்டு கனவைத் தொலைக்க முடியாது...

மனதில் ஒரு உறுதியோடு தான் பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்ட்டிருக்கிறான்.... தேவ்....

எப்படியாவது இந்த ப்ராஜெக்ட் ஓ.கே ஆகிவிட வேண்டும் பழனி ஆண்டவா... என்று ஆயிரம் வேண்டுதலோடு....

இவனுக்கு இருக்கும் கணக்குகளையும் கனவுகளையும் துவம்சம் செய்யும் ஆயுதமாக தாத்தா ஆதிநாரயணன் ஒரு கணக்கோடு காத்திருக்க...

இவர்களில் யாருடையக் கணக்கில் புகுந்து காலம் கதகளி ஆடி வைக்குமோத் தெரியவில்லை....
____தொடரும்...
 
Top