Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

1. Ivan Vasam Vaaraayo!

Advertisement

ஆரம்பம் எப்படி உள்ளது?

  • ம்.. ம்.. நல்லாத்தான் இருக்கு..

    Votes: 8 27.6%
  • ரொம்ப மொக்க...

    Votes: 0 0.0%
  • வொய் திஸ் கொல வெறி...

    Votes: 0 0.0%
  • ஆரம்பமே அசத்தல்

    Votes: 21 72.4%

  • Total voters
    29

Annapurani Dhandapani

Well-known member
Member
நண்பர்களே! இதாே முதல் அத்தியாயம்! படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர வேண்டுகிறேன்!




இவன் வசம் வாராயோ! - 1

"கயலக்கா! உங்க வண்டி குடுக்கறீங்களா? நா கொஞ்சம் மார்கெட் வரைக்கும் போய்ட்டு வந்திடறேன்! ப்ளீஸ்!" என்று குழந்தை போல கெஞ்சும் எதிர் வீட்டுக்கு புதிதாகக் குடி வந்திருக்கும் நிரஞ்சனாவைப் பார்த்து புன்னகைத்தாள் கயல்விழி!

"உனக்கு வண்டி ஓட்டத் தெரியுமா? லைசன்ஸ் இருக்கா?" என்று கேட்டாள் கயல்விழி.

"லைசன்ஸ் இருக்குக்கா! ஊர்ல ஓட்டியிருக்கேன்! இங்க இந்த ட்ராஃபிக்ல ஓட்ட கூடாதுன்னு வீட்ல தடா சொல்றாங்க! ங்க வண்டிய பாத்ததும் ஆசையா இருக்குக்கா! சின்னதா ஒரு ரௌண்டு.. இங்க ஓட்டினா கண்டுபிடுச்சிடுவாங்க.. அதான்.. மார்கெட் வரை போய்ட்டு.. அப்டியே காய் வாங்கிட்டு.." என்று இழுத்தாள் நிரஞ்சனா! பார்ப்பதற்கு பத்தாம் வகுப்பு மாணவி தன் அன்னையிடம் செல்லமாகக் கொஞ்சுவது போல இருந்தது கயல்விழிக்கு!

"சரி! இந்தா! பத்திரமா போயிட்டு வா! அது ப்ரேக் கொஞ்சம் சரியில்ல! மெதுவா போயிட்டு மெதுவா வா! சரியா!" என்று கூறிக் கொண்டே தன் இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்து அவளிடம் நீட்டினாள் கயல்!

"ரொம்ப தேங்க்ஸ்க்கா! டொன்டீ மினிட்ஸ்ல வந்திடறேன்!" என்று பிரகாசமான முகத்துடன் கூறிவிட்டு சிட்டாகப் பறந்தவளைக் கண்டு சிரித்தபடியே தன் வேலையைப் பார்க்கப் போனாள் கயல்!

காலை பதினோரு மணியாகி விட்டாலும் கூட பரபரப்புக்கு பஞ்சமில்லாத அந்த காய்கறி மார்க்கெட்டில் தனக்குத் தேவையான காய்கறிகளை பேரம் பேசி வாங்கி, தன் துணிப் பையில் அடைத்துக் கொண்டு வந்து, இரவல் கேட்டு வாங்கி வந்த இரு சக்கர வாகனத்தில் மாட்டிவிட்டு அதில் சாவியை பொருத்திவிட்டு உதைத்தாள் நிரஞ்சனா!

வண்டியை கயலிடம் கேட்டு வாங்கி வரும்போது கிளம்பிய வண்டி இப்போது கிளம்பாமல் தகராறு செய்தது!

ஒன்று! இரண்டு! மூன்று! ம்ஹூம்! அது கிளம்புவேனா என்றது!

"ஹையியோ.. இது ஸ்டார்ட் ஆக மாட்டுதே.. இப்ப என்ன செய்ணும்னு புரீலயே.." என்று அவள் யோசிக்கும் போதே அவளருகில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆட்டோ அண்ணன் ஒருவன்,

"என்னமா? ஸ்டாட் ஆகலயா?" என்று கேட்க,

ஆஹா! ஒருத்தன் சிக்கிட்டான்.. இவனையே ஸ்டார்ட் பண்ண வச்சுடுடீ நீரூ.. என்று தனக்குள் கூறிக் கொண்டவள்,

"ஆமாண்ணா! என்னன்னு தெரீல! ஸ்டார்ட் ஆகல.." என்றாள் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு!

அந்த ஆட்டோ அண்ணன் கர்ம சிரத்தையாய் வந்து இவளுடைய இரவல் வாகனத்தை இரண்டு மிதி மிதித்து ஸ்டார்ட் செய்து கொடுக்க,

"ரொம்ப தேங்க்ஸ்ண்ணா!" என்று வாயெல்லாம் பல்லாக நன்றி கூறிவிட்டு வாகனத்தில் ஏறி அமர்ந்து பறந்தாள் அவள்!

மார்க்கெட்டைக் கடந்து வெளியே வந்து இரண்டு பெரிய சாலைகளையும் பயத்துடனேயே கடந்து, வலது பக்கம் இருக்கும் தன் வீடிருக்கும் தெருவுக்குள் திரும்ப அவள் எத்தனிக்கவும் இடது பக்கத்திலிருக்கும் ரயில்வே கேட் திறந்து விட, ரயில் தண்டவாளத்தைக் கடந்து வாகனங்கள் வேகமாக வரவும் சரியாக இருந்தது! இவள் வலது பக்கம் திரும்ப முடியாமல் சில நிமிடங்கள் திணறிவிட்டு, பின்னர் அவசரமாகத் திரும்ப, வண்டி நிலை பிழன்று சரிந்தது! வண்டியில் மாட்டியிருந்த காய்கறிப்பை கீழே விழுந்து காய்கறிகள் தெருவில் சிதறியது!

"ஹையியோ... என் வெங்காயம்! வெங்காயம்! ஓடுது.. பிடி.. பிடி.." என்று இவள் தன் வண்டியை தூக்க முடியாமல் தூக்கி அவசர அவசரமாக ஓரமாக நிறுத்திவிட்டு, சிதறி ஓடும் வெங்காயங்களின் பின்னால் ஓடினாள்!

"பிடிங்க.. பிடிங்க.. ஏங்க.. பிடிங்க.." என்ற பெண்ணின் அலறல் கேட்டு அவசரமாகத் திரும்பிப் பார்த்த ஒரு நெடியவன், தன்னருகே தேவதை போல ஒரு பெண் ஓடி வருவதைக் கண்டு அதிர்ச்சியாகி, சுற்று முற்றும் பார்க்க, அவளை யாரும் துரத்தி வரவேயில்லை! அவளுடைய பொருளை யாரும் பறித்துக் கொண்டு ஓடுவது போலும் தெரியவில்லை! அப்புறம் இவள் ஏன் இப்படிக் கூவுகிறாள் என்று குழம்பினான்!

அவளோ இன்னும்.. பிடி பிடி என்று கூவிக் கொண்டே, ஓடி ஓடி கீழே தரையில் சிதறிக் ஓடும் வெங்காயங்களைப் பொறுக்குவதைப் பார்த்த பின் தான் அங்கு என்ன நடக்கிறது என்று அவனுக்குப் புரிந்தது!

வெங்காயங்கள் இவன் காலருகேயும் ஓடி வர, இவனும் அவற்றை எடுக்கத் தொடங்கினான்! எல்லா வெங்காயங்களையும் எடுத்தவள் அங்கு அவளுக்காக வேறு சிலரும் வெங்காயம் பொறுக்கியதைக் கண்டு, ரொம்ப தேங்க்ஸ்! ரொம்ப தேங்க்ஸ்! என்று ஒப்பித்தபடியே எல்லாரிடமும் வாங்கி தன் பையில் போட்டுக் கொண்டாள்.

இவனிடமும் வந்து ரொம்ப தேங்க்ஸ்ங்க என்று ஒப்பித்தபடியே வெங்காயத்தை வாங்கித் தன் பையில் போட்டுக் கொண்டு வந்து தன் இரவல் வாகனத்தில் மாட்டிவிட்டு வண்டியை கிளப்ப, மீண்டும் அது கிளம்புவேனா என்றது!

சில பல முறை உதைத்துப் பார்த்தவளுக்கு தோல்வியே கிடைத்தது!

கடவுளே! அப்ப மாதிரியே இப்பவும் எந்த இளிச்ச வாயனையாவது வண்டி ஸ்டார்ட் பண்ண அனுப்பி வைப்பா! உனக்கு புண்ணியமா போகும்! என்று மனதுக்குள் வேண்டியபடியே வண்டியை உதைத்தாள்!

அவளுடைய புலம்பலுக்கு செவி மடுத்த இறைவன் அந்த நெடியவனையே அவளுக்குத் துணையாக அனுப்பி வைத்தார்!

"வண்டி ஸ்டார்ட் ஆகலையா? நா வேண்ணா ஸ்டார்ட் பண்ணித் தரவா?" என்று அவளருகில் வந்தான் அவன்!

நா வேண்டினதும் இந்த இளிச்ச வாயனை அனுப்பினதுக்கு நன்றி கடவுளே! என்று உள்ளுக்குள் சிரித்தபடி வெளியே பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டவள்,

"ஹூம்.. ரொம்ப தேங்க்ஸ்ங்க.." என்று கூறி நகர்ந்து நிற்க, அவனும் அந்த வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்து கொடுத்தான்!

அவனுக்கு தலையசைத்து நன்றி சொல்லிவிட்டு வண்டியில் அதில் ஏறி அமர்ந்தவளைப் பார்த்து,

"வண்டி சர்வீஸ் பண்ணனும்னு நெனக்கிறேன்! எதுக்கும் இனிமே வண்டிய சர்வீஸ் பண்ற வரைக்கும் எங்கியும் எடுக்காதீங்க!" என்றான்!

"ம்.. சரிங்க..." என்ற சொல்லிக் கொண்டே வேகமெடுத்தாள் அவள்.

கட்டுனா இவள மாதிரி ஒருத்திய கட்டணும்.. என்ன ஃபிகரு.. என்ன கலரு...

அழகியே ...
மேரி மீ மேரி மீ அழகியே!

என்று காற்று வெளியிடை கார்த்தி போல முணுமுணுத்தபடி மெதுவாக நடந்து போனவன் அந்தத் தெருவின் கடைசியிலிருந்த பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நுழைந்து முதல் அடுக்கின் மின் தூக்கியருகே செல்ல, அங்கே அந்த வண்டிக்காரியும் நிற்கக் கண்டவன்,

ஆஹா.. அழகி... இந்த ஃப்ளாட்டுதானா? எப்டியாச்சும் பேசி நம்பர் வாங்கிடணும்... மனதுக்குள் நினைத்துக் கொண்டே அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

"நீங்க இந்த ஃப்ளாட்டா? எந்த வீடு?" என்று கேட்டான்!

"ஜீ 3!" என்ற அவள், அவன் எந்த வீடு என்று கேட்டுக் கொள்ளவில்லை!

"மார்க்கெட்டா?"

"ம்.. வெங்காயம் ரொம்ப விலையில்ல.. தங்கத்த விட காஸ்ட்லியா விக்குதே.. அதான்.. கீழ விழுந்தாலும் பரவால்லன்னு ஓடி ஓடி பொறுக்கி.. சாரி.. எடுக்க வேண்டியதா போச்சு.." என்று கூறி அசட்டுத்தனமாய் சிரித்து வைத்தாள் அவள்.

"ம்.. எப்டி வெங்காயம்லாம் கீழ கொட்டிச்சி?" கேட்டான்.

"அந்த டர்னிங்ல எப்பவும் ட்ராஃபிக் அதிகம்ல.. நா திரும்பறச்சே சரியா கேட் தெறந்திடுச்சு.. வண்டில்லாம் வந்ததும் திரும்ப முடியல.. நடுல கேப் கிடைக்கும்போது திரும்பறப்ப வண்டி பேலன்ஸ் தப்பிடுச்சு.." என்று அவள் விளக்கம் சொன்னாள்.

மின் தூக்கி வந்து நின்று திறந்தது. இருவரும் அதில் ஏறினார்கள்! மூன்றாம் தளத்துக்கான பொத்தானை அழுத்திவிட்டு அவன் தன் பேச்சை தொடர்ந்தான்!

"ஆனா.. உங்க வண்டி சரியாம இருந்திருந்தா.. உங்க பையும் விழுந்திருக்காது! வெங்காயமும் கீழ கொட்டியிருக்காது! உங்க வண்டி கண்டிஷன்ல இல்ல.. நாளைக்கே சர்வீஸுக்கு விடுங்க.. இல்லன்னா தினமும் நீங்க வெங்காயம் பொறுக்க.. சாரி.. எடுக்க வேண்டியிருக்கும்.." என்று கூறிவிட்டு,

ஐயோ.. லூசு.. லூசு.. அவ நம்பர கேக்காம வண்டிய பத்தி பேசறியேடா.. லூசு.. என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான்!

மின்தூக்கி இரண்டாம் தளத்தை கடந்து மேலே ஏறியது!

ஓ.. இந்தாளு இது என் வண்டின்னு நெனச்சுகிட்டானா? சூனா பானா! அப்டியே மெய்ன்டய்ன் பண்ணிக்க.. ஆங். ஆங்.. என்று தனக்குள் சிரித்துக் கொண்டவள்,

"ரொம்ப தேங்க்ஸ்ங்க.. எங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்றேன்.." என்றபடியே குனிந்து தன் பையைத் தூக்கினாள்.

வீட்டுக்காரரா? என்று அதிர்ந்தவன் அப்போதுதான் அவள் கழுத்தில் மின்னும் மஞ்சள் கயிற்றைக் கவனித்தான்.

மின்தூக்கி மூன்றாம் தளத்தில் நிற்க, அவள் அவனைப் பார்த்து தலையசைத்துவிட்டு வெளியேறினாள்! புது மஞ்சள் வாசம் அவள் நகர்ந்த பின்னரும் அவ்விடத்தில் சுற்றிக் கொண்டிருந்தது!




- தொடரும்....
 
உங்களுடைய "இவன் வசம்
வாராயோ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அன்னபூரணி தண்டபாணி டியர்
 
Last edited:
Top