Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

1

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் - 1
காலை மணி 6.30 செல்லில் அலாரம் கதறிக் கொண்டிருக்க ,மெல்லிதாக போர்வையை விலகி கையானது தணிச்சையாக அலாரத்தை அணைத்தது.
தன் இருகைகளை மேலே உயர்த்தி சோம்பலை முறித்து எழுந்தாள் மித்ரா என்கிற மித்ராங்கி.
கடவுளே இன்று நாள் எந்த பிரச்சனை இல்லாமல் நார்மலாக இருக்கனும் என கோரிக்கை வைத்து விட்டு, பாத்ரூமில் நுழைந்தாள்.
10 நிமிடம் சென்ற பின்பு, முகத்தை கழிவிட்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள்.பின்பக்க கதவை திறந்து தோட்டத்திற்கு சென்றாள்.
சூரியனின் கதிர்கள் அவள் தேகத்தை நிரப்ப, கிளிகள், குருவிகளின் சத்தம் ஒலிக்க இயற்கையான காற்று அவளுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது. அங்கே திண்னையில் அமர்ந்து மூச்சி பயிற்சி செய்ய ஆரம்பித்தாள்.
அது வீட்டின் பின்புறம் உள்ள சிறிய தோட்டம்.சில மரங்கள் மற்றும் ரோஜா,மல்லி போன்ற பூ வகைகள் வைத்திருந்தாள். வீடு பெரிய அளவில் இல்லை,ஒரு பெட்ரூம் மற்றும் பெரிய ஹால்,சமையல் அறை ,வீட்டின் முன்புறம் கொஞ்சம் காலியிடம் வீட்டை ஓட்டி ஒரு அறை.
பாரும்மா, எப்ப வந்திங்க- மித்ரா
இந்தாங்க காபி குடிங்க,கப்பை கையில் கொடுத்து விட்டு அவள் பக்கத்தில் அமர்ந்தார்.
மித்தும்மா நேற்று கொஞ்சம் பத்திரமாக இருக்க கூடாதா.இல்ல தாத்தா கூடவாச்சம் வந்திருக்கலாம் இல்ல.
நான் அப்படி ஆகும் நினைக்கில பாரும்மா.இனிமே நான் கவனமாக இருக்கேன் ஃபில் பண்ணாதிங்க ஓகே.
பார்வதி மூன்று வருடங்களாக அவங்க வீட்டில் சமையல் வேலை செய்யும் வயதான பெண்மணி.
நேத்து சரியா தூங்கல பாரும்மா ஒரே தலைவலி, இந்த காப்பி எங்க பத்தும்.
இது கூட பரவாயில,இன்னும் 2 மணி நேரம் கழிச்சு வரும் பாருங்க பெரிய தலைவலி .
சிரிச்சிட்டே பார்வதி, சொன்னாங்க தாத்தா அந்த பையனை பத்தி. சரி எனக்கு சமையல் வேலை இருக்கு நான் போறேன் கிச்சனுக்கு, நீ ரெடியாகு.
மித்ரா காபியை குடிச்சிட்டே நேற்று நடந்தை யோசிக்க ஆரம்பித்தாள்.
நேற்று நைட் மணி 10.00 க்கு தன் கடையை பூட்டி வழக்கமாக வரும் ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள்.
தீடிரென்று ஆட்டோ ஒரு சந்துப்போல் உள்ள தெருவில் இறங்கியது.அண்ணா ஏன் இந்த பக்கமாக போறீங்க.. எங்க போறீங்க.
ஆட்டோ ஒரு இடத்தில் நின்றது.
ஏன் நிறுத்தினிங்க அண்ணா,கேட்டுடே இருக்க சொல்ல 3 பேர் அவள் கையை பிடித்து ஆட்டோவிலிருந்து இழுத்தனர்.
ஏய் யாருடா நீங்க, ஆட்டோ அண்ணா எங்க போனிங்க-மித்ரா.
ஹேல்ப் , ஹேல்ப், ஹேல்ப் என கத்த ஆரம்பித்தாள்.
என்னடி ஒரே கூச்சல் போடற,உனக்கு எவ்வளவு கொழுப்பு டீ, என்னை வேலைவிட்டு தூக்கிட்ட, எல்லோரு முன்னாடியும் அசிங்கபடுத்தின உன்ன என்ன பன்னபோறேன் பாரு.
டேய் அசோக், நீ பண்ண தப்புக்கு போலீஸில சொல்லிருக்கணும் – மித்ரா.
உன்ன நாங்க மூனு பேரும் பங்கு போட்டுக்க போறோம்.இப்ப என்ன பண்ணுவ.ஏய் அவ வாயை அடைடா முதல ,கத்தி கூப்பாடு போடுவா.
அந்த ரோட்டில் பைக் வந்து கொண்டிருந்தது. இவர்களின் சத்ததை கேட்டு பைக் நிறுத்தி விட்டு இறங்கினான் வாசு.
டேய் என்ன பண்ணுறிங்க அந்த பொண்ணுக்கிட்ட சொல்லி கொண்டே அவர்களிடம் வந்தான்.
போடா இங்கிருந்து,ஒருத்தன் வாசுவை தள்ளிவிட வாசு இரண்டடி பின் சென்று தன்னை சுதாரித்தான்.
மூன்று பேரையும் நாலு அடி அடிச்சிட்டு கையை உதறி ஹீரோ என்ட்ரீ கொடுக்கனுன்னா நாலு பேர அடிக்கனும்மா அப்பதான் இந்த கதைக்கு என்னைய ஹீரோவா ப்ரமோட் பண்ணுவாங்க.
வாசு அவர்களை போட்டு அடித்து புரட்டி போட்டுக் கொண்டிருந்தான். அடி தாங்காமல் ஒட ஆரம்பித்தனர்.
ஆட்டோ ஒரேத்தில் பயந்து நின்றுக் கொண்டிருந்தாள் மித்ரா.
அவளருகில் வந்தான் வாசு.
---- அவள் விழியாக வருவான்
 
:D :p :D
உங்களுடைய "உன் விழியாய்
நான் வரவா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Top