Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

10 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!

Advertisement

ILANTHALIR VENBA

Member
Member
10 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!
இதுவரை : ஆதர்ஷ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட , நடந்தது அனைத்தும் கனவுபோல இருந்தது ஆதர்ஷிற்கு . எது நடக்க கூடாது என்று இவ்வளவு நாட்கள் பயந்திருந்தானோ அதுவே நடந்தது .
******************************************************************************************
அதன்பின்பு நடந்த எதையும் யோசிக்க கூட முடியாமல் , அருகில் தூங்கிக்கொண்டிருக்கும் சுடரின் மார்புக்கு நேராக தலையை வைத்து படுத்துகொண்டாள் அஷ்வரூதா (ஆதூ ) .. மறுபடியும் அவளது கடந்த கால நினைவுகள் துரத்த , மேலும் அழுத்தமாக அவனை அணைத்துக்கொண்டு உறங்க முயன்று , அந்த முயற்சியில் வெற்றியும் கண்டாள் .
இரவில் சுடருக்கு ஏதோ பாரமான ஒன்று தன்மேல் இருப்பதைப்போன்ற உணர்வு . கண்விழித்து பார்க்க , தன்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டு உறங்கும் ஆதூவின் முகம் தெரிந்தது . தனது விரல்களால் ஆதூவின் முகத்தினை வருடிக்கொண்டு இருந்தான் சுடர் .
திடீரெனெ ஆதூவிடமிருந்து குறட்டை சத்தம் வர சுடருக்கு சிரிப்பு தாளவில்லை . என்னதான் சிரிப்புடன் இருந்தாலும் , சுடருக்கு சற்று பயமாக இருந்தது . ஏனெனில் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்தால் மட்டுமே இப்படி குறட்டை வருமளவிற்கு தூங்குவாள் ஆதூ . எதனால் இப்படி இருக்கிறாள் என்று மனதினுள் யோசித்துக்கொண்டு இருக்க , சரியாக அதே நேரம் செந்நெறி தொட்டிலை நனைத்துவிட்டு சிணுங்கினான் . 6 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக தன்னை அணைத்துக்கொண்டு இருக்கும் ஆதூவை விட்டு பிரிந்து எழுந்த சுடர் , நெறியை தூக்கிவந்து இவர்களுக்கு அருகில் கட்டிலில் கிடத்தி முதுகை வருடி கொடுத்து தூங்கவைத்தான் . அப்பொழுதும் ஆதூவின் குறட்டை நின்றபாடில்லை . சுடர் அலுங்காமல் அவனது மொபைலை எடுத்து அதனை வீடியோ எடுத்து பதிந்துகொள்ள தவறவில்லை .
அடுத்தநாள் காலையில் முதன்முதலில் எழுந்தது ஆதூ தான் . எழுந்ததிலிருந்து மீண்டும் அந்த நினைவுகள் அவளை துரத்த , அன்று ஆதர்ஷ் வீட்டை விட்டு வெளியேறியதிலிருந்து நினைவை தொடர்ந்தாள் .
அன்று வெளியே வந்த அதர்ஸிற்கு அடுத்து என்ன செய்வதென தெரியவில்லை .. அவர்கள் ஊரிலிருந்து லக்னோ செல்லும் பேருந்தில் ஏறி தலையை முன்னாடியிருந்த சீட்டின் கம்பியில் கவிழ்த்தி அமர்ந்துகொண்டான் .
" உள்ளம் என்றும் எப்போதும் ...
உடைந்து போகக் கூடாது ..
என்ன இந்த வாழ்கையென்ற
எண்ணம் தோன்றக் கூடாது ...
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள் ...
காலப்போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள் ...
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும் ....
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும் ....
யாருக்கில்லை போராட்டம் ... ?
கண்ணில் என்ன நீரோட்டம் ... ? "


என்று அவனது அன்னை அடிக்கடி பாடுவது , இப்பொழுதும் கேட்பதை போன்று இருந்தது .
கையில் சுத்தமாக காசு இல்லாமல் பஸ் ஏரியாகிவிட்டது . அடுத்து என்ன செய்வதென யோசிக்கும் மனநிலையிலெல்லாம் அவன் இல்லை . கண்டக்டர் வந்து அவனிடம் காசு கேட்டபோது இல்லையெனவா கூற முடியும் , என்று யோசித்துக்கொண்டிருந்த அதே நிமிடம் கண்டக்டர் அவனிடம் டிக்கெட் எடுக்குமாரு தோலை தட்டி அழைத்தார் .
இவன் எழுந்து அவரது முகத்தை பார்க்க என்ன நினைத்தாரோ , இவனிடம் ஒரு பயணசீட்டை கொடுத்துவிட்டு , அடுத்த சீட்டிற்கு கட்டணம் வசூலிக்க சென்றுவிட்டார் . இவனை அழைத்ததும் அவர் பார்த்தது இவனது கழுத்திலிருந்த விலை உயர்ந்த சங்கிலி என்பது இவனுக்கு அப்பொழுது தெரியவில்லை . நான் சோகமாக முகத்தை வைத்திருப்பதால் இவர் என்னை கண்டுகொள்ளாமல் அடுத்தவரிடம் சென்று விட்டார் என்று எண்ணிக்கொண்டான் .
அனைவரிடம் பணத்தை வசூலித்து முடித்தவர் , பேருந்தின் விளக்கை அணைத்துவிட்டு இவனுக்கு அருகில் வந்து காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து பேச துவங்கினார் .
கண்டக்டர் : " என்ன ப்பா ... எதுக்கு அழுதுகிட்டு இருக்க ?? "
ஆதர்ஷ் அவரது கேள்வியில் கண்களை துடைத்துக்கொண்டு புன்னகைக்க முயன்றவாறு ... " ஒன்னும் இல்லை அங்கிள் .. " என்று சமாளிக்க ..
கண்டக்டர் : " அப்புறம் எதுக்கு கண்ண கசக்கிட்டு இருக்க ?? "
ஆதர்ஷ் : " ஒன்னும் இல்லை அங்கிள் . இப்போ அந்த பிரச்சனை சரி ஆகிருச்சு . "
கண்டக்டர் : " அப்டியா பா ... சந்தோசம் தானே . அப்புறம் எதுக்கு அழுதுகிட்டு இருக்க ?? விடு . என்ன ஆனாலும் பாத்துக்கலாம் . "
ஆதர்ஷ் : " ரொம்ப நன்றி .. என்கிட்ட காசு இல்லைனு தெரிஞ்சுதானே டிக்கெட்க்கு காசு கேக்காம போனீங்க ?? "
கண்டக்டர் : " அட ஆமா ப்பா .. மொசப்புடிக்குற நாயை மூஞ்சிய பாத்தா தெரியாதா ??? இந்த மாதிரி எத்தனை பசங்களை கடந்து வந்துருப்பேன் .. அதுனாலே தான் உன்னை பார்த்த உடனே எனக்கு தெரிஞ்சிது .. இப்போவாச்சும் என்னனு சொல்லுப்பா .. எதாவது பொண்ணு காதலிச்சு கழட்டி விட்ருச்சா ??? "
ஆதர்ஷ் : " இல்லையென இடம் வலமாக தலை ஆட்டினான் . "
கண்டக்டர் : " இல்லையே எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அப்டித்தான் வந்திருக்கனும் . ஏனா , வீட்டுல சண்டை போட்டுட்டு வர பசங்க சும்மா எல்லாம் வர மாட்டாங்க . அவங்க துணிமணி எல்லாம் எடுத்து ஒரு பையிலே அடைச்சிட்டு வருவாங்க .. அது மட்டும் இல்லை . அவங்க எல்லாரும் போறப்போ அழுது நான் பாத்தது இல்லை . நீ அழுதியே .. அதுனாலே சந்தேகமா இருக்கு . "
ஆதர்ஷ் மனதினுள் , " ரொம்ப அனுபவம் இருக்கும்போல .. " என்று நினைத்துக்கொண்டு .. " அப்டிலாம் இல்லை அங்கிள் .. வீட்டுலே கொஞ்சம் பிரச்சனை .. அதுனாலே கொஞ்ச நாள் தனியா இருக்கலாம்னு " என்று இழுக்க ..
கண்டக்டர் : " அட ஏன் பா அவங்களை தவிக்க வைக்குற ?? சும்மா கோவத்துல எதாவது சொல்லிருப்பாங்க . பெத்தவங்க என்னைக்காவது தன் புள்ளை நல்லா இருக்க கூடாதுனு நினைப்பாங்களா ?? "
ஆதர்ஷ் இதற்குமேலும் உறையாட விரும்பாமல் , அவரிடம் ... " ஆமாம் அங்கிள் .. " என்று முடிக்க பார்க்க , அவரோ விடுவேனா என ....
" ஆமா ப்பா . இப்போகூட பாரு என்னோட பொண்ணுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு . மாப்பிள்ளை 25 சவரன் தங்கம் போட்டா தான் கட்டிக்குவேன்னு சொல்றான் . ஆனா , எங்ககிட்ட வெறும் 23 பவுன் தான் இருக்கு . என் பொண்ணு மனசுக்கு வேற ரொம்ப பிடிச்சிருச்சு பையனை .. என்ன பண்ணுவேனோ தெரியலை .. " என்று அழுக ஆரம்பிக்க ஆதர்ஷிற்கு தர்ம சங்கடமாக இருந்தது .
" சரி கையிலிருந்த மோதிரம் இரண்டையும் கழட்டி கொடுப்போம் .. அதுவே இரண்டு பவுன் இருக்கும் . " என்று எண்ணி கொடுக்க .. அவரது மனமோ அந்த செயினில் நிலைத்திருந்தது .
" அட என்னப்பா நீ ... நான் பாத்துக்கிறேன் விடு ... பாரு ... இது எதோ ரொம்ப விலை அதிகமான மோதிரமாக இருக்கு .. இது எல்லாம் வேண்டாம் ப்பா .. " என்று மறுப்பதை போன்று பாவ்லா காட்டினார் .
கடைசியில் , அவரது கையில் மோதிரம் இரண்டையும் திணித்தவன் , லக்னோ பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி சுற்றும் முற்றும் பார்க்க , அங்கு அவன் கண்களுக்கு தமிழ்நாடு செல்லும் தனியார் பேருந்து ஒன்று கண்ணில் பட்டது . " சரி அங்க போய் பாத்துக்கலாம் " என்று பேருந்தில் ஏற எத்தனிக்க அப்பொழுதான் காசு இல்லாத முந்தையை பயண அனுபவம் அவன் மூளையில் உரைத்தது .
என்ன செய்வது ?? என்ன செய்வதென யோசிக்க ... " ஏன் ப்பா வழியிலே நின்னுட்டு இருக்க ... ஒன்னு ஏறு இல்லைனா இறங்கி போ .. " என்று குரல் கொடுத்தவாறு அங்கு வந்தார் அந்த பேருந்தின் டிரைவர் .
" இந்த பஸ்ல எனக்கு எதாவது வேலை கிடைக்குமா அண்ணா ?? " என்று தனக்கு தெரிந்த நனைந்து போன தமிழில் இவன் கேட்க ..
" ஏன் பா ... தமிழா ?? பாக்க வடநாட்டு அமுல் பேபி மாதிரி இருந்துட்டு இங்க எதுக்கு வேலை வேணுன்னு கேட்டு வந்தருக்க ??? " என்று அவர் சாதாரண தமிழில் பேச , தனது தாயுடன் மட்டுமே தமிழில் கலந்துரையாடி பழகிய அதர்ஷிற்கு அவர் சொல்வதை கிரகிக்க மிகவும் கஷ்டமாக இருப்பதாக உணர்ந்தான் . " எப்படி சமாளிக்க போகிறோம் " என்ற பயமும் மனதில் எழுந்தது .
" அதுவந்து .. வீட்டிலே சண்டை போட்டுட்டு வந்துட்டேன் .. எனக்கொரு வேலை மட்டும் கொடுங்க .. ப்ளீஸ் ... "
டிரைவர் : " இங்க பாருப்பா .. இந்த பேருந்தில் வேலை இல்லை . இந்த கம்பனில ஓடுற வேற ஒரு பஸ்லே கிளீனர் வேலை இருக்கு . பஸ் லாம் கூட்டி வெச்சுக்கணும் , அப்புறம் , ஆளுங்க கொண்டு வர பொட்டி , பை எல்லாத்தையும் வாங்கி பின்னாடி அடுக்கிக்கணும் . அந்த வேலை வேணுன்னா இருக்கு . கோவா போற பஸ் அது . உன்னாலே முடியும்ன்னா சொல்லு . எங்க பிரான்ச் ஆபீஸ் மேனேஜர் கிட்ட பேசுறேன் . " என்று கேட்க இவனும் சரி என்றான் .
இருவரும் மேனேஜரிடம் பேசிவிட்டு அவரது ஒப்புதலும் கிடைத்தாயிற்று . வேலையை எப்படி சமாளிப்பேனோ என்று கலக்கத்தில் இருந்தான் ஆதர்ஷ் .
"காட்டுத்தீ போல கண்மூடித்தனமாய் ...
என் சோகம் சுடர் விட்டு எரியுதடா ...
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம் ....
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா ....
யாரிடம் உந்தன் கதை பேச முடியும் ....
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும் ....
பச்சை நிலம் பாலைவனம் ஆனதடா ....
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா ....
காலம் கூட கண்கள் மூடிக் கொண்டதடா ....
உன்னை விட கல்லறையே பக்கமடா .... ஆ ஆ .... "

அடுத்த பகுதி :
" டேய் .... தூக்குங்க டா இவனை சாரி .... இவளை .... " என்று ஒருவன் சொல்ல , அங்கிருந்த அனைவரும் குலுக்கென சிரித்தனர் .
" இவளை இங்கயே வெச்சு எதுனா பண்ணி மாட்டிக்கிட்டா என்ன பண்றது ?? அதுனாலே , இவளுக்கு கொஞ்சம் சரக்கை தெளிச்சுவிட்டு பெல்லாரி (bellary ) போற வண்டில ஏத்தி விட்ருங்க .. டிரைவர் கிட்ட மயக்க ஸ்பிரே கொஞ்சம் கொடுத்துறங்க டா .. நான் நாளைக்கு காலையில பெல்லாரி வந்துருவேன் .. வந்து இவனை பாத்துக்கிறேன் .. " என்று கூறி தனது கடமை முடிந்ததென , காரிலேறி சென்றுவிட ... அதர்ஷின் அடுத்த பயணம் துவங்கியது .
10 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!
 
டிக்கெட் கொடுத்துட்டு இப்படி நடத்துகிறது சரியா.... அது உண்மையா இருந்தா கூட நியாயம் இல்லையே.... ஆது யாரு கிட்ட மாட்டி இருக்கா
 
டிக்கெட் கொடுத்துட்டு இப்படி நடத்துகிறது சரியா.... அது உண்மையா இருந்தா கூட நியாயம் இல்லையே.... ஆது யாரு கிட்ட மாட்டி இருக்கா
அடுத்த எபிசொட் போஸ்ட் பண்ணிட்டேன் சகோ
 
Top