Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

10. மயங்கினேன் மை விழியிரண்டில்

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
சரணின் கேள்விக்கு ஏதோ கைகளை அசைத்து பதில் கூறிய நேத்ராவை துரத்திக் கொண்டு ஓடினான் சரண். முதலில் புரியாமல் விழித்த நிமல் பின் புரிந்ததும் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான்.

ஏய் நேரா.... நில்லு...... கைல கிடைச்ச உன்ன என்ன செய்றேன் பார்... என்று துரத்தியவன் அவளை பிடித்து விட, அவள் கைகளில் நறுக்கென்று கிள்ளி வைத்தான். பின் சிரிப்புடனே அவளின் தலையை வருடி விட்டவன் வா என அழைத்துக் கொண்டு நிமலிடம் சென்றான்.

அது வேற ஒன்னும் இல்ல பா, நம்ம நேரா... அவனிடம் சைகையில் உன்ன போய் அவ தேடி வந்தா பாரு, அவள சொல்லணும். அப்படியே நயன்டீஸ் கிட்ஸ்னு அடிக்கடி நிருப்பிக்கிற டா. மடச்சாம்பிரானி..... மடச்சாம்பிராணி... கொக்குமண்டை..... கொக்குமண்டை. என்பதை தான் சைகையில் கூறினாள்.

முதலில் அவளின் இந்த நீள பேச்சு புரியாமல் விழித்த சரண் பின் புரிந்ததும் தான் துரத்த ஆரம்பித்தான்.

நிமல் சரணை மேலிருந்து கீழ் வரை ஒருமுறை பார்த்தவன், ஒரு பொண்ணு வம்பு வழக்குதுனு சொல்லுறியே உனக்கே இது ஓவரா தெரியல.... நிஜமாவே நீ மடச்சாம்பிரானி தான்டா. ஆமா அம்மு குட்டி அதென்ன கொக்கு மண்டை. புது பெயரா இருக்கே.... புதுசா இருந்தாலும் நல்லா இருக்கு. மீண்டும் நிமல் சிரிக்கத் தொடங்கினான்.

சரண் மீண்டும் அப்பெண்ணை பற்றியே கேட்க, நிமலன் மீண்டும் அவனை முறைத்து உண்மையாவே உனக்கு அவளை தெரியாது அப்படித்தானே....... போதும் டா உன்னோட நடிப்பு. எல்லாத்தையும் எங்க கிட்ட இருந்து மறச்சிட்டு..... இப்போ அவ யாருனு எங்க கிட்டயே கேக்குற...

ஆழ்ந்த மூச்சை விட்டவன்...... ஆமா அவளை முன்னாடியே எனக்குத் தெரியும்.

அவளோட பேர் புகழினி. நம்ம நேராவோட ப்ரெண்ட். நேரா பர்தா போட்டு விளையாட காரணம் அவள் தான். நாங்க ஏற்கனவே நெறய பேசியிருக்கோம்.......... காதலர்களாக. ( இது எப்போ??)

ஆனா நேரா காணாம போனதுக்கு அப்புறம் என்னால வேற எதையும் யோசிக்க முடியல, அதான் ரெண்டு பேரும் பேசிக்கமா இருந்தோம். ஆனா இப்போ மறுபடியும் புகழ்...... அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. அவனும் இரண்டு வருட காதலை நெஞ்சில் சுமந்து தன் நட்பை தேடியவன் தானே.

யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள் நினைத்து வாழ்ந்தவன் இன்று தன் பழைய நினைவை நினைத்து சோர்ந்திருக்க, நேரா தங்கையாய் அவனை அணைத்து ஆறுதல் படுத்தினாள்.

மீண்டும் நிலையை சகஜம் ஆக்கியவன் நிமல் நேராவுடன் ஆனந்தமாய் பேசிக்கொண்டிருக்க.....நிமலின் அன்னை கூறிய செய்தியில் காதல் பறவைகள் இரண்டும் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தன. கோவிலுக்கு சென்று வந்த நிமலின் அன்னை நிமலனுக்கும் நேத்ராவிற்க்கும் வரவேற்பு வைக்க நல்ல நாள் பார்த்து வந்ததை கூற, அனைவருக்கும் ஆனந்தமாய் இருந்தது.

வரவேற்புக்கான அனைத்தையும் செய்து கொண்டிருக்கும் இடையே மேலும் சில காரியங்களும் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அது முற்றிலும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டது.

ஆனந்தமாய் இவர்கள் நாட்களை கடத்த ரகுவும் தன் திட்டத்தை செயல்படுத்த அவர்களின் வரவேற்பு நாளை தான் எதிர்பார்த்திருந்தான். சித்து.... நிமல் மற்றும் சரனுக்கு தெரியாமல் நிமலின் அன்னையோடு பேசி தான் கொண்டிருந்தாள். ரகுவின் அறிவுரைப்படி அவனின் திட்டத்தை நிறைவேற்றி விட்டால் மொத்த பணத்தையும் அடைய காத்துக் கொண்டிருந்தான் அவன். பணம் மட்டும் தான் எல்லாம் என்று நினைத்தவன், ஒன்றை மட்டும் அறிய தவறினான்.... நடப்பவை அனைத்தும் தனக்கு என்ன திருப்பி தர காத்திருக்கிறது என்பதை. அதை யார் தான் அறிய முடியும். எவ்வளவு தூரம் வரை அவனும் அவன் திட்டமும் போகும் என்று நாமும் பார்க்கலாம்.

இதற்கிடையே புகழும் சரணின் குடும்பத்தில் நல்ல பெயரை வாங்கிக் கொண்டிருந்தாள். அவர்களின் காதலும் வெற்றி பெறும் நிலையை எட்டி இருந்தது.

அனைவரும் எதிர்பார்த்த வரவேற்பு நாள் வந்தது. எல்லோரும் பரபரப்புடன் கிளம்பிக் கொண்டிருக்க, ஆனந்தமாய் இருக்க வேண்டிய நேத்ரா.... முகத்தில் கவலையுடன் கண்ணீர் துளிகள் கண்ணை நிரப்ப அவளது அறையில் அமர்ந்திருந்தாள். அவளை காண வந்த நிமலின் அம்மா..... ஏன் மா இப்போ கண்ணு கலங்கிற...... அவளின் கண்களிலே அவளின் ஏக்கத்தை புரிந்து கொண்டவர், அவளை நெஞ்சோடு அணைத்து.... அம்மா நான் இருக்கேன் டா...... எதுக்கும் கவலை படாமல் வா...என்று ஆறுதல் கூறி வெளியே அழைத்துச் சென்றார். நேத்ராவிற்க்கு இப்போது அன்னையின் அரவணைப்பும், தந்தையின் உறுதுணையும் தேவை என தோன்றியது. கடவுள் இன்னும் தனக்கு என்ன என்ன செய்ய போகிறானோ, என்று மனம் கலங்கி தவித்து கொண்டிருக்க....

அவளின் காதல் கணவன்... அன்பு காதலன்.... மனம் கவர் கள்வன்.... நிமலன்.... அவளின் துயர் தீர்க்க அவள் முன் புன்னகையுடன் வந்து நின்றான்.

தன் முன் புன்னகையுடன் வந்து நின்ற நிமலனின் செயலில் உள்ளம் நிறைந்து விழிகளில் காதலை தேக்கி புன்னகை முகமாய் அவனை அணைத்துக் கொண்டாள் நேத்ரா.

ஒரே குழந்தை என்று பாராட்டி சீராட்டி வளர்த்தனர் நேத்ராவின் தாய் தந்தையர். அவ்வளவாக யாருடனும் பழகாமல் அவர்களின் கைவளைவில் வளர்ந்ததால் தான் என்னவோ பயந்த சுபாவமும், அதீத செல்லத்தில் விளையாட்டுத் தனமுமாய் வளர்ந்து விட்டாள். அவளுக்கு அப்படி எல்லமுமாய் இருந்தவர்கள் இன்று தனக்கு நடக்கும் விழாவில் இல்லாமல் இருப்பது வேதனையை தான் தந்தது. இதே விழா அவர்கள் இருந்து நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்க, கண்ணீர் தான் வந்தது அவளுக்கு.

நிமலின் தாயின் அருகில் அழுது கொண்டிருந்த நேத்ராவின் முன் சென்ற நிமல் தன் கையிலிருந்த ஒரு பெரிய பார்சலை நீட்டினான். அவளோ அழுது கொண்டே அதை பிரிக்க அதில் நேத்ரா நிமல் இருவரும் நேத்ராவின் தாய் தந்தையுடன் சேர்ந்து இருக்கும் படம் அழகாக வரையப்பட்டிருந்தது. உண்மையாக இருவரும் எப்படி இருந்தனரோ அப்படியே அந்த படம் இருந்தது. அதை அணைத்து கண்ணீர் விட்டவள்..... அதனுடன் சேர்த்து தன் நிலை புரிந்த தன்னவனையும் அன்பாய் அணைத்துக் கொண்டாள் நேத்ரா. வெகுநேரம் அப்படியே இருக்க,

சரணின் அழைப்பில் தான் இருவரும் தன்னிலை புரிந்து விழா நடக்கும் இடத்திற்கு சென்றனர். ஒருமுறை இருவரும் பார்த்து விழிகளிலே பேசிக் கொண்டு அதன்படியே அனைத்தையும் நடத்த தயாராகினர். வந்திருக்கும் எல்லோருக்கும் தங்களின் திருமணத்தை பற்றி கூறிய நிமல், நேத்ராவை பற்றியும் கூறினான். கூடவே ஒரு அதிர்ச்சி செய்தியையும் கூறினான். கேட்டவர்களுக்கும் நமக்கும் அது சாதாரணமாக இருந்தாலும் செய்திக்கு சம்மந்தப்பட்டவனுக்கு அதிர்ச்சி தானே.

ஆம், இன்று சரணின் திருமண விழாவும் நடைபெறும் என்று கூறிவிட, சரனோ அதிர்ச்சியில் மயங்கியே விட்டான். பாவம் கூடவே இருந்தவனுக்கு நிமல் கூறவில்லை போல.( அவ்வளவு ஏன் இந்த நிமல் என்கிட்ட கூட சொல்லல?) மயக்கம் தெளிந்து அமர்ந்த சரனை அழைத்து கொண்டு நிமல் மேடையேற, புகழை அழைத்துக் கொண்டு நேத்ரா மேடை ஏறினாள். நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரின் முன்னிலையிலும் மங்கள நாணை அவன் கையில் குடுக்க, தனது தாய் தந்தையின் சம்மதத்தோடு மூன்று முடியிட்டு புகழை தன் மனைவியாய் மாற்றிக் கொண்டான் சரண். தன் நண்பனை அணைத்துக் கொண்ட நிமல், எங்களுக்காக உன் காதலை மறக்க நினைச்ச உனக்கு இது என்னோட சின்ன அன்பு பரிசு என்று நேத்ரா அவளின் தாய் தந்தையுடன் வாழ்ந்த வீட்டை பரிசாக அளித்தான். நிமலின் செயலில் அதிர்ந்து சரண், நேத்ராவை பார்க்க, அவளோ சிரித்த முகமாய் நிமலனை கை காட்ட... அவனே அவளுக்காக பேசினான்.

நேத்ரா முழு மனசோட, அவளோட அண்ணனுக்கு சேர வேண்டிய உரிமையை குடுத்துட்டா. இது நாங்க ஏற்கனவே எடுத்த முடிவு தான். உனக்கு சர்ப்ரைசா இருக்கட்டும் அப்பிடின்னு தான் எல்லாத்தையும் மறைத்தது. இது எல்லாம் உன் நேரா ஐடியா தான் என்று அவன் சொல்லி முடிக்க கண்ணீருடன் நேராவை அணைத்துக் கொண்டான் அவளின் அண்ணன்,நண்பன் சரண்.

இப்படியொரு நட்பு கிடைக்க இருவருமே குடுத்து வைத்திருக்க வேண்டும். ஏன் எல்லோருமே குடுத்து வைத்திருக்க வேண்டும். சுயநலமற்ற அன்பு காட்டும் ஓர் உயிர் நம்முடன் இருந்தால், அதுவே மிகப்பெரிய சொத்து. அப்படியொரு நட்போ, உறவோ கிடைக்கப்பெற நாம் எல்லோருமே வாழ்க்கையை வென்றவர்கள்.

சுற்றமும் முற்றமும்
யாருமே இன்றி

வாழ்ந்திடும் வீட்டினில்
தெய்வம் இல்லை

பாசங்கள் நேசங்கள்
ஏதுமே இன்றி

வாழ்ந்திடும் வாழ்க்கையோ
வாழ்க்கையில்லை

பிரிந்தே நாம்
வாழ்ந்திடும் போதிலும்

நினைவுகள் நம்மை
சேர்த்திடுமே

அழகாய் பூ பூத்திட வேண்டியே
வேர்கள் நீர் ஈர்த்திடுமே

இன்னோர் ஒரு ஜென்மம்
அது கிடைத்தாலும் கூட

இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட வரம் தேவை.....

கண்ணீர் காட்சிகள் முடிந்திட, நிமலன் - நேத்ரா, சரண் - புகழினி ரிசப்ஷன் இனிதே துவங்கியது. நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் வாழ்த்துகள் கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விழாவிற்கு பத்மாவதி அம்மாவும் வந்திருந்தார். அன்னையாய் நேத்ராவிற்க்கு அரவணைப்பு தந்து காத்தவர் அவளுக்கு அன்னையாகவே அவள் கையில் தங்கத்தில் செய்த குங்கும சிமிலை குடுத்து தன் வாழ்த்தை தெரிவித்து கொண்டு கிளம்பும் வேளையில், சித்து கைகளில் துப்பாக்கியுடன் மேடை ஏறினாள். சித்துவை தாண்டிச் சென்ற பத்மாவதி அதை பார்த்து விட அதற்குள் அவள் நிமலனை நெருங்கி இருந்தாள்.

எல்லோரும் சுதாரிக்கும் முன்பே பெரும் சத்தத்துடன் தோட்டா நெஞ்சில் பாய்ந்தது...............




தொடரும்............prabhaas ???
 
Top