Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

11 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!

Advertisement

ILANTHALIR VENBA

Member
Member
11 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!
இருவரும் மேனேஜரிடம் பேசிவிட்டு அவரது ஒப்புதலும் கிடைத்தாயிற்று . வேலையை எப்படி சமாளிப்பேனோ என்று கலக்கத்தில் இருந்தான் ஆதர்ஷ் .
மேனேஜர் நேரில் வந்து ஒருமுறை இவனை பார்த்து விசாரித்துக்கொண்டு அடுத்த 1 மணி நேரத்தில் கோவா செல்லும் பேருந்தில் பயணித்திருந்தான் ஆதர்ஷ் .
அங்கு செல்லும்போது அந்த டிரைவர் இவனிடம் இவனை பற்றி விசாரிக்க , இவனோ அவரிடம் பிடி கொடுக்காமல் பதில் சொன்னான் . ஒரு நிலைமைக்கு மேலே சளித்து போனவர் ... அவரது கதையை கூற துவங்கினார் .
எனக்கு ஒரு பொண்ணு , ஒரு பையன் . லவ் மேரேஜ் தான் தெரியுமா ??? அப்போ நான் கோவை டு ஆம்பூர் பஸ் கண்டக்டரா இருந்தேன் . அவ கோவைல ஒரு பெரிய காலேஜ்ல ஏதோ படிச்சா . வாராவாரம் வெள்ளிக்கிழமை சாயுங்காலமும் , திங்கள்கிழமை காலையும் எங்க பஸ்ல வருவா . ரொம்ப பெரிய இடத்து பொண்ணுன்னு பாத்தாவே தெரியுற மாதிரி தான் இருப்பா . இன்னும் ஈஸியா சொல்லனும்னா அப்போ இருந்த லாலா கடை நெய் மைசூர்பாகு மாதிரி இருப்பா . எப்படியோ ஒருநாள் பேச ஆரம்பிச்சுட்டா . எனக்கு தலையும்புரியலை காலும் புரியலை . அடுத்த வாரமே பிரச்சனை . அவ வீட்டுல மாப்பிளை பாத்துட்டாங்கனு சொன்னா . என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க ... அப்டினு வந்து நின்னா .. யாருமே இல்லாத அனாதைக்கு இப்படி ஒரு பொண்ணு வந்து நின்னா சொல்லவா வேணும் ??? அப்படி இருந்துச்சு ... எனக்கு நீதான் வேணும்னு சொன்னா ... அங்கிருந்து தப்பிச்சு கல்யாணம் பண்ணிட்டு லக்னோ வந்தோம் . அப்புறம்தான் , பஸ் ஓட்ட கத்துக்கிட்டேன் . அப்புறம் அப்டி அப்டியே பையன் , பொண்ணுன்னு உலகம் மாறிடுச்சு . கல்யாணத்துக்கு முன்னாடியே சூப்பரா சமைச்சு காத்துக்கிட்டாளாம் . உனக்கு என் பொண்டாட்டி வைக்கிற கம்பஞ்சோறும் கூட்டானமும் கொண்டுவந்து தரேன் . சாப்பிட்டு பாரு அப்டி இருக்கும் என்று சப்புக்கொட்டி இவனிடம் சொன்னார் . ஆம்பளைங்க நமக்கு சாப்பாடு ருசி கொடுக்குற சந்தோசத்தை வேற எதுவும் கொடுக்காது தம்பி என்று பேசிக்கொண்டே வந்தார் .
எனக்கும் தான் எல்லாமே சமைக்க தெரியும் .. ஒருவேளை நமக்கு சின்ன வயசுலயே ஒரு பொண்ணோட உணர்வுகள் வந்துருச்சோ ?? என்று மனதினுள் யோசித்து பார்த்தான் . எதுவும் புரியாமல் இருக்க . " எப்போ வந்திருந்தா என்ன ?? இப்போ நான் எனக்கு பிடிச்ச வாழ்க்கை தான் வாழ போறேன் . அந்த அளவுக்கு நான் அதிஷ்டசாலியா இருக்கேனேன்னு நினைச்சு சந்தோசமா இருக்கு என்று மனதினுள் கடவுளுக்கு நன்றி கூறினான் ஆதர்ஷ் . பேசிக்கொண்டு வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை . அவ்வளவு நேரம் கடந்திருந்தது .
இடையில் ஒரு கடையில் நிறுத்தி காலை உணவை முடித்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர் .. அப்பொழுதுதான் ஆதர்ஷ் அவரிடம் அவனது கதையை கூற ஆரம்பித்தான் .
இவன் நடந்தது அனைத்தையும் கூறி முடித்தவுடன் அவரது முகம் யோசனையில் ஆழ்ந்திருந்தது . இவனிடம் எந்த பதிலையும் கூறவில்லை . ஆதர்ஷிற்கு ஒரு மாதிரியாக இருந்தது . அவன் கூறுவதை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தவர் இப்பொழுது ஒன்றுமே பேசாமல் இருப்பது இவனுக்கு சலிப்பை தந்தது .
ஓரிரண்டு நொடிகளில் பேச துவங்கினார் அவர் ..
" தம்பி .. உனக்கு நான் சொல்றது பிடிக்காம கூட போகலாம் . ஆனா எனக்கு என்ன தோணுதுன்னு நான் சொல்லிடுறேன் . ஏனா , நீ என்னை நம்பி என்கிட்ட இந்த முக்கியமான விஷயத்தை சொல்லிருக்க . அதுனாலே இவ்ளோ சொல்றேன் . நல்லா யோசிச்சுதான் சொல்றேன் . நீ உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து எடுத்த இந்த முடிவு சரியான விஷயம் தான் . ஆனா , உன் வீட்டுலே இருக்கவங்ககிட்ட நீ முன்னாடியே இதை பத்தி பேசிருக்கலாம்னு தோணுது பா . திடிர்னு நான் உன்னை " இப்போ இந்த பஸ்ல இருந்து இறங்கி போடா " னு சொன்னா உனக்கு எப்படி இருக்கும் யோசிச்சு பாரு .. அதே மாதிரிதானே அவங்களுக்கும் இந்த விஷயம் திடிர்னு தெரிஞ்ச உடனே அதிர்ச்சியா இருந்துருக்கும் . யோசிச்சு பாத்தியா அவங்க நிலைமையை ?? அந்த அதிர்ச்சியை தாங்கிக்குற அளவுக்கு நீ அவங்களுக்கு அவகாசம் கொடுக்கல . அவங்க போ னு சொன்னா நீ வந்துருவியா ??? அவங்களுக்கு புரிய வைக்க எதாவது முயற்சி பண்ணியிருக்க வேண்டாமா ?? கொஞ்சமாவது யோசிச்சு பாத்தியா ???இப்போகூட அவங்க உன்னை தேடிட்டு இருக்கலாம் . ஒரு முறை அவங்க கிட்ட பேசி பாக்குறியா ???? " என்று கேட்டார் .
அவனுக்கும் அதுவே சரி என்று மனதுக்கு பட, " ஒருமுறை பேசிப் பார்ப்போம் .. "என்று அவரிடமே அலைபேசியை வாங்கி அவனது தாய்க்கு அழைத்தான் . அழைப்பு ஏற்கப்பட்டதும் இவன் " ஹெலோ .. " என்று பேசுவதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட , இவன் என்ன செய்வதென தெரியாமல் திகைக்க ...
" இன்னொரு தடவை முயற்சி பண்ணு ப்பா .. " , என்று இவனது தொளைத்தட்டிகொடுத்து அவர் கூற ... இவனும் முயற்சிதான் . இம்முறை அழைப்பு ஏற்கப்படாமல் துண்டிக்கப்பட , அடுத்த முறை இவன் முயன்றபொழுது சுவிட்ச் ஆப் என்று வந்தது .
" நிழலினை நிஜமும் பிரிந்திடுமா .. ?
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா .. ?
கருவறை உனக்கும் பாரமா அம்மா ..
மீண்டும் என்னை ஒரு முறை ..
சுமப்பாய் அம்மா ..
நடமாடும் சாபமா ..
நான் இங்கே இருக்க ..
விதி செய்த சதியா தெரியலம்மா ..
கடல் தூக்கும் அலையும் ..
கடலில் தான் சேரும் ..
அது போல என்னையும் சேத்துக்கம்மா ..
உன் பிள்ளை என்று ..
ஊர் சொல்லும் போது ..
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன் ..
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா ..
மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா ..
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா ..
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா .. ஆ ..
திசை எல்லாம் ....
எனக்கு இருளாகி கிடக்கு ....
எங்கேயோ பயணம் தொடருதம்மா .. !
என்னோட மனசும் ..
பழுதாகி போச்சு ....
சரி செய்ய வழியும் தெரியலம்மா .... "

அவன் தாயின்மேல் வைத்த நம்பிக்கையை அவனது தந்தையின்மேல் வைத்து அவருக்கு ஒருமுறை இவன் முயன்றிருந்தால் ஆதர்ஷ் பின்னாளில் பட போகும் துன்பங்களிலிருந்து தப்பித்து இருந்திருப்பான் .
அதன் பிறகு ஆதர்ஷ் அமைதியாக இருந்துவிட்டான் . அவர்களது பயண இலக்கை அடைந்தவுடன் , இவனிடம் சொல்லிக்கொண்டு டிரைவர் குளித்துவிட்டு வருவதாக சென்றுவிட , ஆதர்ஷ் அவனது வேலையை தொடங்கியிருந்தான் .
அங்கிருந்த சீட்களில் ஏதேனும் பொருட்கள் விடுபட்டு உள்ளனவா என்று ஒரு முறை ஆராய்ந்தான் . அப்படி எதுவும் இல்லாமல் போக , அங்கிருந்த மெத்தைகளிலிருந்த போர்வைகளை மடித்து வைத்தவன் , அந்த பேருந்தை சுத்தப்படுத்த துவங்கினான் . அப்பொழுது அவனுக்கு பின்னால் சில காலடி ஓசைகள் கேட்க , அவன் திரும்பி பார்ப்பதற்குள் அவனுக்கு நினைவு தப்பியிருந்தது .
கண்விழித்தபோது அவன் இருந்தது ஒரு அழகான பீச் ஹவுஸ் . நான்கு ஆண்கள் குடித்துக்கொண்டிருக்க , இவன் மெத்தையில் கிடத்தப்பட்டிருந்தான் . வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருக்க , இவன் என்ன முயன்றும் அந்த துணியை வெளியே தள்ள முடியவில்லை .
இவனது முயற்சியை பார்த்து அங்கிருந்த நால்வரும் எக்காளமிட்டு சிரிக்க .. எதற்காக தன்னை இங்கு கொண்டு வந்துள்ளனர் என்பதே புரியாமல் திணறினான் ஆதர்ஷ் .
அப்பொழுது உள்ளே நுழைந்தனர் இருவர் . அதில் ஒருவன் நேற்று இவன் வந்த வண்டியில் பயணித்தவன் என்பது பார்த்த உடனே இவனுக்கு பிடிபட்டது . அவனையே இவன் கூர்ந்து பார்க்க ..
" என்ன டா செல்லம் இப்படி பாக்குற ?? கண்டுபிடிசிட்டியா என்னை ?? " என்று ஆதர்ஷிடம் கேட்க , ஆதர்ஷ் ஆமென தலையை மேலும் கீழுமாக ஆட்டினான் .
" அப்டி போடு டி .... அப்போ என்னை எல்லாம் கவனிச்சிருக்க .. அப்புறம் டி மாமா உங்கிட்ட வரட்டுமா செல்லம் .. ? அப்டியே உன் ரோஸ் கலர் தோலு என்னை கட்டி இழுக்குது டி .. என்னதான் நீ பொண்ணு இல்லைனாலும் , உன்னை மாதிரி இருக்கவளுங்க எல்லாருமே செம்ம கிக் கொடுக்கறீங்க டி ... " என்று அவன் அசிங்கமாக பேச ஆதர்ஷிற்கு இவனுக்கு எப்படி இந்த விஷயம் தெரிஞ்சிருக்கும் என்பதே பெரிய கேள்வியாக இருந்தது .
அவன் ஆதர்ஷிற்கு அருகில் வந்தமர்ந்து இவனது வழுவழுப்பான கன்னத்தை தடவி பார்த்தான் . ஆதர்ஷ் முகம் சுளிக்க .. இவளது வாயிலிருந்த துணியை எடுத்து விட்டான் அவன் .
"உனக்கு எப்படி டா தெரியும் .. ?? " என்பதே ஆதர்ஷ் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையாக இருந்தது .
" ஹாஹாஹா .... நேத்து நைட் நீ சொன்னதை எல்லாம் அந்த டிரைவர் மட்டுமா கேட்டான் ... நானும் இல்லை கேட்டேன் .. " என்று சொல்லி நக்கலாக சிரித்தான் . மறுபடி அவன் பேச வர .. அதற்குள் அவர்கள் தலைவன் கண்ணசைக்க மயக்க மருந்து நிறைந்த கைக்குட்டையை அதர்ஷின் மூக்கில் வைத்து அழுத்தி இருந்தனர் .
" டேய் .... தூக்குங்க டா இவனை சாரி .... இவளை .... " என்று அவர்கள் தலைவன் சொல்ல , அங்கிருந்த மீதி ஐவரும் குலுக்கென சிரித்தனர் .
" இவளை இங்கயே வெச்சு எதுனா பண்ணி மாட்டிக்கிட்டா என்ன பண்றது ?? அதுனாலே , இவளுக்கு கொஞ்சம் சரக்கை தெளிச்சுவிட்டு பெல்லாரி (bellary ) போற வண்டில ஏத்தி விட்ருங்க .. டிரைவர் கிட்ட மயக்க ஸ்பிரே கொஞ்சம் கொடுத்துறங்க டா .. நான் நாளைக்கு காலையில பெல்லாரி வந்துருவேன் .. வந்து இவனை பாத்துக்கிறேன் .. " என்று கூறி தனது கடமை முடிந்ததென , காரிலேறி சென்றுவிட ... அதர்ஷின் அடுத்த பயணம் துவங்கியது .
அடுத்து வருவது :
" ஹே ... என்ன பா இப்படி செஞ்சு வெச்சுருக்க . என்மேல அப்படி என்ன உனக்கு கொலைவெறி ?? " என்று ஆதூ கேட்க ..
" இங்க பாரேன் உன் மூக்கு எப்படி விடைச்சிருக்குனு ..... " என்று ஆதூவை கலாய்த்துக்கொண்டிருந்தான் சுடர் .
 
அடபாவிங்களா குழந்தைகளுக்கும் பொண்ணுக்கு தான் பாதுகாப்பபு இல்லனு பாத்த இவுங்களை கூட நிம்மதியா விட மட்டுறீங்களே டா.... போன் அட்டென்ட் பண்ணது ஆதுவோட அண்ணன் போலவே அம்மாவா இருக்க வாய்ப்பே இல்ல.... பகல்ல பக்கம் பார்த்து பேசு இரவில் அது கூட பேசாதனு சொல்லுறது சரி தான்.... இப்போ எங்க கடத்திட்டு போக போறாங்களோ ....
 
அடபாவிங்களா குழந்தைகளுக்கும் பொண்ணுக்கு தான் பாதுகாப்பபு இல்லனு பாத்த இவுங்களை கூட நிம்மதியா விட மட்டுறீங்களே டா.... போன் அட்டென்ட் பண்ணது ஆதுவோட அண்ணன் போலவே அம்மாவா இருக்க வாய்ப்பே இல்ல.... பகல்ல பக்கம் பார்த்து பேசு இரவில் அது கூட பேசாதனு சொல்லுறது சரி தான்.... இப்போ எங்க கடத்திட்டு போக போறாங்களோ ....
ennoda kathaiyayum padichu ivlo porumaiya comment pandratha paakurapo solla mudiatha alavuku santhosa iruku ....
 
Top