Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

13. மயங்கினேன் மை விழியிரண்டில்

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
நிமல் நேத்ராவ அடிச்சது கொஞ்சம் ஓவர் தான் இல்ல..... நான் கூட கட்டி அணச்சு கண்ணீர் விடுவான் இல்ல முத்தம் கொடுத்து கொஞ்சுவானு பார்த்தா இப்பிடி சட்டுனு அடிச்சுபுட்டான்...... எல்லோரும் கோபமாவே இருங்க……... ஏன் அடிச்சன்னு கேட்க.

நினைவு திரும்பி எழுந்த நேத்ராவை உயிர் திரும்பிய உடல் போல் பார்த்துக் கொண்டிருந்த நிமல் அடுத்த நொடி கோபம் பொங்க அவள் கன்னத்தில் இடியேன ஒரு அடியை பரிசாய் கொடுத்தான். அதே சமயம் சரணும் உள்ளே வர.... தன் ஆருயிர் தோழி வாங்கிய அறையில் அவனுக்கு மனம் கஷ்டமாக இருந்தாலும் ஏனோ சிரிப்புதான் வந்தது. தனக்காக சண்டையிடாமல் சிரிப்பதை கண்ட நேத்ரா கலங்கிய கண்களுடன் கடுப்பாகி அவனிடம் சண்டையிட, நிமலோ அப்போதும் கடும் கோபத்தில் வெளியேறி விட்டான்.

சண்டையிட்ட இருவரும் கண்ணீருடன் அணைத்துக் கொள்ள, நேத்ரா தான் வெடித்து அழத் தொடங்கினாள். அவளை சரண் சமன் செய்ய முயன்றாலும் நிமலின் செயல் தான் அவளை மிகவும் வருத்தியது.
அவள் கண்களை துடைத்து என்ன இருந்தாலும் நீ செஞ்ச காரியம் ரொம்ப தப்பு. உனக்காக நாங்க எல்லோரும் இருக்கும் போது நீ அந்த முடிவ எடுத்திருக்க கூடாது. அதுலயும் உனக்காக அத்தனை அன்போட நிமல் இருக்கும் போது எப்படி நீ..... அதற்கு மேலும் அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவனுக்கும் கண்ணீர் தான் வந்தது.

உலகில் எவ்வளவோ குற்றம் செய்து மக்களை ஏமாற்றி தவறிழைக்கும் சிலர் நிமித்தமாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும், எத்தவறும் செய்யா பலர் காரணமே இல்லாமல் இறந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கேட்டால் கடவுள், விதி என்று சொல்வார்கள். எல்லோரும் ஓர் நாள் இறந்து தான் ஆக வேண்டும் என்றாலும், அதை கொடூரமாகவும் நயவஞ்சகமாகவும் தான் கொடுக்க வேண்டுமா என்ன. எத்தனையோ சிறுப்பிள்ளைகள் நயவஞ்சகமாக தானே கொல்லபட்டிருக்கிறார்கள். அதை தான் அப்பிள்ளைகளின் விதியாய் கடவுள் எழுதி வைத்தாரா என்ன????..... தாய் தந்தை இன்றி தனியாய் வாழும் பெண்ணை கொடுமை படுத்தி அவளை அடைய நினைப்பதும் விரும்பியவனை மணம் முடிக்க விடாமல், சுற்றத்தாரை இழக்க வைப்பதும் தான் தலையில் எழுதி வைக்கப்பட்ட விதியா????

எத்தனையோ கொடுமைகள்...... தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது மட்டும் தீர்வாகிடுமா????

நேத்ரா செய்தது அவளை சூழ்ந்துள்ள உறவுகளுக்காக இருந்தாலும் அவள் செய்தது மிகப் பெரிய முட்டாள் தனம் தான். பிரச்சனை என்றால் எதிர்த்து போராட வேண்டுமே தவிர பயந்து சாக கூடாது. ஒரே ஒரு முறை நிமலன் தோள் சாய்ந்து அழுதிருந்தால் பயம் நீக்கி நிம்மதி அளித்திருப்பான். ஆனால் அதை செய்யாமல் தன்னை அவர்களிடம் இருந்து பிரிக்க நினைத்தது எல்லோருக்கும் அவள் கொடுத்த வலி. அதிலும் நிமல்.... அவள் மேல் அதிகளவில் அல்லவா காதலை கொண்டிருந்தான்.

நிமலின் கோபம் எல்லாம், இன்னும் எத்தனை முறை தான் மற்றவர்களுக்காக பயந்து பயந்து, என்னை பிரிந்து செல்வாள் என்பது தான்....... நேத்ரா கண் விழித்த நொடி ஆனந்தமாய் இருந்தாலும், ஏனோ அவள் மேல் கோபம் தான் வந்தது நிமலுக்கு... அதனால் தான் அடித்து விட்டான்.

எத்தனை கனவு கண்டிருப்பான் அவளுடனான வாழ்க்கை பற்றி. அத்தனையும் சூனியம் ஆகிய நிலையில் தான் அவள் கண்விழிக்கும் முன்பு வரை இருந்தான். இதோ அவளை அடித்து விட்டு வெளியில் அவன் அழுது கொண்டிருக்கிறான்... காதல் கொண்ட மனம் அனைத்தையும் நினைக்க நினைக்க கண்ணீர் விட தான் வைத்தது.

உயிர் உருவாத
உருகுளைக்காத
என்னில் வந்து சேர
நீ யோசிக்காத

திசை அறியாத
பறவையை போல
பறக்கவும் ஆச
உன்கூட தூர

வாழ்க்கை தீர தீர
வா என் நிழலாக் கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவை.......

மனசுல ஒரு வித வலிதான்
சுகமா சுகமா
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்
நெஜமா நெஜமா

கண்ணே கண்ணே
காலம் தோறும்
என் கூட நீ மட்டும்
போதும் போதும்....

நான் முழுசா
உன்ன எனக்குள்ள பொதச்சேன்
என் உசுர அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

இனி வரும் ஜென்மம் மொத்தம்
நீயும் தான் உறவா வரணும்
மறுபடி உனக்கென பிறந்திடும்
வரம் நான் பெறனும்

உள்ளேயும் வெளியேயும் இருமனங்களும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க...... அங்கே ஓர் உயிர் கேட்பாரின்றி துடித்துக் கொண்டிருந்தது. துடிக்கும் உயிர் மீண்டிடுமா????? அல்ல மாண்டிடுமா?????

யார் அது...... தவறிழைத்தால் தண்டனை உண்டா?????? பார்க்கலாம்....... அடுத்த பதிவில்




தொடரும்........prabhaas ???
 
Top