Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

16. மயங்கினேன் மை விழியிரண்டில்

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
அன்பு காட்டி, சண்டையிட்ட உயிர் நண்பன். உனக்காக நான் இருக்கிறேன் என்ற அன்பு சகோதரன்.. இன்னும் ஆயிரம் அவளுக்கு. தான் கண்ட அத்தனை வேதனையையும் போக்கிய உறவாய் வந்தவனை எப்பிடி அழைப்பாள்.

கண்கள் மின்ன ஆனந்த பெருக்கில் நேத்ரா அழைத்த வார்த்தைக்கு அவ்வளவு மகிமை........


"அப்பா" என்ற கூவலுடன் அணைத்துக் கொண்டவள், கண்ணீரில் அன்பை வெளிப்படுத்த... அப்படி அழைப்பாள் என்று எதிர் பார்க்காத சரணும் அதிர்ந்து கண்ணீரே விட்டு விட்டான்....

புறம் பேசி புண்படுத்தும்
உறவுகளில்
புதிது பேசி ஆனந்தபடுத்தும்
உறவுகள்
கிடைத்தால்
வாழ்வில் அனைத்து வசமே....
என்றும்
அன்பெனும் பூவினில்
வீசும் வாசமே.......


காலை 10.30 மணி... அந்த கல்யாண மண்டபம் முழுதும் அலைமோதும் கூட்டத்துடன் காணப்பட்டது. அனைவரும் பரபரப்புடன் காணப்பட, இரு ஜீவன்கள் மட்டும் தனக்கென்ன வந்தது என ஓரமாய் நின்று தீர்ந்து போன ஐஸ் கிரீமை தோண்டி தோண்டி சாப்பிட்டு கொண்டிருந்தது. அவர்கள் வேறு யாரும் இல்லை நம் நேத்ராவும் சரணும் தான். போட்டி போட்டு இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்க,

நாளியாயிடுத்து சீக்கிரம் பொண்ணை அழச்சுண்டு வாங்கோ என்று ஐயர் ஒருபுறம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அறையில் சென்று பார்க்க மணப்பெண்ணை காணவில்லை.... புகழும் எல்லா இடத்திலும் தேட.... சாவகாசமாக கையில் ஐஸ் கிரீம் டப்பாவை வைத்துக் கொண்டு பேசிய படி நடந்து வந்து கொண்டிருந்தனர்... நேரா மற்றும் சரண்....

அடேய் இன்னிக்கி அவளுக்கு கல்யாணம் டா.... இப்பிடி அவ கூட சேர்ந்து நீயும் லூட்டி அடிச்சுக்கிட்டு இருக்க.. சீக்கிரம் அவளை கூட்டிகிட்டு வாடா என்று அதி தீவிர மரியாதையுடன் அழைத்தது புகழ் தான்... வேறு யாரை... நம் சரணை தான்.

ஆம்... இன்று நிமலன் நேத்ரா இருவருக்கும் திருமணம். இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்து வைத்தால் பிரச்சனை தீரும் என்று ஜோசியர் கூற இதோ ஒரே வாரத்தில் ஊர் கூடி உறவுகள் வாழ்த்த... மீண்டும் ஓர் திருமணம்.

ஏற்கனவே நடந்தது தான் என்றாலும் மீண்டும் ஒருமுறை தன்னவனின் கைகளில் மாங்கல்யம் சூடிட ஆசை கொண்ட நேத்ரா ஆனந்தமாய் இருந்தாலும்.. ஏனோ பதட்டமாகவும் இருந்தாள். அவளின் பதட்டத்தை போக்க தான் இந்த ஐஸ் கிரீம் டிரீட்மெண்ட்.

அவசர அவசரமாக மேடை நோக்கி ஓடிய சரண் நிமலின் அவதாரத்தில் ஐம்புலன்களையும் அடக்கி அவனின் அருகில் ஒன்றும் அறியா பிள்ளை போல நின்று கொண்டான். எல்லோரும் பொண்ணு எங்கே... பொண்ணு எங்கே என்று காக்க வைத்த பின்னரே..... மங்கள பட்டு சரசரக்க.. பொன் ஆபரணம் பூட்டி...மல்லிகை மணம் பரப்பி தன் மன்னவனின் கைகோர்த்து அமர்ந்தாள் நேத்ரா.

கெட்டிமேளம் கொட்டி உறவினர் அட்சதை தூவ மஞ்சள் பூசி, கண்ணுக்கு மையிட்டு தன்னை மயக்கும் மங்கையவளின் கழுத்தில் மங்கள நாண் பூட்டி மீண்டும் தன் மனைவியாய் ஏற்றுக் கொண்டான் நிமலன்.

அளவற்ற ஆனந்தத்தில் சுற்றிலும் அன்பு கொண்ட உள்ளம் நிறைந்திருக்க... ஆசைக் கணவனை அன்பாய் விழி உயர்த்தி பார்த்தவளிடம்.......


மயங்கினேன் மை விழியிரண்டில் என, அவள் மை விழிகளில் முத்தமிட்டான் அவளின் காதல் கணவன்.


நிமலன் ❤️ நேத்ரா


இனி அவர்கள் வாழ்வில் அனைத்தும் ஆனந்தமாய் அமையும் என்று வாழ்த்தி நாமும் விடை பெறுவோம்....


????????சுபம்.
 
  • Like
Reactions: Ums
Top