Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

2. விழிமயங்கும் இரவு

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
ஜோத்பூர்.. இராணுவ பயிற்சி மையம்.

இராணுவ வீரர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் பிரத்யேகமான துப்பாக்கி அவளின் கைகளில் விளையாடிக் கொண்டிருந்தது. கைகளின் அழுத்தத்திலும், விழிகளின் கவனத்திலும் அவளின் குறி எப்போதும் இலக்கை அடைய தவறியது இல்லை. ஒரு வழியாய் அங்கிருந்த அனைத்து இலக்குகளையும் முறியடித்து, சட்டையின் முன் தொங்கிக் கொண்டிருந்த கூலரை ஸ்டயிலாக எடுத்து மாட்டியபடி நடந்து வரும் இவள் தான் இந்த பயிற்சி மையத்தின் சிறந்த பெண். அனைத்து பயிற்சியிலும் இவளே முதன்மை இடம் வகிப்பாள். இதோ பயிற்சி முடிந்து பாதுகாப்பு பணிக்கு செல்ல போகிறாள் பெண் சிங்கமென. மொத்தத்தில் அவளின் நடை உடை பாவனை என எல்லாம் ஒரு கம்பீர மிடுக்குடனே இருக்கும். பின்னே இராணுவப் படை ஆயிற்றே. வேக நடயிட்டு நடக்கும் அவள் அன்றைய தினம் முடிந்து அவ்விடத்தை விட்டு வெளியேறினாள்.

நேரம் பனிரெண்டு மணி ஆனப்போதிலும் நகரம் விளக்குகளின் உபாயத்தால் பளிச்சென்று ஒளிவீசிக்கொண்டிருந்தது. மக்கள் நடமாட்டம் அதிகமாய் இருந்தாலும் சில நிமிட நெரிசலுக்கு பின்

அதே ஊரில் பெரும் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்திருக்கும் பகுதியில் சீறி பாய்ந்து வந்து கொண்டிருந்த கருப்பு நிற யமஹா அங்கிருந்த நான்காவது கட்டிடத்தின் முன்பு தரையை உராய்ந்தபடி வந்து நின்றது. பின்புறம் அமர்ந்திருந்த நபரோ, இப்போது தான் தன் உயிர் தன்னிடம் திரும்பி வந்தது போல எண்ணி பெரும் பெரும் மூச்சுகளை விட்டவாறே நடக்க... அந்த பெரிய வண்டியை ஓட்டி வந்த அவளோ மிகவும் கூலாக தலையிலிருந்த ஹெல்மெட்டை கூட கழட்டாமல் ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்த படி ஆடிக் கொண்டே நான்காம் தளத்திலிருந்த அவர்களது வீட்டின்,


உள்ளே நுழைந்ததும் ஹெல்மெட்டை கழட்டி வைத்து விட்டு, வாரி சுருட்டி ஏதோ ஒரு மாடலில் போட்டு வைத்திருந்த முடிகளை அவிழ்த்துவிட, விடுதலை அடைந்த சந்தோஷத்தில் அனைத்தும் காற்றில் பறந்து ஆர்ப்பரித்து, வெண்டைவிரல்களின் கட்டளைப்படி காதோரத்தில் சிக்கி, நீண்டு இடைக்கும் கீழே விரிந்து தொங்கியது. சட்டையில் தொங்கிய கூலறை அதே ஸ்டைலுடன் மாட்டியவள், தன் முன் முறைத்து பார்த்தபடி அமர்ந்திருக்கும் தந்தையை புன்னகை முகமாய் பார்க்க... அவரோ எலியை பார்த்த பூனையை போல் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.... அவரின் பாவனையில் அவளின் புன்னகை மேலும் விரிந்திட, அதற்கு மேலும் தாக்குபிடிக்க முடியாமல் அவரும் சிரித்துவிட, கர்வம் கொண்ட தந்தையாய் மகளை தழுவிக் கொண்டார்... பிரணவ்சிங்.

பிரணவ்சிங் இராணுவ பயிற்சி மையத்தின் தலைமை அதிகாரி. தாடியுடன் சேர்ந்த முறுக்கு மீசை, தலையில் தலைப்பாகை, கட்டுமஸ்தான உடல், நரைக்காத முடி... தட தடக்கும் புல்லட்டில் அவரின் ஸ்டைல், வேலை என்று வந்தால் அதற்கான உக்தி அறிந்து உரிய வழியில் சுறுசுறுப்பாக முடிக்கும் பிரணவ்சிங்... ஐம்பது வயது என்றால் யாராலும் நம்ப முடியாது. அவரின் அன்பு மனைவி வைஷாலி. பிரணவ்வின் முறுக்கு மீசையில் மயங்கி வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து அன்பான குடும்பத்தை பொறுப்பாய் பார்த்துக்கொள்ள.. பிள்ளைகள் மூன்றும் நாட்டிற்காக பொறுப்பாய் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இரண்டு மகன்களும் டெல்லியில் பணியில் இருக்க, மகளும் இப்போது தங்களை போலவே என முன்னேறிவிட அந்த வீர தந்தைக்கு வேறென்ன வேண்டும்.

தன்னைப்போலவே இருக்கும் தன் மகளை பெருமையுடன் உச்சி முகர்ந்த பிரணவ், எப்போதும் வீட்டிற்க்கு வரும் நாட்களில் மகளுடன் அவளின் வண்டியில் வருவது தான் வழக்கம். அவளின் வேகத்தில் அவருக்கே பயம் வந்தாலும் தன் மகள் வண்டி ஓட்டும் அழகை வெகுவாக ரசிப்பார் அவர். எவ்வளவு இடையூறு என்றாலும் நிதானமாகவும் லாவகமாகவும் வண்டி ஓட்டும் அவளின் திறமையை கண்டு தந்தையாய் அளவுக்கு அதிகமான கர்வம் எப்போதும் உண்டு. இன்றும் அப்படியே நடக்க, இதோ இருவரும் புன்னகை முகமாய்.

எப்போதும் தந்தையுடன் இணைந்து ஒருவருக்கொருவர் சல்யூட் வைத்துக் கொள்வது இருவருக்குமே ஒரு தீவிர கொள்கை. இன்றும் அதே போல செய்ய...

போதும்... போதும் உங்க அப்பா மகள் விளையாட்டு, நான் ஒருத்தி இருக்கிறதே உங்களுக்கு மறந்து போகுது. எனக்கு துணையா என் பொண்ணை வச்சுக்கலாம்னு பார்த்தா அவளையும் உங்களைப் போலவே ஆக்கிட்டீங்க... அட்லீஸ்ட் தினமும் என்ன பார்க்க மட்டுமாவது வரலாம்ல.... என்று முகம் சுருங்கி கேட்ட தாயை அணைத்தவள், கன்னத்தில் முத்தமிட்டு நாளைக்கு நானும் அப்பாவும் உன் கூட தான் இருப்போம் என கூறிட வைஷாலி இப்போது மகளை அணைத்துக் கொண்டார். பள்ளிப்படிப்பை முடித்ததும் மகளை அடுத்து என்ன படிக்கவைக்கலாம் என்று பிரணவும் வைஷாலியும் அதீத சிந்தனையில் இருந்தனர். பிரணவ் தன்னை போலவே மகளும் இராணுவ அதிகாரி ஆக ஆசைப்பட, வைஷாலியோ தனக்கு துணையாய் தன்னுடன் இருந்தபடி வேறு ஏதாவது படிக்கட்டும் என்று சொல்ல... இறுதியில் பிரணவின் ஆசைப்படி தான் நடந்தது. விடுமுறை நாட்களுக்கு மட்டுமே வீட்டிற்க்கு வரும் எல்லோரையும் கடிந்து கொண்டாலும் அவருக்கும் பிள்ளைகள் நாட்டிற்காக உழைப்பது சந்தோசம் தான்.

தன் முன் நிமிர்வுடன், விழிகளில் தீட்சண்யத்துடன் இராணுவஉடையில் இருக்கும் மகளை பார்க்க எந்த தாயிற்க்கு தான் பெருமை பொங்காது.

மந்த்ரா பிரணவ்சிங்... பிரணவின் மூன்றாவது பிள்ளை. அப்பாவின் ஆசைக்கினங்க இராணுவத்தில் சேர்ந்து இப்போது பாதுகாப்பு படையில் நம் நாயகி.

எது நாயகியா அப்போ நான் யாரு.....

யாரும்மா நீ.....

நான் தான் ஹீரோவோட ஒய்ஃப்.....

எது ஒய்ஃபாா.....

ஆமா....

ஐய்யையோ ஹீரோவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா...

இல்ல.....

அப்புறம் எப்படி?????

அது அப்படித்தான்...

எப்படி.....

இதோ இப்பிடி...


மாமா.... மாமா.... என எழுந்ததிலிருந்து குறைந்தது ஆயிரம் மாமாவாவது சொல்லியிருப்பாள் அவளின் வருங்கால கணவனை பற்றி. வருங்கால கணவன் என்று அவள் மட்டும் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். ஆனால் கணவனாக எண்ணுபவனோ பெண்கள் என்றால் ஆகாது என்றல்லவா இருக்கிறான்.

அட ஆமாங்க...... இந்த ஹீரோவுக்கு பொண்ணுங்கன்னா பிடிக்காதாம். பொண்ணுங்கள பிடிக்காதவன் எதுக்குப்பா ஹீரோ...... வேணும்னா வில்லன் ரோல் பண்ணுறியாண்ணு கேட்டா, ஆபரேஷன் பண்ற கத்திய தூக்கிட்டு வரான்.... நமக்கு எதுக்கு வம்பு அதான் நீ ஹீரோவாவே இருந்துக்கன்னு சொல்லிட்டேன். இவனே இப்பிடின்னா அப்போ வில்லன் என்ன செய்ய காத்திருக்கானோ தெரியல.


மிஸ்டர். ஆர். முகுந்தன் மிகச் சிறந்த புற்றுநோயியல் மருத்துவன். அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைகழகத்தில் மருத்துவ ஆராய்ச்சியை முடித்துவிட்டு இன்று தான் தாயகம் வந்துள்ளான். பெண்கள் என்றாலே கண்களில் தீப்பொறி பறக்குமாம். அதனால் தான் முன் வரிசையில் இருக்கும் அழகிகளை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான். பாவம் அவர்களுக்கு தான் தெரியவில்லை அவன் பார்வையின் அர்த்தம். பொறுப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இனி அந்த மருத்துவமனையின் மொத்த பொறுப்பும் அவனுடையது தான். அவன் பொறுப்பேற்ற பின் அன்றைய தினத்திற்கான இலவச புற்றுநோய் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அதில் பலரும் கலந்து கொள்ள..... இளம் வயது பெண்ணொருத்தி துணைக்கு யாருமின்றி கைகளில் மருத்துவ கோப்புகளை சுமந்த படி வந்திருந்தாள்.

முதல் தகவல் படிவத்தை பூர்த்தி செய்யும் பெண் அவளின் விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தாள். பெயர் கீர்த்தி என மற்றும் சில விவரங்கள் கேட்கப்பட, அது முடிந்ததும்.... சிகிச்சைக்கு அவனிடம் தான் வந்து நின்றாள்.

அவளின் மருத்துவ கோப்புகளை ஆராய்ந்தவன் ரத்தபுற்றுநோய் இருப்பதை அறிந்து அதற்கான சிகிச்சையை ஆரம்பித்தான்.....


கீர்த்திக்கு.... யார் இந்த கீர்த்தி?????

பதிலுடன் அடுத்த பகுதி..... காத்திருங்கள்.


தொடரும்......... Prabhaas ???
 
  • Like
Reactions: Ums
Top