Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

3. விழிமயங்கும் இரவு

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
ஆரவல்லி மலைத்தொடரின் தென்புறச் சரிவில் அமைந்திருக்கும் அவ்வூரின் மிகப்பெரிய கட்டிடம் அது மட்டுமாகத்தான் இருக்க வேண்டும். மற்றவை அனைத்தும் கொஞ்சம் சிறிய அளவில் தான் இருந்தது.மொத்தம் மூன்று அடுக்கு என ஓங்கி நின்ற அந்த அரண்மனையின் பின் புறத்திலுள்ள கதவின் வழியாக ஏதோ ஒன்று வண்டியிலிருந்து இறக்கப்பட்டு கொண்டிருந்தது. பார்ப்பதற்கு மரப்பெட்டிகள் போன்று இருந்தவை மூன்று நான்கு பேர் மூலம் உள்ளே கொண்டு செல்லப்பட அந்த வழி நீண்டு, கீழே இறங்கும் படிகளில் முடிந்தது. கீழே பெரிய ஒரே தளமாக இருக்க, அதில் பெட்டிகள் அனைத்தும் வரிசையாக வைக்கப்பட்டு உத்தரவு வந்ததும் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட பெட்டிகள் அனைத்திலும் பெட்டிக்கு மூன்று என்ற கணக்கில் இளம் பெண்கள் மயக்கத்தில் கிடத்தப்பட்டிருக்க, அனைவரையும் வெளியெடுத்து மீண்டும் மயக்கமருந்து அடிக்கப்பட்டு, வரிசையாக சுவற்றில் சாய்த்து அமரவைக்கப்பட்டனர். பெண்களை கவனிக்க, காவலுக்கு பத்து ஆட்களை வைத்துவிட்டு மற்றவர்கள் அனைவரும் வெளியேறிவிட, பொழுதும் நடுஇரவை நெருங்கியது.

சுற்றிலும் இருள் மட்டுமே நிறைந்திருந்தது அங்கு... மயக்கத்தில் தானே இருக்கிறார்கள் என்ற மெத்தனத்திலும், மலைச்சரிவு என்பதால் இதமாக வீசும் குளிர் காற்றுக்கும் காவலுக்கு இருந்தோர் சற்றே கண்ணயர, வாட்டசாட்டமான முறுக்கேறிய உடல்வாகில் முகத்தை மறைத்தவாறு ஒருவன் உள்ளே வருகிறான்.... மொத்த விவரமும் அறிந்திருந்ததால், உள்ளே நுழைவது பெரும் சிரமமாக இல்லை அவனுக்கு. தவறை செய்தாலும் சரியாக செய்யும் ஆள் தான் இவர்களின் தலைவன் போல, எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் சுழன்று கொண்டிருந்தது. வந்தவனோ ஒரு சிறு பட்டனை அழுத்தவும் அத்தனையும் தன் வேலையை நிறுத்தியது. விறு விறு வென அங்கிருந்த ஒற்றை அறையில் நுழைந்தவன், அங்கிருந்த கணினி அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து, பின் சிறிதும் தாமதிக்காமல், அத்தனை தடியன்களையும் அவன் கொண்டுவந்திருந்த மருந்தை பயன்படுத்தி ஆழ்ந்த உறக்கத்திற்கு அனுப்பி வைத்தான். எல்லாவற்றையும் முடித்து நேரத்தை சரிபார்த்து கொண்டு அமைதியாய் மீண்டும் அங்கிருந்து வெளியேறினான் அவன். பின் ஒருமணிநேர இடைவெளியில் மீண்டும் ஒருவன் உள்நுழைய, அரைமணி நேரத்தில் அங்கிருந்த ஐம்பது பெண்களையும் அவனுடன் வந்திருந்தவர்களின் உதவியோடு தங்கள் இடத்திற்கு தூக்கிச் சென்றான். வீட்டின் பின்புறம் என்பதாலும், வந்தவர்களின் சாமர்த்தியத் திட்டத்தாலும் மட்டுமே விரைவில் அவர்களை அவ்விடம் விட்டு வெளியேற்ற முடிந்தது அவனால். அந்த வாட்டசாட்ட ஆடவன் இரண்டாவதாக நுழைந்த இவனின் செய்திக்காக காத்திருக்க, சில நிமிடங்களில் அதுவும் வந்துவிட, தன் இருப்பிடம் நோக்கி கிளம்பினான் அவன்

.......................................

காலைச்சூரியன் நகர்ந்து நகர்ந்து உச்சிபொழுதும் வர சில நிமிடங்களே இருக்க, அப்போது தான் எழுந்தாள் அந்த வீட்டின் செல்லப்பிள்ளை. கண்களை மூடியபடியே அருகிலிருக்கும் மேஜையை துலாவி அதிலிருந்த புகைப்படத்தை எடுத்தவள் முகத்திற்க்கு முன் கொண்டுவந்து அதில் முத்தமிட்டு குட் மார்னிங் மாமா என்று தான் கண் விழித்தாள். புகைப்படத்தில் இருப்பவனை இன்று தான் முதல் முறை பார்ப்பது போல அங்குலம் அங்குலமாக அளவெடுத்து கொண்டிருந்தாள். மாமா நீ எவ்வளவு அழகு தெரியுமா.... உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமா.... உனக்கும் எனக்கும் எப்போ மாமா கல்யாணம் என்று பல மாமாக்களை பொழிந்து, சில பல முத்தங்களையும் வாரி வழங்கி, குளித்து முடித்து கீழே வந்தவள், தன் தாயின் புகைப்படத்தின் முன் நின்று வணங்கிவிட்டு சாப்பிட அமர்ந்தாள். பட்டுப்பாவடை அணிந்து ரெட்டைஜடை பின்னலில் முகத்தில் தவழும் புன்னகையுடன் உணவுண்டு கொண்டிருந்த பூஜா வின் தலையை ஆதுரமாக தழுவிய தந்தையை பார்த்ததும், ஐ அப்பா... அப்பா எப்போ வந்தீங்க... ஆனந்தம் பொங்க கேட்க்கும் மகளை தானும் அணைத்து உச்சி முகர்ந்தார் தேவராஜ். தேவராஜ் பிரபல துணிக்கடையின் அதிபர். பல கிளைகளை கொண்ட அந்த கடையின் முழுப் பொறுப்பை இப்போது அவரது மகன் மிதுன்ராஜ் தான் பார்த்துக் கொள்கிறான். அவ்வப்போது மேற்பார்வை பார்க்கவும் இறக்குமதி தொடர்பான வேலைகளுக்கும் வெளியூர் சென்று வருவார். பூஜாவின் பத்து வயதில் அவளது அன்னை தேவிகா மரணமடைந்து விட தந்தை வளர்ப்பில் வளர்ந்த பூஜா தேவராஜிற்க்கு இன்னும் சிறு பிள்ளை போல தான். அதனால் தான் மதியம் வரை தூங்க எந்த தடையும் இல்லை அவளிற்க்கு. தேவிகாவிற்க்கு மகளை அலங்காரம் பண்ணி ரசிப்பதில் அலாதி பிரியம். அப்படி அவரின் முதல் தேர்வு பூஜாவிற்க்கு பட்டுபாவடை அணிவித்து ரெட்டைஜடை போட்டு பூ வைத்து அழகு பார்ப்பது தான். ஏனோ இக்கால பெண்ணாக இருந்தாலும் தாயின் ஆசைப்படி இன்னும் அவள் பட்டுப்பாவாடை மட்டுமே அணிவாள். அதற்கேற்ப வைர அணிகலன்கள் அணிந்து இருக்கும் அவள் பார்க்க அவ்வளவு அம்சமாகத்தான் இருப்பாள். அவளின் மாமா புராணம் ஒன்றை தவிர, அவள் குணவதி தான். தேவிகாவின் அண்ணன் தான் முகுந்தின் தந்தை தேவேந்திரன். சிறுவயதில் தேவிகா முகுந்தை மாமா என்று அழைக்க சொல்ல இன்று அதுவே அவளின் ஆசைக்கு விதையானது. எப்போதும் மாமா மாமா என மாமா புராணம் மட்டும் தான் என்றும் ஆகி போனது.

பூஜா தந்தையுடன் இணைந்து பேசிக்கொண்டிருந்தபோது தான் உள்ளே வந்தான் மிதுன். அவனுக்கு தங்கை என்றால் உயிரோ உயிர் தான். அக்கால பாசமலர் ஹீரோவையும் இக்கால எங்கள் வீட்டு பிள்ளை ஹீரோவையும் மிஞ்சும் அவன், சரியான டெரர் பீஸ் என்றால் நம்பவே முடியாது. தங்கைக்கு மட்டுமே அவன் சிரித்த முகத்துடன் காட்சியளிப்பான். மீதி எல்லோருக்கும் அவன் சிடுமூஞ்சி முகம் மட்டும் தான் தெரியும். அவனையும் ஒரு பூமுகம் மாற்றபோகிறது என்று சொன்னால் அது தான் இப்போதைக்கு அவனின் தொழிலாளர்களுக்கு உலகஅதிசயம். மிதுனுக்கு ஏற்ற மகராசி எங்கிருக்காளோ ???

கூடிய விரைவில் வரட்டும்... அதுவே பலருக்கு நன்மை. கடையில் அவனின் சொல்லை யாரும் மீறக் கூடாது என்பது தான் அவனின் எண்ணம். வேலை என்றால் மற்ற எதுவும் இடையையே வரக்கூடாது என்று சில பல கட்டுப்பாடுகள் அவன் ஊழியர்களுக்கு உண்டு. ஆனால் இன்னும் சில நாட்களில் அவனின் மாற்றம் அந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் தகர்த்தெறிவது தான் அதிசயமே.


இங்கு ஜோத்பூரில் மந்தரா தாயின் கை மணத்தில் பிரியாணியை உண்டு முடித்து அவளின் யாமஹாவில் ஊர் சுற்ற கிளம்பிவிட்டாள். எப்போதும் எங்காவது சென்று சுற்றிவிட்டு வருவது தான் இவளது வழக்கம். வீணாக சுற்றுகிறாள் என்று வைஷாலி பிரணவிடம் பலமுறை புகார் செய்தாலும் பிரணவ் மகளை கண்டு கொள்ளவே மாட்டார். ஏனென்றால் அவருக்கு தான் தெரியுமே மகள் எதற்காக சுற்றுகிறாள் என்று. காலை சென்றவள் இரவு உணவிற்கு தான் வீட்டிற்க்கு வந்தாள். இரவுணவை முடித்து தந்தையிடம் தனியே சென்று சிறிது நேரம் பேசியவள் பின் அப்படியே உறங்கியும்விட்டாள்.

மறுநாள் காலையில் வைஷாலி கதவை திறக்கும் போது மீண்டும் வெளியிலிருந்து உள்ளே வந்தாள் மந்த்ரா. தன் முட்டை விழியை முழித்தபடி நீ எப்படி வெளிய என்று ஆச்சர்யமாய் வைஷாலி கேட்க, அதற்கு பதிலோ அவருக்கு பின்னே பிரணவிடம் இருந்து தான் வந்தது.

நான் தான் ஒரு சின்ன வேலையா அனுப்பினேன்... நீ போய் உன் வேலையை பார் என்றதும் கணவனையும் மகளையும் ஒரு ஓர பார்வை பார்த்தபடி வாசலில் கிடக்கும் பால்பாக்கெட்டை எடுத்து கிட்சென் நோக்கி சென்று விட்டார் வைஷாலி. தந்தையிடம் கட்டைவிரலை உயர்த்தி காட்டியபடி புன்னகை ஒன்றை அளித்தவள் மீண்டும் அறைக்குள் நுழைந்து கொண்டாள். பிரணவோ தன் சர்தார்ஜி மீசையை நீவியபடி மர்மமாய் கம்பீரமாக சிரித்துக் கொண்டார்.

இவர்களின் புன்னகைக்கு பின் இருக்கும் மர்மம் என்னவென்று போக போக நமக்கே தெரியும். விடுமுறையும் முடிந்தது... மீண்டும் யாமகாவில் தந்தையுடன் சென்று விட்டாள் பணிக்கு. இன்று பாதுகாப்பு பணியின் முதல் நாள். அமைதியாய் இருக்கும் ஆளுக்கு பின் பல ஆபத்துக்கள் இருக்கும் என்பது மந்த்ராவை பொறுத்தவரை உண்மையோ உண்மை. தேவைப்படும் இடங்களில் மட்டுமே பேசுவாள். ஆனால் சேட்டைகளுக்கு குறைவிருக்காது. எப்போதும் உதடுகள் ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்து கொண்டே இருக்கும். வேலை முடிந்து வீட்டிற்க்கு வந்துவிட்டால் கால்கள் ஓரிடத்தில் நிற்காது.( இதுக்கு பேரு அமைதியா?) வளைந்து நெளிந்து ஆடிக் கொண்டு தான் இருக்கும். ஜாலியான குணமாக இருந்தாலும் தேவைக்கு மீறி ஒரு வார்த்தை கூட அவளிடமிருந்து வாங்க முடியாது. கேள்விக்கு பதில் சில நேரம் அவளின் விழிகளிலே கிடைக்கும் சில நேரம் கைக்கு கிடைக்கும் பொருட்கள் மூலம் கிடைக்கும்.

கல்லூரி படிக்கும் போது இவளின் செயல்களை பார்த்த ஒருவன் இவளிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டான் பாவம் அதிலிருந்து அவனுக்கு காதே கேட்கவில்லை. அவன் கேட்ட கேள்விக்கு பதில் பக்கத்திலிருந்த சுவற்றின் மூலம் தான் அவனுக்கு கிடைத்தது. அப்படி என்ன தான் கேட்டான் என்று வைஷாலி கேட்க..... வெறும் அமைதி மட்டும் தான் அவருக்கு கிடைத்தது. இன்று வரை அதற்கான காரணம் யாருக்கும் தெரியாது. இதுவா? இல்லை அதுவா? என எது இவளின் குணம் என்று யாருக்கும் தெரியாது. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் வானிலை மாற்றமும் இவளும் ஒன்று. எப்போ எப்பிடி மாறும் என்பதே தெரியாது.

மனதில் பல கணக்குகள் போடபட்டு கொண்டிருந்தாலும், கருவிழிகள் இரண்டும் தன் வேலையை விடாது பார்த்துக் கொண்டு தான் இருந்தது. எதுவும் பெண்களால் முடியும் என்பதை நிரூபித்து காட்டுவதே தன் முழு கடமையென தீரம் கொண்டு நின்றிருந்தாள் மந்த்ரா. ஏற்கனவே செய்த வேலைகள் அனைத்தையும் கணக்கிட்டு அடுத்து செயல்படுத்தப்போகும் காரியத்திற்காக பலமான திட்டத்தை தீட்டி கொண்டிருந்தாள் மந்த்ரா. அவளின் திட்டத்தின் முடிவில் கிடைக்கப்போகும் செய்தி அவள் வாழ்க்கையையே மாற்றியமைக்குமா?? இல்லை புது வாழ்க்கையை கொடுக்குமா???? பொறுத்திருந்து பார்ப்போம்.

............................

இரண்டு நாட்களாக மீண்டும் அவளின் அனைத்து சோதனைகளும் எடுக்கப்பட்டன. மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது கீர்த்திக்கு. அவளின் முழுபொறுப்பையும் முகுந்தனே ஏற்றுக்கொள்ள சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டது. சிகிச்சை ஆரம்பத்திலிருந்து யாருக்கோ வந்தது எனதான் இருந்தால் கீர்த்தி, முகுந்தனின் அந்த செயலை காணும் முன்புவரை.........


தொடரும்.......... Prabhaas ???
 
  • Like
Reactions: Ums
Top