Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

4. மர்ம கிணற்றுக்குள் மரணமோ...

Advertisement

AMMU ILAIYAAL

Well-known member
Member
பூவிலாங்குடி கிராமத்தில் பரசுராமின் வீட்டை அடுத்து பெரிய வீடு என்றால் அது குமரேசன் வீடு தான். பழமை மாறாமல் சில மாற்றங்கள் மட்டுமே அதில் புகுத்தப்பட்டு இன்றும் அழகாக பராமரிக்கப்பட்டு வரும் வீடு அது. அவ்வீட்டில் தன் ஆசை மகளுக்காக மாடி முகப்பு கொண்ட அழகான படுக்கையறையை அமைத்திருந்தார் குமரேசன். கட்டிய நாளில் இருந்து இப்போது தான் அந்த அறையில் வசிக்கிறாள் கயல்விழி. ஏனோ தந்தை தனக்கு பிடித்தமான அறையை ஆசையாக அளித்திருந்தாலும் துளியும் மகிழ்வு இல்லாமல் எங்கோ பார்வையை செலுத்தியவாறு கையில் புத்தகத்தோடு அமர்த்திருந்தாள் அவள். அவளை காண மகியும், தூரனும் அறைக்கதவை தட்ட .... உள்ளே வர சொன்னாள் கயல்விழி.



தூரன், அக்கா என்ன பண்றீங்க...... இங்க நின்னுட்டு. வீட்டுக்கு வந்து இன்னையோட ஒரு வாரம் ஆகபோது...... நீங்க இப்போ வரைக்கும் என்கிட்டே ஒரு வார்த்தை கூட பேசல. போன்ல மட்டும் தம்பி தம்பின்னு பாசமா பேசிட்டு இருந்தீங்க. இப்போ உங்க வீட்டுக்கு வந்ததும் தம்பி தெரியாம போய்ட்டனா?இப்பிடி ரூம்க்குள்ளேயே இருக்கீங்க...... வெளிய வரவும் மாட்டேங்குறீங்க... உங்களுக்கு இங்க வந்தது பிடிக்கலையாக்கா? இங்க நடக்குறத பார்த்து பயமா இருக்கா? வேணும்னா நம்ம வீட்டுக்கு போகலாமா? அம்மா கிட்ட கூட இப்பவே பேசுறேன்.... என்றவனின் பாசத்தில் திரும்பிய கயல்,



"நான் வெளிய போகணும்னு சொன்னா விட்ருவாங்களா இங்க? இங்க வர பிடிக்கலை தான்.... என்ன பண்ண இது தான் என்னோட பிறந்த ஊரு. வராம இருக்கவும் முடியாதே... ஆனா என்ன....... விருந்தாளி மாதிரி அப்போ அப்போ வந்துட்டு போக வேண்டிய பிறந்த ஊரு. அப்புறம் என்ன கேட்ட பயமா இருக்கான்னா......? ஆமா தூரன் இன்னும் எத்தனை பொண்ணுங்கள இவங்க பலி குடுத்துட்டு பேசாம இருக்க போறாங்கன்னு பயமா இருக்கு. என்னை பாதுகாக்க நீங்க இருக்கிறது மாதிரி இங்க இருக்க பொண்ணுங்களுக்கும் பாதுகாப்பா இருப்பிங்களா???" என கயல் கேட்க..... தூரனுக்கு எதுவும் புரியவில்லை. இவை அனைத்தையும் வெறும் பார்வையாளராக பார்த்து கொண்டிருந்த மகி இப்போது தன் அக்காவிடம் பேச ஆரம்பித்தான்.



"அக்கா ! நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியுது. நாங்களும் அதை பத்திதான் பேச வந்தோம். எனக்கு நீ அக்கா...... உனக்கு பாதுகாப்பா இருக்க வேண்டியது என்னோட கடமை. அதே மாதிரி ஒரு ஆணா இந்த ஊர்ல இருக்க மத்த பெண்களுக்கும் பாதுகாப்பா இருக்க வேண்டியதும் என் கடமை தான். உனக்கே தெரியும் நான் இப்போ தான் அப்பா முன்னாடி நின்னு பேசுற அளவுக்கு வளர்ந்து இருக்கேன். முன்னாடி என்னால எதுவும் பண்ண முடியாம இருந்திருக்கலாம். ஆனா , இப்போ என்னால உன்னையும் இங்க இருக்க பொண்ணுங்களையும் காப்பாத்த முடியும். முதல்ல அதை நீ நம்புக்கா. நீ எங்கையோ பார்த்துக்கிட்டு இல்ல.... ஆதிலட்சுமி அக்கா வீட்டை தான் பார்த்துட்டு இருக்க.... சரியா?" என மகி கூற இந்த முறை கண் கலங்கி பார்த்தாள் கயல்.



தூரன், "அது மட்டும் இல்லக்கா உங்களுக்கு இங்க என்ன நடந்துச்சி நாங்க என்ன பண்ணி இருக்கோம்னு தெரிஞ்சா இப்படி நம்பாம பேச மாட்டீங்க....." என தேவிகாவின் இறப்பு முதல் அவர்கள் செய்த அத்தனையும் சொல்ல..... உதட்டில் மறைந்த புன்னகையோடு இருவரையும் கை பிடித்து ஆதிலட்சுமி வீடு இருக்கும் பக்கம் அழைத்துச் சென்றாள் கயல்.



"இந்த ஊருல எனக்கு இருந்த உயிர் தோழி அவள் தான். ரொம்பவே கெட்டிகாரி. அந்த வயசுலயும் என்ன புத்திசாலி தனமா பேசுவா தெரியுமா? எனக்கு எதுலயாவது சந்தேகமோ இல்ல அச்சமோ வந்தா நான் நிக்குற முதல் ஆள் அவளா தான் இருப்பா. முத்து சித்தப்பா படிக்க வைக்க மாட்டேன்னு சொன்னதும் அவளோட ஆசையை கூட விட்டுட்டு அப்பா கூடவே குடும்பத்தை பார்க்க போறதா சொல்லிட்டு போனா. நானும் படிக்க போய்ட்டேன். ஆனா தினமும் அவள் கூட போன் பேசாம எனக்கு பொழுது சாயாது . அன்னைக்கு என்ன நடந்தாலும் ஒன்னு விடாம சொல்லிட்டு தான் போனை வைப்பா.............."என்று பேசும் போதே கயலுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர ஓடி சென்று மெத்தையில் விழுந்தபடி அழுதாள்.



இதை பார்த்திருந்த மகி, "அக்கா நீ இப்போ ஒன்னும் சொல்ல வேணாம். எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம். நீ இப்போ ரெஸ்ட் எடு... நாங்க சாயங்காலமா வந்து பேசுறோம் "என தூரனையும் அழைத்து கொண்டு வெளியேற.................



நண்பன் பின்னாலே சென்று கொண்டிருந்த தூரனுக்கு சட்டென எதுவோ தோன்ற, கயல் அறைக்குள் வேகமாக சென்றான். தூரன் ஓடுவதை பார்த்த மகியும் அவன் பின்னாலே ஓட....



தூரன் வந்தது கூட தெரியாமல் அழுது கொண்டிருந்த கயலிடம் சென்று, "அக்கா!! உங்க கிட்ட நான் ஒன்னு கேக்கணும். உங்க அழுகையை நிறுத்திட்டு எனக்கு பதில் சொல்லுங்க ப்ளீஸ்...." என கயலிடம் வேண்டுகோள் வைத்தான்.



அவனை புரியாது பார்த்த கயல், என்னவென கேட்க..... "அக்கா அப்போ அன்னைக்கு ஆதி அக்கா அங்க எதுக்கு போனாங்கன்னு உங்களுக்கு தெரியுமா? உங்ககிட்ட சொல்லிட்டுதான் போனாங்களா.......? அங்க போக காரணம் என்ன? சொல்லுங்கக்கா..... நீங்க சொல்ல போற பதில்ல தான் இந்த மர்மத்தோட முடிச்சி கொஞ்சமாச்சும் அவிழும்."





இப்போது பெரும் அழுகையை சொந்தமாக்கியது போல கயல் கதற.... மகி அக்காவுக்கு ஆறுதலாக பக்கத்தில் அமர்ந்து தலையை வருடி கொடுத்தான். "அக்கா உன்னால சொல்ல முடிஞ்சா சொல்லு இல்லன்னா வேணாம். நானும் தூரனும் உன்னை தொந்தரவு பண்ண மாட்டோம். ஆனா எங்களை நம்பி சொன்னா ஆதி அக்கா சாவுக்கு கண்டிப்பா நியாயத்தை வாங்கி தருவோம்."



சிறுது நேரத்தில் அழுகையை நிறுத்திய கயல், சொல்ல ஆரம்பிக்க இருவரும் தங்கள் அக்காவை பார்த்தபடி அமர்ந்தனர்.



"ஹ்ம்ம்..... தெரியும். என் ஆதி அங்க எதுக்காக போனான்னு எனக்கு தெரியும். சொல்ல போனா நானும் அவள் கூடத் தான் அங்க போனேன்."



அக்கா என இருவரும் அதிர்ச்சியாக பார்க்க..............





தன் கண்ணீரை அடக்கியபடி, "உனக்கு ஞாபகம் இருக்கா தம்பி ஃபர்ஸ்ட் செமஸ்ட்டர் எக்ஸாம் முடிச்சிட்டு லீவுக்கு நான் ஊருக்கு வந்திருந்தேன். அப்போ தான் நான் ஆதியை பார்க்க போனேன். நானும் அவளும் ரொம்ப சந்தோசமா பல கதைகளை பேசி ஊரையே சுத்தி வந்தோம். அப்போ தான் அவள் கடைக்கு போகும் போது... அங்க சுகுமாரன் அண்ணா வந்தாங்க. அவங்க ரொம்ப நாளா ஆதியை காதலிச்சிட்டு இருந்தாங்க. ஆதிக்கும் அவங்களை பிடிக்கும்னு அன்னைக்குதான் அவள் வெட்கப்படும் போது புரிஞ்சிகிட்டேன்...... "என அன்றைய நாளின் நிகழ்வை நோக்கி செல்ல .......................



என்ன டி ஆதி.... முன்ன விட இப்போ கடை ல பொருளெல்லாம் அதிகமா இருக்கு. இது எல்லாமே உன் ஏற்பாடாடி. சொன்ன மாதிரியே உன் அப்பாவுக்கு மகளுக்கு மகளாவும், மகனாவும் இருக்க போல. உன்ன நெனைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு ஆதி.



அதெல்லாம் ஒன்னும் இல்ல கயல். வாழ வழி பார்க்க வேணாமா...... இங்க இருக்குற கடையெல்லாம் முன்ன மாதிரி இல்ல.... வியாபாரத்தை பெருக்க வித விதமா சரக்கை போட்டு மக்களை பிடிக்கிறாங்க. அப்பா என்னடான்னா இப்போ தான் இதுலாம் வாங்கவே முன்வந்திருக்காரு. அதுலயும் அவரை சம்மதிக்க வைக்க நான் பெரிய போராட்டமே பண்ண வேண்டியதா போச்சுடி.



"விடு ஆதி, அப்பாக்கு இதையெல்லாம் பண்ண....முன்ன யாரும் கூட இல்ல. இப்போ தான் நீ வந்துட்டியே அப்புறம் என்ன... இதே மாதிரி இன்னும் இரண்டு கடையை திறந்துடலாம். ஆனா ஒன்னு டி நான் தான் கடையை திறந்து வைப்பேன். நீ பாட்டுக்கு வேறையாரையாது கூட்டிட்டு வந்த அவ்ளோதான் சொல்லிட்டேன்."



"அதெல்லாம் எனக்கு ஆசை இல்லை கயல். இந்த கடையை நல்லபடியா நடத்துனாலே போதும். எனக்கு என்னோட தங்கச்சிய மட்டுமாது நல்லபடியா படிக்க வைக்கணும். அவளுக்கு இந்த கஷ்டம்லாம் வராம பார்த்துக்கணும். அப்பாக்கு இருக்க கடனை முழுசா அடைக்கணும். எங்களோட கல்யாணத்துல அப்பாக்கு எந்த சங்கடமும் வந்திடக்கூடாது கயல். அதுக்கு தான் நான் படிப்பை கூட வேணாம்னு இங்க வந்துட்டேன்." என தன் மனதில் உள்ளதை கயலிடம் கூறிவிட்டு திரும்பிய ஆதிக்கு................ அவளை பார்த்தபடி கடையின் கதவில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் சுகுமாறன் தெரிந்தான்.



சுகுமாறனை பார்த்த ஆதி எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொள்ள, இதை அறியாத கயலோ, "என்னடி பேசிட்டே இருந்த இப்போ எதுக்கு தரையை பார்த்துட்டு மௌனவிரதம் இருக்க..... அப்போதும் பதில் வராமல் போக.... ஆதியை தொட்டு அடியே உன்னத்தான்டி கேக்குறேன் ஆதீ........." என கூற,அவளை பார்த்த மறுநொடி திரும்பி சுகுமாறனையும் பார்த்தது விட்டு தன் மௌனவிரதத்தை தொடர்ந்தாள் ஆதி. ஆதியை மட்டுமே பார்த்திருந்த சுகுமாரனை நண்பன் அழைக்க கண்களாலேயே விடைபெற்று சென்றான் அவன்.



அவள் பார்வை போகும் திசையை பார்த்த கயல் ஓஹ்ஹ்.......... இதுதான் மேடம் மௌனவிரதம் இருக்க காரணமா...... அதுசரி நான் இல்லாத நேரத்துல உன்னை இப்படி மாத்திட்டாரே இந்த அண்ணா. முன்னாடி உனக்கு பிடிச்சிருக்கான்னு கேக்கும் போதுலாம் சும்மா இருடின்னு சொல்லிட்டு...... நான் அப்படிக்கா போனதும் நீ இப்படிக்கா உன் காதலை வளர்த்துட்டியா......... ஆதி... என கிண்டலாக கேட்க பதறிய ஆதிலக்ஷ்மியோ,



"ஐயோ! கயல் என்னடி இப்படிலாம் பேசுற. உன்கிட்ட மறைக்கணும்னு என்னைக்குமே நான் நினைக்கலடி...இன்னும் கேட்டா நான் அவங்களை விரும்புறதா சொல்லவே இல்ல அவங்க கிட்ட. எனக்கு அதுக்குலாம் தகுதி இல்ல கயல்.அவங்க வேற...வசதியான இடம். அப்பாவுக்கு இப்பவே கடன் அதிகமா இருக்கு. அதை அடைக்கவே இன்னும் எத்தனை வருஷம் ஆகும்னு தெரியல.... இதுல எனக்கு இதுலாம் தேவையா டி. ஸ்கூல் படிக்கும் போதுலாம் சத்தியமா எனக்கு விருப்பம் இல்லை டி அவங்க மேல. ஆனா இப்போதான் ஒரு இரண்டு வாரத்துக்கு முன்னாடி தனியா டவுன் வரைக்கு போயிட்டு அங்கேயே மாட்டிக்கிட்டேன். அப்போ இவங்க தான் என்னை பத்தரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க கயல். என்னமோ தெரியல அப்போல இருந்து முன்ன மாதிரி அவங்களை வேணாம்னு சொல்ல முடியல. சத்தியமா உங்கிட்ட மறைக்கணும்னு இல்லடி. உன்கிட்ட சொன்னா... நீ ஏதாச்சும் சொல்லி அவங்க கிட்ட மனசுல இருக்குறத சொல்லிடுவேன்னு பயம்.....சாரி டி கயல்."





ஆதியின் எண்ணங்களை புரிந்து கொண்ட கயல் அவள் கூறியதை ஒரு வரி மாறாமல் சுகுமாறனிடம் சொல்ல... மறுநாள்,



வழக்கம் போல் தங்கள் கடைக்கு வந்துகொண்டிருந்த ஆதி மற்றும் கயலை வழிமறித்து பேச வேண்டுமென கூற, அவர்களுக்கு தனிமை தர எண்ணி கயல் செல்ல... அவளை ஆதி தடுப்பதற்கு முன்னர் சுகுமாறனின் வார்த்தை போக விடாமல் நிறுத்தியது.



"நீ எங்கையும் போக வேணாம் கயல். சொல்ல போனா உன் தோழி மனசுல என்னை பத்தி இருந்த எண்ணங்களை தெரிஞ்சிக்க வச்சதே நீ தான். நீ அவளுக்கு எவ்ளோ முக்கியம்னு எனக்கு தெரியும். அவளோட வாழ்க்கையில உன் முடிவையும் கண்டிப்பா எதிர் பார்ப்பா.... நீயே இங்க இருந்து போனாலும் நான் பேசுனதை ஒன்னு விடாம உன்கிட்ட சொல்லத்தான் போறா. அதுக்கு நீ நேராவே கேட்டுட்டு போ மா."



சுகுமாறனின் பேச்சில் சிறிதாக சிரித்த ஆதியை பார்த்து.. "உனக்கு என்னை பத்தி என்ன தெரியுன்னு இத்தனை நாள் நினைச்சிட்டு இருந்தேன் ஆதி. ஆனா உன் தோழி சொல்லித்தான் என்னை பத்தி உன்னோட எண்ணங்கள் என்னான்னு தெரிஞ்சிகிட்டேன்.நான் காதலிக்கிறது உன்னை மட்டும் தான். நீ எனக்காணவன்னு முடிவு பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. அப்படி இருக்க உனக்கான எல்லாத்தையும் நான் தான பார்க்கணும். உன் அப்பா கிட்ட கேக்குற அளவுக்கு நான் தன்மானம் இல்லாதவன் இல்ல. இரண்டு வருசமா உன் பின்னாடியே அலையுறேன். நீ என்னடானா இப்படி நினைச்சிட்டு இருக்க. உனக்கு சம்மதம்னா சொல்லு இப்பவே என் அம்மா கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்றேன். உன் அப்பா, தங்கச்சி, இந்த கடை, கடன் எல்லாத்தையும் நானே பார்த்துக்குறேன்...." என சுகுமாரன் பேச....



"ஐயோ... !! என்னங்க அப்பா கிட்டலாம் இப்போ பேச வேணாம் ங்க. கொஞ்ச நாள் போகட்டும்..... நானே அப்பா கிட்ட உங்களை பத்தி சொல்லுறேன். அது வரைக்கும் நீங்க பேசாம இருங்க போதும்.." என்று பேசி முடிக்கவும்... சுகுமாறனின் கைவளைவில் ஆதி வரவும் சரியாக இருந்தது. பின்னர் தான் உணர்ந்தாள் தான் பேசியதை. வெக்கப்பட்டு மாறனிடம் விடும்படி கெஞ்ச.... கயலோ சத்தமே இல்லாமல் அங்கிருந்து சென்றாள்.





நாட்கள் வாரங்கள் என அந்த விடுமுறை..... மாதத்தின் கடைசி வாரத்தில் வந்து நிற்க .. கயல் காலேஜ்க்கு திரும்ப செல்லும் நாளை நினைத்து ஆதி வருந்த. அவளை தேற்றும் விதமாக சுகுமாரன் இருந்தான்.



இந்த நிலையில் தான் சுகுமாறன் நாளை மத்தியத்துக்கு மேல்....இரண்டு வாரங்கள் ஊருக்கு செல்ல இருப்பதாக திடீரென முடிவாக..... இப்போதே ஆதியை பார்க்க வேண்டுமென கேட்டான். ஆதி வர மறுக்கவே கயலிடம் சென்று முறையிட தான் அழைத்து வருவதாக கூறினாள்.



"என்ன டி கயல் உனக்குத்தான் நம்ம ஊரை பத்தி தெரியும்ல. இந்த நேரத்துல வாசல் பக்கம் கூட போகவிடமாட்டாங்க.நீ என்னடான்னா அந்த ஒதுக்கு புறத்துக்கு போகலாம்னு சொல்ற. அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். எங்க அப்பாவை விடு உங்க அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் கயல். சொன்ன கேளு மாறன் திரும்ப வரட்டும் பார்த்துக்கலாம். இல்லையா நாளைக்கு காலைல பார்த்துக்கலாம்.... " என்று ஆதி நிலையை எடுத்து கூற...


"இங்க பாரு ஆதி..... நீ ரொம்பத்தான் அண்ணாவை அலைய வைக்கிற. பாவம் டி அவங்க இரண்டு வாரம் உன்ன பார்க்க முடியாதுன்னு ரொம்ப வருத்தப்படுறாங்க. கொஞ்ச நேரம் தானடி... பார்த்துட்டு வந்திடலாம். இந்த ஊருல இருக்கவங்களுக்கு வேற வேலையே இல்ல. சும்மா வாய்க்கு வந்ததை சொல்லிட்டு இருக்காங்க. இன்னைக்கு நம்ம போகத்தான் போறோம்...
நானும் உன் கூட இருக்கமாட்டேன். இப்போஅண்ணாவும் வெளியூர் போறாங்க. நீதான் ஒரேநேரத்துல ரெண்டு பேரும்இல்லைன்னு ஃபீல் பண்ணுவ. வா..... போகலாம்"

என அந்த கிணறு பக்கமாக அழைத்து சென்ற கயல், நீ உள்ள போ ஆதி அண்ணா அங்கதான் இருப்பாங்க. நான் இங்கையே நிக்குறேன். பேசிட்டு வேகமா திரும்ப வரணும். அப்போ வரமாட்டேன்னு சொல்லிட்டு இப்போ அண்ணாவை பார்த்ததும் போக மாட்டேன்னு அடம் பிடிச்சி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காத...



"நானே பயத்துல இருக்கேன். இதுல ரொமான்ஸ் ஒன்னு தான் குறை."..... "நீயும் வா கயல்ன்னு ...எவ்வளவோ சொன்னா மகி நான் தான் கேக்காம அவளை அனுப்பி வச்சிட்டேன். இல்லன்னா அவளுக்கு இந்த கொடுமை நடந்திருக்காது. சும்மா இருந்தவளை நானே கொன்னுட்டேன் மகி......" என அன்று நடந்த சம்பவத்தை சொல்லி அழும் கயலை சமதான படுத்தும் வழி தெரியாது தம்பிக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்திருந்தனர்.



அதே நேரம் தேவிகாவின் சமாதியில் நின்ற உருவமோ எதையோ சமாதி மீது தெளித்து விட்டு.... சிறுதுநேரம்அமர்ந்து .... எதையோ முணுமுணுத்து விட்டுங்கிருக்கும்சமாதி மணலை கொஞ்சம் அள்ளி கொண்டு சென்றது.
 
அந்த உருவம்ங்குறது ஆத்மாவா??

நன்றி ????. சீக்கிரமா என்னன்னு சொல்லிடுறேன். தொடர்ந்து படியுங்கள்.
 
Top