Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

4. விழிமயங்கும் இரவு

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
கீர்த்தியின் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் நோயின் தீவிரத்தை அறிந்து கொண்ட முகுந்த் மீண்டும் ஒரு முறை அனைத்து சோதனைகளையும் எடுக்க சொல்ல, அங்கேயே அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களில் சோதனை அனைத்தும் முடிக்கப்பட்டது. இப்போது தான் ஆரம்ப நிலை என்பதால், சிகிச்சையும் தொடங்கப்பட்டது. அவளுக்கான சிகிச்சை ஆரம்பமானதிலிருந்து ஒரு ஈடுபாடு இன்றி வெறுமனே யாருக்கோ வந்தது என இருந்தவளை பார்க்க பார்க்க.... தன் கடமையே கண்ணாக அவளிற்க்கு மருத்துவம் பார்த்த முகுந்திற்க்கு கோபம் பயங்கரமாக வந்தது. எப்போதும் ஒரு நோயிற்கான சிகிச்சையின் முழு பொறுப்பும் மருத்துவரிடம் இருந்தாலும், அதில் நோயாளியின் மன தைரியம், அவர்களின் ஈடுபாட்டை பொறுத்தே அதற்கான தீர்வு அமையும் என்று எண்ணுபவன் முகுந்த்.அது தான் உண்மையும் கூட. ஆனால் இவளோ இப்பிடி இருக்க, ஏற்கனவே பெண்கள் என்றால் பிடிக்காது என்றவன், இவளின் நடவடிக்கையில் மேலும் காண்டாகி, அன்று கேட்டே விட்டான்.

உனக்கு இந்த டிரீட்மெண்ட்ல இன்ட்ரஸ்ட் இல்லனா, தாராளமா இங்கிருந்து போகலாம். தேவையில்லாம எங்க நேரத்தையும், மருந்தையும் வீணாக்காம....

இன்ட்ரஸ்ட் இல்லாத உனக்கு தரதை விட தேவைப்பட்டும் டிரீட்மெண்ட் கிடைக்காமல் கஷ்டபடுற யாருக்காவது இது கிடைக்கட்டும். என்று சுள்ளென கடிந்து விட்டு ஒரு அனல் பார்வையையும் வீசிவிட்டு, அவனறைக்கு சென்று விட்டான் முகுந்த். இன்னும் கீர்த்தியை நினைக்க நினைக்க அவனுக்கு கோபமாக தான் வந்தது. பின் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மீண்டும் அவளை பார்க்க செல்ல, அதே நேரம் முகுந்தை பார்ப்பதற்காக அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தான் மிதுன்.

முகுந்த் உள்ளே நுழைந்த ஒரு சில நொடிகளிலேயே மிதுனும் உள்ளே நுழைய, பல நாட்கள் கழித்து சந்தித்த ஆர்வத்தில் இருந்த இடம் மறந்து இருவரும் ஆரவாரம் செய்ய, அவ்வளவு நேரம் முகுந்தின் பேச்சில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த கீர்த்தி கண்ணீரை கூட துடைக்காமல், அவர்களை ஆவென பார்த்தாள். பின்னே தற்போது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க பேசி சென்ற ஒருவன், சிரிக்கவே தெரியாதா சிடுமூஞ்சி ஒருவன் என இருவரும் முத்து பற்கள் தெரிய சிரித்து சிரித்து பேசுவது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவளுக்கு.

கீர்த்தி..... மருத்துவமனை இருக்கும் அந்த ஊருக்கு பக்கத்து ஊர் தான். வசதி படைத்த குடும்பத்தில் வாழும் ஒரு அமைதியான அப்பாவி ஜீவன். வாழும் என்பதை விட வாழ திணிக்கப்பட்ட ஒரு ஜீவன். அவளின் ஆரம்ப கதையே வேறு தான். ஆனால் கட்டாயத்தினால் மட்டுமே, அந்த குடும்பத்தில் புகுத்தப்பட்டாள் என்பதே உண்மை. பிறந்து ஓரளவு விவரம் தெரியும் வரை ஆசிரமத்தில் வளர்ந்த கீர்த்தி, உன் உறவினர்கள் நாங்கள் என்று வந்த சிலரின் ஆசை வார்த்தைகளில் அந்த தீரா கொடுமைகளுக்கு நடுவே வந்து மாட்டிக் கொண்டாள். அவ்வீட்டில் வசதிக்கு பஞ்சம் இல்லை தான், ஆனால் அன்பு என்ற சொல்லிற்க்கே பஞ்ச பாட்டு தான் பாட வேண்டும். பணம் பணம் என்று எல்லாவற்றையும் பணத்திலே சாதித்து விடலாம் என்று எண்ணும் ஒரு பெரும் கூட்டம் என்றால் அது அந்த குடும்பம் தான். அன்பால் ஒற்றுமையாய் இருக்கும் குடும்பத்திற்கு மத்தியில் இப்படியும் பணத்திற்காக பொய் வேஷம் போட்டு மொத்தம் ஐந்து குடும்பங்களும் சேர்ந்து இருக்கும் அந்த வீட்டிற்க்கு அவளின் ஐந்து வயதில் தான் வந்து சேர்ந்தாள்..... கீர்த்தி எனும் பெயரில் அம்சவேணியின் மகளாக.

காலம் மாறினாலும் மனிதர்கள் மாற மாட்டார்கள் என்பதற்கு அக்குடும்பம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றே கூறலாம். இதோ பதினெட்டு வருடங்களாகியும் ஒரு சிறு மாற்றமும் இல்லை. அடிமை வாழ்க்கையில் வாழ்ந்து கீர்த்தியும் வளர்ந்து விட்டாள். அவர்களின் செல்வசெழிப்பை பிள்ளைகளை படிக்க வைப்பதில் காட்ட........ அந்த காரணத்தை வைத்தே கீர்த்தியும் படித்துக் கொண்டாள். அவர்கள் செய்த ஒரே நல்லா விஷயம் கீர்த்தியை படிக்க வைத்தது தான். அவளின் விருப்பம் போல பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்று......வேலை என்று தேடும் பொழுது தான் மிதுனை பார்த்தாள். மிதுனின் இறக்குமதி அலுவலகத்தில் மேனஜர் பதவிக்கு ஆள் வேண்டும் என்ற விளம்பரத்தை பார்த்து நேர்காணலுக்கு சென்றாள் கீர்த்தி. ஆரம்ப நிலை தேர்வுகள் எல்லாம் முடிந்து கீர்த்தியுடன் இன்னும் இருவர் என மூவர் இறுதிநிலைக்கு தேர்வாகியிருக்க, கடு கடுவென வெகு சூடாக உள்ளே நுழைந்தான் மிதுன்.

நுழைந்த நொடியே எப்படித்தான் அவன் கண்ணிற்கு அது சிக்கியதோ தெரியவில்லை... கடைசி பிரிவில் இருவர் சிரித்து பேசிக் கொண்டு வேலை செய்யாமல் நிற்பது. வேகமாக வந்து கொண்டிருந்தவன் சட்டென்று நின்று அவ்விருவரையும் அழைத்து வரச் சொன்னான். எதுவும் பேசவில்லை, கேட்கவில்லை... பக்கத்திலிருந்தவனுக்கு ஒரு கண்ணசைவைத்தான் கொடுத்தான்.... அவர்களின் செட்டில்மென்ட் கொடுத்து அப்போதே வீட்டிற்க்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தன் அறைக்குள் நுழையும் முன் நின்று, எல்லோரையும் பார்த்து திரும்பியவன், இது என்னோட ஆபிஸ், இங்க நீங்க வேலை பார்க்கனும்னா என்னோட ரூல்ஸ் படி தான் நடக்கணும், இனியும் அப்பிடித்தான் நடக்கும். மீறி முடியாதுன்னு சொன்னா, இப்போவே கிளம்பிடலாம் என்றதோடு உள்ளே நுழைந்து கதவை பெரும் சத்தத்தோடு மூடினான். வீட்டின் தொல்லை தாங்காது இங்காவது ஆனந்தமாய் இருக்கலாம் என்று வந்தவள், மிதுனின் நடவடிக்கையில் அரண்டு வேலையே வேண்டாம் என்று அங்கிருந்து ஓடி வந்தவள் தான் கீர்த்தி, அடுத்து வேறு எங்கும் வேலைக்கே செல்லவில்லை. நாட்கள் செல்ல,

திடீரென மயக்கம், உடலில் சில மாற்றங்கள், இருமல் வரும்போது இரத்தம் என ஏற்பட, மருத்துவமனை சென்றவளுக்கு அப்போது தான் தெரிந்தது புற்றுநோய் என்று. இதற்கிடையில் வீட்டில் ஏராளமான பிரச்சனைகள் கொடுமைகள், நோயின் தீவிரம் என எல்லாம் சேர்ந்து பாடாய் படுத்தியது கீர்த்தியை. வாழ்க்கையே வேண்டாம், இப்படியே போய் சேர்ந்துவிடலாம் என்று இருந்தவள், ஏதோ தோன்ற முகுந்த் மருத்துவ முகாமிற்கு வந்து சேர்ந்தாள்.

முகுந்த் பேச்சில் கண்ணீர் விட்டு தன்னையும் தான் இருக்கும் நிலையையும் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க இரு கடுவன்களும் சிரித்த முகத்துடன்.

நண்பர்களின் ஆனந்த அலப்பறை முடிய, அப்போது தான் இருவரும் அவளை பார்த்தனர்.


"""""""""""""""""""""""""""""""""""""""


பாதுகாப்பு பணியில் நாட்கள் கடந்து கொண்டிருந்தது மந்த்ராவிற்க்கு. இராணுவத்தில் சுமூக நிலை நிலவும் சமயங்களில் அலுவலக பணிகளையும், கல்வி, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்வது தான் வழக்கம். அன்றும் ஒரு முக்கியமான பயிற்சி தான் நடந்து கொண்டிருந்தது மந்த்ராவின் குழுவிற்கு. தங்களுக்கான பிரத்யேக ஆயுதங்களின் செயல் விளக்கம் தான் அன்றைய பயிற்சியாக அளிக்கப்பட்டது. சிறு பிழை ஏற்பட்டாலும் அதை செயல்பட வைக்கமுடியாது என்பது தான் அதன் வடிவமைப்பு. அனைவரும் வெகு சிரத்தையாக கவனித்துக் கொண்டிருந்தனர். அதிதீவிர நிலையில் உபயோகப்படுத்தப்படும் அந்த கருவி சரியான பயிற்சியும் மன திடமும் இருந்தால் மட்டுமே உபயோகிக்க முடியும். அதன் அனைத்து பயன்பாட்டையும் கூறி முடிக்க, அன்றைய பயிற்சியும் முடிந்தது. அனைவரும் இருப்பிடம் வந்து சேர, மந்த்ரா ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தாள். அவளின் குழுவில் இருப்போருக்கு அவளை பற்றி நன்கு தெரியும் என்பதால் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. எப்படியும் கேட்டால் சொல்லபோவதில்லை, பிறகு எதற்கு கேட்க என்ற எண்ணம் தான் அவர்களுக்கு. அமைதியின் உருவமாய் ஒருமணி நேரத்திற்கும் மேல் அங்கேயே அமர்ந்திருந்தவள் ஏதோ முடிவு செய்தவளாய் அங்கிருந்து வெளியேறினாள்.

அன்றைய இரவில் அவளைக் காண பிரணவ் வந்திருந்தார். பிரணவின் காரசார பேச்சு மட்டுமே அங்கு நடந்து கொண்டிருந்தது. மந்த்ரா ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். அரைமணி நேர பேச்சில் சரி என்ற ஒரு வார்த்தை மட்டும் தான் மந்த்ரா பேசியது. வேறு ஒரு வார்த்தை கூட அவளிடமிருந்து வரவில்லை. தந்தையின் பேச்சிற்கு சரி என்று கூறியவாறே மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள் மந்த்ரா. மீண்டும் தான் செய்ய வேண்டிய செயலுக்கான திட்டத்தை தீட்டியவள் அப்படியே உறங்கிப் போனாள்.

மறுநாள் காலையில் தலையில் சிறு காயத்துடன் பயிற்சிக்கு வந்து சேர்ந்த மந்த்ராவை, என்ன ஆனது என்று கேட்ட நண்பர்களுக்கு வெறும் புன்னகை மட்டுமே பதிலாய். பகல் வேளையில் பணியையும் இரவு வேளையில் வேறு சில வேலைகளையும் செய்து கொண்டிருக்கும்,

மந்த்ராவின் எண்ணங்கள் என்ன என்று தெரிந்து கொள்ள இன்னும் சில பல பகுதிகளை கடந்தால் மட்டுமே முடியும். அதுவரை பொறுமையாக காத்திருப்போம்....

ஒரு வாரம் கடந்திருக்க......

மீண்டும் அந்த இரு மர்ம மனிதர்களின் வருகை..... இன்றைய இரவு நடக்கவிருக்கும் பெரும் திட்டத்திற்காக.

யார் அவர்கள்????? விரைவில்....




தொடரும்........ Prabhaas ???
 
  • Like
Reactions: Ums
Top