Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

5 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ....!!

Advertisement

ILANTHALIR VENBA

Member
Member
5 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ....!!
இதுவரை :
" உன் வீட்டுக்கு மருமவளா வந்து உன் சொத்தை அனுபவிப்பேனு இவளும் இவளோட அண்ணனும் காலைல சொல்லல .... யாரு வந்து யாரு ஊட்டுல வாழுறது ???? " என்று ஆவேசமாக கேட்டாள் ...
இவள் இப்படி நேரில் பார்த்ததை போன்றே சொல்வதை பார்த்த அந்த கெட்ட எண்ணம் கொண்ட அண்ணனுக்கும் தங்கைக்கும் திகைப்பு நீங்கவில்லை ....
*******************************************************************************************
அதன் பின்பு ஊரார் இருவரையும் தனித்தனியாக விசாரிக்க அப்பொழுது அவர்களின் தகுடுத்தித்தோம் வேலை பிடிபட்டது . ஊரார் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கலந்தாலோசித்து கொண்டிருக்க , அவர்கள் இருவரும் ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்வதாக கூறினர் . அதுவே சரியாக இருக்கும் என்று ஊரார் முடிவு செய்து சரி என்று இவர்களும் ஒப்புக் கொண்டனர் . ஊரார் அனைவரும் கலைந்து செல்ல மறுபடியும் அந்த இடம் திருவிழாக் கோலம் பூண்டது .
மாறனின் வீட்டில் சோகமாக வீடு திரும்ப , சுடரின் வீட்டினருக்கு அவள் செய்த காரியத்தில் கோபம் கோபமாக வந்தது . வீடு வந்ததும் அனைவரும் சுடரை எவ்வளவு திட்டியும் அவள் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் ஏதோ யோசித்த வண்ணம் இருந்தாள் . அப்பொழுது அங்கு வந்த அவளது அம்மா
செல்வி : " சுடர் .... சக்தியை எங்கயாவது பார்த்தியா ???? "
சுடர் : " இல்லையே ... காலையில கோவிலுக்கு வந்ததிலிருந்து பார்க்கலை .... உன்கூட தானே மா அக்கா இருந்தா ??? என்று அவளது அம்மாவிடம் அந்த கேள்வியை திருப்பிவிட்டாள் ....
செல்விக்கு இது என்னது புது பிரச்சனை காலையிலிருந்து அவளை பார்க்கவே இல்லையே .. ஒரு வேலை யாரேனும் கடத்தியிருப்பார்களா ??? என்ற எண்ணம் தோன்ற திக்கென்றது . உடனடியாக அவரது எண்ணத்தை சரி செய்தவர் ..
" மறுபடி ஒருமுறை அவ ரூமுக்கு போய் பார்க்கலாம் .. ஒருவேளை பாத்ரூம்லே கூட இருந்துருக்கலாம் .. " என்று தனக்கு தானே கூறிக் கொண்டவர் , மறுபடி சக்தியின் ரூமுக்கு சென்று அவள் இருக்கிறாளா என்று தேடினார். அவள் அங்கு இல்லாது போக வீடு முழுக்கவும் சல்லடை போட்டு தேடியும் அவள் எங்கும் இல்லை . சரி இதைப் பற்றி சுடரின் அப்பாவிடம் கூறவேண்டும் என்று தோட்டத்திற்கு செல்ல அப்போது அவர் கண்ட காட்சி .
மாலையும் கழுத்துமாக சக்தி நின்றுகொண்டிருக்க அவளுக்கு அருகில் யாரோ ஒரு முகம் தெரியாத ஒருவன் நின்றிருந்தான் . இவருக்கு அவளை பார்த்த உடனே அவள் செய்திருக்கும் காரியம் தெரிந்துவிட்டது . இவர் மறுபடி வீட்டிற்கு செல்ல எத்தனித்த சுடரின் அப்பா செல்வி என்று அழைக்க அந்த குரல் என்று ஓங்கி ஒலித்தது . அங்கு நின்றிருந்தவனே ஒரு நொடி ஆடி போய் விட்டான் .
அப்பொழுது அங்கிருந்த இனோவா காரில் இருந்து இன்னும் 4 பேர் இறங்கி இவர்களிடம் வந்தனர் . " இங்கிருந்து போய்விடு .. இதுக்கு மேல நீ எனக்கு பொண்ணும் இல்லை நான் உனக்கு அப்பாவும் கிடையாது ... "என்று கூறி விட்டு இவர் செல்வியின் கைகளை பிடித்துக்கொண்டு வீட்டை நோக்கி விடுவிடுவென நடந்து சென்றார் .
வீட்டிற்கு வந்தவர்கள் சுடரிடம் நடந்தவற்றை கூற சுடருக்கு அறிய என்றானது . அதுமட்டுமின்றி சுடரின் அப்பா "உனக்கும் மாறனிற்கும் அடுத்த மாதம் திருமணம் வைக்கலாம் என இருக்கிறேன்சுடர் .இதற்கு நீ என்ன நினைக்கிறாய் ? " என்று கேட்க அவள் காலை பதில் கூறுவதாக சொல்லி விட்டு உறங்கச் சென்றான் .
செல்விக்கும் ,சுடரின் அப்பாவிற்கும் சொல்லொண்ணா வேதனை . யாருக்குத்தான் இருக்காது ? பாசமாக பொத்தி பொத்தி வளர்த்த பெண்.. படிப்பதற்காக கல்லூரிக்கும் அனுப்ப படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று ஆசையாக கேட்கும் பெண்ணிற்கு மறுப்பு சொல்ல முடியாமல் சுதந்திரம் அளித்து பறந்துவா பறவையே என்று அனுப்பினால் அவளது விருப்பத்தை கூட நம்மிடம் கூறமுடியாமல் ஒரு கோழையாக இன்று மாலையும் கழுத்துமாக நம்மை நிராகரித்து திருமணம் முடித்து வந்திருக்கிறாள் என்ற எண்ணமே சுடரின் அப்பாவிற்கு கோபத்தை வரவழைத்தது .
யார் சொன்னார்கள் வீட்டை விட்டு வெளியேறி வீட்டினருக்கு தெரியாமல் திருமணம் செய்பவர்கள் தைரியமான முடிவு எடுக்கிறார்கள் என்று ? காதலிப்பதை வீட்டினரிடம் சொல்லி , வீட்டினர் மறுத்து , அவர்களிடம் போராடி , அவர்கள் சம்மதம் என்று கூறும் வரை காத்திருந்து , அவர்களுக்கு புரிய வைத்து , திருமணம் முடிப்பவர்களே தைரியசாலிகள் . அந்த தைரியம் இல்லாதவர்கள் தான் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கின்றனர்.
செல்விக்கு சக்தியின் மேல் கோபம் எல்லாம் இல்லை .. வருத்தம் தான் . இவ்வளவு நாட்களாக இவரிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லையே என்ற வேதனை மட்டுமே அவரிடம் இருந்தது . அந்த வேதனை கண்ணீர் துளிகளாக உருமாற இரவு முழுவதும் கண்ணீருடன் கழித்தார் செல்வி . அவர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சியை அவர்கள் தாங்கிக் கொள்வார்களா ??
காலை எழுந்து செல்வி தனது அன்றாட பணிகளை முடித்துவிட்டு, சுடருக்கென சுக்கு காபியை போட்டுக்கொண்டு அவளது அறைக்கதவைத் திறக்க சுடரின் அறையும் வெற்றிடமாக இருந்தது . ஒரு மகள் திருமணம் முடித்து விட்டு கூறி சென்றிருக்க இவ்வளோ இவரது தந்தைக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள் .
அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு இவர்களது அறை நோக்கி சென்றாள் செல்வி சுடரின் அப்பா வெளியூர் செல்வதற்காக கிளம்பி கொண்டிருக்க அவரிடம் இந்த கடிதத்தை நீட்டினாள் சுடர் வீட்டில் இல்லை இந்த கடிதம் மட்டுமே அந்த டேபிளில் இருந்தது என்று கூறிவிட்டு செல்வி விடுவிடுவென வெளியேறிவிட்டார்அதை பிரித்து படிக்கத் தொடங்கினார்
அன்புள்ள அப்பாவிற்கு உங்கள் மனதை மேலும் ரணமாக்கும் துணிந்த உங்களது ஆசை மகன் எழுதிக் கொள்வது ....
தயவுசெய்து என் கதையைப் படிக்க சில தருணங்களை எடுத்துக் கொள்ளுங்கள்; இது உங்களுக்கு எந்த வகையிலும் புரிந்தாலும் , இந்த வார்த்தைகளை நான் எழுதியதன் நோக்கம் நிறைவேறும் .
உண்மையை கூற வேண்டுமென்றால் நான் ஒரு திருநம்பி . இது வெறும் வாக்கியம் மட்டுமில்லைனு உங்களுக்கு புரியும்னு நினைக்குறேன் ப்பா . கொஞ்சம் நேரம் எடுத்து என்னையும் நான் சொல்ல வருவதையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் .
இதை நான் இப்போ சொல்லுறதை தவிர எனக்கு வேற வழி இல்லைப்பா . என்னை நீங்க மாறனுக்கு திருமணம் செஞ்சு வைக்கிறேன்னு விளையாட்டுக்கு சொல்றப்போ கூட என்னோட மனசு என்னை குத்திகொள்ளுது அப்பா . அவன் இன்னைக்கு காலையிலே மனசுலே இருந்து கேட்டான்பா .. கண்ணுலே அவ்ளோகாதலை தேக்கிவெச்சு என்னை கல்யாணம் செஞ்சுக்கோ சுடர்னு கேட்டான்பா . அந்த நிமிஷம் என்னோட மனசு என்னை குத்தி கிழிச்ச மாதிரி இருந்துச்சுப்பா . என்னோடுடைய உடம்பில் தினமும் மாற்றம் தெரியுது ப்பா . என்னை கொஞ்சம் கொஞ்சமா கொல்லுது பா .
அப்பா உங்க மனசுலே இப்போ என்ன நினைக்குறிங்கனு எனக்கு தெரியலை ப்பா . எந்த நேரத்துலே எனக்கு சுடரொளினு பெரு வெச்சு சுடர்னு கூப்பிட ஆரம்பிச்சீங்களோ தெரியலை . நான் சுடராக மட்டுமே இருக்க ஆசைப்படறேன் ப்பா . எனக்கு இருந்த மனஅழுத்தத்தை வார்த்தையால் விவரிக்க முடியலை ப்பா . ஒவ்வொரு தடவை செவ்வந்தி அத்தை மாறனை டேய் தம்பின்னு கூப்பிடறப்போ எனக்கு நீங்களும் அம்மாவும் அப்டி என்னை கூப்பிட மாட்டிங்களானு ஏக்கமா இருக்கும் ப்பா .
நான் பையனா பொறக்கணும்னு ஆசைபட்டிங்கனு பாவாயி கிழவி அடிக்கடி சொல்லும் ப்பா . ஆனா நான் உங்க ஆசையை கெடுத்துட்டேன்னு சொன்னாங்க ப்பா . ஒருவேளை நான் பையனா மாறுனா என்னை ஏத்துப்பீங்களானு எனக்கு தெரியலை ப்பா . எனக்கு அந்த பயத்தோட உங்ககிட்ட சொல்ற தைரியம் இல்லைப்பா .. நான் அப்டி மாறி வாழணும்னு நினைச்சாலும் எந்த அளவுக்கு இந்த சமூகத்துல அது சாத்தியம்னு தெரியலை ப்பா . எனக்கு என் உணர்வுகள் முக்கியம்னு தோணுதுப்பா . அது தப்பான்னு தெரியலை .. ஆனா , என்னுடைய உணர்வுகளை என்னாலே இழந்துட்டு வாழ்க்கை முழுக்க ஒரு ஜடமா இருக்க முடியும்னு தோணலைப்பா . அதைவிட முக்கியமான விஷயமாக மாறன் . அவன் என்னப்பா தப்பு பண்ணான் ??? நான் இங்க இருந்தா ஒன்னு அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனையும் என்னையும் நோகடிச்சுட்டு ஒரு வாழ்க்கை வாழனும் . அப்டி இல்லைனாலும் , அவன் என்னை கண்முன்னாடி இந்த நிலையில் வெச்சுகிட்டு அவன் ஒரு நல்ல வாழ்க்கை வாழுவானு எப்படிப்பா உறுதியா சொல்ல முடியாது ப்பா .
என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து .. என்னோட ஒவ்வொரு அணுவும் சந்தோஷத்தோட பறக்கணும்னு ஆசைப்படறேன் ப்ப்பா . இந்த சமுதாயம் எனக்கு அந்த சுதந்திரத்தை இங்கே கொடுக்காது ப்பா . என்னாலே இவ்ளோ நாள் என்னை மறச்சிட்டு வாழ்ந்த மாதிரியே வாழ முடியும்னு தோணலைப்பா . என்னை புரிஞ்சிக்க முடியுதாப்பா உங்களாலே ??
என்னையே நான் தொலைச்சிட்டு , என்னோட இயல்பை மறந்துட்டு , என்னோட மனசை கொன்னுட்டு என்னாலே இங்க வாழ முடியாதுப்பா . என்னோட வாழ்க்கையை புதுசா வாழ போறேன்ப்பா . கண்டிப்பா எந்த தப்பான முடிவும் எடுக்க மாட்டேன்பா . ஒரு நாள் நீங்க மெச்சுற அளவுக்கு வளந்துட்டு வரேன்பா இங்க . இப்போவும் சொல்றேன் ப்பா . என்னாலே முடியும் ப்ப்பா . என்னை நம்புங்க ப்பா .
இன்னொரு முக்கியமான விஷயம் ப்பா . அக்காவை கல்யாணம் பண்ணிருக்கவனை நம்பாதீங்க ப்பா .
என்னால முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வந்துறேன் ப்பா .
இப்படிக்கு உங்கள் மகன் ,
சுடர் .

என்று முடிந்திருந்தது அந்த கடிதம் .
சரியாக அப்பொழுது சக்தியின் விவரம் கேள்விப்பட்டு செவ்வந்தி அழுதுகொண்டே செல்வியை கட்டிக்கொண்டு அழ ... மாறன் சுடரின் அப்பாவை காண சென்றான் . சரியாக அவர் படித்து முடித்திருந்த நேரம் அவன் உள்ளே நுழைய அந்த கடிதத்தை அவனிடம் நீட்டினார் .
என்று யோசித்துக் கொண்டிரும்போளுதே சுடரின் மொபைல் இசைக்க அதை எடுத்து உயிர்ப்பித்து ஆதூவிடம் " வந்துட்டு இருக்கேன் ஆதூ ...இன்னும் 5 நிமிஷத்துல அங்க வந்துருவேன் " என்று கூறிவிட்டு நாளை வரவிருக்கும் அந்த விழாவிற்கான பரிசுகளை எப்படி கொடுப்பதெனயோசித்துக்கொண்டே கடை வந்துசேர்ந்தான் சுடர் .
*******************************************************************************************
நாளை :
ஆதூ : "ஹே ... எதுக்கு டா கண்ணை காட்டிவிட்டுட்டு இருக்க ?? "
சுடர் : " சும்மா இரு டி .. " என்று முதலில் இவளை அந்த பூட்டியிருந்த அறையில் விட்டுவிட்டு , அடுத்து அவர்களது அன்பு மகனை கைகளில் அள்ளி எடுத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான் சுடர் .
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
இளந்தளிர் வெண்பா டியர்
 
Last edited:
Sorry பா last ud யில் நான் கேட்ட இறந்த சந்தேகம் இப்போ தெளிவகிடுச்சு.... intro ud யில் இருந்தே அந்த சந்தேகம் இருந்துச்சு.... ஆனாலும் ஏதோ typing mistake யா இருக்குமோ அப்படினு நினைச்சிட்டேன்... very sorry.... இது வேற ட்ராக் of story.... நினதானமாக இதோட travel பண்ண நானும் வரேன்
 
Top