Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

6) கல்யாண அகதிகள்

Aarudhra jeevitha

New member
Member
ப்ளீஸ் தாமஸ் நான் சீக்கிரமா வீட்டுக்கு போகணும் இல்லனா அப்பா ஏகப்பட்ட கேள்வி கேப்பாரு...

நான் வேற சர்ச்சுக்கு போயிட்டு வரேன் பொய் சொல்லி இருக்க கர்த்தர் என்னை மன்னியுங்கள் என்று ரியா சிலுவை போட்டுக்கொண்டாள்...

ரியா வர வர நீ ரொம்ப மோசம்பா மின்ன மாதிரி நீ என் கூட டைம் ஸ்பென்ட் பண்றதே இல்ல காலேஜ் போனதில் இருந்து ரொம்ப ஓவரா சீன் போடா ஆரம்பிச்சுட்ட நானும் பாஸ் ஆகி இருந்தா உன் கூட காலேஜ் படித்திருப்பேன் என்ன பண்றது கர்த்தர் என்னை மட்டும் சோதிக்கிறார் என்று கண்கலங்க....

ஐயோ தாமஸ் ஏன் எப்ப பார்த்தாலும் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கீங்க இப்ப என்ன ஆச்சு என்ன இருந்தாலும் நீங்க வசதியானவர் உங்களுக்கு பணவசதி நிறையவே இருக்கு அதனால சொந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கிறீங்க ஆனா நான் அப்படியா படிக்கணும் வேலைக்கு போகணும் சம்பாதிக்கணும் எங்க அம்மா அப்பா க்கு எல்லாம் செய்யணும் .....

நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட அவங்களுக்கு எல்லாம் செய்யலாம் கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட பொருள் எல்லாம் உனக்கு சொந்தம் அதனால நீ கவலையே படாதே ..

காலேஜ் முடியனும் நம்ம ரெண்டு கல்யாணம் பண்ணிக்கலாம் அப்புறம் நீ நானும் புருஷன் பொண்டாட்டி என்று இளைஞர்கள் எப்போதும் போல தன் காதலிக்கு கொடுக்கும் ஐசை கொடுத்தான் தாமஸ்....

ரியா விரைவாக தன் வீட்டிற்கு சென்றாள் அவளின் தந்தை வரண்டாவில் சேரில் அமர்ந்துகொண்டு செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்தார் ரியாவை பார்த்தவுடன் ..

என் கண்ணா இவ்வளவு லேட் ..
டைம் கீப்பர் பண்ண மாட்டியா டிசிப்ளினா இருக்கனும் எப்பவுமே இந்த மாதிரி லேட்டாக நா உன்ன எதுக்கும் லாயக்கு இல்ல ன்னு சொல்லிடு வாங்க எப்பவுமே சுறுசுறுப்பா டைம் கீப்பர் பண்ணி இருக்கணும் புரிஞ்சுதா....

சரி அப்பா என்று அமைதியாக உள்ளே சென்றாள் ரியா....

ரியா ஃபாதர் கிட்ட தூபகலசம் குடுக்க சொன்னேனே குடுத்தியா....

குடுக்காம இருப்பன ஆமா முதல்ல நாம பாத்துக்கிட்டா அதுதான் கொடுத்தேன்....

ஃபாதர் போன் பண்ணாரு இன்னிக்கி நீ சர்ச் விட்டு சீக்கிரமா கிளம்பிட்டியா மே ஏன்....

அது ...
அம்மா வெளியே சில குழந்தைங்க நின்னுகிட்டு இருந்தாங்க அவங்களை பார்க்கும் போது ஆசையா இருக்குது குழந்தைகளோட செலவு பண்ற நேரம் கூட கடவுள் கூட இருக்கிறது தானே அதனால் தான் கொஞ்ச நேரம் பிரேயர் பண்ணிட்டு வெளியே குழந்தைகளோட பேசிக்கொண்டிருந்த அவங்களுக்கு பண் பிஸ்கட் வாங்கி கொடுத்தேன்....

வெரி குட் ரியா நீ லேட்டா வந்ததுக்கு இதுதான் காரணம் சொல்லி இருந்தா அப்பா என்ன இந்த தண்டிக்க வா போறேன்

இல்லாதவர்களுக்கு உதவி பண்றது தான் உண்மையான இறை வழிபாடு எல்லா மதத்திலும் சொல்லி இருக்கு நீ என் பொண்ணு அதனால நீ தைரியமா எந்த ஒரு காரியத்தையும் உன் பொய் சொல்லாமல் செய்யலாம் உன் மேல எனக்கு அதிகப்படியா நம்பிக்கை இருக்கு சரி மேல போய் பிரஷ் ஆகி வா.
உனக்காக தான் நாங்க சாப்பிடாம காத்துக்கிட்டு இருந்தோம் சீக்கிரம் வா.....

ரியா குடுகுடு என்று மாடிக்கு சென்று கட்டிலுக்குக் கீழே ஒரு இடுக்கில் அவள் மறைத்து வைத்திருந்த ஒரு செல்போன் அதை எடுத்து தாமஸ் என்ற எண்ணிற்கு அழைப்பு விடுக்க எதிர்முனையில் எடுத்தவன் செல்லம் வீட்டுக்கு வந்து சேர்ந்தது சாப்பிட்டு ரெஸ்ட் எடு புரிஞ்சுதா....

இப்பதான் தாமஸ் வந்த கேட்டா வந்தது அப்பா ஒரே கேள்வி மேல கேள்வி எப்படியோ பொய் சொல்லி சமாளித்தேன்...

இதுக்கே இப்படின்னா நாளைக்கு உங்க அம்மா ஒத்துக்காம இருந்தா நாம ஓடிப்போயிரும் கல்யாணம் பண்ணி ஆகணும் அப்ப என்ன பண்றது....

என்ன பண்றது எதை பத்தி யோசிக்காம கண்ணமூடி உங்க பின்னாடி வரப்போறான் அவ்வளவுதான் தாமஸ் நான் உங்களை மட்டும் நம்பி இருக்கேன்....

எதுக்கு நீ இவ்ளோ எமோஷனல் ஆகுற நான் உனக்கு தான் நல்லபடியா நம்ம கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழனும் சரி செல்லம் நான் வரேன் வேலைக்கு போக வேண்டும் என்று போனை அணைத்தான்....

ரியா பெருமூச்சோடு எப்படியும் இன்னிக்கு தாமச பார்த்து பேசணும் இதுக்கு அப்புறம் எப்ப பேச போறோமோ என்று புலம்பிக் கொண்டே முகத்தை கழுவிக்கொண்டு வேறு உடைக்கு மாறி உணவருந்த அனைவரும் மேஜையில் அமர்ந்தனர்....

ரியா தாய் தந்தையருக்கு ஒரே மகள் அப்பா மிலிட்டரியில் இருந்து ஓய்வு பெற்றவர் காலம் தாமதமாகத்தான் திருமணம் செய்துகொண்டார் அதனால்தான் ஒரே மகள் ரியா மனைவி கஸ்தூரி வேறு மதமாக இருந்தாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு கலப்பு திருமணம் செய்து கொண்டனர்..

இருவரும் அவரவர் மத வழிபாட்டில் தான் வாழ்கின்றனர் ரியாவிற்கு இரண்டு மதக் கொள்கைகளை பின்பற்றி வருகிறாள் தனிப்பட்ட முறையில் ஹிந்து கிறிஸ்டியன் என்ற முறையில் அவள் வளர்க்கவில்லை அவள் கோவிலுக்கும் செல்வாள் சர்ச் கும் போவாள் அவளுக்கும் அது பிடித்து இருந்தது .....

ரியா மீது குடும்பமே நம்பிக்கை உள்ளது அவளின் செல்ல தாத்தா பாட்டி பேத்தி மீது உயிரையே வைத்திருக் கின்றனர் ரியாவை நல்லபடியாக தான் வந்திருக்கிறோம் என்று அனைவர் நம்பிக்கையில் இருக்கின்றனர் மிகவும் நல்ல பெண் தான் தாமஸ் அவள் வாழ்க்கையில் வரும் வரை....

தாமஸ் ஊரிலேயே கொஞ்சம் வசதியான வீட்டு இளைஞன் பொறுப்பற்று படிக்காமல் ஊர் சுற்றிக்கொண்டு பரீட்சையில் நான்கு முறை தோல்வியுற்றான் ...

நான்காம் முறை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுதுதான் ரியாவை சந்தித்து அவருடன் நட்பு பழகி காதல் ஆக இருக்கிறது இப்பொழுது ரியா அவன் வசதியான வீட்டுப் இளைஞன் என்பதால் வீட்டில் உடனடியாக ஒத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அவனை நேசிக்க ஆரம்பித்தாள் அவனும் ரியா மீது உயிரையே வைத்திருந்தான்....

தினமும் அவனை சந்தித்தாள் ஊரில் இருப்பவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்கள்

அதனால் வாரம் ஒரு முறை சர்ச்சுக்கு பின்புறம் இருக்கும் தோட்டத்தில் இருவரும் சந்தித்தனர்

வார ஞாயிற்று கிழமை மட்டும் இருவரும் மனதார சிறிது நேரம் பொழுதை கழித்துவிட்டு தான் செல்வார்கள் அப்பொழுது

ஒரு நாள் தாமஸ் அவளுக்கு ஒரு அலைபேசி வாங்கி கொடுத்தான் அது பட்டன் வைத்த போன் நோக்கியா அதை வீட்டில் யாருக்கும் தெரியாமல் வைத்துக்கொள் நான் உன்னிடம் பேச வேண்டும் என நினைத்தால் அதில் மெசேஜ் அனுப்புவேன்

பிறகு யாரும் இல்லா நேரம் பார்த்து எனக்கு கால் செய்யலாம் ஆனால் எப்பொழுதும் நான் உனக்கு போன் செய்ய மாட்டேன் செய்தால் மாட்டிக் கொள்வோம் என்று உஷார் நிலையில் இருவரும் காதலித்தனர்......

வாரம் ஒருமுறை வார இதழ் போல் இவர்கள் காதலும் கடந்தது....

அப்பொழுது ரியா கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து இருந்தால் அன்று கடைசி பரிட்சை முடிந்த பிறகு உன்னை சந்திக்கிறேன் என்று சொல்லி இருந்தால் அதனால் அவளுக்காக நீண்ட நேரமாக காத்துக்கொண்டிருந்தான் தாமஸ்

ரியா வரவில்லை அப்பொழுது அவளது தோழன் விக்னேஷ் அவளை பைக்கில் தோட்டத்திற்கு முன்புறம் ட்ராப் செய்து விட்டு சென்றான்.....

ரியா தாமஸ் இடம் ஓடிவந்து ரொம்ப சாரி தாமஸ் இன்னிக்கி டீச்சர்ஸ் ப்ரொஃபஸர் எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தாங்க அதனால்தான் ப்ரோக்ராம் முடிய லேட் ஆயிடுச்சு ரொம்ப சரி எனக்காக ரொம்ப வெயிட் பண்ணிய எனக்கு நேரமும் ஆயிடுச்சு நாம எப்பவும் போல ஞாயிற்றுக்கிழமை மட்டும் பார்த்துக்கலாம் நான் கெளம்புறேன் அதை சொல்லத்தான் வந்தேன் என்று சொல்ல...

அவள் கைகளை பிடித்து இழுத்தான் .....

என்ன தாமஸ் என்ன ஆச்சு ஏன் இப்படி பேசாம என் கையை இப்படி முறுக்கு ரிங்க விடுங்க எனக்கு வலிக்குது என்று அவள் தன் கைகளை விடுவிக்க முயற்சித்தாள்....

ஆமா அவன் யாரு காலேஜில் லவ்வரா என்று கேட்க...

என்ன தாமஸ் இப்படி கேக்குறீங்க அவன் என்னோட ஃப்ரெண்டு சின்ன வயசு இருந்து நாங்க ஃப்ரண்ட்ஸ் உன்கிட்ட கூட சொல்லி இருக்கேன் நம்ம காதல் கூட அவனுக்கு தெரியும் எங்க லேட்டாகும் என்றுதான் என்ன பைக்ல டிராப் பண்ணாரு அவங்க கூட என்ன வச்சு சந்தேகப்பட்டு பேசுறீங்களே....

காலேஜ் போனதில் நீ சுத்தமா மாறிட்ட ரியா எனக்கு 25 வயசு ஆகுது இன்னும் கல்யாணம் ஆகல சொந்தக்காரங்க எப்போ கல்யாணம் எப்போ கல்யாணம் அப்படின்னு கேட்டுகிட்டே இருக்காங்க எங்க அப்பா என் பையனுக்கு புடிச்ச பொண்ணு தான் கல்யாணம் பண்ணி வைப்பேன் சொல்லிட்டாரு உனக்காக குடும்பமே காத்துக்கிட்டு இருக்கு ஆனா நீ படிப்பு ஃப்ரெண்ட்ஸ் உன்னோட குடும்பம் அதைப் பற்றி மட்டும் தான் பேசுற....

நான் என்ன பண்ணமுடியும் விக்டர் உங்க வீட்ல வசதி வாய்ப்பு எல்லாம் இருக்கு அதனால் தான் 25 வயசுல உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறார்கள் ஆனா என்னை மாதிரி நடுத்தர வர்க்கத்து பொண்ணுங்களுக்கு படிப்பு தான் எல்லாமே இப்ப கூட பாருங்க கேம்பஸ் இன்டர்வியூ ல டிசிஎஸ் கம்பனில செலக்ட் இருக்க சென்னையில் வேலை நல்ல சம்பளம் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல வழி கிடைச்சிருக்கு.....

அப்படிப்போடு கதை சூப்பர் நீ இங்கே இருக்கும் போது என்கிட்ட சரியா பேச மாட்ட இப்போ மெட்ராசுக்கு போற அதுவும் பெரிய கம்பெனி வேலை தான் போங்கம்மா பொங்க உனக்காக என்னோட சாப்ட்வேர் கம்பெனியில் 25 ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு வேலை பேசி வச்சிருக்கேன் என்கிட்ட வேலை வேணும் கேட்டா தர போறேன் என்கிட்ட கேக்குறதுக்கு என்ன உனக்கு கௌரவ குறைச்சல்....

தாமஸ் ப்ளீஸ் எல்லாமே தப்பா எடுத்துக்காதீங்க எனக்கு 20 வயசு தான் ஆகுது இன்னும் நான் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு ஆனா நீங்க என்ன புரிஞ்சுக்கவே இல்ல என் மேல அதிக அளவு காதல் அதனால நீங்க இப்படி பேசுறீங்க சரி இப்ப சொல்லுங்க நான் என்ன செய்யணும்....

வேற என்ன காலேஜ் முடிஞ்சிடுச்சு நம்ம கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான் நாளைக்கு உங்க அம்மா அப்பாவ பாத்து நான் பேச வரேன் நீ அமைதியா இருந்தாலே போதும்...

சரி தாமஸ் நீங்க சொல்லிட்டீங்க வேற என்ன இருக்கு எனக்கு எல்லாமே நீங்க தான் என்று கொஞ்சம் கூட ஆலோசிக்காமல் ரியா அமைதியாக சென்று விட்டாள்....

மறுநாள் தாமஸ் அவள் வீட்டில் பேச வழக்கம்போல அனைத்து பெற்றோர்களும் சொல்வதுதான் உனக்கு என் பொண்ணு தர முடியாது உனக்கு சொத்து வசதி எல்லாம் இருக்கலாம் ஆனா உனக்கு பொறுப்பு இல்ல என் பொண்ணை எப்படி உனக்கு தர முடியும் என்று அவனிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி பேச அவன் கோபத்தில் சென்று விட்டான்....

ரியாவிற்கு சற்று பயமும் சற்று நிம்மதியாக இருந்தது காரணம் தான் அவனை காதலிப்பதாக பெற்றோர்களிடம் மாட்டி விடவில்லை வெறும் எனக்கு ரியாவை பிடித்திருக்கிறது திருமணம் செய்து வையுங்கள் என்று தான் கேட்டான் நல்லவேளை வீட்டில் எங்கே திட்டு அடி விழுமோ என்று பயந்து விட்டாள் ரியா....

‌ ஒன்றும் தெரியாத அப்பாவி போல ரியா அப்பா என்ன ஆச்சு என்ன சண்டை என்று கேட்க....

அது ஒன்னும் இல்ல மை சைல்ட் அவன் ஒரு பொறுப்பில்லாத பையன் பேரு தான் பணக்கார வீட்டு பையன் ஆனா ஒழுங்கா படிக்கல அவனுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசையா..
என்கிட்டே வந்து பொண்ணு கேக்குறான் உன்ன நல்ல பையனுக்கு கைப்பிடித்து கொடுப்பேன் வசதி வாய்ப்பை இன்னிக்கு வரும் நாளைக்கு போகும் ஆனால் ஒழுக்கம் உண்மை நேர்மை அதெல்லாம் பிறந்ததிலிருந்து ஒருத்தனுக்கு இருக்கணும் அப்படிப்பட்ட ஒருத்தனுக்கு தான் உனக்கு அனுப்பி வைப்பேன் அவ எந்த மதத்தில் இருந்தாலும் சரி....

தன் தந்தை சொல்லியது அவள் காதலிக்காமல் இருந்திருந்தால் நினைத்திருக்கும் ஆனால் தன் காதலனை இப்படி பேசுகிறாளே என்று மறுபுறம் அவளுக்கு கஷ்டமாக இருந்தது என்ன தான் இந்த வீட்டில் அவளுக்கு சுதந்திரம் இருக்கிறது அவனோடு இருக்கும் சிறிது நேரம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் அவன் என்ன பொறுக்கியா நல்லவன் என சரியாக படிப்பு ஏற வில்லை அதனால் குடும்பத் தொழில் செய்து வருகிறார் இதில் என்ன தவறு இருக்கிறது என்று பிரியா தற்போது நிலையை மட்டுமே யோசித்து தவறான எண்ணத்தை நினைத்துக் கொண்டிருக்கிறாள் அதேசமயம் தாமஸுக்கு தன் ரகசிய அலைபேசி மூலம் போன் செய்ய....

அவனோ செல்லம் எனக்கு உன் மேல கோவம் இல்ல வெறும் உங்க அம்மா அப்பா கிட்ட பேசின அவங்களுக்கு என்ன பிடிக்கல ஆனா என்ன பத்தி உனக்கு தானே எல்லாமே தெரியும் எனக்காக நீ மட்டும் தான் உனக்காக நான் மட்டும் தான் நீ இல்லாம நான் செத்துருவேன் டி நம்ம வீட்டுக்கு வந்துரு நம்ம நிம்மதியா இருக்கலாம் அப்புறமா குழந்தையோட ஓர் இல்ல சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து உங்க அம்மா கிட்ட போனா நிச்சயம் உன்னை எடுத்துப்பாங்க....

ரியா விற்கும் இதுதான் சரி என்று தோன்றியது

இப்பொழுது இவனை விட்டு விட்டு வீட்டில் பார்க்கும் பயணம் செய்து கொண்டால்

எங்கே நிம்மதி இருக்கும் இதுவே மனதிற்குப் பிடித்த தாமஸ் ரோடு வாழ்க்கை வாழ்ந்தால் சிலகாலம் தாய் தந்தையர் பேசமாட்டார்கள் பிறகு நம்மோடு சேர்ந்து விடுவார்கள் இது தானே அனைத்து வீட்டிலும் நடக்கிறது சரி

என்று இரவு தாமஸ் வீட்டிற்கு செல்லலாம் என்று அவனுக்கு போன் செய்து சொல்ல அவனோ இப்போது என் வீட்டிற்கு வர வேண்டாம் பிரச்சனையாகிவிடும் நாம் இருவரும் வேறு ஊருக்கு செல்லலாம் நான் பேருந்து சீட்டை இரெடி செய்கிறேன் சொல்ல...

இரவு ஒன்பது முப்பதுக்கு உன் வீட்டில் பின்னால் நான் நிற்பேன் ஓடி வந்து விடு என்று தன் காதலிக்கு அறிவுரை சொன்னான் காதலன் தாமஸ்....

ரியா கடிகாரத்தை பார்க்க மணி ஏழு இன்னும் இரண்டரை மணி நேரம் தான் இருக்கிறது

அது வரையாவது பெற்றோர்களிடம் நேரத்தை செலவழிக்கலாம் என்று பெற்றோர்கள் உடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தால் அவர்களிடம் கள்ளம் கபடமற்ற சிரிப்பை கண்டவள் மனதில் ஏதோ உறுத்தியது

நாம் செய்வது தவறா என்று ஆனால் நான் இல்லாவிட்டால் அவனது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்...

ஏன் இவர்கள் வாழ்க்கை வாழ்ந்து விட்டார்கள் ஆனால் என்னை நம்பி இருக்கும் தாமஸுக்கு இனி தான் வாழ்க்கை

என்னால்தான் வாழ்க்கை அதனால் நாம் செய்யப்போவது தவறு இல்லை என நினைத்துக் கொண்டால் சிறிது நேரம் கழித்து அம்மா நான் தூங்க போறேன் என்று மாடிக்கு சென்று கதவை சாத்திக் கொண்டாள்

தனக்கு தேவையான துணிகளையும் அவளுக்கு என்று தன் தந்தை வாங்கிக் கொடுத்த சில நகைகளையும் எடுத்து கொண்டாள் அப்போது யாருக்கும் தெரியாமல் பீரோவில் இருக்கும் இருபதாயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டாள்....

சரியாக மணி ஒன்பது 25 ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க அங்கே தாமஸ் அவளுக்கு கை காட்டினான் அதை புரிந்து கொண்ட அவள் பின்புறம் படிக்கட்டு வழியாக கதவை திறந்து சென்று விட்டாள்.....

மறுநாள் காலை.....

ரியாவின் தாயார் கஸ்தூரி தன் மகளுக்கு காபி எடுத்துக்கொண்டு செல்ல அங்கே ரியாவை காணவில்லை துணிமணிகளும் காணவில்லை அவளுக்கென்று வைத்த நகைகளும் இல்லை பணமும் இல்லை ப்ரியாவும் இல்லை என்னவாயிற்று குழப்பமாக இருக்கிறதே தன் கணவனை அழைத்தாள்...

அறை முழுக்க சோதனையிட்டனர் அப்பொழுது ஒரு கடிதம் இருந்தது....

அன்புள்ள அம்மா அப்பாவிற்கு உங்கள் மகள் ரியா எழுதிக்கொள்வது உங்களுடைய இனிய வாழ்வு முடிந்துவிட்டது ஆனால் என்னால் ஒருவருக்கு இனிய வாழ்வு தொடங்க உள்ளது அவருக்காக நான் சென்று விடுகிறேன் உங்கள் ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செல்கிறேன் தாமஸ் என்னை மனதாக விரும்புகிறார் நான் இல்லை என்றால் இறந்துவிடுவார் அதனால் தான் செல்கிறேன் முக்கிய காரணம் எனக்கும் தாமஸ் பிடித்திருக்கிறது 5 வருடமாக நான் அவரை காதலித்துக் கொண்டிருக்கிறேன் அவர் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம் நன்றாக படித்து இருக்கிறேன் டிகிரியும் வாங்கிவிட்டேன் பிறகு என்ன இருக்கிறது நாங்கள் வேறு ஒரு ஊரில் நன்றாக வாழ போகிறோம் என்னை மன்னித்து விடுங்கள்.....

இப்படிக்கு உங்கள் அன்பு மகள் ரியா...

கடிதத்தைப் படித்தவர்கள் அடிப்பாவி மகளே இப்படி செஞ்சு பூட்டியே நாங்க என்னடி உனக்கு நல்லா தான வளர்த்தோம் ஒரு பொண்ணுக்கு என்னென்ன தேவையோ அதெல்லாம் உனக்கு நல்லா தானே கொடுத்து வளர்த்த என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல இப்படி அவசரப்பட்டு டியே....

அனைவரும் தாமஸ் வீட்டிற்கு சென்றனர் அவரிடம் என் மகளை எப்படியாவது தங்கள் மகனிடம் சொல்லி அனுப்பி விடுங்கள் அனைத்தும் பொறுமையாகப் பேசி முடித்துக் கொள்ளலாம் என்று கேட்க அவர்களோ இவர்கள் தலையில் பெரிய இடியை போட்டார்கள்.....

தாமஸ் எப்பயோ வீட்டை விட்டுப் போயாச்சு

பிரண்ட் வீட்ல உதவாக்கரையா இருக்கிறான் சின்னவயசு பொறுப்பு இல்லன்னு அவனோட அப்பா திட்டி வளர்த்திருக்கிறார்

அதுவுமில்லாம அவளுக்கு அம்மா கிடையாது சித்திதான் இதுதான் சாக்குன்னு அவன் வீட்டை விட்டு துரத்திய ஆச்சு மூணு நாலு வருஷமா அவன் தனியாகத்தான் இருக்கிறான் அவனுக்கு சொத்து சுகம் எதுவுமே கிடையாது அவனே ஒரு பிச்சைக்கார அவனை நம்பி உங்களை போன்று அனுப்பி வைத்து இருக்கீங்க என்ன அம்மா அப்பாவை என்று அந்தப் பெண்மணி இவர்களை திட்டி விட்டு சென்றுவிட்டார்.....

ரியா தாமஸ் இருவரும் ஒரு சர்ச்சில் திருமணம் செய்து கொண்டு டெல்லியில் குடிபெயர்ந்தனர் அங்கே தாமஸ் நண்பன் அசோக் அவர்களுக்கு ஒரு வீடு வாடகை எடுத்து விட்டு தந்தான் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் பிரியாவின் படிப்பு அவளுக்கு உதவியது டெல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது தாமஸ் கிடைக்கும் வேலை அனைத்தும் செய்தான் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது நடந்த குடும்பமாக இவர்களின் ஆரம்ப வாழ்க்கை....


தாமஸ் வீட்டை விட்டுத் தனித்து வந்து விட்டான் ஏனென்றால் இதுவரை அவன் வீட்டை பற்றி பேசுவதே இல்லை அதும் இல்லாமல் அவன் சித்தியின் கொடுமை அவனை வெறுக்க செய்தது அதனால்தான் அவன் வீட்டை விட்டு வந்து விட்டேன் என்ற உண்மையான காரணத்தையும் அதற்கான நியாயத்தையும் புரிந்து கொண்டவள் தாமஸ் இருக்கு நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தால் ஆனால் திருமணமான மூன்று மாதங்களுக்கு பிறகு

தாமஸின் நடவடிக்கை மாறியது அடிக்கடி குடித்து வருவது சந்தேகத்தில் தப்பான கேள்விகளைக் கேட்பது என்று சண்டை சச்சரவுகள் அதிகரித்துச் சென்றது பெரியவர்கள் சொல்வார்கள் ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருக்கும் என்று அது போலதான் இருந்தது இவளுக்கும்.....

பிரியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வீடு இரண்டு ஆகிவிடும் மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள் பிறந்திருந்தாலும் பாசம் நேசத்திற்கு அக்கறைக்கும் பஞ்சம் இல்லாத வீடு ஆனால் இப்பொழுது தன்னைத்தானே சமாளித்துக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறாள் நம்முடைய தாய் தந்தையர் என்ன ஆனார்கள் நம் வீடு இப்பொழுது எப்படி இருக்கிறது என்று யோசித்துக் கொண்டே இருந்தால் மருத்துவ ரிப்போர்ட் வந்தது வயிற்றில் சிசு மகிழ்ச்சியாக இருந்தாள்....

இந்த விஷயத்தைப் பற்றிப் தாமஸ் இடம் சொல்ல அவனும் ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ வேலைக்கு மட்டும் தான் போறேன் நினைச்சேன் ஆனா நீ எவன் கிட்டயும் புள்ளையே வாங்கிட்டு வந்திருக்க சபாஷ் இப்படித்தான் ஒரு பொம்பள இருக்கணும் என்று தகாத வார்த்தைகளைப் பேசினால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ரியா மனம் உடைந்து போனால் இருந்தாலும் என்ன செய்வது காதலித்து விட்டு வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டோம் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்று அமைதியாக இருந்தாள்....

ப்ரியாவின் தோழன் தோழிகள் இவளுக்கு பணம் அனுப்பினார்கள் அந்த பணத்தில் தான் ஏதோ மருத்துவச் செலவிற்கும் வீட்டு செலவிற்கும் உதவியது கர்ப்பிணியாக இருந்தும் கூட வேலைக்கு சென்றால் முதலாளியோ பேறு காலம் முதல் குழந்தை பிறந்து 6 மாதம் வரை ஓய்வு எடுத்துக்கொள் மாத சம்பளம் மட்டும் நிச்சயம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார் பிரியா மகிழ்ச்சியோடு வீடு திரும்பினால் ஆனால் வீட்டிற்கு வந்து அவள் கண்ட காட்சி அவளை இதயத்தை வெடிக்கச் செய்தது........

வீட்டில் முக்கியமான பொருட்கள் காணவில்லை அதுவும் இல்லாமல் இந்தியாவின் நகை அது பெற்றோர்கள் வாங்கி தந்த நகை என்பதால் கஷ்ட காலத்தில் அதை விற்பனை கூட செய்யவில்லை அந்த நகைகளும் காணவில்லை என்னவாக இருக்கும் என்று பக்கத்தில் விசாரிக்க அந்த பெண்மணி உன்னுடைய புருஷன் வீட்டை காலி செய்யப் போவதாக சொன்னான் அனைத்து பொருட்களும் ஒரு லாரியில் ஏற்றப்பட்டது ஆனால் நீ என்னடா என்றால் உன் புருஷனை கேட்கிறாயே....

பிரியாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை ஒருவேளை நம்மை விட்டு சென்றுவிட்டாரா நம்மோடு விருந்தான வாழ்க்கை சலித்து வவிட்டதா நாம் என்ன குறை வைத்தோம் நன்றாகத்தானே வாழ்ந்தோம் கஷ்டத்தில் கூட மகிழ்ச்சியாக தானே இருந்தோம் கஷ்டம் ஒன்றும் பெரிய அளவில் இல்லையே மாத இறுதியில் பணம் கிடைக்க கஷ்டம் அவ்வளவுதானே ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் அவன் எண்ணிற்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்பது இல்லை இறுதியாக போனை எடுத்தவன் ப்ரியா எனக்கு உன் மேல சந்தேகமா இருக்கு அந்த குழந்தை என்னோடது இல்ல எனக்கு உன் மேல இருக்குற நம்பிக்கை போச்சு நான் உன்னை விட்டு போறேன் என்று அவன் பேசிய சொற்கள் ரியாவை அதிரச் செய்தது அப்படியே தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள் தான் செய்த தவறுகளை அனைத்தும் நினைவு கூர்ந்தால் பெற்றோருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக அவனை சந்தித்து பேசியது அதுவுமில்லாமல் அலைபேசியில் இரவில் மணிக்கணக்காக பேசியது அடிக்கடி நம்பிக்கை நம்பிக்கை என்ற வார்த்தை மொத்தம் பூஜ்ஜியம் ஆனது அவரது வாழ்க்கை என்ன செய்வதென்று தெரியாமல் வயிற்றில் குழந்தையோடு பெட்டி படுக்கையோடு சென்றால் தன் ஊருக்கு.....

‌‌. ஊரை விட்டு சென்று ஒரு வருடத்திற்கு பிறகு வந்த ரியவை அனைவரும் ஒரு மாதிரியாக பார்த்தனர் அதுவும் தனியாக வருவதால் ஒரே அவளை கிண்டல் செய்தது அவளது தோழர் தோழிகள் அனைவரும் அவள் வீட்டிற்கு அழைத்து செல்ல அங்கே ரியாவின் தாய் கோலத்தைக் கண்டு அதிர்ந்து போனாள் விதவைக் கோலம்.....

ரியா தன் அம்மாவிடம் செல்ல அவரோ என் பொண்ணு ரியா என்கிட்ட சொல்லாம எங்கேயோ போய்விட்டான் ஆனா அவர் திரும்பி வருவார் எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சிறு குழந்தை போல பேசினார்


என்னவென்று விசாரித்ததில் தெரிந்தது ரியா சென்ற பிறகு அவரின் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் சோகத்தில் உயிரிழந்துவிட்டார்..
கணவரின் இறப்பை ஏத்துக்க முடியாத மனைவி அதிர்ந்து எப்படி மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்

இப்படி ஒரு நிலைமையா நம்மால் நம் வீட்டிற்கு நடந்தது இப்படி தெரிந்திருந்தால் நம் அம்மா அப்பாவிற்கு நல்ல பெண்ணாகவே இருந்திருக்கலாமே தவறு செய்து விட்டோம் தன் தவறை இப்பொழுது சொல்லி அழ அப்பாவும் இல்லை அம்மா கேட்கும் மனநிலையில் இல்லை தன் தாத்தா பாட்டியிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதாள்


அவர்களோ அவளை சமாதானம் செய்து நாங்கள் இருக்கிறோம் உனக்கு என்று ஊரில் இருக்கும் பெரிய வீட்டை விற்றனர் அதில் ஏதோ தொகை வந்தது அந்த பணத்தை எடுத்துக்கொண்டு கொல்கத்தாவிற்கு புறப்பட்டனர் அங்கே அதற்கு தன் தாத்தா நண்பர் உதவி மூலம் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள காலம் வந்தது சுகப்பிரசவத்தில் ஒரு ஆண்குழந்தை

பார்ப்பதற்கு அப்படியே தாமஸ் போலவே இருந்தான் ஆனால் அவனுக்கு தன் நடத்தையில் சந்தேகம் என்ன செய்வது இதுதான் காலத்தின் கொடூரம்..

நாம் ஒன்று செய்தால் அதற்கு பதிலாக தெய்வம் ஒன்று பலன்தரும் இதுதான் அந்த பலன் என்று நினைத்துக் கொண்டால் பிறகு இரண்டு ஆண்டுகள் கொல்கத்தாவில் வாழ்க்கை சென்றது பிறகு பணி மாற்றம் காரணமாக மும்பை செல்ல வேண்டியிருந்தது....

மும்பையில் குடும்பமாக வசதியாக தங்கும் வீடுகள் கிடையாது அதனால் ரியா மட்டும் மும்பைக்கு சென்றாள் தாத்தா பாட்டி குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார் அம்மாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறார் நல்ல பதவியிலும் இருக்கிறாள்

அவளின் உண்மையான உழைப்பிற்கு நல்ல சம்பளம் கிடைத்து ஒரு நல்ல வீட்டை கொல்கட்டாவில் லீசுக்கு எடுத்து குடும்பம் இருக்கிறது...

குழந்தைக்கு இப்பொழுது ஐந்து வயது மும்பைக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது எப்பயாவது ஒருமுறை குழந்தையை பார்த்து செல்வாள் இவ்வாறு தன் கதையை சொல்லி முடித்தாள் ரியா.....
தொடரும்.........
 
Top