Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

6 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!

Advertisement

ILANTHALIR VENBA

Member
Member
6 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!
நாளை வரவிருக்கும் அந்த சீயோலல் ( நன்றி சொல்லும் விழா) விழாவிற்கான பரிசுகளை எப்படி கொடுப்பதென யோசித்துக்கொண்டே கடை வந்துசேர்ந்தான் சுடர் . கொரியாவில் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களில் ஒன்று .( இந்த விழாவை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இரண்டாவது எபிசோடை ஒருமுறை படித்து பாருங்கள் சகோ ..!! )
கடைக்கு வந்து சேர்ந்தவர்கள் அன்றைய விற்பனையை நிறைவு செய்துவிட்டு அங்கு வேலை செய்யும் பணியாளர்ளுக்கு சிறப்பு ஊதியம் கொடுத்து , இரண்டு நாள் விடுமுறை அளித்து வாழ்த்தி விடை பெற்றனர் .
அன்று இரவு வீட்டிற்கு வந்ததிலிருந்து ஆதூவை அந்த அறைக்குள் சுடர் விடவே இல்லை .அவன் ஒரு மணி நேரமாக ஏதோ செய்துவிட்டு வெளியே வந்துவிட , அவன் ஒவ்வொரு முறை இவளை உள்ளே செல்லாமல் தடுக்கும் பொழுதும் இவளுக்கு " உள்ளே என்ன இருக்கும் " என்று ஒரு ஆவல் அதிகமாகிக் கொண்டே போனது ஆதூவிற்கு . அன்றிரவு இருவரும் பால்கனியில் நிலா வெளிச்சத்தில் உறங்க , செந்நெறியை மட்டும் உள்ளே ஒரு தொட்டில் கட்டி தூங்க வைத்திருந்தாள் ஆதூ .
அன்று இரவு அவள் சுடரை எத்தனை முறை கேட்டும் அவன் அவளை உள்ளே அனுமதிக்கவே இல்லை . அவனது பதில்" நாளை காலை பத்து மணி " என்பதாக மட்டுமே இருந்தது . காலை எழுந்தவுடன் இவனுக்கு முன்னே உள்ளே சென்று பார்த்து விடலாம் என்று வேகமாக உறங்க முற்பட சுடர் அவளது மனதை படித்தவனாக சிரித்துக்கொண்டான் . இவளோ உறங்கவேண்டும் உறங்கவேண்டுமென உறங்காமல் இருக்க , அவளுக்கு முன்பே சுடர் உறங்கிவிட்டான் . காலை இவனுக்கு முன்பாக எழுந்தவள் நேராக சென்று அந்த அறையை திறந்து பார்க்க முயல , அந்த அறை பூட்டப்பட்டிருந்தது சாவி எங்கே என்று தேடினாள் . ஆனால் , சாவி எங்கு தேடியும் கிடைக்காமல் போக , முகத்தை உம்மென வைத்துக்கொண்டு அமர்ந்துகொண்டாள் .
காலை 8 மணிக்கு எழுந்த சுடர் இவளது வாடியை முகத்தை பார்த்து இவளுக்கு அருகில் சென்று அந்த சோபாவில் இடித்துக்கொண்டு அமர்ந்தான் . இவள் இவனிடம் முறைத்துக்கொண்டு நகர்ந்து அமர , பக்கவாட்டிலிருந்து அவளை அனைத்தவன் அவளது கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் பதிக்க அவளோ சிலையென சமைந்திருந்தாள் .
" அலையே சிற்றலையே ... !

கரை வந்து வந்து போகும் அலையே .... !

என்னைத் தொடுவாய் ...

மெதுவாய்ப் ... படர்வாய் என்றால் ....

நுரையாய்க் கரையும் அலையே .... !

தொலைவில் பார்த்தால் ....

ஆமாம் என்கின்றாய் ....!

அருகில் வந்தால் .... இல்லை என்றாய் ....!

நகில நகில நகிலா .... ஓ ... ஓ ... ஓ ....
விலகிடாதே .... நகிலா ... ஓ ... ஓ ... "


சுடர் : " ஐயோ .. என்னோட பொண்டாட்டி எவ்ளோ அழகா இருக்கா ?? சரி சரி .. போய் குளிச்சுட்டு ரெடி ஆகிரு . நாம மூனுபேரும் எதாவது உயிரியல் பூங்காக்கு போகலாம் டா .. " என்று அவளது தாடையை பிடித்து ஆட்டிவிட்டு குளிக்க சென்றான் .
இவன் குளித்துவிட்டு வந்ததும் அவள் குளிக்க சென்றுவிட , இவன் சமையலை ஆரம்பித்திருந்தான் . பருப்பு கடைசல் செய்ய பருப்பு மற்றும் இதர பொருட்களை குக்கரில் வைத்துவிட்டு , சாப்பாட்டிற்கு தேவையான அரிசியை ஊறவைத்தான் . இன்று விடுமுறை அதனால் ஆதூவுக்கு பிடித்த பருப்பு பாயசம் செய்யலாமென அதற்கும் பருப்பை ஊற போட்டுவிட்டு வெல்லம் மற்றும் தேங்காயை துருவிக்கொண்டு இருக்கும்பொழுதே செந்நெறி விழித்து அழுக துவங்க .. அவனை சென்று தூக்கியவன் .. சமாதானம் செய்ய முயன்றான் . செந்நெறி ஆதூவை காணாமல் தேடி அழ , ஆதூ குளித்து வெளியே வந்ததும் அவளை பார்த்தவுடன் நொடியில் புன்னகை பூத்தது செந்நெறி முகத்தில் .
சுடர் : " அடேய் அவ என்னோட ஆளு .. நீ ஜொள்ளு விடாத .. " என்று அவளது கன்னம் கிள்ளி சொல்ல ...
செந்நெறிக்கு எங்கிருந்து வந்ததோ அப்படி ஒரு கோவம் .. சுடரின் முகத்தில் பட்டென ஒரு அடி வைத்தான் .
" இவனை நீயே வெச்சுக்கோ டி " என்று கூறிவிட்டு இவளிடம் கூறிவிட்டு அவன் சென்று பாயசம் வைக்க துவங்க ...
சுடருக்கு பிடித்த ஆரஞ்சு வண்ண புடவையில் கரும்பச்சை வண்ண ஜாக்கெட் அணிந்து , பொட்டுவைத்து குங்குமம் திருநீறு சகிதமாக செந்நெறியை தூக்கிக்கொண்டு சமையலறை சென்றாள் . அங்கு நுழைவதற்கு முன்பே பருப்பும் நெய்யும் கலந்த வாசனை வீச , அந்த வாசனையில் மயங்கி அங்கு சென்று குக்கரை எட்டி பார்த்து , " செம்மயா இருக்கு டா " என்றுகூறிவிட்டு செந்நெறிக்கு பால் ஆற்றி கொடுத்தவள் அவனை குளிக்க வைக்க குளித்து உடை மாற்றுவதற்குள் நெறி தூங்கிவிட்டான் .
உள்ளே நுழையும்போதே பாயசம் வாசனை வீசியது . அருகே சென்று அவனை பின்னிருந்து அணைத்துக்கொண்டாள் .
" உன் உள்ளம் ... நான் காண ... என்னாயுள் போதாது .... !

என் அன்பை .. நான் சொல்ல .. உன் காலம் போதாது .. !

என் காதல் ... எனயென்ன ... உன் நெஞ்சு காணாது ... !

ஆனாலும் ... என் முத்தம் ... சொல்லாமல் போகாது ... !

கொண்டாலும் .. ! கொன்றாலும் ... !என் சொந்தம் நீதானே ... !

நின்றாலும் .. ! சென்றாலும் .. ! உன் சொந்தம் நான்தானே .... !

உன் வேட்கை பின்னாலே .... என் வாழ்க்கை வளையுமே ... ! "


இவளது கையை பிடித்து முன்னாடி நகற்றி நிறுத்தியவன் , அவளது நெற்றியுடன் நெற்றி முட்டி ... " என்னடி அந்த ரூமை பத்தி மறந்துட்ட போல ??? " என்று கேட்க ..
ஆதூ : " எப்படி கேட்டாலும் நீ ரூமை திறக்க மாட்டேன்னு தெரிஞ்சிருச்சு போ டா .. நான் வீடு பெருக்குறேன் .. நீ சமையலை முடிச்சுட்டு வா , ஒன்னா சாப்பிடலாம் " என்று கூறிவிட்டு வேலையே பார்க்க துவங்கினாள் .
இருவரும் வேலையை முடித்துவிட்டு சாப்பிட , முடித்தவுடன் இவளது கண்களை கட்டினான் .. இவர்கள் சாப்பிடும்பொழுதே எழுந்திருந்த நெறி விளையாட துவங்கி இருந்தான் .
இவன் கண்ணை கட்டி இவளை செக் வேறு செய்து பார்த்தான் சுடர் .
ஆதூ : "ஹே ... எதுக்கு டா கண்ணை கட்டிவிட்டுட்டு இருக்க ?? "
சுடர் : " சும்மா இரு டி .. " என்று முதலில் இவளை அந்த பூட்டியிருந்த அறையில் விட்டுவிட்டு , அடுத்து அவர்களது அன்பு மகனை கைகளில் அள்ளி எடுத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான் சுடர் .
இவள் கண்களை திறக்க அந்த அறையே பஞ்சுமிட்டாய் கோலமாக இருந்தது . ஆதூ அசந்துவிட்டாள் . அந்த ரூம் எப்படி இருந்துச்சுனா ....
image

இப்படித்தான் இருந்துச்சு அந்த ரூம் . அழகிய மரம் போல் அவன் வடிவமைத்திருந்த பஞ்சுமிட்டாய் குவியல் அவளுக்கு மிகவும் பிடித்தது . அருகில் சென்று ஒவ்வொன்றாக தொட்டு பார்த்தாள் . மரத்திலிருந்து சிறிது பிய்த்து எடுத்தவள் சுடரை நோக்கி வந்து அவனுக்கு ஊட்ட முற்பட , அவனோ அதை அவளுக்கே திருப்பி ஊட்டினான் .

" வெந்து காஞ்ச பொட்டலுல ...
வேரும் தீஞ்சு நிக்கையில ...
பிஞ்சு காலில் மழைய கொண்டு ...
வந்த சாமி நீதானே ... !
அத்து வான காட்டுக்குள்ள ...
நான் பாராங்கல்லா கிடக்கையில ...
கோபுரத்து உச்சியில என்ன
ஏத்துன சாமி நீதானே ... !
ஏ ... கத்தாழையும் செந்தாழையா ...
ஆனதென்ன உன்னால ... ??
உள்ள காத்தாடி தான் ... நெஞ்சுக்குள்ள ...
சுத்துதடி தன்னால ... ! "

இதை பார்த்த நெறி உதட்டை பிதுங்கிக்கொண்டு அழுகை துவங்க .... சுடர் சட்டென தன் கையில் ஒட்டியிருந்த சிறு கீற்று பஞ்சுமிட்டாயை அவனது வாயில் வைக்க அழுகை அப்படியே நின்றது . ஆதூ அவளது அறைக்கு சென்று ஒரு பையை எடுத்துவந்தாள் . அதிலிருந்து சுடருக்கும் மிகவும் பிடித்த கைச்செயின் எடுத்து அவனுக்கு அணிவித்தாள் . அதைப்போன்ற சிறிதான ஒன்றை செந்நெறிக்கும் அணிவித்தவள்
ஆதூ : " நெறிக்கு என்ன கிப்ட் வாங்குனீங்க ??? என்று ஆவலுடன் கேட்க ...
சுடர் : " அவனுக்கு பரிசு ரெடி பண்ண டைம் ஆகுது . நீயும் ஒழுங்கா ஒத்துழைச்சா தானே அவனுக்கு நான் பரிசு கொடுக்க முடியும்னு கண்ணடிக்க .. இவளுக்கு அவன் என்ன கூற வருகிறான் என்பது புரிந்தது .
ஆதூ : " நமக்கு இவன் மட்டுமே போதுமே ?? "
சுடர் : " இல்லை ஆதூ .. எனக்கு கண்டிப்பா ஒரு பொண்ணு வேணும் .. அப்புறம் பேசிக்கலாம் .. இப்போ கிளம்பலாமா ??? " என்று கேட்க இவளும் சரியென கூற மூவரும் கிளம்பினர் .
image

சுடருக்கு தெரியும் இதுதான் இவள் வாங்கப்போகிறாள் என்று . இருந்தும் ஆச்சரியமாக பெறுவதைப்போலவே வாங்கிக்கொண்டான் . அவனும் ஒரு காலத்தில் பெண்ணாக இருந்திருக்கிறானே ....

அவனது மகிழ்ச்சி ஆதூவுக்கும் தொற்றிக்கொள்ள அன்றைய நாள் முழுவதையும் மூவரும் சந்தோசமாக களித்தனர் .
அன்று இரவு வந்து படுத்த ஆதூவிற்கு களைப்பை விட உள்ளத்தின் சந்தோசமே அதிகமாக இருந்தது . அதுவும் சுடர் நொடிக்கொரு தரம் அவளை மகிழ்வாக அன்று வைத்திருந்தான் . கண்ணை மூடி தூங்க முற்படுகையில் அவளது கடந்த கால நினைவுகள் அலையா விருந்தாளிகளாக வந்தன . அவளது அண்ணன்களின் நினைவு வந்ததும் இவளுக்கு அழுகை தாங்க இயலவில்லை . அவளது கடந்த காலத்தை பற்றி யோசிக்க துவங்கினாள் .. அவளது அண்ணன்களின் நினைவினில் மூழ்க துவங்கினாளென்றே கூற வேண்டும் .
நாளை :
அர்ஜுன் திட்சித் , அக்சய் தீட்சித் , ஆதர்ஷ் தீட்சித் என்ற அந்த மூன்று ஆண்சிங்களை பார்த்தால் அந்த ஊரிலுள்ள அனைவருமே ஒரு முறை திரும்பிப்பார்த்துவிட்டு செல்வர் .
" ஹே .. அங்க பாரு டி ... பெரியவீட்டு பசங்க போறாங்க . செம்ம அழகு மூனு பேரும் " என்று அவர்களுக்குள் முணுமுணுத்தவாறு கடந்து செல்லும் பெண்களே அதிகம் .
 
எம்மா இளந்தளிர் இதெல்லாம் ரொம்பவே அநியாயம் அக்கிரமம்ப்பா
இந்த மாதிரியெல்லாம் கூட கிஃப்ட் கொடுப்பாங்களான்னு ஆச்சர்யமாக இருக்கு
அடேய் சுடர்
ஆனாலும் நீ ரொம்பவே லவ்வாங்கிஸ்டா
இந்த கிஃப்ட்டில் எனக்கெல்லாம் பங்கு இல்லையா?
பூராவும் நீயே தின்னால் வயிறு வலிக்கும், ஆதூ
எனக்கும் பஞ்சு மிட்டாய் ரொம்ப பிடிக்கும்ப்பா
 
எம்மா இளந்தளிர் இதெல்லாம் ரொம்பவே அநியாயம் அக்கிரமம்ப்பா
இந்த மாதிரியெல்லாம் கூட கிஃப்ட் கொடுப்பாங்களான்னு ஆச்சர்யமாக இருக்கு
அடேய் சுடர்
ஆனாலும் நீ ரொம்பவே லவ்வாங்கிஸ்டா
இந்த கிஃப்ட்டில் எனக்கெல்லாம் பங்கு இல்லையா?
பூராவும் நீயே தின்னால் வயிறு வலிக்கும், ஆதூ
எனக்கும் பஞ்சு மிட்டாய் ரொம்ப பிடிக்கும்ப்பா
aama sis ... enakku kooda intha sudar kodukalai ... vayiru nalla valikatum ...
 
பொண்ணா இருந்தால் ஒன்னோட உணர்வு புரியுதா சுடர் உனக்கு ...

ஆனாலும் உன்னோட கிப்ட் ரொம்ப different
 
Top