Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

6. விழிமயங்கும் இரவு

Aasai"PRABHAAS"

Member
Member
முகுந்தனின் மருத்துவத்தின் அடையாளமாக கீர்த்தி நோயிலிருந்து சிறிது சிறிதாக முன்னேறிக் கொண்டிருந்தாள். முகுந்த்தை பார்க்க வரும் சாக்கில் மிதுனும் அடிக்கடி கீர்த்தியை பார்க்க வர துவங்கினான். அப்படியே நாட்கள் கழிய மருந்துகளின் விளைவால் உடல் மெலிந்து முடி உதிர்ந்து படுக்கையில் கிடக்கும் கீர்த்தியை பார்க்கவே பெரும் வேதனையாக இருக்கும் மிதுனுக்கு. வேதனை தாளாமல் அன்று கேட்டே விட்டான் தன் நண்பனிடம்.

டேய் முகுந்த் அந்த பொண்ணுக்கு இப்போ எப்பிடிடா இருக்கு. டிரீட்மெண்ட் இன்னும் பண்ணனுமாடா... இல்ல டிரீட்மெண்ட் முடிஞ்சதா... எப்போ தான்டா அவளுக்கு சரியாகும்.

நண்பனை வினோதமாக பார்த்தா முகுந்த், உனக்கு ஏண்டா அந்த பொண்ணு மேல இவ்வளவு அக்கறை. அதும் போல முன்ன எல்லாம் நான் ஹாஸ்பிடல இருந்தா இந்த பக்கமே வர மாட்ட ஆனா சாரு இப்போலம் அடிக்கடி என்ன பார்க்க வர... அதையே சாக்கு வச்சு, அவளையும் பார்த்திட்டு போற... விஷயம் என்னடா... இது அக்கறையா இல்ல காதலா??? முகுந்த்தும் மிதுனின் மாற்றத்தை கவனித்து தானே இருந்தான்.

தெரியலடா... இவள பார்க்கும் போது எனக்கு அம்மா நியாபகம் அதிகமாவே வந்துட்டே இருக்கு. ஆரம்பத்துல ஒன்னும் புரியல... ஆனா அவ இப்பிடி கஷ்டப்படுறத பார்க்கும் போதும் கூடவே இருக்கணும்னு தோணுது... நான் இருக்கேன்னு ஆறுதல் சொல்லனும்னு தோணுது... அது ஏன்னு எனக்கே புரியல... அவளை பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு என்ன ஆச்சுன்னும் தெரியல... இந்த நிலைமையில அவ கிட்ட என்ன சொல்லன்னும் புரியல... மொத்தத்துல எனக்கு தான் ஒரே குழப்பமா இருக்குடா..

மிதுனின் மாற்றம் புரிந்த முகுந்த் ஆதரவாய் அவனை அணைத்துக் கொண்டு... ஏன்னா நீ அவளை விரும்ப ஆரம்பிச்சுட்ட.. அத்தையோட அந்த நிலைமையில நீ கீர்த்தியையும் வச்சு யோசிச்சதும் உன்ன அறியாமலே அவளை உன் மனசு விரும்ப காரணமா இருக்கலாம். அதான் உன் மனசு இப்போ அந்த கீர்த்திய தேடுது. நீ கவலையே படாத... அவளை சீக்கிரம் சரி பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு. அவ நல்லா ஆனதும் உன்னோட மனச நீயே அவகிட்ட சொல்லு... அவளுக்கும் சரின்னு பட்டா.. அடுத்து என்னனு பார்க்கலாம். ஓகே வா.. இப்போ வா போய் உன் ஆள பார்த்திட்டு வரலாம்.

அப்போ உனக்கு ஓகே வாடா... தயக்கத்தோடே மிதுன் நண்பனின் மனம் புரிந்து கேட்க....

டேய்.. இது உன்னோட வாழ்க்கை. எனக்கு பிடிக்காதுன்ற காரணத்துக்காக நீயும் அப்பிடி தான் இருக்கணும்னு அவசியம் இல்ல. அதுவும் நான் இப்பிடி மாறுனதுக்கு காரணமே வேற.. அதையே உனக்கும் என்னால சொல்ல முடியாது டா. உன்னோட இஷ்டப்படி உன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க முழு உரிமை உனக்கு மட்டும் தான் இருக்கு... சோ அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அண்ட் இன்னொரு விஷயம் அந்த பொண்ணும் பார்க்க நல்ல பொண்ணு மாதிரி தான் இருக்கா... சோ எனக்கு இதுல முழு சம்மதம் தான் போதுமா....

நண்பனையே பார்த்திருந்த மிதுன் தாவி அணைத்து அவன் கன்னத்தில் முத்தம் பதிக்க...

ச்சீ.. தள்ளிப்போடா.. இதெல்லாம் உன் ஆளுகிட்ட வச்சுக்கோ.. என்கிட்ட வேணாம். நண்பர்களின் ஆனந்த கூச்சல் அறையை நிறைக்க, நேரம் கடந்தே கீர்த்தியின் அறைக்கு சென்றனர்.

அறையின் உள்ளே மெத்தையின் மேல் குறுகி போய் குழந்தையை போல கீர்த்தி படுத்திருந்தாள். முதன் முதலில் மிதுன் கண்ட கீர்த்திக்கும் இப்போது காணும் கீரத்திக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கும். அப்படி உடல் மிகவும் மெலிந்து தான் இருந்தாள். ஆனால் கண்களில் நிச்சயம் தேறிவிடுவோம் என்ற உயிர்ப்பு வந்திருந்தது. காரணம் முகுந்தனின் வார்த்தைகளும், அவனின் ஈடுபாடும் தான். எப்படியும் சரி செய்து விடுவோம் என்ற அவனின் நம்பிக்கை இவளுக்கும் இப்படி உயிர்ப்பளித்திருந்தது.

அவளின் உடல் நிலையை சோதித்து விட்டு தேவையான மருந்துகளை செலுத்திய முகுந்த், மிதுன் கலங்குவதை பார்த்ததும், அவனை ஆறுதல் படுத்தி மற்றவற்றையும் முடித்து கொண்டு அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அவளுக்கு என்ன பிரச்சனைடா.. எவ்வளவு நாள் ஆகும் சரியாக... காப்பத்திடலாம் தானே... பிளீஸ் சொல்லுடா... எப்போதும் கோபத்துடனும், கண்டிப்புடனும் சுற்றும் மிதுன் கலங்கி நிற்பதை பார்த்தவன்.. கீரத்தியின் நிலையை அவனுக்கு புரியும்படி சொல்ல.. மிதுன் தான் உடைந்து போனான்.

நம்ம உடம்புல எலும்பு மஜ்ஜைகள் தான் இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும். அந்த இரத்த அணுக்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் போது லுக்கேமியா உண்டாகுது. லுக்கேமியா இரத்தம் இல்லனா எலும்பு மஜ்ஜையில் உருவாக கூடிய ஒரு வகை புற்றுநோய். இது உடல்ல இருக்குற லிகோசைட்டுகள பாதிக்கும் இல்லனா வெள்ளை இரத்த அணுக்களை பாதிக்கும்.

லுகேமியாவில் பலவகைகள் இருக்குது. ஒவ்வொரு வகைக்கும் ஒரு சிகிச்சைமுறை இருக்கு. லுக்கேமியாவ ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். இதோட அறிகுறிகள்தான் அதுக்கு காரணமும்னு கூட சொல்லலாம். இதுக்கான முதன்மை சிகிச்சை முறைனா அது கீமோதெரபி தான். இதுதவிர டார்கெட்டேட் தெரபி, இனபெர்டான் தெரபி, ரேடியேஷன் தெரபி மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவைசிகிச்சை மூலமும் குணப்படுத்தலாம்.

இந்த ட்ரீட்மெண்ட் மூலம் கீர்த்தியோட நோய் அளவ குறைச்சாச்சு. சோ கீர்த்திக்கு பாதி ட்ரீட்மெண்ட் முடிஞ்சாச்சு. இப்போ நடந்துக்கிட்டு இருக்குறது பராமரிப்பு மருத்துவம். அதாவது நோயோட அளவு குறைக்கப்பட்டதும் அது திரும்பவும் வராதிருக்க வேதிச்சிகிச்சை முறையில் மருந்தை செலுத்துறது. பொதுவா இந்த ட்ரீட்மெண்ட் முறையில குறைந்த மருந்தளவுகள் தான் எடுத்துக் கொள்ளப்படும். இது மூணு வருஷம் வரை கூட தொடர்ந்திருக்கும். அப்படி இல்லான அல்லோஜனிக் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உகந்ததாக இருக்கும்.

சோ இன்னும் கொஞ்சம் நீ வெயிட் பண்ணி தான் ஆகனும்... கீர்த்திக்கு முழுசா சரியாக.

முகுந்த் கூறியதை கேட்டு மிதுன் கதறியே அழுதுவிட்டான். வெகு நேரம் அழுதவனை முகுந்தும்சமன் செய்ய முயல, ஒருவழியாய் சில நிமிடங்களில் சமாதானம் ஆனவன்... அடுத்து என்ன பிளான் டா.. அவன் எதுவும் சொன்னானா?.. கேள்வியோடு மிதுன் நிறுத்த, முகுந்த் தன் யோசனையை அவனிடம் கூறினான்.

பிளான் பண்ணியாச்சுடா.. அவனும் ஓகே சொல்லிட்டான்.. நாம செயல்படுத்த வேண்டியது தான் பாக்கி... இந்த வாரம் இரண்டு நாள் தேவைப்படும்.. சோ அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணி வா... நாம கிளம்பலாம். அண்ட் இன்னொரு விஷயம் இந்த தடவை யாரையோ நம்ம கிட்ட காட்டனும்னு சொல்லிருக்கான்..

சரிடா நான் வந்துடுறேன்...இப்போ கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புறேன்.. வேற ஏதாவது விஷயமா இருந்தா கால் பண்ணு... அண்ட் கீர்த்தியை நல்லா.... நல்லா பார்த்துக்கோ. ஓகே வா. பை.

டேய்... டாக்டர் கிட்டயே பேசன்ட்ட நல்லா பார்த்துக்க சொல்லிட்டு போற.. இருடா உன்ன கவனிச்சுக்குறேன். கடிந்து கொண்டாலும் நண்பனின் வருத்தம் முகுந்திற்க்கும் வேதனையை தான் அளித்தது.

.......

காலை ஓட்டத்தை முடித்து அமர்ந்தவன்... அவனை போலவே சண்டிகர் இராணுவ கூடத்தில் ஓடிக்கொண்டிருந்த இன்னொருவனுக்கு அழைப்பு விடுத்தான். அவனும் ஓடி முடித்து அமரவும் அலைபேசியின் மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

வசிஸ்டன் போல அதே சர்தார்ஜி பாகை, முறுக்கு மீசை, ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடல்... அனைத்தையும் பார்த்தபோதே சொல்லியது இவன் அவனின் உடன் பிறந்தவன் என்று. மேஜர். பி. வைசாகன். வசிஸ்டனின் ஆருயிர் தம்பி என்பதை விட ஆருயிர் நண்பன் என்றே சொல்லலாம். இருவரும் ஒருவருக்கொருவர் எதையும்.. எந்த விஷயத்தையும் கூறாமல் மறைத்ததில்லை.

தவறு நடக்கும் இடங்களின் தகவல் இவர்களுக்கு கிடைத்ததும் முதலில் அந்த இடத்தை ஆராய்ந்து செய்ய வேண்டிய செயல்களை பட்டியலிடும் பணி வைசாகனையே சேரும். அலசி ஆராய்ந்து இவன் வேலைகளை பட்டியலிட, வசிஸ்டன் அனைத்தையும் செய்து முடித்துவிடுவான். இவனுக்கு உடன் இருந்து இறுதி ஆட்டம் ஆடுபவள் தான் மந்த்ரா. ஆக இவர்கள் மூவரும் சேர்ந்து தான் அனைத்தையும் செய்து முடிக்கின்றனர்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் மூவரும் சேர்ந்து செய்யும் செயல்கள் அனைத்திற்கும் ஆக்கபெரும் ஆரம்ப புள்ளியே நம் சர்தார்ஜி பிரணவ் சிங் தான்.

இன்றும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் அந்த அழைப்பும்... காரணம் என்னவாக இருக்கும்???தொடரும்...... Prabhaas 💖💖💖
 
Top