Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

7 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!

Advertisement

ILANTHALIR VENBA

Member
Member
7 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!

இந்தியாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம் .. இந்தியாவின் பத்தாவது பெரிய நகராகவும் , உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நகரங்களில் பெருவாரியான மக்கள் தொகையை உள்ளடக்கிய கான்பூர் நகரம் ..
கங்கை ஆற்று படுகையில் அமைந்துள்ள கான்பூர் நகரின் ஒரு அழகிய மாலைப்பொழுது ...
மாநிலத்தில் அமைந்துள்ள காசி என அழைக்கப்படும் வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது . அதுவே கங்கா ஆரத்தி என்று என்று அழைக்கப்படுகிறது . கங்கா ஆரத்தியை காண பக்தர்கள் கங்கைக்கரையில் கூடுகின்றனர் .ஒவ்வொரு நாளும் மாலைப்பொழுது நிறைவுறும் நேரத்தில், சுமார் 30 நிமிடங்கள் இந்த கங்கா ஆரத்தி நடக்கின்றது .கங்கா ஆரத்தி சுமார் 20 முதல் 25 வயது வரையுள்ள ஏழு ஆடவர்களால் மேற்கொள்ளப்படுகிறது . ஏழு ஆடவர்கள் பட்டாடை அணிந்து கங்கை ஆற்றை நோக்கி பாராட்டிப் பாட ஆரம்பிக்கின்றனர் .
முதலில் ஊதுவத்திகளைக் கொளுத்தி கங்கா ஆரத்தி நிகழ்வினை ஆரம்பிக்கின்றார்கள் . அதனைத் தொடர்ந்து அந்த ஏழு பேரும் ஒரே மாதிரியாக சங்கு ஊதுகின்றனர் . அடுத்தபடியாக சாம்பிராணியை ஆரத்தியாகக் காட்டுகிறார்கள் . பெரிய தூவக்காலில் சாம்பிராணி இடப்பட்டுள்ளது . அதிக அளவிலுள்ள அந்த சாம்பிராணி வெளியே கொட்டிவிடாதபடி தூவக்காலின் வாயில் கம்பித் தகட்டினைப் பொருத்தியுள்ளனர் . தலைக்கு மேலே (கிட்டத்தட்ட தலைகீழாக) தூவக்காலைத் தூக்கி அவர்கள் ஆர்த்தி காட்டும்போது புகை வெளியே வருவதைப் பார்க்க அழகாக இருக்குமாம் . புகை அதிகமாகி நெருப்பு வெளிவர ஆரம்பித்தால் ஒருவர் வந்து அந்த தூவக்காலில் சிறிதளவு நீரைத் தெளித்து தீ ஜுவாலை வெளிவராமல் ஆக்கிவிடுகின்றார்கள் . அதற்காகவே ஒருவர் சிறப்பாக நியமிக்கப்படுவதாக சொல்கிறார்கள் அங்குள்ள மக்கள் .
அதைத் தொடர்ந்து கற்பூரக் கட்டிகளை வைத்து ஆரத்தி எடுக்கிறார்கள் . கற்பூரம் கொளுத்தும் அந்த தூவக்கால் ஐந்து தலை நாகத்தினைக் கொண்டு அமைந்துள்ளது . சாம்பிராணி தூவக்காலும், சூடம் ஏற்றப்படும் தூவக்காலும் பார்ப்பதற்கு சற்று கனமாகவே தோன்றுகின்றன . ஆனால் எப்படி இருக்குமென அதை பிடித்து உணருபவர்களுக்கே வெளிச்சம் .
தொடர்ந்து அவர்கள் கங்கையை நோக்கிப் பாடுகின்றார்கள் . அதையடுத்து மயிலிறகை ஆட்டி கங்கையைப் போற்றுகின்றனர் . அடுத்த நிகழ்வாக வெண் சாமரம் கங்கையை நோக்கி விசிறப்பட்டு ஆர்த்தி விழா நடைபெறுகிறது . நிறைவாக தனித்தனிக் கற்பூரங்களாக அடுக்கு தட்டில் வைத்து ஆர்த்தி இடுகிறார்கள். இவ்வாறாக ஆரத்தி எடுக்கும்போது முதலில் கங்கையாற்றின் திசையை நோக்கி ஆரம்பித்து , தத்தம் வலப்புறமாகக் கடிகாரச் சுற்றாகத் திரும்பி நான்கு திசைகளிலும் அவ்வாறு செய்துவிட்டு இறுதியாக ஆரம்பித்த திசை நோக்கித் திரும்புகின்றனர் . ஆரத்தியை முழுமையாகக் காண்பதற்காகப் பல பக்தர்கள் படகுகளில் குறிப்பிட்ட தொகை கொடுத்து அமர்ந்து பார்க்கின்றார்கள்.
அப்படி அவர்களுள் ஒருவனாக அமர்ந்திருந்தான் நம் கதையின் முக்கிய கதாப்பாத்திரம் ஆதர்ஷ் தீட்சித் மற்றும் அவனது தங்கை ஆருத்ரா தீட்சித் . பூஜை முடிந்து இவனது இரு அண்ணன்களும் இவளை நோக்கி வந்தனர் .
" என்ன டா ... நீயும் எங்ககூட வந்திருக்கலாம் தானே ??? " என்று ஹிந்தியில் கேட்டுக்கொண்டே அவர்களது செல்ல தங்கை ஆருத்ரா ( ஆரூவை ) கட்டிக்கொண்டனர் இருவரும் .
அதை பார்த்து ஆதர்ஷிற்கு ஏனோ அவனது தங்கையின் மேலே பொறாமை உணர்வு தோன்றியது . வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்துவிட்டு வீட்டிற்கு கிளப்பினர் நால்வரும் .
ராஜா தீட்சித் மற்றும் ரோஜா தீக்ஷித் இருவருக்கும் நான்கு பிள்ளைகள் .( இந்த ராஜாவும் ரோஜாவும் தான் நம்ம காதலர் தினம் படத்துலே நடிச்சவங்க .. ஹீஹீ ) அர்ஜுன் திட்சித் , அக்சய் தீட்சித் , ஆதர்ஷ் தீட்சித் என்ற அந்த மூன்று ஆண்சிங்ககளை பார்த்தால் அந்த ஊரிலுள்ள அனைவருமே ஒரு முறை திரும்பிப்பார்த்துவிட்டு செல்வர் .
" ஹே .. அங்க பாரு டி ... பெரியவீட்டு பசங்க போறாங்க . செம்ம அழகு மூனு பேரும் " என்று அவர்களுக்குள் முணுமுணுத்தவாறு கடந்து செல்லும் பெண்களே அதிகம் . அவர்கள் வீட்டு பெண்ணை பற்றி பேசும் தைரியம் இன்னும் அந்த ஊருக்குள் எவருக்கும் வரவில்லை .
25 வயதான அர்ஜுன் தீட்சித் அவர்களின் குடும்ப தொழில்களில் ஒன்றான துணி நெசவு செய்வது , அதனை தைத்துக் கொடுப்பது , அது மட்டுமின்றி அதனை விற்பனை செய்வது போன்ற உடை சம்மந்தமான அனைத்து தொழில்களையும் மேற்பார்வையிட்டு அவனது கைப் பிடியில் வைத்திருந்தான் .
22 வயதான அட்சய் தீட்சித் , உணவுப்பொருட்கள் தயாரிப்பது , அதனை பேக் செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வது போன்ற தொழில்களை அவனது மேற்பார்வையில் வைத்திருந்தான் .
இவர்கள் இருவருமே குருகுல கல்வி வழியில் பயின்றவர்கள் . ஆதர்ஷும் குருகுல கல்வியில் பயின்றவன்தான் .. ஆனால் , அவனது குடும்பத்தில் மோட்டார் சம்பந்தமான தொழிலில் இவர்கள் குடும்பத்தினர் எவரும் பங்கேற்க தயாராக இல்லாத காரணத்தினால் , இவனை மெக்கானிக்கல் படிக்க வைக்க அந்த குடும்பம் முழு மனதாக முடிவு எடுத்துவிட்டது . ஆனால் , இவனது விருப்பம் என்னவென்று கேட்க அவர்களுக்கு நேரமில்லை . அப்படியே இவன் விருப்பத்தை தெரிவித்திருந்தாலும் யாரும் கேட்கபோவதும் இல்லை . அந்த குடும்பத்திலுள்ள பெரியவர்கள் எடுக்கும் முடிவைத்தான் அங்கிருப்பவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது அங்கு எழுதப்படாத சட்டமாகவே இருந்தது . அன்னையின் உதவியில் பள்ளி படிப்பையும் படித்தான் . அதை முடித்துவிட்டு இப்பொழுது 21 வயதில் கான்பூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் , பி .இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருக்கிறான் .
இவனுக்கு விருப்பமே இல்லையெனினும் எடுத்த காரியத்தில் கழுகுபோல நின்று ஜெயித்துக்காட்டுபவன் ஆதர்ஷ் . கடந்த மூன்று வருடங்களிலும் அவனே அந்த யுனிவர்சிட்டியில் முதன்மை மாணவனாக தேர்ச்சி பெற்றிருந்தான் .
கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டில் நுழைந்த நான்கு பிள்ளைகளையும் பெருமை பொங்க பார்த்திருந்தார் ரோஜா . நேராக அன்னையிடம் வந்த ஆதர்ஷ் அவரதுகாலில் விழுந்து வணங்கிவிட்டு தனது பாக்கெட்டிலிருந்த குங்குமத்தை எடுத்து அவரிடம் நீட்ட , அதைவாங்கி நெற்றியில் தீட்டியவர் " எப்பொழுதுமே நல்லா இருக்கனும் கண்ணா நீ ... " என்று வாழ்த்தினார் .
அக்சய் தீட்சித் : " பாத்தீங்களா மா ... அவனுக்கு மட்டும் என்னம்மா ஸ்பெஷல் ஆசிர்வாதம் ??? " என்று கேட்க ...
ரோஜா : " நீங்களும் அவன்கூட தானே கோவிலுக்கு போயிட்டு வந்தீங்க ??? ஆனா , எனக்காக அவன் தானே குங்குமம் எடுத்துட்டு வந்தான் ... இவ்ளோ ஏன் நான் பெத்த பொண்ணுகூட எடுத்துட்டு வரலை .. சரி , எடுத்துட்டுதான் வரலை .. ஆனா , வந்த உடனே நீங்க மூனுபேரும் அக்கடான்னு போய் சோபால உக்காருறீங்க ... ஆனா , இவன் என் காலிலே வந்து விழுந்து கும்புடறான் . அப்போ அவனை தானே ஆசிர்வாதம் பண்ண முடியும் . சரி சாப்பிட வாங்க " என்று அழைத்து அனைவர்க்கும் உணவு பரிமாற திருப்தியாக உண்டுவிட்டு மூவரும் அவரவர் அறைக்கு சென்று உறங்கிவிட ஆதர்ஷ் ரோஜா வேலையை முடிக்கும்வரை அங்கேயே காத்திருந்து அவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிடும் அழகை கண்களால் ரசித்துக்கொண்டிருந்தான் . அப்பொழுது அங்கு நுழைந்தார் ராஜா , அந்த வீட்டிற்கே ராஜா .
உள்ளே நுழைந்ததும் , இவன் பரிமாறிக் கொண்டிருப்பதை பார்த்தவர் .. கோபம் " என்னடா பண்ணிட்டு இருக்க .. ?? ஒரு ஆம்பள பையன் மாதிரி நடந்துக்க .. இதே விஷயத்தை ஆரூ செஞ்சு இருந்தா பரவால்ல ... நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?? உன்னோட ரூம்க்கு போய் உன்னோட வேலையை பாரு போ ... " என்று உள்ளே நுழைந்தும் நுழையாமல் அதட்டினார் .


" எந்தன் கண் முன்னே ....
கண் முன்னே ...
காணாமல் போனேனே ... !

யாரும் பார்க்காத ....
ஒரு விண்மீனாய் ....
வீணாய் நான் ஆனேனே!

இதயம் கிழியும் ஒலி கேட்டேன் ....
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன் ....
எனை எரிக்கிறாய் ....
ஒளி கேட்கிறேன் ....
விழிகளை பறிக்கிறாய் .... !!

கனவை கனவை கலைத்தாயே ....
தொடர்ந்திட விடுவாயா .... ?
வலிகள் வலிகள் கொடுத்தாயே ...
நான் உறங்கிட விடுவாயா ... ?

என்ற பாடலை கேட்டுக்கொண்டே உள்ளே சென்று கட்டிலில் படுத்தவன் அவனது கடந்த காலத்தை யோசிக்க ஆரம்பித்தான் .. முன்பெல்லாம் அழுகை பீறிட்டுக்கொண்டு வரும் .. இப்படி கேட்கும்பொழுது ... இப்பொழுதெல்லாம் பழகிவிட்டதாக உணர்ந்தான் .
ஸ்கூலில் இருந்தே இது போன்ற நிராகரிப்பவர்களுக்கு பழகியிருந்தான் ஆதர்ஷ் .சின்ன வயதிலிருந்தே மென்மையாக நடந்து கொள்வான் அவன் . அவனது நடை கூட அதிர்ந்து இருக்காது . எப்பொழுதுமே தனது அமைதியான குரலில் அவன் ரோஜாவிடம் சளசளக்கும்பொழுது அவருக்கு ஏதோ மனதுக்குள் நிம்மதி பரவுவதை போன்ற மாய தோற்றம் .
மற்ற மூன்று பிள்ளைகளும் இவரிடம் அதிகம் ஒட்டாமல் இருந்தாலும் , ஆதர்ஷ் இவரையே சுத்தி சுத்தி வருவான் . அவனது தந்தையிடம் பெரியதாக ஓட்டுதல் இல்லாமல் இருந்தாலும் .. இரவு அவர் தூங்கும்பொழுது இவன் வந்து அவரது முகத்தை பார்த்துகொண்டு சிறிது நேரம் நின்றிருந்துவிட்டு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி செல்வதை பலமுறை கண்டிருக்கிறார் ரோஜா . மற்ற மூன்று பிள்ளைகளும் விளையாட்டில் கவனமாக இருக்கும்பொழுது கூட இவன் இவர்மீதே கவனமாக இருப்பான் .
சிறுவயதில் பெரிதாக தெரியாத அவனது மேன்மை .. அவனது பதின்ம வயதில் அவனை வாட்டி வதைத்தது என்றுதான் சொல்ல வேண்டும் . அவனது மேன்மையை அவனது சக மாணவர்கள் கேலிப்பொருளாக மாற்ற , இருந்த ஒரு சில நண்பர்களும் விலகி கொண்டனர் . யாருமில்லாத தனிமையில் மேலும் மேலும் ரோஜாவிடம் அவன் தஞ்சம் புக .. அவருக்கே ஒரு கட்டத்தில் இவனது மென்மையும் , இவனது ஒட்டாத தன்மையும் பயத்தை கிளப்பியது . ஆனால் , அவன் எதற்காக ஒட்டாமல் இருக்கிறான் என்பதை யோசிக்க தவறி இருந்தார் .
நாளை :
" ஹே .. நில்லுடா ... நில்லு .. மச்சான் ..."
" ஏ .. மச்சான் அவன் ஓடுறதை பாரேன் ... " என்று அந்த நிலையிலும் அவனை நோகடித்தனர் .
பின்னாடி பின்னாடி ஓடிக்கொண்டிருந்தவர்களுக்கு அப்பொழுது தெரியவில்லை நடக்கவிருக்கும் விபரீதம் .
 
ஆதுவும் சுடர் மாதிரி வீட்டு ஆட்களால் ஒதுக்க பட்டு அவுங்களே அவுங்க வாழ்க்கையை அமச்சி கொடுத்தாங்க
 
ஆதுவும் சுடர் மாதிரி வீட்டு ஆட்களால் ஒதுக்க பட்டு அவுங்களே அவுங்க வாழ்க்கையை அமச்சி கொடுத்தாங்க
aama ma ....
 
Top