Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

8 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!

Advertisement

ILANTHALIR VENBA

Member
Member
8 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!
இப்படி கடந்த காலத்தை யோசித்துக்கொண்டிருந்த அதர்ஷின் மனதில் அவன் என்றுமே மறக்கமுடியாத அன்றைய சம்பவம் காட்சியாக ஓடியது ...
" ஃப்ரியா சுத்தும் போது
பிகா் இல்லையே ... புடிச்ச பிகரும்
இப்போ ஃப்ரியா இல்லையே ....
கைல பேட் இருக்கு ... பால் இல்லையே ...
லைஃப் பூரா இந்த தொல்லையே ... ! !
உலகமே ஸ்பீடா ஓடி
போகுது ..... என் வண்டி பஞ்சா்
ஆகி நிக்குது ... மொக்க பீஸ்சும்
கூட கிண்டல் பண்ணுது .... சாமி
என்ன பங்கம் பண்ணுது .... ? ?
கிராக்கா மாறிட்டேன் ....
ஜோக்கா் ஆயிட்டேன் .... குண்டு
சட்டியில இரண்டு குதிரை
வண்டி ஓட்டுறேன் ....
ஒரு பீச்ல தனியா
அலைஞ்சேன் .... அலைஞ்சேன் ...
நடு ரோட்டுல அழுதேன் ....
புரண்டேன் .... கிழிஞ்சேன் ....
பாரம் தாங்கல .... தாங்கல ....
கழுதை நான் இல்லையே .... ? ?
ஜானும் ஏறல .... ஏறல ....
மொழமா சறுக்குறேனே .... ! ! "

அப்பொழுது அவன் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் .எப்பொழுதும் போல ஒரு நாள் காலை கிளம்பி பள்ளிக்கு சென்றவன் எல்லோரும் தன்னையே உற்று பார்ப்பதை கவனித்து என்ன என்று தெரியாமல் குழம்பி நின்றான் . முதல் இரண்டு வகுப்புகளும் எந்த சலனமும் இன்றி அவன் கடக்க , அப்பொழுது ஓய்வு இடைவேளை வந்தது .இயற்கை அழைப்பு விட கழிப்பறையை நோக்கி சென்றான் . அப்பொழுதும் அவனை அனைவரும் ஒருமாதிரி பார்த்து , அவர்களுக்குள் சலசலத்துக்கொள்ள .. இவனுக்கு ஒன்னும் புரியவில்லை . கழிப்பறைக்குள் நுழையப்போகும் சமயம் மாணவர்கள் அனைவரும் அங்கு குழுமிநின்று , எதையோ பார்த்து கைகொட்டி சிரிதுக்கொண்டிருக்க , என்னவென்று பார்க்கலாம் என்று அங்கு சென்றான் .
அங்கு ஒரு ஆண் சேலை கட்டி இருப்பது போன்ற ஒரு உருவத்தை வரைந்து அதற்கு கீழே ஆதர்ஷ் என்று எழுதி வைத்து இருந்தனர் . நியாயமாகப் பார்த்தால் அவனுக்கு அன்பு கோபம் வந்திருக்க வேண்டும் . ஆனால் , அவனும் அங்கிருந்து அழுது கொண்டு ஓடி வர அவனை பின் தொடர்ந்து மாணவர்கள் அவனை கிண்டல் செய்யத் தொடங்கினார் .
" ஹே .. நில்லுடா ... நில்லு .. மச்சான் ..."
" ஏ .. மச்சான் அவன் ஓடுறதை பாரேன் ... அப்படியே செஞ்சு வெச்ச சிலை மாதிரி இருக்கான் டா .. அப்பாஹ் ..." என்று அந்த நிலையிலும் அவனை மேலும் நோகடித்தனர் .
" டேய் .. நில்லுடா னு கூப்பிடாதீங்க .. அவன் நிக்க மாட்டான் ... நில்லு டி னு கூப்பிடுங்க .. அவன் நிப்பான் .. " என்று கூற அனைவரும் சிரித்துக்கொண்டே அவனை துரத்தி ஓடினர் . எதற்காக ஓடினான் , எங்கு ஓடினான் என்று கேட்டால் , இவனுக்கும் பதில் தெரியாது . எதற்காக துரத்துகிறோம் என்று கேட்டால் , அவர்களுக்குத் பதில் தெரியாது .
பின்னாடி பின்னாடி ஓடிக்கொண்டிருந்தவர்களுக்கு அப்பொழுது தெரியவில்லை நடக்கவிருக்கும் விபரீதம் .
இவன் வேகமாக மாடி படிகளேறி ஓட .. அப்பொழுது எதிர்பாராத விதமாக அவன் காலின் சூ லேஸ் தடுக்கிவிட , அப்படியே கீழே விழுந்தான் ஆதர்ஷ் . தாடை சென்று தரையில் பலமாக மோத, அந்த அதிர்வினால் அவனது தாடை எலும்பு உடைந்து இருந்தது .
அடுத்த அடுத்த நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட .. ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு அவனது வீட்டிற்கும் தகவல் சொல்லப்பட்டது . தாடை எலும்பு முறிந்து இருந்ததால் மூன்று மாதம் பெட் ரெஸ்டில் இருக்கவேண்டும் என்று கூறிவிட்டனர் மருத்துவர்கள் . அதுமட்டுமின்றி இன்னும் ஒரு மாதத்திற்கு அவன் ஹாஸ்பிடலில் அவர்கள் கவனிப்பில் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு , அவனுக்கு சிகிச்சை முடிந்து நார்மலுக்கு மாற்றப்பட அப்பொழுதும் வந்து சேர்ந்தார் அவனது அன்னை .
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மிக பெரிய மருத்துவமனை ஆதலால் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் . அப்படி அவனை தினமும் வந்து பார்த்து செல்வதும் அவனது அன்னை ரோஜா மட்டுமே . அவனது தந்தை வேலை விஷயமாக வெளிநாடு சென்றுவிட , ஆரூ வாரமொருமுறை வந்து பார்த்து சென்றாள் . அவனது அண்ணன்கள் இருவரும் அவர்கள் வேலையை ஒதுக்கிவைத்துவிட்டு இவனுக்காக தினம் ஒருவராக வந்து பார்த்து சென்றனர் .
ஒரு மாதம் கடந்த நிலையிலும் , டாக்டர் இன்னுமொரு மாதம் ஹாஸ்பிடலிலேயே இருக்க சொல்லி பரிந்துரைக்க அவனது குடும்பத்தினரும் ஒப்புதல் அளித்தனர் . இவன் ஓர் அளவு தேறிவிட இவனது அண்ணன் இவனது தனிமையை போக்க தினமும் அவனது அன்னையிடம் புத்தகங்களும் , நிறையை உணவு வகைகளையும் கொடுத்து விட துவங்கினான் . அதுமட்டுமின்றி , அக்சய் தீக்சித் இவனுக்கு ஒரு மொபைல் போனை பரிசளித்து இருந்தான் . ஆதர்ஷ் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இணைந்து அவனது பொழுதை கழிக்கலானான் . அப்பொழுது , அவனது அண்ணன்களுடன் அவர்கள் தங்கை சமூக வலைதளைங்களில் பகிரும் போட்டோக்களை பார்த்து இவனுக்கு அடக்கமுடியாத கோப உணர்வு தலை தூக்கியது .
image

இவனுக்கு அதை பார்க்க பார்க்க கோபம் கோபமாக வந்தது சரியாக அந்நேரம் ரக்ஷா பந்தன் வர , அதை சிறப்பாக கொண்டாடி காலையிலிருந்தே போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தபடி இருந்தால் ஆரூ . இவனை பார்க்க அனுமதிக்கும் நேரத்தில் , இவனுக்கு ராக்கி கட்ட அவள் காத்திருக்க , இவனோ அந்த புகைப்படங்களை பார்த்து , வேகமாக அங்கிருந்த டிவியில் போனை விசிறியடித்து உடைத்தான் . அங்கிருந்த மானிட்டர் இவனது இதயம் அதிவேகமாக துடிப்பதாக காட்ட , அங்கிருந்த செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் அவனை கட்டுப்படுத்த முயல்வதற்குள் அவன் அதிக ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்திருந்தான் .
image

அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மனஅழுத்தம் காரணமென கூறிவிட்டனர் . அதன்பின்பு , அவனது அன்னை அவனை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட அப்பொழுதும் யாருடனும் பேசாமல் , தனிமையையே நாடினான் ஆதர்ஷ் . அதன்பிறகு அவனது உலகம் சுருங்கியது . மறுபடியும் அவனது அன்னையுடன் மட்டும் பேசினான் . அதற்கும் அவர் கேட்பதற்கான பதில் ஒருநாள் அவன் தூங்கி எழுந்த பொழுது அந்த அறையே மாறியிருந்தது . வீட்டிற்கு வந்ததிலிருந்து அவன் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை . அவனுக்கு மிகவும் பிடித்தமான கைவினை பொருட்கள் செய்ய தேவையான அனைத்தும் அடுக்கு அடுக்காக அடுக்கப்பட்டு , நேர்த்தியாக ஒரு டேபிள் போட்டு அந்த அறையையே வண்ணமயமாக்கி இருந்தனர் .
இதனை செய்தது யாரென்று எல்லாம் யோசிக்க அவனுக்கு தோணவே இல்லை . இவன் ஆறாம் வகுப்பு வரை இதனை எல்லாம் செய்துகொண்டுதான் இருந்தான் . அதன்பின்பு , வளர்கிறானென அவனது தந்தை அதை நிறுத்த சொல்லிவிட அவனும் வேறு வழியின்றி நிறுத்தியிருந்தான் . அவனுக்கு கிடைத்த இந்த திடீர் ஆச்சரியத்தில் அவன் கனவென எண்ணி மறுபடி சென்று படுத்துகொண்டான் . மறுபடி கண் முழித்தவன் , அந்த டேபிள் மற்றும் அடுக்கில் உள்ள பொருட்கள் எல்லாவற்றின்மீதும் அவனது கையை வைத்து தடவி கொடுத்தான் . அவனுக்கு மிகவும் பிடித்த எம்பிராய்டரி செய்ய அவனுக்கு பட்டு நூலும் , பட்டு துணிகளும் நேர்தியாக மடிக்கப்பட்டு இருந்தது .
" இதயம் இந்த இதயம்
இன்னும் எதனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ

ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு
இது தத்தளித்து துடிக்கிறதே
காயம் யாவையும் தேற்றி கொண்டு
இது மறுபடியும் நினைகிறதே

உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்

வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே

இது தவித்திடும் நெருப்பா
இல்லை குளிர்ந்திடும் நீரா
இது பனி ஏறி மழையா
இதை அறிந்தோர் யாருமில்லை
உள்ளத்திலே அறை உண்டு வாசல் இல்லை
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை ... "



தன்னை கிள்ளி பார்த்துக்கொண்டான் . அவனது மனம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது . சற்று நேரம் அங்கு நின்றி அனைத்தையும் ஆச்சரியத்துடன் தடவி பார்த்துவிட்டு மறுபடி சென்று சோகமாக படுத்துக்கொள்வதென கடந்த மூன்று மணி நேரமாக செய்துகொண்டிருந்தான் .இவற்றை எல்லாம் அவனது தந்தை அவரது ரூமிலிருந்து லேப்டோபில் பார்த்துக்கொண்டிருந்தார் .
என்னதான் அப்பா நம்மளை ரொம்ப கண்டிப்புடன் நடத்துறாங்கனு நாம நினைச்சாலும் , நமக்கு எதாவது ஒரு சின்ன பிரச்சனைன்னு வந்தா கூட நம்ம அப்பா தானே நமக்காக முதல்ல வந்து நிப்பாரு . அதே தான் ஆதர்ஷ் வீட்டிலும் நடந்தது . அந்த அறையிலிருந்த ஓர் மூலையில் கேமரா செட் செய்து அது வெளிய தெரியாமல் பார்த்துக்கொண்டார் .
இப்பொழுது அவரின் முழு கவனமும் அவன்மேலேயே இருந்தது . சில நாட்கள் அந்த பொருட்களை கூர்ந்து பார்ப்பவன் , சில நாட்கள் அது இருக்கும் பக்கம் கூட திரும்ப மாட்டான் . அன்றொருநாள் இரவு 8 மணிக்கு இவர் அவன் ரூமிலிருக்கும் கேமராவை இயக்கி என்ன செய்கிறானென பார்க்க , ஆதர்ஷ் அந்த டேபிளின் அருகில் நின்றுகொண்டிருந்தான் . அவனது பக்கவாட்டு உருவம் மட்டுமே தெரிந்தது . அவன் கைகளில் கத்தியை வைத்துக்கொண்டு எதையோ கூர்ந்து பார்த்திருந்தான் . இவருக்கு ஒரு வினாடி திக் என்றானது . அடுத்த நொடி அவரது கால்கள் தன்னிச்சையாக அவனது அறைநோக்கி செல்ல , அங்கு வேகமாக ஓடினார் . அவர் மாடியிலிருந்து வேகமாக அவனது அறையை நோக்கி ஓடுவதை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் என்னவென்று தெரியாமல் குழம்பினர் . அவனது அறையின் கதவை திறந்து பார்க்க முற்பட , அது உள்ளே தாழிடப்பட்டிருந்தது .
வீட்டிற்கு வெளியே சென்றவர் அவனது அறையின் ஜன்னலை திறந்து பார்க்க , ஆதர்ஷ் அங்கு ஒரு பட்டம் செய்துகொண்டிருந்தான் . அதை பார்த்தபின்பு தான் உயிரே வந்தது அவருக்கு . அங்கிருந்தால் அவன் பார்த்துவிடுவான் என்று சுதாரித்தவர் , அங்கிருந்து அகன்று வீட்டிற்குள் செல்ல , அங்கு ரோஜா கேள்வி பார்வையுடன் இவரை நோக்கினார் .
இவருக்கு ஆதர்ஷ் கனவில் வந்ததால் சட்டென எழுந்து வந்து பார்த்ததாக சொன்னவர் , அனைவரையும் சாப்பிட அழைத்தார் . சாப்பிட்டுவிட்டு அனைவரும் அவரவர் அறைக்கு சென்றுவிட , இவர் ரோஜாவை அழைத்துக்கொண்டு தோட்டத்தை சுற்றி நடந்து வருவோம் என்று அழைத்துச்சென்று ஆதர்ஷ் செய்துகொண்டிருப்பதை காட்டினார் . ரோஜாவிற்க்கு அன்றுதான் அவன் குணமாவான் என்ற நம்பிக்கையே வந்தது .
"இரவை பார்த்து மிரளாதே ....
இதயம் வேர்த்து துவளாதே ....
இரவுகள் மட்டும் இல்லை என்றால்
நிலவின் அழகு தெரியாதே ....
கனவில் நீயும் வாழாதே ....
கலையும் போது வருந்தாதே ....
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்
கைகளில் பறித்திட முடியாதே ....
அந்த வானம் போலே உறவாகும் ....
மேகங்கள் தினமும் வரும் போகும் ...
அட வந்தது போனால் மறுபடி ஒன்று
புதிதாய் உருவாகும் .... !! "

நாளை :
" இங்கிருந்து வெளியே போடா நாயே ... " என்று அவனை வீட்டை விட்டு வெளியே தள்ளினர் அக்சயும் , அர்ஜுனும் ..
ரோஜா ஒருபக்கம் அழுது கொண்டிருக்க , ராஜா நடந்தது எதையும் நம்ப முடியாமல் சிலையாக அமர்ந்திருந்தார் . ஆனால் , அப்படி அமர்ந்திருந்ததால் தனது பிள்ளைகளில் ஒருவனை இழந்து வருங்காலத்தில் அவர்கள் சந்திக்கப்போகும் பிரச்சனைகளை அவர் அறியவில்லை .
 
ஒரு சின்ன சந்தேகம் இது நடனிகத்து 9th படிக்கும் போது ஆன ஆது இப்போ 3rd engineer படிக்கிறான் தானே வந்தது அப்போ இன்னும் fb இருக்கு... ஆது அப்பா க்கு அவனோட நிலமை புரிஞ்சி சப்போர்ட் பண்ணவே இல்ல
 
ஒரு சின்ன சந்தேகம் இது நடனிகத்து 9th படிக்கும் போது ஆன ஆது இப்போ 3rd engineer படிக்கிறான் தானே வந்தது அப்போ இன்னும் fb இருக்கு... ஆது அப்பா க்கு அவனோட நிலமை புரிஞ்சி சப்போர்ட் பண்ணவே இல்ல
puriala ma ...
 
Top